TNTET 9 TH STD TAMIL QUESTION BANK UNIT-5

  9. ஆம் வகுப்பு - தமிழ்

ஒரு மதிப்பெண் வினாவிடைகள்


இயல்-5

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து,விடையைக் குறியீட்டுடன் எழுதுக

1. பல்லவர் காலச் சிற்பக்கலைக்குச் சிறந்த சான்று.

அ) மாமல்லபுரம் ஆ) பிள்ளையார் பட்டி இ) திரிபுவளயீரேசுவரம்  ஈ) தாடிக்கொம்பு

2. 'பொதுவர்கள் பொலிஉறப் போர் அடித்திடும்' நிலப் பகுதி

அ) குறிஞ்சி  ஆ) நெய்தல்  இ) முல்லை ஈ) பாலை

3. இரு பெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும் என்பதற்கான எடுத்துக்காட்டு -

அ) தளிக சிறப்பு  ஆ) தைத்திங்கள்  இ) வடக்குப் பக்கம்  ) நிலாச்சோறு

4. திருநாதர்குன்றில் ஒரு பாறையில் புடைப்புச் சிற்பங்களாக உள்ளவை

அ) விலங்கு உருவங்கள் ஆ) தீர்த்தங்கரர் உருவங்கள் 

இ) தெய்வ உருவங்கள் ஈ) நாட்டியம் ஆடும் பாவை உருவங்கள்

5. "வசிபட முதுநீர் புக்கு

     மலையெனத் துவரை நன்னீர்"பாடல் அடிகளில் முதுநீர் என்பது எது?

அ) மழை நீர் ஆ) கடல் நீர்  இ) ஆற்று நீர் ஈ) நிலத்தடி நீர்

6. சிற்பத் தொழிலைக் குறித்து குறிப்புகள் கூறும் நூல்

அ) தொல்காப்பியம் ஆ) திவாகர நிகண்டு  இ) சிலப்பதிகாரம்  ஈ) நன்னூல்

7. குரங்கநாதர் கோவில் அமைந்துள்ள மாவட்டம்

அ) திருச்சிராப்பள்ளி ஆ) புதுக்கோட்டை  இ) தஞ்சாவூர்  ஈ) மதுரை

8. இரண்டாம் பராந்தகச் சோழனால் கட்டப்பட்ட மூவர் கோயில் சிற்பங்கள் உள்ள ஊர்.

அ) நார்த்தமலை  ஆ) திருவரங்கம்  இ) கொடும்பாளூர்  ஈ) தஞ்சாவூர்

9. கூற்று 1: கோயில் கோபுரங்களில் சுதைச் சிற்பங்கள் மிகுதியாக அமைத்தவர்கள் விஜயநகர மன்னர்கள்.

கூற்று 2 ஆயிரங்கால் மண்டபங்களை அமைத்தவர்கள் நாயக்கர்கள்

அ) கூற்று 1 சரி 2 தவறு ஆ) கூற்று 1, 2 சரி இ) கூற்று 1 தவறு 2 சரி  ஈ) கூற்று 1, 2 தவறு

10. போரில் விழுப்புண் பட்டு இறந்த வீரர்க்கு நடப்படுவது

அ) புடைப்புச் சிற்பம் ஆ) கல்வெட்டு  இ) நடுகல்  ஈ) ஆலயம்

11. தமிழ்நாடு அரசு சிற்பக் கல்லூரி அமைந்துள்ள ஊர்

அ) மாமல்லபுரம்  ஆ) சுவாமிமலை  இ) கும்பகோணம்  ஈ) மதுரை

12. பல்வேறு ஓசைகளை எழுப்பும் இசைத்தூண்கள் அமைத்தவர்கள்

அ) சோழர்கள்  ஆ) பாண்டியர்கள்  இ) விஜயநகர மன்னர்கள்  ஈ) பல்லவர்கள்

13. காண்போரை ஈர்க்கும் குறவன், குறத்தி, இரதிதேவி சிலைகள் அமைந்துள்ள கோவில்

அ ) கிருஷ்ணாபுரம்  ஆ) பேரூர்  இ) மதுரை  ஈ) தாராசுரம்

14. இருபத்து நான்கு தீர்த்தங்கரர் சிற்பங்களாக்கியவர்கள் உருவங்களைச்

அ) நாயக்கர்கள் ) பௌத்தர்கள்  இ) சமணர்கள்  ஈ) சோழர்கள்

15. சமண மதத்தினரின் கடவுள்

அ) அருகன்  ஆ) சிவன்  இ) திருமால்  ஈ) விநாயகர்

16. 'சிற்பச் செந்நூல்' என்ற நூலை வெளியிட்டது.

அ) தமிழ்நாடு பாடநூல் நிறுவனம்  ஆ) தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்

இ) தமிழ்நாடு தொழில் நுட்பக்கல்வி இயக்ககம்  ஈ) தமிழக பள்ளிக்கல்வித்துறை

17. குதிரையின் உருவங்களைச் சிற்பங்களில் இடம்பெறச் செய்தவர்கள்

அ) நாயக்கர்கள்  ஆ) விஜயநகரமன்னர்கள் இ) சோழர்கள்  ஈ) பாண்டியர்கள்

18. திரிபுவன வீரேசுவரம் கோவிலை எழுப்பிய மன்னன்

அ) மூன்றாம் குலோத்துங்கன்  ஆ) இரண்டாம் இராசராசன்

இ) இரண்டாம் பராந்தகன்  ஈ) இராஜராஜசோழன்

19. தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

அ) முகபாவனைகள் சோழர்காலச் சிற்பக்கலை நுட்பம்

ஆ) கற்சிற்பங்கள் அமைக்கும்கலை நாயக்கர் காலத்தில் வளர்ச்சி பெற்றது

இ) வெட்டுவான் கோயில் சிற்பங்கள் பாண்டியர் காலத்தவை

ஈ) நாயக்கர் காலச் சிற்பக்கலை நுட்பத்தின் உச்சப் படைப்பு பேரூர் சிவன் கோயில் சிற்பம்

20. தமிழ்ச்சிற்பிகள் கல்லில் வடித்த கவிதைகளே ----

அ) கோயில்கள் ஆ) மாடமாளிகைகள் இ) சிற்பங்கள்  ஈ) கலைகள்

21. மாளிகைகளில் சுதைச் சிற்பங்கள் இருந்ததை உணர்த்தும் இலக்கியம்

அ) மணிமேகலை  ஆ) சிலப்பதிகாரம் இ) தொல்காப்பியம்  ஈ) திவாகர நிகண்டு

22. பைஞ்சுதை என்பது எதனைக் குறிக்கிறது?

அ) மணல் ஆ) செங்கல்  இ) சுண்ணாம்பு  ஈ) சிமெண்ட்

23 சிற்பக்கலை பற்றிய குறிப்புகள் காணப்படும் நூல்

அ) நன்னூல் ஆ) வீரசோழியம் இ) நேமிநாதம் ஈ)  தொல்காப்பியம்

24. புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் ---- சிற்பங்கள் அமைந்துள்ளன

அ) தீர்த்தங்கரர் ஆ) புத்த சமய இ) நடன முத்திரைகளுடன் கூடிய  ஈ) விலங்கு

25. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இறந்த மைந்தனை கையில் ஏந்தியபடி நிற்கும் ------ சிலையும் அமைந்துள்ளது

அ) சுதமதி ஆ)  சந்திரமதி இ) புனிதவதி ஈ) நல்லதங்காள்

26. கற்சிற்பங்கள் அமைக்கும் கலை யாருடைய காலத்தில் விரைவாக வளர்ச்சி பெற்றது?

அ) சேரர் ஆ) சோழர் இ) பாண்டியர் ஈ)  பல்லவர்

27. இராவண காவியத்திலுள்ள காண்டங்கள்

அ) ஐந்து ஆ) ஆறு  இ) மூன்று  ஈ) நான்கு

28. புலவர் குழந்தை எழுதாத நூல்

அ) யாப்பதிகாரம்  ஆ) தொடையதிகாரம்  இ) கணக்கதிகாரம்  ஈ) இராவன காவியம்

29. இராவண காவியம் உண்மையை உணர வைக்கும் உன்னத நூல் - என்று கூறியவர்

அ) பாரதியார்  இ) அண்ணா  ஆ) பெரியார்  ஈ) பாரதிதாசன்

30. மருத நிலத்தில்----- நெற்பயிர்களைச் சுற்றி விளைந்து காவல் காக்கின்றன.

அ) கரும்புகள் ஆ) மூங்கில்கள்  இ) கொன்றை மலர்கள்  ஈ) வாழைகள்

31. இராவண காவியத்தில் நும்பாடப்பகுதி பாடல்கள் இடம் பெற்ற காண்டம்

அ) தமிழகக்காண்டம்  ஆ) இலங்கைக் காண்டம் இ) விந்தக்காண்டம்  ஈ) பழிபுரி காண்டம்

32. பாலை நிலத்து வெயிலின் வெப்பத்தால் வருந்தியவை

அ) பருந்துகள் ஆ) மான்குட்டிகள்  இ) செந்நாய்க்குட்டிகள்  ஈ) மயில்கள்

33. தாய்மை மீதுற தன்னிழல் தங்கவே நின்றது.

அ) பருந்து  ஆ) மான் இ) செந்நாய்  ஈ) வண்டு

34. பொதுவர்கள் பொலிஉறப் போர் அடித்திடும் நிலப்பகுதி

அ) குறிஞ்சி ஆ) முல்லை  இ) மருதம்  ஈ) நெய்தல்

35. இராவண காவியத்தின் ஆசிரியர் யார்?

அ) தந்தை பெரியார்  ஆ) அண்ணா இ) புலவர் குழந்தை  ஈ) கம்பர்

36. வளம் நிறைத்த மருத நில வயலில்---,---மலர்கள் பூத்து நிற்கும்.

அ) வெட்சி, கரந்தை   ஆ) வஞ்சி, காஞ்சி  இ) மருதம்,நெய்தல்  ஈ) தாமரை, முல்லை

37. இராவண காவியத்தில் பாடல்கள் உள்ளன.

அ) 5100  ஆ) 3116  இ) 3100  ) 3001

38. இராவண காவியத்தின் முதன்மை நாயகன் யார்?

அ) பெரியார்  ஆ) அண்ணா  இ) இராவணன்  ஈ) இராமன்

39. உழை என்பது எதனை உணர்த்துகிறது.

அ) உழைத்தல் ஆ) வருந்துதல்  இ) ஒருவகை மான்  ஈ) பருந்து

40. பருகிய என்னும் சொல்லின் பகுதி யாது?

அ) பரு  ஆ) பருகி  இ) பகுதிகள்  ஈ) பருகு

41. இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தனித்தமிழ்ப்பெருங்காப்பியம்

அ) இராவண காவியம் ஆ) குடும்ப விளக்கு  இ) இயேசு காவியம்  ஈ) சிலம்பு

42.மரைமுகம் இலக்கணக் குறிப்பு.

அ) வினைத்தொகை ஆ) உவமைத்தொகை இ) உம்மைத்தொகை  ஈ) பண்புத்தொகை

43. 13-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இசை நூல்

அ) சங்கீத இரத்னாகரம்  ஆ) சங்கீத சாரம்  இ) சங்கீத இரத்னாவலி  ஈ) சங்கீத உலகம்

44. நாகசுரக் கருவி மரத்தில் செய்யப்படுகிறது.

அ) பலா  ஆ) மருத  இ) ஆச்சா  ஈ) புன்னை

45. நாகசுரத்தின் மேல்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கருவி

அ) தீவாளி  ஆ) சீவாளி  இ) நாணல்  ஈ) ஆச்சா

46. 'செய்தி' எனும் சிறுகதை ---- என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

அ) சக்தி வைத்தியம்  ஆ) கொட்டுமேளம்  இ) சிவப்பு ரிக்ஷா  ஈ) மரப்பசு

47. தி.ஜா.வின் ஜப்பான் பயண அனுபவங்களின் தொகுப்பு

அ ) உதய சூரியன் ஆ) கருங்கடலும் கலைக்கடலும்

இ) அடுத்தவீடு ஐம்பது மைல்    ஈ) ஐந்து

48. தி.ஜானகிராமனின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல்

அ) சிவப்பு ரிக்ஷா  ஆ) சக்தி வைத்தியம்  இ) அன்பளிப்பு  ஈ) சூடிய பூ சூடற்க

49. ஆறாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும் சான்று

அ) ஓடிப்போனார்  ஆ) புலித்தோல்  இ) நிலாச்சோறு  ஈ) உலகப்பந்து

50. விகாரப் புணர்ச்சியின் வகைகள்

அ) இரண்டு  ஆ) மூன்று  இ) நான்கு  ஈ) ஆறு

51. வல்லினம் மிகுந்துவருதல் விகாரப் புணர்ச்சியின் பாற்படும்.

அ) தோன்றல் ஆ) திரிதல்  இ) கெடுதல்  ஈ) மிகுதல்

52. கூற்று 1 : மிக எனும் சொல்லின்பின் வல்லினம் மிகாது.

      கூற்று 2 : சில உருவகச் சொற்களில் வல்லினம் மிகும்.

அ) கூற்று 1 சரி 2 தவறு ஆ) கூற்று 1, 2 தவறு இ) கூற்று 1, 2 சரி  ஈ) கூற்று 1 தவறு 2 சரி

53. கடைப்பிடித்தல்- இச்சொல்லின் பொருள்.

அ) கடையைப் பிடித்தல்  ஆ) வாழ்தல்  இ) பின்பற்றுதல்  ஈ) நிலைநிறுத்துதல்

54. ஐந்து சால்புகளில் இரண்டு

அ) வானமும் நாணமும் ஆ) நாணமும் இணக்கமும்

(ஆ) நாணமும் இணக்கமும்  இ) இணக்கமும் சுணக்கமும்

55. அன்புநான் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு

       ஐந்து சால்பு ஊன்றிய தூண்     - இத்திருக்குறளில் இடம்பெற்றுள்ள அணி

அ) உவமையணி ஆ) உருவக அணி

இ) ஏகதேச உருவக அணி ஈ)  சொல் பொருள் பின்வருநிலையணி

56. ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு

      ஆழி எனப்படு வார்    - இத்திருக்குறளில் இடம்பெற்றுள்ள அணி

அ) உவமையணி ஆ) உருவக அணி

இ) ஏகதேச உருவக அணி ஈ)  சொல் பொருள் பின்வருநிலையணி

57. உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது

      எழுவாரை எல்லாம் பொறுத்து     - இத்திருக்குறளில் இடம்பெற்றுள்ள அணி

அ) உவமையணி ஆ) உருவக அணி

இ) ஏகதேச உருவக அணி ஈ)  சொல் பொருள் பின்வருநிலையணி

பதிவிறக்கம் செய்ய

வினாக்களை மட்டும் அறிய

👉 இயல்-1 வினா விடைகள்

👉 இயல்-2 வினா விடைகள்

👉 இயல்-3 வினா விடைகள்

👉 இயல்-4 வினா விடைகள்

👉 இயல்-6 வினா விடைகள்

👉 இயல்-7 வினா விடைகள்

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை