SSLC TAMIL SUPPLEMENTARY EXAM ANSWER KEY JULY 2026

 


அரசு துணைப் பொதுத்தேர்வு- ஜூலை 2026

10.ஆம் வகுப்பு தமிழ்-உத்தேச விடைக்குறிப்புகள்

                                                                பகுதி-1                                                     15X1=15

வி.எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

ஆ. மணிப்பெயர் வகை

1

2.     

இ. பழுப்பு  

1

3.     

அ. பண்புத்தொகை

1

4.     

. தந்த அரசர்

1

5.     

ஈ. (1)-(iii), (2)-(iv), (3)-(i), (4)-(ii)

1

6.     

இ. வலிமையை நிலைநாட்டல்

1

7.     

அ. வனத்தின் நடனம்

1

8.     

ஆ. பெயரெச்சத்தொடர்

1

9.     

ஆ. குப்பையிலே

1

10.   

. அ

1

11.    

இ. அவர்

1

12.   

ஈ. சிலப்பதிகாரம்

1

13.   

அ. நெய்பவர்

1

14.   

இ. எண்ணும்மை

1

15.   

ஈ. இளங்கோவடிகள்

1

                                     பகுதி-2                            பிரிவு-1                                                        4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

16

அடுத்தவர் மீதான அக்கறை

2

17

. தமிழர் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை எது?

. யாருடைய ஆட்சிக்காலங்களில் மிகுதியான சத்திரங்கள் வழிச்செல்வோருக்காகக் கட்டப்பட்டன?

(மாதிரி விடைகள்)

2

18

குலேசபாண்டியன், இடைக்காடனார்

2


19

இல்லை, விருந்தினரை நன்றாக உபசரிக்க வேண்டும் என்ற எண்ணமே தேவை.

2


20

·        செந்நெல்  

·        வெண்ணெல்

·        கார்நெல்

·        சம்பா  மற்றும் உள்வகைகள்

·        மட்டை

2

21

பல்லார்  பகைகொளலின் பத்தடுத்த  தீமைத்தே

நல்லார் தொடர்கை விடல்.

2

                                                                  பிரிவு-2                                                    5X2=10

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

22

ü        தண்ணீர் குடிதண்ணீரைக்குடி -இரண்டாம் வேற்றுமைத்தொகை

ü  தயிர்க்குடம்தயிரை உடைய குடம் - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

2

23

. மாறன் தான் நட்ட செடியைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டான்   

. எழிலன் பணத்தை தண்ணீர்போல அள்ளி இறைத்தான்    (மாதிரி விடைகள்)

2

24

வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று இரண்டு அடிகளில் வருவது குறள் வெண்பா

   (-கா) வேலொடு நின்றான் இடுவென்றது போலும்

               கோலொடு நின்றான் இரவு.

2

25

அ. செல்வம்   ஆ. திரைக்கதை

2

26

அ. சிறு பூனையும் சீறும்  ஆ. கொடுப்பதற்குக் கோடு இடாதே

2

27

பதிந்து - பதி +த்(ந்) + த் +உ;

பதி - பகுதி

த் - சந்தி (ந் -ஆனது விகாரம்)

த் - இறந்தகால இடைநிலை

உ-வினையெச்ச விகுதி

2

28

# உழவர் வயலில் உழுதனர்.

          # நெய்தல் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.

2

பகுதி-3  (மதிப்பெண்கள்:18)                        பிரிவு-1                                           2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

 

ü  வானமும், உருவமில்லாக் காற்றும், பூமியும், நெருப்பும், நீரும் ஆகிய ஐம்பூதங்களும் உயிர்கள் உருவாகி வளர முதன்மையானவை ஆகும்.

ü  பூமி உருவாகி, ஊழிக்காலம் தொடர்ந்த பின்னர்ப் இப்பூமி குளிரும்படியாகத் தொடர்ந்த மழையால் வெள்ளத்தில் மூழ்கியது.

ü  மீண்டும் மீண்டும் வெள்ளத்தால் நிறைந்த இப்பெரிய உலகத்தில், உயிர்கள் உருவாகி வாழ்வதற்கு ஏற்ற சூழல் தோன்றி, அவை நிலைபெறும்படியான ஊழிக்காலம் வந்தது

3

30

) நாற்று- நெல் நாற்று நட்டேன்.

) கன்று- வாழைக்கன்று வளர்த்தேன்

) பிள்ளை- தென்னம்பிள்ளை அசைந்தது                 

) வடலி-பனைவடலியைப் பார்த்தேன்.

) பைங்கூழ்-பைங்கூழ் அழகானது.

3

31

. உதவி செய்தலே உதவியாண்மை

. மேன்மை

. பொய்யாச் செந்நா, பொய்படுபறியா வயங்கு செந்நா

3

                                                                       பிரிவு-2                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

32

ü  காலில் அணிந்த கிண்கிணிகளோடு சிலம்புகள் ஆடட்டும்.

ü  அரைஞாண் மணியோடு அரைவடங்கள் ஆடட்டும்.

ü  தொந்தியுடன் சிறுவயிறும் ஆடட்டும்.

ü  நெற்றிச்சுட்டி,குண்டலங்கள் ஆக்யவையும் ஆடட்டும்.

ü  முருகப்பெருமானே செங்கீரை ஆடுக

3


33

ü  குலேச பாண்டியன் இடைக்காடனாரின் பாடலைக் கேட்காமல் அவமதித்தான்.

ü  இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார்

ü  இறைவன் கடம்பவனத்தைவிட்டு வையையின் தென்கரையில் தங்கினார்.

ü  தன் தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தான்

3


34

 

.

தூசும் துகிரும் ஆரமும் அகிலும்

மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்

அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா

வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்;

பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு

கூலம் குவித்த கூல வீதியும்

.

தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!

இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!

மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!

முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே

3

                                                               பிரிவு-3                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

35

ü  அகவலோசை பெற்று,ஈரசைச்சீர் மிகுந்து வரும்.

ü  ஆசிரியத்தளை மிகுதியாகவும்,பிற தளைகள் குறைவாகவும் வரும்.

ü  மூன்றடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமைந்து,ஏகாரத்தில் முடியும்

3

36

ü  இக்குறளில் வஞ்சப் புகழ்ச்சி அணி பயின்று வந்துள்ளது.

வஞ்சப் புகழ்ச்சி அணி:

     ஒரு செய்யுளில் ஒன்றைப் புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது போலப் புகழ்வதுமாக வருவது வஞ்சப்புகழ்ச்சி அணி ஆகும்.

அணிப்பொருத்தம்

      தேவர்கள் தாம் விரும்பும் மேலான செயல்களைச் செய்தல் போல, கயவர்களும் தாம் விரும்பும் கீழ்மையான செயல்களையே செய்வர். இக்குறளில் தேவருக்கு நிகராகக் கயவரைப் புகழ்ந்து கூறி, பின் பழித்துக் கூறுவதால் இது வஞ்சப்புகழ்ச்சி அணியாகும்.

3

37

 

சீர்

அசை

வாய்பாடு

1

உல/கத்/தோ

நிரை நேர்+நேர்

புளிமாங்காய்

2

டொட்/

நேர்+நேர்

தேமா

3

ஒழு/கல்

நிரை+நேர்

புளிமா

4

பல/கற்/றும்

நிரை நேர்+நேர்

புளிமாங்காய்

5

கல்/லார்

நேர்+நேர்

தேமா

6

அறி/விலா

நிரை+நிரை

கருவிளம்

7

தார்

நேர்

நாள்

இத்திருக்குறள் நாள் என்னும் ஓரசைச்சீர் வாய்பாட்டில் முடிந்துள்ளது

3

                                                                பகுதி-4                                                       5X5=25

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

38

 

மருவூர்ப்பாக்க வணிக வீதிகள்

இக்கால வணிக வளாகங்கள்

1

நறுமணப் பொருட்கள், வண்ணக் குழம்பு, போன்றவை வீதிகளில் வணிகம் செய்யப்பட்டன.

நறுமணப் பொருட்கள் போன்றவை கடைகளில் மட்டுமே விற்கப்பட்டன.

2

பட்டு, பருத்தி நூல் ஆகியவற்றைக் கொண்டு துணிகள் தயாரிக்கும் கைத்தொழில் வல்லுநர்களான காருகர் நிறைந்திருந்தனர்.

இன்றைக்கு கைத்தறி ஆடைகளை விட விசைத்தறி ஆடைகளை மக்கள் விரும்பி அணிகின்றனர்.

3

முத்துமணியும் பொன்னும் அளக்க முடியாத அளவிற்கு வணிக வீதிகளில் குவிந்திருந்தன.

குளிரூட்டப்பட்ட அறைகளில் பல்வேறு அலங்காரங்களுடன் வெள்ளி பொன் உள்ளிட்ட நகைகள் விற்கப்படுகின்றன.

4

எட்டு வகை தானியங்களும் குவிந்து கிடக்கும் கூலக்கடை வீதிகள் இருந்தன.

எல்லாவித பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கும் பொருட்டு பல்பொருள் அங்காடிகள் உள்ளன.

5

மருவூர் பார்க்கத்தில் பொற்கொல்லர் தையற்காரர் தச்சர் உட்பட பலரும் இருந்தனர்.

 

இன்றைய வணிக வளாகங்களில் பல நவீன சாதனங்களை விற்பவர்களும் பழுது பார்ப்பவர்களும் உள்ளனர்.

 

(அல்லது)

)

Ø  கிடைத்தற்குரிய பேறுகளில் எல்லாம் பெரும் பேரு பெரியோரை போற்றி துணையாக்கிக் கொள்ளுதல் ஆகும்

Ø  குற்றம் கண்ட பொழுது இடித்துக் கூறும் பெரியாரைத் துணையாக்க் கொள்ளாத பாதுகாப்பற்ற மன்னன் பகைவர் இன்றியும் தானே கெடுவான்.

Ø  தான் ஒருவனாக நின்று பலரோடு பகை மேற்கொள்வதைக் காட்டிலும் பல மடங்கு தீமையைத் தருவது நற்பண்புடையோரின் நட்பைக் கைவிடுதல் ஆகும்

5

39

.

வாழ்த்து மடல்

 

நெல்லை,

26-12-2021.

அன்புள்ள நண்பா/தோழி,

          நலம் நலம் அறிய ஆவல்.திருச்சியில் நடைபெற்ற “மரம் இயற்கையின் வரம்” எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் நீ முதல்பரிசு பெற்றதைத் தொலைக்காட்சியைப் பார்த்து அறிந்தேன்.அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.அதற்காக எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

                                                                                                                                                இப்படிக்கு,

உனது அன்பு நண்பன்,

.மகிழினியன்.

உறைமேல் முகவரி:

      க. இளவேந்தன்,

      86, மருத்துவர் நகர்,

      சேலம்-2.

) நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம்

அனுப்புநர்:

    கா.தமிழ்மாறன்,

    16,பெரிய கடைத்தெரு,

    தஞ்சாவூர்.

பெறுநர்:

    ஆசிரியர் அவர்கள்,

    தமிழருவி நாளிதழ்,

    மதுரை -1.

 

மதிப்பிற்குரிய அய்யா,

  பொருள்: பொங்கல் சிறப்பு மலரில் கட்டுரை வெளியிட வேண்டுதல் தொடர்பாக.

      வணக்கம்.தங்கள் நாளிதழின் சார்பாகப் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியிடும் பொங்கல் மலருக்காக "மங்கையராய்ப் பிறப்பதற்கே" எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதி உள்ளேன். அதைத் தங்கள் அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளேன். தாங்கள் அக்கட்டுரையைத் தங்கள் நாளிதழ் சார்பாக வெளியிடும் பொங்கல் சிறப்பு மலரில் வெளி வர ஆவன செய்யும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.               

நன்றி!!

                                                           இப்படிக்கு,

                                                        தங்கள் பணிவுடைய

                                                          கா.தமிழ்மாறன்.

இடம்: தஞ்சாவூர்

நாள் : 18-05-2025

 

உறைமேல் முகவரி:

ஆசிரியர் அவர்கள்,                       தமிழருவி நாளிதழ் அலுவலகம்,                  மதுரை-10.

 

 

 

 

 


5

40

காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

41

மேல்நிலை வகுப்புசேர்க்கை விண்ணப்பப் படிவம்

சேர்க்கை எண்: 12345       நாள்: 20-03-2026       வகுப்பும் பிரிவும்: 11.ஆம் வகுப்பு, “பிரிவு   

1.    மாணவரின் பெயர்                                                   :        யா. தமிழ்வேந்தன்

2.   பிறந்த நாள்                                                           :           XX – XX - XXXX

3.   தேசிய இனம்                                                           :        இந்தியன்

4.   பெற்றோர் / பாதுகாவலர் பெயர்                              :        யாழினி

5.   வீட்டு முகவரி                                                         :      30, பார்கவி நகர், நல்லூர், ஈரோடு

6.   இறுதியாகப் படித்த வகுப்பு                                      :        பத்தாம் வகுப்பு

7.   பயின்ற மொழி                                                        :        தமிழ், ஆங்கிலம்

8.   இறுதியாகப் படித்த பள்ளியின் முகவரி                 :        அரசினர் மேனிலைப் பள்ளி,  ஈரோடு 9.      பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள்               :        475/500

தேர்வின் பெயர்

பதிவு எண் - ஆண்டு

பாடம்

மதிப்பெண் (100)

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு

6789410 (2025-2026)

தமிழ்

100

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு

6789410 (2025-2026)

ஆங்கிலம்

75

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு

6789410 (2025-2026)

கணிதம்

100

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு

6789410 (2025-2026)

அறிவியல்

100

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு

6789410 (2025-2026)

சமூக அறிவியல்

100

 

 

மொத்தம்

475

9.   மாற்றுச் சான்றிதழ் இணைக்கப்பட்டுள்ளதா?                 :     ஆம்

10. தாய்மொழி                                                                        :     தமிழ்

11.  சேர விரும்பும் பாடப்பிரிவும் பயிற்று மொழியும்                :     கணினி அறிவியல் - தமிழ்

யா. தமிழ்வேந்தன்

மாணவர் கையெழுத்து

5

42

.

பள்ளியில் நான்

வீட்டில் நான்

1.  நேரத்தைச் சரியாகக் கடைபிடிப்பேன்

1. அதிகாலையில் எழுதல்.

2.  ஆசிரியர் சொல்படி நடப்பேன்..

2.  பெற்றோர் சொல்படி நடப்பேன்.

3. ஆசிரியரிடம் பணிவுடன் நடந்துக்கொள்வேன்.

3. பெரியவர்களிடம் பணிவுடன் நடந்துக்கொள்வேன்.

4. நண்பர்களுடன்  கலந்து உரையாடுவேன். ..

4. உறவினர்களுடன் கலந்து உரையாடுவேன்.

5. நண்பர்களுக்கு உதவிகள் செய்வேன்.

5. பெற்றோருக்கு உதவிகள் செய்வேன்

 

மொழிபெயர்ப்பு என்பது தனிக்கலை. அதனை யார் வேண்டுமானாலும் செய்துவிட முடியாது. மொழிபெயர்ப்பாளர் என்பவர் எந்த மொழியுடனும் தனிப்பற்றுக் கொள்ளாமல், நடுநிலையில் நின்று மொழிபெயர்க்க வேண்டும். குறிப்பாக அவருக்கு இரண்டு மொழிகளிலும் அதாவது தருமொழி பெறுமொழி ஆகிய இரண்டிலும் புலமை இருத்தல் வேண்டும். இரு மொழிகளின் சமூக, பண்பாட்டுச் சூழ்நிலைகளை நன்கு அறிந்திருத்தல் வேண்டும்.

5

                                                                 பகுதி-5                                                       3X8=24

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க:

43

. முன்னுரை:

ஒரு சுடரே எண்ணற்ற சுடர்களை ஏற்றியது

                        

 

               வரலாறு என்பது பல நிகழ்வுகளைக் கொண்டதாக உள்ளது. அதில் எண்ணற்ற ஆளுமைகளைக் காணமுடிகிறது. உலகில் பிறந்தவர் பலர் வாழ்வதோடு சரி. சிலர்தான் வரலாறு ஆகிறார்கள்.கல்வி என்றால் என்னவென்றே தெரியாத ஓர் இருண்ட சமூகத்தில் ஒற்றைச் சுடராகத்  தோன்றி,எண்ணற்ற சுடர்களை ஏற்றியவர் தான் மேரி. அவரைப் பற்றி இங்கு காண்போம்.

மேரியின் குடும்பச்சூழல்:

               மேரியின் குடும்பத்தினருக்கு பகல் முழுவதும் பருத்திக் காட்டில் வேலைகள். ஒரு நாள் ஒரே ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்கி விடக்கூடாது என்று நினைக்கும் குடும்பம் அது. பருத்திக் காட்டில் இருந்து பகலில் அம்மா பாட்சி மட்டும் உணவு சமைப்பதற்காக வீட்டுக்குத் திரும்புவாள்..உணவு தயாரானதும் குழந்தைகளை உணவு உண்ணக் கூப்பிடுவாள். 

மேரிக்கு நடந்த துன்பம்:

 

          

 மேரி ஒருநாள் தன் அம்மாவுடன், கூறு மாளிகைக்குச் செல்கிறாள். அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளின் அழைப்பையேற்று அவர்களோடு விளையாடுகிறாள். அங்கே, ஒரு புத்தகம் அவளது கண்ணில் படுகிறது. அந்தப் புத்தகத்தின் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்படுகிறது. அந்தப் புத்தகத்தை கையில் எடுத்து  அதைப் புரட்டத்தொடங்குகிறாள்.

          அதைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுமிகள்,” நீ அதைத் தொடக்கூடாது, உன்னால் படிக்க முடியாதுஎன்று மேரியின் உள்ளம் வருந்தும் வகையில்  பேசினர். அந்த நிகழ்வு மேரியின் மனதில் மிக  ஆழமாகப் பதிந்துவிடுகிறது.

தூண்டுகோல்- மிஸ்வில்சன் :

சுடர்விளக்காயினும் தூண்டுகோல் தேவை

 


           

ஒரு நாள் மிஸ் வில்சன் என்பவர் மேரி படிப்பதற்குத் தான் உதவி செய்வதாக கூறினார். மேரி செய்வதறியாது திகைத்து  நின்றாள். பிறகு பருத்தி எடுக்கும் வேலையைத் தொடர்ந்தாள். வேலையை விரைவாக முடிக்குமாறு அனைவரையும் அவசரபடுத்தினாள்.தான் ஒரு புதிய பெண்ணாக ஆகிவிட்டதாக உணர்ந்தாள். குடும்பத்திலிருந்து முதல் பெண் படிக்கப் போகிறாள். புதிய நம்பிக்கை பிறந்தது.

சிறப்பாகக் கல்விகற்ற மேரி:

     மேரி நாள்தோறும் தன் இலட்சியத்தைச் சுமந்து பள்ளிள்ச் சென்றாள். நாள்தோறும் புதிய புதிய செய்திகளைக் கற்றாள். பள்ளிக்கூடத்தில் சில வருடங்கள் ஓடி மறைந்தன. அந்த வருடத்தின் கடைசியில் மேரிக்குப் பட்டமளிப்பு நடந்தது மிஸ் வில்சன் மேரிக்கு உயர்கல்வி படிக்க உதவினார்.

புதிய நம்பிக்கை பிறந்தது

முடிவுரை:

 

           மனதில் ஆர்வமும், விடாமுயற்சியும் இருந்தால், எதையும் சாதிக்கலாம் என்பதற்கு மேரியின் கதை ஒரு சிறந்த சான்றாகும்.உலகில் சிலர் வரலாறாகவே இருக்கிறார்கள். இவர்கள் பாதையே இல்லாத இடத்தில் தங்கள் காலடிகளால் ஒற்றையடிப்பாதை  இட்டு அதையே பெரும் சாலையாக உருவாக்குகிறார்கள். அவ்விதமாக மேரி வந்து ஓராயிரம் சுடரை ஏற்றி விட்டாள்.

.

·        சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் மனித வாழ்வுக்குத் தேவையான நலன்களை  உருவாக்குகின்றன.

·        இப்பிறவியில் அறம் செய்தால், அடுத்த பிறவியில்  நன்மை கிட்டும்  என  எண்ணாமல்  ,அறம் செய்ய வேண்டும்  என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

·        நீர்நிலைகளைப் பெருக்கி,உணவுப்பெருக்கம் காண்பதே அரசனின்கடமை என்று  சங்க  இலக்கியங்கள்  கூறுகின்றன.இக்கருத்து  இன்றைக்கும் பொருந்தக்கூடியது.

·        மேற்கூறிய காரணங்களால் சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும்   தேவையே.

 

8

44


              ஒரு கலைஞன் மற்ற கலைஞர்களிடம் இருந்து வேறுபட்டு, தனக்கெனத் தனித்தன்மைகளைக் காட்டுவான். கலை ஈடுபாட்டில் அவனுக்கு  வயதோ, உடற்சோர்வோ பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.தன் கலையைப் பின்பற்ற தகுந்த வாரிசு  உருவாகின்ற போது அவன் கொள்கின்ற மகிழ்ச்சி அளப்பரியது. அவ்வாறு நிகழ்ந்த ஒரு கதையை இங்கு காண்போம்.

அனுமார்:                            

              நாகசுரமும், மேளமும் ஒன்றாக இணைந்து ஒலித்தன. சத்தம் கேட்ட அழகு குனிந்து பார்த்தான். இரண்டு கால்களும்  மின்னல் வெட்டி மறைவது போலத் துள்ளிப் பாய்ந்து சென்றன. அந்தக் கால்கள் மனிதனிடம் இருந்து மாறுபட்டு, பச்சையா? நீலமா? என்று தீர்மானிக்க முடியாத நிறத்தில் இருப்பதைக் கண்டான். ஆளுயர குரங்கு ஒன்று மரத்தின் மேலிருந்து  இறங்குவதைக் கண்டான்.

அனுமாரின் நெருப்பாட்டம்: 

     திடீரென்று மேளமும்,நாகசுரமும்  வேகமாக ஒலிக்கத் தொடங்கின.எதற்கென்றே தெரியாமல்  ஒரு கூட்டம் திகைத்து பந்தலையே நோக்கிக் கொண்டிருந்தது. பெருங்குரல் எழுப்பியபடி அனுமார் பந்தல் கால் வழியாகக் கீழே குதித்தார்.அனுமார் வாலில் பெரிய தீப்பந்தம்  புகை விட்டு எரிந்து கொண்டிருந்தது.

அழகுவின் உதவி:

      சிறிது நேரம் கழித்து தீ எரிவது மெல்ல மெல்லத் தணிந்தது.. கீழே புரண்ட வாழை  இவனைப் போன்ற இரண்டு பேர் தூக்கி வந்தார்கள். அழகு அவர்கள் அருகில் சென்றான். அவர்கள் அந்த வாழை அழகு இடத்தில் ஒப்படைத்து விட்டுச் சென்றனர். அனுமார் சென்ற இடத்திற்கெல்லாம் அழகு வாலைத் தூக்கிக் கொண்டு சென்றான்.சற்று நேரம் கழித்து ஆட்டம் முடிந்தது

அழகுவின் ஆட்டம்:                                                  

      அனுமார் கழற்றி வைத்திருந்த துணி, சலங்கை,முகத்திற்குப் போடப்படுபவை ஆகியவற்றைத் தான் அணிந்து கொண்டு அனுமார்  போல ஆடினான் அழகு. களைப்பில் இருந்த அனுமார் பார்த்தார்.அழகு உடனே ஆட்டத்தை நிறுத்திக் கொண்டான். ஆனால் அனுமார்  தூணில்  சாய்ந்து கொண்டுபரவாயில்லை கட்டிக்கிட்டு ஆடு என்றார்”. அவனும் நன்றாக  ஆடினான்.

அனுமார் அடைந்த மகிழ்ச்சி:

          அனுமார் அழகுக்கு ஆட்டத்தை சொல்லிக்கொடுத்தார். அவனும் அதே போல ஆடினான். அனுமார் தன்னை மீறிய மகிழ்ச்சியோடு,” பேஷ் பேஷ் உடனே பிடிச்சுகிட்டியே”  என்றார்.அனுமார் அம்பு போல அவன் முன் பாய்ந்தார்..

முடிவுரை:

  “என்னலே, எனக்கே பாச்சா காட்டுற?பிடியில் சிக்காமல் நழுவுறஎன்று கூறிக் கொண்டு இருக்கும்போது அனுமாரின் கால்கள் பின்னிக்  கொண்டன. அழகு அனுமார் விழுந்ததைக் கவனிக்காமல்  தன் ஆட்டத்தில் மூழ்கிய வனாக, உற்சாகம் பொங்க வேகமாக ஆட்டிக்கொண்டிருந்தான்.

)

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்

முன்னுரை: 

            விடுதலைக்காகவும், சமுதாயக் கொள்கைக்காகவும், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் போராடி வெற்றி பெற்ற தியாகிகள் பலர். அவர்களுள் சில பெண்களும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.பல பெண்கள் நாட்டிற்கு அருந்தொண்டாற்றி பெருமை தந்துள்ளனர்.சில பெண்கள் முயற்சி ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு சமுதாயத்தில் பல சாதனைகளைப் சிலரைப் பற்றி இங்கு காண்போம். புரிந்துள்ளனர். அவர்களில் ஒரு சிலரைப்பற்றி இங்கு காண்போம்

எம்.எஸ்.சுப்புலட்சுமி:

தேனில் தோய்த்த தீங்குரல்

 

 


            இசைச் சூழலில் வளர்ந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி இசைமேதை ஆனார். 17 வயதில் கச்சேரியில் பாடி பலரின் பாராட்டைப் பெற்றார். மீரா என்ற திரைப்படத்தில் நடித்ததால் இந்தியா முழுவதும் இவருக்குப் பாராட்டு கிடைத்தது.1954 இல் இவருக்கு "தாமரையணிவிருதும்,1974 இல் மகசேசே விருதும், இந்திய மாமணி விருதும் கிடைத்தது.

          தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம்,மலையாளம், இந்தி, மராத்தி, குஜராத்தி ஆகிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் பாடியுள்ளார்.

பாலசரசுவதி:

தடை, அதை உடை, புது சரித்திரம் படை


             இவர்ரதநாட்டியத்தில் சிறப்பு பெற்றவர். இவர் 15 வயதில் சென்னையில் உள்ள "சங்கீத சமாஜன்" என்னும் அரங்கத்தில் தனது நடன நிகழ்ச்சியை நடத்தினார்.கல்கத்தாவிலும், காசியிலும் நடந்த அனைத்திந்திய இசை மாநாட்டிலும், சென்னையில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கண்காட்சியிலும் நம் நாட்டுப் பண்ணாகிய "ஜன கன மன" பாடலுக்கு மெய்ப்பாடுகளோடு ஆடினார்.

இராஜம் கிருஷ்ணன்:

            சிக்கல்களைப் பற்றி கதைகளாகவும், புத்தகங்களாகவும் எழுதக் கூடிய ஆற்றல் பெற்றவர் இவர். இவர் "பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி" என்னும் வரலாற்றுப் புதினம் ஒன்றை எழுதி வெளியிட்டார். தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களின் வாழ்க்கையை "கரிப்பு மணிகள்" எனும் புதினமாக வடிவமைத்தார். படுகர் இன மக்களின் வாழ்வியலை "குறிஞ்சித்தேன்என்னும் புதினமாகவும், கடலோர மீனவர்களின் சிக்கல்களை "அலைவாய்க் கரையான்" என்னும் புதினமாகவும், வேளாண் தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டலை "சேற்றில் மனிதர்கள்","வேருக்கு நீர்"எனும் புதினங்களாகவும்  எழுதியுள்ளார்.

உழுபவருக்கே நில உரிமை இயக்கம்

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்: 

     காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றில் பங்கு பெற்றவர். "உழுபவருக்கே நில உரிமை இயக்கம்" என்ற அமைப்பின் மூலம், வேளாண்மை இல்லாத காலத்திலும் உழவருக்கு வேறு பணிகள் மூலம் வருமானம் வர ஏற்பாடு செய்தார்.

மதுரை சின்னப்பிள்ளை:

    இவர் மகளிரின் வாழ்வு மேம்பாட்டுக்காகப் பாடுபட்டார். எல்லா பெண்களும் இணைந்து வேலை செய்து கூலியை எல்லோருக்கும் சரிசமமாகப் பங்கிட்டவர்.

      வயதானவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் அவரவர் திறமைக்கு ஏற்ப வேலை கொடுத்து,அவர்களின் குடும்பங்களுக்கு உதவியாக இருந்தார். நம் நாட்டு நடுவண் அரசின் "பெண் ஆற்றல்" விருதையும்,தமிழக அரசின் "அவ்வைவிருதையும், தூர்தர்ஷனின் பொதிகை விருதையும் பெற்றவர்.

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்

முடிவுரை:

பெண்கள் நாட்டின் கண்கள்" எனும் சான்றோரின் வாக்கு முற்றிலும் உண்மையானதே. ஒரு நாட்டில் உள்ள பெண்கள் ஆற்றல் மிக்கவர்களாக இருந்தால் அந்த நாடு அனைத்து நிலைகளிலும் மாபெரும் உயர்வை அடையும்.இந்திய சமுதாயத்தில் பல பெண்கள் தங்களது முயற்சியையும் திறமையையும் கொண்டு சாதித்துள்ளனர்என்பதற்கு இவர்களே சான்றுகளாகத் திகழ்கின்றனர்.

8

45

) நூல் தலைப்பு: பொன்னியின் செல்வன்

நூலாசிரியர்: கல்கி கிருஷ்ணமூர்த்தி

முன்னுரை:

தமிழ் இலக்கியத்தில் வரலாற்று நாவல்களுக்கு முக்கிய இடம் உண்டு. அவற்றில் வாசகர்களை ஈர்க்கும் சிறந்த படைப்பாக பொன்னியின் செல்வன் கருதப்படுகிறது. சோழர் கால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நாவல், தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நூலின் மையப் பொருள்: 

இந்த நாவலின் மையக் கருத்து சோழர் கால அரசியல் நிகழ்வுகளையும், அருள்மொழி வர்மன் (பின்னர் ராஜராஜ சோழன்) அவர்களின் வாழ்க்கைச் சம்பவங்களையும் சுற்றி அமைந்துள்ளது. நாட்டுப்பற்று, வீரத் தன்மை, நட்பு, நம்பிக்கை போன்ற உயர்ந்த பண்புகளை இந்த நூல் வெளிப்படுத்துகிறது.

மொழி நடை:

இந்த நூலில் எளிமையானதும் இனிமையானதும் ஆன தமிழ் நடை காணப்படுகிறது. உரையாடல்கள் தமிழ்ச்சுவைகளுடன் அமைந்துள்ளதால், அவை வாசகர்கள் கதையில் ஈடுபடத் தூண்டுகின்றன.

வெளிப்படும் கருத்து:

நாட்டை நேசித்தல், நேர்மை, தைரியம், அறிவு போன்ற நல்ல பண்புகளை வளர்க்க வேண்டும் என்ற கருத்து இந்த நூல் மூலம் வெளிப்படுகிறது.

நூல் கட்டமைப்பு:

நூல் பல பகுதிகளாகவும் அத்தியாயங்களாகவும் ஒழுங்காக அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அத்தியாயமும் அடுத்த அத்தியாயத்தைப் படிக்க ஆர்வம் ஏற்படும் வகையில் சுவாரஸ்யமாக அமைந்துள்ளது.

சிறப்புக் கூறு:

·        வரலாற்று உண்மைகளையும் கற்பனையையும் இணைத்து எழுதியிருப்பது இந்த நூலின் மிகப்பெரிய சிறப்பாகும். கதாபாத்திரங்கள் உயிரோட்டத்துடன் சித்தரிக்கப்பட்டுள்ளன.

·        இப்புதினத்தின் கதாபாத்திரங்கள் அனைத்தும் தனித்துவம் வாய்ந்தவையாகவும், முக்கியத்துவம் மிகுந்தவையாகவும் உள்ளன.

·        இப்புதினத்தைப் படிப்பவர்களுக்கு,” இப்புதினத்தில் நாமும் இடம்பெற்றுள்ளோம்என்ற உணர்வினை ஏற்படுத்துவது மிகச்சிறப்பு வாய்ந்தது.

முடிவுரை:

மொத்தத்தில் பொன்னியின் செல்வன் ஒரு சிறந்த வரலாற்று நாவல். இது வாசகர்களுக்கு வரலாற்றை அறியவும் நல்ல பண்புகளை வளர்க்கவும் உதவுகிறது. பள்ளி மாணவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய ஒரு சிறந்த தமிழ் நூலாக இது திகழ்கிறது.

) முன்னுரை:                                                         

             சாலை விபத்துக்கள் நமது சமுதாயத்திற்கும், காவல்துறைக்கும், சட்டத்துக்கும் ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.தினந்தோறும் செய்தித்தாள்கள் மூலமாகவும், தொலைக்காட்சிகள் மூலமாகவும் சாலைவிபத்துகளைப் பற்றிய செய்திகளை நாம் மிகுதியாக அறிகிறோம். இக்காலகட்டத்தில் மிகுதியான சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன. சாலை விதிகளை நாம் மதிக்காமல் நடப்பது இதற்கெல்லாம் காரணம் ஆகும். சாலை பாதுகாப்பின் அவசியம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

சாலை பாதுகாப்பு- உயிர் பாதுகாப்பு:

             சாலையில் விபத்துகள் நிகழாத வண்ணம் தடுப்பதற்காக, போக்குவரத்து காவல்துறையினர் பணி செய்கின்றனர்.அதற்காக மக்கள் பின்பற்ற வேண்டிய சில சாலை விதிகளை அரசு வரையறுத்துள்ளது. அறிவிப்புப் பலகைகள் மூலமாகவும், விளம்பரங்கள் மூலமாகவும், ஓட்டுனர் பயிற்சி பெறும்போதும் சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு வழங்கப்படுகிறது.சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.

சாலை விதிகள்:

             சாலையில் பயணம் செய்வோர் அனைவரும் அடிப்படையான சாலை விதிகள் அனைத்தையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.நடைமேடையைப் பயன்படுத்துதல், நகரப்பகுதிகளில் சாலையைக் கடக்க சுரங்க நடைபாதைகள் பயன்படுத்துதல், வெள்ளைக் கோடுகள் போடப்பட்ட இடத்தில் சாலையைக் கடத்தல், வாகன ஓட்டிகள் முறையான இடங்களில் வாகனங்களை நிறுத்துதல் உள்ளிட்ட அடிப்படை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள்:

v  சிவப்பு வண்ண விளக்கு" நில்" என்ற கட்டளையையும், மஞ்சள் வண்ண விளக்கு, தயாராக இரு என்ற கட்டளையையும், பச்சை வண்ண விளக்கு"புறப்படு" என்ற கட்டளையையும் நமக்குத் தருகிறது. அதைச் சரியாகப் பின்பற்ற வேண்டும்.

v  போக்குவரத்துக் காவல் துறையினரின் கட்டளையை மீறி நான் செல்லக்கூடாது. வாகனங்களில் அதிவேகம் இருக்கக்கூடாது.

v  சாலையில் அந்தந்த வாகனங்களுக்கு உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டக் கூடாது. நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை முந்த முயற்சி செய்யக்கூடாது. இருசக்கர வாகனங்களில் இருவருக்குமேல் பயணிக்கக் கூடாது.

v  வாகனஓட்டிகள் உடல்நிலை மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கும் போது கண்டிப்பாக வாகனம் ஓட்டக்கூடாது.மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுதல் சட்டப்படி குற்றமாகும்.பள்ளிகள், மருத்துவமனை, முதியோர் இல்லங்கள் போன்ற இடங்களுக்கு அருகில் அதிகமான ஒலி அளவில் ஒலிப்பானை ஒலிக்கக் கூடாது.

 "சாலைவிதிகளை மதிப்போம்

விலைமதிப்பில்லாத உயிர்களைக் காப்போம்"

முடிவுரை:

 என்பதை அனைவரும் மனதிற்கொண்டு சாலை விதிகளை கடைபிடித்து, சாலை பாதுகாப்பை உறுதி செய்வோம். சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை உணர்வோம்.

 

8

 

விடைக்குறிப்பைப் பதிவிறக்க

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை