10.ஆம் வகுப்பு - தமிழ் அணி இலக்கணம் 2025-2026

10.ஆம் வகுப்பு - தமிழ்  

அணி இலக்கணம் 2025-2026

இயல்-3

1)   வேலொடு  நின்றான் இடுஎன்றது போலும்

       கோலொடு நின்றான்  இரவு         - குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக.

ü  இக்குறளில் உவமை அணி பயின்று வந்துள்ளது

உவமை அணி:

ஒரு பொருளை அதனோடு தொடர்புடைய மற்றொரு  பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது உவமையணியாகும். இதில் உவமை, உவமேயம், உவம உருபு ஆகியன இடம்பெறும். உவம உருபு  வெளிப்படையாக வரும்.

அணிப்பொருத்தம்:

v  உவமைவேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்பவன்.

v  உவமேயம்செங்கோல் தாங்கி அதிகாரத்தால் வரிவிதிக்கும் மன்னன்

v  உவம உருபுபோலும்

இவ்வாறு உவமை, உவமேயம், உவம உருபு மூன்றும் வெளிப்பட்டு வந்தமையால் உவமையணி ஆயிற்று.

2)  ண்என்னாம் பாடற் கியைபின்றேல்; கண்என்னாம்

      கண்ணோட்டம் இல்லாத கண்.           - குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக.

ü  இக்குறளில் எடுத்துக்காட்டு உவமை அணி பயின்று வந்துள்ளது

எடுத்துக்காட்டு உவமை அணி:

    ஒரு பொருளைஅதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறும்போது உவமை, உவமேயம் ஆகியன இடம்பெற்று உவம உருபு மறைந்து வருவது எடுத்துக்காட்டு உவமையணியாகும்.

அணிப்பொருத்தம்:

v  உவமை – பாடலோடு பொருந்தாத இசை.

v  உவமேயம் – இரக்கம் இல்லாத கண்

v  உவம உருபு – மறைந்து வந்துள்ளது.

     உவமை, உவமேயம் ஆகியன இடம்பெற்று உவம உருபு மறைந்து வந்தமையால் எடுத்துக்காட்டு உவமையணி ஆயிற்று.

3) நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்

     நச்சு  மரம்பழுத்  தற்று.              - குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக.

ü  இக்குறளில் உவமை அணி பயின்று வந்துள்ளது

உவமை அணி:

ஒரு பொருளை அதனோடு தொடர்புடைய மற்றொரு  பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது உவமையணியாகும். இதில் உவமை, உவமேயம், உவம உருபு ஆகியன இடம்பெறும். உவம உருபு  வெளிப்படையாக வரும்.

அணிப்பொருத்தம்:

v  உவமை – ஊரின் நடுவில் பழுத்த நச்சு மரம்

v  உவமேயம் – உதவி செய்ய விரும்பாதவர் பெற்ற செல்வம்

v  உவம உருபு – அற்று

இவ்வாறு உவமை, உவமேயம், உவம உருபு மூன்றும் வெளிப்பட்டு வந்தமையால் உவமையணி ஆயிற்று.

இயல்-3

4) பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

     பொருளல்ல தில்லை  பொருள்.             - குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக

ü  இக்குறளில் சொல் பின்வரு  நிலை அணி பயின்று வந்துள்ளது

   சொல் பின்வரு நிலை அணி:

ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல் வேறு ஒரு பொருளில் பின்னரும் பலமுறை வருவது சொல் பின்வருநிலை அணி ஆகும்.

அணிப்பொருத்தம்:

   ‘பொருள்என்னும் சொல் வேறு பொருளில் பின்னரும் பலமுறை  வந்ததால் சொல் பின்வருநிலை அணி ஆயிற்று.

5) குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்

         றுண்டாகச் செய்வான் வினை                 - குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக

ü  இக்குறளில் உவமை அணி பயின்று வந்துள்ளது

உவமை அணி:

ஒரு பொருளை அதனோடு தொடர்புடைய மற்றொரு  பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது உவமையணியாகும். இதில் உவமை, உவமேயம், உவம உருபு ஆகியன இடம்பெறும். உவம உருபு  வெளிப்படையாக வரும்.

அணிப்பொருத்தம்:

v  உவமை – குன்றின்மேல் ஏறி நின்று யானைப்போர் காண்பவன்

v  உவமேயம் – தன் கைப்பொருள் கொண்டு ஒரு செயலைச் செய்பவன்

v  உவம உருபு – அற்று

இவ்வாறு உவமை, உவமேயம், உவம உருபு மூன்றும் வெளிப்பட்டு வந்தமையால் உவமையணி ஆயிற்று.

6) தொழுதகையுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்

     அழுதகண் ணீரும் அனைத்து.                 - குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக.

ü  இக்குறளில் உவமை அணி பயின்று வந்துள்ளது

உவமை அணி:

ஒரு பொருளை அதனோடு தொடர்புடைய மற்றொரு  பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது உவமையணியாகும். இதில் உவமை, உவமேயம், உவம உருபு ஆகியன இடம்பெறும். உவம உருபு  வெளிப்படையாக வரும்.

அணிப்பொருத்தம்:

v  உவமை – பகைவர்கள் கைகூப்பி வணங்குவது

v  உவமேயம் – பகைவர்கள் கண்ணீர்சிந்தி அழுவது

v  உவம உருபு – போல

இவ்வாறு உவமை, உவமேயம், உவம உருபு மூன்றும் வெளிப்பட்டு வந்தமையால் உவமையணி ஆயிற்று.

7) இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்

     இன்மையே  இன்னா தது.                    - குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக

ü  இக்குறளில் சொற்பொருள் பின்வருநிலை அணி பயின்று வந்துள்ளது.

சொற்பொருள் பின்வருநிலை அணி:

ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல் ஒரே ஒரு பொருளில் பின்னரும் பலமுறை வருவது சொற்பொருள் பின்வருநிலை அணி ஆகும்.

அணிப்பொருத்தம்:

    ‘இன்மைஎன்னும் சொல் வறுமை என்னும் ஒரே பொருளில் பின்னரும் பலமுறை வருவதால் இக்குறளில் சொற்பொருள் பின்வருநிலை அணி பயின்று வந்துள்ளது.

8) தேவர் அனையர் கயவர் அவரும்தாம்

     மேவனசெய்  தொழுக  லான்.                    - குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக

ü  இக்குறளில் வஞ்சப் புகழ்ச்சி அணி பயின்று வந்துள்ளது.

வஞ்சப் புகழ்ச்சி அணி:

     ஒரு செய்யுளில் ஒன்றைப் புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது போலப் புகழ்வதுமாக வருவது வஞ்சப்புகழ்ச்சி அணி ஆகும்.

அணிப்பொருத்தம்

      தேவர்கள் தாம் விரும்பும் மேலான செல்களைச் செய்தல் போல, கயவர்களும் தாம் விரும்பும் கீழ்மையான செல்களையே செய்வர். இக்குறளில் தேவருக்கு நிகராகக் கயவரைப் புகழ்ந்து கூறி, பின் பழித்துக் கூறுவதால் இது வஞ்சப்புகழ்ச்சி அணியாகும்.

9) சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல்

    கொல்லப் பயன்படும் கீழ்.                    - குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக

ü  இக்குறளில் உவமை அணி பயின்று வந்துள்ளது

உவமை அணி:

ஒரு பொருளை அதனோடு தொடர்புடைய மற்றொரு  பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது உவமையணியாகும். இதில் உவமை, உவமேயம், உவம உருபு ஆகியன இடம்பெறும். உவம உருபு  வெளிப்படையாக வரும்.

அணிப்பொருத்தம்:

v  உவமை – கரும்பைக் கசக்கிப் பிழிவது

v  உவமேயம் – கயவர்களிடம் பெறும் உதவி

v  உவம உருபு – போல்

இவ்வாறு உவமை, உவமேயம், உவம உருபு மூன்றும் வெளிப்பட்டு வந்தமையால் உவமையணி ஆயிற்று

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை