புயல் பாதிப்பு குறித்த கட்டுரை

 புயல் பாதிப்பு குறித்த கட்டுரை 

முன்னுரை:

       தமிழகத்தின் பதின்மூன்று கடலோர மாவட்டங்கள் மிக அதிகமாக புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிப்பிற்கு உள்ளாகின்றன. கடந்த காலத்தில் பல புயல் சீற்றங்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

புயல்:

       ஒரு புயலானது தோன்றும் நிலை வலுவடையும் நிலை மற்றும் வலுவிழந்த நிலை என ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ச்சியாக மூன்று நிலைகளில் நடக்கிறது.

          கடற்பரப்பில் 26° செல்சியஸ்க்கு அதிகமான வெப்பநிலை தொடர்ந்து நீடிக்கும் போது காற்று வேகமாக வெப்பமடைந்து மேல்நோக்கிச் செல்கிறது. அப்போது அந்த இடத்தில் காற்றின் அழுத்தம் அதிகம் உள்ள பகுதியிலிருந்து வெற்றிடத்தை நோக்கி காற்று வீச ஆரம்பிக்கிறது. மேலே செல்லும் வெப்பக் காற்று குளிர்வடைந்து வானில் தாழ்வு நிலையில் தங்குகிறது. இதன் காரணமாக தாழ்வுநிலை உண்டாகி அதனால் அங்கு காற்றின் அழுத்தம் அதிகரிக்கும் நிலையே காற்றழுத்த தாழ்வு நிலையாகும். பூமியின் சுழற்சி காரணமாக காற்று அலைக்கழிக்கப்பட்டு அதன் வேகம் அதிகரித்து புயலாக உருமாறுகிறது

புயல் எச்சரிக்கை கூண்டுகள்:

    புயல் வீசும் போது பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாவது கடலோரப்பகுதிகளாகும். ஆகையால் துறைமுகங்கள்துறைமுகங்களை நோக்கி வரும் படகுகள்கப்பல்கள்கடலில் இருந்து கரையை நோக்கி வருபவர்கள் மற்றும் மீனவர்களுக்கு புயல் தொடர்பான எச்சரிக்கை விடுக்க பயன்படும் சிக்னல்களே புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஆகும்.

       இதற்காக கடலில் இருந்து காண ஏதுவாக துறைமுகத்தில் ஓர் உயர்ந்த கம்பத்தில் பகல் நேரத்தில் கூண்டுகளையும் இரவு நேரத்தில் சிவப்பு-வெள்ளை விளக்குகளையும் ஏற்றுவார்கள். இந்த எச்சரிக்கை கூண்டுகளில் 11 நிலைகள் இருக்கின்றன. நிலைமையின் தீவிரம் அதிகரிக்க அதிகரிக்க எண்ணிக்கை உயர்ந்து கொண்டு போகும். இந்த நிலைக்கு இந்த கூண் இந்த கூண்டு என்பதனை இந்திய வானிலை மையம் தீர்மானித்து வைத்துள்ளது.

தமிழகத்தில் புயல்:

     பெஞ்சல் புயல் என்பது வங்கக் கடலில் உருவாகிய புயலைக் குறிக்கும். இந்த பெயரை சவூதி அரேபியா பரிந்துரை செய்தது. வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்,  புயலாக வலுப்பெற்றது. நவம்பர் 30 அன்று இரவு வேளையில் புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடந்தது. 

பாதிப்பு:

      பெஞ்சல் புயல் வட மாவட்டங்களில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் வரலாறு காணாத மழையையும், வெள்ளப்பெருக்கையும் கண்டன. 

       சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் ஓடுபாதைகளில் நீர் சூழ்ந்ததால் தனது பயணச் சேவையை நிறுத்தியது.  மேலும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலுள்ள கல்லூரிபள்ளிகள் தொடர்ந்து சில சில நாட்கள் விடுமுறை அறிவித்தன. தென்னக இரயில்வே  மற்றும் கிழக்கு கடற்கரை தொடருந்து மண்டலம் ஆகியவற்றின் பல் வேறு தொடருந்துகள் நிறுத்தப்பட்டன.சென்னையில் உள்ள தொழிற்பேட்டைகள்சிறு மற்றும் குறு தொழில்கள் வெள்ள நீராலும் மின்தடையாலும் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகின ஆந்திராவில் பல விளை நிலங்களும் பயிர்களும் இந்த புயலால் பாதிக்கப்பட்டன.

புயல் பாதுகாப்பு நடவடிக்கைகள்:

      வானிலை மையம் புயல் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கும் போது பேரிடர்களில் இருந்து காத்துக்கொள்ள அதற்கான முன்னேற்பாட்டுடன் இருப்பது அவசியமாகிறது.

         புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டால் கடற்கரையை ஒட்டியுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். புயல் தாக்கும் நேரங்களில் வீட்டில் உள்ள மின்சார உபகரணங்களை பொரு நிறுத்தி விடுதல் வேண்டும். அத்துடன் அ அத்துடன் அத்தியாவசிய அத்தியாவசிய பொருட்களை அருகில் வைத்து கொள்ளுதல் சிறந்தது. புயல் பாதிப்பு இல்லை என்று அதிகார பூர்வ அறிவிப்பு வரும் வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

முடிவுரை:

     புயலின் போது உண்டாகும் பலத்த சூறாவளி காற்றுகடல் சீற்றம் மற்றும் கனமழை ஆகியவற்றினால் அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. புயல் ஏற்படின் பாதிப்பிற்கு உள்ளாகும் மாவட்டங்கள் குறித்தும் பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறிவுரைகள் குறித்தும் வானிலை ஆய்வு மையம் வழங்கும் தகவல்களை கருத்தில் கொண்டு செயற்படுவதனூடாக பேரிடர் கால ஆபத்துக்களை குறைத்துக் கொள்ள முடியும். 

 

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை