10.ஆம் வகுப்பு தமிழ் விடைக்கேற்ற வினாத்தொடர் அமைத்தல்

 


10.ஆம் வகுப்பு - தமிழ்

விடைக்கேற்ற வினா அமைத்தல்- பயிற்சி வினாக்கள்

1. ஒரு நாட்டின் வளமும் அங்கு வழங்கும் சொற்களின் வளமும் தொடர்புடைய அணி என்கிறார் பாவாணர்.

2. தமிழ்நாட்டில் செந்நெல், வெண்ணெல் கார்னல் சம்பா மட்டை எனப் பல நெல் வகைகள் விளைகின்றன.

3. உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியா.

4. கா.அப்பாத்துரையார் பொன்மொழிப் புலவர் என அழைக்கப்படுகிறார்.

5. மிக மெல்லிய பல தோல் வகை தொலி எனப்படுகிறது.

6. தாவரங்களில் விளையும் தானியங்களை மணி என்போம்.

7. நெல் கத்தரி முதலியவற்றின் இளநிலை நாற்று எனப்படும்.

8. இந்திய மொழிகளிலேயே மேலைநாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறியது தமிழ் தான்

9. தனது திரைப்படப் பாடல்கள் வழியாக எளிய முறையில் மெய்யியலை மக்களிடையே கொண்டு சேர்த்தவர் கண்ணதாசன்.

10. புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம் புயலில் ஒரு தோணி.

11. திருமூலர் திருமந்திரத்தில் மூச்சுப் பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியுள்ளார்

12. தொல்காப்பியர் உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்கிறார்.

13. காற்று வீசுகின்ற திசையை கொண்டும் தமிழர்கள் அதற்குப் பெயர் சூட்டியுள்ளனர்.

14. கடுங்காற்று மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது என்று காற்றின் வேகத்தை பற்றி மதுரை இளநாகனார் குறிப்பிட்டுள்ளார்.

15. காற்று மாசு படுவதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது.

16. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15 ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

17. தொடர்ந்து பெய்த மழையால் பூமி வெள்ளத்தில் மூழ்கியது

18. பரிபாடல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும்

19. நாகூர் ரூமி தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர்

20. சொற்கள் பொருள் முடிவு தந்தால் அது முற்றுத்தொடர் எனப்படும்.

21. தமிழர் மரபில் உணவோடு உணர்வையும் குழைத்துச் செய்த சமையல் பண்பாட்டை வெளிப்படுத்தும் விருந்தாகிறது.

22. முன்பின் அறியாத புதியவர்களுக்கு விருந்தினர் என்று பெயர்.

23. முகம் வேறுபடாமல் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும்.

24. கோவலனைப் பிரிந்து வாழும் கண்ணகி அவனைப் பிரிந்ததை விட விருந்தினரைப் போற்ற முடியாத நிலையை எண்ணியே வருந்தினாள்.

25. தனித்து உண்ணாமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை.

26. நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு தமிழருக்கு உண்டு

27. நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்று குழல் மீன் கறியும் உணவும் கொடுத்தனர் என்கிறது சிறுபாணாற்றுப்படை.

28. தலை வாழை இலையில் விருந்தினருக்கு உணவு அளிப்பது நம் மரமாகக் கருதப்படுகிறது.

29. கொற்கையின் அரசர் அதிவீரராம பாண்டியர்

30. குழந்தையின் தலை அசைத்தலுக்கும் சந்தம் அமைத்துத் தருகிறது பிள்ளைத்தமிழ்.

31. 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று பிள்ளைத்தமிழ்.

32. பிள்ளைத்தமிழ் ஆண்பால் பிள்ளைத் தமிழ், பெண்பால் பிள்ளைத்தமிழ் என இரு வகைப்படும்

33. கி.ராஜநாராயணன் கரிசல் வட்டாரச் சொல்லகராதி ஒன்றை உருவாக்கியுள்ளார்.

34. கி. ராஜநாராயணன் தொடங்கிய வட்டாரப் புனைகதை மரபு கரிசல் இலக்கியம் என்று அழைக்கப்படுகிறது.

35. தொகைநிலைத் தொடர் 8 வகைப்படும்

36. பாடலோடு பொருந்தவில்லை எனில் இசையால் பயனில்லை என்கிறார் திருவள்ளுவர்.

37. மொழிகளுக்கு இடையேயான வேற்றுமைகளை வேற்றுமைகளாகவே நீடிக்க விடாமல் ஒற்றுமைப்படுத்த உதவுவது மொழிபெயர்ப்பு.

38. மொழிபெயர்த்தல் என்ற தொடரைத் தொல்காப்பியர் மரபியலில் குறிப்பிட்டுள்ளார்.

39. இராமாயண, மகாபாரதத் தொன்மச் செய்திகள் சங்க இலக்கியங்களில் பரவலாக இடம் பெற்றுள்ளன.

40. மொழிபெயர்ப்பைக் கல்வியாக ஆக்குவதன் மூலம் அனைத்து உலக அறிவையும் நாம் எளிதாகப் பெற முடியும்.

41. மொழிபெயர்ப்பு கழிவின்றி, சிதறின்றி மூலமொழியின் கருத்துக்களை வெளிப்படுத்துவதாக அமைய வேண்டும்.

42. பரஞ்சோதி முனிவர் திருமறைக்காட்டில் பிறந்தார்.

43. பால் என்பது திணையின் உட்பிரிவு ஆகும்.

44. இளமைப் பருவத்திலேயே தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகள் கலைஞரை ஈர்த்தன.

45. வள்ளுவர் கோட்டத்தில் திருவாரூர் கோவில் தேரின் மாதிரியில் கட்டப்பட்டுள்ள சிற்பத்தேர் பலரையும் கவர்வதாகும்.

46. கம்பர் சோழநாட்டுத் திருவழுந்தூரைச் சார்ந்தவர்.

47. தமிழர்கள் நிலத்தை ஐந்து வகையாகப் பிரித்து வாழ்ந்தனர்.

48. அகப்பாடல்களுக்கு உரிய பொருள் உரிப்பொருள் எனப்படும்.

49. வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேயர்களுக்கு எதிராகச் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்.

50. ஆந்திர மாநிலம் பிரியும் போது சென்னை தான் அதன் தலைநகராக இருக்க வேண்டும் என்று ஆந்திரத் தலைவர்கள் கருதினர்.



கருத்துரையிடுக

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை