10 TH STD TAMIL IMPORTANT QUESTIONS TOPPERS

 

10.ஆம் வகுப்பு - தமிழ்

பொதுத்தேர்வு திருப்புதல் (முக்கியவினாக்கள் (மீத்திற மாணவர்)

1  மதிப்பெண் வினாக்கள்

1.  கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது - தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலனையும் பெயரும் முறையே    --------------

2.  வேர்க்கடலைமிளகாய்விதைமாங்கொட்டை ஆகியவற்றைக் குறிப்பது----------    

3 .கண்ணதாசன் ____என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் ஆவார்

4 தமிழுக்குக் கருவூலமாய் அமைந்துள்ள நூலின் பெயர்   --------

5 தமிழ்நாட்டில் மட்டும் விளையும் தானியங்கள் --------

6 மகிழுந்து வருமாஎன்பது ----------

7. அறிஞருக்கு நூல்அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைந்தது -----------

8.  கிழக்கில் இருந்து வீசும் காற்றின் பெயர் -----------

9.  நாகூர் ரூமியின் இயற்பெயர் ----------

10.  பீடு என்ற சொல்லின் பொருள்  --------------

11 ஓசோன் படலம் ஓட்டை விழுவதால் நம்மை நேரடியாகத் தாக்கும் கதிர்கள் -------

12.  நன்மொழி என்பது -----------

13.  காலில் அணியும் அணிகலனைக் குறிப்பது ------------

14.  தொகைநிலைத் தொடர்களின் வகைகள் -------------

15.  குழந்தையின் வளர்ச்சியில் எந்த மாதங்களை செங்கீரைப் பருவம் என்பர்? -------

16 வருக என்னும் சொல்லின் விகுதி  ------

17 அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் - என்னும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் ---

18. இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர் ___, இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர்----

19.  படர்க்கைப் பெயரைக் குறிப்பது எது? ----------

20.  உவப்பின் காரணமாக அஃறிணையை உயர்திணையாகக் கொள்வது ----------

21 நீபவனம் என்னும் சொல்லின் பொருள்  ----------

22.  இளவேனில் பருவத்திற்குரிய மாதங்கள்  ------------

23.  மையோமர கதமோமறி கடலோ மழைமுகிலோ - இப்பாடல் அடியில் குறிப்பிடப்படாத நிறம்

24.  தலைவன் தலைவிக்கு இடையே ஏற்படும் பிணக்கைப் பற்றி குறிப்பிடும் நிலம் --------

25.  கம்பர் சோழநாட்டு ______ சார்ந்தவர்

26.  தமிழனத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி கருதியது -------

27.  மண்ணீட்டாளர் என்பது யாரைக் குறிக்கும்-----------

28.  வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி விருது பெற்றுத் தந்த நூல் -------

29 மணிமேகலையிலும்சிலப்பதிகாரத்திலும் அமைந்த பாவினம் ------

30 . வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை--------

(இவற்றுண்டன் புத்தக வினாக்கள் அனைத்தையும் நன்கு பயிற்சி செய்யவும்)

ஒருமதிப்பெண் வினாவிடைகளை வினாடி வினா வடிவில் பயிற்சி செய்ய

மதிப்பெண் வினாக்கள் (வினா எண் 16 முதல் 21)

1.  சொல்வளத்தை உணர்த்த உதவும் நெல் வகைகளின் பெயர்களைக் குறிப்பிடுக

2.  நமக்கு உயிர் காற்று

   காற்றுக்கு வரம் மரம் - மரங்களை

  வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம். இதுபோன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத்தொடர்களை எழுதுக

3. மென்மையான மேகங்கள்துணிச்சலும் கருணையும் கொண்டு வானில் செய்யும் நிகழ்வுகளை எழுதுக.

4. தமிழர்கள்வீசுகின்ற திசையைக் கொண்டு காற்றுக்கு எவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்?

5. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.

6. செங்கீரை ஆடுதலில் எந்தெந்த அணிகலன்கள் சூட்டப்படுவதாக முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் குறிப்பிடுகிறது?

7. 'நச்சப் படாதவன்செல்வம் இத்தொடரில் வண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.

8. செல்வம் பெருகுவதும் வறுமை வந்து சேர்வதும் எதனால் என வள்ளுவர் உரைக்கின்றார்?

9. மொழிபெயர்ப்பின் பயன் குறித்து எழுதுக.

10. சரயு ஆறு பாயும் இடங்களைப் பட்டியலிடுக

11. பின்வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார்ஏன் என்பதை எழுதுக.    (பெரிய கத்தி,இரும்பு ஈட்டிஉழைத்ததால் கிடைத்த ஊதியம்வில்லும் அம்பும்)

12. பாசவர்வாசவர்பல்நிண விலைஞர்உமணர் சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?

13. வறுமையிலும் படிப்பின்மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக.

14. குறிப்பு வரைக அவையம்.

15. சங்க இலக்கியத்தில் அரசனின் கடமையாகச் சொல்லப்பட்டன எவை?

16. பழங்களை விடவும் நசுங்கிப்போனதாக கல்யாண்ஜி எதைக் குறிப்பிடுகிறார்?

விடைக்கேற்ற வினாவினை அமைக்க (பயிற்சி வினாக்கள்)

1. ஒரு நாட்டின் வளமும் அங்கு வழங்கும் சொற்களின் வளமும் தொடர்புடையன என்கிறார் பாவாணர்.

2. உயிரின வாழ்வின் அடிப்படை இயற்கை.

3. திருந்திய மக்களை மற்ற உயிரினின்றும் பிரித்துக் காட்டுவது மொழி.

4. பிள்ளை தமிழ் இரண்டு வகைப்படும்.

5. கம்பராமாயணப் பாடல்கள் சந்தநயம் மிக்கவை.

6. 1948 ஆகஸ்டு எட்டாம் நாள்இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கத்தக்க புனித நாளாகும்.

7. இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காக போராடியவர் மார்ஷல் ஏ நேசமணி ஆவார்.

8. இராஜாஜி அவர்கள் தலைநகர் காக்க தன் முதலமைச்சர் பதவியை துறந்தார்.

9. உழுவோர் உலகத்தார்க்கு அச்சாணி எனப் போற்றப்பட்டனர்.

10. இளங்கோவடிகள் சேர மரபைச் சார்ந்தவர்.

மதிப்பெண் வினாக்கள் (வினா எண் 22 முதல் 28)

​1.‘ பலகை’ என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

2. குறள்வெண்பாவின் இலக்கணத்தை எழுதி எடுத்துக்காட்டுத் தருக.

​3. ‘சிரித்துப் பேசினார்’ என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்?

4. புறத்திணைகளில் ஒன்றிற்கொன்று எதிரெதிரான திணைகளை அட்டவணைப்படுத்துக.

​‘5. தண்ணீர் குடி’, ‘தயிர்க்குடம்’ ஆகிய தொகைநிலைத் தொடர்களின் வகையைக் கண்டறிந்து விரித்து எழுதுக.

​6. ‘அமர்ந்தான்’ - பகுபத உறுப்பிலக்கணம் தருக.

7. பொருந்தாத முதல்கருப்பொருளைத் திருத்தி எழுதுக:

    உழவர்கள் மலையில் உழுதனர்.

    முல்லைப் பூச் செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.

​8. "கொள்வோர் கொள்க: குரைப்போர் குரைக்க! உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது" - இப்பாடல் அடிகளில் உள்ள மோனைஎதுகைச் சொற்களைக் கண்டறிந்து எழுதுக.

9. பொதுவியல் திணை பற்றிக் குறிப்பெழுதுக.

​10. "வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன்" - இத்தொடர் கால வழுவமைதிக்குச் சான்றாவது எப்படி?

​11. "சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்" - இதில் உள்ள திணை வழுவமைதிகளைத் திருத்தி எழுதுக.

​12 ."தஞ்சம் எளியர் பகைக்கு" - அலகிட்டு வாய்ப்பாடு தருக.

13 பழமொழிகளை நிறைவு செய்க:

உப்பில்லாப் பண்டம் _____அளவுக்கு மிஞ்சினால் _____ விருந்தும் மருந்தும் ___

14.இருசொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க: இயற்கை - செயற்கை,கொடு - கோடு.

15 .சொற்களின் கூட்டப்பெயர்களை எழுதுக: கல்பழம்புல்ஆடு.

16. மரபுத் தொடர்களைத் தொடரில் அமைத்து எழுதுக: மனக்கோட்டைகண்ணும் கருத்தும்முதலைக்கண்ணீர்.

17 .உவமையைப் பயன்படுத்திச் சொற்றொடர் உருவாக்குக:

      தாமரை இலை நீர் போல.  உள்ளங்கை நெல்லிக்கனி போல.

18. சொற்களைப் பிரித்துப் பார்த்துப் பொருள் தருக: வேங்கைகானடைவருந்தாமரை.

19.தொகைச்சொற்களை விரித்து எழுதி தமிழ் எண்ணுரு தருக: முத்தமிழ்இருதிணைஐம்புலன்.

20. அகராதியில் பொருள் காண்க: குணதான்செவ்வைமுரிவு.

21. பிறமொழிச் சொற்களைத் தமிழாக்குக: Gold Biscuit, கார்பஸ்.

22. வேர்ச் சொற்களைக் கொண்டு வினைமுற்றுவினையெச்சம்வினையாலணையும் பெயர்களை உருவாக்குக: வாபார்படி.

23. கலைச்சொற்கள்       வினாடி வினா வடிவில் பயிற்சி செய்ய

மூன்று மதிப்பெண் வினாக்கள்(வினா எண் 29 முதல் 31)

1. 'புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது' - இதுபோல் இளம்பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைத்து எழுதுக.

2. 'இன்மையிலும் விருந்தோம்பல்குறித்துப் புறநானூற்றுப் பாடல் கூறும் செய்தியை விளக்குக.

3.  காற்று தன்னைப் பற்றிப் பேசுவது போல, 'நீர்தன்னைப் பற்றிப் பேசினால் அதற்கு நீங்கள் சூட்டும் தலைப்புகளை எழுதுக.

4. தனித்து 'உண்ணாமைஎன்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை. இப்பண்பு இக்காலத்தில் அடைந்துள்ள மாற்றங்களைப் பட்டியலிடுக.

5. பல்துறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு எவ்வாறு உறுதுணையாகப் பயன்படுகிறது?

சுற்றுச்சூழல்: 'சுற்றுச்சூழலைப் பேணுவதே இன்றைய அறம்என்ற தலைப்பில் உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக.

6.  'தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்' - இடம் சுட்டிப் பொருள் விளக்குக.

7. சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.

8.  தமிழ்மொழிக்குக் கலைஞர் செய்த சிறப்புகளுள் நீங்கள் அறிந்துகொண்ட இரண்டினை எழுதுக.

9.  வாய்மை பற்றிச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் கருத்துகளை எழுதுக.

உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.(பயிற்சி வினாக்கள்)

1.     தமிழ்நாடு எத்துணைப் பொருள் வளமுடையதென்பது அதன் விளைபொருள் வகைகளை நோக்கினாலே விளங்கும். பிற நாடுகளிலுள்ள கூலங்களெல்லாம் சிலவாகவும், சில்வகைப்பட்டவனவாகவும் இருக்கதமிழ்நாட்டிலுள்ளவையோ பலவாகவும் கழிபல வகைப்பட்டனவாகவும் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக கோதுமையை எடுத்துக் கொள்ளின் அதில் சம்பாக் கோதுமைகுண்டுக் கோதுமை. வாற்கோதுமை முதலிய சில வகைகளேயுண்டு. ஆனால்தமிழ்நாட்டு நெல்லிலோசெந்நெல்வெண்ணெல்கார்நெல் என்றும்பல வகைகள் இருப்பதுடன் அவற்றுள் சம்பாவில் மட்டும் ஆவிரம்பூச்சம்பாஆனைக்கொம்பன் சம்பாகுண்டுச் சம்பாகுதிரைவாலிச் சம்பாசிறுமணிச் சம்பாசீரகச் சம்பா முதலிய அறுபது உள்வகைகள் உள்ளன.

(அ) தமிழ்நாடு பொருள் வளமுடையது என்பது எதனால் விளங்கும் ?

(ஆ) கோதுமையின் வகைகளைக் குறிப்பிடுக.

(இ) தமிழ்நாட்டு நெல்லின் வகைகளை எழுதுக.

2.     அறம் கூறும் மன்றங்கள் அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணைபுரிந்தன. அறம் கூறு அவையம் பற்றி 'அறம் அறக்கண்ட நெறிமான் அவையம்என்கிறது புறநானூறு. உறையூரிலிருந்த அறஅவையம் தனிச்சிறப்புப் பெற்றது என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. மதுரையில் இருந்த அவையம் பற்றி மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறதுஅங்குள்ள அவையம் துலாக்கோல் போல நடுநிலை மிக்கது என்கிறது.

(அ) அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணைபுரிந்தவை எவை ?

(ஆ) அவையம் பற்றி புறநானூறு கூறுவது யாது ?

(இ) மதுரையில் இருந்த அவையம் எப்படி இருந்ததாக மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது ?

கூடுதல் பயிற்சி வினாக்களைப் பதிவிறக்க

மூன்று மதிப்பெண் வினாக்கள்(வினா எண் 32 முதல் 34)

1. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?

2. உயிர்கள் உருவாகி வரை ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல்வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக.

3. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய

நயத்தை விளக்குக.

4. ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் கூறிய கருத்துகளை வள்ளுவர் வழிநின்று விளக்குக

5. மன்னன் இடைக்காடனார் என்ற புலவருக்குச் சிறப்புச் செய்தது என்விளக்கம் தருக

6. மருத நிலத்தில் இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைக் கம்பரின் கலைநயத்துடன் எழுதுக.

7. வள்ளுவம்சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள்வழி விளக்குக.

8. எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?

மனப்பாடப்பாடல்களைப் படிக்க (அ) காணொளியாகக்காண

மூன்று மதிப்பெண் வினாக்கள்(வினா எண் 35 முதல் 37)

1. அறிந்ததுஅறிந்ததுபுரிந்தது. புரியாதது. தெரிந்ததுதெரியாததுபிறந்ததுபிறவாதது இவை அனைத்தையும் யாம் அறிவோம்.  அடிக்கோடிட்ட சொற்களைத் தொழிற்பெயர்களாக மாற்றுக

2. மார்கழித் திங்கள் அதிகாலை நேரத்தில் மக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டனர்.சிலர்மிதிவண்டியில் சென்றனர். சாலை ஓரத்தில் இருந்த விட்டின் மதிலை ஒட்டிச் செங்காந்தன் மலர்கள் பூத்துக் குலுங்கியபடி இருந்தன. அவற்றைப் பார்த்தபடியே விடு சென்றேன். த்தியைப் படித்துத் தொகைநிலைத் தொடர்களைக் கண்டறிந்து எழுதுக.

3. நேற்றிரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது. வாழைத் தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியதுதந்தை என்னிடம், 'இலச்சுமி கூப்பிடுகிறாள்போய்ப் பார்" என்றார். 'இதோ சென்றுவிட்டேன்என்றவாறே அங்குச் சென்றேன். துள்ளிய குட்டியைத் தடவிக்கொடுத்து, 'என்னடா விளையாடவேண்டுமா?" என்று கேட்டேன். என் தங்கையும் அங்கே வந்தாள். அவனிடம், "நீயும் இவனும் விளையாடுங்கள்என்று கூறிவேன். அவிழ்த்துவிடப்பட்ட இலச்சுமி தொட்டியிலிருந்த நீரைக் குடித்தான்.    இப்பத்தியிலுள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக. ஏதேனும் இரண்டு வழுவமைதிகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக

4. 'கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது: மலைப் பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப் பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன. காலப்போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்தபோதிலும்பண்டைத் தமிழரின் திணைநிலைத் தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.             5. ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.

அணி இலக்கணம்

1.    வேலொடு  நின்றான் இடுஎன்றது போலும்

       கோலொடு நின்றான்  இரவு         - குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக.

2.   ண்என்னாம் பாடற் கியைபின்றேல்கண்என்னாம்

      கண்ணோட்டம் இல்லாத கண்.           - குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக.

3.  பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

     பொருளல்ல தில்லை  பொருள்.             - குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக

4. இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்

     இன்மையே  இன்னா தது.                    - குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக

5. தேவர் அனையர் கயவர் அவரும்தாம்

     மேவனசெய்  தொழுக  லான்.                    - குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக

(சான்று திருக்குறளோடு சேர்த்து படித்துக்கொள்க. திருக்குறள் தராமலும் கேட்கப்படலாம்)

பாடநூலில் உள்ள அனைத்து அணிகளையும் பதிவிறக்க

அலகிட்டு வாய்பாடு எழுதுக

(பாடப்பகுதியில் உள்ள அனைத்து திருக்குறளையும் பயிற்சி செய்து கொள்க)

ஐந்து மதிப்பெண் வினாக்கள்(வினா எண் 38 முதல் 42)

1. உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.

2. இறைவன்புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக

3. சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.

அன்பும் பண்பும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்து அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம். இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும் கவி... தண்டலை மயில்கள் ஆட இவ்வுரையைத் தொடர்க!

4. சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.

5. கருணையனின் தாய் மறைவுக்குவீரமாமுனிவர் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.

கடிதங்கள்

1. மாநில அளவில் நடைபெற்ற 'கலைத்திருவிழாபோட்டியில் பங்கேற்று 'கலையரசன்பட்டம் பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

2. மரம் இயற்கையின் வரம்  என்னும் தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

3. உங்கள் கிராமத்திற்கு நூலக வசதி வேண்டி பொது நூலகத்துறை இயக்குநர் அவர்களுக்குக் கடிதம் வரைக.

4. உணவு விடுதி ஒன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும்விலை கூடுதலாகவும் இருந்ததைக் குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு முறையீட்டுக் கடிதம் ஒன்று எழுதுக.

5. நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்என்ற உங்கள் குறுங்கட்டுரையை வெளியிட வேண்டி,அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.

6. பள்ளித் திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த தையும் அதற்காகப் பாராட்டு பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

7. உங்கள் தெருவில்  பழுதடைந்துள்ள  மின் விளக்குகளை மாற்றி புதிய மின் விளக்குகளைப் பொருத்துமாறு மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக.

காட்சியைக்கண்டு கவினுற எழுதுதல்

படிவம் நிரப்புதல் பயிற்சி வினாக்கள்

4 படிவங்களையும் பதிவிறக்க

1. 22 , பாரதியார் தெருகாஞ்சிபுரம்-1 என்ற முகவரியில் வசித்து வரும் தமிழ்க்கோவின் மகள் கந்திற்பாவை தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வளைகோல் பந்தாட்டத்தில் சேர்ந்து பயிற்சி பெற விரும்புகிறார்தேர்வர் கந்திற்பாவையாக எண்ணி உரிய படிவத்தை நிரப்புக.

2. கொடுக்கப்பட்ட விவரங்களைக் கொண்டுதமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் சேர்க்கைப் படிவத்தை நிரப்புக.

  தந்தை பெயர்பிறைசூடன்மாணவர் பெயர்செந்தூரன்முகவரி: 32 தேர் வீதிஎழில் நகர்மதுரை-1. சேர விரும்பும் விளையாட்டுசிலம்பாட்டம்.

3. எழில்குமரனின் மகன் தமிழ்மேகன் தகவல் உள்ளீட்டாளர் பணிவாய்ப்பு வேண்டி திருத்தணி பகுதியிலுள்ள துணியகம் ஒன்றில் விண்ணப்பிக்க விரும்புகிறார்அவருக்கு தன்விவரப்பட்டியல்  நிரப்பி உதவுக.

4. மதிவதனியின் தந்தை பொற்கோ தனது மகளை தமிழாய்வுக்கூடம் ஒன்றில் தமிழ் தட்டச்சர் பணிக்காகச் சேர்க்க உள்ளார்அவருக்கு தன்விவரப் படிவத்தை நிரப்பித் தருக

5. பத்தாம் வகுப்பு பயிலும் கார்மேகன்அரக்கோணம் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரியும் தனது தந்தை கரிகாற்சோழனுடன் இராணிப்பேட்டை மாவட்டம்அரக்கோணத்தில் உள்ள கிளை நூலகத்தில் உறுப்பினராகச் சேர்வதற்குச் செல்ல உள்ளார்அவருக்கு நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்பி உதவுக.

6. விழுப்புரம் மாவட்டம்பெரியார் நகர்கபிலன் தெரு, 32 ஆம் இலக்க வீட்டில் குடியிருக்கும் வளவனின் மகன் அமுதன் மாவட்ட மைய நூலகத்தில் நூலக உறுப்பினராகச் சேர விரும்புகிறார். தேர்வர் தன்னை அமுதனாக எண்ணிகொடுக்கப்பட்ட நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக.

7. 15, கோயில் தெருநெசவாளர் நகர்நாமக்கல்- 2 என்ற முகவரியில் வசிக்கும் இளங்கோவன் என்பவரின் மகள் எழில்மங்கைஅரசு உயர்நிலைப்பள்ளிநெசவாளர் நகர்நாமக்கல் மாவட்டத்தில் 10. ஆம் வகுப்பு முடித்திருக்கிறார். அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11.ஆம் வகுப்புஅறிவியல் பாடப்பிரிவுதமிழ் வ்ழியில் சேர விரும்புகிறார். தேர்வர் தன்னை எழில்மங்கையாகக் கருதி. கொடுக்கப்பட்ட மேல்நிலை சேர்க்கை விண்ணப்பப் படிவத்தினை நிரப்புக.

8. .நல்லமலை என்பவரது மகன் அன்புச்செல்வன் 80, வேந்தர் தெருவடக்கு வீதிசிதம்பரம்-1 என்ற முகவரியில் வசித்து வருகிறார். 10,ஆம் வகுப்பில் 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்றுள்ள அவர் அதேபகுதியில் உள்ள அரசினர் மேனிலைப் பள்ளியில் ,.வணிகவியல் பாடப்பிரிவில் பதினோராம் வகுப்பு சேர விரும்புகிறார்அவருக்கு சேர்க்கை விண்ணப்பத்தை நிரப்பி உதவுக.

மொழி பெயர்ப்பு

1. If you talk to a man in a language he understand,thats goes to his head. If you talk to him in his own language that goes to his heart – Nelson Mendela

2. Language is the road map of a culture. It tells you where its people come from and where they are going – Rita Mae Brown

3. The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark.The milky clouds start their wandering.The colourful birds start twitting their morning melodies in percussion.The cute butterflies dance around the flowers. The flowers fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant.

4. Respected ladies and gentleman. I am Ilangaovan studying tenth standard. I have come here to say a few words about our Tamil culture. Sangam literature shows that Tamils were best in culture and civilization about two thousand years ago. Tamils who have defined grammer for language have also defined grammer for life. Tamil culture is rooted in the life styles of Tamils throughout India, Srilanka, Malaysia, Singapore, England and Worldwide. Though our culture is very old,it has been updates consistently. We should feel proud about our culture. Thank you one and all.

5. Translation is an art in itself. No one can do that. A translator should be neutral and not attached to any language. Specifically, he should be proficient in both the languages i.e. both the language and the source language. They should be familiar with the social and cultural conditions of both the languages.

6. Kalaignar Karunanidhi is known for his contributions to Tamil literature. His contributions cover a wide range: poems, letters, screenplays, novels, biographies, historical novels, stage-plays, dialogues and movie songs. He has written Kuraloviam for Thirukural, Tholkaappiya Poonga, Poombukar, as well as many poems, essays and books. Apart from literature, Karunanidhi has also contributed to the Tamil language through art and architecture. Like the Kuraloviyam, in which Kalaignar wrote about Thirukkural, through the construction of Valluvar Kottam he gave an architectural presence to Thiruvalluvar, in Chennai. At Kanyakumari, Karunanidhi constructed a 133-foot-high statue of  Thiruvalluvar in honour of the scholar.

7. Among the five geographical divisions of the Tamil country in Sangam literature, the Marutam region was the fit for cultivation, as it had  the most fertile lands. The properity of a farmer depended on getting the necessary sunlight,seasonal rains and the fertility of the soil.Among these elements of nature,sunlight was considered indispensible by the ancient Tamils.

1.Education is what remains after one has forgotten what one has learned in school – Albert Einstein

2.Tomorrow is often the busiest day of the week – Spanish proverb

3.It is during our darkest moment that we must focus to see the light – Aristotle

4.Success is not final,failure is not fatal.It is the courage to continue that counts – Winston Churchill

நிற்க அதற்குத் தக

இன்சொல் வழி

தீய சொல் வழி

1. இதில் நீங்கள் செல்லும் வழி யாதுஉங்கள் நண்பருக்குக் காட்டும் வழி யாது?

2. புயல் அறிவிப்பைக் கேட்ட நீங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காற்றும் வகையில் செய்யும் செயல்களை வரிசைப்படுத்தி எழுதுக.

3. பள்ளியிலும்வீட்டிலும் நீ நடந்து கொள்ளும் விதம் குறித்து பட்டியலிடுக.

4. மாணவ நிலையில் நாம் பின்பற்ற வேண்டிய அறங்களும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் பட்டியலிடு

எட்டு மதிப்பெண் வினாக்கள்(வினா எண் 38 முதல் 42)

உரைநடை நெடுவினா

1. நாட்டுவளமும் சொல்வளமும் தொடர்புடையது என்பதை பாவாணர் வழிநின்று விளக்குக.

2. காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை விவரித்து எழுதுக.

3. சங்ககாலத் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பைச் சான்றுகளுடன் விளக்குக.

4. தமிழின் இலக்கிய வளம் கல்வி மொழி பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள் அறிவியல் கருத்துகள் பிற துறைக் கருத்துகள் தமிழுக்குச் செழுமை.    மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலைஎன்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்கக் கட்டுரை எழுதுக.

5. போராட்டக் கலைஞர் பேச்சுக் கலைஞர் நாடகக் கலைஞர் திரைக் கலைஞர் இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய தலைப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று எழுதுக.

6. நாட்டு விழாக்கள் விடுதலைப் போராட்ட வரலாறு நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு-குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் 'மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும்என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.

விரிவானக்கட்டுரை

1. பிரும்மம் கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர்போல் நேசிக்கும் பண்பினை விவரிக்க

2. அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.

3. கற்கை நன்றே கற்கை நன்றே

   பிச்சை புகினும் கற்கை நன்றேஎன்கிறது வெற்றிவேற்கைமேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம்அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க.

4. பாய்ச்சல் கதையின் மையக்கருத்தைக் குறிப்பிட்டுக் கதையைச் சுருக்கி எழுதுக.

5. கிடைப்பதற்கரிய திருமந்திரம் கிடைத்தவுடன் இராமானுசர் செய்த நிகழ்வுகளைத் தொகுத்து எழுதுக.

பொதுக்கட்டுரை

1. குமரிக்கடல் முனையையும்வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர் திருநாட்டிற்குப் புகழ்தேடித்தந்த பெருமைதகைசால் தமிழன்னையைச் சாரும்.எழில்சேர் கன்னியாய் என்றும்திகழும் அவ்வன்னைக்குபிள்ளைத்தமிழ் பேசி,சதகம் சமைத்துபரணி பாடிகலம்பகம் கண்டுஉலாவந்துஅந்தாதி கூறிகோவை யாத்துஅணியாகப் பூட்டி அழகூட்டி அகம் மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள். இக்கருத்தைக் கருவாகக்கொண்டு “ சான்றோர் வளர்த்த தமிழ்” என்ற தலைப்பில் கட்டுரை வரைக.

2. பள்ளி ஆண்டு விழா மலருக்காகநீங்கள் நூலகத்தில் படித்த கதை/ கட்டுரை/ சிறுகதை/ கவிதை நூலுக்கு மதிப்புரை எழுதுக. குறிப்பு: நூல் தலைப்பு- நூலின் மையப் பொருள்- மொழி நடை-வெளிப்படும் கருத்து-நூல் கட்டமைப்பு- சிறப்புக் கூறு- நூலாசிரியர்.

3. உங்கள் ஊரில் கடின உழைப்பாளர்- சிறப்பு மிக்கவர் - போற்றத்தக்கவர் என்ற நிலைகளில் நீங்கள் கருதுகின்ற பெண்கள் தொடர்பான செய்திகளை தொகுத்து எழுதுக.

குறிப்பு : பூவிற்பவர் , சாலையோர உணவகம் நடத்துபவர்

4. உங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.

5. குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதி தலைப்பு தருக: முன்னுரை- சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு- சாலை விதிகள்- ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள்- விபத்துகளை தவிர்ப்போம்விழிப்புணர்வு தருவோம்- முடிவுரை.

6. உங்களைக் கவர்ந்த எவரேனும் ஓர் அறிஞர் அல்லது அரசியல் தலைவர் தம் வாழ்வில் நடந்த நிகழ்வுகளைத் தாமே சொல்வதைப் போன்று தன் வரலாறாக மாற்றி எழுதுக.

பதிவிறக்கம் செய்ய

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை