|
அரையாண்டுத்தேர்வு
மாதிரி
வினாத்தாள் (2025-2026) 9.
ஆம்
வகுப்பு தமிழ் மொத்த மதிப்பெண்கள்:
100 நேரம் : 3.00
மணி+15
நிமிடங்கள் |
|
குறிப்புகள் :
i)
இவ்வினாத்தாள்
ஐந்து பகுதிகளைக் கொண்டது. ii) விடைகள்
தெளிவாகவும்,
குறித்த
அளவினதாகவும்,
சொந்த
நடையிலும் அமைதல் வேண்டும். |
பகுதி-1
(மதிப்பெண்கள்:15)
சரியான விடையைத்
தேர்ந்தெடுக்க: 15X1=15
1) தமிழ் விடு தூது ……………. என்னும் இலக்கிய
வகையைச் சேர்ந்தது.
அ. தொடர்நிலைச் செய்யுள் ஆ. புதுக்கவிதை இ.
சிற்றிலக்கியம் ஈ. தனிப்பாடல்
2) சமணர்
படுக்கைகள் சிற்பங்களாகக் காணப்படும் இடம்----
அ. திருச்சி ஆ. கோவை இ. மதுரை ஈ. ஈரோடு
3)
தீரா
இடும்பை தருவது எது?
அ. ஆராயாமை, ஐயப்படுதல் ஆ.
குணம்,
குற்றம்
இ. பெருமை,
சிறுமை ஈ.
நாடாமை,
பேணாமை
4) முறையான
தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக.
அ) தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையான
ஏறுதழுவுதல்
ஆ) தமிழர்களின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்
தொன்மையான,
இ) தொன்மையான வீரவிளையாட்டு தமிழர்களின்
ஏறுதழுவுதல்
ஈ) தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு
ஏறுதழுவுதல்
5) இரண்டிரண்டு அடிகள் கொண்ட
எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை
அ.கண்ணி ஆ.சிற்றிலக்கியம் இ.குறள் ஈ.சங்க
இலக்கியங்கள்
6) "வசிபட முதுநீர்
புக்கு
மலையெனத் துவரை நன்னீர்"பாடல் அடிகளில்
முதுநீர் என்பது எது?
அ) மழை நீர் ஆ) கடல் நீர் இ)
ஆற்று நீர் ஈ)
நிலத்தடி
நீர்
7) பெயரடை இடம்பெறாத தொடரைக்
கண்டறிக
அ) நல்ல நண்பன் ஆ) இனிய வணக்கம் இ)
எந்த ஓளியம்? ஈ) கொடிய விலங்கு
8) ஒன்றறிவதுவே உற்றறிவதுவே
இரண்டறிவதுவே அதனொடு நாவே இவ்வடிகளில் அதனொடு என்பது எதைக் குறிக்கிறது?
அ) நுகர்தல் ஆ)
தொடு உணர்வு இ)
கேட்டல் ஈ) காணல்
9) வந்தேன் என்ற வினைமுற்றின் வினைப்பகுதி
அ. வந்து
ஆ. வந்த
இ. வர
ஈ. வா
10) இரு பெயரொட்டுப்
பண்புத்தொகையில் வல்லினம் மிகும் என்பதற்கான எடுத்துக்காட்டு -
அ) தனிச்சிறப்பு ஆ)
தைத்திங்கள் இ)
வடக்குப் பக்கம் ஈ) நிலாச்சோறு
11) பிழையற்ற தொடர் எது?
அ. நல்ல
தமிழுக்கு எழுதுவோம் ஆ. நல்ல தமிழர் எழுதுவோம்
இ. நல்ல
தமிழிலிருந்து எழுதுவோம் ஈ. நல்ல தமிழில் எழுதுவோம்
பாடலைப்படித்து வினாக்களுக்கு விடையளிக்க:
பசியும் பிணியும்
பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க! என வாழ்த்தி;
அணிவிழா அறைந்தனன்
அகநகர் மருங்கென்
12) இப்பாடல் இடம்பெற்றுள்ள
நூல் யாது?
அ. தமிழோவியம் ஆ.தமிழ்விடு தூது இ.மணிமேகலை ஈ.குறம்
13) இப்பாடல் எந்த இலக்கிய
வகையைச் சார்ந்தது?
அ) தொடர்நிலைச் செய்யுள் ஆ) புதுக்கவிதை இ) சிற்றிலக்கியம் ஈ) தனிப்பாடல்
14) எதுகைச் சொற்களைத் தேர்ந்தெடுக்க
அ. குறம்-கொடுப்பாய்க்கு ஆ.வசியும் வளனும் இ.குறம்-சிந்து ஈ.பசியும் வசியும்
15) சுரக்க-என்பதன் இலக்கணக்குறிப்பு
அ.வினைத்தொகை ஆ.பண்புத்தொகை
இ.வேற்றுமைத்தொகை ஈ.வியங்கோள்
வினைமுற்று
பகுதி-2 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1 4X2=8
எவையேனும் நான்கு வினாக்களுக்கு
மட்டும் குறுகிய விடையளிக்க:(21 கட்டாயவினா)
16)
விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க.
அ) இடைச்சொற்களே மொழிப்பயன்பாட்டை
முழுமையாக்குகின்றன.
ஆ) தமிழர் வரலாறு பண்பாட்டுத் தொன்மை
வாய்ந்தது.
17) ஏறுதழுவுதல்
நிகழ்விற்கு இலக்கியங்கள் காட்டும் வேறுபெயர்களைக் குறிப்பிடுக
18) சாரதா சட்டம் எதற்காக
இயற்றப்பட்டது?
"கீசு
கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன்,
கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ" இடஞ்சுட்டிப் பொருள் தருக.
20) பழமணல் மாற்றுமின்:புதுமணல் பரப்புமின் -இடஞ்சுட்டிப் பொருள்
விளக்கம் தருக.
21) ‘உடைத்து’ என முடியும் திருக்குறளை எழுதுக.
பிரிவு-2 5X2=10
ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய
விடையளிக்க:
22) வல்லினம் மிகும் இடங்களுக்கு
இரண்டு சான்றுகள் தருக.
23) அளபெடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
24) பொருள் எழுதித் தொடர் அமைக்க : புல்-புள்
25) மரபு இணைச் சொற்களைத் தொடரில்அமைத்து எழுதுக.
1. மேடும் பள்ளமும் 2.
நகமும் சதையும்
26) ஒரு சொல்லால் தொடரின் இரு இடங்களை
நிரப்புக.
எண்ணெய் ஊற்றி----விளக்கு ஏற்றியவுடன் , இடத்தை விட்டு-----
27) உவமைத் தொடர்களை உருவகத்
தொடர்களாக மாற்றுக.
கயல் விழி உணவு சமைத்தாள் ; உண்டவர் அமுது
போன்ற சுவையில் நீந்தினர்.
28) அகராதியில்காண்க. அ. இயவை,
ஆ. சந்தப்பேழை
பகுதி-3
(மதிப்பெண்:18)
பிரிவு-1 2X3=6
இரண்டு வினாக்களுக்கு
மட்டும் சுருக்கமான விடையளிக்க:
29) மூன்று என்னும்
எண்ணுப்பெயர் பிற திராவிடமொழிகளில் எவ்வாறு இடம்பெற்றுள்ளது?
30) ஏறுதழுவுதல், திணைநிலை வாழ்வுடன்
எவ்விதம் பிணைந்திருந்தது?
31) பத்தியைப்
படித்துப் பதில் தருக:-
தமிழர், போரிலும்
அறநெறிகளைப் பின்பற்றினர். போர் அறம் என்பது வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப்
போர் செய்யாமையைக் குறிக்கிறது.போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப்
பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று ஒரு பாடல்
கூறுகிறது. தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை ஆவூர்
மூலங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார்.
அ. போர் அறம் என்பது எவற்றைக்
குறிக்கிறது?
ஆ. ஆவூர் மூலங்கிழார் போர் அறம்
குறித்துக் குறிப்பிடுவது யாது?
இ. போரில் யாருக்கெல்லாம் தீங்கு வராமல் போர்புரிய வேண்டும் என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன?
இரண்டு வினாக்களுக்கு
மட்டும் சுருக்கமான விடையளிக்க (34 கட்டாய
வினா)
32) வானவில்லை ஒப்பிட்டுப் பெரியபுராணம் கூறும் செய்தியை விளக்கி
எழுதுக.
33) திருப்பாவை குறிப்பிடும் காலை வழிபாட்டு நிகழ்வை விளக்குக
34) அ.ஒன்றறிவதுவே- எனத்தொடங்கும்
பாடலை அடிமாறாமல் எழுதுக (அல்லது)
ஆ. தித்திக்கும் - எனத் தொடங்கும் பாடலை அடிமாறாமல்
எழுதுக
பிரிவு-3
இரண்டு வினாக்களுக்கு
மட்டும் சுருக்கமான விடையளிக்க:
35) அளவையாகுபெயர்களின்
வகைகளை விளக்குக
36) எண்ணுப்பெயர், திசைப்பெயர்களில்
வல்லினம் மிகுந்து வருவதைச் சான்றுடன் எழுதுக
37) அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை. - இக்குறட்பாவில்
பயின்று வந்த அணியை விளக்குக
பகுதி-4
(மதிப்பெண்:25)
அனைத்து வினாக்களுக்கும்
விடையளிக்க:
5X5=25
38) அ) பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச்
சிறப்புகளைத் தொகுத்து எழுதுக. (அல்லது)
ஆ) இன்றைய வாழ்வியலுக்கு கேள்வியறிவு அவசியம் என்பதை
வள்ளுவர் வழிநின்று விளக்குக.
39) அ.சுற்றுச்
சூழலைப் பேணிக்காக்கும் பள்ளிகளின் வரிசையில் மாவட்டத்திலேயே சிறந்ததாக உங்கள்
பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டாடும் விழாவில் கலந்துகொள்ளும்
மாவட்டக்கல்வி அலுவலருக்கு வரவேற்பு மடல் ஒன்றை எழுதுக. (அல்லது)
ஆ. உங்களின் நண்பர், பிறந்தநாள் பரிசாக
அனுப்பிய எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணனின், "கால்முளைத்த
கதைகள்" என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.
40) அ) நீங்கள் செய்த நற்செயல்களால்
பாராட்டுப்பெற்ற சூழல்கள் ஐந்தனைஒ எழுதுக. (அல்லது)
ஆ) பொன்மொழிகளை மொழிபெயர்க்க.
1. A nation’s culture resides in the
hearts and in the soul of its people – Mahatma Gandhi
2. The art of people is a true mirror to
their minds – Jawaharlal Nehru
3. The biggest problem is the lack of
love and charity – Mother Teresa
4. You have to dream before your dreams
can come true – A.P.J. Abdul Kalam
5.Winners don’t do different
things; they do things differently – Shiv Khera
41) 12 , வள்ளுவர் தெரு , எழிநகர், திருத்தணி-1 என்ற
முகவரியில் வசித்துவரும் பிறைநிலவனின் மகன் எழில்குமரன் அப்பகுதியில் உள்ள அஞ்சலகத்தில்
சேமிப்புக்கணக்கு வைத்துள்ளார். அவர் தன்னுடைய கணக்கிலிருந்து ரூபாய் 2000 ஐ எடுக்க
விரும்புகிறார். அவருக்கு உரிய படிவத்தை நிரப்பி உதவுக,
42) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
பகுதி-5
(மதிப்பெண்:24)
அனைத்து வினாக்களுக்கும்
விடையளிக்க:
3X8=24
43) அ) ஏறுதழுவுதல் தமிழரின்
அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்களை விவரிக்க .
(அல்லது)
ஆ) தமிழ்நாட்டுச் சிற்பங்கள் கலைநயம்
மிக்கனவாகவும் வரலாற்றுப் பதிவுகளாகவும் இருப்பதை நிறுவுக
44) அ) இசைக்கு நாடு, மொழி, இனம் தேவையில்லை என்பதைச்
‘செய்தி’ கதையின் மூலமாக விளக்குக. (அல்லது)
ஆ) தண்ணீர் கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கி
எழுதுக.
45) அ.
பள்ளியில்
நடைபெற்ற இலக்கியமன்ற விழா நிகழ்ச்சி செய்திகளைத் திரட்டி தொகுப்புரை எழுதுக. (அல்லது)
ஆ. )
”உழவே உன்னதம்” என்ற தலைப்பில் குறிப்புகளைக்
கொண்டு கட்டுரை வரைக
முன்னுரை – உழவே தமிழர் மகுடம்-உழவுத் தொழிலுக்கு வந்தனை
செய்வோம்
– சுழன்றும்
ஏர்ப்பின்னது உலகம்
– முடிவுரை