(சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஒரே வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளதால் இதே விடைக்குறிப்பைப் பயன்படுத்தலாம்)
மூன்றாம் திருப்புதல் தேர்வு-2026
சென்னை&செங்கல்பட்டு மாவட்டம்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1
15X1=15
|
வி.எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
|
1.
|
இ. குறிஞ்சி,
மருதம்,நெய்தல் நிலங்கள் |
1 |
|
2.
|
அ. கருணையன்
எலிசபெத்துக்காக |
1 |
|
3.
|
ஈ,. சருகும்
சண்டும் |
1 |
|
4.
|
இ. அவர் |
1 |
|
5.
|
ஆ. இருபெயரொட்டுப் பண்புத்தொகை |
1 |
|
6.
|
இ. காசி நகரத்தின்
பெருமையைப் பாடும் நூல் |
1 |
|
7.
|
அ. பண்புத்தொகை |
1 |
|
8.
|
ஈ. சிலப்பதிகாரம் |
1 |
|
9.
|
ஆ. எழுவாய்த்தொடர் |
1 |
|
10.
|
ஆ. கம்பராமாயணம் |
1 |
|
11.
|
இ. உழவு, ஏர், மண், மாடு |
1 |
|
12.
|
ஆ. பாவலரேறு
பெருஞ்சித்திரனார் |
1 |
|
13.
|
அ. செந்தாமரை |
1 |
|
14.
|
ஈ. வண்டு |
1 |
|
15.
|
இ. கனிச்சாறு |
1 |
பகுதி-2 பிரிவு-1 4X2=8
|
எவையேனும் நான்கு வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்க |
||
|
16 |
ü வானமும், உருவமில்லாக்
காற்றும்,
பூமியும், நெருப்பும், நீரும் ஆகிய
ஐம்பூதங்களும் உயிர்கள் உருவாகி வளர முதன்மையானவை ஆகும். ü பூமி உருவாகி, ஊழிக்காலம்
தொடர்ந்த பின்னர்ப் இப்பூமி குளிரும்படியாகத் தொடர்ந்த மழையால் வெள்ளத்தில்
மூழ்கியது. ü மீண்டும்
மீண்டும் வெள்ளத்தால் நிறைந்த இப்பெரிய உலகத்தில், உயிர்கள் உருவாகி
வாழ்வதற்கு ஏற்ற சூழல் தோன்றி,
அவை
நிலைபெறும்படியான ஊழிக்காலம் வந்தது |
2 |
|
17 |
நீர்நிலை
பெருக்கி நிலவளம் கண்டு உணவுப் பெருக்கம் செய்வது அரசனின் கடமையாகும் |
2 |
|
18 |
வாருங்கள்.
நலமா? நீர் அருந்துங்கள். |
2 |
|
19 |
ü முதுகினால் சூரியனை
மறைக்கும்போது மேகங்கள் துணிச்சலானவை. ü தாகம் தீர்க்கும்போது
மேகங்கள் கருணை மிக்கவை |
2 |
|
20 |
அ. கலைஞர் என்ற
சிறப்புப்பெயர் எப்போது வழங்கப்பட்டது? |
2 |
|
21 |
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத் தியற்கை
அறிந்து செயல். |
2 |
பிரிவு-2
5X2=10
|
எவையேனும்
ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
|
22 |
அ. நறுமணம் ஆ. புதுமை |
2 |
|
23 |
அ. கற்றல் ஆ. எழுத்து இ. சோறு
ஈ. கரு |
2 |
|
24 |
"சீசர் எப்போதும் என்
சொல்பேச்சைக் கேட்கும். புதியவர்களைப் பார்த்துக் கத்துமே தவிர கடிக்காது "
என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார். |
2 |
|
25 |
தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை தேறும்
சிலப்பதி காரமதை ஊணிலே எம்முயிர் உள்ளளவும் – நிதம் ஓதி
யுணர்ந்தின் புறுவோமே” |
2 |
|
26 |
1.
இறங்கினார்
முகமது
- வினைமுற்றுத்
தொடர் 2.
அவர்
பாடகர்
- எழுவாய்த்
தொடர் 3.
பாடுவது கேட்பது - கூட்டு வினையெச்சத் தொடர் 4.
கேட்ட
பாடல்கள்
- பெயரெச்சத்
தொடர் 5.
கேட்காத
பாடல்கள்
- எதிர்மறைப்
பெயரெச்சத் தொடர் 6.
அடுக்கு
அடுக்காக
- அடுக்குத்
தொடர் |
2 |
|
27 |
மயங்கிய - மயங்கு + இ(ன்)
+ ய் + அ மயங்கு
- பகுதி இ(ன்)
- இறந்தகால இடைநிலை;
'ன்' புணர்ந்து கெட்டது. ய்
-உடம்படுமெய் அ
- பெயரெச்ச விகுதி |
2 |
|
28 |
அ. ஈகை ஆ. சூறாவளி |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18) பிரிவு-1 2X3=6
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
|
29 |
1.
உயிராய்
நான்
; மழையாய் நான் 2.
நானின்றி பூமியே சுழலாது 3.
பூமித்தாயின்
குருதி நான். |
3 |
|
30 |
இடம்: இத்தொடர் ம.பொ.சி அவர்களின் சிற்றகல் ஒளி எனும் கட்டுரையில் இடம் பெற்றுள்ளது. பொருள்: எங்கள் தலையை கொடுத்தாவது
தலைநகரைக் காப்பாற்றுவோம். விளக்கம்: ஆந்திர மாநிலம் பிரியும்போது, சமயத்தில், செங்கல்வராயன்தலைமையில் கூட்டப்பட்ட
கூட்டத்தில் ம.பொ.சி அவர்கள் ”தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக்
காப்போம்” என்று முழங்கினார். |
3 |
|
31 |
அ. பிற
இனத்தாரின் பண்பாடு, நாகரிகம், பழக்கவழக்கம் ஆ. தேசிய
உணர்வு ஊட்டுவதற்கும், ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கும் இ. மொழிபெயர்ப்பு |
3 |
பிரிவு-2
2X3=6
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
|
32 |
ü காலில் அணிந்த கிண்கிணிகளோடு
சிலம்புகள் ஆடட்டும். ü அரைஞாண் மணியோடு அரைவடங்கள்
ஆடட்டும். ü தொந்தியுடன் சிறுவயிறும்
ஆடட்டும். ü நெற்றிச்சுட்டி,குண்டலங்கள் ஆக்யவையும்
ஆடட்டும். ü முருகப்பெருமானே செங்கீரை
ஆடுக |
3 |
|
33 |
# வாசவர்- நறுமணப் பொருட்களை விற்பவர்கள் # # உமணர் – உப்பு
விற்பவர் |
3 |
|
34 |
|
3 |
பிரிவு-3
2X3=6
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||||||||||||||||||||||||||
|
35 |
ü
இக்குறளில் உவமை அணி பயின்று வந்துள்ளது உவமை அணி: ஒரு பொருளை அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது உவமையணியாகும்.
இதில் உவமை, உவமேயம், உவம
உருபு ஆகியன இடம்பெறும். உவம உருபு வெளிப்படையாக வரும். அணிப்பொருத்தம்: v உவமை – வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்பவன். v உவமேயம் – செங்கோல் தாங்கி அதிகாரத்தால் வரிவிதிக்கும் மன்னன் v உவம உருபு
– போலும்
இவ்வாறு உவமை, உவமேயம், உவம உருபு மூன்றும் வெளிப்பட்டு வந்தமையால் உவமையணி ஆயிற்று. |
3 |
||||||||||||||||||||||||
|
36 |
ü அகவலோசை பெற்று,ஈரசைச்சீர் மிகுந்து
வரும். ü ஆசிரியத்தளை மிகுதியாகவும்,பிற தளைகள் குறைவாகவும்
வரும். ü மூன்றடி முதல் எழுதுபவர்
மனநிலைக்கேற்ப அமைந்து,ஏகாரத்தில் முடியும் |
3 |
||||||||||||||||||||||||
|
37 |
|
3 |
||||||||||||||||||||||||
பகுதி-4 5X5=25
|
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி |
||||||||||||||
|
38
அ |
ü கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” என்ற பழமொழிக்கு மிகவும் தகுதி வாய்ந்தவர்
கம்பர். ü சந்தத்திற்கு ஏற்ற சொற்களைத் தேவையான இடத்தில்
பயன்படுத்தியுள்ளார். ü பாலகாண்டத்தில் அயோத்தி நகரத்தை வர்ணிக்கும்போதும், நடை அழகை வர்ணிக்கும் போதும் அவர்
பயன்படுத்தியுள்ள சொற்கள் அக்காட்சிகளை நம் கண்முன் காண வைக்கிறது. ü இதன்மூலம் கம்பர் கலை மேடையை நமக்குச் சந்தத்தில் செய்யுளில்
வடித்துக் காட்டியுள்ளதை அறியலாம் (அல்லது) ஆ) ü தொழில் செய்வதற்குத்
தேவையான கருவி,
அதற்கு
ஏற்ற காலம்,
செயலின்
தன்மை,
செய்யும்
முறைஆகியவற்றைஅறிந்து அரிய செயலைச் செய்பவரே அமைச்சர் ஆவார். ü மனவலிமை, குடிகளைக்காத்தல், ஆட்சி முறைகளைக்கற்றல் , நூல்களைக்கற்றல், விடாமுயற்சி ஆகிய
ஐந்தும் சிறப்பாக அமைந்தவரேஅமைச்சராவார். |
5 |
||||||||||||
|
39 அ. |
காந்தி தெரு. 10.06.2025 அன்புள்ள நண்பன் அமுதனுக்கு, வணக்கம். நான் நலமாக
இருக்கின்றேன். நீ நலமாக இருக்கின்றாயா? இல்லத்தில்
அனைவரும் நலமாக உள்ளார்களா என்பதை அறிய ஆவலுடன் உள்ளேன். உன்னிடம் இருக்கின்ற
கலைத் திறமைகளை உடனிருந்து நான் பார்த்திருக்கின்றேன். பல போட்டிகளில்
கலந்துகொண்டு நீ பரிசுகளைப் பெற்றுள்ளாய். கடந்த வாரம் நடைபெற்ற கலைத்திருவிழாவில் கலந்துகொண்டு நமது பாரம்பரிய கிராமிய நடனமான மயிலாட்டத்தை ஆடி.அதில் முதலிடமும் பெற்றுள்ளதை எண்ணி ,அனைவருமே பெருமையும் ஊக்கமும் அடைகிறோம். இதைப்போல, வரக்கூடிய பல போட்டிகளிலும் கலந்துகொண்டு இன்னும் பல பரிசுகளைப் பெற
உளமார வாழ்த்துகின்றேன். கோடை விடுமுறையில் நமது கிராமத்தில் சந்திப்போம். இப்படிக்கு. உன் அன்புள்ள
நண்பன், உறைமேல்
முகவரி பெறுநர் ஆ. தமிழ்ச்செல்வன். 30,அன்னை இல்லம். கபிலர் தெரு. கோயமுத்தூர் 641
0014 ஆ) மின்வாரிய
அலுவலருக்குக் கடிதம் அனுப்புநர் ப.இளமுகில், 6,காமராசர் தெரு, வளர்புரம், அரக்கோணம்-631003 பெறுநர் உதவிப்பொறியாளர் அவர்கள், மின்வாரிய அலுவலகம், அரக்கோணம்-631001 ஐயா, பொருள்: மின்விளக்குகளைப் பழுது நீக்க வேண்டுதல் சார்பாக. வணக்கம். எங்கள் பகுதியில் ஏறத்தாழ 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன.எங்கள் தெருவில் உள்ள மின்விளக்குகள் பழுதடைந்து இரவு நேரங்களில் இருள் மிகுந்துள்ளது.எனவே பழுதடைந்த மின்விளக்குகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன். |
5 |
||||||||||||
|
40 |
காட்சிக்குப்
பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
5 |
||||||||||||
|
41 |
படிவத்தை உரிய விவரங்களுடன் சரியாக நிரப்பியிருப்பின்
மதிப்பெண் வழங்குக |
5 |
||||||||||||
|
42 |
அ.
அ. மரியாதைக்குரியவர்களே.என் பெயர்
இளங்கோவன்.நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். நான் தமிழ் பண்பாட்டைப் பற்றி சில வார்த்தைகளை கூற விளைகிறேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பண்பாட்டிலும்,நாகரிகத்திலும்
சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்கள் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தனர்.
தமிழர்களின் பண்பாடு இந்தியா,ஸ்ரீ லங்கா,
மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் உலகமெங்கும் உள்ள தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தில் வேரூன்றி
உள்ளது. நம் பண்பாடு பழமையானதாக இருந்தாலும் அது சீரான முறையில்
மேம்படுத்தி உள்ளது. நாம் நம் பண்பாட்டைப் பற்றி பெருமிதம்
கொள்ள வேண்டும். எல்லோருக்கும் நன்றி. |
5 |
||||||||||||
பகுதி-5 3X8=24
|
எல்லா
வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
|
43 |
அ. நாட்டுவளமும்
சொல்வளமும் முன்னுரை: 'நாடும் மொழியும் நமதிரு கண்கள்' என்கிறார் மகாகவி
பாரதியார். காலவெள்ளத்தில் கரைந்துபோன மொழிகளுக்கிடையில் நீந்தித் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது தமிழ், என்ன
வளம் இல்லை என்று எண்ணி வியக்கத்தக்கவாறு பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்டு
இலங்குகிறது நம் செந்தமிழ் மொழி. அனைத்து வளமும் உண்டென்று. விடை பகர்கிறது,
தமிழ்ச்சொல்வளம். தேவநேயப்பாவாணர்: தமிழ் மொழியின் பழமையும்
செம்மையையும் ஆய்ந்த அறிஞர்களுள் மொழிஞாயிறு குறிப்பிடத் தக்கவராவார். தமிழ்ச்
சொல்வளம் பற்றிய அவரது கருத்துகளும் விளக்கங்களும் தமிழ் மொழி மீதான பெருமிதத்தை
மிகுதிப்படுத்துகின்றன. ஒரு நாட்டின் வளமும், அங்கு வழங்கும் சொற்களின் வளமும் தொடர்புடையன என்கிறார் மொழி ஞாயிறு
தேவநேய பாவாணர். நாட்டு வளம் சொல்வளத்தை உருவாக்குகிறது. சொல்வளம் நாட்டு வளத்தைப் பெருக்குகிறது. சொல்வளத்திற்கான
சில சான்றுகள்: ü ஆங்கிலத்தில்
இலையைக் குறிக்க “LEAF” என்ற ஒரே
வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தமிழிலோ
இலையின் வன்மை, மென்மையைக் கருத்தில்
கொண்டு தாள், ஓலை தோகை ,இலை என பலவகைப் பெயர்களாக
அழைக்கப்படுகின்றன. ü விளை பொருட்களின்
மிகுதியாலும் சொல்வளம் பெருகுகிறது என்கிறார் மொழிஞாயிறு. ü பயிர்களின்
அடிப்பகுதி, கிளைப் பகுதி, காய், கனி, தோல், மணி, இளம் பயிர்
முதலானவற்றை குறிப்பதற்கு எண்ணற்ற தமிழ் சொற்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. ü செந்நெல், வெண்ணெல், கார்நெல், சம்பா, மட்டை என
எண்ணற்ற நெல் வகைகளும் அவற்றின் உள் வகைகளும் தமிழ்நாட்டில் விளைகின்றன. இவை நாட்டின்
வேறு எந்த பகுதியிலும் விளையாதது குறிப்பிடத்தக்கது. ü தமிழ்நாட்டைத்
தவிர வேறு எங்கும் விளையாத சிறுதானியங்கள் தமிழ்நாட்டின் சொல் வளம் பெருகி இருப்பதற்கு
மிகச் சிறந்த சான்றுகள் ஆகும் முடிவுரை: சொல்வளம் நிறைந்த மொழியானது
அது பயன்படுத்தப்படும் நாட்டின் பலத்தையும் நாகரீகத்தையும் உணர்த்துவதுடன்
பொருளை கூர்ந்து நோக்கி நுண் பாகுபாடு செய்யும் மக்களின் மதிநுட்பத்தையும்
உணர்த்துகிறது எனவே நாட்டு வளமும் சொல் வளமும் தொடர்புடையது என்பதை இதன் வழி
அறியலாம் ஆ) முன்னுரை: கலைஞர் பகுத்தறிவுக் கொள்கை பரப்பும்
சிந்தனையாளர். பேச்சாளர், எழுத்தாளர்
எனப் பன்முக ஆற்றல் கொண்டவர்.
"முத்தமிழ் அறிஞர்" "சமூகநீதி காவலர்"
என்றெல்லாம் மக்களால் போற்றப்பட்டவர் கலைஞர் கருணாநிதி ஆவார். இவருடைய
பன்முத்திறமைகளைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். போராட்டக்
கலைஞர் தன் பதினான்காம் வயதில்,
பள்ளி முடிந்த மாலைவேளைகளில் தாம் எழுதிய, "வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம்!" என்று தொடங்கும்
பாடலை முழங்கியபடி இந்தித் திணிப்பை எதிர்த்துப் போரட்ட மாணவர்களைத் திரட்டித்
திருவாரூர் வீதிகளில் ஊர்வலகம் சென்றார். அந்தப் போராட்டப் பணிபே அவருக்குள்
இருந்த கலைத்தன்மையை வளர்த்தது. பேச்சுக்
கலைஞர்: v மேடைப்பேச்சினில்
பெருவிருப்பம் கொண்ட கலைஞர்,
"நட்பு"
என்னும் தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு பலராலும் பாராட்டப்பட்டது. v பள்ளிப்
பருவத்திலேயே மாணவர்களுக்கு பேச்சு மற்றும் ஒற்றுமை உணர்வை வளர்க்க
"சிறுவர் சீர்த்திருத்தச் சங்கம்" மற்றும் "தமிழ்நாடு தமிழ்
மாணவர் மன்றம்" ஆகிய அமைப்புகளைத் தொடங்கினார். நாடகக்
கலைஞர்: v தமக்கே உரிய தனிநடையால்
தமிழரை மேடை நாடகங்களின் பக்கம் சந்திதார். அவர் எழுதிய முதல் நாடகமான பழநியப்பன்
மற்றும் அதனைத் தொடர்ந்து சாம்ராட் அசோகன், மணிமகுடம், வெள்ளிக்கிழமை, காகிதப்பூ உட்பட
பல நாடகங்களை எழுதினார். திரைக்
கலைஞர் v கலைஞரின் திறமையை
நன்குணர்ந்த இயக்குனர் ஏ எஸ் ஏ சாமி மக்கள் திலகம் எம்ஜிஆர் முதன்முதலாக நடித்த ”ராஜகுமாரி” படத்திற்கான
முழு வசனத்தையும் கலைஞரை எழுதச் செய்தார் v சிவாஜி கணேசன் நடித்த முதல் படமான பராசக்தி
படத்திற்கும் திரும்பிப்பார், மனோகரா, ராஜா ராணி
முதலிய படத்திற்கும் கலைஞர் கதை வசனம் எழுதினார் இயற்றமிழ்க்
கலைஞர் தமிழ் மீது திராத பற்றுகொண்ட
கலைஞர் நளாயினி, சித்தார்த்தன் சிலை, சந்தனக் கிண்ணம், தாய்மை, புகழேந்தி,
அணில் குஞ்சு உள்ளிட்ட பல சிறுகதைகளை எழுதினார். ரோமாபுரிப்
பாண்டியன், பொன்னர் சங்கர், தென்பாண்டிச்
சிங்கம், ஒரே ரத்தம் உள்ளிட்ட புதினங்களையும் கலைஞர்
எழுதியுள்ளார். முடிவுரை உடல் மண்ணுக்கு உயிர்
தமிழுக்கு" என்று வாழ்ந்தவர் கலைஞர் மு.கருணாநிதி ஆவார். தமிழின்
பெருமைகளையும் சிறப்புகளையும் மீட்டெடுக்க எண்ணியவர் கலைஞர், அதற்கான பணிகளைத் தம் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து, தமிழர் நெஞ்சில் என்றும் நிலைத்து நிற்கும் காவியமானவர். |
8 |
|
44 அ |
அ) பிரும்மம் முன்னுரை: இயற்கையோடு இணைந்து வாழ்வதும் இயற்கையைப்
பயனுள்ளதாக மாற்றுவதும் அழகியல் ஆகும். குடும்ப உறுப்பினர்கள் இணைந்து நட்டு
வைத்த மரமொன்று அவர்களின் வாழ்வியலில் எப்படி பின்னிப் பிணைந்துவிட்டது என்பதைப்
பிரபஞ்சனின் 'பிரும்மம்' என்ற சிறுகதை அழகாகக்
காட்சிப்படுத்துகிறது. புதிதாகக்
கட்டிய வீடு: இச்சிறுகதையில் வரும் குடும்பத்தினர் புதிதாக
வீடு ஒன்றைக் கட்டினர். அந்த வீட்டிற்கு முன்னால் வெறுமனே கிடந்த சிறிய இடத்தைப்
பயனுள்ள வகையில் பயன்படுத்த குடும்பஉறுப்பினர்கள் அனைவரும் முடிவு செய்தனர்.
அதற்காக ஒவ்வொருவரும்,
என்ன செய்யலாம்? என்று தங்களது எண்ணங்களைத் தெரிவித்தனர். குடும்ப
உறுப்பினர்களின் விருப்பம்: v குடும்பத்தின் பெரியவரான
பாட்டி பசுவின் மீது தீராத அன்பு கொண்டவர் . பசுவினால் குடும்பத்திற்கு ஏற்படும்
நன்மைகளைக் கூறி அவ்விடத்தில் பசு வாங்கி வளர்க்கலாம் என்றார். v குடும்பத்தின்
அம்மா பாட்டியின் கருத்தை ஏற்க மறுத்து, ”வெண்டை, கத்தரி, தக்காளி
போன்றவற்றை வளர்த்தால் கறிக்கு உதவும்” என்று கூறி தனது விருப்பத்தைத்
தெரிவித்தார். v அக்குடும்பத்தில்
இருந்த தங்கை சௌந்தரா பூக்களிடம் விருப்பம் கொண்டவளாக இருந்தாள். பல்வேறு வகையான
பூக்களை வளர்க்கலாம் என்றாள். அழகை ரசிக்கத் தெரிய வேண்டும் என்றாள். இது
சௌந்தராவிடம் இருந்த இயற்கையை ரசிக்கும் பண்பை உணர்த்துகிறது. அப்பாவின்
முடிவு: அனைவரும் தங்களது கருத்துக்களை தெரிவிக்க, குடும்பத்தின்
தலைவரான அப்பா ,காலியாக்க் கிடக்கும் அந்த இடத்தில்
முருங்கையை நட்டு வளர்க்கலாம் என்று
சொன்னார். ஏனெனில் முருங்கை வீட்டுக்கு எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாது. மேலும்
மிகுந்த மருத்துவ குணங்களை உடையது. என்று கூறி, இரண்டு
நாட்கள் கழித்து தனது நண்பர் வீட்டிலிருந்து முருங்கைக் கிளை ஒன்றைக் கொண்டு
வந்து அவர் நட்டார். முருங்கை
வீட்டின் அங்கமானது: v நாளுக்கு நாள் முருங்கையின்
வளர்ச்சியை கண்டு மிகவும் ரசித்தன குடும்பத்தினர் அது படிப்படியாக கிளை, இலை, காய்
போன்றவற்றைத் தந்த போது அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். v முருங்கைக்
காய்க்கும் கீரைக்கும் ஆசைப்பட்டு அண்டை வீட்டு உறவுகள் அடிக்கடி இவர்களது
வீட்டிற்கு வர தொடங்கினர். மேலும் காக்கை
குருவிகளுக்கு இந்த முருங்கை மரம் இல்லமாயிற்று. முருங்கை அவர்களின்
வீட்டின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. மீண்டெழுந்த
முருங்கை: ஒரு நாள் காற்று பலமாக வீசியதால் முருங்கை
அடியோடு விழுந்தது. இதனால் குடும்பத்தினர் சொல்ல முடியாத துயரத்தை அடைந்தனர்.
சில நாட்களுக்குப் பிறகு விழுந்து கிடந்த மரக்கிளையில் இருந்து முருங்கை
துளிர்விடத் தொடங்கியது. அது குடும்பத்தினருக்கு பெரு மகிழ்ச்சி அளித்தது. முடிவுரை: முருங்கை என்பது வெறும் மரமாக குடும்பத்தார்
இல்லை உணர்வில் கலந்த உயிராகவே அமைகிறது பல உயிர்கள் வாழும் வீடாகவும்
திகழ்ந்தது பிரம்மம் பெற உயிர்களை தன் உயிர் போல் நேசிக்கும் பண்பினை
விவரிக்கிறது என்றால் அது மிகையல்ல. ஆ) சாதனைப்பெண்கள் முன்னுரை: எங்கள் ஊரில் பல்வேறு
வகையான தொழில்களில் கடின உழைப்புடன் ஈடுபட்டு வாழ்வை முன்னெடுத்துச் செல்கிற
பெண்கள் பலர் உள்ளனர். அவர்கள் மட்டும் இல்லாமல், குடும்பத்தையும் சமூகத்தையும்
முன்னேற்றுகிறார்கள். இங்கு அவர்களில் சிலரைப் பற்றி பார்க்கலாம். பூ விற்கும் சின்னம்மாள்: சின்னம்மாள் அம்மா, இருபது வருடங்களாக
விடியலிலிருந்து வீதிகளில் பூவிற்று வருகின்றார். சாயங்காலம் வரை பூக்கூடை
தலையில் வைத்துக்கொண்டு வீதியெல்லாம் நடந்து, வீடு
வீடாகச் சென்று பூவிற்று வருகிறார். இவரது கடின உழைப்பு, நேர்த்தியான பணியாற்றும் தன்மை, நம்மை
விழிக்க வைக்கும் ஒரு சிறப்பு உதாரணமாகத் திகழ்கிறது.
இரண்டு மகள்களை கல்வியாளர்களாக மாற்றியிருக்கிறார் என்ற பெருமை
அவருக்கிருக்கிறது. சாலையோர உணவகம்
நடத்தும் காளியம்மாள்: காளியம்மாள் தனது கணவரை
இழந்த பின்னும் தளராமல், தனது
மூன்று பிள்ளைகளை வளர்க்கச் சாலையோரத்தில் சிறிய உணவகம் நடத்தத் தொடங்கினார்.
இப்போது அவர் உணவகம் பகல் முழுவதும் வியாபாரம் செய்யும் அளவுக்கு பரவலாகப் பெயர்
பெற்றுள்ளது. சைவ உணவுகளின் சுவையும் சுத்தமும் மக்களிடையே நல்ல மதிப்பை
பெற்றுள்ளது. அவரின் உழைப்பும் மன உறுதியும், தன்னம்பிக்கையும், ஊக்கமளிக்கக் கூடியவை. முடிவுரை: சின்னம்மாள் மற்றும் காளியம்மாள்
போன்ற பெண்கள் தான் சமூகத்தின் அடித்தளத்தை நிலை நிறுத்தும் தூண்கள். இவர்கள்
போன்றவர்களை நாம் மட்டும் அல்ல, ஒவ்வொருவரும் போற்ற
வேண்டியது அவசியம். அவர்களின் வாழ்க்கைப் பயணம் மற்ற
பெண்களுக்கு வழிகாட்டியாக அமையும். |
8 |
|
45 |
அ) தலைப்பு
: புத்தகக் கண்காட்சிக்குச் சென்றுவந்த நிகழ்வு முன்னுரை
: “நூல் என்பது அறிவின் தீபம்”
என்று கூறுவர். மனிதனின் அறிவையும் சிந்தனையையும் வளர்க்கும்
சிறந்த தோழன் புத்தகம் ஆகும். அத்தகைய புத்தகங்களை ஒரே இடத்தில் காணவும்,
தேர்ந்தெடுக்கவும் வழிவகுக்கும் நிகழ்ச்சி புத்தகக் கண்காட்சி.
சமீபத்தில் எங்கள் பகுதியில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கு நான் சென்று வந்த
அனுபவம் மறக்கமுடியாததாக அமைந்தது. புத்தகக்
கண்காட்சி : புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும்
நோக்கில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. இக்கண்காட்சியில்
பல்வேறு பதிப்பகங்கள் கலந்து கொண்டு தங்களின் சிறந்த நூல்களை வெளியிடுகின்றன.
மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்கும் அறிவுத்
திருவிழா இதுவாகும். நடைபெற்ற
இடம் : எங்கள் நகர மத்தியப்
பொதுமைதானத்தில் விரிவாக இக்கண்காட்சி நடத்தப்பட்டது. போக்குவரத்து வசதியும்,
பரந்த நிறுத்துமிட வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனால்
மக்கள் எளிதில் வந்து செல்ல முடிந்தது. அரங்குகள்
அமைப்பு முறை : கண்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் ஒழுங்காக
வரிசைப்படுத்தப் பட்டிருந்தன. தமிழ், ஆங்கிலம், அறிவியல், வரலாறு, இலக்கியம்,
குழந்தைகள் நூல்கள், போட்டித் தேர்வு
வழிகாட்டி நூல்கள் என பிரிவுகளாக அமைத்திருந்தனர். ஒவ்வொரு அரங்கிலும்
புத்தகங்கள் தலைப்பின்படி சீராக அடுக்கப்பட்டிருந்தது. சிற்றரங்கம்
: முக்கிய அரங்குகளுக்கு
அடுத்தபடியாக சிற்றரங்கமும் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு புதிய எழுத்தாளர்களின்
நூல்கள், சிறுவர் கதைகள், கவிதைத்
தொகுப்புகள், உள்ளூர் வரலாற்று நூல்கள் போன்றவை
வைக்கப்பட்டிருந்தன. வாசகர்கள் எழுத்தாளர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பும்
இருந்தது. அறிந்து
கொண்ட நூல்கள்
: நான் பல பயனுள்ள நூல்களை அறிந்து கொண்டேன். குறிப்பாக தமிழ் இலக்கிய
நூல்கள், வாழ்க்கை வரலாறு நூல்கள், அறிவியல்
கண்டுபிடிப்புகள் குறித்த புத்தகங்கள் என பலவற்றை பார்வையிட்டேன். மாணவர்களுக்கு
உதவும் போட்டித் தேர்வு நூல்களும் மிகுந்த பயன் அளிப்பதாக இருந்தது. நடைபெற்ற
சிறப்பு நிகழ்வுகள் : கண்காட்சி நாட்களில் பல சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன. எழுத்தாளர்
சந்திப்பு, கவியரங்கம், சொற்பொழிவு,
புத்தக வெளியீட்டு விழா, குழந்தைகளுக்கான
கதைப்போட்டி போன்றவை நடத்தப்பட்டன. இந்நிகழ்வுகள் வாசிப்பு ஆர்வத்தை மேலும்
தூண்டின. புத்தகக்
கண்காட்சியின் பயன்கள் : ·
புத்தகக்
கண்காட்சி பல நன்மைகளை அளிக்கிறது. ·
வாசிப்பு
பழக்கம் வளர்கிறது. ·
புதிய
நூல்கள் அறிமுகமாகின்றன. ·
மாணவர்களின்
அறிவு விரிவடைகிறது. ·
எழுத்தாளர்கள்
ஊக்கமடைகிறார்கள். ·
சமுதாயத்தில்
கல்வி விழிப்புணர்வு உயரும். முடிவுரை
: மொத்தத்தில் புத்தகக் கண்காட்சி எனக்கு அறிவுப் பொக்கிஷமாக அமைந்தது.
நல்ல நூல்களை தேர்ந்தெடுத்து வாசிக்கும் பழக்கம் வளர வேண்டும் என்பதை இந்நிகழ்வு
உணர்த்தியது. “நூல் வாசிப்போம் – அறிவு
வளர்ப்போம்” என்ற எண்ணத்துடன் நான் கண்காட்சியில் இருந்து
மகிழ்ச்சியுடன் திரும்பினேன். ஆ) முன்னுரை: மனித வாழ்வின் அடிப்படையாக
விளங்குவது சுற்றுச்சூழலாகும். காற்று, நீர், நிலம் ஆகியவை மனிதனின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துகின்றன. ஆனால்
அறிவியல் வளர்ச்சி, தொழில் மயமாக்கல், நகரமயமாக்கல் போன்ற காரணங்களால் இன்று சுற்றுச்சூழல் கடுமையாக மாசடைந்து
வருகிறது. இதனால் மனித உடல்நலம் மட்டுமன்றி, இயற்கையின்
சமநிலையும் பாதிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல்: மனிதனைச் சுற்றி
அமைந்துள்ள இயற்கை கூறுகளான காற்று, நீர், நிலம், தாவரங்கள், விலங்குகள்
ஆகிய அனைத்தையும் இணைத்ததே சுற்றுச்சூழல் ஆகும். இவை அனைத்தும் ஒன்றோடொன்று
சார்ந்து இயங்கி, உயிர்களின் வாழ்வை பாதுகாக்கின்றன.
சுற்றுச்சூழல் சுத்தமாகவும் சமநிலையுடனும் இருந்தால்தான் மனித வாழ்க்கை நலமாக
அமையும். மாசுக்கட்டுப்பாடு: மாசு என்பது இயற்கையின்
தூய்மையை கெடுக்கும் தீங்கான பொருட்களின் கலப்பாகும். இதனை கட்டுப்படுத்துவது
மனிதனின் முக்கியக் கடமையாகும். அரசின் சட்டங்கள், மக்கள்
விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள்
ஆகியவை மாசுக்கட்டுப்பாட்டில் முக்கிய பங்காற்றுகின்றன. நீர் மாசு: தொழிற்சாலைகளின் கழிவுநீர்,
வீட்டு கழிவுகள், ரசாயன உரங்கள் ஆகியவை
ஆறுகள், குளங்கள், ஏரிகளில்
கலப்பதால் நீர் மாசு ஏற்படுகிறது. மாசடைந்த நீரைப் பயன்படுத்துவதால் குடல்
நோய்கள், தோல் நோய்கள் போன்ற பல நோய்கள் பரவுகின்றன. நிலமாசு: பிளாஸ்டிக் கழிவுகள்,
தொழிற்சாலை கழிவுகள், அதிகப்படியான இரசாயன
உரங்கள் ஆகியவை நிலமாசிற்கு காரணமாகின்றன. இதனால் மண்ணின் வளம் குறைந்து,
விவசாய உற்பத்தி பாதிக்கப்படுகிறது. காற்று மாசு: வாகன புகை, தொழிற்சாலை புகை, மரம் வெட்டுதல் போன்ற செயல்களால்
காற்று மாசு ஏற்படுகிறது. இதனால் மூச்சுத் திணறல், நுரையீரல்
நோய்கள் போன்ற சுவாசக் கோளாறுகள் அதிகரிக்கின்றன. தீமைகள்: சுற்றுச்சூழல் மாசால் மனித
உடல்நலம் பாதிக்கப்படுகிறது. உலக வெப்பமயமாதல், காலநிலை
மாற்றம், இயற்கை பேரழிவுகள் போன்றவை அதிகரிக்கின்றன.
உயிரினங்கள் அழிவின் விளிம்பிற்கு தள்ளப்படுகின்றன. நீக்கும் முறைகள்: மரக்கன்றுகள் நடுதல்,
பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தல், கழிவுகளை
முறையாக நிர்வகித்தல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை
பயன்படுத்துதல் போன்ற வழிமுறைகள் மூலம் மாசை குறைக்கலாம். மேலும் சுற்றுச்சூழல்
கல்வி மற்றும் விழிப்புணர்வு மிக அவசியமாகும். முடிவுரை: சுற்றுச்சூழல்
பாதுகாப்பு என்பது அரசின் பொறுப்பு மட்டுமல்ல, ஒவ்வொரு
மனிதனின் கடமையும் ஆகும். இயற்கையை காப்பாற்றினால் தான் மனித வாழ்க்கை
பாதுகாப்பாக இருக்கும். ஆகவே அனைவரும் ஒன்றிணைந்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க
முன்வர வேண்டும். |
8 |
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி