9. ஆம் வகுப்பு - தமிழ்
ஒரு மதிப்பெண் வினாவிடைகள்
1. சரியான விடையைத்
தேர்ந்தெடுக்க.
கூற்று: பெரியார் உயிர் எழுத்துகளில் 'ஐ' என்பதனை 'அய்' எனவும் 'ஔ' என்பதனை 'அவ்' எனவும் சீரமைத்தார்.
காரணம் :
சில எழுத்துகளைக் குறைப்பதன் வாயிலாகத் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையைக்
குறைக்கலாம் என்று எண்ணினார்.
அ) கூற்று சரி, காரணம் தவறு ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி
இ) கூற்று, காரணம் இரண்டும் தவறு ஈ) கூற்று தவறு, காரணம் சரி
2. காலத்தினால்
செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது -
இக்குறளின் ஈற்றுச் சீரின் வாய்பாடு எது?
அ) நாள் ஆ) மலர் இ) காசு ஈ) பிறப்பு
3. விடுபட்ட
இடத்திற்கான விடை எது?
"இளையவர்
கூட்டம் ஏந்தி நடக்க ------ புதியவைதாம்"
அ) சாதியும் மதமும் ஆ) இனமும் மொழியும் இ) இனமும் மதமும் ஈ) மதமும் மொழியும்
4. பெரியார்
என்றவுடன் நம் நினைவுக்கு வருவது.
அ) ஈரோட்டுச் சிங்கம் ஆ) பகுத்தறிவுக் கொள்கை இ) எழுத்துச் சீர்திருத்தம் ஈ) அ.
ஆ.இ அனைத்தும்
5. போக்குக என்ற
சொல்லின் பகுதி -
அ) போகு ஆ) போக்கி இ) போக்கு ஈ) போகி
6. தந்தை
பெரியாரின் சிறப்புப்பெயர் அல்லாதது.
அ) வைக்கம் வீரர் ஆ) பகுத்தறிவுப் பகலவன் இ) கல்விக்கடல் ஈ) ஈரோட்டுச் சிங்கம்
7. சமூக
வளர்ச்சிக்கு மிகச் சிறந்த கருவியாகப் பெரியார் கருதியது
அ) பகுத்தறிவு ஆ)
கல்வி இ) பெண்ணுரிமை ஈ) வேலைவாய்ப்பு
8. பெரியார்
எதிர்த்தவைகளுள் ஒன்று
அ) கலப்புத் திருமணம் ஆ) குடும்ப நலத்திட்டம் இ) குலக்கல்வித் திட்டம் ஈ) கல்வி நலம்
9. ஈ.வெ.ராவுக்குப்
'பெரியார்' வழங்கப்பட்ட ஆண்டு எனும்
பட்டம்
அ) 1938 ஆ) 1970 இ) 1978 ஈ) 1976
10. கூற்று
1: 1938-ஆம் ஆண்டு யுனெஸ்கோ பெரியாருக்குப் பட்டம் வழங்கிப்
பாராட்டியது.
கூற்று 2: சுயமரியாதை
இயக்கம் 1925-இல் தோற்றுவிக்கப்பட்டது.
அ) கூற்று 1 சரி 2
தவறு ஆ) கூற்று 1
தவறு 2 சரி இ)கூற்று 1, 2 சரி ஈ) கூற்று 1, 2 தவறு
11. பெரியார்
நடத்திய இதழ் அல்லாதது எது?
அ) இந்தியா ஆ) குடியரசு இ) விடுதலை ஈ) உண்மை
12. பெரியார்
நடத்திய ஆங்கில இதழ்
அ) டைம்ஸ் இந்தியா இ) கெசஸ்ட் ஆ) ரிவோல்ட் ஈ) டைம்ஸ் லைன்
13. சமூகச்
சீர்கேடுகளைக் களைவதற்கு மாமருந்து என்று அறிஞர்கள் மதிப்பிடுவது
அ) பெண்ணுரிமை ஆ) பெண்கல்வி இ) பெரியாரின் சிந்தனைகள்
ஈ) குலக்கல்வி
14. ஈ.வெ.ராவுக்கு
யுனெஸ்கோ வழங்கிய பட்டம்
அ) பெரியார் ஆ) தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்
இ) பகுத்தறிவுப் பகலவன்
ஈ)
ஈரோட்டுச் சிங்கம்
15. சுயமரியாதை
உணர்ச்சி பெற ஊன்றிப் படிக்க வேண்டிய நூலாகப் பெரியார் குறிப்பிடுவது
அ) திருக்குறள் ஆ) பைபிள் இ) சத்திய சோதனை ஈ) பகவத் கீதை
16. வைரமுத்து
சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை எத்தனை முறை பெற்றுள்ளார்?
அ ) ஆறு ஆ) ஏழு இ) நான்கு ஈ) ஐந்து
17. கிளிக்கு
றெக்கை இருக்கும் வரைக்கும்-----தூரமில்லை.
அ) கிழக்கு வானம் ஆ) பூமி இ) நதி ஈ)
விண்மீன்
18. கவிஞர்
வைரமுத்து பிறந்த ஊர்
அ) மெலட்டூர் ஆ) மெட்டூர் இ) தேனி ஈ) சென்னை
19. கள்ளிக்காட்டு
இதிகாசம் - சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு.
அ) 2001 ஆ) 2002
இ)
2003 ஈ) 2004
20. பொருத்துங்கள்
- இச்சொல்லின் பகுதி
அ) பொருத்துக ஆ) பொரு இ) பொருத்து ஈ)
பொருது
21. ஓ!
என் சமகாலத்தோழர்களே - இக்கவிதை இடம் பெற்ற நூல்
அ ) கள்ளிக்காட்டு
இதிகாசம் ஆ) வைரமுத்து கவிதைகள்
இ) ஊசிகள் ஈ) மின்மினி
22. அறிவை
மறந்த உணர்ச்சி என்பது
அ) எறியும் தீ ஆ) திரியை மறந்த தீ இ)
பரவும் தீ ஈ) காட்டுத் தீ
23. இனமும்
மொழியும் - இலக்கணக்குறிப்பு தருக.
அ) எண்ணும்மை ஆ) உம்மைத்தொகை இ) உவமைத்தொகை ஈ) பண்புத்தொகை
30. கவிஞர்
வைரமுத்து பிறந்த மாவட்டம்
அ) தேனி ஆ) திண்டுக்கல் இ)
மதுரை ஈ) சேலம்
31. சொன்னோர்
என்பதன் இலக்கணக்குறிப்பு
அ) தொழிற்பெயர் ஆ)
தெரிநிலை வினைமுற்று
இ) வினையாலணையும் பெயர் ஈ)
முற்றெச்சம்
32. பொறுமை,
அடக்கத்திற்கு கவிஞர் கூறிய உவமை
அ) கூட்டுப்புழு ஆ) ஆமை
இ) காகம் ஈ) குயில்
33. திரியை
மறந்த தீ என்று கவிஞர் குறிப்பிடுவது எது?
அ) உழைப்பில்லா ஊதியம் ஆ) அன்பில்லா மாந்தர்
இ) அறிவை மறந்த
உணர்ச்சி ஈ) ஒழுக்கம் இல்லா கல்வி
34. எண்ணும்மையை
தேர்ந்தெடுக்க
அ) இனம் மொழி ஆ) பண்பு, அன்பு இ)
இனமும் மொழியும் ஈ) வரும் வெள்ளம்
35. காய்ந்து,
ஏந்தி என்பன-----
அ) வினையெச்சங்கள் ஆ) பெயரெச்சங்கள் இ)
வினைமுற்றுகள் ஈ) முற்றெச்சங்கள்
36. மறந்த
என்ற பகுபதத்தை சரியாகப் பிரிக்கும் முறை
அ) மறந்து+அ ஆ) மற+ த்+த்+த இ) மற+த்+த்+அ ஈ)
மற+த்(ந்)+த்+அ
37. யசோதர
காவியம் எம்மொழியிலிருந்து தமிழில் தழுவப்பெற்றது?
அ) ஆங்கிலம் ஆ) வடமொழி இ) தெலுங்கு ஈ) இந்தி
38. யசோதர
காவியத்தில் சருக்கங்கள் உள்ளன.
அ) ஐந்து ஆ) ஆறு இ)
ஏழு ஈ) எட்டு
39. போக்குவது
ஏதெனில் போக்குக.
அ) அறம் ஆ) ஞானம் இ) வெகுளி ஈ) கவலை
40. யசோதரன்
எந்த நாட்டு மன்னன்
அ) சேரநாடு ஆ)
அவந்தி நாடு இ) சோழநாடு ஈ) பாண்டிய நாடு
41. யசோதர
காவியம் நூல்களுள் ஒன்று.
அ) எட்டுத்தொகை ஆ) பத்துப்பாட்டு இ) ஐம்பெருங்காப்பியங்கள் ஈ) ஐஞ்சிறு காப்பியங்கள்
42. யசோதர
காவிய பாடல்களின் எண்ணிக்கை
அ)
300-310 ஆ) 310-320 இ) 320-330 ஈ) 330-340
43. 'போக்குக'
என்னும் சொல்லின் பகுதி
அ) போ ஆ) போக்கு இ) போகு ஈ) போக்கி
44. யாப்பிலக்கண
வகைகள் அடிப்படையில் எழுத்துகளின் வகைகள்----
அ) மூன்று ஆ) நான்கு இ) ஐந்து ஈ) ஆறு
43. கவிதை
இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கணம்
அ) எழுத்து ஆ) சொல் இ) யாப்பு ஈ) அணி
44. ஒன்றுக்கு
மேற்பட்ட அசைகளின் சேர்க்கை
அ) சீர் ஆ) அடி இ)
தளை ஈ) எழுத்து
45. காய்முன்
நேர் வருவது
அ) கலித்தளை ஆ)
இயற்சீர் வெண்டளை
இ) வெண்சீர் வெண்டளை ஈ)
ஒன்றிய வஞ்சித்தளை
46. பொருத்துக.
1. குறளடி
- அ. மூன்று சீர்
2. அளவடி
- ஆ.நான்கு சீர்
3. சிந்தடி
-இ. ஐந்து சீர்
4. நெடிலடி
ஈ.இரண்டு சீர்
அ) 1-ஈ,
2-ஆ,3-இ,4-அ ஆ) 1-ஈ,2-ஆ, 3-அ,4-இ
இ) 1-ஈ,
2-அ, 3-ஆ,4-இ ஈ) 1-அ, 2-ஆ, 3-இ, 4-ஈ
47. தவறானக்
கூற்றினைத் தேர்ந்தெடுக்க.
அ) அடி ஐந்து
வகைப்படும் ஆ) சீர்கள் மூன்று
வகைப்படும்
இ) தளை எழு வகைப்படும் ஈ) அசை
இரண்டு வகைப்படும்
48. யாப்பின்
உறுப்புகள்
அ) 4 ஆ) 5 இ) 6 ஈ) 7
49. எழுத்துகளால்
ஆனது ------எனப்படும்.
அ) அசை ஆ) சீர் இ) தளை ஈ) அடி
50. பாடலின்
ஓசைக்கு அடிப்படையாய் அமைவது
அ) அசை ஆ) சீர் இ) தளை ஈ)
அடி
51. சீர்
எத்தனை வகைப்படும்?
அ) இரண்டு ஆ) நான்கு இ) ஆறு ஈ)
ஐந்து
52. ஈரசைச்சீர்களுக்கு
இயற்சீர் என்னும் வேறு பெயர்களும் உண்டு.
அ) வெண்சீர் ஆ) ஆசிரிய உரிச்சீர் இ) வஞ்சிச்சிர் ஈ)
காய்ச்சீர்
53. காய்ச்சீர்களை
என்று அழைக்கிறோம்.
அ) ஆசிரிய உரிச்சீர் ஆ) இயற்சீர் இ) வெண்சீர் ஈ) வஞ்சிச்சீர்
54. அடி
எத்தனை வகைப்படும்?
அ) இரண்டு ஆ) மூன்று இ) நான்கு ஈ) ஐந்து
55. நான்கு
சீர்களைக் கொண்டது
அ) குறளடி ஆ) சிந்தடி இ) அளவடி ஈ) நெடிலடி

கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி