இரண்டாம் பருவ தொகுத்தறி மதிப்பீடு -மாதிரி வினாத்தாள் (2025-2026)
ஏழாம் வகுப்பு
பாடம்-
தமிழ் மதிப்பெண்கள்: 50
அ)பலவுள்தெரிக:
5X1=5
1. போர்
இல்லாத உலகில் ------ நிலவும். அ) பதற்றம் ஆ) சாந்தம் இ) சோர்வு ஈ) வெறுப்பு
2. முற்காலத்தில்
இந்திய மக்கள் துன்பப்பட்டதற்குக் காரணம் ----இல்லாமை
அ) விளையாட்டு ஆ) கல்வி இ) கலைகள் ஈ) முயற்சி
3. காலத்தின்
அருமையைக் கூறும் திருக்குறள் அதிகாரம்
அ)
கல்வி ஆ) காலம் அறிதல் இ) வினையறிதல் ஈ) மடியின்மை
4. நகைச்சுவை
உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஒவியம்
அ) குகை ஓவியம் ஆ) சுவர் ஓவியம் இ) கண்ணாடி ஓவியம் ஈ) கேலிச்சித்திரம்
5. பண்டிகை, கேணி என்பன ----- சொற்கள். அ) இயற் ஆ) திரி இ)
திசை ஈ) வட
ஆ) பிரித்துஎழுதுக
2X1=2
6. எழுத்தென்ப 7. நாடெங்கும்
இ)
சேர்த்துஎழுதுக
2X1=2
8. இவை+எல்லாம் 9. குறை+எனவே
ஈ) கோடிட்ட இடங்களை நிரப்புக.
2X1=2
9. கருத்துப்படங்களை அறிமுகப்
படுத்தியவர்---- 10. கலம்காரி ஓவியம் என்று அழைக்கப்படுவது-
ஈ) நான்கு
வினாக்களுக்கு மட்டும் ஓரிரு சொற்களில் விடை தருக:
4X2=8
11. பூவின்
சிரிப்பைப் பற்றிக் கவிஞர் உமா மகேஸ்வரி கூறுவது யாது?
12. இந்திய
நாடு எவற்றில் சிறந்து விளங்கியது?
13. குகை
ஓவியங்களில் இருந்து நாம் அறியும் செய்திகள் யாவை?
14. கல்விச்
செல்வத்தின் இயல்புகளாக நாலடியார் கூறும் செய்திகளை எழுதுக
15.நூல்களை
எவ்வாறு படிக்க வேண்டும்? 16.தந்த ஒவியங்கள் கேரளாவில்
அதிகம் காணப்படுவது ஏன்?
உ) மூன்று
வினாக்களுக்கு மட்டும் ஓரிரு சொற்களில் விடை தருக: 3X2=6
17. வளர்தல்
என்பது எவ்வகைப் பெயர்? விளக்கம் தருக.
18. குங்குமம்,
கமலம் என்பன எவ்வகை வடசொற்கள்?
19. திரிச்சொல்லின்
வகைகள் குறித்து விளக்குக 20. இயற்சொல்லின் நான்கு வகைகள் யாவை?
ஊ) இரண்டு
வினாக்களுக்கு மட்டும் ஓரிரு வரிகளில் விடை தருக: 2X3=6
21. கல்வியே
அழியாத செல்வம் என்பதை விளக்குக
22. ஓலைச்சுவடி
ஓவியங்கள் குறித்து நீங்கள் அறிந்து கொண்டவற்றை எழுதுக.
23. கூலித்தொழிலாளர்களின்
வாழ்க்கைத் தரம் உயர நீங்கள் கூறும் வழிமுறைகள் யாவை?
எ. அடிமாறாமல் எழுதுக:
2+3=5
24. ”எண்ணி”
எனத்தொடங்கும் திருக்குறளை அடிமாறாமல் எழுதுக.
25. ”வைப்புழி”
எனத் தொடங்கும் பாடலை அடி மாறாமல் எழுதுக.
ஏ.விடையளிக்க
2X2=4
26. இடைச்சொல் 'கு' சேர்த்துத் தொடரை எழுதுக
அ. மாடு புல் கொடுத்தார் ஆ. பாட்டு பொருள் எழுது
27. இருபொருள் தருமாறு தொடரில் அமைத்து எழுதுக அ. ஆறு, ஆ. விளக்கு
ஐ.
விரிவானவிடையளிக்க:
2X5=10
28. அ.
கல்விச் செல்வம் குறித்து நாலடியார் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக (அல்லது)
ஆ.
பூக்களைக் கொய்யும்போது உங்கள் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களை எழுதுக.
29. அ.
உங்கள் பகுதியில் நூலகம் ஒன்று அமைத்துத்தர வேண்டி நூலக
ஆணையருக்குக் கடிதம் எழுதுக. (அல்லது)
ஆ.
நீங்கள் சுற்றுலா வழிகாட்டியாக இருந்தால் வள்ளுவர் கோட்டம்
திருவள்ளுவர் சிலை போன்றவற்றை பார்வையிட வருபவர்களுக்கு எவ்வாறு விளக்கி
கூறுவீர்கள்?