|
அரசு
துணைப்
பொதுத்தேர்வு-ஜூலை 2026 10. ஆம் வகுப்பு தமிழ் மொத்த மதிப்பெண்கள்: 100
நேரம் : 3.00 மணி+15 நிமிடங்கள் |
|
குறிப்புகள் : i) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. ii) விடைகள் தெளிவாகவும், குறித்த அளவினதாகவும்,
சொந்த நடையிலும் அமைதல் வேண்டும். |
பகுதி –
I (மதிப்பெண்கள்:15)
அனைத்து
வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
15×1=15
1. வேர்க்கடலை,
மிளகாய்விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக்
குறிப்பது :
(அ)
குலைப் பெயர் வகை (ஆ)
மணிப் பெயர் வகை (இ)
கிளைப் பெயர் வகை (ஈ)
இலைப் பெயர் வகை
2. "மையோமரகதமோமறி கடலோ மழைமுகிலோ''
இப்பாடல் அடியில்
குறிப்பிடப்படாத நிறத்தைக் கண்டறிக.
(அ)
கருமை (ஆ) பச்சை (இ) பழுப்பு (ஈ) நீலம்
3. நன்மொழி
என்பது
(அ)
பண்புத் தொகை (ஆ)
உவமைத் தொகை (இ)
அன்மொழித் தொகை (ஈ)
உம்மைத் தொகை
4. "தா" என்ற வேர்ச்சொல்லின் பெயரெச்சத் தொடர்
(அ)
தந்த அரசர் (ஆ)
அரசர் தந்தார் (இ)
தந்து சென்றார் (ஈ)
அரசே தருக!
5. பொருந்தும்
விடைவரிசையைத் தேர்ந்தெடுக்க.
(1) கொண்டல் - (i) மேற்கு
(2) கோடை - (ii) தெற்கு
(3) வாடை - (iii) கிழக்கு
(4) தென்றல் - (iv) வடக்கு
(அ) (1)-(i),
(2)-(ii), (3)-(iii), (4)-(iv) (ஆ)
(1)-(iii), (2)-(i), (3)-(iv), (4)-(ii)
(இ) (1)-(iv),
(2)-(iii), (3)-(ii), (4)-(i) (ஈ)
(1)-(iii), (2)-(iv), (3)-(i), (4)-(ii)
6. இரு
நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்
(அ)
நாட்டைக் கைப்பற்றல்(ஆ) ஆநிரை கவர்தல்
(இ)
வலிமையை நிலைநாட்டல் (ஈ) கோட்டையை முற்றுகையிடல்
7. குயில்களின்
கூவலிசை: புள்ளினங்களின் மேய்ச்சலும் பாய்ச்சலும்; இலைகளின்
அசைவுகள்; சூறைக்காற்றின் ஆலோலம்:
(அ)
வனத்தின் நடனம் (ஆ)
காற்றின் பாடல் (இ)
உயிர்ப்பின் ஏக்கம் (ஈ) நீரின் சிலிர்ப்பு
8. 'கேட்ட
பாடல்' எவ்வகைத் தொடர்?
(அ)
வினையெச்சத் தொடர் (ஆ) பெயரெச்சத் தொடர் (இ) வேற்றுமைத் தொடர் (ஈ) விளித் தொடர்
9. பொருத்தமானதைக்
கொண்டு பழமொழியை நிறைவு செய்க.
உப்பில்லாப்
பண்டம்----------
(அ)
தொப்பையிலே (ஆ)
குப்பையிலே (இ)
அகப்பையிலே (ஈ)
பையிலே
10. 'எறும்புந்தன் கையால் எண்சாண்' - தொடரில்
இடம்பெற்றுள்ள எண்ணுப் பெயர்
(அ)
உ (ஆ) ரு (இ) கூ ஈ) அ
11. படர்க்கைப்
பெயரைக் குறிப்பது எது ?
(அ)
யாம் (ஆ) நீவிர் (இ) அவர் (ஈ) நாம்
பாடலைப்
படித்து பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக.
''வண்ணமும்
சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர்வனர் திரிதரு நகர வீதியும்:
பட்டினும் மயிரினும் பருத்தி
நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர்
இருக்கையும்"
12. பாடல்
இடம்பெற்ற நூலைத் தேர்க.
(அ)
பரிபாடல்(ஆ) தேம்பாவணி (இ) காசிக் காண்டம் (ஈ) சிலப்பதிகாரம்
13. 'காருகர்' என்னும் சொல்லின் பொருள்
(அ)
நெய்பவர் (ஆ) ஓவியர் (இ) சிற்பி (ஈ) தச்சர்
14. வண்ணமும்
சுண்ணமும்' இலக்கணக் குறிப்பைத் தேர்க :
(அ)
பண்புத் தொகை (ஆ)
உம்மைத் தொகை (இ)
எண்ணும்மை (ஈ)
உவமைத் தொகை
15. பாடலின்
ஆசிரியரைத் தேர்க.
(அ)
கீரந்தையார்(ஆ) பெருங்கௌசிகனார் (இ)
பரஞ்சோதி முனிவர் (ஈ)
இளங்கோவடிகள்
பகுதி – II (மதிப்பெண்கள்:15)
பிரிவு
-1
4×2-8
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்கவும். வினா எண் 21-க்கு கட்டாயமாக
விடையளிக்கவும்.
16. பழங்களைவிடவும்
நசுங்கிப்போனதாக கல்யாண்ஜி எதைக் குறிப்பிடுகிறார்?
17. விடைகளுக்கேற்ற
வினாக்கள் அமைக்கவும்.
(அ)
தனித்து உண்ணாமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை.
(ஆ)
நாயக்கர், மராட்டியர் ஆட்சிக் காலங்களில் மிகுதியான
சத்திரங்கள் வழிச்செல்வோர்க்காகக் கட்டப்பட்டன.
18. ''கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு
முழுது உணர்ந்த கபிலன் தன்
பால்
பொழிந்த பெரும் காதல்மிகு
கேண்மையினான் -இடைக்காட்டுப் புலவன் தென் சொல்"
இவ்வடிகளில்
கழிந்த பெரும் கேள்வியினான் யார் ?
காதல்மிகு கேண்மையினான் யார் ?
19. 'தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில்
இட்டுக் குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி' என்பது இலக்கியச் செய்தி. விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே
இன்றியமையாத ஒன்றா ? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.
20, சொல்வளத்தை
உணர்த்த உதவும் நெல்வகைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
21. 'விடல்' - என முடியும் திருக்குறளை எழுதுக.
பிரிவு - 2
எவையேனும்
ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 5×2-10
22. தண்ணீர்
குடி,
தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களின் வகையைக் கண்டறிந்து
விரித்து எழுதுக.
23. மரபுத்
தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக.
(அ)
கண்ணும் கருத்தும் (ஆ) அள்ளி இறைத்தல்
24. குறள்வெண்பாவின்
இலக்கணத்தை எழுதி எடுத்துக்காட்டுத் தருக.
25. ஆங்கிலச்
சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை எழுதுக.
(அ) WEALTH (ஆ) SCREENPLAY
குறிப்பு
: செவிமாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா.
தொடரைப்
படித்து விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
(சோறு,
கற்றல், கரு, பூவில்,
அழுத்து)
(அ) கல் சிலை
ஆகுமெனில், நெல் ----- ஆகும்.
(ஆ) விதைக்குத்
தேவை எரு எனில், கதைக்குத் தேவை-----
26. கொடுக்கப்பட்ட
இருசொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க.
(அ)
சிறு – சீறு (ஆ)
கொடு -கோடு
27. 'பதிந்து' - பகுபத உறுப்பிலக்கணம் தருக.
28. கீழ்வரும்
தொடர்களில் பொருந்தாத முதல், கருப்பொருளைத் திருத்தி எழுதுக.
(அ)
உழவர்கள் மலையில் உழுதனர்.
(ஆ)
முல்லைப் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
பகுதி – III (மதிப்பெண்கள்:18)
பிரிவு -1
எவையேலும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2×3=6
29. உயிர்கள்
உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல்வழி அறிந்தவற்றைக்
குறிப்பிடுக.
30. புளியங்கன்று
ஆழமாக நடப்பட்டுள்ளது'
இது போல் இளம்பயிர் வகை ஐந்தின்
பெயர்களைத் தொடர்களில் அமைக்க.
31. உரைப்பத்தியைப்
படித்து வினாக்களுக்கு விடை தருக.
நோக்கமின்றி அறம் செய்வதே மேன்மை தரும்: அறம்
செய்வதில் வணிக நோக்கம் இருக்கக் கூடாது என்பது சங்ககால மக்களின் கருத்தாக
இருந்தது. பிறருக்கு உதவுதல் என்பதைச் சிறந்த அறமாகச் சங்க இலக்கியங்கள்
காட்டுகின்றன. உதவி செய்தலை,
ஈழத்துப் பூதன் தேவனார் 'உதவியாண்மை' என்று குறிப்பிடுகிறார்) வாய்மையைச் சிறந்த அறமாகச் சங்க இலக்கியங்கள்
பேசுகின்றன. வாய்மை பேசும் நாவே உண்மையான 'நா' என்ற கருத்தை, "பொய்யாச் செந்நா",
"பொய்படுபறியா வயங்கு செந்நா" என்று இலக்கியங்கள்
கூறுகின்றன.
(அ) 'உதவியாண்மை' குறித்து நீங்கள் அறிந்தவற்றை எழுதுக.
(ஆ) நோக்கமின்றி
அறம் செய்வது எதனைத் தரும் ?
(இ) 'வாய்மை பேசும் நா' குறித்த இலக்கியக் கருத்தைக்
குறிப்பிடுக.
பிரிவு -2
எவையேலும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக
விடையளிக்கவும். 2×3=6
32. வைத்தியநாதபுரி
முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.
33. மன்னன்
இடைக்காடனார் என்ற புலவருக்குச் சிறப்புச் செய்தது ஏன் ? விளக்கம்
தருக.
34. அடிபிறழாமல்
எழுதுக.
(அ) 'தூசும் துகிரும்' எனத் தொடங்கும் சிலப்பதிகாரப்
பாடல்.
(அல்லது)
(ஆ) 'தென்னன் மகளே' எனத் தொடங்கும் அன்னை மொழியே பாடல்.
பிரிவு -3
எவையேலும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2×3=6
35. ஆசிரியப்பாவின்
பொது இலக்கணத்தை எழுதுக.
36. தேவர்
அனையர் கயவர் அவரும்தாம் மேவன செய்தொழுக லான்
-இக்குறளில் பயின்று
வந்துள்ள அணியை விளக்குக.
37. உலகத்தோ
டொட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார் -இக்குறட்பாவினை அலகிட்டு
வாய்பாடு காண்க.
பகுதி - IV (மதிப்பெண்கள்:25)
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி.
5×5=25
38. (அ) சிலப்பதிகார மரவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும்,
அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.
(அல்லது)
(ஆ)
பெரியாரைத் துணைக்கோடல் என்னும் அதிகாரத்தில் உள்ள கருத்துகளை வள்ளுவர் வழிநின்று
விளக்குக.
39. (அ) மாவட்ட அளவில் நடைபெற்ற 'மரம் இயற்கையின் வரம்'
என்னும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு
பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
(அல்லது)
(ஆ)
நாளிதழ் ஒன்றின் மகளிர்தின சிறப்பு மலரில் "மங்கையராய் பிறப்பதற்கே..."
என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி, அந்நாளிதழ்
ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.
40. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
41.
எண். 30, பார்கவி நகர், நல்லூர்,
ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் யாழினி என்பவரது மகன் தமிழ்வேந்தன்
பத்தாம் வகுப்பில் 475 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவர் அரசு
மேல்நிலைப்பள்ளியில் கணினி அறிவியல் பாடப்பிரிவில் சேர விரும்புகிறார். தேர்வர்
தன்னைத் தமிழ்வேந்தனாக எண்ணிக் கொடுக்கப்பட்ட மேல்நிலை வகுப்பு-சேர்க்கை
விண்ணப்பப் படிவத்தை நிரப்புக.
42.(அ)
பள்ளியில் நான் - வீட்டில் நான் என்ற தலைப்பில் உங்கள் அன்றாட செயல்பாடுகள்
ஏதேனும் ஐந்தினைப் பட்டியலிடுக.
(அல்லது)
(ஆ)
மொழிபெயர்ப்பு.
Translation
is an art in itself. No one can do that. A translator should be neutral and not
attached to any language. Specifically, he should be proficient in both the
Languages Le. both the Language and the Source Language. They should be
familiar with the Social and Cultural conditions of both the Languages.
குறிப்பு :
செவி
மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா.
உரைப்பத்தியைப்
படித்து வினாக்களுக்கு விடை தருக.
திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில்
மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நூல் ஆகும். இந்நூல் அறம், பொருள். இன்பம்
என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது. திருக்குறளில் அறத்துப்பாலில் 38 அதிகாரங்களும் பொருட்பாலில் 70 அதிகாரங்களும்
இன்பத்துப் பாலில் 25 அதிகாரங்களுமாக 133 அதிகாரங்கள் உள்ளன. அதிகாரத்துக்கு 10 குறள்கள்
வீதம் மொத்தம் 1330 குறட்பாக்கள் உள்ளன. அறத்துப்பால்
பாயிரவியல், இல்லறவியல் - துறவறவியல், ஊழியல்
என்னும் நான்கு இயல்களைக் கொண்டது. பொருட்பால் அரசியல், அமைச்சியல்,
ஒழிபியல் என்னும் மூன்று இயல்களைக் கொண்டது. இன்பத்துப்பால் களவியல்,
கற்பியல் என்னும் இரண்டு இயல்களைக் கொண்டது.
(i) பல்வேறு
மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நூல் திருக்குறள் என்பதற்கு ஒரு காரணம்
எழுதுக.
(ii) பொருட்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை யாது ?
(iii) அறத்துப்பாலில் இடம்பெற்றுள்ள இயல்கள் யாவை ?
(iv) 'கற்பியல்' என்பது திருக்குறளில் எந்தப் பிரிவில் இடம்பெற்றுள்ளது?
(v) இப்பகுதிக்கு
ஏற்ற தலைப்பு தருக.
பகுதி - V (மதிப்பெண்கள்: 24)
அனைத்து
வினாக்களுக்கும் விரிவான
விடையளிக்கவும். 3×8=24
43.
(அ) 'புதிய நம்பிக்கை' கதை
வழியாக நீங்கள் அறியும் கருத்துகளை விவரித்து எழுதுக.
(அல்லது)
(ஆ) சங்க இலக்கியத்தில் காட்டும் அறங்கள் இன்றைக்கும் பொருந்தும் என்பதை
இரண்டு எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்க.
44.(அ) 'பாய்ச்சல்' கதையின் மையக்
கருத்தைக் குறிப்பிட்டு அழகுவின் பாத்திர படைப்பை விவரித்து எழுதுக.
(அல்லது)
(ஆ) உங்கள் பாடப்பகுதியில் சாதனை புரிந்தவராகவும், போற்றத்தக்கவராகவும்
நீங்கள் கருதுகின்ற பெண்கள் தொடர்பான செய்திகளைச் சுவைபட எழுதுக.
45.(அ) குறிப்புகளைப் பயன்படுத்தி மதிப்புரை எழுதுக.
பள்ளி
ஆண்டு விழா மலருக்காக,
நீங்கள் நூலகத்தில் படித்த கதை / கட்டுரை / சிறுகதை / கவிதை
நூலுக்கான மதிப்புரை எழுதுக.
குறிப்புகள்
: நூலின் தலைப்பு நூலின் மையப்பொருள் - மொழிநடை -வெளிப்படுத்தும் கருத்து - நூலின்
நயம் - நூல் கட்டமைப்பு - சிறப்புக் கூறு நூல் ஆசிரியர்.
(அல்லது)
(ஆ) குறிப்புகளைப் பயன்படுத்தி 'சாலைப்
பாதுகாப்பு" என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக.
குறிப்புகள்
: சாலை விதிகளை அறிவோம் - ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள் -சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு
தொடர்கள்' - பின்பற்ற வேண்டிய நெறிகள்-தவிர்க்க வேண்டிய செயல்கள்.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி