மாதிரி பொதுத்தேர்வு-3 2025
மொழிப்பாடம்
- பகுதி I
- தமிழ்
கால அளவு : 3.00
மணி நேரம் மொத்த மதிப்பெண்கள் : 100
பகுதி - I (மதிப்பெண்கள் : 15)
குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
(ii)
கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத்
தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
1.
கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன்
-இக்கூற்றிலிருந்து நாம் அறிவது
அ) தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளாக்
கலையாக்கினார்
ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி
புரியவே எழுதினார்
இ) அறத்தைக் கூறுவதற்காக எழுதினார் ஈ) அழகியலுடன் இலக்கியம்
படைத்தார்.
2.
மலர்கள் தரையில் நழுவும்' எப்போது?
அ.அள்ளி முகர்ந்தால் ஆ. தளரப் பிணைத்தால் இ. இறுக்கி
முடிச்சிட்டால் ஈ. காம்பு முறிந்தால்
3.
'தூசும் துகிரும்’ என்பது-------
அ. வினைத்தொகை ஆ. உம்மைத்தொகை
இ. பண்புத்தொகை ஈ. அன்மொழித்தொகை
4.
எள்ளிலிருந்து எண்ணெய் எடுத்தலின் மிஞ்சுவதைக் குறிக்கும் சரியான
சொல்
அ. எள்கசடு ஆ. பிண்ணாக்கு இ. ஆமணக்கு
ஈ. எள்கட்டி
5.
தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிப்பது
அ. தொழிற்பெயர் ஆ. முதனிலை திரிந்த தொழிற்பெயர் இ.முதனிலைத்
தொழிற்பெயர் ஈ.வினையாலணையும் பெயர்
6.
'மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன்
குன்றமாவது எங்களுக்கு வேண்டும்' - மாலவன்
குன்றமும் வேலவன் குன்றமும்
குறிப்பவை முறையே
அ.திருத்தணியும் திருப்பதியும் ஆ. திருப்பரங்குன்றமும்
பழனியும்
இ. திருப்பதியும் திருத்தணியும்
ஈ.திருப்பதியும் திருச்செந்தூரும்
7.கொடுக்கப்பட்ட அனைத்துச் சொற்களும் அமைந்த பொருத்தமான தொடரைத் தேர்க.
மலை, மழை,
மேகம், ஆறு, ஏரி,
குளம்
அ. மலைமீது மழை பெய்து ஆற்று வெள்ளம் ஊரின் வழியே
பெருக்கெடுத்து ஓடியது.
ஆ கருத்த மேகம் மலைமீது மழையைப் பொழிய ஆறு, ஏரி, குளம், அனைத்தும் நீரால் நிரம்பின.
இ. திரண்ட மேகங்கள் மலையில் மாரியாகி ஆறு, ஏரி, குளங்களில் நிறைந்தன.
ஈ. மலைமீது மழைபொழிய ஏரி குளங்கள் நிறைந்து பின் கடலில்
சென்று கலந்தது.
8.
திருமுழுக்கு யோவானுக்கு வீரமாமுனிவர் இட்ட பெயர்
அ. தோமையர் ஆ. பேதுரு இ.கருணையன் ஈ. சந்தாசாகிப்
9.
எய்துவர் எய்தாப் பழி' இக்குறளடிக்குப்
பொருந்தும் வாய்பாடு எது?
அ. கூவிளம் தேமா மலர் ஆ. கூவிளம் புளிமா நாள்
இ.தேமா புளிமா காசு
ஈ. புளிமா தேமா பிறப்பு
10.
ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது? அ. குலா ஆ.இலா இ. கலா
ஈ. துலா
11.
சோலையில் பூத்த மணமலர்களில் சுரும்புகள் மொய்த்துப் பண்பாடி மதுவுண்டன.
இத்தொடரில்
அடிக்கோடிட்ட சொற்களுக்குப்
பொருத்தமான வேறு
சொற்களை எழுதுக.
அ.பூஞ்சோலை அரும்புகள் ஆ. மலை - எறும்புகள் - தேன்
இ. பூஞ்சோலையில் வண்டுகள் தேன்
ஈ. கானகம் வண்டுகள் நீர்
பாடலைப் படித்துப் பின்வரும்
வினாக்களுக்கு (12,
13, 14, 15) விடைதருக.
"நனந்தலை உலகம்
வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு
தடக்கை
நீர்செல நிமிர்ந்த மாஅல் போல,
பாடுஇமிழ் பனிக்கடல் பருகி, வலன்ஏர்பு.
கோடு கொண்டு எழுந்த கொடுஞ்
செலவு எழிலி
பெரும்பெயல் பொழிந்த
சிறுபுள் மாலை"
12.
இப்பாடல் இடம் பெற்ற நூல்
அ. முல்லைப்பாட்டு ஆ.மலைபடுகடாம் இ. நற்றிணை ஈ.குறுந்தொகை
13.
நனந்தலை உலகம் இத்தொடரின் பொருள்
அ. சிறிய உலகம் ஆ.தலையாய உலகம்
இ. நனைந்த உலகம்
ஈ. அகன்ற உலகம்
14.
பாடலில் இடம்பெற்றுள்ள அடிஎதுகைச் சொற்கள்
அ. பெரும்பெயல்,
பொழிந்த ஆ.பாடுஇமிழ் பனிக்கடல் இ.பாடுஇமிழ்,கோடுகொண்டு ஈ. நீர்செல நிமிர்ந்த
15.
பாடலில் இடம் பெற்றுள்ள அளபெடை அ.தடக்கை ஆ.வளைஇ இ.பெரும்பெயல் ஈ.கொடுஞ்செலவு
பகுதி-II (மதிப்பெண்கள் : 18) பிரிவு-1
எவையேனும் நான்கு
வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. 4x2=8
(21 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும்)
16.
அ) தப்பாட்டம் நிகழ்த்தப்படும் சூழலுக்கேற்ப பல்வேறு
ஆட்டக்கூறுகளைக் கொண்டுள்ளது?
ஆ) ஒயிலாட்டத்தில் தோலால் கட்டப்பட்ட குடம், தவில்,
சிங்கி, டோலக், தப்பு
போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
17.
"காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன்"- உவமை
உணர்த்தும் கருத்து யாது?
18.
தமிழ்ச்சொல் வளம் குறித்து கால்டுவெல் குறிப்பிடும் கருத்தை
எழுதுக.
19.
உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல்
வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக.
20.'நமக்கு உயிர் காற்று
காற்றுக்கு வரம் மரம் - மரங்களை
வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம்'-
உவகக் காற்று நாள்' விழிப்புணர்வுக்கான முழக்கத்
தொடர்களை எழுதுக
21.
செயற்கை -எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.
பிரிவு-2
எவையேனும் ஐந்து
வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. 5x2=10
22.
குறள் வெண்பாவின் இலக்கணத்தை எழுதுக.
23.
இருசொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக. அ.தொடு -
தோடு ஆ.மலை - மாலை
24.
தணிந்தது- பகுபத உறுப்பிலக்கணம் தருக.
25.
புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.
26.
குறிப்பைப் பயன்படுத்தி விடைதருக:- குறிப்பு - எதிர்மறையான சொற்கள் அ)அருகில் அமர்க ஆ)மீளாத் துயர்
27 கலைச்சொல் தருக. அ.
Homograph, ஆ. Vowel
குறிப்பு: செவிமாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா
சொற்களை இணைத்துப் புதிய இரு சொற்களை உருவாக்குக.
தேன். மணி, மழை, மேகலை
28.
நாள் காட்டியில் ஞாயிற்றுக்கிழமை இருபதாம் நாள் எனில் அந்த
வாரத்தில் புதன்கிழமையும்
சனிக்கிழமையும் எந்த நாள்களில்
வரும் என்பதனைத் தமிழெண்களில் எழுதுக
பகுதி-III (மதிப்பெண்கள்
: 18) பிரிவு-1
எவையேனும் இரண்டு
வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. 2x3=6
29.
உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
தற்போது வெளிவருகிற சில உயர்வகைத் திறன்பேசியின் ஒளிபடக்
கருவி. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக்
கொண்டிருக்கிறது. கடவுச்சொல்லும் கைரேகையும் கொண்டு திறன்பேசியைத் திறப்பது
பழமையானது. உரிமையாளரின் முகத்தை அடையாளம் கண்டு திறப்பது. இன்றைய தொழில்நுட்பம்.
செயற்கை நுண்ணறிவு, படம் எடுக்கும் காட்சியை அடையாளம் கண்டு
அதற்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது.
அ. திறன்பேசியைத் திறக்கும் பழைய முறைகள் எவை?
ஆ. திறன்பேசியில் படம் எடுக்கும் காட்சியை அடையாளம் கண்டு
செயற்கை நுண்ணறிவு எவ்வாறு செயல்படுகிறது?
இ. உயர்வகைத் திறன்பேசிகளில் பயன்படுத்தப்படும்
தொழில்நுட்பம் எது?
30.
சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே
என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு தந்து விளக்குக.
31.
உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப்படிப்பைப் பாதியில்
நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார். அவரிடம் கல்வி கற்பதன் இன்றியமையாமையை
எவ்வகையில் எடுத்துரைப்பீகள்?
பிரிவு-2
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. (34 - கட்டாய வினா)
32.
கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்துதலைக் கூத்தராற்றுப்படை எவ்வாறு
காட்டுகிறது?
33.
வைத்தியநாதபுரி முருகன், அணிந்திருக்கும்
அணிகலன்களுடன் குழந்தையாகச் செங்கீரை ஆடிய நயத்தினை விளக்குக
34.
அடிபிறழாமல் எழுதுக-
அ."தென்னன் மகளே!" எனத் தொடங்கும் 'அன்னை மொழியே பாடல். (அல்லது)
ஆ.
"தூசும் துகிரும்" எனத் தொடங்கும் சிவப்பதிகாரப் பாடல்.
பிரிவு-3
எவையேனும் இரண்டு
வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. 2x3=6
35 . தோட்டத்தில்
மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி, வரும் வழியில்
ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள். வீட்டினுள் வந்தவள்
சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள். இப்பத்தியில் உள்ள தொகைச் சொற்களின்
வகைகளைக் குறிப்பிட்டு, விரித்து எழுதுக
36. அரியவற்றுள்
எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல் - அலகிட்டு
வாய்பாடு தருக.
37.
தீவக அணியை விளக்கி, மூவகை தீவக அணிகளையும்
குறிப்பிடுக.
பகுதி-IV (மதிப்பெண்கள்
: 25)
அனைத்து
வினாக்களுக்கும் விடையளிக்க. 5x5=25
38.
அ) இறைவன், புலவர் இடைக்காடனார் குரலுக்குச்
செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக.
(அல்லது)
ஆ)
தனது தாய் இயற்கை எய்தியதும் கருணையன் மனநிலை எவ்வாறு இருந்தது? விளக்குக
39.
அ) உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும்
விலைகூடுதலாகவும் இருந்ததைக் குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு
ஆணைருக்கு முறையீட்டுக் கடிதம் ஒன்று எழுதுக. (அல்லது)
ஆ) உங்கள் பள்யில் நடைபெறும் விடுதலைநாள் விழாவிற்கு, நிகழ்கலை வல்லுநர்
ஒருவரை சிறப்பு விருந்தினராகப் பள்ளிக்கு அழைத்துக் கடிதம் எழுதுக.
40.
காட்சியைக் கண்டு கவினுற கவிதை ஒன்று எழுதுக.
41.
42. அ) நம்
பழம்பெருமையையும் வரலாற்றையும் அறியச் செய்யும் அரிய ஆவணங்களான கல்வெட்டுகள்,
கோவில்களிலும் பழமையான நினைவுச் சின்னங்களிலும் காணப்படும்.
அவற்றைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும் உங்களால் இயன்ற ஐந்து
செயல்களைப் பட்டியலிடுக. (அல்லது)
ஆ) மொழிபெயர்க்க.
The
Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away
the dark. The milky clouds start their wandering. The colourful birds start
twitting their morning melodies inpercussion. The cute butterflies dance around
the flowers. The flowersW fragrance fills the breeze. Thebreeze gently blows everywhere and makes everything
pleasant.
குறிப்பு: செவிமாற்றுத்
திறனாளர்களுக்கான மாற்று வினா. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
மொழிபெயர்ப்பினால் புதிய
சொற்கள் உருவாகி மொழிவளம் ஏற்படுகிறது. பிற இனத்தவரின் பண்பாடு, நாகரிகம், பழக்கவழக்கம் போன்றவற்றை அறியமுடிகிறது.
அதிலிருந்து நல்லனவற்றை நாம் பெற்றுக்கொள்ள முடிகிறது: பிறமொழி இலக்கிய அறிவு
கிடைக்கிறது. அதன்மூலம் நம் இலக்கியத்தை வளப்படுத்த முடிகிறது. உலகப்புகழ் பெற்ற
அறிவியல் கண்டுபிடிப்புகளையும் இலக்கியப் படைப்புகளையும் அறிவதற்கு வாய்ப்பு
ஏற்படுகிறது. கருத்துப் பகிர்வைத் தருவதால் மொழிபெயர்ப்பைப் பயன்கலை என்று
குறிப்பிடுவார்கள். மொழிபெயர்ப்பு மூலம் ஒரு நாட்டின் வரலாற்றிலும்
இலக்கியத்திலும் பண்பாட்டிலும் வலிமையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
அ.
மொழிபெயர்ப்பினால் மொழிவளம் எவ்வாறு பயன்பெறுகிறது?
ஆ.
மொழிபெயர்ப்பைப் பயன்கலை என்று குறிப்பிடுவதன் காரணம் யாது?
இ.
மொழிபெயர்ப்பு ஏற்படுத்தும் முக்கியத் தாக்கம் எவை?
ஈ.
பிறமொழி இலக்கிய அறிவு மூலம் எவற்றை வளப்படுத்தலாம்?
உ.
பிற இனத்தவரின் பண்பாடு, நாகரிகம், பழக்கவழக்கம் போன்றவற்றை எதன்மூலம் அறியலாம்?
பகுதி -V (மதிப்பெண்கள்
: 24)
அனைத்து
வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. 3x8=24
43. அ) வீட்டில் திண்ணை
அமைத்த காரணம், விருந்தினர் பேணுதல், தமிழர்
பண்பாட்டில் ஈகை பசித்தவருக்கு உணவிடல் இவைபோன்ற செயல்கள் அன்றும் இன்றும் தொடர்ந்துகொண்டிருப்பதை
அழகுற விவரித்து எழுதுக.
(அல்லது)
ஆ) போரட்டக் கலைஞர்-பேச்சுக் கலைஞர்
நாடகக் கலைஞர் திரைக் கலைஞர் இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய தலைப்புகளைக் கொண்டு கட்டுரை
ஒன்று எழுதுக.
44.அ)"புயலிலே ஒரு
தோணி" கதையில் இடம் பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும்
ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில்,தோணி படும்பாட்டை
எவ்வாறு விவரிக்கின்றன என்பதைக் கதைவழி சுவைபட விவரிக்க.
(அல்லது)
ஆ) "பாய்ச்சல்" சிறுகதையில்
அழகுவின் கதாப்பாத்திரம் போல்,
நீங்கள் கண்டு மகிழ்ந்த பகல்வேடக் கலைஞர் குறித்த நிகழ்வுகளை
ஒப்பிட்டும் அவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் குறித்தும் விரிவாக எழுதுக..
45. அ) குமரிக்
கடல்முனையையும் வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர்
திருநாட்டிற்குப் புகழ் தேடித்தந்த பெருமை, தகைசால்
தமிழன்னையைச் சாரும். எழில்சேர் கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத் தமிழ் பேசி, சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலாவந்து,
அந்தாதி கூறி, கோவை யாத்து, அணியாக் பூட்டி அழகூட்டி அகம்மிக மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள்.
இக்கருத்தைக் கருவாகக் கொண்டு 'சான்றோர் வளர்த்த
தமிழ்' என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக. (அல்லது)
ஆ) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை
எழுதி, தலைப்பு
ஒன்று தருக.
முன்னுரை - தமிழகம் தந்த தவப்புதல்வர் - நாட்டுப் பற்று
மொழிப்பற்று - பொதுவாழ்வில் தூய்மை - எளிமை - மக்கள் பணியே மகத்தான பணி -
முடிவுரை.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி