10.ஆம் வகுப்பு தமிழ்
கடிதம் எழுதுதல் - தொகுப்பு-2
10.ஆம் வகுப்பு தமிழ்
கடிதம் எழுதுதல் - வினா விடைகள்
(தொகுப்பு-2)
1. நீங்கள் விரும்பிப் படித்த நூல் ஒன்றின் சிறப்புகளைக் கூறி, உங்கள் நண்பரையும் நூலினைப் படிக்குமாறு
பரிந்துரைத்து நண்பருக்குக் கடிதம் எழுதுக.
எண்.10, வள்ளுவர் தெரு,
மயிலாடுதுறை,
22-09-2025
அன்புள்ள நண்பன் தமிழ் மாறனுக்கு,
இங்கு நான் எனது பெற்றோருடன் நலமாக இருக்கிறேன். அங்கு
நீயும் உனது பெற்றோருடன் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.உலகப் பொதுமறை என்று அனைவராலும் போற்றப் படுகின்ற திருக்குறளைத் தமிழனாகப்
பிறந்த ஒவ்வொருவரும் படித்து இருக்க வேண்டும். தினமும் ஓர் அதிகாரம்
என்ற அளவில் நான் படித்து வருகிறேன். நீயும் அவ்வாறே படித்துப்
பயன் பெற வேண்டும் என்பதற்காக இக்கடிதத்தை எழுதுகிறேன் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பொருள்களை உடையது.
7 சீர்களில் உலக நீதியைச் சொல்லும்
திருக்குறளை நீ கண்டிப்பாகப் படிக்க வேண்டும். படிப்பதோடு மட்டுமல்லாமல்,
திருக்குறள் வழியில் நாம் பயணிக்க வேண்டும். திருக்குறளைப்
படித்து விட்டு உன்னுடைய கருத்துக்களை எனக்கு எழுதுக.
இப்படிக்கு,
உன் அன்பு நண்பன்
முத்தழகன் .
உறைமேல் முகவரி:
2) புதிதாக திறன்பேசி வாங்கியிருக்கும் தங்கைக்கு, திறன்பேசி பயன்பாடு குறித்த அறிவுரைகளைக் கூறி கடிதம் ஒன்று எழுதுக.
15,எழில் வீதி,
காஞ்சி-1,
24-09-2025.
அன்புள்ள தங்கைக்கு,
உன்
அன்பு அண்ணன் எழுதும் கடிதம். நலம்,நலமறிய ஆவல்
.நீ எவ்வாறு படிக்கிறாய்? உன்னுடைய கால்பந்து பயிற்சி எல்லாம் எப்படி இருக்கிறது?அன்றாடம்
பயிற்சிக்குச் செல்கிறாயா? படிப்பையும் விளையாட்டையும்
இருகண்களென நினைத்து,இரண்டிலும் கவனம் செலுத்துக.திறன்பேசி அதிகமாகப் பயன்படுத்துவதாக அப்பா கூறினார்.திறன்பேசியினால் நன்மையும் உண்டு;தீமையும் உண்டு. படிப்பிற்காக இணையத்தைப் பயன்படுத்தும்போது,இலவசஇணைப்பு
போல்,தேவையற்ற விளம்பரங்களும், காட்சிகளும்
உன்னைக் கவரும். அவற்றை விலக்கி விட்டு,படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி,கல்வியில்
உயர்நிலையை அடைய முயலவும். அப்பா அம்மா சொல்வதைக் கேட்டு
நல்ல பெண் என்று பெயர் எடுக்க வேண்டும். அடுத்த மாதம்
விடுமுறையில் வரும்போது நேரில் பேசலாம்.
இப்படிக்கு
உன் அன்பு அண்ணன்
த.தமிழ்நிலவன்
4. புதிதாக இருசக்கர ஊர்தி வாங்கி, ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ள உறவினருக்கு
முக்கியச் சாலை விதிகளை விளக்கி, அவற்றைக் கடைபிடிக்க
வலியுறுத்திக் கடிதம் ஒன்று எழுதுக.
6, சோலை நகர்,
கோவில்பட்டி.
29-09-2025.
அன்புள்ள அண்ணனுக்கு,
தம்பி எழுதும் மடல். வணக்கம். தாங்கள்
புதிதாக ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வுக் கூட்டம் ஒன்று எங்கள் பள்ளியில் கடந்த வாரம் நடந்தது. அக்கூட்டத்தில் வாகனம் ஓட்டுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்துக் கூறினார்கள்.அது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால், இக்கடிதத்தில் அவற்றை எழுதியுள்ளேன்.
·
தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர மோட்டார் வாகனத்தை ஓட்டக் கூடாது.
·
சாலையின் வகைகள், மைல்கற்கள் விவரங்கள் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
·
போக்குவரத்தினை
முறைப்படுத்தும் குறியீடுகளுக்கும், போக்குவரத்துக் காவலர்களின் சாலை உத்தரவுக்கு ஏற்பச் சாலையைப் பயன்படுத்த வேண்டும்.
·
நடைமேடை நடைபாதையைப் பயன்படுத்துபவர்களையும்,சாலையைக் கடப்பவர்களையும், அச்சுறுத்தக் கூடாது.
மேற்கண்ட விதிகளைக் கடைப்பிடித்தால் விபத்துகள் நடைபெறாமல் காத்துக்கொள்ள முடியும். தங்கள் பதில் கடிதத்தை எதிர்பார்க்கிறேன்.
என்றும் அன்புடன்,
ப.கமலக்கண்ணன்.
உறைமேல் முகவரி:
5. உங்கள் பகுதியில் ஏற்பட்ட கடும் புயலில், சாய்ந்த மரங்களை வெட்டி, பழுதுபட்ட சாலைகளைச் சீரமைத்துத் தருமாறு மாநகராட்சி ஆணையருக்குக் கடிதம் ஒன்று எழுதுக.
மாநகராட்சி ஆணையருக்குக் கடிதம்
அனுப்புநர்:
இ.கயல்விழி,
3 பெரிய தெரு,
திருநெல்வேலி-2
பெறுநர்:
மாநகராட்சி ஆணையர் அவர்கள்,
மாநகராட்சி அலுவலகம்,
திருநெல்வேலி-2
மதிப்பிற்குரிய அய்யா,
பொருள்: புயலால்
விழுந்த மரங்களை அகற்றக் கோருதல் சார்பாக.
வணக்கம் எங்கள் பகுதியில் கடந்த 10ஆம்தேதி புதன்கிழமை வீசிய புயலால்,ஏராளமான மரங்கள்
வேரோடு விழுந்துள்ளன.அதனால்,சாலைகளில்
ஏற்பட்ட கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பும், போக்குவரத்துப்
பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை நிலை
முடங்கியுள்ளது. எங்கள் பகுதியில் மூன்று பள்ளிகளும்,ஒரு கல்லூரியும்,ஒரு குழந்தைகள் மருத்துவமனையும் உள்ளது.
அதனால்,தாங்கள் அருள்கூர்ந்து எங்கள் பகுதியில்
உள்ள மரங்களை விரைந்து அகற்றித்தருமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.
நன்றி!!
இங்கனம்,
தங்கள் உண்மையுள்ள
இ.கயல்விழி.
இடம்: திருநெல்வேலி,
நாள்: 29-09-2025.
உறைமேல் முகவரி:
7.
பள்ளியைத் தூய்மையாக வைத்திருத்தல் குறித்த செயல்திட்ட வரைவு ஒன்றை உருவாக்கி, அதைச் செயல்படுத்தத் தலைமை ஆசிரியரின் ஒப்புதல் வேண்டி, தலைமை ஆசிரியருக்குக்
கடிதம் எழுதுக.
அனுப்புநர்:
நா.கொற்றவன்,
மாணவர் தலைவர்,
அரசு
உயர்நிலைப்பள்ளி,
தணிகைப் போளூர்,
இராணிப்பேட்டை மாவட்டம்.
பெறுநர்
உயர்திரு. தலைமையாசிரியர்
அவர்கள்,
அரசு
உயர்நிலைப்பள்ளி,
தணிகை போளூர்,
இராணிப்பேட்டை
மாவட்டம்.
பெருமதிப்பிற்குரிய ஐயா,
பொருள்: பள்ளி தூய்மைச்
செயல்திட்டம் உருவாக்கம் தொடர்பாக.
வணக்கம் பள்ளியை தூய்மையாக வைத்திருப்பது தொடர்பாகச் செயல்திட்டம் ஒன்றை
உருவாக்கியுள்ளோம்.திட்டத்தின் செயல்பாடுகளாவன:
·
பள்ளி வளாகம் மற்றும் விளையாட்டு
மைதானத்தைத் தூய்மையாக வைத்திருக்கவேண்டும்
·
பள்ளி வளாகத்தில் உள்ள முட்புதர்களை
அகற்ற வேண்டும்.
·
பள்ளி குடிநீர்த்தொட்டியை,குளோரின் கொண்டு சுத்தம்செய்ய வேண்டும்.
·
வகுப்பறைகள் ஆய்வகங்கள் நூலகம்
ஆகியவற்றை அன்றாடம் சுத்தம் செய்ய வேண்டும்.
·
பள்ளிக் கட்டடங்களை பழுதுபார்த்து
வெள்ளை அடிக்க வேண்டும்.
·
மாணவர்களிடையே சுத்தம்,சுகாதாரம் குறித்த விழிப்புணர்வுப் போட்டிகளை
நடத்துதல்.
இத்திட்டங்களை மாணவர்களாகிய நாங்கள்
ஒருங்கிணைந்து நிறைவேற்றுவதற்குத் தாங்களும், ஆசிரியர்களும்
அனுமதி அளிக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.
நன்றி!!
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள
மாணவன்,
நா.கொற்றவன்
உறைமேல் முகவரி:
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி