யார் கடவுள்?
தமிழும், தமிழ் இலக்கியங்களும் எப்போதுமே அறிவுக்குப் புறம்பான எந்தச் செய்திகளையும் மக்களிடம் திணிப்பதில்லை. யார் தெய்வம் என்ற வினாவுக்கு தமிழ் இலக்கியம் கூறும் அறிவார்ந்த விடையை இங்குக் காண்போம்.
முன்னர் இன்பம் தருவது போலக் காட்டிப் பின்னர்த் துன்பத்துக்கு ஆளாக்கும் மனத்தினை ஒருவன் அடக்குவானானால், அவனுக்கு ஒப்பாகச் சொல்லக் கூடிய தெய்வம் வேறு ஒன்று இல்லை. எண்ணையும், எழுத்தையும் கற்பதால் என்ன பயன்? இருக்கும்போது இன்பத்தையும், மறைந்தபின் புகழையும் தருகின்ற அறநூல்களையே ஆராய்ந்து அறிந்து அதன்வழி நடத்தலே உண்மையான அறிவுடைமை ஆகும். அந்த அறிவுடைமை ஒருவனுக்கு வாய்க்கப்பெற்றால் அவனைவிட உயர்ந்த தெய்வம் வேறு ஒன்றும் இல்லை. " அறிவுடையவனே உண்மையான தெய்வம் " இதுவே தமிழர்களின் இறைக் கோட்பாடு ஆகும். " இந்த உலகம் அறிவால் ஆளப்பட வேண்டும் " என்பதே தமிழர்களின் தலையாயக் கொள்கையாகும்.
எனும் கருத்து பினவரும் பாடல் மூலம் விளக்கப்படுகிறது.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி