9. ஆம் வகுப்பு - தமிழ்
ஒரு மதிப்பெண் வினாவிடைகள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து,விடையைக் குறியீட்டுடன் எழுதுக
1."மாடு" - என்பதன் பொருள் என்ன?
அ)
கீழே
ஆ) மேலே இ) பக்கம் ஈ)
தொலைவு
2.
நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?
அ)
அகழி
ஆ) ஆறு இ)இஞ்சி ஈ)புலரி
3.
சரியான தொடரைத் தெரிவு செய்க.
அ.
நீரின்று அமையாது உலகு
- திருவள்ளுவர்
ஆ.
நீரின்று அமையாது யாக்கை
– ஒளவையார்
இ.
மாமழை போற்றுதும்
- இளங்கோவடிகள்
அ) க ௩ ஆ)
உ ௩ இ)
க உ ஈ) க உ௩
4. பகுதி ,விகுதி மட்டும் இடம்பெறும் சொல் எது?
அ)
வென்றார்
ஆ) நடந்த இ) வளர்க ஈ)
பொருந்திய
5.மல்லல் மூதூர் வயவேந்தே- கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?
அ)
மறுமை
ஆ) பூவரசு மரம்
இ) வளம் ஈ) பெரிய
6.
பொருத்தமற்றதைத் தேர்ந்தெடுக்க.
அ)
இலஞ்சி - பலவகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம்
ஆ)
குண்டம் - குளிப்பதற்கேற்ற
சிறுகுளம்
இ)
ஊருணி - மக்கள் பருகுநீர்
உள்ள நீர்நிலை
ஈ)
ஏரி - வேளாண்மைப் பாசன நீர்த்தேக்கம்
7.
உலகச் சுற்றுச்சூழல் நாள் கொண்டாடப்படுவது
அ)
ஜீன் 5
ஆ) மார்ச் 5 இ) ஜீலை 5 ஈ)
ஆகஸ்டு 5
8
மக்கள் பருகுநீர் உள்ள நீர் நிலைக்குப் பெயர்
அ)
ஏரி ஆ) கண்மாய் இ) ஊருணி ஈ) ஆறு
9.
உணவெனப்படுவது நிலத்தொடு நீரே - இத்தொடர் இடம் பெற்ற நூல்
அ)
திருக்குறள் ஆ) புறநானூறு இ) அகநானூறு ஈ) கலித்தொகை
10.
மணற்பாங்கான இடத்தில் தோண்டிச் சுடுமண் வளையமிட்ட கிணறு
அ
) உறைக்கிணறு ஆ) சுட்டுக்கிணறு இ) அழிக்கிணறு ஈ) பூட்டைக் கிணறு
11.
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர்
அ
) கரிகால்சோழன் ஆ) பென்னிகுவிக் இ) ஆர்தர் காட்டன் ஈ) இராஜராஜசோழன்
12.
'நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக விளங்குகின்றன'
- யார் கூற்று?
அ)
ஆண்டாள் ஆ) கரிகால்சோழன் இ)தொ.பரமசிவன் ஈ)
முகிலன்
13.
தெளலீஸ்வரம் அணை கட்டப்பட்ட ஆண்டு
அ)
1733 ஆ) 1872 இ)1874
ஈ) 1873
14.
இந்திய நீர்ப்பாசனத்தின் தந்தை
அ)
பென்னிகுவிக் ஆ) ஆர்தர் காட்டன் இ) தௌலீஸ்வரர் ஈ) வெனீக
15.
சனி நீராடு என்பது ------வாக்கு
அ
) ஒளவை
ஆ) வள்ளுவர் இ) ஆண்டாள் ஈ)
பெருமாள்
16.
வான்சிறப்பு என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் கூறும் கருத்து யாது?
அ)
வானத்தின் சிறப்பு ஆ) ஓசோன் படலத்தைப் பற்றி
இ)
மழையின் சிறப்பை ஈ) வளிமண்டலத்தைப் பற்றி
17.
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என்று பாடியவர்
அ)
திருவள்ளுவர் ஆ) இளங்கோவடிகள் இ) மாங்குடி மருதனார்
ஈ) ஒளவையார்
13.
தெய்வச் சிலைகளைக் குளிக்க வைப்பதை என்று கூறுவர்.
அ)
கடலாடுதல் ஆ) நீர்மாலை இ) திருமஞ்சனம் ஆடல் ஈ) சனி நீராடல்
14.
பொருந்தாததைத் தேர்ந்தெடுக்க.
அ
) சூடு – நெல் அரிக்கட்டு ஆ) பகடு – வட்டம் இ) வேரி – தேன்
ஈ) கழை - கரும்பு
15.
பொருத்துக.
1. கோளி - அ. நாரத்தை
2. சாலம் - ஆ. அரசமரம்
3. தமாலம் - இ. ஆச்சாமரம்
4. நரந்தம் - ஈ.
பச்சிலை மரம்
அ)
1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ ஆ) 1-ஆ,2-இ. 3 - ஈ, 4 - அ
இ)
1-ஆ 2-ஈ, 3-இ, 4-அ ஈ) 1-இ, 2-ஆ, 3 -
ஈ, 4- அ
16.
நம்பியாண்டார் நம்பி எழுதிய நூல்
அ)
திருத்தொண்டத் தொகை ஆ) திருத்தொண்டர் புராணம்
இ)
திருத்தொண்டர் மாக்கதை ஈ) திருத்தொண்டர் திருவந்தாதி
17.
அடியவர் பெருமையை ஓர் அடியில் கூறும் நூல்
அ)
திருத்தொண்டத்தொகை ஆ) பெரியபுராணம்
இ)
திருவாசகம் ஈ) திருத்தொண்டர்
திருவந்தாதி
18.
சேக்கிழார் காலம் ------ஆம் நூற்றாண்டு
அ)
9 ஆ) 10 இ) 12
ஈ) 14
19.
எருமைக்கடா-இப்பொருளுக்குரிய சொல்.
அ)
மேதி ஆ) பகடு இ) மாடு ஈ) சூடு
20.
திருத்தொண்டர் புராணம் பாடும் நூல் -------நாட்டின்
சிறப்பைப் பாடும்நூல்
அ)
சேர
ஆ) சோழ இ) பாண்டிய ஈ) வேழ
21.
சேக்கிழார் பெருமான் பாடியது ?
அ)
சிவ புராணம் ஆ) சீறாப்புராணம் இ) திருத்தொண்டர் புராணம் ஈ)
திருத்தொண்டர் தொகை
22.
'பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ' எனப் பாடியவர் -----?
அ)
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் ஆ)
கவிமணி தேசிக விநாயகனார்
இ)
கவிஞர் வெ. இராமலிங்கனார் ஈ) பெ. சுந்தரனார்
23.
சுந்தரர் எழுதியது -----?
அ
) திருத்தொண்டர் திருவந்தாதி ஆ) திருத்தொண்டத் தொகை
இ)
திருத்தொண்டர் புராணம் ஈ) பெரியபுராணம்
24.
.நாயன்மார்களின் எண்ணிக்கை
அ) 12
ஆ) 63 இ) 64 ஈ) 96
25.
மேதி என்பதன் பொருள்
அ)
எருமைக்கடா ஆ) எருமை இ) மாடு ஈ) பசு
26.
மல்லல் மூதூர் வயவேந்தே - கோடிட்ட சொல்லின் இலக்கணக்குறிப்பு.
அ)
வினைத்தொகை ஆ) பண்புத்தொகை இ) தொழிற்பெயர் ஈ)
உம்மைத்தொகை
27.
உணவெனப்படுவது நிலத்தொடு----
அ)
உயிர்
ஆ) வளி இ) நீர் ஈ)
யாக்கை
28.
பண்டைத் தமிழர்களின் பண்பாட்டுக் கருவூலமாகத் திகழும் நூல்
அ)
புறநானூறு ஆ) பெரியபுராணம் இ) பத்துப்பாட்டு ஈ) திருவாசகம்
29.
முப்பொருளினது உறுதி தரும் தன்மையைக் கூறுவது
அ)
பொதுவியல் ஆ) முதுமொழிக் காஞ்சி இ) பாடாண் ஈ) வஞ்சி
30.
வித்திவான் நோக்கும் புன்புலம் கோடிட்ட சொல்லின் பொருள்.
அ)
புல்லிய நீர் ஆ) முயற்சி இ) புல்லிய நிலம் ஈ) புல்லிய காற்று
31.
பாண்டியன் நெடுஞ்செழியனைப் புகழ்ந்து பாடியவர்
அ)
ஒளவையார் ஆ) நக்கீரர் இ) குடபுலவியனார் ஈ) காக்கைப் பாடினியார்
32.
புறநானூறு நூல்களுள் ஒன்று.
அ)
எட்டுத்தொகை ஆ) பத்துப்பாட்டு இ) பதினெண்கீழ்க்கணக்கு ஈ) பதினெண் மேல்கணக்கு
33.
வினைத்தொகையைக் கண்டறிக
அ)
செந்நெல் ஆ) கருங்குவளை இ) விரிமலர் ஈ) செங்காந்தள்
34.
தடவரை – இலக்கணக்குறிப்பு
அ)
எழுவாய்த்தொடர் ஆ) வினையெச்சத்தொடர்
இ)
உரிச்சொல் தொடர் ஈ) பெயரெச்சத்தொடர்
35.
அகலமும் ஆழமும் உள்ள பெருங்கிணறு
அ)
பூட்டை ஆ) கூவல் இ) இலஞ்சி
ஈ) கேணி
36.
தௌலீஸ்வரம் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?
அ)
கோதாவரி ஆ) கிருஷ்ணா இ) காவேரி
ஈ) தாமிரபரணி
37.
தமிழ்நாடு----பகுதியில் உள்ளது
அ)
பூமத்திய ரேகை ஆ) குளிர்மண்டல இ) வெப்பமண்டல ஈ) மிதவெப்பமண்டல
38.
பாண்டி மண்டலத்தில் ஏரிக்கு வழங்கப்படும் பெயர்
அ)
குண்டம் ஆ) குண்டு இ) புலரி ஈ) கண்மாய்
39.
நீர்நாடு என்று குறிபிடப்பட்டது-----
அ)
பாண்டிய நாடு ஆ) சோழ நாடு இ) சேர நாடு ஈ) பல்லவ நாடு
40.
நாளிகேரம் என்பது எம்மரத்தைக் குறிக்கும்?
அ)
பனை ஆ) பச்சிலை இ) பாக்கு ஈ) தென்னை
41.
பதம் எத்தனை வகைப்படும்
அ)
இரண்டு ஆ) மூன்று இ) நான்கு ஈ) ஐந்து
42.
பகுபதம் எத்தனை வகைப்படும்
அ
) 2 ஆ) 4 இ) 6 ஈ) 8
43.
பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?
அ)
இரண்டு ஆ) நான்கு இ) ஆறு ஈ) எட்டு
44.
திணை, பால், எண்,
இடத்தை உணர்த்தும் பகுபத உறுப்பு எது?
அ)
பகுதி ஆ) விகுதி இ) இடைநிலை ஈ) சந்தி
45.
இடைநிலை எவற்றை உணர்த்தி வரும்?
அ)
திணை ஆ) பால் இ) இடம் ஈ) காலம்
46.
கீழ் வரும் எழுத்துக்களில் எழுத்துப்பேறாக வரும் எழுத்து எது?
அ)
க் ஆ) ப் இ) த் ஈ) இன்
47.
பகுதியையும் பிற உறுப்புகளையும் இணைப்பது எது?
அ)
இடைநிலை ஆ) சந்தி இ) சாரியை ஈ) விகுதி
48.
'ச்,ஞ்' எவற்றின் இடை
நிலையாக வருகின்றன?
அ)
பெயர் இடைநிலை ஆ) வினை இடைநிலை
இ)
எதிர்மறை இடைநிலை ஈ) எதிர்கால இடைநிலை
49.
கீழ் வருவனவற்றில் தொழிற்பெயர் விகுதி எது?
அ)
என் ஆ) து இ) ஐ ஈ) க
50.
பாரீர் என்னும் சொல்லின் விகுதி எது?
அ)
அர் ஆ) ஆர் இ) இர் ஈ)
ஈர்

கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி