10.ஆம் வகுப்பு - தமிழ்
ஒரு மதிப்பெண் வினாக்கள்
|
வி.எண் |
வினாக்கள் |
|
1 |
காலக்கணிதம்
கவிதையில் இடம்பெற்ற தொடர் எது? அ)
இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்து
விடாது இ) இகழ்ந்தால் இறந்து விடாது என்மனம் ஈ) என்மனம் இறந்து விடாது இகழ்ந்தால் |
|
விடை: |
|
|
2. |
'காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில்
அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது அ) இலையும் சருகும் ஆ) தோகையும் சண்டும் இ) தாளும் ஓலையும் ஈ) சருகும் சண்டும் |
|
விடை: |
|
|
3. |
எந்தமிழ்நா
என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்- அ) எந்+தமிழ்+நா ஆ) எந்த + தமிழ் +நா இ) எம் + தமிழ் +நா ஈ) எந்தம் + தமிழ் +நா |
|
விடை: |
|
|
4. |
கேட்டவர்
மகிழப் பாடிய பாடல் இது தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும்
பெயரும் முறையே - அ) பாடிய கேட்டவர் ஆ) பாடல் பாடிய இ) கேட்டவர்; பாடிய ஈ) பாடல் : கேட்டவர் |
|
விடை: |
|
|
5. |
வேர்க்கடலை, மிளகாய்
விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிப்பது - அ)
குலைப்பெயர் வகை ஆ) மணிப்பெயர் வகை இ) கிளைப்பெயர் வகை ஈ) இலைப்பெயர் வகை |
|
விடை: |
|
|
6 |
பரிபாடல்
அடியில் விசும்பில்,
இசையில்' ஆகிய சொற்கள் குறிப்பவை எவை? அ)
வானத்தையும் பாட்டையும் ஆ) வான்வெளியில்,
பேரொலியில் இ)
வானத்தில், பூமியையும் ஈ) வானத்தையும் பேரொலியையும் |
|
விடை: |
|
|
7 |
செய்தி 1- ஒவ்வோர் ஆண்டும் சூன் 15 ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம். செய்தி 2 - காற்றாலை மின் உற்பத்தியில்
இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே. செய்தி
3 - இந்தியாவிற்குத் தேவையான மழை அளவில் எழுபது விழுக்காடு மழையைத்
தென்மேற்குப் பருவக்காற்றாகக் கொடுக்கின்றேன். அ)
செய்தி 1 மட்டும் சரி ஆ) செய்தி 1.2 ஆகியன சரி இ)
செய்தி 3 மட்டும் சரி ஈ) செய்தி 1.3 ஆகியன சரி |
|
விடை: |
|
|
8 |
பொருந்தும்
விடைவரிசையைத் தேர்ந்தெடுக்க. அ)
கொண்டல் -
1. மேற்கு ஆ)
கோடை - 2. தெற்கு இ)
வாடை - 3. கிழக்கு ஈ)
தென்றல் –
4. வடக்கு அ) 1.2.3.4 ஆ) 3.1.4.2 இ) 4.3.2.1 ஈ) 3,4,1,2 |
|
விடை: |
|
|
9 |
மகிழுந்து
வருமா?' என்பது ------- அ) விளித்தொடர் ஆ) எழுவாய்த்தொடர் இ) வினையெச்சத்தொடர் ஈ) பெயரெச்சத்தொடர் |
|
விடை: |
|
|
10 |
அறிஞகுக்கு
நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைந்தது
- அ)
வேற்றுமை உருபு ஆ) எழுவாய் இ) உவம உருபு ஈ) உரிச்சொல் |
|
விடை: |
|
|
11 |
பின்வருவனவற்றுள்
முறையான தொடர் எது? அ)
தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு. ஆ)
தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு. இ)
தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு. ஈ)
தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு. |
|
விடை: |
|
|
12 |
காலில்
அணியும் அணிகலனைக் குறிப்பது அ)
சுட்டி ஆ) கிண்கிணி இ) குழை ஈ) சூழி |
|
விடை: |
|
|
|
காசிக்காண்டம்
என்பது அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல் ஆ) காசி நகரத்தைக் குறிக்கும்
மறுபெயர் இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல் ஈ) காசி நகரத்திற்கு
வழிப்படுத்தும் நூல் |
|
|
|
|
|
விருந்தினரைப்
பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால்,
தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான்
என்கிறது புறநானூறு. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை- அ)
நிலத்திற்கேற்ற விருந்து ஆ) இன்மையிலும் விருந்து இ)
அல்லிலும் விருந்து ஈ) உற்றாரின் விருந்து. |
|
விடை: |
|
|
15 |
நன்மொழி
என்பது அ) பண்புத்தொகை ஆ) உவமைத்தொகை இ) அன்மொழித்தொகை (ஈ) உம்மைத்தொகை |
|
விடை: |
|
|
16 |
கீழ்க்காண்பனவற்றுள் எந்த
இலக்கியம் பிறமொழிப் படைப்பினைத் தழுவித் தமிழில்படைக்கப்பட்டது? அ)
திருக்குறன் ஆ) கம்பராமாயணம் இ) கலித்தொகை ஈ) சிலப்பதிகாரம் |
|
விடை: |
|
|
17 |
இடைக்காடனாரின்
பாடலை இகழ்ந்தவர் இடைக்காடனாரிடம் அன்பு வைந்தவர் அ)
அமைச்சர்.மன்னன் ஆ) அமைச்சர்,
இறைவன் இ)
இறைவன், மன்னன் ஈ) மன்னன், இறைவன் |
|
விடை: |
|
|
18 |
உவப்பின்
காரணமாக அஃறிணையை உயர்திணையாகக் கொள்வது அ) இட வழுவமைதி ஆ) பால் வழுவமைதி இ) திணை வழுவமைதி ஈ) கால
வழுவமைதி |
|
விடை: |
|
|
19 |
இரவிந்திரநாத
தாகூர் ---மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை --=மொழியில், மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு
நோபல்பரிசு கிடைத்தது. அ)
ஆங்கில வங்காளம் ஆ)
வங்காள, ஆங்கில இ)
வங்காள, தெலுங்கு ஈ)
தெலுங்கு, ஆங்கில |
|
விடை: |
|
|
20 |
படர்க்கைப்
பெயரைக் குறிப்பது எது? அ)
யாம் ஆ) நீவிர் இ)
அவர் ஈ) நாம் |
|
விடை |
|
|
21 |
1. கூற்று 1: போராட்டப் பண்புடனே வளர்ந்தவர் கலைஞர். கூற்று
2: அவருக்குள் இருந்த கலைத்தன்மை வளர அது உதவியது. அ) கூற்று 1 சரி 2 தவறு ஆ) கூற்று 1 மற்றும் 2 தவறு இ) கூற்று 1 தவறு 2 சரி ஈ)
கூற்று 1 மற்றும் 2 சரி |
|
விடை: |
|
|
22 |
"மையோமர கதமோமறி கடலோ மழைமுகிலோ" இப்பாடல் அடியில் குறிப்பிடப்படாத நிறத்தைக்
கண்டறிக. அ)
கருமை ஆ) பச்சை இ) பழுப்பு ஈ) நீலம் |
|
விடை: |
|
|
23 |
தூக்குமேடை
என்னும் நாடகத்தின் பாராட்டுவிழாவில்தான்,
கலைஞர் என்ற சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது - இத்தொடருக்கான வினா
எது? அ)
தூக்குமேடை நாடகத்தில் நடித்தவர் யார்? ஆ)
கலைஞர் என்ற சிறப்புப்பெயர் எப்போது வழங்கப்பட்டது? இ)
தூக்குமேடை என்பது திரைப்படமா?
நாடகமா? ஈ)
யாருக்குப் பாராட்டுவிழா நடத்தப்பட்டது |
|
விடை: |
|
|
24 |
சித்திரை, வைகாசி
மாதங்களை-------- காலம் என்பர். அ)
முதுவேனில் ஆ) பின்பனி இ) முன்பனி ஈ) இளவேனில் |
|
விடை |
|
|
25 |
குளிர்காலத்தைப்
பொழுதாகக் கொண்ட நிலங்கள் அ)
முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள் ஆ) குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள் இ)
குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள் ஈ) மருதம், நெய்தல், பாலை நிலங்கள் |
|
விடை: |
|
|
26 |
சரியான
அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க. அ)
உழவு, மண். ஏர். மாடு ஆ) மண், மாடு, ஏர். உழவு இ)
உழவு, ஏர், மண், மாடு ஈ) ஏர். உழவு, மாடு, மண் |
|
விடை: |
|
|
27 |
தமிழினத்தை
ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது அ)
திருக்குறள் ஆ) புறநானூறு இ) கம்பராமாயணம் ஈ) சிலப்பதிகாரம் |
|
விடை |
|
|
28 |
நச்சிலைவேல்
கோக்கோதை நாடு,
நல்யானைக் கோக்கிள்ளி நாடு -இத்தொடர்களில் குறிப்பிடப்படுகின்ற
நாடுகள் முறையே, அ)
பாண்டிய நாடு,
சேர நாடு ஆ) சோழ நாடு, சேர நாடு இ)
சேர நாடு, சோழ நாடு ஈ)
சோழ நாடு, பாண்டிய நாடு |
|
விடை: |
|
|
29 |
இருநாட்டு
அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம் அ)
நாட்டைக் கைப்பற்றல் ஆ) ஆநிரை கவர்தல்
இ)
வலிமையை நிலைநாட்டல் ஈ) கோட்டையை முற்றுகையிடல் |
|
விடை: |
|
|
30 |
'மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது
எங்களுக்கு வேண்டும்' மாலவன் குன்றமும் வேலவன்
குன்றமும் குறிப்பவை முறையே- அ)
திருப்பதியும் திருத்தணியும் ஆ) திருத்தணியும் திருப்பதியும் இ)
திருப்பதியும் திருச்செந்தூரும் ஈ) திருப்பரங்குன்றமும்
பழனியும் |
|
விடை: |
|
|
31 |
1. மேன்மை தரும் அறம் என்பது- அ)
கைம்மாறு கருதாமல் அறம் செய்வது ஆ)
மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது இ)
புகழ் கருதி அறம் செய்வது ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம்
செய்வது. |
|
விடை: |
|
|
32 |
உலகமே
வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட
அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர் யாவர்? அ)
உதியன்: சேரலாதன் ஆ) அதியன்: பெருஞ்சாத்தன் இ)
பேகன் கிள்ளிவளவன் ஈ) நெடுஞ்செழியன்:
திருமுடிக்காரி |
|
விடை: |
|
|
33 |
வண்ணதாசனுக்குச்
சாகித்திய அகாதெமி விருது பெற்றுத் தந்த நூல் எது? அ)
ஒரு சிறு இசை ஆ) முன்பின் இ) அந்நியமற்ற நதி ஈ) உயரப் பறக்கல் |
|
விடை: |
|
|
34 |
பூக்கையைக்
குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று
----,----- வேண்டினார். அ)
கருணையன், எலிசபெத்துக்காக ஆ) எலிசபெத், தமக்காக இ)
கருணையன், பூக்களுக்காக ஈ) எலிசபெத், பூமிக்காக |
|
விடை: |
|
|
35 |
சிலப்பதிகாரத்திலும்
மணிமேகலையிலும் அமைந்த பாவினம்- அ)
அகவற்பா ஆ) வெண்பா இ) வஞ்சிப்பா ஈ) கலிப்பா |
|
விடை: |
|