10 TH STD TAMIL PUBLIC EXAM 2 MARK QUESTIONS

 


அரசுப்பொதுத்தேர்வு 2 மதிப்பெண் வினாக்கள்

(வினா எண் 16 முதல் 28 வரை)

பத்தாம் வகுப்பு – தமிழ்

செப்டம்பர் 2021                                            

                                                                 பிரிவு – 1                                                             4×2=8

16. விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க:

(அ) உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியா,

(ஆ) தமிழ்த்தென்றல் திரு.வி.க. போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர் தமிழ்த்திரு இரா இளங்குமரனார்.

17. வசன கவிதை - குறிப்பு வரைக

18. வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக.

19. ஜெயகாந்தனின், திரைப்படமான படைப்புகளில் எவையேனும் இரண்டினை எழுதுக

20. மருத்துவத்தில் மருந்துடன் அன்பும், நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

21. 'விடல்' என முடியும் திருக்குறனை எழுதுக

                                                               பிரிவு – 2                                                               5×2=10

22. கலைச்சொற்கள் தருக.    (அ) Consulate     (ஆ) Folk Literature

குறிப்பு: செவி மாற்றுத்திறனாளர்களுக்கான மாற்று வினா

கூட்டப்பெயர்களை எழுதுக    (அ) கல்   (ஆ) ஆடு

23. புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக

24. "இப்ப ஒசரமா வளத்துட்டான்! ஒனக்கு அடையாளமே தெரியாது' ஊருக்கு எங்கூட வருவாம் பாரேன்! சரி, போனை வையி நாங் கெளம்பிட்டேன்.."  உரையாடலில் உள்ள பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக

25. 'மயங்கிய' பகுபத உறுப்பிலக்கணம் தருக

26. வெண்பாவின் ஓசையையும், ஆசிரியப்பாவின் ஓசையையும் எழுதுக.

27. பொருத்தமான இடங்களில் நிறுத்தக் குறியிடுக

    பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன் - ம.பொ.சி.

28. சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக      மேகலை, தேன், பூ. விண், மழை, மணி

மே 2022                                            

                                                                 பிரிவு – 1                                                             4×2=8

16. வசன கவிதை – குறிப்பு வரைக

17. விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க:

(அ) சொற்பொழிவுகளைக் கேட்பதன் மூலமாக ம.பொ.சி. இலக்கிய அறிவு பெற்றார்.

(ஆ) 1906 -ஆம் ஆண்டு வ.உ. சிதம்பரனார் ஆங்கிலேயர்களுக்கு எதிராகச் சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்.

18. குறிப்பு வரைக அவையம்.

19. "மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!

     முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!"

      இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள ஐம்பெருங் காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

20. தாவரங்களின் இளம் பயிர் வகைகளைக் குறிக்கும் சொற்களில் நான்கினை எழுதுக

21. 'முயற்சி' எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.

                                                                     பிரிவு – 2                                                                   5×2=10

22. சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க.

(அ) இன்சொல்   (ஆ) எழுகதிர்

23. "வாழ்க" பகுபத உறுப்பிலக்கணம் தருக.

24. இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக.  (அ) விடு – வீடு     (ஆ) கொடு -கோடு

25. வெண்பா, ஆசிரியப்பாவின் ஓசைகளை எழுதுக.

26. கலைச் சொற்கள் தருக.  (அ) Belief    (ஆ) Philosopher

குறிப்பு: செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

கூட்டப்பெயர்களை எழுதுக.  (அ) கல்   (ஆ) ஆடு

27. வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின்உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய் மொழிக்குச் செல்கிறேன் இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு ?

28. சந்தக் கவிதையில் வந்த பிழைகளைத் திருத்துக

"தேணிலே ஊரிய செந்தமிழின் சுவை

               தேரும் சிலப்பதி காறமதை

ஊனிலே எம்முயிர் உல்லலவும் நிதம்

                 ஓதி யுனர்ந்தின் புருவோமே."

ஜூலை  2022                                            

                                                                 பிரிவு – 1                                                             4×2=8

16. "உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண் வற்றாகும் கீழ்"

      -இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி, அதன் இலக்கணம் தருக.

17. விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்கவும் :

(அ) சதாவதானம் என்னும் கலையில் சிறந்து விளங்கியவர் செய்குதம்பிப் பாவலர்.

(ஆ) பரஞ்சோதி முனிவர் திருமறைக் காட்டில் பிறந்தவர்

18. தேம்பாவணி - குறிப்பு வரைக

19. தண்ணீர் குடி, தயிர்க் குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களை விரித்து எழுதுக; தொடரில் அமைக்கவும்.

20. பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர் - சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர் ?

21. 'பல்லார்' எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.

                                                                   பிரிவு – 2                                                                   5×2=10

22. பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார் ? ஆகிய தொடர்களில் எழுவாயுடன் பயனிலைகள் யாவை ?

23. "ஒலித்து"-பகுபத உறுப்பிலக்கணம் தருக.

24. பழமொழிகளை நிறைவு செய்க.   (அ) உப்பில்லாப்------- (ஆ) ஒரு பானை----------

25. பா எத்தனை வகைப்படும் ? அவை யாவை ?

26. கலைச்சொற்கள் தருக.    (அ) Vowel     (ஆ) Discussion

குறிப்பு :  செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா.

குறிப்பைப் பயன்படுத்தி விடை தருக.    குறிப்பு - எதிர்மறையாக மாற்றுக.

(அ) மீளாத் துயர்    (ஆ) பார்த்த படம்

27. நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு இத்தொடரை இரு தொடர்களாக்குக.

மார்ச்  2023                                           

                                                                 பிரிவு – 1                                                             4×2=8

16. தமிழ்நாட்டில் மட்டும் விளையக்கூடிய சிறுகூலங்களின் பெயர்களை எழுதுக.

17. விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க.

(அ) கிரேக்க அறிஞர் ஹிப்பாலஸ் என்பவர் பருவக் காற்றின் பயனை உலகிற்கு உணர்த்தினார்.

(ஆ) தமிழ் மக்களின் வீரத்தைச் சொல்லும் கலையாகத் திகழ்வது புலி ஆட்டமாகும்.

18. குறிப்பு வரைக - 'சதாவதானம்'.

19. மெய்க்கீர்த்திப் பாடுவதன் நோக்கம் யாது ?

20. குறிப்பு வரைக "அவையம்"

21. 'செயற்கை' எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.

                                                                      பிரிவு – 2                                                                   5×2=10

22. கீழ்க்காணும் ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக.  

(அ) உதகமண்டலம்   (ஆ) திருநெல்வேலி   (இ) சைதாப்பேட்டை    (ஈ) கும்பகோணம்

23. பழமொழிகளை நிறைவு செய்க.  (அ) ஒரு பானை------   (ஆ) அளவுக்கு--------

24. பகுபத உறுப்பிலக்கணம் தருசு - "ஒலித்து"

25. கலைச்சொற்கள் தருக.  (அ) Patent    (ஆ) Storm

குறிப்பு: செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா.

சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.

தேன், விளக்கு, மழை, விண், மணி, விலங்கு, செய், மேகலை, வாள், பொன், பூ

26. அடிக்கோடிட்ட தொகைநிலைத் தொடர்களை வகைப்படுத்துக.

அன்புச்செல்வன் திறன் பேசியின் தொடுதிரையில் படித்துக் கொண்டிருந்தார்.

27. மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக.

(அ) மனக்கோட்டை  (ஆ) கண்ணும் கருத்தும்

28. குறள்வெண்பாவின் இலக்கணத்தை எடுத்துக்காட்டுடன் எழுதுக.

ஜூன்  2023                                           

                                                                 பிரிவு – 1                                                             4×2=8

16. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக

17. விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க,

(அ) 'தமிழாதுள்ளி எழு' என்னும் தலைப்புடைய துண்டறிக்கையை கடற்கரையில் குழுமியிருந்த மக்களிடையே ம.பொ.சி. வழங்கினார்.

(ஆ) விருந்தோம்பலை வலியுறுத்த ஓர் அதிகாரமே திருக்குறளில் அமைந்திருக்கிறது.

18. 'இறடிப் பொம்மல் பெறுகுவிர்' இத்தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக.

19. 'தஞ்சம் எளியன் பகைக்கு' - இவ்வடிக்குரிய அசைகளையும் வாய்ப்பாடுகளையும் எழுதுக.

20. 'நமக்கு உயிர் காற்று

      காற்றுக்கு வரம் மரம் மரங்களை

      வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம்'

இதுபோன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.

21. 'எப்பொருள்' எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.

                                                                      பிரிவு – 2                                                                   5×2=10

22. கலைச்சொல் தருக.   (அ) Vowel   (ஆ) Emblem

குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்றுவினா.

கூட்டப் பெயர்களை எழுதுக.   (அ) பழம்   (ஆ) புல்

23. 'கிளர்ந்த' - பகுபத உறுப்பிலக்கணம் தருக.

24. பொருத்தமான இடங்களில் நிறுத்தக் குறியிடுக.

     பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன் - ம.பொ.சி.

25. பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார் ? ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை ?

26. சந்தக் கவிதையில் பிழைகளைத் திருத்துக

"தேணிலே ஊரிய செந்தமிழின் சுவை

               தேரும் சிலப்பதி காறமதை

ஊனிலே எம்முயிர் உல்லலவும் நிதம்

                 ஓதி யுனர்ந்தின் புருவோமே."

27. புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.

28. மரபுத் தொடரைப் பொருத்தமான தொடரில் அமைத்து எழுதுக

(அ) அள்ளி இறைத்தல்   (ஆ)ஆறப்போடுதல்

மார்ச்  2024                                           

                                                                 பிரிவு – 1                                                             4×2=8

16. தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.

17. விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்கவும்.

(அ) அறிவியலின் வளர்ச்சி மனிதனின் அறிவை விரிவாக்குகிறது.

(ஆ) பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலர்வது குறிஞ்சி.

18. வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்குச் சான்று தருக.

19. பின்வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார் ? ஏன் என்பதை எழுதுக. பெரிய கத்தி, இரும்பு ஈட்டி, உழைத்ததால் கிடைத்த ஊதியம், வில்லும் அம்பும்.

20. செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக எழுதுக.

21. 'முயற்சி' எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.

                                                                      பிரிவு – 2                                                                   5×2=10

22. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.

      ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.

    ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன. மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக் காட்டி எஞ்சிய பிழையான தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.

23. இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்கவும்.

(அ) கொடு – கோடு  (ஆ) இயற்கை -செயற்கை

24. பகுபத உறுப்பிலக்கணம் தருக.    மயங்கிய

25. கலைச்சொற்கள் தருக.   (அ) Biotechnology   (ஆ) Myth

குறிப்பு: செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா.

குறிப்பைப் பயன்படுத்தி விடை தருக.   குறிப்பு : எதிர்மறையாக மாற்றுக.

(அ) பார்த்த படம்   (ஆ) எழுதாக்கவிதை

26. குறிப்புகளைக் கொண்டு வினாவிலேயே விடை இருப்பதைப் போன்று வினாத் தொடர்கள் அமைக்கவும்.

குறிப்புகள் :  (1) சுவைக்காத இளநீர்   (2) விடுமுறை நாள்

27. "சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்'' என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினா -இதில் உள்ள வழுவமைதிகளைத் திருத்தி எழுதுக.

28. 'வேங்கை' என்பதைத் தொடர் மொழியாகவும், பொது மொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

ஜூன்  2024                                           

                                                                 பிரிவு – 1                                                             4×2=8

16. விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க.

(அ) சாலைகளில் இடப்பக்கம் வண்டிகள் செல்வதே சாலை விதிகளில் முதன்மையான விதி

(ஆ) ம.பொ.சி. சொற்பொழிவுகளைக் கேட்பதன் மூலமாக இலக்கிய அறிவு பெற்றார்.

17. "மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே! முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!"

        இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள ஐம்பெருங்காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

18. பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர் - சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர் ?

19. வறுமையின் காரணமாக உதவிகேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளி நகையாடுவது குறித்துக் குறளின் கருத்து என்ன ?

20. வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு பொதிந்த இரண் அறிவியல் கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடுக.

21. "எப்பொருள்" எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.

                                                                      பிரிவு – 2                                                                   5×2=10

22. உவமையைப் பயன்படுத்திச் சொற்றொடர் உருவாக்குக

(அ) தாமரை இலை நீர்போல  (ஆ) சிலை மேல் எழுத்து போல

23. பகுபத உறுப்பிலக்கணம் தருக. பொறித்த

24. தஞ்சம் எளியர் பகைக்கு இவ்வடிக்குரிய அசைகளையும் வாய்பாடுகளையும் எழுதுக.

25. கலைச் சொற்கள் தருக.

(அ) Emblem   (ஆ) Belief

குறிப்பு : செவிமாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா.

(தொடரைப் படித்து விடையைத் தேர்க.)

(அ) மீன் இருப்பது நீரில் தேன் இருப்பது.....  (பூவில், மணலில்)

(ஆ) கல் சிலையாகுமெனில், நெல்----- ஆகும்.  (கரு, சோறு)

26. எதிர்மறையாக மாற்றுக.  (அ) மீளாத் துயர்  (ஆ) எழுதாக் கவிதை

27. குறள்வெண்பாவின் இலக்கணத்தை எழுதுக.

28. புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.

பதிவிறக்க

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை