10 TH STD TAMIL MODEL PUBLIC EXAM QUESTION PAPER-2

 

மாதிரி பொதுத்தேர்வு-2 2025

10.ஆம் வகுப்பு - தமிழ்

நேரம் :  3.00 மணி , 15 நிமிடம்                            மதிப்பெண் : 100

பகுதி - I  (மதிப்பெண்கள் : 15)

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் எழுதுக.                           15X1-15

1. மேன்மை தரும் அறம் என்பது

அ) கைமாறு கருதாமல் அறம் செய்வது  

ஆ) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது   

) புகழ் கருதி அறம் செய்வது         

ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது

2. கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் -இக்கூற்றிலிருந்து நாம் அறிவது

அ) தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளாக் கலையாக்கினார்

ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்

) அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்  ஈ) அழகியலுடன் இலக்கியம் படைத்தார்.

3 . கோயம்புத்தூர் என்ற ஊர்ப்பெயரின் மரூஉவைத் தேர்க. 

) தஞ்சை ஆ) கோவை   ) சைதை  ) திருச்சி

4. தூக்குமேடை என்னும் நாடகத்தின் பாராட்டு விழாவில்தான், கலைஞர் என்ற சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது.   இத்தொடருக்கான விளா எது?

) தூக்குமேடை நாடகத்தில் நடித்தவர் ?  

ஆ) கலைஞர் என்ற சிறப்புப் பெயர் எப்போது வழங்கப்பட்டது?

இ) தூக்குமேடை என்பது திரைப்படமா? நாடகமா

) யாருக்குப் பாராட்டுவிழா நடத்தப்பட்டது?

5. மனக்கோட்டை என்ற மரபுத் தொடருக்குரிய சரியான பொருளைத் தேர்க.

) பெரிய கோட்டை கட்டுதல்   ஆ) இல்லாததைக் கற்பனை செய்தல்

இ) வேலையைத் தள்ளிப் போடுதல் ஈ) அதிகமாகச் செலவு செய்தல்

6. சொல்லப் பயன்படுவர்  சான்றோர்  கரும்புபோல்

    கொல்லப் பயன்படும் கீழ்  - இக்குறளில் கயவருக்கு உவமையாகக் கூறப்பட்ட  தொடர்

) கரும்புபோல் இனிமையானவர் ஆ) கரும்பைப்போல் பயன்படுபவர்

) கரும்பைப்போல் வளருபவர்  ) கரும்பைப் பிழிவதுபோல் பிழிந்தால்தான் பயன்படுவர்

7. கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது' - தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே

அ) பாடிய கேட்டவர் ஆ) பாடல் பாடிய இ) கேட்டவர்; பாடிய  ) பாடல் கேட்டவர்

8. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும், பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவள்  என்றும் பாராட்டப்படுவோர் -

அ)உதியன் சேரலாதன் ஆ) அதியன்;பெருஞ்சாத்தன் இ) பேகன்;கிள்ளிவளவன் ஈ) நெடுஞ்செழியன்;திருமுடிக்காரி

9. வெள்ளைச் சட்டை பேசினார். இத்தொடருக்குரிய தொகையைத் தேர்க.

அ) உவமைத்தொகை ஆ) அன்மொழித்தொகை இ) பண்புத்தொகை ஈ) வினைத்தொகை

10. பழமொழியை நிறைவு செய்யும் தொடரைத் தேர்க.   விருந்தும்-----

அ) ஒரு சோறு பதம்   ஆ) அமிர்தமும் நஞ்சு  இ) மருந்தும் மூன்று நாள் ஈ) பண்டம் குப்பையிலே

11. இருநாட்டு அரசர்களும்  தும்பைப் பூவைச் சூடிப்  போரிடுவதன் காரணம்

அ)நாட்டைக் கைப்பற்றுதல் ஆ)ஆநிரை கவர்தல் இ)வலிமையை நிலைநாட்டல்  )கோட்டையை முற்றுகையிடல்

பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு (12,13,14,15) விடை தருக.

ஓங்கு தன் முக்கு ஆழ் நீபவனத்தை நீந்து ஒரு போதேனும்

நீங்குவம் அல்லேம் கண்டாய் ஆயினும் நீயும் வேறு

தீங்கு உளை அல்லை காடன் செய்யுளை இகழ்தாலே

ஆங்கு அவன் இடத்தில் யாம் வைத்த அருளினால் வந்தேம் என்னா

12. பாடல் இடம் பெற்ற நூல்  

அ) பெரியயராணம் ஆ) திருவிளையாடற்புராணம் இ) கந்தபுராணம்  ஈ) பரியாடல்

13. பாடலின் ஆசிரியர்   

) பாஞ்சோதி முனிவர் ஆ) கம்பர்    இ) சேக்கிழார்  ஈ) குலசேகராழ்வார்

14. பாடலில் பயின்று வந்துள்ள அடி எதுகைகளைத் தேர்க

) ஓங்கு -பனை ஆ) நீங்குவம் - அல்லோம் இ) ஒங்கு நீங்குவம்   ஈ) நீத்து - நீயும்

15. நீபவனம் என்ற சொல்லின் பொருள் 

)ஆலவனம் ஆ)இடும்பவனம் இ)முல்லைவளம் ஈ) கடம்பவனம்

                              பகுதி - II   (மதிப்பெண்கள்:18)                   பிரிவு -1

எயையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். (21 கட்டாய வினா)          

16. வசன கவிதை - குறிப்பு வரைக

17. நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு. - இத்தொடரை இரு தொடராக்குக.

18. 'வாழ்வில் தலைக்கனம், தலைக்களமே வாழ்வு' என்று நாகூர் ரூமி யாருடைய வாழ்வைக் குறித்துக்கூறுகிறார்?

19. பன்முகக் கலைஞர் எனும் சிறப்புப்பெயர் முத்தமிழறிஞருக்கு ஏன் பொருத்தமுடையது?

20. விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க

அ) நூலின் பயன் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பயனுக்காக இருத்தல் வேண்டும்.

ஆ) ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 15-ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

21, 'குன்றேறி' எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                5X2-10

22. தஞ்சம் எளியர் பகைக்கு இத்திருக்குறள் அடிக்குரிய அசைகளையும் வாய்பாடுகளையும் எழுதுக. 

23. முரசொலி ஏட்டைக் கையெழுத்து இதழாகத் தொடங்கி வாரஇதழாக்கி நானேடாக்கினார் கலைஞர் இத்தொடரை தனிச் சொற்றொடர்களாக மாற்றுக.

24.பொருத்தமான இடங்களில் நிறுத்தக் குறியிடுக.

     ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த நிலைமையையும் பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன் ம.பொ.சி. 25.பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்? எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?

26.கலைச்சொற்கள் தருக.  . Screenplay . Playwrignt

27. பதிந்து - பகுபத உறுப்பிலக்கணம் தருக.

28.கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப்பொருளைத் திருத்தி எழுதுக.

அ) உழவர்கள் மலையில் உழுதனர்.    ஆ) முல்லைப் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.

                                  பகுதி - III    (மதிப்பெண்கள்:16)            பிரிவு 1

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.              2X3-6

29. சங்க இலக்கியங்கள காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதை நிறுவுக

30, தமிழ்மொழிக்காக் கலைஞர் செய்த சிறப்புகளுள் நீங்கள் அறிந்துகொண்ட இரண்டினை எழுதுக

31.உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

     தற்போது வெளிவருகிற சில உயர்வகைத் திறன்பேசியின் ஒளிபடக் கருவி, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கிறது. கடவுச்சொல்லும் கைரேகையும் கொண்டு திறன்பேசியைத் திறந்பது பழமையானது. உரிமையாளரின் முகத்தை அடையளனம் கண்டு திறப்பது இன்றைய தொழில்நுட்டம், செயற்கை நுண்ணறிவு படம் எடுக்கும் காட்சியை அடையாளம் கண்டு அகு சிற்பத் தன்மைக்கு தகவமைத்துக் கொள்கிறது.

)திறன் பேசியைத் திறக்கும் பழைய முறைகள் யாவை?

ஆ)திறன்பேசியில் படம் எடுத்தல் எவ்வாறு செயல்படுகிறது?

) உயர்வகைத் திறன்பேசிகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் யாது ?

பிரிவு - 2

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 

32. உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி, வேலைக்குச் செல்ல விரும்புகிறார். அவரிடம் கல்வி கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பிகள் என்பதை எழுதுக.

33. வள்ளுவம் சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்களாங்கள் நமக்கும் பொருத்துவதைக் குறன் வழி விளக்குக.

34. அடிபிறழாமல் எழுதுக.

) 'வாளால் அறுத்துச்' எனத் தொடங்கும் பெருமாள் திருமொழிப் பாடல்   (அல்லது)

ஆ) 'நவமணி" எனத் தொடங்கி 'அழுவ போன்றே" என முடியும் தேம்பாவணிப் பாடல்

பிரிவு - 3

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் கருக்காமாக விடையளிக்கவும்.                 

35. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

    பண்பும் பயனும் அது   - இக்குறளில் பயின்று வந்துள்ள அணியின் இலக்கணத்தை விளக்குக.

36. ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக

37. பின்வரும் திருக்குறளை அலகிட்டு வாய்ப்பாடு எழுதுக.

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்

பகுதி - IV (மதிப்பெண்கள்: 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளி.                                            5X5-25

38.) பொருள் செயல்வகை என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் பொருளின் பயன், பொருமீட்டும் முறை போன்றவை பற்றிக் கூறியுள்ள கருத்துகளையும் அக்கருத்துகள் பற்றிய தங்கள் எண்ணங்களையும் விவரித்து எழுதுக.   (அல்லது)

ஆ)சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிகவளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டுக

39. அ புயல் மழையால் வீழ்ந்த மரங்களை அகற்றவும், பழுதடைந்த மின்விளக்குகளைச் சனிசெய்யவும் வேண்டி, மாநகராட்சி ஆணையருக்குக் கடிதம் எழுதுக.   (அல்லது)

ஆ) இயற்கையைக் காப்போம் என்னும் தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில், முதல் பரிசுபெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

40. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

41. நீலகிரி மாவட்டம், பெரியார் நகர், பாரதியார் தெரு, 10-ஆம் இலக்க வீட்டில் குடியிருக்கும் அறிவழகள் என்பவரின் மகன் எழிலன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் அதே பகுதியில் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை வகுப்பில் சேர விரும்புகிறார், நேர்வர் தன்னை எழினாகக் கருதி கொடுக்கப்பட்ட மேல்நிலை வகுப்புச் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்தினை நிரப்புக

42.அ) கம்பு கேழ்வரகு போன்ற சிறுதானியங்களில் உங்களுக்குப் பிடித்த சிறுதானிய உணவுப் பொருட்கள்   ஐந்தின் பெயர்களை எழுதி, அவற்றின் நன்மைகளைப் பட்டியடுக.     (அல்லது)

ஆ) மொழிபெயர்க்க.

    Among the five geographical devisions of the Tamil country in Sangam literature, the Marutam region was the fit for cultivation, as it had the most fertile lands. The properity of a farmer depended on getting the necessary sunlight, seasonal rains and the fortility of the soil. Among these elements of nature, sunlight was considered indispensible by the ancient Tarnils.

பகுதி V   (மதிப்பெண்கள்: 24)

அனைத்து வினாக்களுக்கும் விரிவான விடையளிக்கவும்.                              3X8-24

43. அ) தமிழின் சொய்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக.      (அல்லது)

 ) எவரேனும் ஓர் அறிஞர் வாழ்வில் நடந்த நிகழ்வுகளில் உங்களைக் கவர்ந்த ஒன்றை அவரே சொல்வதைப்  போன்று தன் வரலாறாக மாற்றி எழுதுக.

44.) . புயலிலே ஒரு தோணி கதையில் இடம் பெற்றுள்ள வருணைனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும் பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன என்பதைக் கதைவழி சுவைபட விவரிக்க.          (அல்லது)

ஆ)அழகிரிசாமியின் 'ஒருவன் இருக்கிறான்"சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும்கதைமாந்தர் குறித்து எழுதுக.

45. அ) முன்னுரை- அன்றாடப் பணிகள் அழகாகச் செய்வோம் -தீய பழக்கம் தீமை தரும் போதையின் பாதை அழிவுக்கு வழிகாட்டும் - நல்லதனைக் கற்போம் நன்மை பெறுவோம் போதை ஒழிக்க விழிப்புணர்வு தருவோம் முடிவுரை. குறிப்புகளைக் கொண்டு போதை ஒழிப்பு என்ற தலைப்பில்  கட்டுரை எழுதுக                                             (அல்லது)

ஆ) முன்னுரை - உழவே முதன்மைத் தொழில்- உழவர்களே போற்றுதலுக்குரியோர் - உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்- உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே- உழவைக் கல்வியாய்க் கற்போம் - நிலவளம் காத்து நிமிர்ந்து நிற்போம் -முடிவுரை.       குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.

PDF DOWNLOAD

👉 மாதிரி பொதுத்தேர்வு-1

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை