10 TH STD TAMIL REVISION PLAN JANUARY 4 TH WEEK

 10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 20-01-2025 முதல் 25-01-2025        

மாதம்          ஜனவரி         

வாரம்     :  நான்காம் வாரம்                                               

வகுப்பு  :   பத்தாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :   திருப்புதல்

கற்றல் நோக்கங்கள்   :

      # முக்கிய வினாக்களைப் பட்டியலிட்டு, மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து தேர்வெழுதச்செய்தல்.

முக்கிய வினாக்கள்:

2 மதிப்பெண் வினாக்கள்

1. வசன கவிதை – குறிப்பு வரைக

2. உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

     வடுக்காண் வற்றாகும் கீழ்இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி,அதன் இலக்கணம் தருக.

3 தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு தருக

4. பூவின் நிலைகளைக் குறிக்கும் சொற்கள் யாவை?

5. கீழ்க்காணும் சொற்களின் கூட்டப்பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக.

        (குவியல், குலை, மந்தை, கட்டு)   கல், புல், பழம், ஆடு)

6. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக

7. பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்? ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும்பயனிலைகள் யாவை ?

8. பழமொழியை நிறைவு செய்க

    அ. உப்பில்லாப்------ ஆ. ஒரு பானை ------- இ. உப்பிட்டவரை----- ஈ. விருந்தும்  உ. அளவுக்கு

9. வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு பொதிந்த இரண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடுக

10. செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக.

11. கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப் பொருளைத் திருத்தி எழுதுக.

உழவர்கள் மலையில் உழுதனர்.

முல்லைப் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர். 

12. தஞ்சம் எளியர் பகைக்கு - இவ்வடிக்குரிய அசைகளையும் வாய்பாடுகளையும் எழுதுக.

5 மதிப்பெண் வினாக்கள்

1. காட்சியைக்கண்டு கவினுற எழுதுதல்

( எந்த படம் தரப்பட்டாலும் இதையே எழுதலாம்)

சிந்திக்கத் தூண்டும் காட்சி!

சிந்தையில் நின்ற காட்சி!

எதிர்காலத்தேவை இக்காட்சி!

உண்மையை உணர்த்தும் காட்சி!

மனதில் வைத்தால் நமக்கு

நன்மையை அளிக்கும் காட்சி!

என் கவிதைக்கு இரையான காட்சி!

2. நூலக உறுப்பினர் படிவம்

3. மேனிலை வகுப்பு சேர்க்கை விண்ணப்பம்

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை