10 TH STD TAMIL MODEL PUBLIC EXAM QUESTION PAPER-1 2025

 



மாதிரி பொதுத்தேர்வு-1 2025

10. ஆம் வகுப்பு        தமிழ்                 மொத்த மதிப்பெண்கள்: 100        

                                                    பகுதி – I (மதிப்பெண்கள்:15)                     

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.                                                               15×1=15

1. செய்தி 1 : ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15 ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்

   செய்தி 2 : காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே செய்தி 3 : காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல் கடந்து வணிகம் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்!

அ) செய்தி 1 மட்டும் சரி  ஆ) செய்தி 1.2 ஆகியன சரி இ) செய்தி 3 மட்டும் சரி  ஈ) செய்தி 1,3 ஆகியன சரி

2 . "பாடுஇமிழ் பனிக்கடல் பருகி" என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?

) கடல் நீர் ஆவியாகி மேகமாதல் ) கடல் நீர் ஒலித்தல்

இ) குளிர்ச்சி அடைதல்                   ஈ) கடல் நீர் கொந்தளித்தல்

3. குலசேகர ஆழ்வார் "வித்துவக்கோட்டம்மா" என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார். பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார் ஆகிய தொடர்களில் இடம்பெற்றுள்ள வழுவமைதிகள் முறையே

அ) மரபு வழுவமைதி. திணை வழுவமைதி ஆ) இட வழுவமைதி, மரபு வழுவமைதி

இ) பால் வழுவமைதி, திணை வழுவமைதி ஈ) காலவழுவமைதி, இடவழுவமைதி

4. பின்வருவனவற்றுள் முறையான தொடர்

அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு

ஆ) தமிழர் வாழை இலைக்கு பண்பாட்டில் தனித்த இடமுண்டு

இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு

ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு

5. போரில் வெற்றி பெற்ற மன்னன் சூடி மகிழும் பூவைத் தேர்க.

அ) தும்பைப் பூ   ஆ) கரந்தைப்பூ  இ காஞ்சிப்பூ   ஈ) வாகைப்பூ

6. "காலின் ஏழடிப் பின்சென்று" விருந்தினரை வழியனுப்பும் கருத்தை எடுத்துரைக்கும் நூலைத் தேர்க.

அ) கலிங்கத்துப்பரணி   ஆ) கம்பராமாயணம்   இ) பொருநராற்றுப்படை  ஈ) சிலப்பதிகாரம்

7. நாள்தோறும் நாடி முறைசெய்யா மன்னவன்

    நாள்தோறும் நாடு கெடும்.        குறளில் உள்ள சீர் மோனைச் சொற்களைத் தேர்க.

அ) நாடி முறைசெய்யா   ஆ) நாள்தொறும் – மன்னவன்   இ) நாள்தொறும் கெடும்    ஈ) நாள்தொறும் நாடி

8. சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க.

அ) உழவு, மண், ஏர், மாடு  ஆ) மண், மாடு, ஏர், உழவு  இ) உழவு, ஏர், மண், மாடு   ஈ) ஏர், உழவு, மாடு, மண்

9. வாய்மையே மழைநீராகி இத்தொடரில் வெளிப்படும் அணி

அ) தீவகம்   ஆ) தற்குறிப்பேற்றம்  ) உருவகம்  ஈ) நிரல்நிரை

10. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது -

அ) அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்தல்   ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்

இ) அறிவியல் முன்னேற்றம்     ஈ) வெளிநாட்டு முதலீடுகள்

11. "ஆனை ஆயிரம் அமரிடை வென்ற

     மாணவனுக்கு வகுப்பது பரணி" - இச்செய்யுள் அடியில் இடம்பெற்றுள்ள எண்ணுப் பெயரின் தமிழ் எண்ணைத்  தேர்க

அ) ரு00    ஆ) க00    இ) உ00   ஈ) க000

பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு (12,13,14,15) விடை தருக.

"வண்ணமும் கண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்

பூவும் புகையும் மேவிய விரையும்

பகர்வனர் திரிதரு நகர வீதியும்:

பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்

கட்டு துண்வினைக் காருகர் இருக்கையும்;

தூசும் துகிரும் ஆரமும் அகிலும்"

12. பாடலடிகள் இடம்பெற்ற நூல் எது?

) நற்றிணை    ஆ) சிலப்பதிகாரம்   இ) கம்பராமாயணம்  ஈ) குறுந்தொகை

13. இப்பாடலில் காணப்படும் நறுமணப் பொருள்கள்

அ) துகிர், தூசு  ஆ) ஆரம், பட்டு  இ) சுண்ணம் , அகில்   ஈ) பட்டு ,பருத்தி

14.வண்ணமும் கண்ணமும் இலக்கணக் குறிப்பு தருக.

அ) பண்புத்தொகை    ஆ) வினைத்தொகை   ) அடுக்குத்தொடர்   ஈ) எண்ணும்மை

15. பாடலில் இடம்பெற்றுள்ள சிர்துகை, அடிஎதுகைச் சொற்கள்

) வண்ணமும் -கண்ணமும், பட்டினும் - கட்டு   ஆ) வண்ணமும் சாந்தமும், கர்வனர் - பட்டினும்

இ) தூசும்- துகிரும் , ஆரமும்-அகிலும்      ஈ) வண்ணமும்- அகிலும் , கட்டு- காருகர்

பகுதி – II  (மதிப்பெண்கள்:15)  

                                                     பிரிவு -1                                                            4×2-8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். வினா எண் 21-க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.

16. விடைகளுக்கேற்ற வினாக்கள் எழுதுக.

அ) கண்ணுக்குக் காட்சியையும் சிந்தைக்குக் கருத்தினையும் கலைத்திறனோடு தருபவை நிழ்த்துக் கலைகள்,

ஆ) தெருக்கூத்து, தோற்பாவைக் கூத்து இரண்டும் கதையைத் தழுவி ஆடும் ஆட்டங்கள்.

17. உறங்குகின்ற கும்பகள்ள 'எழுந்திராய் எழுந்தினய்' காலதூதர் கையிலே உறங்குவாய் உறங்குவாய்' - குப்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?

18. 'நச்சப்படாதவன்' செல்வம் - இத்தொடரில் நச்சப்படாதவன் என்னும் சொல்லுக்குப் பொருள் தருக.

19. பெப்பர் - குறிப்பு வரைக.

20. வசன கவிதை என்றால் என்ன?

21. 'எப்பொருள்' எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.

பிரிவு - 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                                        5×2-10

22. கலைச்சொல் தருக.  அ) Homograph   ) Devotional Literature

குறிப்பு: செவிமாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

கீழ்க்காணும் சொற்களின் கூட்டப் பெயர்களை எழுதுக.    ஆடு, கல், புல் பழம்

23. உவமைகளைப் பயன்படுத்தி சொற்றொடர்கள் உருவாக்குக.

அ) கண்ணினைக் காக்கும் இமை போல      ஆ) சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல

24. ’கொள்வோர் கொள்க குரைப்போர் குரைக்க

       உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது' அடியெதுகையையும் இலக்கணக் குறிப்பையும் எடுத்தெழுதுக.

25. 'அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாதது' இவை அனைத்தையும் யாம் அறியோம். அதுபற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லை, எல்லாம் எமக்குத் தெரியும்.    இக்கூற்றில் அடிக்கோடிட்டுள்ள வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக

26. பத்தியிலுள்ள பிறமொழிச் சொற்களைத் தமிழ்ச் சொற்களாக மாற்றி எழுதுக.

      உங்களிடம் செவன் கோல்டு பிஸ்கட் உள்ளது. தராசின் இரண்டு தட்டுகளிலும் மூன்று மூன்று கோல்டு பிஸ்கட்டை வைத்தால் தராக ஈக்வலாக இருக்கும். பேலன்ஸாக ஒரு கோல்ட் பிஸ்கட் உங்கள் கையில் இருக்கும்.

27.அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

      பண்பும் பயனும் அது - இக்குறளில் பயின்று வந்துள்ள பொருள்கோளின் வகையைக் குறிப்பிடுக.

28. அறியேன் - பகுபத உறுப்பிலக்கணம் தருக.

பகுதி – III  (மதிப்பெண்கள்:18)

பிரிவு -1

எவையேலும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.                  2×3=6

29. காற்று பேசியது போல, நிலம் பேசுவதாக எண்ணிக் கொண்டு எழுதுக.

30. உரைப்பத்தியைப் படித்து விளாக்களுக்கு விடை தருக.

     தமிழர், போரிலும் அறநெறிகளைப் பின்பற்றினர். போர் அறம் என்பது வீரமற்றோர், புறமுதுகிட்டோர் சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது. போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று ஒரு பாடல் கூறுகிறது. தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை ஆவூர்   மூலாங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார்.

வினாக்கள்:

1. அவூர் மூலாங்கிழாரின் போர் அறம் யாது  

2. போர் அறம் என்பது எதனைக் குறிக்கிறது?

3. பாருக்கெல்லாம் திங்கு வராத வண்ணம் போர் புரிய வேண்டும்?

31.  மனிதர்களின் மூளையைப் போன்றது. செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினியின் மென்பொருள். மனிதனைப் போலவே போ, எழுத, சிந்திக்க இத்தொழில்நுட்பம் மேம்படுத்தப்படுகிறது. இதனால் மனிதகுலத்துக்கு ஏற்படுகிற நன்மைகளைப் பற்றி அறிவியல் இதழ் ஒன்றுக்கு எதிர்காலத் தொழில்நுட்பம் என்ற தலைப்பில் எழுதுக

பிரிவு -2

எவையேலும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.                  2×3=6

32. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு கட்டுவன யாவை?

33. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணித்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நலத்தை விளக்குக.

34. அடிபிறழாமல் எழுதுக.

. அருளைப் பெருக்கி' எனத் தொடங்கும் 'நீதிவெண்பா பாடல்

(அல்லது)

ஆ) 'வெய்யோளொளி' எனத் தொடங்கும் 'கம்பராமாயணப் பாடல்'

பிரிவு -2

எவையேலும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.                  2×3=6

35. இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்

      இன்மையே இன்னா தது.            - குறட்பாவினை அலகிட்டு வாய்ப்பாடு எழுதுக.

36. கண்ணே கண்ணுறங்கு! காலையில் நீயெழும்பு! மாமழை பெய்கையிலே! மாம்பூவே கண்ணுறங்கு! பாடினேன் தாலாட்டு! ஆடி ஆடி துய்ந்துறங்கு! இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.

37. வேலோடு நின்றான் இடுஎன்றது போலும் கோலொடு நின்றான் இரவு - குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக.

பகுதி - 1V (மதிப்பெண்கள்:25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளி.                                                                        5×5=25

38. அ) பலரிடம் உதவி பெற்றுக் கடின உழைப்பால் முன்னேறிய ஒருவர், அவருக்கு உதவிய நல்ல உள்ளங்களையும் சுற்றங்களையும் அருகில் சேர்க்கவில்லை. அவருக்கு உணர்த்தும் நோக்கில் வள்ளுவர் குறிப்பிடும் கருத்துகளை யாவை?                                                                   

(அல்லது)

ஆ) ஆற்றுப்படுத்துதல் என்பது அன்றைக்கு புலவர்களையும் கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது. அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதை விளக்குக.

39. மாநில அளவில் நடைபெற்ற 'மரம் இயற்கையின் வரம்' எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி படல் எழுதுக.               

(அல்லது)

ஆ) எங்கள் ஊர் நெடுஞ்சாலையிலிருந்து தொலையில் இருப்பதால் நெடுஞ்சாலைப் பகுதிக்குச் செல்வதற்குச் சிற்றுந்து வசதி செய்து தருமாறு போக்குவரத்து ஆணையருக்கு விண்ணப்பக் கடிதம் எழுதுக.

40. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

41. திருவண்ணாமலை மாவட்டம், அண்ணா நகர், கம்பர் தெரு, 28 ஆம் இலக்க வீட்டில் குடியிருக்கும் குமரனின் மகள் கயல்விழி கணினிப் பயிற்றுநர் பணி வேண்டித் தன்விவரப் பட்டியலை நிரப்புகிறார், தேர்வர், தன்னைக் கயல்விழியாகக் கருதிப் பணி வாய்ப்பு வேண்டித் தன் விவரப் படிவத்தை நிரப்புக

42. அ) அன்றாட வாழ்வில் நீங்கள் செய்த, பார்த்த உதவிகளால் எய்திய மனநிலையைப் பட்டியலிடுக.

(அல்லது)

ஆ) தமிழில் மொழிபெயர்க்க.

1.     Tomorrow is often the busiest day of the Week?-Spanish Proverb

2.    Education is what remains after one has forgotten what one has leamed in School- Albert Einstein

3.    Language is the road map of a culture. It tells you where its people come from and Where they are going-Rita Mae Brown

4.    It is during our Darkest moments that we must focus to see the light-Aristotle.

5.    Success is not final. Failure is not fatal, it is the courage to continue that counts.-Winston Churchill

குறிப்பு : செவிமாற்றுத் திறனாளர்களுக்கான மாற்றுவினா.

    முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் எனப் பெயர். விருந்தே புதுமை என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். தனித்து உண்ணாமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை, அமிழ்தமே கிடைத்தாலும் தாமே உண்ணாது பிறருக்கும் கொடுப்பர் நல்லோர்; அத்தகையோரால் தான் உலகம் நிலைத்திருக்கிறது. விருந்தோம்பல் என்பது பெண்களின் சிறந்த பண்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. வீட்டிற்கு வந்தவருக்கு, வறிய நிலையிலும் எவ்வழியிலேயேனும் முயன்று விருந்தளித்து மகிழ்ந்தனர் நம் முன்னோர், நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல்மீன் கறியும் பிறவும் கொடுத்தனர் என்கிறது சிறுபாணாற்றுப்படை, விதைத்து விட்டு வந்த நெல்லை அறிந்து வந்து, பின் சமைத்து விருந்து படைத்த திறம் பெரியபுராணத்தில் காட்டப்படுகிறது.

வினாக்கள்:

1. விருந்து குறித்து தொல்காப்பியம் குறிப்பிடுவது யாது?

2. விருந்தோம்பல் குறித்து சிறுபாணாற்றுப்படை கூறுவது யாது?

3. நம்முன்னோர்களின் மகிழ்ச்சி எதில் இருக்கிறது?

4. பெரிய புராணத்தில் குறிப்பிடப்படும் விருந்தோம்பல் குறித்த செய்தியை எழுதுக.

5. பெண்களின் சிறந்த பண்புகளின் ஒன்று எது?

பகுதி - V (மதிப்பெண்கள்: 24)

அனைத்து வினாக்களுக்கும் விரிவான  விடையளிக்கவும்.                                              3×8=24

43. . போராட்டக் கலைஞர் - பேச்சுக்கலைஞர் -நாடகக் கலைஞர் திரைக்கலைஞர் - இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய தலைப்புகளைக் கொண்டு விரிவாக எழுதுக.

(அல்லது)

ஆ) ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழை, வார இதழ் ஒன்று வெளியிட இருக்கிறது. அதற்கான ஒரு சுவரொட்டியை வடிவமைத்து அளிக்க

44.அ) அன்னம்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.

(அல்லது)

ஆ) பாய்ச்சல் சிறுகதையில் அழருவின் கதாபாத்திரம் போல், நீங்கள் கண்ட பகல்வேடக் கலைஞர் குறித்த நிகழ்வுகளை ஒப்பிட்டும் அவர்கள் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகள் குறித்தும் விரிவாக எழுதுக.

45.அ) உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்கு நீங்கள் சென்று வந்த நிகழ்வு குறித்துக் குறிப்புகளைப் பயன்படுத்தி கட்டுரை எழுதுக.

குறிப்புகள்: முன்னுரை - அரசுப் பொருட்காட்சிக்கான இடமும் அமைப்பும் - பல்வகை அங்காடிகள்-உணவுக்கூடங்கள் -போக்குவரத்துத்துறை - விளையாட்டு அமைவிடங்கள் முடிவுரை.

(அல்லது)

ஆ) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதித் தலைப்பிடுக.

குறிப்புகள் : முன்னுரை - தமிழரின் உணவுமுறைகள் - தோய்தடுக்கும் தமிழர் உணவுகள் - மருந்தாகும்

உணவுகள்

பணிவாய்ப்பு வேண்டி தன்விவரப் பட்டியலை நிரப்புதல்

1.    பெயர்                                                                       :       

2.   பாலினம்                                                                  :       

3.   பிறந்த நாள் மற்றும் வயது                                       :       

4.   தேசிய இனம்                                                           :       

5.   பெற்றோர் / பாதுகாவலர் பெயர்                              :       

6.   வீட்டு முகவரி                                                         : 

 

7.   தொலைபேசி / அலைபேசி எண்                          :       

8.   பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள்               :       

9.   தாய்மொழி                                                               :       

10. பயின்ற மொழிகள்                                                  :       

11.  தட்டச்சு                                                                    :       

12. கணினி                                                                    :       

      மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் உண்மையென உறுதி கூறுகிறேன். தங்கள் நிறுவனத்தில் -------- பணியினைத் தந்தால் என் பணியைச் சிறப்பாகவும் உண்மையாகவும் செய்வேன் என உறுதியளிக்கிறேன்.

                                                                                                                             இப்படிக்கு,

                                                                                                                              தங்கள் உண்மையுள்ள

பதிவிறக்க

 

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை