TNTET 8 TH STD TAMIL QUESTION BANK UNIT-3

  8. ஆம் வகுப்பு - தமிழ்

ஒரு மதிப்பெண் வினாவிடைகள்

இயல்-3
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து,விடையைக் குறியீட்டுடன் எழுதுக

1. பொருத்துக

1. அலந்தவர்- அ) வெறுக்காமை

2. செறாஅமை -  ) பொறுத்தல்

3. நோன்றல் - இ) பகைவர்

4. போற்றார் - ஈ) வறியவர்

அ) 1 - , 2 — , 3 - , 4 - ஆ) 1- ஈ , 2-ஆ , 3 - அ , 4 - இ

இ) 1 – அ , 2 - ஆ  , 3 - இ , 4 - ஈ  ஈ) 1 - ஆ , 2 - அ , 3 - ஈ , 4 - இ

2. கிளை என்ற சொல்லின் பொருள்

அ) மரம் ஆ) செடி இ) உறவினர் ஈ) பகைவர்

3. இல்வாழ்வு என்பது

அ) மகிழ்ச்சியோடு வாழ்தல் ஆ) இல்லத்தை நிர்வகித்தல்

இ) வறியவர்களுக்கு உதவி செய்தல் ஈ) உறவினரைப் பாதுகாத்தல்

4. போற்றுதல் என்பது

அ) பாடறிந்து ஒழுகுதல் ஆ) தன் கிளை செறாஅமை

இ) கூறியது மறாஅமை ஈ) புணர்ந்தாரைப் பிரியாமை

5. அறிவு எனப்படுவது

அ) அறிவாற்றலுடன் செயல்படுதல் ஆ) அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்தல்

இ) பொருள் ஈட்டுதல் ஈ) திறமையுடன் தொழில் செய்தல்

6. செறிவு எனப்படுவது

அ) பாடறிந்து ஒழுகுதல் ஆ) தன் கிளை செறாஅமை

இ) கூறியது மறாஅமை ஈ) புணர்ந்தாரைப் பிரியாமை

7. மறை பொருளைப் பிறர் அறியாமல் காத்தல் ----எனப்படும்

அ) மறம் ஆ) நிறை இ) பொறை இ) திறை

8. கலித்தொகை ------நூல்களுள் ஒன்று

அ) பத்துப்பாட்டு ஆ) எட்டுத்தொகை இ) பதினெண் கீழ்க்கணக்கு ஈ) நீதி நூல்கள்

9. கலித்தொகை எத்தனை பாடல்களைக் கொண்டது?

அ) 120 ஆ) 400 இ) 200 ஈ) 150

10. கலித்தொகை எத்தனை பிரிவுகளை கொண்டது?

அ) 3 ஆ) 5 இ) 7 ஈ) 9

11. கலித்தொகையைத் தொகுத்தவர்

அ) கபிலர் ஆ) ஔவையார் இ) நல்லந்துவனார் இ) நாதகுத்தனார்

12. கலித்தொகையில் ஒரு பிரிவான நெய்தற் கலையை பாடியவர் யார்?

அ) கபிலர் ஆ) ஔவையார் இ) நல்லந்துவனார் இ) நாதகுத்தனார்

13. ஆலங்குடி சோமு பிறந்த மாவட்டம்

அ) மதுரை ஆ) சிவகங்கை இ)  புதுக்கோட்டை ஈ)  தஞ்சாவூர்

14. அடையாளம் என்று பொருள் தரும் சொல்

அ) வழி ஆ) தடம் இ) இடம் ஈ) தழும்பு

15. கத்தியை - புத்தியை , தீட்டு - காட்டு என்பவற்றில் இடம்பெற்ற நயங்கள் முறையே

அ) இயைபு- எதுகை ஆ) இயைபு - மோனை இ) எதுகை - இயைபு ஈ) எதுகை - மோனை

16. ஆத்திரம் கண்ணை மறைக்கும் போது என்ன செய்ய வேண்டும்?

அ) கண்ணை மூடிக்கொள்ள வேண்டும் ஆ) அறிவுக்கு வேலை கொடுக்க வேண்டும்

இ) எதிரில் உள்ளவரை அடிக்க வேண்டும் ஈ) அங்கிருந்து சென்று விட வேண்டும்

17. யாருடைய உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது?

அ) உதவி செய்தவர் ஆ) அன்பு வைத்தவர் இ) மன்னிக்கத் தெரிந்தவர் ஈ) புகழ்ந்து பேசியவர்

18. அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது எது?

அ) அன்பு ஆ) கவிதை இ) கல்வி ஈ) ஈகை

19. தாய்நாடு என்னும் பெயர் எதைக் கொண்டு பிறக்கிறது?

அ) பிறந்த இடம் ஆ) தாய்மொழி இ) நல்ல குணம் ஈ) பிறந்த நேரம்

20. "கல்வி என்பது வருவாய் ஈட்டும் வழிமுறை மட்டுமன்று ;அது மெய்மையைத் தேடவும் அறநெறியைப் பயிலவும் மனித ஆன்மாவுக்குப் பயிற்சி அளிக்கும் ஒரு நெறிமுறையும் ஆகும்" என்று கூறியவர் யார்?

அ) டாக்டர் முத்துலட்சுமி ஆ) இராஜம் கிருஷ்ணன் இ) விஜயலட்சுமி பண்டிட் ஈ) மேரி கியூரி

21. ஐ.நா அவையின் முதல் பெண் தலைவர் யார்?

அ) டாக்டர் முத்துலட்சுமி ஆ) இராஜம் கிருஷ்ணன் இ) விஜயலட்சுமி பண்டிட் ஈ) மேரி கியூரி

22. இயற்கை ஓவியம் என்று அழைக்கப்படுவது---

அ) பத்துப்பாட்டு ஆ) கலித்தொகை இ)  திருக்குறள் ஈ) சீவக சிந்தாமணி

23. இயற்கை இன்பக் கலம் என்று அழைக்கப்படுவது

அ) பத்துப்பாட்டு ஆ) கலித்தொகை இ)  திருக்குறள் ஈ) சீவக சிந்தாமணி

24. இயற்கை வாழ்வில்லம்  எது?

அ) பத்துப்பாட்டு ஆ) கலித்தொகை இ)  திருக்குறள் ஈ) சீவக சிந்தாமணி

25. இயற்கை தவம் என்று அழைக்கப்படும் நூல் எது?

அ) பத்துப்பாட்டு ஆ) கலித்தொகை இ)  திருக்குறள் ஈ) சீவக சிந்தாமணி

25. இயற்கை பரிணாமம் என்று அழைக்கப்படும் நூல் எது?

அ) கம்பராமாயணம் ஆ) கலித்தொகை இ)  திருக்குறள் ஈ) சீவக சிந்தாமணி

26. இயற்கை அன்பு என்று அழைக்கப்படும் நூல் எது?

அ) பெரியபுராணம் ஆ) கலித்தொகை இ)  திருக்குறள் ஈ) சீவக சிந்தாமணி

27. இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள் என்று அழைக்கப்படும் நூல்கள்----

அ) சிலப்பதிகாரம் ,சீவக சிந்தாமணி ஆ) கம்பராமாயணம், சிலப்பதிகாரம்

இ) சீவக சிந்தாமணி , மணிமேகலை ஈ)  சிலப்பதிகாரம்,  மணிமேகலை

27. புற உலக ஆராய்ச்சிக்கு அறிவியல் எதைப் போன்றது?

அ) நண்பன் ஆ) பகைவன் இ) கொழுகொம்பு ஈ) திசைகாட்டி

28. தமிழ் தென்றல் என்று அழைக்கப்படுபவர்

அ) பாவாணர் ஆ) திரு வி.க  இ) பாரதியார் ஈ) கவிமணி

29. ஜெயகாந்தனோடு பல்லாண்டு என்னும் நூலை எழுதியவர் யார்?

அ) அ.கு.குப்புசாமி ஆ) ஏ.கா.குப்புசாமி இ) த.ஏ.குப்புசாமி ஈ) பி.ச.குப்புசாமி

30. பொருள் முற்றுப்பெற்ற வினைச்சொற்கள்----எனப்படும்

அ) பொருட்பெயர் ஆ) வினைமுற்று இ)  முற்றெச்சம் ஈ) வினையெச்சம்

31. வினைமுற்று எத்தனை வகைப்படும்?

அ)  இரண்டு ஆ) மூன்று இ) நான்கு ஈ) ஐந்து

32. தெரிநிலை வினைமுற்றைத் தேர்ந்தெடுக்க

அ) வரைந்தான் ஆ)  மதுரையான் இ) வரைந்த ஈ) வரைந்து

33. காலத்தைக் காட்டாமல் அறுவகைப் பெயரின் அடிப்படையில் வருவது

அ) குறிப்பு வினைமுற்று ஆ) தெரிநிலை வினைமுற்று

இ) பெயரெச்சம் ஈ)  தெரிநிலைப் பெயரெச்சம்

34. எழுதுமின் என்பது--- வினைமுற்று

அ) முன்னிலை ஒருமை ஆ)  ஏவல் பன்மை இ)  வியங்கோள் ஈ) இறந்தகால

35. வாழ்த்துதல், வைதல் ,விதித்தல் வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று

அ) முன்னிலை ஒருமை ஆ)  ஏவல் பன்மை இ)  வியங்கோள் ஈ) இறந்தகால

36. வாரல் என்பது---- வினைமுற்று

அ) முன்னிலை ஒருமை ஆ)  ஏவல் பன்மை இ)  வியங்கோள் ஈ) இறந்தகால

37. சரியான நிறுத்தற்குறி அமைந்த தொடரை தேர்வு செய்க

அ) முக்கனி - மா,பலா,வாழை ஆ) முக்கனி : மா,பலா,வாழை

இ) முக்கனி : மா பலா வாழை ஈ) முக்கனி ; மா,பலா,வாழை

38. Reform என்ற சொல்லின் தமிழாக்கம்

அ) வரைதல் ஆ) நிரப்புதல் இ) புரட்சி ஈ) சீர்திருத்தம்

39. நம்மை_____ப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

அ) இகழ்வாரை  ஆ) அகழ்வாரை  இ) புகழ்வாரை  ஈ) மகிழ்வாரை

40. மறைபொருளைக் காத்தல் _____ எனப்படும்.

அ) சிறை  ஆ) அறை  இ) கறை  ஈ) நிறை

41. ‘பாடறிந்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

அ) பாட் + அறிந்து  ஆ) பா+ அறிந்து  இ) பாடு + அறிந்து  ஈ) பாட்டு + அறிந்து

42. முறை+ எனப்படுவது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

அ) முறையப்படுவது ஆ) முறையெனப்படுவது   இ) முறைஎனப்படுவது   ஈ) முறைப்படுவது

43. என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும் _____ இன்றி வாழ்ந்தார்.

அ) சோம்பல்   ஆ) அகம்பாவம்   இ) வருத்தம்   ஈ) வெகுளி

44. ‘கோயிலப்பா‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

அ) கோ+ அப்பாஆ) கோயில் + லப்பா   இ) கோயில் + அப்பா   ஈ) கோ+ இல்லப்பா

45. பகைவன் + என்றாலும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

அ) பகைவென்றாலும் ஆ) பகைவனென்றாலும்   

இ) பகைவன்வென்றாலும்   ஈ) பகைவனின்றாலும்

46. அறியாமையைநீக்கி அறிவைவிளக்குவது _____.

அ) விளக்கு  ஆ) கல்வி  இ) விளையாட்டு   ஈ) பாட்டு

47. கல்விப் பயிற்சிக்குரிய பருவம் ______.

அ) இளமை   ஆ) முதுமை   இ) நேர்மை   ஈ) வாய்மை

48. இன்றைய கல்வி _____ நுழைவதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.

அ) வீட்டில்   ஆ) நாட்டில்   இ) பள்ளியில்   ஈ) தொழிலில்

49. மாடு வயலில் புல்லைமேய்ந்தது. – இத்தொடரிலுள்ள வினைமுற்று _____.

அ) மாடு  ஆ) வயல்  இ) புல்  ஈ) மேய்ந்தது

50. பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று _____.

அ) படித்தான்  ஆ) நடக்கிறான்  இ) உண்பான்   ஈ) ஓடாது

51. பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் _____.

அ) செல்க  ஆ) ஓடு   இ) வாழ்க  ஈ) வாழிய

பதிவிறக்கம் செய்ய

வினாக்களை மட்டும் அறிய

👉 இயல்-1 வினா விடைகள்

👉 இயல்-2 வினா விடைகள்

👉 இயல்-4 வினா விடைகள்

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை