தமிழகத் தவப்புதல்வர் - கட்டுரை
முன்னுரை- தமிழகம் தந்த தவப்புதல்வர் - மொழிப்பற்று
- பொதுவாழ்வு - தூய்மை- எளிமை -மக்கள் பணியே மகத்தான பணி – முடிவுரை . கொடுக்கப்பட்ட
குறிப்புகளைக் கொண்டு கட்டுரை வரைக.
தலைப்பு: தமிழகத்
தவப்புதல்வர்
முன்னுரை:
”வாழ்ந்தவர்
கோடி! மறைந்தவர் கோடி!
மக்கள் மனதில் நிலையாய்
நிற்பவர் யாரோ?”
படிப்பால் உயர்ந்தோர்,
உழைப்பால் சிறந்தோர் எனப் பாரில் பலர் உருவாகிச் சிறப்பு பெறுகின்றனர்.
படிக்காத மேதை என்றும்,கல்விக்கண்திறந்தவர்
என்றும் போற்றப்பட்ட, தமிழ்நாட்டில் தோன்றிய தவப்புதல்வர்
பற்றிக் காண்போமா?
பிறப்பும் இளமையும்:
”விருதுப்பட்டிக்கு
இவரை விட பெரிய விருது தேவையா?”
விருதுப்பட்டி
என்றழைக்கப்பட்ட விருதுநகரில் குமாரசாமி -சிவகாமி அம்மான் தம்பதியரின் குமாரனாக 15
-7-1903 இல் காமராசர் பிறந்தார். 1908இல்
திண்ணைப் பள்ளிக்கூடத்திலும் ஏனாதி நாயனார் வித்தியாசாலையிலும் கல்வி பயின்றார்.
இவர் 1914 ஆம் ஆண்டு ஆறாம் வகுப்பு படிக்கையில் படிப்பை
நிறுத்திக் கொண்டாலும் தினசரி செய்திகளைப் படித்து உலக நிகழ்வுகளை உள்ளத்தில்
ஆழமாகப் பதிய வைத்துக் கொண்டார்.
நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும்:
சுதந்திரப்போராட்டக்
கூட்டங்களில் கலந்துகொண்டு தலைவர்களின் சொற்பொழிவுகளை தவறாமல் கேட்பார் .1919 இல் தமது பதினாறாம் வயதில் காந்தியடிகள் அழைப்பை ஏற்று,ரௌலட் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ்கட்சியின், முழுநேர
ஊழியராக 1920ல் ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்திலும் 1923 இல் மதுரையில் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார். மொழிவாரி மாநிலங்கள்
பிரித்தபோது, பெரும் பங்காற்றினார். நாட்டுக்காகவும்
மக்களுக்காகவும் பல முறை சிறை சென்றார்.
தூய்மையும் எளிமையும்:
”எளிமையின்
இலக்கணம் – இவர்
மனதில் கொண்டது பெருங்குணம்”
பள்ளி விழா ஒன்றில் கலந்து
கொண்ட காமராசர்,"இவ்விழாவிற்கு ஏன் இத்தனை அலங்காரத்
தோரணங்கள்? இந்த பையன் தலைக்கு எண்ணெய் தேய்க்கல. இந்த
பொண்ணு கிழிந்த ஆடை போட்டு இருக்கே.இவர்களுக்கு உதவலாமே" என்று
ஆதங்கப்பட்டார். தமக்கென்று அணிந்திருக்கும் உடைகளைத் தவிர ஒரு சதுர அடிநிலத்தைக் கூட
வாங்கிவைத்திருக்காத உத்தமராக,எளிமையானவராக திகழ்ந்தவர் காமராஜர்,
மக்கள் பணியே மகத்தான பணி:
1954 இல்முதல்வராகப்
பொறுப்பேற்று, ஒவ்வொரு கிராமத்திலும் கல்விக்கூடங்கள்
அமைத்து, மதிய உணவுத் திட்டமும் கொண்டு வந்தார். நாட்டில் பல
தொழிற்சாலைகளை உருவாக்கினார். ஒவ்வொரு நாளும் சுமார் 18 மணி
நேரம் உழைத்தார்.காலை மாலை இரவெனினும் மக்களைச் சந்திப்பார். காலையில் விழித்து
எழுந்ததும் தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளைப் படிப்பார்.
முடிவுரை:
”இருந்தாலும்
மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவன்போல யாரென்று
ஊர் சொல்ல வேண்டும்”
'கல்விக் கண் திறந்த
காமராசர் 'எனப் போற்றப்பட்டவர். தான் பதவியேற்கும்போது
"ஏழைகளின் துயர் தீர்க்கவே இந்த பதவியை நான் ஏற்கிறேன் .மக்களின் துயரத்தை
தீர்க்க முடியாத நிலை ஏற்பட்டால் பதவியைத் தூக்கி எறிவேன்" எனக்கூறிய ஒப்பற்ற
தலைவர் இவரே.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி