TNTET 9 TH STD TAMIL QUESTION BANK UNIT-3

  9. ஆம் வகுப்பு - தமிழ்

ஒரு மதிப்பெண் வினாவிடைகள்


இயல்-3

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து,விடையைக் குறியீட்டுடன் எழுதுக

1. பெயரடை இடம்பெறாத தொடரைக் கண்டறிக

அ) நல்ல நண்பன் ஆ) இனிய வணக்கம்  இ) எந்த ஓவியம்?  ) கொடிய விலங்கு

2. முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக.

அ) தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல்

ஆ) தமிழர்களின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல் தொன்மையான,

இ) தொன்மையான வீரவிளையாட்டு தமிழர்களின் ஏறுதழுவுதல்

) தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்

3. பைங்கூழ் வளர்ந்தது. ஆகுபெயரின் வகையைக் கண்டறிக

அ) காலவாகுபெயர் ஆ) காரியவாகுபெயர்  இ) கருவியாகுபெயர்  ) கருத்தாவாகுபெயர்

4. தோரண வீதியும், தோமறு கோட்டியும் - சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்

அ) ஏவல் வினைமுற்று  ஆ) வினைத்தொகை இ) எண்ணும்மை  ஈ) பண்புத்தொகை

5. பொருந்தாத தொடரைக் கண்டறிக.

அ) பன்னிரு ஆழ்வார்களுள் ஆண்டாளும் ஒருவர்.

ஆ) சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்று ஆண்டாள் அழைக்கப்படுகிறார்.

இ) திருவெம்பாவையை இயற்றியவர் ஆண்டாள்.

ஈ) நம்மாழ்வாரின் மகளாவார் ஆண்டாள்.

6. பின் வருபவர்களுள் முல்லை நில மக்கள் யார் ? அ) குறவர்  ஆ)ஆயர்  இ)வெற்பர் ஈ) பாணர்

7. றுகோள் குறித்து கூறியுள்ள இலக்கண நூல் எது?

அ) நன்னூல் ஆ) யாப்பிலக்கணம் இ) புறப்பொருள் வெண்பாமாலை ஈ) வீரசோழியம்

8. திமிலுடன் கூடிய காளை ஓவியம் காணப்படும் இடம் --

அ) சித்திரகல் புடவு ஆ) கரிக்கையூர் இ) கல்லூத்து  ஈ) கருவந்துறை

9. சிந்துவெளி அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட தமிழர்களின் ஏறுதழுவுதல் சான்று

அ) செப்பேடு ஆ) பனையோலை இ) கல் முத்திரை ஈ) நாணயங்கள்

10. எருதுகட்டி எனும் மாடு தழுவுதல் நிகழ்வை -----பதிவு செய்துள்ளது

அ) முக்கூடற்பள்ளு ஆ) கண்ணுடையம்மன் பள்ளு இ) சித்தேரி பள்ளு ஈ) கோனேரிப்பள்ளு

11. சிந்துவெளி கல்முத்திரை ஏறுதழுவுதல் குறிப்பதாக தெரிவித்தவர்

அ) ஐராவதம் மகாதேவன் ஆ) உ வே சாமிநாத ஐயர் இ) சதாசிவர் ஈ) தெ.பொ.மீ

12. சிந்துவெளி நாகரிக வரலாற்றில் முக்கிய பங்காற்றிய விலங்கு எது?

அ) காளை ஆ) ஆடு இ) பன்றி ஈ) நாய்

13. தமிழக மாட்டு இனங்களின் தாயினம் என்று கருதப்படுவது

அ) மாயாவரம் ஆ) காங்கேயம் இ) இராசபாளையம் ஈ) திருவெண்பேறு

14. ஏறுதழுவுதல் பற்றிக் குறிப்பிடும் சங்க நூல்

அ) அகநானூறு ஆ) புறநானூறு இ) கலித்தொகை  ஈ) பரிபாடல்

15. காளைச் சண்டையைத் தேசிய விளையாட்டாகக் கொண்ட நாடு

அ) இலங்கை ஆ) ஸ்பெயின்  இ) ஆஸ்திரேலியா ஈ) சிங்கப்பூர்

16. 'கருவந்துறை' எனும் ஊரில் எருதோடு போராடி இறந்தவர்.

அ) பெரியபயல் ஆ) சங்கன் இ) கோவுர  ஈ) முரியன்

17. எருது விளையாடி மரணமுற்றவன் பெயரால் எடுக்கப்பட்ட எருது பொருதார் கல் உள்ள மாவட்டம்.

அ) மதுரை  ஆ) சேலம்   இ) தேனி  ஈ) திருவண்ணாமலை

18. தமிழர்களின் வீர விளையாட்டுகளுள் ஒன்று

அ) கிட்டிப்புள்  ஆ) மட்டைப்பந்து  இ) ஏறுதழுவுதல்  ஈ) காளைச்சண்டை

19. ஏறு தழுவுதல் பற்றிக் குறிப்பிடும் சிற்றிலக்கியம்

அ) பிள்ளைத்தமிழ்  ஆ) பள்ளு இ) குறவஞ்சி  ஈ) தூது

20. சல்லி என்பது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகின்ற ---------குறிக்கும்.

அ) வளையத்தினை  இ) பரிசுப் பொருளை  ஆ) மூக்கணாங்கயிற்றை  ஈ) கழுத்து வடத்தை

21. மணிமேகலையில் உள்ள காதைகளின் எண்ணிக்கை

அ) 30  ஆ) 202  இ) 25  ஈ) 36

22. இந்திரவிழா எத்தனை நாட்கள் நடைபெறுகின்றன?

அ) 28  ஆ) 30   இ) 25  ) 12

23. கொம்புகளில் கட்டப்படும் கொடி

அ ) கதலிகைக்கொடி ஆ) காழூன்று கொடி இ) வேதிகைக்கொடி  ஈ) வேதிகை

24. 'பத்தி வேதிகை பசும்பொன் தூணத்து' - கோடிட்ட சொல்லின் பொருள்.

அ) மாலை  ஆ) திண்ணை  இ) மன்றம்  ஈ) வேதியியல்

25. மணிமேகலையின் ஆசிரியர் யார்?

அ) இளங்கோவடிகள்  ஆ) சீத்தலைச் சாத்தனார்  இ) சேக்கிழார்  ஈ) கம்பர்

26. மணிமேகலை சமய சார்புடையக் காப்பியம்.

அ) சமணம்  ஆ) சைவம்  இ) பௌத்தம் ஈ) வைணவம்

27. கூலம் என்பதன் பொருள்

அ) தானியம் ஆ) கூலி  இ) மழை  ஈ) முத்து

28. ஆற்றின் நடுவே இருக்கும் மணல் திட்டு எவ்வாறு அழைக்கப்படும்?

அ) துருத்தி ஆ) கருத்தில் இ) பருத்தி ஈ) இருத்தி

29. விழவுமலி மூதூர் என மணிமேகலை குறிப்பிடும் ஊர்

அ) மதுரை ஆ) சேலம் இ) புகார் ஈ) கரூர்

30. பட்டிமன்றம் என்பதன் இலக்கிய வழக்கு

அ) வழக்காடு மன்றம் ஆ) வழக்குரை மன்றம் இ) பட்டிமண்டபம் ஈ) அவை மண்டபம்

31. முத்துத்தாமம் - இலக்கண்குறிப்பு

அ) இரண்டாம் வேற்றுமைத் தொகை

ஆ) இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

இ) வினைத்தொகை ஈ) அன்மொழித்தொகை

32. எண்ணும்மையை தேர்ந்தெடுக்க

அ) தோரண வீதி ஆ) தோரணமும் வீதியும் இ) வீசு தென்றல் ஈ) இளந்தென்றல்

33. பரப்புமின்,மாற்றுமின் என்பன------ வினைமுற்றுகள்

அ) தன்மை ஆ) வியங்கோள் இ) ஏவல் ஈ) படர்க்கை

34. மணிமேகலை -------சமயச்சார்புடையது

அ) பௌத்தம் ஆ) சமணம் இ) சைவம் ஈ) வைணவம்

35. மணிமேகலையில் உள்ள காதைகளின் எண்ணிக்கை

அ) 26 ஆ) 27 இ) 29 ஈ) 30

36. மணிமேகலையின் முதல் காதை

அ) மனையறம்படுத்த காதை  ஆ) கானல் நீர் இ) விழாவறை காதை ஈ) பொருள்வயிற் பிரிவு

37. தண்டமிழாசான் நன்னூல் புலவன் என்று பாராட்டப்படுபவர்

அ) இளங்கோவடிகள் ஆ) சீத்தலைச் சாத்தனார் இ) திருத்தக்க தேவர் ஈ) கம்பர்

38. கூலம் என்பதன் பொருள்

அ) குப்பை ஆ) தானியம் இ) வணிகம் ஈ) உப்பு

39. உறுபொருள்- இலக்கணக் குறிப்பு

அ) பெயர்ச்சொல் தொடர் ஆ) வினைச்சொல் தொடர்

இ) இடைச்சொல் தொடர் ஈ) உரிச்சொல் தொடர்

40. பரப்புமின்- பகுபதத்தைச் சரியாகப் பிரிக்கும் முறை

அ) பர+மின் ஆ) பரப்+புமின் இ) பரப்பு+இன் ஈ) பரப்பு+ மின்

41.அரவம் என்ற சொல்லின் பொருள்

அ) காற்று ஆ) மழை இ) ஒலி ஈ) ஒளி

42. பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வார்

அ) திருமங்கை ஆழ்வார் ஆ) ஆண்டாள் இ) நாச்சியார் ஈ) குந்தவை

43. சூடிக்கொடுத்த சுடர்கொடி என்று போற்றப்பட்டவர்

 அ) திருமங்கை ஆழ்வார் ஆ) ஆண்டாள் இ) நாச்சியார் ஈ) குந்தவை

44. திருப்பாவையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

அ) 35 ஆ)30 இ) 40 ஈ) 45

45. திருப்பாவை ----மாதத்தில் பாடப்படும்

அ) தை ஆ) மார்கழி இ) சித்திரை ஈ) புரட்டாசி

46. திருவாதவூரில் பிறந்தவர்

அ) அப்பர் ஆ) ஞானசம்பந்தர் இ) சுந்தரர் ஈ) மாணிக்கவாசகர்

47. வாதவூர் அடிகள் என்று போற்றப்பட்டவர்

அ) அப்பர் ஆ) ஞானசம்பந்தர் இ) சுந்தரர் ஈ) மாணிக்கவாசகர்

48. சைவ சமய குரவர்கள் எத்தனை பேர்?

அ) 4 ஆ) 3 இ) 5 ஈ)12

49. திருவெம்பாவை ------ல் உள்ள ஒரு பதிகமாகும்.

அ) தேவாரம் ஆ) திருவாசகம் இ) நாலாயிர திவ்ய பிரபந்தம் ஈ) நாலடியார்

50. திருவெம்பாவையில்  உள்ள பாடல்களின் எண்ணிக்கை    அ) 20 ஆ) 30 இ) 40 ஈ) 50

51. திருவெம்பாவை எம்மாதத்தில் பாடப்படும்?

அ) மார்கழி ஆ) தை இ) மாசி ஈ) பங்குனி

52. சு. சமுத்திரம் அவர்களின் எந்த புதினத்துக்கு சாகித்திய அகாதமி விருது கிடைத்தது?

அ) வேரில் பழுத்த பலா ஆ) வாடாமல்லி இ) பாலை புறா ஈ) மண்சுமை

53. சு சமுத்திரம் அவர்கள் எந்த மாவட்டத்தைச் சார்ந்தவர்?

அ) தூத்துக்குடி ஆ) கன்னியாகுமரி இ) திருநெல்வேலி ஈ) திருச்சி

54. தொடருக்கு எழுவாய், பயனிலை,----- ஆகிய உறுப்புகள் உள்ளன

அ) வினைச்சொல் ஆ) செயப்படுபொருள் இ) உரிச்சொல் ஈ) வினைமுற்று

55. சொற்றொடர் அமைவதற்கு அடிப்படையாய் அமையும் பெயர்ச்சொல் எது?

அ) எழுவாய் ஆ) பயனிலை இ)  செயப்படுபொருள் ஈ) வினைச்சொல்

56) வெளிப்படையாக குறிப்பிடப்படாத எழுவாய் எது?

அ) தோன்றா எழுவாய் ஆ) பெயர் எழுவாய் இ) குறிப்பு எழுவாய் ஈ) வினை எழுவாய்

57. நான் வந்தேன் என்ற தொடரில் வந்த பயனிலை வகை

அ) பெயர் ஆ) வினா இ) வினை ஈ) இடை

58. எழுவாய் ஒரு வினையை செய்ய அதற்கு அடிப்படையாய் தேர்ந்தெடுக்கப்பட்டது

அ) செயப்படுபொருள் ஆ) எழுவாய் இ) பயனிலை ஈ) வினைச்சொல்

59. வகுப்பறை சிரித்தது என்பது எவ்வகை ஆகுபெயர்?

அ) பொருளாகு பெயர் ஆ) இடவாகு பெயர் இ) காலவாகு பெயர் ஈ) சினையாகு பெயர்

60. ஆகுபெயர் எத்தனை வகைப்படும்?   அ) 12  ஆ) 14 இ) 16 ஈ) 18

61. பொருளாகு பெயர்---- என்றும் அழைக்கப்படும்

அ) அளவை ஆகுபெயர் ஆ) முதலாகு பெயர் இ) சினையாகு பெயர் ஈ) தொழிலாகு  பெயர்

62. மரிக்கொழுந்து நட்டான் என்பது எவ்வகை ஆகுபெயர்?

அ) சினையாகு பெயர் ஆ) தொழிலாகு பெயர் இ) முதலாக பெயர் ஈ) வினையாகுபெயர்

63. வற்றல் தின்றான் என்பது எவ்வகை ஆகுபெயர்?

அ) சினையாகு பெயர் ஆ) தொழிலாகு பெயர் இ) முதலாக பெயர் ஈ) வினையாகுபெயர்

64. கருவியாகு பெயரைத் தேர்ந்தெடுக்க

அ) வானொலி கேட்டு மகிழ்ந்தனர்  ஆ) பைங்கூழ் வளர்ந்தது

இ) மஞ்சள் பூசினாள்     ஈ) வற்றல் தின்றான்

65. Hero stone என்பதன் சரியான தமிழாக்கம்

அ) நாயகன் கல் ஆ) குமிழி கல் இ) நடுகல் ஈ) வீர கல்

பதிவிறக்கம் செய்ய

வினாக்களை மட்டும் அறிய

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை