10 TH STD TAMIL PADIVAM NIRAPPUTHAL PAYIRCHI VINAAKKAL

 

பத்தாம் வகுப்பு – தமிழ்

படிவம் நிரப்புதல் பயிற்சி வினாக்கள் (வினா எண்:41)

1. கடலூர் மாவட்டம், பாரதியார் நகர், கம்பர் தெருவிலுள்ள 112 ஆம் இலக்க வீட்டில் குடியிருக்கும் நிலவனின் மகள் பூங்குழலி, நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறார். அவர் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உறுப்பினராகச் சேர்ந்து கால்பந்து விளையாட்டில் பயிற்சி பெற விரும்புகிறார். தேர்வர், தம்மை பூங்குழலியாகக் கருதி, கொடுக்கப்பட்டுள்ள உறுப்பினர் சேர்க்கைப் படிவத்தை நிரப்புக.

2. வீட்டு எண் : 21, வ.உ. சிதம்பரனார் தெரு, கரூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பினை நிறைவு செய்த வெற்றிச்செல்வனின் மகன் குணசேகரன் மேல்நிலை வகுப்பில் சேர விரும்புகிறார். தேர்வர் தன்னை குணசேகரனாகக் கருதி கொடுக்கப்பட்ட மேல்நிலை வகுப்புச் சேர்க்கை விண்ணப்பப்படிவத்தினை நிரப்புக.

3. பணி வாய்ப்பு வேண்டி தன் விவரப் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைக் கொண்டு படிவத்தை நிரப்புக.

பெயர் : அருளன், தந்தை செல்வம், முகவரி : சுதவு எண். 25, திலகர் தெரு, மதுரை ,வடக்கு -2.

4. அமுதன் தன் தந்தை மாணிக்கமணி அவர்களிடம் நூலகத்தில் உறுப்பினர் ஆக வேண்டினான் அவரும் அமுதனிடம் 200/- ரூபாயும், 15 காந்தி தெரு, குமாரபாளையம் நீலகிரி மாவட்டம் என்ற முகவரியிட்ட அடையாளச் சான்றையும் கொடுத்தார். கிளை நூலகத்திற்குச் சென்ற அமுதனாக, தேர்வர் தன்னைக் கருதி, கொடுக்கப்பட்ட நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக.

5. எண் 46, திரு.வி.க. தெரு. கடம்பவனம், நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தமிழினியன் என்பவரின் மகன் இளஞ்செழியன் பத்தாம் வகுப்பினை நிறைவு செய்தார். இளஞ்செழியன், கடம்பவனம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை வகுப்பு சேருவதற்குக் கொடுக்கப்பட்டுள்ள மேல்நிலை வகுப்பு சேர்க்கை விண்ணப்பப் படிவத்தை நிரப்புக.

6. குமார் தன் தந்தை செழியன் அவர்களிடம் நூலகத்தில் உறுப்பினராக வேண்டினான். அவரும் குமாரிடம் 500 ரூபாயும், 12 எழில்நகர், பாரதி தெரு, நாமக்கல் மாவட்டம் என்ற முகவரியிட்ட அடையாளச் சான்றையும் கொடுத்தார். கிளை நூலகத்திற்குச் சென்ற குமாராக தேர்வர் தன்னைக் கருதி, கொடுக்கப்பட்ட நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக.

7. தமிழ்வேந்தன் என்பவரின் மகள் வான்மலர் அரசு உயர்நிலைப் பள்ளி, விருத்தாசலம், கடலூர் மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு முடித்திருக்கிறார். அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 -ஆம் வகுப்பு சேர விரும்புகிறார். தேர்வர் தன்னை வான்மலராகக் கருதி, கொடுக்கப்பட்ட மேல்நிலை வகுப்பு சேர்க்கை விண்ணப்பப் படிவத்தினை நிரப்புக.

8.  கதவு எண் 66, திருவள்ளுவர் தெரு, திருச்சி என்ற முகவரியில் வசிக்கும் மாணிக்கம் என்பவரின் மகன் அறிவழகன் என்பவர் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ள பயிற்சி பெற விளையாட்டு ஆணையத்தில் உறுப்பினராக சேர விரும்புகிறார். உரிய படிவத்தை நிரப்புக

9. கதவு எண். 25, திலகர் தெரு, மதுரை வடக்கு - 2 என்ற முகவரியில் வசிக்கும் நலங்கிள்ளியின் மகள் வேல்விழி அதே பகுதியில் உள்ள இருசக்கர வாகன விற்பனையகத்தில் தகவல் உள்ளீட்டாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறார். தேர்வர் தன்னை வேல்விழியாகக் கருதி, தன் விவரப் பட்டியலைக் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைக் கொண்டு நிரப்புக.

10. மதுரை மாவட்டம், வள்ளுவர். நகர், பாவலர் தெரு, எண்-55 இல் வசிக்கும் தமிழ்நிலவனின் மகன் கொற்றவன் மாவட்ட மைய நூலகத்தில் உறுப்பினராகச் சேர விரும்புகிறார். தேர்வர் தன்னை கொற்றவனாகக் கருதிக் கொண்டு கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் சரியான படிவத்தை தேர்வு செய்து நிரப்புக

11. திருவள்ளூர் மாவட்டம், கதவு எண் 58/14, நேரு தெரு, கண்ணன் மகள் கீதா திருவள்ளூர் மாவட்ட மைய நூலகத்தில் உறுப்பினராகச் சேர விரும்புவதால், தேர்வர் தன்னைக் கீதாவாக எண்ணி கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் நிரப்புக.

 PDF DOWNLOAD

படிவங்களைப் பதிவிறக்க

2 கருத்துகள்

கருத்தளித்தமைக்கு நன்றி

கருத்துரையிடுக

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை