8. ஆம் வகுப்பு - தமிழ்
ஒரு மதிப்பெண் வினாவிடைகள்
இயல்-7
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து,விடையைக் குறியீட்டுடன் எழுதுக
1. திருமந்திரத்தை
இயற்றியவர்
அ) திருவள்ளுவர் ஆ) மாணிக்கவாசகர்
இ) சுந்தரர் ஈ) திருமூலர்
2. தமிழ் மூவாயிரம்
என்று அழைக்கப்படும் நூல் எது?
அ) திருக்குறள் ஆ) திருமந்திரம் இ) திருவாசகம் ஈ) திருக்கோத்தும்பி
3. திருமந்திரம்
பன்னிரு திருமுறைகளில் ----- திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது
அ) நான்காம் ஆ) ஆறாம் இ)
பத்தாம் ஈ) ஏழாம்
4. 63 நாயன்மார்களில் ஒருவராகவும்
பதினெண் சித்தர்களுள் ஒருவராகவும் கருதப்படுபவர் யார்?
அ) மாணிக்கவாசகர் ஆ)
அப்பர் இ) சுந்தரர் ஈ) திருமூலர்
5. கூற்று 1:
மனிதர்கள் அனைவரும் ஒரே இனத்தினர்.
கூற்று 2:
அடியார்களாகிய
மக்களுக்கு கொடுப்பது கோயிலில் இருக்கும் இறைவனுக்கு சேரும்
அ) கூற்று ஒன்று சரி,
இரண்டு தவறு ஆ) கூற்று இரண்டு, சரி ஒன்று
தவறு.
இ) கூற்றுகள் இரண்டும் சரி ஈ)
கூற்றுகள் இரண்டும் தவறு
6. நமன் என்ற
சொல்லின் பொருள்
அ) நண்பன் ஆ) உறவினர் இ)
எமன் ஈ) தேவர்
7. உள்ளம் என்று
பொருள் தரும் சொல் எது?
அ) நித்தம் ஆ) புறம் இ)
சித்தம் ஈ) யுத்தம்
8. நம்பர் என்ற
சொல்லின் பொருள்
அ) உறவினர் ஆ) பகைவர் இ) அறிஞர் ஈ)
அடியார்
9. நடமாடும் கோயில்
என்று திருமூலர் குறிப்பிடுவது
அ) அடியவர் ஆ) அடியவர்
உடம்பு இ) இறைவன் ஈ) அன்புள்ளம்
10. தயங்காமல் செல்ல
வேண்டிய நல்வழி என்று திருமந்திரம் குறிப்பிடும் கருத்து
அ) இறைவன் வெவ்வேறானவன் ஆ)
இறைவன் ஒருவனே
இ) மதங்கள் வெவ்வேறானவை ஈ) உலகமே
நிலையற்றது
11. குணங்குடி
மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர்
அ) சுல்தான் முகமது ஆ) அகமது
இப்ராஹிம் இ) முஹம்மது ஆசிப் ஈ) சுல்தான் அப்துல் காதர்
12. சதுரகிரி
புறாமலை நாகமலை முதலிய மலைப்பகுதிகளில் தவம் இயற்றி ஞானம் பெற்றவர்
அ) சுல்தான் முகமது ஆ) அகமது
இப்ராஹிம் இ) முஹம்மது ஆசிப் ஈ) சுல்தான் அப்துல் காதர்
14. குணங்குடி
மஸ்தான் சாகிபு இயற்றாத நூல் எது?
அ) பராபரக்கண்ணி
ஆ) எக்காளக் கண்ணி இ) மனோன்மணி கண்ணி ஈ) நந்தீசுவரக் கண்ணி
15. எதிர்ச்
சொற்களாக அமையும் தொடை
அ) எதுகை ஆ) மோனை இ) இயைபு ஈ) முரண்
16. முரண் தொடை
அமைந்த இணையைத் தேர்ந்தெடுக்க
அ) காசை-ஆசை ஆ) கள்ள- உள்ளி இ)
விரும்பி- விரும்பாது ஈ) அடக்க- படிக்க
17. பகராய் என்ற
சொல்லின் பொருள்
அ) தராதே ஆ) தருவாய்
இ) சொல்வாய் ஈ) சொல்லாதே
18. பராபரம் என்ற
சொல்லின் பொருள்
அ) தேவையான பொருள் ஆ) உலகத்திற்கு
அப்பாற்பட்டது
இ) அழகான பொருள் ஈ) மேலான
பொருள்
19. பராபரம் யாருடைய
மனத்துள்ளே எழுந்தருளி இருக்கிறது என்று குணங்குடியார் கூறுகிறார்?
அ) அன்பு கொண்டவர்கள் ஆ) ஆசை
கொண்டவர்கள்
இ) தீய எண்ணங்களை
அழித்தவர்கள் ஈ) உறவினர்கள்
20. ஐம்பொறி-
பிரித்தெழுதும் முறை
அ) ஐ+பொறி ஆ) ஐம்+ பொறி இ)
ஐந்து+ பொறி ஈ) ஐம்பொ+ பொறி
21. தந்தை
பெரியாருக்கும் அண்ணல் அம்பேத்கருக்கும் முன்னோடியாக திகழ்ந்தவர்
அ) குணவீர பண்டிதர் ஆ) பூமிநாதர் இ)
அயோத்திதாச பண்டிதர் ஈ)
ராமதீப பண்டிதர்
22. தென்னிந்திய
சமூக சீர்திருத்தத்தின் தந்தை யார்?
அ) அம்பேத்கர் ஆ) பெரியார் இ)
அயோத்திதாச பண்டிதர் ஈ) பால
கங்காதர திலகர்
23. அயோத்திதாசர்
பண்டிதரின் இயற்பெயர்---
அ) சுப்பிரமணியன் ஆ)
சுப்புரத்தினம் இ) காத்தவராயன் ஈ) கபாலி
24. அயோத்திதாசர்
பிறந்த ஆண்டு
அ) 1842 ஆ) 1843
இ) 1844 ஈ) 1845
25. அயோத்திதாசர்
பயிலாத மொழி எது?
அ) தெலுங்கு
ஆ) பாலி இ) வடமொழி ஈ) ஆங்கிலம்
26. அயோத்திதாசர்
வெளியிட்ட வார இதழின் பெயர்
அ) தமிழன் ஆ) இந்தியன் இ) ஒரு
ரூபாய் தமிழன் ஈ) ஒரு பைசா தமிழன்
27. அயோத்திதாசர்
ஒரு பைசா தமிழன் என்ற வார இதழை வெளியிட்ட ஆண்டு
அ) 1907
ஆ) 1908 இ) 1909 ஈ) 1910
28. அயோத்திதாசர்
தன் தொடங்கிய ஒரு பைசா தமிழன் என்ற வார இதழை ஒரு ஆண்டிற்கு பிறகு எவ்வாறு பெயர்
மாற்றினார்?
அ) தமிழன்
ஆ) இந்தியன் இ) விடுதலை ஈ) குடியரசு
29. ஒரு மனிதனின்
அறிவு வளர்ச்சி அடைய எது அவசியம் என்று அயோத்திதாசர் கருதினார்?
அ) தேசப்பற்று ஆ) கல்வி இ) செல்வம் ஈ)
உழைப்பு
30. அகத்தியர்
இருநூறு என்ற நூலைப் பதிப்பித்தவர் யார்?
அ) தொல்காப்பியர் ஆ) பாரதியார் இ) அயோத்திதாசர் ஈ) வீரமாமுனிவர்
31. என் பகுத்தறிவு
பிரச்சாரத்திற்கும் சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடியாக திகழ்ந்தவர்கள்
அயோத்திதாசரும் அப்பாதுரையாரும் இக்கூற்றுக்கு உரியவர் யார்?
அ) பண்டிதமணி ஆ) அயோத்திதாசர் இ) பெரியார் ஈ) உவேசா
32. அயோத்திதாசர்
தமது கொள்கைகளை வலியுறுத்தவும் ஒடுக்கப்பட்டோர் உரிமைகளை பாதுகாக்கவும் தொடங்கிய
அமைப்பு
அ) தேசிய இளைஞர் சங்கம் ஆ) திராவிட
இயக்கம்
இ) திராவிட மகாஜன
சங்கம் ஈ) திராவிட கொள்கை சங்கம்
33. அயோத்திதாசர்
திராவிட மகாஜன சங்கத்தை தோற்றுவித்த ஆண்டு
அ) 1891 ஆ) 1892
இ) 1893 ஈ) 1894
34. சுயராஜ்ஜியத்தின்
நோக்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதாக மட்டும் இருக்கக் கூடாது மக்களின் சமூக
பொருளாதார வளர்ச்சியையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும் என்று கூறியவர் யார்?
அ) பண்டிதமணி ஆ)
அயோத்திதாசர் இ) பெரியார் ஈ)
உவேசா
35. புத்தர்
சரித்திரப்பா என்னும் நூலை இயற்றியவர்
அ) பண்டிதமணி ஆ) அயோத்திதாசர்
இ) பெரியார் ஈ) உவேசா
36. சிறுகதை மன்னன்
என்று போற்றப்படுபவர் யார்?
அ) புலமைப்பித்தன் ஆ)
புதுமைப்பித்தன் இ) ஜெயகாந்தன் ஈ) மௌனி
37. புதுமைப்பித்தனின்
இயற்பெயர்
அ) சு. விருதாச்சலம் ஆ) பு.
விருதாச்சலம் இ) கு. விருதாச்சலம் ஈ) சொ.விருதாச்சலம்
38. கடவுளும்
கந்தசாமி பிள்ளையும் , சாப விமோசனம் பொன்னகரம் ஒரு நாள்
கழிந்தது உள்ளிட்ட சிறுகதைகளை இயற்றியவர் யார்?
அ) புலமைப்பித்தன் ஆ)
புதுமைப்பித்தன் இ) ஜெயகாந்தன் ஈ) மௌனி
39. வேற்றுமை
உருபுகள் இடம் பெற்றுள்ள தொடர்களை ----என்பர்
அ) வேற்றுமை உருபுகள் ஆ) வேற்றுமை தொடர்கள்
இ) தொகை நிலை தொடர்கள் ஈ)
தொழிற்பெயர்கள்
40. வேற்றுமை எத்தனை
வகைப்படும் ?
அ) மூன்று ஆ) இரண்டு இ) ஏழு ஈ)
எட்டு
41. செயப்படுபொருள்
வேற்றுமை என்று அழைக்கப்படுவது---
அ) இரண்டாம்
வேற்றுமை ஆ) மூன்றாம் வேற்றுமை
இ) நான்காம் வேற்றுமை ஈ) ஐந்தாம்
வேற்றுமை
42. உரிமைப்
பொருளில் வரும் வேற்றுமை
அ) இரண்டாம் வேற்றுமை ஆ) மூன்றாம்
வேற்றுமை
இ) நான்காம் வேற்றுமை ஈ)
ஆறாம் வேற்றுமை
43. ஐந்தாம்
வேற்றுமையிலும் ஏழாம் வேற்றுமையிலும் இடம்பெறும் உருபு
அ) அல் ஆ) இல்
இ) உடைய ஈ) ஆன்
44. மூன்றாம்
வேற்றுமைக்குரிய சொல் உருபு
அ) அல் ஆ) இல் இ) உடைய
ஈ) ஆன்
45. எட்டாம்
வேற்றுமையை ------வேற்றுமை என்பர்
அ) எழுவாய் ஆ) உரிமை இ) விளி ஈ) செயப்படுபொருள்
46. இடப் பொருளில்
வரும் வேற்றுமை
அ) இரண்டாம் வேற்றுமை ஆ) மூன்றாம்
வேற்றுமை
இ) நான்காம் வேற்றுமை ஈ)
எட்டாம் வேற்றுமை
47. Rational என்ற சொல்லின் தமிழாக்கம்
அ)
தத்துவம் ஆ) நேர்மை இ) பகுத்தறிவு ஈ) சீர்திருத்தம்
48. அறநெறியில் வாழ்பவர்கள் உயிரைக் கவர வரும் _____ க்
கண்டு அஞ்சமாட்டார்கள்.
அ) புலனை ஆ) அறனை இ) நமனை ஈ) பலனை
49. ‘நமனில்லை‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ) நம் +
இல்லை ஆ) நமது + இல்லை இ) நமன் + நில்லை ஈ) நமன் + இல்லை
50. நம்பர்க்கு + அங்கு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
அ)
நம்பரங்கு ஆ) நம்மார்க்கு இ) நம்பர்க்கங்கு ஈ) நம்பங்கு
51. ஞானியர் சிறந்தகருத்துகளைமக்களிடம் _____.
அ)
பகர்ந்தனர் ஆ) நுகர்ந்தனர் இ) சிறந்தனர் ஈ) துறந்தனர்
52. ‘ஆனந்தவெள்ளம்‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ) ஆனந்த+ வெள்ளம் ஆ) ஆனந்தன் +வெள்ளம்
இ) ஆனந்தம் +
வெள்ளம் ஈ)ஆனந்தர் + வெள்ளம்
53. உள் + இருக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
அ)
உள்ளேயிருக்கும் ஆ) உள்ளிருக்கும் இ) உளிருக்கும் ஈ)
உளருக்கும்
54. அயோத்திதாசர்_____சமூகச்சீர்திருத்தத்தின் தந்தை
என்று போற்றப்படுகிறார்.
அ) தமிழக ஆ) இந்திய இ) தென்னிந்திய ஈ) ஆசிய
55. அயோத்திதாசர் நடத்திய இதழ்_____.
அ)
ஒருபைசாத்தமிழன் ஆ) காலணாத்தமிழன்
இ)
அரைப்பைசாத்தமிழன் ஈ) அரையணாத்தமிழன்
56. கல்வியோடு _____ கற்கவேண்டும் என்பது அயோத்திதாசர்
கருத்து.
அ)
சிலம்பமும் ஆ) கைத்தொழிலும்
இ) கணிப்பொறியும் ஈ) போர்த்தொழிலும்
57. அயோத்திதாசரின்
புதுமையான சிந்தனைகளுக்கு அடித்தளமாக அமைந்தது அவரது ________.
அ)
ஆழ்ந்தபடிப்பு ஆ) வெளிநாட்டுப்பயணம் இ) இதழியல் பட்டறிவு ஈ) மொழிப்புலமை
58. மக்களின் ஒழுக்கத்துடன் தொடர்புடையது
அ) வானம் ஆ) கடல்
இ) மழை ஈ) கதிரவன்
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி