8. ஆம் வகுப்பு - தமிழ்
ஒரு மதிப்பெண் வினாவிடைகள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து,விடையைக் குறியீட்டுடன் எழுதுக
1)
மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்
அ) வைப்பு ஆ)கடல் இ)
பரவை ஈ) ஆழி
2)
என்றென்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .
அ)என்
+ றென்றும் ஆ)என்று + என்றும் இ) என்றும் + என்றும் ஈ)என் + என்றும்
3.
வானமளந்தது என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ)
வான + மளந்தது ஆ)வான் + அளந்தது இ)வானம் + அளந்தது ஈ)வான் + மளந்தது
4.
அறிந்தது+அனைத்தும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ)அறிந்ததுஅனைத்தும் ஆ)
அறிந்தனைத்தும் இ)அறிந்ததனைத்தும் ஈ) அறிந்துனைத்தும்
5)
வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும்
அ)
வானம் அறிந்து ஆ) வான்அறிந்த இ) வானமறிந்த
ஈ) வான்மறிந்த
6.
வண்மொழி என்ற சொல்லின் பொருள்
அ)
வலிமையான மொழி ஆ) வளமிக்க மொழி இ) வளர்ந்த மொழி ஈ) வளரும்
மொழி
7.
பழமை, துன்பம் என்று பொருள் தரும் சொல்
அ)
தொண்டு ஆ) ஈண்டு இ) தொன்று ஈ) தொல்லை
8.
பாரதியாரின் இயற்பெயர்
அ)
சுப்புரத்தினம் ஆ) சுப்பிரமணியன் இ) ராமலிங்கம் பிள்ளை ஈ)
எத்திராசலு
9.
பாரதியார் பணியாற்றிய இதழ்கள்
அ)
விடுதலை , குடியரசு ஆ)
இந்தியா , விஜயா
இ)
நவசக்தி , தமிழ்நாடு ஈ) ரிவோல்ட், சுயமரியாதை
10.
பாரதியார் எழுதியுள்ள உரைநடை நூல்
அ)
கண்ணன் பாட்டு ஆ) பாஞ்சாலி சபதம் இ) சந்திரிகையின் கதை ஈ)
விடுதலை வேட்கை
11.
முதல் எழுத்து அளவத்து நிற்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவதை----
என்பர்
அ)
மோனை ஆ) எதுகை இ) இயைபு ஈ) முற்று
12.
வாழ்க,வாழிய ஆகிய சொற்களில் இடம்பெறும்
நயங்கள் முறையே
அ)
எதுகை, மோனை ஆ)
மோனை ,எதுகை இ) இயைபு ,எதுகை ஈ) மோனை, இயைபு
13.
சொற்கள் ஒத்த ஓசையிலோ ஒரே இடத்திலோ முடிவதை----என்பர்
அ) இயைபு ஆ) எதுகை இ) மோனை ஈ) முற்று
14.
மேவல் என்ற சொல்லின் சரியான பொருள்
அ)
மேலே செல்லுதல் ஆ) விரைவாகச் செல்லுதல் இ) பொருந்துதல் ஈ)
பிரிந்து செல்லுதல்
15.
மெத்த வணிகலன், மெத்த அணிகலன் ஆகிய சொற்கள்
குறிப்பன முறையே
அ)
மிகுதியான அணிகலன்கள் ,
மிகுதியான வணிக கப்பல்கள்
ஆ) மிகுதியான வணிக கப்பல்கள் , மிகுதியான அணிகலன்கள்
இ)
மிகுதியான வணிகர்கள் ,
மிகுதியான பொருட்கள்
ஈ) மிகுதியான பொருட்கள் , மிகுதியான வணிகர்கள்
16.
ஒரு சொல் அல்லது தொடர் இரு பொருள் தருமாறு அமைவது எவ்வகை அணி?
அ)
உவமையணி ஆ) உருவக அணி இ) இரட்டுற மொழிதல் அணி ஈ)
வஞ்சப்புகழ்ச்சி அணி
17.
சிலேடை அணி என்று அழைக்கப்படுவது
அ)
உவமையணி ஆ) உருவக அணி இ) இரட்டுற மொழிதல் அணி ஈ)
வஞ்சப்புகழ்ச்சி அணி
18.
தமிழழகனாரின் இயற்பெயர்
அ)
சோமசுந்தரம் ஆ) பாலசுந்தரம் இ) மோகனசுந்தரம் ஈ) சண்முகசுந்தரம்
19.
ஒலியையோ வடிவத்தையோ
குறிக்காமல் தொடக்க காலத்தில் ஓவிய வடிவமாகவே எழுத்து
அ)
கல்வெட்டு எழுத்து ஆ) வட்டெழுத்து இ) கண்ணெழுத்து ஈ) ஓவிய எழுத்து
20
. ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலை
அ)
ஒற்றை எழுத்து நிலை ஆ) இன எழுத்து நிலை
இ) ஒலி எழுத்து வடிவ நிலை ஈ) வரி எழுத்து வடிவ நிலை
21.
----- தோன்றிய பிறகு இப்போது உள்ள எழுத்துகள் நிலையான வடிவத்தை
பெற்றுள்ளன
அ.
ஓவியக்கலை ஆ) எழுத்துக்கலை இ) அச்சுக்கலை ஈ) கணினி கலை
22.
அசோகர் காலத்தில் இருந்த எழுத்து வடிவம்
அ.
கிராமி ஆ) தமிழி இ) பிராமி ஈ) வட்டெழுத்து
23.
சங்ககால கல்வெட்டுகளில் உள்ள வரி வடிவம் அசோகர் காலத்திய பிராமி வரி
வடிவத்தில் இருந்து வேறுபடுகிறது என்று கூறியவர்
அ)
வெள்ளைவாரணர் ஆ) ரா. பி சேதுப்பிள்ளை
இ) ஐராவதம் மகாதேவன் ஈ) புலவர் தி. சோமசுந்தரனார்
24.
ஐராவதம் மகாதேவன் அவர்கள் எழுதிய ஆய்வு நூல்
அ)
தமிழ் எழுத்துகள் ஆ) தமிழ் வட்டெழுத்துக்கள்
இ) எர்லி தமிழ் எபிகிராபி ஈ) நியூ தமிழ் எபிகிராபி
25.
எட்டாம் நூற்றாண்டு முதல் 11 ஆம் நூற்றாண்டு
வரை கிடைக்கும் சாசனங்களில் எவ்வகை எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன?
அ)
பிராமி எழுத்துகள் கண்ணெழுத்துகள் இ) வட்டெழுத்துக்கள் ஈ)
தமிழி எழுத்துகள்
26.
கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள்
அ)
வட்டெழெத்துகள் ஆ) பிராமி எழுத்துகள் இ) கண்ணெழுத்துகள் ஈ)
கிரந்த எழுத்துகள்
27.
" கண்ணெழுத்துப் படுத்த எண்ணுபல் பொதி" இன்று கடைச்சங்க
காலத்தில் தமிழகத்தில் கண்ட எழுத்துக்கள் எழுதப்பட்டதை உறுதிப்படுத்தும் இலக்கியம்
அ)
திருக்குறள் ஆ) சிலப்பதிகாரம் இ) கம்பராமாயணம் ஈ) மணிமேகலை
28.
தமிழ் மொழியில் எழுத இருவகை எழுத்துக்கள் வழக்கில் இருந்தன என்பதை
எந்த கல்வெட்டு மூலம் அறியலாம்?
அ)
ஆதிச்சநல்லூர் கல்வெட்டு ஆ) சின்னமனூர் கல்வெட்டு
இ)
அரியலூர் கல்வெட்டு ஈ) அரச்சலூர் கல்வெட்டு
28.
தவறான கூற்றினை தேர்வு செய்க
அ)
தமிழ் மொழியில் எழுத தமிழ் எழுத்து மற்ற எழுத்தும் கலந்து பயன்பட்டன
ஆ)
தொல்காப்பியர் காலத்தில் எகர ஒகரங்களின் மேல் புள்ளியிட்டு பயன்படுத்தினர்
இ) மகர எழுத்தை குறிப்பிட பகர எழுத்தின் உள்ளே புள்ளியிட்டனர்
ஈ)
மகர எழுத்தை குறிப்பிட மகர எழுத்தில் உள்ளே புள்ளியிட்டனர்
29.
இக்காலத்தில் நெடிலை குறிக்க ஒற்றை புள்ளிக்கு பதிலாக பயன்படுவது
அ)
இணை கொம்பு ஆ) துணைக்கொம்பு இ) துணைக்கால் ஈ) இரட்டைக் கால்
30.
ஔகார உயிர்மெய்யைக் குறிக்க இக்காலத்தில்
பயன்படுத்தப்படுவது
அ)
இணை கொம்பு ஆ) துணைக்கொம்பு இ) துணைக்கால் ஈ) கொம்புக்கால்
31.
கூற்று 1: ஓலைச்சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும்
புள்ளி பெரும் எழுத்துக்களை எழுதும் போது அவை சிதைந்து விடும் என்பதால் புள்ளி
இட்டு எழுதினர்.
கூற்று
2: ஓலைச்சுவடிகளில்
நிறுத்த குறிகளும் பத்தி பிரித்தலும் கிடையாது
அ) கூற்று 1 தவறு 2 சரி
ஆ)
கூற்று 2 தவறு 1 சரி
இ)
கூற்று 1 மற்றும் 2 சரி
ஈ)
கூற்று 1 மற்றும் 2 தவறு
32.
ஏகார ஓகார வரிசை உயிர்மெய் நெடில்களை குறிக்க இரட்டைக் கொம்பு
இரட்டைக் கொம்புடன் கால் சேர்த்து புதிய வரி வடிவத்தை அறிமுகப்படுத்தியவர்
அ) வீரமாமுனிவர் ஆ) ஐராவதம் மகாதேவன் இ) பிரான்ஸ் எல்லீஸ் ஈ) ஈராஸ் பாதிரியார்
33.
ஓரெழுத்து ஒரு மொழிகள் மொத்தம்
அ) 42 ஆ) 43 இ) 44 ஈ) 45
34.
உயிர் எழுத்து வரிசையில் எத்தனை
ஓர் எழுத்து ஒரு மொழிகள் இடம் பெறும்?
அ)
8 ஆ) 7 இ) 6 ஈ)
5
35.
தமிழில் சொல் என்பதற்கு ---- என்பது ஒரு பொருள்
அ)
எழுத்து ஆ) நெல் இ) நெடில் ஈ) குறில்
36.
யகர உயிர்மெய் வரிசையில் ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் ஒரே எழுத்து
அ)
யு ஆ) யா இ) யௌ ஈ) யை
37. நொ, து
என்னும் உயிர்மெய் எழுத்துகள் பொருள் உடையன என்று கூறியவர்
அ)
தொல்காப்பியர் ஆ) நன்னூலார் இ) நற்கவிராச நம்பி ஈ) தண்டி
38.
”செந்தமிழ் அந்தணர்” என்று
அழைக்கப்பட்டவர்
அ)
பரிமேலழகர் ஆ) பாவாணர் இ) இரா. இளங்குமரனார் ஈ) பரிதிமாற் கலைஞர்
39.
திருவள்ளுவர் தவச்சாலையை நிறுவியவர்
அ)
பரிமேலழகர் ஆ) பாவாணர் இ) இரா. இளங்குமரனார் ஈ) பரிதிமாற்
கலைஞர்
40.
உயிர் எழுத்துக்கள் பிறக்கும் இடம்
அ) கழுத்து ஆ) மார்பு இ) மூக்கு ஈ) தலை
41.
மேல் உதடும் கீழ் உதடும் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள்
அ)
வ், க் ஆ) உ,ஊ இ) ப்,ம் ஈ) ர்,ழ்
42.
Pictograph என்பது---
அ)
வட்டெழுத்து ஆ) கண்ணெழுத்து இ)
கோட்டெழுத்து ஈ) சித்திர
எழுத்து
43.
தமிழ்த்தாய்
ஐம்பெருங்காப்பியங்களை--------
அணிந்துள்ளாள்.
அ) மாலையாக ஆ) ஆடையாக இ) அணிகலன்களாக ஈ) மகுடமாக
44. பெரிய கப்பல்கள் ------- மீது செல்லும்.
அ) ஊழி ஆ) ஆழி இ)
நாழி ஈ)
தாழி
45. 'முத்தமிழ்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ)
மூன்று + தமிழ் ஆ) முத்து +
தமிழ் இ) மு +தமிழ் ஈ) முத் + தமிழ்
46. 'தன் அலையால் சங்கினைத்
தடுத்து நிறுத்திக் காக்கிறது' -இத்தொடரில் தன் என்னும் சொல்
-------- குறிக்கிறது
அ) அணிகலனைக் ஆ) கடலைக் இ) கப்பலைக் ஈ) தமிழைக்
47.
தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான
வடிவத்தைப் பெறக் காரணமாக அமைந்தது.
அ) ஓவியக்கலை ஆ) இசைக்கலை இ) அச்சுக்கலை ஈ) நுண்கலை
48. வளைந்த கோடுகளால்
அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து அழைக்கப்படுகிறது.
அ) கோட்டெழுத்து
ஆ) வட்டெழுத்து இ) சித்திர எழுத்து ஈ) ஓவிய
எழுத்து
49. தமிழ் எழுத்துச்
சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர்
அ) பாரதிதாசன்
ஆ) தந்தை பெரியார் இ) வ.உ.சிதம்பரனார் ஈ) பெருஞ்சித்திரனார்.
50. இதழ்களைக்
குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் _____.
அ) இ, ஈ ஆ) உ,
ஊ இ) எ, ஏ
ஈ) அ, ஆ
51. ஆய்தஎழுத்து
பிறக்கும் இடம் ______.
அ) மார்பு
ஆ) கழுத்து இ) தலை ஈ) மூக்கு
52. வல்லின
எழுத்துகள் பிறக்கும் இடம் _____.
அ) தலை ஆ) மார்பு இ) மூக்கு ஈ) கழுத்து
53. நாவின்
நுனி அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் _____.
அ) க், ங் ஆ) ச், ஞ்
இ) ட்,
ண் ஈ) ப், ம்
54. கீழ்இதழும்
மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து _____.
அ) ம் ஆ) ப் இ) ய்
ஈ) வ்
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி