THIRD REVISION EXAM 10 TH STD TAMIL QUESTION PAPER & ANSWER KEY MADURAI DISTRICT

 

வினாத்தாளைப் பதிவிறக்க

மூன்றாம் திருப்புதல் தேர்வு-2026 மதுரை மாவட்டம்

10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்

                                                                பகுதி-1                                                     15X1=15

வி.எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

. இன்மையிலும் விருந்து

1

2.     

. வங்காள , ஆங்கில

1

3.     

. உழவு, ஏர், மண், மாடு

1

4.     

. வேற்றுமை உருபு

1

5.     

. 5

1

6.     

. மணிப்பெயர் வகை

1

7.     

. கலைஞர் என்ற சிறப்புப் பெயர் எப்போது வழங்கப்பட்டது?

1

8.     

. சிலப்பதிகாரம்

1

9.     

. தொடுதல் - தொடுத்தல்

1

10.   

. குறிஞ்சி, மருதம்,நெய்தல் நிலங்கள்

1

11.    

. வலிமையை நிலைநாட்டல்

1

12.   

. மனமகிழ்ச்சி

1

13.   

. எண்ணும்மை

1

14.   

. திருவிளையாடற்புராணம்

1

15.   

. வையை

1

                                     பகுதி-2                            பிரிவு-1                                                        4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

16

ü  கிழக்கிலிருந்து வீசும் காற்று கொண்டல்

ü  மேற்கிலிருந்து வீசும் காற்றுகோடை

ü  வடக்கிலிருந்து வீசும் காற்றுவாடை

ü  தெற்கிலிருந்து வீசும் காற்று - தென்றல்

2

17

அ. நெய்தல் நிலத்தவர் பாணர்களுக்கு கொடுத்த உணவு குறித்து சிறுபாணாற்றுப்படை கூறுவது யாது?

ஆ. மொழிபெயர்த்தல் என்ற தொடரைத் தொல்காப்பியர் எவ்வியலில் குறிப்பிட்டுள்ளார்?

2

18

ஏளனம் செய்யாமல், கொடுப்பவரைக் கண்டால், (இரப்பவரின்) பிச்சை எடுப்பவரின் உள்ளம் மகிழும்.

2


19

அவையம்=மன்றம் அல்லது சபை. வழக்கை விசாரித்து தீர்ப்பு கூறும் நீதின்மன்றம்.

2


20

இயம்புதல், உரைத்தல், செப்புதல்,பேசுதல், பகர்தல்

2

21

இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்

இன்மையே இன்னா தது.

2

                                                                    பிரிவு-2                                                    5X2=10

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

22

அழைப்புமணி ஒலித்ததும், கயல்விழி கதவைத் திறந்தாள்

2

23

வெட்சித்திணைமுதல் பாடாண் திணை வரைஉள்ள புறத்திணைகளில் பொதுவான செய்திகளையும் அவற்றுள் கூறப்படாத செய்திகளையும் கூறுவது பொதுவியல் திணை ஆகும்.

2

24

ü  வேம் + கை என்பது கையைக் குறிக்கும் தொடர்மொழி

ü  சேர்ந்து வரும்போது மரத்தையும், பிரிந்து வரும்போது கையையும் குறித்தது ( பொதுமொழி)

2

25

மயங்கியமயங்கு + (ன்) + ய் +

மயங்குபகுதி

(ன்) – இறந்தகால இடைநிலைன்புணர்ந்து கெட்டது.

ய்உடம்படுமெய்

- பெயரெச்ச விகுதி

2

26

. புயல்     . எல்லை

2

27

கம்பர், உமறுப்புலவர், ஜவ்வாதுப்புலவர், ஆசுகவி

2

28

வாருங்கள், நலமா?, நீர் அருந்துங்கள்

2

பகுதி-3  (மதிப்பெண்கள்:18)                        பிரிவு-1                                           2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

29

நிறம் மாறுவதற்கான காரணங்கள்:

1. காற்று மாசு தொழிற்சாலைகள், வாகனங்கள் வெளியிடும் புகை மற்றும் வாயுக்கள் பளிங்குக் கற்களில் படிந்து நிறமாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

2. அமில மழை காற்று மாசால் உருவாகும் அமில மழை பளிங்கை மெதுவாக சேதப்படுத்துகிறது.

3. யமுனை நதி மாசு அருகிலுள்ள யமுனை நதி மாசுபாடு காரணமாக உருவாகும் ஈரப்பத மாற்றங்கள் கட்டடத்தின் மேற்பரப்பை பாதிக்கின்றன.

4. பூச்சி கழிவுகள் நதியில் உருவாகும் சில பூச்சிகளின் கழிவுகள் சுவற்றில் ஒட்டிப் பழுப்பு புள்ளிகளை உருவாக்குகின்றன.

தீர்வுகள்:

1. தாஜ்மஹால் சுற்றுவட்டாரத்தில் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்தல்.

2. “மட் பேக்” (முல்தானி மிட்டி) முறையால் பளிங்கைக் கற்களை சுத்தம் செய்தல்.

3. யமுனை நதியை சுத்தப்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாத்தல்.

4. பசுமை வளர்ப்பை அதிகரித்து காற்று மாசைக் குறைத்தல்.

3

30

அ. மார்ஷல் நேசமணி  ஆ. 1956 நவம்பர் 1 

இ. நாகர்கோவில் நகர்மன்றத்தலைவர் , சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்

3

31

ü  தமிழுக்காகத் தமிழ்வளர்ச்சித் துறையை உருவாக்கினார்

ü  மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலைப் பரவலாக்கினார்

ü  2010 ல் கோவையில் உலகத் தமிழ் மாநாடு நடத்தினார்

3

                                                                       பிரிவு-2                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

32

ü  தேம்பா + அணி எனப் பிரித்து வாடாத மாலை என்றும், தேன் + பா + அணி எனப் பிரித்து தேன்போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு என்றும் இந்நூலுக்குப் பொருள் கொள்ளப்படுகின்றது.

ü  கிறித்துவின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பர் என்னும் யோசேப்பினைப் (வளனை) பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட நூல் இது.

ü   இப்பெருங்காப்பியம் 3 காண்டங்களையும் 36 படலங்களையும் உள்ளடக்கி, 3615 பாடல்களைக் கொண்டுள்ளது.

3


33

ü  காலில் அணிந்த கிண்கிணிகளோடு சிலம்புகள் ஆடட்டும்.

ü  அரைஞாண் மணியோடு அரைவடங்கள் ஆடட்டும்.

ü  தொந்தியுடன் சிறுவயிறும் ஆடட்டும்.

ü  நெற்றிச்சுட்டி,குண்டலங்கள் ஆக்யவையும் ஆடட்டும்.

ü  முருகப்பெருமானே செங்கீரை ஆடுக

3


34

 

.

வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறைய

பொய்யோஎனும் இடையாளொடும் இளையானொடும் போனான்

மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ

ஐயோவிவன் வடிவென்பதோர் அழியாஅழ குடையான்.

.

அள்ளல் பழனத்(து) அரக்காம்பல் வாயவிழ

வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப் புள்ளினம்தம்

கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ

நச்சிலைவேல் கோக்கோதை நாடு.

3

                                                               பிரிவு-3                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

35

ü  அகவலோசை பெற்று,ஈரசைச்சீர் மிகுந்து வரும்.

ü  ஆசிரியத்தளை மிகுதியாகவும்,பிற தளைகள் குறைவாகவும் வரும்.

ü  மூன்றடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமைந்து,ஏகாரத்தில் முடியும்

3

36

ü  இக்குறளில் உவமை அணி பயின்று வந்துள்ளது

உவமை அணி:

ஒரு பொருளை அதனோடு தொடர்புடைய மற்றொரு  பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது உவமையணியாகும். இதில் உவமை, உவமேயம், உவம உருபு ஆகியன இடம்பெறும். உவம உருபு  வெளிப்படையாக வரும்.

அணிப்பொருத்தம்:

v  உவமைவேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்பவன்.

v  உவமேயம்செங்கோல் தாங்கி அதிகாரத்தால் வரிவிதிக்கும் மன்னன்

v  உவம உருபுபோலும்

         இவ்வாறு உவமை, உவமேயம், உவம உருபு மூன்றும் வெளிப்பட்டு வந்தமையால் உவமையணி ஆயிற்று.

3

37

சீர்

அசை

வாய்பாடு

பொறி இன்மை

நிரை+ நேர்+நேர்

புளிமாங்காய்

யார்க்கும்

நேர்+நேர்

தேமா

பழிஅன்

நிரை+ நேர்

புளிமா

றறிவறிந்

நிரை+நிரை

கருவிளம்

தாள்வினை

நேர்+ நிரை

கூவிளம்

இன்மை

நேர்+நேர்

தேமா

பழி

நிரை

மலர்

3

                                                                பகுதி-4                                                       5X5=25

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

38

ü  கிடைத்தற்கரிய பேறுகளுள் எல்லாம் பெரும்பேறு பெரியோரைப் போற்றித் துணையாக்கிக் கொள்ளுதல் ஆகும்.

ü  குற்றங் கண்டபொழுது இடித்துக் கூறும் பெரியாரைத் துணைக்கொள்ளாத பாதுகாப்பற்ற மன்னன், பகைவர் இன்றியும் தானே கெடுவான்.

ü  தானொருவனாக நின்று பலரோடு பகைமேற்கொள்வதைக் காட்டிலும் பல மடங்கு தீமையைத் தருவது நற்பண்புடையோரின் நட்பைக் கைவிடுதலாகும்.

(அல்லது)

)

ü  அழகான அன்னை மொழி

ü  பழமையான நறுங்கனி

ü  பாண்டியன் மகள்

ü  சிறந்த நூல்களை உடைய மொழி

ü  பழம்பெருமையும் தனிச்சிறப்பும் உடைய மொழி

5

39

.

நண்பனுக்குக் கடிதம்

திருத்தணி.

10.07.2025

அன்புள்ள நண்பா,

           நலம். நலமறிய ஆவல். வெள்ளத்தில் சிக்கிய குழந்தையை நீ வீரத்துடன் மீட்டு, காப்பாற்றிய நிகழ்வையும், அதனால் உன்னை மாவட்ட ஆட்சியர் அழைத்து, பாராட்டி, விருது வழங்கிய நிகழ்வையும் தொலைக்காட்சியைப் பார்த்து அறிந்தேன். உனது நண்பனாக எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தேன். அனைவருக்கும் உதவும் உனது குணத்தை நான் அறிவேன். அதன் வெளிப்பாடாகவே இதைக் கருதுகிறேன். தொடர்ந்து உனது சமூக சமூகத்திற்கு உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு பல சேவைகளை ஆற்றிட வாழ்த்துகிறேன்

இப்படிக்கு,

உனது அன்பு நண்பன்

த. தமிழினியன்

உறைமேல் முகவரி:

   ப. எழில்குமரன்

   7 தெற்கு வீதி,

   காஞ்சி-1

) தலைமை ஆசிரியருக்குக் கடிதம்

அனுப்புநர்

                        . வேல்விழி,

                      பத்தாம் வகுப்பு, ”அ” பிரிவு,

                      மாணவர் செயலர்,

                        அரசு மேல்நிலைப் பள்ளி,

                       திருத்தணி-1

பெறுநர்

            தலைமை ஆசிரியர் அவர்கள்,

            அரசு மேல்நிலைப் பள்ளி,

            திருத்தணி-1

ஐயா,

பொருள்: பள்ளியை தூய்மையாக வைத்திருக்கும் செயல் திட்டத்திற்கு ஒப்புதல் கோரல்

            வணக்கம். பள்ளி வளாகத்தை எப்போதும் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமையாகும். இதனை முன்னிட்டு, “பள்ளி தூய்மை செயல் திட்டம்என்ற பெயரில் ஒரு திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம்.

செயல் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

1. வாரத்திற்கு ஒருமுறை தூய்மை நாள்கடைப்பிடித்தல்.

2. ஒவ்வொரு வகுப்பிற்கும் தனித் தூய்மை பொறுப்புக் குழு அமைத்தல்.

3. குப்பைகளை தனித்தனியாக சேகரிக்கும் தொட்டிகள் (ஈர/உலர்) அமைத்தல்.

4. மரநடுகை மற்றும் தோட்டப் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.

5. சுவர் ஓவியங்கள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் மூலம் சுத்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

6. மாதந்தோறும் சிறந்த தூய்மை வகுப்பிற்கு பரிசு வழங்குதல்.

       இத்திட்டம் மூலம் மாணவர்களிடையே சுத்தம் மற்றும் ஒழுங்கு பற்றிய பொறுப்புணர்வு அதிகரிக்கும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.

       எனவே, மேற்கண்ட செயல் திட்டத்தை நமது பள்ளியில் செயல்படுத்த தங்களின் அனுமதியும் ஒப்புதலும் வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.

                                                                                                 இப்படிக்கு,

                                                                                                                                                                தங்கள் உண்மையுள்ள,

இடம் : திருத்தணி                                                                                               அ அ அ அ அ.

நாள் : 04-03-2024

உறை மேல் முகவரி:

           தலைமை ஆசிரியர் அவர்கள்,

            அரசு மேல்நிலைப் பள்ளி,

            திருத்தணி-1

5

40

காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

41

படிவத்தை உரிய விவரங்களுடன் சரியாக நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்குக

5

42

.

1. ஒரு பள்ளியில் கற்றதை மறந்து விட்டால், பள்ளியில் கற்ற கல்வியினால் பயன் என்ன! – ஆல்பிரட் ஐன்ஸ்டின்

2. பெரும்பாலும் நாளையே இந்த வாரத்தின் பரபரப்பான நாள்ஸ்பானிஷ் பழமொழி

3. இருண்ட தருணங்களில் நாம் ஒளியைக் காண கவனம் செலுத்த வேண்டும் - அரிஸ்டாட்டில்

4. வெற்றி என்பது முடிவல்ல, தோல்வி என்பது மரணம் இல்லை. தொடர்ந்து செய்கின்ற செயல்கள் கணக்கில் கொள்ளப்படுகிறதுவின்ஸ்டன் சர்ச்சில்.

5. மொழி என்பது கலாச்சாரத்தின் வழிகாட்டி, அதுவே அம்மொழி பேசும் மக்கள் எங்கிருந்து வந்தார்கள், எங்கே செல்கிறார்கள் என்பதை உணர்த்தும்ரீடா மேக் ப்ரெளன்

.

1. புரளி பேசாதிருத்தல்

1. தேவையற்றச் சண்டைகள் நீங்கும்

2. பழிவாங்கும் எண்ணத்தை கைவிடல்

2. மன அமைதிப் பெறலாம்.

3. உண்மை பேசுதல்

3. நம் வாழ்வை உயர்த்தும், அச்சமின்றி வாழலாம்

4. உதவி செய்தல்

4. மன மகிழ்ச்சி கிடைக்கும்

5. அன்பாய் இருத்தல்

5. அனைவரும் நண்பராகிவிடுவர்

5

 

                                                           பகுதி-5                                                       3X8=24

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க:

43

. தமிழர்களின் விருந்தோம்பல்

முன்னுரை:

            விருந்தோம்பலை இல்லற வாழ்வின் முக்கிய அங்கமாகவே கொண்டு வாழ்ந்தனர் சங்ககாலத் தமிழர்கள்.முன்பின் அறியாத முதியவர்களே விருந்தினர் என்று தொல்காப்பியர் கூறியதை தங்கள் வாழ்வில் பின்பற்றி வாழ்ந்தனர். சங்க கால தமிழர்களின் விரும்பபோல் பண்பிற்குச் சில சான்றுகளை இங்கே காண்போம்.

தனித்து உண்ணாமை:

தனித்து உண்ணாமை என்பது தமிழன் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை. அமிழ்தமே கிடைத்தாலும் பிறருக்குக் கொடுக்கும் நல்லோரால் தான் உலகம் நிலைத்திருக்கிறது என்று தமிழர்கள் எண்ணினர்.

விருந்தோம்பலுக்கு நேரம்,காலம் இல்லை:

            விருந்தோம்பல் என்பது தமிழரின் சிறந்த பண்புகள் ஒன்றாகக் கருதப்படுகிறது.நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு தமிழருக்கு உண்டு. இதனை

அல்லில் ஆயினும் விருந்து வரில் உவக்கும்” 

என்று நற்றிணை குறிப்பிடுகிறது.

வறுமையிலும் விருந்தோம்பல்:

ü  தமிழர் வறுமையிலும் ஏதேனும் ஒரு வழியில் விருந்தளித்தனர்.

ü  விதை நெல்லைக் குற்றியெடுத்து விருந்தளித்தனர்.

ü  வாளைப் பணையம் வைத்து விருந்தளித்தனர்.

ü  கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தனர்.

நிலத்திற்கேற்ற விருந்து:

நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்று குடல் மீன் கறியும் உணவு கொடுத்தனர் என்கிறது சிறுபாணாற்றுப்படை.

விருந்தை எதிர்கொள்ளும் தன்மை:

வீட்டில் பலரும் நுழையும் அளவிற்கு உள்ள பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன்னர் உணவு உண்ண வேண்டியவர்கள் யாரேனும் உள்ளீர்களா என்று கேட்கும் வழக்கம் இருந்ததை,

பலர் புகுவாயில் அடைப்பக் கடவுநர் உளீரோ?”

 என்ற குறுந்தொகைப் பாடல் புலப்படுத்துகிறது.

முடிவுரை:

பண்டைத் தமிழர் இல்லங்களிலும் உள்ளங்களிலும் விருந்தோம்பல் பண்பாடு செடித்திருந்தது காலம் தோறும் தமிழர்கள் அடையாளமாக விளங்கும் உயர் பண்பான விருந்தோம்பலை போற்றி பெருமிதம் கொள்வோம்.

) நிலம் பேசுகிறது

முன்னுரை :

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார் பொறுத்தல் தலை

என்று வள்ளுவன் என்னை பெருமைப்படுத்தி இருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால் பல்வேறு வகைகளில் மனிதர்கள் என்னை மாசுபடுத்துவது என்னை வருத்தம் அடையச் செய்கிறது.

வேறு பெயர்கள்:

நிலமாகிய எனக்கு அசும்பு, காசினி, வட்டகை, கழனி, களர் கொல்லை, சுரம், தகர் ,நத்தம் என்று பலவகைப் பெயர்கள் உண்டு. எனது மாறுபட்ட தன்மைகளுக்கு ஏற்ப நான் பெயரிட்டு அழைக்கப்படுகின்றேன்.

ஐவகை நிலங்கள்:

நில மகளாகிய எனக்கு பழந்தமிழர் குறிஞ்சி ,முல்லை ,மருதம்,  நெய்தல், பாலை என்று பெயரிட்டு, எனது தன்மைக்கு ஏற்ப என்னை ஐவகை நிலங்களாக வகைப்படுத்தி இருக்கின்றனர். தமிழர்களின் வாழ்வியலோடு நான் இரண்டற கலந்து இருப்பது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா?

இலக்கியங்களில் நான்:

v  " நீலத் திரை கடல் ஓரத்திலே - நின்று

            நித்தம் தவம் செய்யும் குமரி எல்லை"

என்று மகாகவி கவிதையால் கொஞ்சியது என்னைத்தான்.

v  " சிறு பல் தொல்குடி பெறுநீர் சேர்ப்பன்" என்று அகநானூறு எனது வேறு வடிவமாகிய கடல் பகுதியை குறித்தது. இவை போன்று இன்னும் நிறைய இலக்கியச் சான்றுகள் என்னைப்பற்றி இருப்பது எனக்கு பெருமிதம் அளிக்கிறது.

எனது வருத்தம்:

v  நான் மனிதர்களாகிய உங்களுக்கு மரம், செடி ,கொடி வளரவும் பயிர்கள் விளையவும் வேளாண்மைக்கு உற்ற நண்பனாகவும் விளங்குகின்றேன்.

v  வற்றாத ஆறுகளையும் குளங்களையும் ஏரிகளையும் தந்து மனிதர்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்கிறேன்.

v  மேலும் எண்ணிலடங்கா வளங்களை என்னுள் கொண்டிருக்கிறேன். அதை மனிதர்களாகிய நீங்களும் மிகுதியாகப் பயன்படுத்துகிறீர்கள்.

v  ஆனால் மனிதர்களாகிய நீங்களோ ரசாயன உரங்களை பயன்படுத்துதல், நெகிழிப்பைகளை மிகுதியாகப் பயன்படுத்துதல், மேலும் ஆலைக் கழிவுகளை என்னுள் பாய்ச்சுதல் என்று பல வகைகளில் என்னை மாசுபடுத்துவது என்னை ஆழ்ந்த துன்பத்திற்கு உள்ளாக்குகிறது.

எனது வேண்டுகோள்:

v  மனிதர்களின் சுயநலத்திற்காக என்னை மாசுபடுத்துவதை முதலில் நிறுத்துங்கள்.

v  நெகிழி பயன்பாட்டை முற்றிலும் குறைத்து மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை பயன்படுத்த  துவங்குங்கள்

v  மரங்களை வெட்டாமல் இன்னும் அதிகமான மரங்களை நட்டு வளர்க்க முற்படுங்கள்.

v  என்னிலிருந்து அதிக கனிம வளங்களைத் தோண்டி எடுப்பதை நிறுத்துங்கள்.

முடிவுரை:

மனிதர்களே என்னுள் இருக்கும் வளங்களை எடுத்து உங்கள் வாழ்க்கையை வளமாக்குவதாக எண்ணிக் கொண்டால், எதிர்காலச் சந்ததியினருக்கு என்னால் கிடைக்கும் எந்த நன்மையையும் என்னால் தர இயலாமல் போய்விடும். எனவே என்னை மாசுபடுத்தாமல் என்னை முறையாகப் பயன்படுத்துங்கள் வருங்கால சந்ததியினர் நன்கு வாழ வழி செய்யுங்கள்!!

8

44

) முன்னுரை:                                           

               வரலாறு என்பது பல நிகழ்வுகளைக் கொண்டதாக உள்ளது. அதில் எண்ணற்ற ஆளுமைகளைக் காணமுடிகிறது. உலகில் பிறந்தவர் பலர் வாழ்வதோடு சரி. சிலர்தான் வரலாறு ஆகிறார்கள்.கல்வி என்றால் என்னவென்றே தெரியாத ஓர் இருண்ட சமூகத்தில் ஒற்றைச் சுடராகத்  தோன்றி,எண்ணற்ற சுடர்களை ஏற்றியவர் தான் மேரி. அவரைப் பற்றி இங்கு காண்போம்.

மேரியின் குடும்பச்சூழல்:

               மேரியின் குடும்பத்தினருக்கு பகல் முழுவதும் பருத்திக் காட்டில் வேலைகள். ஒரு நாள் ஒரே ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்கி விடக்கூடாது என்று நினைக்கும் குடும்பம் அது. பருத்திக் காட்டில் இருந்து பகலில் அம்மா பாட்சி மட்டும் உணவு சமைப்பதற்காக வீட்டுக்குத் திரும்புவாள்..உணவு தயாரானதும் குழந்தைகளை உணவு உண்ணக் கூப்பிடுவாள். 

மேரிக்கு நடந்த துன்பம்:

           மேரி ஒருநாள் தன் அம்மாவுடன், கூறு மாளிகைக்குச் செல்கிறாள். அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளின் அழைப்பையேற்று அவர்களோடு விளையாடுகிறாள். அங்கே, ஒரு புத்தகம் அவளது கண்ணில் படுகிறது. அந்தப் புத்தகத்தின் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்படுகிறது. அந்தப் புத்தகத்தை கையில் எடுத்து  அதைப் புரட்டத்தொடங்குகிறாள்.

          அதைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுமிகள்,” நீ அதைத் தொடக்கூடாது, உன்னால் படிக்க முடியாதுஎன்று மேரியின் உள்ளம் வருந்தும் வகையில்  பேசினர். அந்த நிகழ்வு மேரியின் மனதில் மிக  ஆழமாகப் பதிந்துவிடுகிறது.

தூண்டுகோல்- மிஸ்வில்சன் :

         ஒரு நாள் மிஸ் வில்சன் என்பவர் மேரி படிப்பதற்குத் தான் உதவி செய்வதாக கூறினார். மேரி செய்வதறியாது திகைத்து  நின்றாள். பிறகு பருத்தி எடுக்கும் வேலையைத் தொடர்ந்தாள். வேலையை விரைவாக முடிக்குமாறு அனைவரையும் அவசரபடுத்தினாள்.தான் ஒரு புதிய பெண்ணாக ஆகிவிட்டதாக உணர்ந்தாள். குடும்பத்திலிருந்து முதல் பெண் படிக்கப் போகிறாள். புதிய நம்பிக்கை பிறந்தது.

சிறப்பாகக் கல்விகற்ற மேரி:

     மேரி நாள்தோறும் தன் இலட்சியத்தைச் சுமந்து பள்ளிள்ச் சென்றாள். நாள்தோறும் புதிய புதிய செய்திகளைக் கற்றாள். பள்ளிக்கூடத்தில் சில வருடங்கள் ஓடி மறைந்தன. அந்த வருடத்தின் கடைசியில் மேரிக்குப் பட்டமளிப்பு நடந்தது மிஸ் வில்சன் மேரிக்கு உயர்கல்வி படிக்க உதவினார்.

முடிவுரை:

           மனதில் ஆர்வமும், விடாமுயற்சியும் இருந்தால், எதையும் சாதிக்கலாம் என்பதற்கு மேரியின் கதை ஒரு சிறந்த சான்றாகும்.உலகில் சிலர் வரலாறாகவே இருக்கிறார்கள். இவர்கள் பாதையே இல்லாத இடத்தில் தங்கள் காலடிகளால் ஒற்றையடிப்பாதை  இட்டு அதையே பெரும் சாலையாக உருவாக்குகிறார்கள். அவ்விதமாக மேரி வந்து ஓராயிரம் சுடரை ஏற்றி விட்டாள்.

) இராமானுசர் நாடகம்

 முன்னுரை:

    12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலர்வது குறிஞ்சிதலைமுறைக்கு ஒரு முறை மட்டுமே மலர்வது மூங்கில்நம் தலைமுறைக்கு ஒரு முறை பிறப்பவர்களே ஞானிகள். அத்தகைய ஞானிகளுள் ஒருவர் இராமானுசர்அவரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

தண்டும் கொடியுமாக:

    திருமந்திரத் திருவருள் பெறத் தண்டும்கொடியுமாக இராமானுசரை வரச் சொல்லுங்கள் என்னும் செய்திபூரணரால் திருவரங்கத்திற்கு அனுப்பப்பட்டது.அதனால்இராமானுசர்கூரேசர்முதலியாண்டான் ஆகிய மூவரும் பூரணர் இவ்வத்திற்கு வந்தனர். அவர்களைக் கண்ட பூரணர் கோபம் கொண்டார். அதற்கு இராமானுசர், "தாங்கள் கூறிய தண்டு கொடிக்கு இணையானவர்கள் இவர்கள். எனவே கோபம் கொள்ளாது பரிவு கொண்டு திருவருள் புரிய வேண்டும்" என்று கூறினார்,

ஆசிரியரின் கட்டளை:

      பூரணர் மூவரையும் வீட்டிற்குள் அழைத்து மிகுந்த நிபந்தனையுடன் "திருமகளுடன் கூடிய நாரயணனின் திருப்பாதங்களைப் புகலிடமாகக் கொள்கிறேன்திருவுடன் சேர்ந்த நாராயணனை வணங்குகிறேன்" என்ற மந்திரத்தைக் கூறினார். பூரணர் கூறிய திருமந்திரத்தை மூலரும் மூன்று முறை உரக்கச் சொன்னார்கள்.

திருமந்திரத்தை மக்களுக்கு உரைத்தல்:

     திருக்கோட்டியூர் சௌம்ப நாராயணன் திருக்கோவில் மதில் சுவரின் மேல் இராமனுார் நின்று கொண்டுஉரத்த குரலில் பேசத் தொடங்கினார். "கிடைப்பதற்கரிய பிறவிப்பிணியைத் தீர்க்கும் அருமருந்தான திருமந்திரத்தை உங்களுக்குக் கூறுகிறேன். அனைவரும் இணைந்து மந்திரத்தைச் சொல்லுங்கள்". அவர் சொல்லச் சொல்ல அனைவரும் உரத்தக் குரலில் மூன்று முறை கூறினார்கள்.

குருவின் சொல்லை மீறுதல்:

      குருவின் (பூரணரின்) சொல்லை மீறியதற்காக கோபம் கொண்ட பூரணரிடம் "கிடைப்பதற்குரிய மந்திரத்தைத் தங்களின் திருவருளால் நான் பெற்றேன். அதன் பயனை அனைவருக்கும் கிட்டவேண்டும். அவர்கள் பிறவிப்பிணி நீங்கி பெரும் பேறு பெற்றிடநான் மட்டும் நரகத்தை அடைவேன்" என்று விளக்கமளித்தார்.

குருவின் ஆசி:

       இராமானுசரின் பரந்த மனத்தைக் கண்ட குரு பூரணர்அவரை மன்னித்து அருளினார் மேலும் இறைவனின் ஆசி பெற அவரை வாழ்த்தினார். இராமானுசத்திற்கு தன் மகள் சௌப்ய நாராயணனை அடைக்கலமாக அளித்தார்.

முடிவுரை:

    யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்என்ற உயரிய மந்திரத்தை வாழ்வாக்கியவர் இராமானுசர்தனக்கென வாழாது பிறருக்காக நரகமும் செல்ல முன்வந்த பெருமகனார்

8

45

) தலைப்பு : சாலை பாதுகாப்பு

முன்னுரை:                                      

      சாலை விபத்துக்கள் நமது சமுதாயத்திற்கும், காவல்துறைக்கும், சட்டத்துக்கும் ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. தினந்தோறும் சாலைவிபத்துகளைப் பற்றிய செய்திகளை நாம் மிகுதியாக அறிகிறோம். இக்காலகட்டத்தில் மிகுதியான சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன. சாலை விதிகளை நாம் மதிக்காமல் நடப்பது இதற்கெல்லாம் காரணம் ஆகும். சாலை பாதுகாப்பின் அவசியம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு:

       சாலையில் விபத்துகள் நிகழாத வண்ணம் தடுப்பதற்காக, போக்குவரத்து காவல்துறையினர் பணி செய்கின்றனர்.அதற்காக மக்கள் பின்பற்ற வேண்டிய சில சாலை விதிகளை அரசு வரையறுத்துள்ளது. அறிவிப்புப் பலகைகள் மூலமாகவும், விளம்பரங்கள் மூலமாகவும், ஓட்டுனர் பயிற்சி பெறும்போதும் சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு வழங்கப்படுகிறது.சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.

சாலை விதிகள்:

      சாலையில் பயணம் செய்வோர் அனைவரும் அடிப்படையான சாலை விதிகள் அனைத்தையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.நடைமேடையைப் பயன்படுத்துதல், நகரப்பகுதிகளில் சாலையைக் கடக்க சுரங்க நடைபாதைகள் பயன்படுத்துதல், வெள்ளைக் கோடுகள் போடப்பட்ட இடத்தில் சாலையைக் கடத்தல், வாகன ஓட்டிகள் முறையான இடங்களில் வாகனங்களை நிறுத்துதல் உள்ளிட்ட அடிப்படை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள்:

v  சிவப்பு வண்ண விளக்கு" நில்" என்ற கட்டளையையும், மஞ்சள் வண்ண விளக்கு, தயாராக இரு என்ற கட்டளையையும், பச்சை வண்ண விளக்கு"புறப்படு" என்ற கட்டளையையும் நமக்குத் தருகிறது. அதைச் சரியாகப் பின்பற்ற வேண்டும்.

v  போக்குவரத்துக் காவல் துறையினரின் கட்டளையை மீறி நான் செல்லக்கூடாது. வாகனங்களில் அதிவேகம் இருக்கக்கூடாது.

v  சாலையில் அந்தந்த வாகனங்களுக்கு உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டக் கூடாது. நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை முந்த முயற்சி செய்யக்கூடாது. இருசக்கர வாகனங்களில் இருவருக்குமேல் பயணிக்கக் கூடாது.

v  வாகனஓட்டிகள் உடல்நிலை மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கும் போது கண்டிப்பாக வாகனம் ஓட்டக்கூடாது.மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுதல் சட்டப்படி குற்றமாகும்.பள்ளிகள், மருத்துவமனை, முதியோர் இல்லங்கள் போன்ற இடங்களுக்கு அருகில் அதிகமான ஒலி அளவில் ஒலிப்பானை ஒலிக்கக் கூடாது.

முடிவுரை:

     "சாலைவிதிகளை மதிப்போம்          

      விலைமதிப்பில்லாத உயிர்களைக் காப்போம்"

     என்பதை அனைவரும் மனதிற்கொண்டு சாலை விதிகளை கடைபிடித்து, சாலை பாதுகாப்பை உறுதி செய்வோம். சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை உணர்வோம்.

)

முகில்:    வணக்கம் ஐயா!
ஆசிரியர்: வணக்கம் இன்றைய பாடம் முன்னேற்றம். கொக்கைப் போல வாய்ப்பு வரும் வரை       

                காத்திருக்க வேண்டும். வாய்ப்பு வந்தவுடன் பயன்படுத்த வேண்டும்.
முகில்:   ஐயா சிந்திக்காமல் செயல்படக்கூடாது என்று கூறுகிறது இவ்வரிகள்.
ஆசிரியர்: கோழி குப்பையைக் கிளறினாலும் தனக்குத் தேவையான உணவை மட்டுமே கொத்தித்  

               தின்னும். அதுபோல எந்த செயலிலும் நல்லதை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
முகில்:   புரிந்தது ஐயா!
ஆசிரியர்: அடுத்தது உப்பைக் கண்ணால் பார்க்கலாம். சுவையை நாவில் உணரலாம். அதுபோல,

               வெளித்தோற்றம் எப்படி இருப்பினும் குணங்களை ஆராய்ந்து உணர்ந்து  

               கொள்ள வேண்டும் உப்பு குறைவானாலும் உண்ண முடியாது. அதிகமானாலும்

               உண்ணமுடியாது. அளவோடு இருந்தால் தான் ருசிக்க முடியும். நாமும் மற்றவர்களிடம்

               ஒவ்வொருவருடன்  உரிய அளவோடு பழகி இருப்போம்.
முகில்:   மிக்க மகிழ்ச்சி ஐயா வாழ்க்கை படத்தை புரிந்துகொண்டோம் நன்றி ஐயா.

8

 பதிவிறக்கம் செய்ய


Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை