TNTET 8 TH STD TAMIL QUESTION BANK UNIT-2

 8. ஆம் வகுப்பு - தமிழ்

ஒரு மதிப்பெண் வினாவிடைகள்

இயல்-2

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து,விடையைக் குறியீட்டுடன் எழுதுக

1. ஆத்தி மாலையை அணிந்த மன்னன் யார்?

அ) சேரன் ஆ) சோழன் இ) பாண்டியன் ஈ) பல்லவன்

2. காவிரி ஆறு பாய்ந்து வளம் செய்யும் நாட்டை ஆட்சி செய்த மன்னன்

அ) சேரன் ஆ) சோழன் இ) பாண்டியன் ஈ) பல்லவன்

3. சிலப்பதிகாரத்தை இயற்றியவர்----

அ) திருத்தக்க தேவர் ஆ) இமயவரம்பன் இ)  இளங்கோவடிகள் ஈ) சீத்தலைச் சாத்தனார்

4. இளங்கோவடிகள் எந்த அரச மரபைச் சார்ந்தவர்?

அ) சேரன் ஆ) சோழன் இ) பாண்டியன் ஈ) பல்லவன்

5. சிலப்பதிகாரம் இயற்றப்பட்ட காலம்------ நூற்றாண்டு

அ) கி.பி.2 ஆ) கி.பி.3 இ) கி.பி.4 ஈ) கி.பி.5

6. தமிழின் முதல் காப்பியம் எது ?

அ) மணிமேகலை ஆ) சீவக சிந்தாமணி இ) தொல்காப்பியம் ஈ) சிலப்பதிகாரம்

7. முத்தமிழ் காப்பியம் என்று அழைக்கப்பட்ட நூல் எது?

அ) மணிமேகலை ஆ) சீவக சிந்தாமணி இ) தொல்காப்பியம் ஈ) சிலப்பதிகாரம்

8. சென்னி என்பது யாருடைய பட்டப்பெயர்?

அ) சேரன் ஆ) சோழன் இ) பாண்டியன் ஈ) பல்லவன்

9. அளி என்ற சொல்லின் பொருள்

அ) அன்பு ஆ) கொடை இ) வீரம் ஈ) கருணை

10. மேரு என்ற சொல் குறிப்பது

அ) பொதிகை மலை ஆ) விராலிமலை இ) வெள்ளிமலை ஈ)  இமயமலை

11. கவலை என்று பொருள் தரும் சொல்

அ) வசனம் ஆ) பசனம் இ) விசனம் ஈ) கரிசனம்

12. கந்தம் என்ற சொல்லின் பொருள்

அ) கடவுள் ஆ) இயற்கை இ) காற்று ஈ) மணம்

13. பாரதியாரின் கவி மரபு வழித் தோன்றல் யார்?

அ) தாராபாரதி ஆ)  கவிமணி இ) தமிழ் ஒளி ஈ) தமிழ் நிலவன்

14. மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு என்று கூறியவர் யார்?

அ. அவ்வையார் ஆ) திருவள்ளுவர் இ) இளங்கோவடிகள் ஈ) கம்பர்

15. உடலை வளப்படுத்தி உள்ளத்தை சீராக்கும் கலை

அ) மூச்சுக்கலை ஆ) பேச்சுக்கலை இ) யோகக் கலை ஈ) வர்மக்கலை

16. வேர் பாரு தலை பாரு மிஞ்சினக்கால் பற்ப செந்தூரம் பாரே என்று கூறியவர்கள் யார்?

அ) தீர்த்தங்கரர்கள் ஆ) மகாவீரர்கள் இ) சித்தர்கள் ஈ) யோகிகள்

17. தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது எதன் நீட்சியாக இருக்கிறது?

அ) மருந்து ஆ) உணவு இ) பாசானம் ஈ) பஸ்பம்

18. பொருந்தாத கருத்தைத் தேர்வு செய்க. இன்றைக்கு நோய்கள் பெருகி இருக்க காரணம் --

அ) இயற்கையை விட்டு விலகி வந்தது ஆ) உணவுப் பழக்கம்

இ) மாசு நிறைந்த சுற்றுச்சூழல் ஈ)  சுவையற்ற உணவுகள்

19. சமையலறையில் செலவிடும் நேரம்----

அ) சுவையான உணவிற்கான நேரம் ஆ) நம் நல வாழ்விற்காக செலவிடும் நேரம்

இ) வீட்டில் உள்ளவர்களுக்கான நேரம் ஈ) சமையல் வேலைகளை முடிப்பதற்கான நேரம்

20. உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலி கடை எவ்வாறு அழைப்பர்?

அ) ஒத்த ஒலிகள் ஆ) வேற்றுமை ஒலிகள் இ) மயங்கொலிகள் ஈ) சிற்றொலிகள்

21. மயங்கொலி எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?

அ) 7 ஆ) 8 இ) 9 ஈ) 10

22. நாவின் நுனி மேல்வாய் அன்னத்தின் முன்பகுதியைத் தொடுவதால் பிறக்கும் எழுத்து

அ) ன ஆ) ண இ) ந ஈ) ப

23. நாவின் நுனி மேல்வாய்ப்பல்லின் அடிப்பகுதியை தொடுவதால் பிறக்கும் எழுத்து எது?

அ) ன ஆ) ண இ) ந ஈ) ப

24. வாணம்-வானம் சரியான பொருள் முறையே

அ) ஆகாயம்,மேடை ஆ) வெடி, ஆகாயம் இ) ஆகாயம், வெடி ஈ) மேடை, வெடி

25. நாவின் இரு பக்கங்கள் தடித்து மேல் பற்களின் அடியை தொடுவதால் தோன்றும் எழுத்து

அ) ல ஆ) ள இ) ழ ஈ) ற

26. தமிழுக்கு உரித்தான சிறப்பு ஒலியாகக் கருதப்படுவது

அ) லகரம் ஆ) ளகரம் இ) ழகரம் ஈ) அகரம்

27. நாவின் நுனி மேல் அன்னத்தில் மையப் பகுதியை உரசுவதால் தோன்றும் எழுத்து

அ) ற ஆ) ர இ) த ஈ) ந

28. உண் என்ற வினைப் பகுதிக்கான தன்மை ஒருமை வினைமுற்று

அ) உண்க ஆ) உண்கிறோம் இ) உண்கிறேன் ஈ) உண்போம்

29. கழுத்தில் சூடுவது

அ) தார்  ஆ) கணையாழி   இ) தண்டை  ஈ) மேகலை

30. கதிரவனின் மற்றொரு பெயர்

அ) புதன்   ஆ) ஞாயிறு  இ) சந்திரன்   ஈ) செவ்வாய்

31. 'வெண்குடை ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) வெண் + குடை  ஆ) வெண்மை + குடை  இ) வெம் + குடை ஈ) வெம்மை + குடை

32. 'அங்கண்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) அம் + கண்   ஆ) அ + கண்  இ) அங் + கண்  ஈ) அங்கு + கண்

33. கொங்கு + அலர் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) கொங்குஅலர்  ஆ) கொங்அலர்  இ) கொங்கலர்  ஈ) கொங்குலர்

34. அவன்-அளிபோல் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) அவன் அளிபோல்  ஆ) அவனளிபோல்  இ) அவன்வளிபோல்  ஈ)அவனாளிபோல்

35. மலர்களிலிருந்து வரும்-----வண்டுகளை ஈர்க்கும்.

அ) மந்தம்  ஆ) அந்தம்  இ) சந்தம்   ஈ) கந்தம்

36. மரத்தின் உடையாகக் குறிப்பிடப்படுவது ---- ஆகும்.

அ) சட்டை  ஆ) பட்டை  இ) மட்டை   ஈ) கட்டை

37. 'வருமென்று' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) வரு+மென்று  ஆ) வரும் + மென்று  இ) வரும் என்று  ஈ) வரு + என்று

38. கிழிந்து எழில் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) கிழிந்துாழில்  ஆ) கிழிந்தெழில் இ) கிழிந்தொழில்  ஈ) கிழிந்தமிழ்

39. தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்கு _____ பயன்படுத்தினர்.

அ) தாவரங்களை  ஆ) விலங்குகளை இ) உலோகங்களை ஈ) மருந்துகளை

40. தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது _____ நீட்சியாகவே உள்ளது.

அ) மருந்தின் ஆ) உடற்பயிற்சியின் இ) உணவின்  ஈ) வாழ்வின்

41. நோய்கள் பெருக மனிதன் ---  விட்டு விலகியதுதான் முதன்மைக் காரணமாகும்.

) வீட்டை ஆ) உணவை  ) நாட்டை  ) இயற்கையை

 42. சமையலறையில் செலவிடும் நேரம் _____ செலவிடும் நேரமாகும்.

அ) சுவைக்காக ஆ) சிக்கனத்திற்காக இ) நல்வாழ்வுக்காக  ஈ) உணவுக்காக

43. புகழாலும் பழியாலும் அறியப்படுவது _____.

அ) அடக்கமுடைமை  ஆ) நாணுடைமை  இ) நடுவுநிலைமை  ஈ) பொருளுடைமை

44. பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள் _____.

அ) வலிமையற்றவர்   ஆ) கல்லாதவர்   இ) ஒழுக்கமற்றவர்   ஈ) அன்பில்லாதவர்

45. ‘வல்லுருவம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

அ) வல் + உருவம்  ஆ) வன்மை+ உருவம்  இ) வல்ல+ உருவம்   ஈ) வல்லு + உருவம்

46. நெடுமை+ தேர் என்பதனைச் சேர்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

அ) நெடுதேர்   ஆ) நெடுத்தேர்   இ) நெடுந்தேர்   ஈ) நெடுமைதேர்

47. ‘கடல் ஓடா’ எனத்தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி _____.

அ) எடுத்துக்காட்டு உவமைஅணி ஆ)தற்குறிப்பேற்றஅணி

இ) உவமைஅணி  ஈ) பிறிதுமொழிதல் அணி

48. ஒருவருடைய நடுவுநிலைமை பண்பு எதைக் கொண்டு அறியப்படும்?

அ) அவருடைய கொடைத்தன்மை   ஆ) அவருக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ், பழி

இ) அவருடைய முயற்சி        ஈ) அவருடைய வாய்மை

49. சமன்செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்து ஒருபால்

     கோடாமை சான்றோர்க்கு அணி    -   திருக்குறளில் இடம் பெற்றுள்ள அணி

அ) உவமையணி ஆ) உருவக அணி இ) இல் பொருள் உவமையணி ஈ) பிறிது மொழிதல் அணி

50. மக்களின் பண்புகளை எவற்றால் உணர்ந்து கொள்ள வேண்டும்?

அ) தோற்றத்தால் ஆ) செயல் வகையால்

இ) அவர்களது உறவினர்களால் ஈ) அவர்களது குடும்பத்தினரால்

51. லியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

      புலியின் தோல் போர்த்து மேய்ந்தற்று      -     திருக்குறளில் இடம் பெற்றுள்ள அணி

அ) உவமையணி ஆ) உருவக அணி இ) இல் பொருள் உவமையணி ஈ) பிறிது மொழிதல் அணி

52. வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

      வைத்தூறு  போலக்   கெடும்    -  திருக்குறளில் இடம் பெற்றுள்ள அணி

அ) உவமையணி ஆ) உருவக அணி இ) இல் பொருள் உவமையணி ஈ) பிறிது மொழிதல் அணி

53. கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்

      நாவாயும் ஓடா நிலத்து    -   திருக்குறளில் இடம் பெற்றுள்ள அணி

அ) உவமையணி ஆ) உருவக அணி இ) இல் பொருள் உவமையணி ஈ) பிறிது மொழிதல் அணி

54. உவமையை மட்டும் கூறி அதன் மூலம் கூற வந்த கருத்தை உணர வைப்பது

அ) உவமையணி ஆ) உருவக அணி இ) இல் பொருள் உவமையணி ஈ) பிறிது மொழிதல் அணி

55. உலகில் இல்லாத ஒன்றை உவமையாக கூறுவது

அ) உவமையணி ஆ) உருவக அணி இ) இல் பொருள் உவமையணி ஈ) பிறிது மொழிதல் அணி

56. ஒரு பாடலில் உவமையும் உவமையையும் இடம்பெற்று உவம உருபு வெளிப்படையாக வந்தால் அது---

அ) உவமையணி ஆ) உருவக அணி இ) இல் பொருள் உவமையணி ஈ) பிறிது மொழிதல் அணி

பதிவிறக்கம் செய்ய

வினாக்களை மட்டும் அறிய

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை