|
மாதிரி பொதுத்தேர்வு-2
(2025-2026) 10.
ஆம் வகுப்பு
தமிழ் மொத்த மதிப்பெண்கள்:
100 நேரம் : 3.00 மணி+15 நிமிடங்கள் |
|
குறிப்புகள் :
i)
இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. ii) விடைகள்
தெளிவாகவும், குறித்த அளவினதாகவும், சொந்த
நடையிலும் அமைதல் வேண்டும். |
பகுதி
– I (மதிப்பெண்கள்:15)
அனைத்து
வினாக்களுக்கும் விடையளிக்கவும். 15×1=15
1.
எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்-
அ)
எந்+தமிழ்+நா ஆ) எந்த + தமிழ் +நா இ) எம் + தமிழ் +நா ஈ)
எந்தம் + தமிழ் +நா
2 . பொருந்தும் விடைவரிசையைத் தேர்ந்தெடுக்க.
அ)
கொண்டல் - 1. மேற்கு
ஆ)
கோடை - 2. தெற்கு
இ)
வாடை - 3. கிழக்கு
ஈ)
தென்றல் – 4. வடக்கு
அ) 1.2.3.4 ஆ) 3.1.4.2 இ) 4.3.2.1 ஈ) 3,4,1,2
3.
பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று ----,----- வேண்டினார்.
அ)
கருணையன், எலிசபெத்துக்காக ஆ) எலிசபெத், தமக்காக
இ)
கருணையன், பூக்களுக்காக ஈ) எலிசபெத், பூமிக்காக
4.
'மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது
எங்களுக்கு வேண்டும்'
மாலவன் குன்றமும் வேலவன்
குன்றமும் குறிப்பவை முறையே-
அ)
திருப்பதியும் திருத்தணியும் ஆ) திருத்தணியும் திருப்பதியும்
இ)
திருப்பதியும் திருச்செந்தூரும் ஈ) திருப்பரங்குன்றமும் பழனியும்
5.
மனைக்கிணறு,பொய்கை என்பன -----நிலத்துக்குரிய நீர்.
அ) மருதம் ஆ) குறிஞ்சி இ முல்லை ஈ)
நெய்தல்
6.
”இந்த மாறன் ஒருநாளும் பொய்கூறமாட்டான்” என்பது---
அ) இடவழு ஆ) திணை வழு இ) இடவழுவமைதி ஈ) திணை வழுவமைதி
7. இடைக்காடனாரின்
பாடலை இகழ்ந்தவர் இடைக்காடனாரிடம் அன்பு வைந்தவர்
அ) அமைச்சர்.மன்னன் ஆ) அமைச்சர், இறைவன்
இ)
இறைவன், மன்னன்
ஈ) மன்னன்,
இறைவன்
8. இரவிந்திரநாத
தாகூர் ------ மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான
கீதாஞ்சலியை --==----மொழியில், மொழிபெயர்த்த
பிறகுதான் அவருக்கு நோபல்பரிசு கிடைத்தது.
அ) ஆங்கில வங்காளம் ஆ) வங்காள,
ஆங்கில இ) வங்காள, தெலுங்கு ஈ) தெலுங்கு,
ஆங்கில
9.
நின்றுவிட்ட மழை தரும் குளிர்; சொட்டுச்
சொட்டாக விளிம்புகளிலிருந்தும் மரங்களிலிருந்தும் விழும் மழைநீர்பட்டுச்
சிலிர்க்கும் உயிரினம் – தொடருக்கேற்ற தலைப்பு
அ) காற்றின்
பாடல் ஆ) நீரின் சிலிர்ப்பு இ) மொட்டின் வருகை ஈ) உயிர்ப்பின்
ஏக்கம்
10.
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும்
பொருள்களின் இருப்பைக் கூட
அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர் யாவர்?
அ)
உதியன்: சேரலாதன் ஆ) அதியன்: பெருஞ்சாத்தன்
இ)
பேகன் கிள்ளிவளவன் ஈ) நெடுஞ்செழியன்:
திருமுடிக்காரி
11.
இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்
அ)
நாட்டைக் கைப்பற்றல் ஆ) ஆநிரை கவர்தல்
இ)
வலிமையை நிலைநாட்டல் ஈ) கோட்டையை முற்றுகையிடல்
பாடலைப்
படித்து பின்வரும் வினாக்களுக்கு (12,13,14,15) விடை தருக.
காவல்
உழவர் களத்துஅகத்துப் போர்ஏறி
நாவலோஓ என்றிசைக்கும் நாளோதை - காவலன்தன்
கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தால் போலுமே
நல்யானைக் கோக்கிள்ளி நாடு.
12. பாடல் இடம்பெற்ற நூல்
அ) பரிபாடல் ஆ) முத்தொள்ளாயிரம் இ) சிலப்பதிகாரம் ஈ) கம்பராமாயணம்
13. கொல் யானை – இலக்கணக்குறிப்பு
அ) உம்மைத்தொகை ஆ) எண்ணும்மை இ) பண்புத்தொகை ஈ) வினைத்தொகை
14. ”கிள்ளி” என்பது யாரைக்குறிக்கும்?
அ) சேர
மன்னன் ஆ) சோழ
மன்னன் இ) பாண்டிய
மன்னன் ஈ) பல்லவ
மன்னன்
15. பாடலில் இடம்பெற்ற சீர் மோனையைத்
தேர்ந்தெடுக்க
அ) நாவலோ –
நல்யானை ஆ) நாவலோ – நாளோதை
பகுதி – II (மதிப்பெண்கள்:15)
பிரிவு -1
4×2-8
எவையேனும்
நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். வினா எண் 21-க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
16.
விடைகளுக்கேற்ற வினாக்கள் எழுதுக.
அ. கம்பர்
சோழநாட்டுத் திருவழுந்தூரைச் சார்ந்தவர்.
ஆ. தமிழர்கள்
நிலத்தை ஐந்து வகையாகப் பிரித்து வாழ்ந்தனர்.
17.
மன்னுஞ் சிலம்பே மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ
வாழ்த்துவமே! -இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக
18.
மென்மையான மேகங்கள், துணிச்சலும் கருணையும்
கொண்டு வானில் செய்யும் நிகழ்வுகளை எழுதுக.
19.
சங்க இலக்கியத்தில் அரசனின் கடமையாகச் சொல்லப்பட்டன எவை?
20.
மொழிபெயர்ப்பு ஒரு பயன்கலை – விளக்குக.
21.
'செயல்' என முடியும் திருக்குறளை எழுதுக.
பிரிவு
- 2
எவையேனும்
ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 5×2-10
22.
கலைச்சொல் தருக. அ) Sceptor ஆ) Discourse
குறிப்பு: செவிமாற்றுத்
திறனாளர்களுக்கான மாற்று வினா
தொடரில் விடுபட்ட வண்ணங்களை உங்களின் எண்ணங்களால்
நிரப்புக
அ.கண்ணுக்குக்
குளுமையாக இருக்கும் ----- ---- வெயில் பரவிக்கிடக்கிறது.
ஆ. வெயில் அலையாதே;உடல் ------ விடும்.
23.
பழமொழியை நிறைவு செய்க.
அ) உப்பிட்டவரை------- ஆ) அளவுக்கு-----
24.
வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை தேரில்
காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன் இத்தொடர் கால வழுவமைதிக்கு
எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?
25. பலகை
என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
26.
வினை அடியை விகுதியுடன் இணைத்துத்
தொழிற்பெயர்களை உருவாக்குக. அ. காண், ஆ.
சிரி
27. மருத நிலத்திற்கான
சிறுபொழுதையும், பெரும்பொழுதையும் எழுதுக.
28.
செயற்கை - பகுபத உறுப்பிலக்கணம் தருக.
பகுதி
– III (மதிப்பெண்கள்:18)
பிரிவு
-1
எவையேலும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2×3=6
29.
தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில்
இட்டுக் குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி' என்பது இலக்கியச் செய்தி. விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே
இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.
30.
உரைப்பத்தியைப் படித்து விளாக்களுக்கு விடை தருக.
ஜெர்மனியில் ஓர் ஆண்டில் பிற
மொழிகளிலிருந்து 5000 நூல்கள் வரை மொழி பெயர்க்கப்படுகின்றன.
புள்ளி விவரப்படி அதிகமான தமிழ் நூல்கள் பிறமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
அவ்வரிசையில் முதலிடம் ஆங்கிலம், இரண்டாமிடம் மலையாளம்.
மொழிபெயர்ப்பினால் புதிய சொற்கள் உருவாகி மொழிவளம் ஏற்படுகிறது.
(அ) ஜெர்மனியில் ஓர் ஆண்டில் எத்தனை நூல்கள் வரை மொழி பெயர்க்கப்படுகின்றன ?
(ஆ) தமிழ் நூல்கள் எந்த மொழியில் அதிக அளவில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது ?
(இ) மொழிபெயர்ப்பின் பயன் என்ன ?
31. "தலையைக்
கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" இடம் சுட்டிப் பொருள் விளக்குக.
பிரிவு
-2
எவையேலும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2×3=6
32.
உயிர்கள் உருவாகி வரை ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல்வழி
அறிந்தவற்றைக் குறிப்பிடுக.
33.
ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் கூறிய கருத்துகளை வள்ளுவர் வழிநின்று
விளக்குக
34.
அடிபிறழாமல் எழுதுக.
அ. “விருந்தினனாக' எனத்
தொடங்கும் காசிக்காண்டம் பாடல்
(அல்லது)
ஆ) 'தண்டலை' எனத் தொடங்கும் 'கம்பராமாயணப்
பாடல்'
பிரிவு
-2
எவையேலும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2×3=6
35. அறனீனும்
இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள் - குறட்பாவினை அலகிட்டு
வாய்ப்பாடு எழுதுக.
36. ஆசிரியப்பாவின்
பொது இலக்கணத்தை எழுதுக.
37. தற்குறிப்பேற்ற
அணியைச் சான்றுடன் விளக்குக
பகுதி
- IV (மதிப்பெண்கள்:25)
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி.
5×5=25
38.அ) மருத நிலத்தில் இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைக் கம்பரின்
கலைநயத்துடன் எழுதுக.
(அல்லது)
ஆ) பொருள்செயல் வகை குறித்து
வள்ளுவர் கூறும் கருத்துகளை விளக்குக.
39. மாநில
அளவில் நடைபெற்ற ‘கலைத்திருவிழா போட்டியில் பங்கேற்று
’கலையரசன்’ பட்டம் பெற்ற தோழனை வாழ்த்தி மடல்
எழுதுக. (அல்லது)
ஆ) உங்கள் ஊரில் பழுதடைந்துள்ள
மேனிலை நீர்த்தேக்கத் தொட்டியைச் சரிசெது தருமாறு நகராட்சித் தலைவருக்கு
விண்ணப்பக் கடிதம் எழுதுக.
40. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
41. 22 , பாரதியார் தெரு, காஞ்சிபுரம்-1 என்ற முகவரியில் வசித்து வரும் தமிழ்க்கோவின் மகள் கந்திற்பாவை தமிழ்நாட்டு
விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வளைகோல் பந்தாட்டத்தில் சேர்ந்து பயிற்சி பெற விரும்புகிறார்.
தேர்வர் கந்திற்பாவையாக எண்ணி உரிய படிவத்தை நிரப்புக.
42. அ) மாணவ நிலையில்
நாம் பின்பற்ற வேண்டிய அறங்களும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் பட்டியலிடுக (அல்லது)
ஆ) தமிழில் மொழிபெயர்க்க.
அ. If you talk to a man in a language he
understand,thats goes to his head. If you talk to him in his own language that
goes to his heart – Nelson Mendela
ஆ. Language is the road map of a culture. It tells you
where its people come from and where they are going – Rita Mae Brown
பகுதி
- V (மதிப்பெண்கள்: 24)
அனைத்து
வினாக்களுக்கும் விரிவான
விடையளிக்கவும். 3×8=24
43.
அ) காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை விவரித்து எழுதுக. (அல்லது)
ஆ) போராட்டக் கலைஞர் பேச்சுக் கலைஞர் நாடகக்
கலைஞர் திரைக் கலைஞர் இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய தலைப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று
எழுதுக.
44.அ) புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத்
தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி
படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?
(அல்லது)
ஆ) கிடைப்பதற்கரிய திருமந்திரம் கிடைத்தவுடன்
இராமானுசர் செய்த நிகழ்வுகளைத் தொகுத்து எழுதுக.
45. அ) குறிப்புகளைக்
கொண்டு கட்டுரை எழுதி தலைப்பு தருக: முன்னுரை- சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு-
சாலை விதிகள்- ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள்- விபத்துகளை தவிர்ப்போம், விழிப்புணர்வு தருவோம்- முடிவுரை. (அல்லது)
ஆ) குறிப்புகளைப் பயன்படுத்தி
மதிப்புரை எழுதுக
பள்ளி ஆண்டு விழா
மலருக்காக, நீங்கள் நூலகத்தில் படித்த கதை/ கட்டுரை/ சிறுகதை/ கவிதை நூலுக்கு
மதிப்புரை எழுதுக. குறிப்பு: நூல் தலைப்பு- நூலின் மையப்
பொருள்- மொழி நடை-வெளிப்படும் கருத்து-நூல் கட்டமைப்பு- சிறப்புக் கூறு-
நூலாசிரியர்.