THIRD REVISION EXAM 10 TH STD TAMIL QUESTION PAPER & ANSWER KEY RANIPET DISTRICT

 

வினாத்தாளைப் பதிவிறக்க

(இராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகப்பட்டிணம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஒரே வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளதால் இதே விடைக்குறிப்பைப் பயன்படுத்தலாம்)

மூன்றாம் திருப்புதல் தேர்வு-2026 இராணிப்பேட்டை மாவட்டம்

10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்

                                                                பகுதி-1                                                     15X1=15

வி.எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

இ. எம்+தமிழ்+நா

1

2.     

. மணிப்பெயர்

1

3.     

அ. பண்புத்தொகை

1

4.     

இ. வலிமையை நிலைநாட்டல்

1

5.     

ஆ. கிண்கிணி

1

6.     

அ. ஒரு சிறு இசை

1

7.     

ஈ. வாகைப்பூ

1

8.     

. காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

1

9.     

அ. அகவற்பா

1

10.   

இ. குறிஞ்சி, மருதம்,நெய்தல் நிலங்கள்

1

11.    

இ. பழநியப்பன்

1

12.   

அ. முத்தொள்ளாயிரம்

1

13.   

இ. வினைத்தொகை

1

14.   

. நாள் வாழ்க

1

15.   

. கொல்யானை, நல்யானை

1

                                     பகுதி-2                            பிரிவு-1                                                      4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

16

வாருங்கள், நலமா?, நீர் அருந்துங்கள்

2

17

அவையம்=மன்றம் அல்லது சபை. வழக்கை விசாரித்து தீர்ப்பு கூறும் நீதின்மன்றம்.

2

18

அ. இளங்கோவடிகள் எம்மரபைச் சார்ந்தவர்? ஆ. எக்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம்?

2

19

நூல் வாங்குவதற்குப் போதிய பணம் இல்லாத வறுமை நிலையிலும் நூல்களையே வாங்குபவர் ம.பொ.சி.

2

20

v  மொழிபெயர்ப்பால் புதிய சொற்கள் உருவாகி மொழிவளம் பெருகும்.

v  பிற இனத்தாரின் கலை, பண்பாடு, நாகரிகத்தை அறியலாம்.

2

21

பல்லார்  பகைகொளலின் பத்தடுத்த  தீமைத்தே

நல்லார் தொடர்கை விடல்.

2

                                                                    பிரிவு-2                                                    5X2=10

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

22

வெட்சி-கரந்தை , வஞ்சி-காஞ்சி , நொச்சி-உழிஞை

2

23

. பெருங்காற்று(அ) வன்புயல்  . உரையாடல்

2

24

அ. உள்ளளவும் நினை  ஆ. மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

2

25

ü  பல கை என்று வந்தபோது கையைக் குறித்தது.

ü  பலகை என்று வந்தபோது மரப்பலகையைக் குறித்தது.

ü  தனித்தும், தொடர்ந்தும் வெவ்வேறு பொருளைக் குறித்ததால் பொதுமொழி ஆனது.

2

26

. கொடுப்பதற்குக் கோடு இடக்கூடாது     . செயற்கையை விட இயற்கையே சிறந்தது

2

27

   அ. நான்கு,இரண்டு - ’ ,  ஆ. எட்டு-அ

2

28

அமர்+த்(ந்)+த்+ஆன்

அமர்-பகுதி

 த்-சந்தி

ந்-விகாரம்

த்-இறந்தகால இடைநிலை

ஆன் - ஆண்பால் விகுதி

2

பகுதி-3  (மதிப்பெண்கள்:18)                        பிரிவு-1                                           2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

29

·        தமிழர் பண்பாட்டில் முக்கியமானது வாழையிலை விருந்து

·        அது தமிழர் மரபாகக் கருதப்படும்

·        வழை இலையில் உண்பது மருத்துவப் பயன் உடையது          

·        அதில் வைக்கப்படும் உணவுகளுக்கேற்ப இடம் வலமாகப் பயன்படுத்துவர்.

3

30

ü  தொலைக்காட்சி வானொலி திரைப்படம் இதழ்கள் போன்ற ஊடகங்களின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு பெரிதும் உதவுகிறது.

ü  வணிக விளம்பரங்களை பல்வேறு மொழி பேசும் மக்களிடையே கொண்டு செல்ல மொழிபெயர்ப்பு உதவுகிறது.

ü  புதுவகையான சிந்தனைகள் மொழிக் கூறுகள் உருவாக மொழிபெயர்ப்பு உதவி செய்கிறது.

3

31

. தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது

ஆ. வீரமற்றோர். புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது

இ. பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர்

3

                                                                       பிரிவு-2                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

32

ü  அழகான அன்னை மொழி

ü  பழமையான நறுங்கனி

ü  பாண்டியன் மகள்

ü  சிறந்த நூல்களை உடைய மொழி

ü  பழம்பெருமையும் தனிச்சிறப்பும் உடைய மொழி

3


33

·        விருந்தினராக ஒருவர் வந்தால், அவரை வியந்து உரைத்தல்

·        நல்ல சொற்களை இனிமையாகப் பேசுதல்

·        முகமலர்ச்சியுடன் அவரை நோக்குதல்

·        'வீட்டிற்குள் வருக' என்று வரவேற்றல்

·        அவர் எதிரில் நிற்றல்

·        அவர்முன் மனம் மகிழும்படி பேசுதல்

·        அவர் அருகிலேயே அமர்ந்துகொள்ளுதல்

·        அவர் விடைபெற்றுச் செல்லும்போது வாயில்வரை பின்தொடர்ந்து செல்லல்

·         அவரிடம் புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்புதல் ஆகிய ஒன்பதும் விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கமாகும்.

3


34

 

.

அள்ளல் பழனத்(து) அரக்காம்பல் வாயவிழ

வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப் புள்ளினம்தம்

கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ

நச்சிலைவேல் கோக்கோதை நாடு.

.

வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறைய

பொய்யோஎனும் இடையாளொடும் இளையானொடும் போனான்

மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ

ஐயோவிவன் வடிவென்பதோர் அழியாஅழ குடையான்.

3

                                                               பிரிவு-3                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

35

ü  அகவலோசை பெற்று,ஈரசைச்சீர் மிகுந்து வரும்.

ü  ஆசிரியத்தளை மிகுதியாகவும்,பிற தளைகள் குறைவாகவும் வரும்.

ü  மூன்றடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமைந்து,ஏகாரத்தில் முடியும்

3

36

சீர்

அசை

வாய்பாடு

இன்மையின்

நேர்+ நேர்+நேர்

தேமாங்காய்

இன்னா

நேர்+நேர்

தேமா

தியாதெனின்

நிரை+நிரை

கருவிளம்

இன்மையின்

நேர்+ நேர்+நேர்

தேமாங்காய்

இன்மையே

நேர்+ நேர்+நேர்

தேமாங்காய்

இன்னா

நேர்+நேர்

தேமா

தது

நிரை

மலர்

3

37

பாடநூலில் தரப்பட்ட 12 கருப்பொருள்களுள் எவையேனும் 5 ஐ சரியாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

3

                                                                பகுதி-4                                                       5X5=25

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

38

ü  குலேச பாண்டியன் இடைக்காடனாரின் பாடலைக் கேட்காமல் அவமதித்தான்.

ü  இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார்

ü  இறைவன் கடம்பவனத்தைவிட்டு வையையின் தென்கரையில் தங்கினார்.

ü  குலேச பாண்டியன் பதற்றத்துடன் இறைவனைக் காணச்சென்றார்.

ü  இறைவன் குலேச பாண்டியனின் தவறைச் சுட்டிக்காட்டினான்

ü  தன் தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தான்  (அல்லது)

)

ü  தொழில் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறைஆகியவற்றைஅறிந்து அரிய செயலைச் செய்பவரே அமைச்சர் ஆவார்.

ü  மனவலிமை, குடிகளைக்காத்தல், ஆட்சி முறைகளைக்கற்றல் , நூல்களைக்கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக அமைந்தவரேஅமைச்சராவார்.

5

39

.

பொது நூலகத்துறை இயக்குநருக்குக் கடிதம்

பூம்பாறை.

10.07.2025

அனுப்புநர்

செ.தமிழரசன்,

50, அன்னை இல்லம்,

காந்தி தெரு,

பூம்பாறை,

திண்டுக்கல் மாவட்டம் - 625 001.

பெறுநர்       

பொது நூலக இயக்குநர் அவர்கள்,

தமிழ்நாடு பொது நூலக இயக்குநரகம்,

சென்னை 600 002.

ஐயா,

பொருள்: நூலக வசதி வேண்டுதல் சார்பு.

வணக்கம். கற்றறிந்த சமுதாயத்தை உருவாக்கும் தங்கள் நூலகத்துறைக்கு எனது வாழ்த்துகள். எங்கள் கிராமத்தில் 1000 குடும்பங்களும் 2800 மக்களும் வசித்து வருகின்றனர். மேலும், எங்கள் கிராமத்தில் உயர்கல்வி முடித்து அரசு போட்டித் தேர்வுகளுக்குப் படிப்பவர்கள் நூற்றுக்கணக்கில் உள்ளனர். நாங்கள் தேர்விற்குப் படிப்பதற்காக இருப்பிடத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நூலகத்திற்கு நாள்தோறும் சென்று வருகின்றோம்.

எங்கள் கிராமத்தில் கிளை நூலகம் அமைத்தால் எங்கள் கிராம மக்களுக்கும் எங்களைப் போன்று தேர்வுகளுக்குப் படிப்பவர்களுக்கும் மிகுந்த பயனைத்தரும். எனவே, எங்கள் கிராமத்தில் கிளை நூலகம் அமைத்திட ஆவன செய்யுமாறு தங்களைப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள,

உறைமேல் முகவரி

பெறுநர்

பொது நூலக இயக்குநர் அவர்கள்,

தமிழ்நாடு பொது நூலக இயக்குநரகம்,

சென்னை 600 002.

செ.தமிழரசன்.

) நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம்

அனுப்புநர்

                        அ அ அ அ அ,

                        100,பாரதி தெரு,

                        சக்தி நகர்,

                        திருத்தணி .

பெறுநர்

            ஆசிரியர் அவர்கள்,

            தமிழ்ப்பொழில் நாளிதழ்,

            திருவள்ளூர்-1

ஐயா,

பொருள்: கட்டுரையை வெளியிட வேண்டுதல்சார்பு

            வணக்கம். நான்  தங்கள் நாளிதழில் பொங்கல் பண்டிக்கை முன்னிட்டு பொங்கல் மலரில்உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் “  எனும் தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளேன். தாங்கள் அந்த கட்டுரையையும் பொங்கல் மலரில் வெளியிட வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

இணைப்பு:                                                                                                                  இப்படிக்கு,

            1. கட்டுரை                                                                                                                                                     தங்கள் உண்மையுள்ள


5

40

காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

41

படிவத்தை உரிய விவரங்களுடன் சரியாக நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்குக

5

42

.

1. கல்வெட்டுகளின் வழி அறியலாகும் செய்திகளை அனைவருக்கும் கூறுதல்.

2. கல்வெட்டுகளின் மதிப்பை குறைக்கும்படி எதுவும் கூற, அனுமதிக்காமை.

3. கல்வெட்டுக்கள் குறித்துக்கூறி, அவர்களைப் பெருமிதம் அடையச் செய்தல்.

4. கல்வெட்டுக்கள் வரலாற்றை அறிய உதவும் முக்கிய ஆதாரம் என்பதை உணரச் செய்தல்

5. கல்வெட்டு மன்னர்களைப் பின்பற்றி நாட்டுப்பற்றை வளர்க்கலாம், என்பதை உணர்த்துதல்.

அ.

1. ஒருவரிடம் அவர் புரிந்து கொள்ளக் கூடிய ஏதாவது ஒரு மொழியில் பேசினால் அது அவருடைய மூளையை சென்றடைகிறது.அதுவே அவர் தாய் மொழியில் பேசினால் அது அவருடைய இதயத்தைச் சென்றடைகிறதுநெல்சன் மண்டேலா

2. மொழி என்பது கலாச்சாரத்தின் வழிகாட்டி, அதுவே அம்மொழி பேசும் மக்கள் எங்கிருந்து வந்தார்கள், எங்கே செல்கிறார்கள் என்பதை உணர்த்தும்ரீடா மேக் ப்ரெளன்

5

                                                                 பகுதி-5                                                       3X8=24

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க:

43

. தமிழர்களின் விருந்தோம்பல்

முன்னுரை:

            விருந்தோம்பலை இல்லற வாழ்வின் முக்கிய அங்கமாகவே கொண்டு வாழ்ந்தனர் சங்ககாலத் தமிழர்கள்.முன்பின் அறியாத முதியவர்களே விருந்தினர் என்று தொல்காப்பியர் கூறியதை தங்கள் வாழ்வில் பின்பற்றி வாழ்ந்தனர். சங்க கால தமிழர்களின் விரும்பபோல் பண்பிற்குச் சில சான்றுகளை இங்கே காண்போம்.

தனித்து உண்ணாமை:

தனித்து உண்ணாமை என்பது தமிழன் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை. அமிழ்தமே கிடைத்தாலும் பிறருக்குக் கொடுக்கும் நல்லோரால் தான் உலகம் நிலைத்திருக்கிறது என்று தமிழர்கள் எண்ணினர்.

விருந்தோம்பலுக்கு நேரம்,காலம் இல்லை:

            விருந்தோம்பல் என்பது தமிழரின் சிறந்த பண்புகள் ஒன்றாகக் கருதப்படுகிறது.நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு தமிழருக்கு உண்டு. இதனை

அல்லில் ஆயினும் விருந்து வரில் உவக்கும்” 

என்று நற்றிணை குறிப்பிடுகிறது.

வறுமையிலும் விருந்தோம்பல்:

ü  தமிழர் வறுமையிலும் ஏதேனும் ஒரு வழியில் விருந்தளித்தனர்.

ü  விதை நெல்லைக் குற்றியெடுத்து விருந்தளித்தனர்.

ü  வாளைப் பணையம் வைத்து விருந்தளித்தனர்.

ü  கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தனர்.

நிலத்திற்கேற்ற விருந்து:

நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்று குடல் மீன் கறியும் உணவு கொடுத்தனர் என்கிறது சிறுபாணாற்றுப்படை.

விருந்தை எதிர்கொள்ளும் தன்மை:

வீட்டில் பலரும் நுழையும் அளவிற்கு உள்ள பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன்னர் உணவு உண்ண வேண்டியவர்கள் யாரேனும் உள்ளீர்களா என்று கேட்கும் வழக்கம் இருந்ததை,

பலர் புகுவாயில் அடைப்பக் கடவுநர் உளீரோ?”

 என்ற குறுந்தொகைப் பாடல் புலப்படுத்துகிறது.

முடிவுரை:

பண்டைத் தமிழர் இல்லங்களிலும் உள்ளங்களிலும் விருந்தோம்பல் பண்பாடு செடித்திருந்தது காலம் தோறும் தமிழர்கள் அடையாளமாக விளங்கும் உயர் பண்பான விருந்தோம்பலை போற்றி பெருமிதம் கொள்வோம்.

) நாட்டுவளமும் சொல்வளமும்

முன்னுரை:

'நாடும் மொழியும் நமதிரு கண்கள்'

            என்கிறார் மகாகவி பாரதியார். காலவெள்ளத்தில் கரைந்துபோன மொழிகளுக்கிடையில் நீந்தித்  தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது தமிழ், என்ன வளம் இல்லை என்று எண்ணி வியக்கத்தக்கவாறு பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்டு இலங்குகிறது நம் செந்தமிழ் மொழி. அனைத்து வளமும் உண்டென்று. விடை பகர்கிறது, தமிழ்ச்சொல்வளம்.

தேவநேயப்பாவாணர்:

          தமிழ் மொழியின் பழமையும் செம்மையையும் ஆய்ந்த அறிஞர்களுள் மொழிஞாயிறு குறிப்பிடத் தக்கவராவார். தமிழ்ச் சொல்வளம் பற்றிய அவரது கருத்துகளும் விளக்கங்களும் தமிழ் மொழி மீதான பெருமிதத்தை மிகுதிப்படுத்துகின்றன.

            ஒரு நாட்டின் வளமும், அங்கு வழங்கும் சொற்களின் வளமும் தொடர்புடையன என்கிறார் மொழி ஞாயிறு தேவநேய பாவாணர். நாட்டு வளம் சொல்வளத்தை உருவாக்குகிறது. சொல்வளம் நாட்டு வளத்தைப் பெருக்குகிறது.

சொல்வளத்திற்கான சில சான்றுகள்:

ü  ஆங்கிலத்தில் இலையைக் குறிக்க “LEAF” என்ற ஒரே வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தமிழிலோ இலையின் வன்மை, மென்மையைக் கருத்தில் கொண்டு தாள், ஓலை தோகை ,இலை என பலவகைப் பெயர்களாக அழைக்கப்படுகின்றன.

ü  விளை பொருட்களின் மிகுதியாலும் சொல்வளம் பெருகுகிறது என்கிறார் மொழிஞாயிறு.

ü  பயிர்களின் அடிப்பகுதி, கிளைப் பகுதி, காய், கனி, தோல், மணி, இளம் பயிர் முதலானவற்றை குறிப்பதற்கு எண்ணற்ற தமிழ் சொற்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ü  செந்நெல், வெண்ணெல், கார்நெல், சம்பா, மட்டை என எண்ணற்ற நெல் வகைகளும் அவற்றின் உள் வகைகளும் தமிழ்நாட்டில் விளைகின்றன. இவை நாட்டின் வேறு எந்த பகுதியிலும் விளையாதது குறிப்பிடத்தக்கது.

ü  தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் விளையாத சிறுதானியங்கள் தமிழ்நாட்டின் சொல் வளம் பெருகி இருப்பதற்கு மிகச் சிறந்த சான்றுகள் ஆகும்

முடிவுரை:

       சொல்வளம் நிறைந்த மொழியானது அது பயன்படுத்தப்படும் நாட்டின் பலத்தையும் நாகரீகத்தையும் உணர்த்துவதுடன் பொருளை கூர்ந்து நோக்கி நுண் பாகுபாடு செய்யும் மக்களின் மதிநுட்பத்தையும் உணர்த்துகிறது எனவே நாட்டு வளமும் சொல் வளமும் தொடர்புடையது என்பதை இதன் வழி அறியலாம்

 இன்று ஏடு கற்போரே நாளை

        நாடு காப்போர் ஆதல்,

   இளமை அறிவோடு இயைபின்

        நடப்பதெல்லாம் நாட்டிற்கு நன்றேயாம்

ஆ. முன்னுரை:

              

    என்ற பாவேந்தரின் வாய்மொழிக்கேற்ப,எதிர்காலத்தில் நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும்  உரிய நற்பண்புகளை மாணவர்கள் இளமை முதலே பெற வேண்டும். இத்தகைய நற்பண்புகளைப் பெற்று மாணவர்கள் சிறந்துவிளங்க நாட்டுவிழாக்கள் துணைபுரிகின்றன. அதைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

நாட்டு விழாக்கள்:

        நமது நாட்டை எண்ணி பெருமை கொள்ள  எண்ணற்ற நாட்டு விழாக்கள் இருந்தாலும், விடுதலை நாள் விழாவும், குடியரசு நாள் விழாவும் அவை அனைத்திலும்  சிறந்தவையாகும். நமது நாட்டு மக்களை அடிமைப்படுத்தி ஆட்சிசெய்து வந்த ஆங்கிலேயர்கள் நமது நாட்டை விட்டுச்சென்ற நாள்  விடுதலைநாள் விழாவாக ஆகஸ்ட் 15ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

விடுதலைப் போராட்ட வரலாறு:

    பதினைந்தாம் நூற்றாண்டு காலகட்டத்தில் நமது நாட்டில் எண்ணற்ற சிற்றரசுகள் இருந்தன. அக்காலகட்டத்தில் நம்மிடையே இருந்த ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி,வணிகம் செய்ய வந்த ஐரோப்பியர்கள்,குறிப்பாக ஆங்கிலேயர்கள்  பெரும்பான்மையான  சிற்றரசுகளைக் கைப்பற்றி  நாட்டை ஆளத்தொடங்கினர். இது  பல இந்தியத் தலைவர்களை கவலைகொள்ளச் செய்தது.எனவே மக்களிடையே விடுதலை வேட்கையை ஏற்படுத்தி வெள்ளையருக்கு எதிராக போராடத்  தூண்டினர்.

         இவர்களது கடுமையான போராட்டத்தாலும், தியாகத்தாலும் இந்தியா 1947 ஆகஸ்ட் 15 இல் விடுதலை பெற்றது.

நாட்டு முன்னேற்றத்தில் மாணவர் பங்கு:

      இன்றைய மாணவர்களே நாளைய தலைவர்கள். இவர்கள் சமுதாய உணர்வுடன் வளர்ந்தால்தான் நாடும் வீடும் வளம் பெறும். துன்பத்தில் மற்றவர்க்கு உதவுதல், வறுமை, கல்வியின்மை அறியாமை, சாதி மத வேறுபாடுகள், தீண்டாமை மூடப்பழக்கங்கள்,ஊழல் ஆகியவற்றிற்கு எதிராகக் குரல் கொடுத்தல்  ஆகிய பண்புகளை மாணவர்கள் பெற்றிருத்தல் மிகவும் சிறப்பு.

மாணவப் பருவமும், நாட்டுப் பற்றும்:

         மாணவர்கள் மக்களுக்கு முன்னோடியாகத் திகழ வேண்டும். அவர்கள் தங்களை சாரண சாரணியர் படை நாட்டு நலப்பணித் திட்டம் தேசிய பசுமைப்படை எனப் பல்வேறு வகையில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

           மரம் நடுதல், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு, சாலை விதிமுறைகள் பற்றிய அறிவுறுத்தல்  மற்றும் தேசிய விழாக்களை கொண்டாட உதவுதல் ஆகியவற்றில் மாணவர்கள் கட்டாயம் ஈடுபட வேண்டும்.

முடிவுரை:


    என்ற  மகாகவி பாரதியாரின் வாக்கிற்கிணங்க, நாட்டின் வளர்ச்சிக்கு மாணவர்களின் பங்கு மிக முக்கியமானது. மாணவர் நாட்டு முன்னேற்றத்தில் இணைந்து செயல்பட்டால், நாடும் முன்னேறும் வீடு முன்னேறும், புதிய இந்தியா உருவாகும்.

8

44

) முன்னுரை:

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து

  நல்விருந்து ஓம்புவான் இல்”                   - குறள் 84.

              கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் விருந்தோம்பல் மனதில் பசுமையாக இருக்கும்.பசித்த வேளையில் வந்தவருக்கு தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கிற மனிதநேயம் கிராமத்து விருந்தோம்பல்.அந்நிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது கி.ராஜநாராயணனின் கோபல்லபுரத்து மக்கள கதைப்பகுதி.அதில் வரும் அன்னமய்யா என்ற கதாபாத்திரத்தைப் பற்றி இங்கு காண்போம்.

அன்னமய்யாவும், இளைஞனும்:

               சாலையின் ஓரத்தில் இருந்த இளைஞனைக் கண்டார்.இவன்  துறவியோ? பரதேசியோ?” என்ற ஐயத்தை மனதில் கொண்டு ,அருகில் சென்று பார்த்தார். அவனது முகம் பசியால் வாடி இருப்பதை உணர்ந்து கொண்டார். தன்னைப் பார்த்து ஒரு அன்பான புன்னகை காட்டிய அந்த இளைஞரிடம் போய்  அருகில் நின்று பார்த்தார். அந்த வாலிபன்குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?” என்று கேட்டான். அன்னமய்யாஅருகிலிருந்து நீச்ச தண்ணி வாங்கி வரவா?” என்று கேட்டார். அந்த இளைஞன் பதில் ஏதும் கூறாமல் அவ்விடத்தை நோக்கி நடந்தான். 

இளைஞனின் பசியைப் போக்கிய அன்னமய்யா:                

ஒரு வேப்பமரத்தின் அடியில்  மண் கலயங்கள் கஞ்சியால்  நிரப்பப்பட்டு இருந்தன. ஒரு  சிரட்டையில் காணத்துவையலும்,ஊறுகாயும் இருந்தது. ஒரு சிரட்டையைத் துடைத்து அதில் இருந்த  நீத்துப்பாகத்தை அவனிடம் நீட்டினான். அந்த  இளைஞன்  கஞ்சியை  “மடக் மடக்என்று உறிஞ்சிக் குடித்தான். உறிஞ்சியபோது அவளுக்குக் கண்கள் சொருகின.மிடறு மற்றும் தொண்டை வழியாக இறங்குவது சுகத்தை அளித்ததை முகம் சொல்லியது.  அவனுள்ஜீவ ஊற்று பொங்கி, நிறைந்து வழிந்தது

அன்னமய்யாவின் மனநிறைவு:

பொங்கியது அன்னமய்யாவின் அன்பு மட்டுமன்று

 இளைஞனின் ஜீவ ஊற்றும்தான்


 புதிதாக வந்த இளைஞனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ,அதைவிட மேலான ஒரு மனநிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது. மார்பில் பால் குடித்துக் கொண்டிருக்கும் போதே வயிறு நிறைந்ததும் அப்படியே தூங்கி விடும் குழந்தையைப்  பார்ப்பதுபோல, அந்த இளைஞனை ஒரு பாசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார் அன்னமய்யா.

அன்னமய்யாவின் பெயர் பொருத்தம்:              

இளைஞன் எழுந்தவுடன்,” எங்கிருந்து வருகிறீர்கள்?, எங்கே செல்லவேண்டும்?” என்று அன்னமய்யா கேட்டார்.அதற்கு அந்த இளைஞன்மிக நீண்ட தொலைவில் இருந்து வருகிறேன்என்று கூறிவிட்டு,” உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டான். அதற்குஅன்னமய்யாஎன்றார். அவ்வாலிபன் மனதிற்குள் பொருத்தமான பெயர்தான் என எண்ணிக்கொண்டான்.

சுப்பையாவிடம் அழைத்துச் செல்லுதல்        சுப்பையாவும்,அவருடன்இருந்தவர்களும் அன்னமய்யாவையும்,இளைஞனையும்   மகிழ்ச்சியுடன்  வரவேற்றனர். சுப்பையா  தான் வைத்திருந்த கம்மஞ்சோறு உருண்டையை  அனைவருக்கும் பகிர்ந்து அளித்தார். அனைவரும் அந்த இளைஞனிடம் அன்பாகப் பேசி, அந்த உணவை உண்ண செய்தனர். இளைஞன் உணவை உண்டு விட்டு மீண்டும் உறங்கினான் 

முடிவுரை:            

               தானத்தில் சிறந்தது அன்னதானம் என்ற தொடருக்கு ஏற்ப, அன்னமய்யா அன்னமிடுபவனாகவும்,தன்னிடம் இருப்பதை கொடுத்து மகிழ்பவனாகவும்,மனிதநேயம் கொண்டவனாகவும் விளங்கினான்.அன்னமய்யா என்ற பெயர் அவருக்கு மிகவும் பொருத்தமுடையதே.

) பாய்ச்சல்

முன்னுரை:

ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்

தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்

              ஒரு கலைஞன் மற்ற கலைஞர்களிடம் இருந்து வேறுபட்டு, தனக்கெனத் தனித்தன்மைகளைக் காட்டுவான். கலை ஈடுபாட்டில் அவனுக்கு  வயதோ, உடற்சோர்வோ பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.தன் கலையைப் பின்பற்ற தகுந்த வாரிசு  உருவாகின்ற போது அவன் கொள்கின்ற மகிழ்ச்சி அளப்பரியது. அவ்வாறு நிகழ்ந்த ஒரு கதையை இங்கு காண்போம்.

அனுமார்:                            

              நாகசுரமும், மேளமும் ஒன்றாக இணைந்து ஒலித்தன. சத்தம் கேட்ட அழகு குனிந்து பார்த்தான். இரண்டு கால்களும்  மின்னல் வெட்டி மறைவது போலத் துள்ளிப் பாய்ந்து சென்றன. அந்தக் கால்கள் மனிதனிடம் இருந்து மாறுபட்டு, பச்சையா? நீலமா? என்று தீர்மானிக்க முடியாத நிறத்தில் இருப்பதைக் கண்டான். ஆளுயர குரங்கு ஒன்று மரத்தின் மேலிருந்து  இறங்குவதைக் கண்டான்.

அனுமாரின் நெருப்பாட்டம்: 

     திடீரென்று மேளமும்,நாகசுரமும்  வேகமாக ஒலிக்கத் தொடங்கின.எதற்கென்றே தெரியாமல்  ஒரு கூட்டம் திகைத்து பந்தலையே நோக்கிக் கொண்டிருந்தது. பெருங்குரல் எழுப்பியபடி அனுமார் பந்தல் கால் வழியாகக் கீழே குதித்தார்.அனுமார் வாலில் பெரிய தீப்பந்தம்  புகை விட்டு எரிந்து கொண்டிருந்தது.

அழகுவின் உதவி:

      சிறிது நேரம் கழித்து தீ எரிவது மெல்ல மெல்லத் தணிந்தது.. கீழே புரண்ட வாழை  இவனைப் போன்ற இரண்டு பேர் தூக்கி வந்தார்கள். அழகு அவர்கள் அருகில் சென்றான். அவர்கள் அந்த வாழை அழகு இடத்தில் ஒப்படைத்து விட்டுச் சென்றனர். அனுமார் சென்ற இடத்திற்கெல்லாம் அழகு வாலைத் தூக்கிக் கொண்டு சென்றான்.சற்று நேரம் கழித்து ஆட்டம் முடிந்தது

அழகுவின் ஆட்டம்                                      

      அனுமார் கழற்றி வைத்திருந்த துணி, சலங்கை,முகத்திற்குப் போடப்படுபவை ஆகியவற்றைத் தான் அணிந்து கொண்டு அனுமார்  போல ஆடினான் அழகு. களைப்பில் இருந்த அனுமார் பார்த்தார்.அழகு உடனே ஆட்டத்தை நிறுத்திக் கொண்டான். ஆனால் அனுமார்  தூணில்  சாய்ந்து கொண்டுபரவாயில்லை கட்டிக்கிட்டு ஆடு என்றார்”. அவனும் நன்றாக  ஆடினான்.

அனுமார் அடைந்த மகிழ்ச்சி:

          அனுமார் அழகுக்கு ஆட்டத்தை சொல்லிக்கொடுத்தார். அவனும் அதே போல ஆடினான். அனுமார் தன்னை மீறிய மகிழ்ச்சியோடு,” பேஷ் பேஷ் உடனே பிடிச்சுகிட்டியே”  என்றார்.அனுமார் அம்பு போல அவன் முன் பாய்ந்தார்..

முடிவுரை:

  “என்னலே, எனக்கே பாச்சா காட்டுற?பிடியில் சிக்காமல் நழுவுறஎன்று கூறிக் கொண்டு இருக்கும்போது அனுமாரின் கால்கள் பின்னிக்  கொண்டன. அழகு அனுமார் விழுந்ததைக் கவனிக்காமல்  தன் ஆட்டத்தில் மூழ்கிய வனாக, உற்சாகம் பொங்க வேகமாக ஆட்டிக்கொண்டிருந்தான்.

8

45

) தமிழகம் தந்த தவப்புதல்வர்

முன்னுரை

       தமிழ் மொழி, தமிழ் மக்கள், தமிழ் பண்பாடு ஆகியவற்றை உயிராகக் கொண்டு வாழ்ந்து, அரசியல், இலக்கியம், சமூகப்பணி என பல துறைகளில் அழியாத தடம் பதித்தவர் மு. கருணாநிதி. முத்தமிழறிஞர் கலைஞர்எனப் போற்றப்படும் அவர், எழுத்தாலும் செயலாலும் தமிழகம் உயர வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்துடன் வாழ்ந்தார். தமிழகம் தந்த தவப்புதல்வராக அவர் மதிக்கப்படுகிறார்.

தமிழகம் தந்த தவப்புதல்வர்

        சிறுவயதிலிருந்தே சமூக அக்கறை, அரசியல் விழிப்புணர்வு, தமிழ்ப்பற்று ஆகியவற்றில் சிறந்து விளங்கிய கலைஞர், தன்னலம் பாராது பொதுநலப் பணியில் ஈடுபட்டார். தன்னுடைய திறமைகளைத் தனக்காக அல்லாது தமிழகம் முன்னேற பயன்படுத்தியதால் அவர் தமிழகம் தந்த தவப்புதல்வர்எனப் போற்றப்பட்டார்.

மொழிப்பற்று

        கலைஞரின் உயிர்நாடி தமிழ் மொழியே. தமிழ் வளர்ச்சி, தமிழ் கல்வி, தமிழ் அதிகாரப்பூர்வப் பயன்பாடு ஆகியவற்றிற்காக பல திட்டங்களை முன்னெடுத்தார். பள்ளி, கல்லூரி, அரசு நிர்வாகம் என எல்லா துறைகளிலும் தமிழ் நிலைபெற முயன்றார். தமிழ் இலக்கியங்கள், உரைகள், நாடகங்கள், திரைக்கதைகள் மூலம் மொழிப்பற்றை மக்களிடையே விதைத்தார்.

பொதுவாழ்வு

       அரசியல் வாழ்க்கையில் நீண்ட காலம் மக்களுக்கு சேவை செய்தவர் கலைஞர். பலமுறை தமிழ்நாடு முதல்வராகப் பதவி வகித்து, கல்வி, சாலை, நீர்ப்பாசனம், சமூகநலம் போன்ற துறைகளில் பல முன்னேற்றத் திட்டங்களை செயல்படுத்தினார். பொதுவாழ்வில் ஒழுக்கம், கடமை உணர்வு, மக்களோடு நெருக்கம் ஆகியவற்றை கடைப்பிடித்தார்.

தூய்மை

      அவரது சிந்தனை, கொள்கை, பணிப்பற்று ஆகியவை தூய்மையால் நிரம்பியவை. சமூகநீதி, சமத்துவம், சாதி மத வேறுபாடின்றி மனிதநேயம் நிலைநிறுத்தல் ஆகிய உயர்ந்த நோக்கங்களுடன் செயல்பட்டார். அதிகாரத்தில் இருந்தபோதும் கொள்கைத் தூய்மையை காக்க முயன்றார்.

எளிமை

      பெரிய பதவிகளில் இருந்தபோதும் எளிமையான வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தார். மக்களுடன் பழகும் விதம், உடை, நடத்தை அனைத்திலும் எளிமை பொலிந்தது. உயர்ந்த நிலை எட்டினாலும் தாழ்மையை இழக்காத தலைவர் என்ற பெயரைப் பெற்றார்.

மக்கள் பணியே மகத்தான பணி

        “மக்கள் பணியே மகத்தான பணிஎன்ற கொள்கையை வாழ்வியல் நெறியாகக் கொண்டார். ஏழை, எளிய மக்களின் கல்வி, வாழ்வு, உரிமைகள் ஆகியவற்றை மேம்படுத்த பல நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தினார். மக்கள் முன்னேற்றமே அரசின் முன்னேற்றம் என்ற எண்ணத்துடன் உழைத்தார்.

முடிவுரை

        முத்தமிழறிஞர் கலைஞர் தமிழுக்கும் தமிழர்களுக்கும் அர்ப்பணித்த வாழ்வு வாழ்ந்த மாமனிதர். மொழிப்பற்று, பொதுப்பணி, எளிமை, தூய்மை, மக்கள் சேவை ஆகிய உயர்ந்த பண்புகளால் அவர் என்றும் நினைவுகூரப்படுவார். தமிழகம் வளர்ந்திட அவர் செய்த பங்களிப்பு வரலாற்றில் நிலைத்திருக்கும்.

) பழந்தமிழர் உணவு முறைகள்

முன்னுரை:

       தமிழர் பண்பாட்டில் உணவுக்கு முக்கியமான இடம் உண்டு. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகதமிழர்கள் வாழ்வில் உணவு கலாச்சாரத்துடனும் மருத்துவத்துடனும் நெருக்கமாக தொடர்புடையதாக இருந்துள்ளது. பருவநிலைநிலத்தோற்றம்வாழ்க்கை முறைகள் ஆகியவை தமிழர் உணவுமுறையை தீர்மானிக்கக் காரணமாகின்றன.

தமிழரின் உணவுமுறைகள்:

     தமிழர் உணவுமுறை நல்வாழ்க்கைக்கேற்ப வடிவமைக்கப்பட்டிருந்தது. அவர்களின் உணவில் சீரான சத்துக்கள் கொண்ட உணவுப்பொருட்கள் இடம்பெற்றிருந்தன. அதிகளவில் அரிசிபருப்புகாய்கறிகள்பழங்கள்மஞ்சள்மிளகுகொத்தமல்லி ஆகியவை பயன்பட்டன. காலை உணவாக சிறுதானிய உணவுகள் உட்கொள்ளப்பட்டனஐவகை நிலங்களுக்கேற்ப உணவுமுறைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

நோய்தடுக்கும் தமிழர் உணவுகள்:

·        தமிழர் உணவில் நோய்தடுக்கும் பல்வேறு உணவுப்பொருட்கள் இடம்பெற்றுள்ளனகாலநிலை மாற்றத்தினால் ஏற்படும் நோய்களைத் தடுக்கும் விதமாக பல உணவுகள் தயாரிக்கப்பட்டன.

·        நீரிழிவு மற்றும் கொழுப்புக் குறைக்கும் உணவுகள் – கீரைகள்அவல்கோதுமைதினைகுதிரைவாலி போன்ற சிறுதானியங்கள்.

·        தொற்றுநோய்களைத் தடுக்கும் உணவுகள் – சுக்குமிளகுதிப்பிலிமஞ்சள்வெந்தயம்முருங்கை போன்றவை.

·        சிறந்த செரிமான சக்தியை அளிக்கும் உணவுகள் – இஞ்சிபுளிபானகம்தயிர்பெருங்காயம்.

மருந்தாகும் உணவுகள்:

     தமிழர் உணவு மருத்துவப் பண்புகளும் கொண்டிருந்தது. உடல் ஆரோக்கியத்தைக் காக்கும்நோய்களைத் தடுக்கும் உணவுகளும் தமிழர்கள் உணவில் இடம்பெற்றிருந்தன.

·        நுரையீரல் ஆரோக்கியத்திற்கு – புதினாதுளசிவில்வ இலைச் சாறு.

·         நீரிழிவிற்கு – சிறுதானியங்கள்பாகற்காய்வெந்தயம்.

·        உடல் சூட்டை தணிக்க – நீர்மோர்நல்லெண்ணெய்வேப்பம்பூ ரசம்.

·        எலும்புகளுக்கு – முருங்கை உணவுகள்.

முடிவுரை:

      தமிழர் உணவுமுறை முற்றிலும் ஆரோக்கியமானதாகவும்பாரம்பரிய மருத்துவத் தன்மை கொண்டதாகவும் இருந்து வந்துள்ளது. இயற்கைக்கு ஏற்ப தமிழர்கள் பின்பற்றிய உணவுகள்அவர்களின் நீண்ட ஆயுளுக்குக் காரணமாக இருந்தன. இதனைத் தொடர்ந்து பேணிப் போற்றுவதன் மூலம் நம் உடல்நலத்தைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.

8

 பதிவிறக்கம் செய்ய 10 வினாடிகள் காத்திருக்கவும்


You have to wait 10 seconds.

Generating Download Link...

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை