மழைநீர் சேகரிப்பு கட்டுரை
”விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்ப தரிது.”
என்ற வள்ளுவரின் குறளுக்கு ஏற்ப மழையே இந்த உலக உயிர்கள் செழித்து வாழ்வதற்கு முதன்மையான காரணமாக அமைகிறது.
இத்தகைய உயிர்த்துளிகளைச் சேமிக்கும் முறைகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
நீரின்றி இயங்காது உலகம்
ஓரறிவு உயிரான புல் முதல் ஆறறிவு உயிரான மனிதன் வரையில் அனைத்து உயிர்ளும் வாழ்வதற்கு நீரே அடிப்படை. பரிணாம வளர்ச்சிக் கோட்பாடின்படி உயிரினங்கள் தோன்றியதே நீரில்தான். நீர் இல்லையெனில் உழவுமில்லை; உணவுமில்லை. வள்ளுவரின்
‘ துப்பார்க்குத்
துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை’ என்னும் குறள் நீரின் அவசித்தை உணர்த்தும்.
நீர்ப்பற்றாக்குறைக்குக் காரணம்
மனிதன் தன் தேவைக்கு அதிகமாக நீரைப் பயன்படுத்தி வீணாக்குவதாலும் நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சுவதாலும் மரங்களை வெட்டியதன் விளைவால் வந்த மழைப்பொழிவு குறைவினாலும் நீரிநிலைகள் ஆக்கரமிப்பாலும் நீர்ப்பற்றாக்குறை ஏற்படுகிறது.
சேமிக்கும் முறைகள்
நீருக்கு ஆதாரமாக் விளங்கக்கூடிய குளம்,
ஏரி, ஆறு முதலிய நீர்நிலைகளை ஆழப்படுத்தி மழைநீரைச் சேமிக்கலாம்.
அந்நீர்நிலையைச்
சுற்றிலும் மரங்களை நட்டு நீராவிப் போக்கினைத் தடுப்பதோடு மழைவளமும் பெறலாம்.
மழைநீர் சேமிப்புத் தொட்டி
நம் வீடுத்தேடிவரும் விருந்தினரான மழையினை வீணாக்காமல் மழைநீர் சேகரிப்புத் தொட்டியினை அமைத்து, மழைநீரினைச் சேகரிக்கலாம்.
மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைப்பது மிக எளிது. குறிப்பிட்ட ஆழத்திற்குப் பள்ளம் தோண்டி அதில் மணல் மற்றும் சிறுக் கல்துண்டுகளைப் பாதியளவு நிரப்பு,
வான்மழை வந்து சேரும்வண்ணம் வழி அமைத்தால் மழைநீர்ச் சேகரிப்புத்தொட்டி தயாராகிவிடும்.
மழைநீரின் பயன்கள்
உயிரினங்களின் வாழ்வுக்கு ஆதாரமான உணவினை உருவாக்கிக் கொடுப்பதோடு தானும் உணவாகும் தன்மை உடையது மழை. மேலும், உலகிற்கு உணவினை வழங்கும் பயிர்த்தொழில் செழிப்பதும் இம்மழையால்தான்.
‘ ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும் வாரி வளங்குன்றி கால்’ என்னும் குறள் மழைநீரின் பயனை விளக்குகிறது.
மரம்
வளர்ப்போம்; மழை பெறுவோம்!
மரமில்லையேல் மழையில்லை என்பதை உணர்ந்து மழை வளத்திற்குக் காரணமான மரங்களை அழிகாமல் காப்பதோடு, மரக்கன்றுகளை வீடுதோறும் வீதிதோறும் நட்டு மழை வளம் பெறுவோம்.
முடிவுரை
’யாசிக்கும் பூமிக்கு வானம் வழங்கும் வைரக் காசுகள்தான் மழை’
. வைரத்தைக் காப்பதுபோல மழையினைச் சேமித்துப் பாதுகாத்து உலகினை வளம்பெற செய்வோம்!
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி