9. ஆம் வகுப்பு - தமிழ்
ஒரு மதிப்பெண் வினாவிடைகள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து,விடையைக் குறியீட்டுடன் எழுதுக
1. கல்வி இல்லாப் பெண்கள் எவ்வகை
நிலத்திற்கு ஒப்பானவர்கள்?
அ) நஞ்சை நிலம் ஆ) களர் நிலம் இ) உவர் நிலம் ஈ) புஞ்சை நிலம்
2. கீழ்க்காண்பனவற்றுள்
சங்ககாலப் பெண்பாற்புலவர்களின் சரியான குழுவினைக் கண்டறிக
அ) நக்கண்ணையார்,
ஒக்கூர் மாசாத்தியார், நப்பசலையார், பண்டித ரமாபாய்
ஆ) நப்பசலையார்,
பொன்முடியார். நீலாம்பிகை அம்மையார். ஔவையார்
இ) நக்கண்ணையார்,
ஒக்கூர் மாசாத்தியார், பொன்முடியார், ஒளவையார்
ஈ) நக்கண்ணையார்,
ஒக்கூர் மாசாத்தியார், நப்பசலையார், மூவலூர் இராமாமிர்தம்
3. 'இரு' என்பது
துணைவினையாக உள்ள தொடர் எது?
அ) பட்டம் இருக்கிறது. ஆ)
பட்டம் செய்திருக்கிறேன்.
இ) எங்கே இருக்கிறது? ஈ) வானில் மேகம் இருக்கிறது.
4. சரியான கூற்றினைத் தெரிவு
செய்க.
அ)
வில்லுப்பாட்டு ஓர் இலக்கிய வடிவம்
ஆ)
தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி
1. அ மட்டும் சரி 2.அ.ஆ இரண்டும் சரி 3. அ. ஆ இரண்டும் தவறு 4. ஆ மட்டும் சரி
5. ஒன்றறிவதுவே உற்றறிவதுவே
இரண்டறிவதுவே அதனொடு நாவே
இவ்வடிகளில் அதனொடு என்பது எதைக் குறிக்கிறது?
அ) நுகர்தல் ஆ) தொடு உணர்வு இ)
கேட்டல் ஈ) காணல்
6. சாரதா சட்டம் கொண்டு வரப்பட்ட
ஆண்டு.
அ) 1964 ஆ) 1943 இ) 1929 ஈ) 1928
7. நாட்டின் முதல் பெண் ஆசிரியர்
அ) சாவித்திரிபாய் பூலே ஆ) பண்டித ரமாபாய் இ) முத்துலெட்சுமி ஈ) இராஜேஸ்வரி
8. முதன்முதலில் பெண்கல்விக்குப்
பரிந்துரை செய்தது.
அ) சாரதா சட்டம் ஆ) ஹண்டர் குழு
இ) கோத்தாரி கல்விக்குழு ஈ) பெண் கல்வி ஊக்குவிப்புத்
திட்டம்
9. முப்பெண்மணிகள் வரலாறு எனும் நூலின்
ஆசிரியர்
அ) நீலாம்பிகை
ஆ) இராஜேஸ்வரி இ) மறைமலையடிகள் ஈ) முத்துலெட்சுமி
10. சென்னை மாநகராட்சியின் முதல்
துணைமேயர்
அ) பண்டித ரமாபாய் ஆ) இராமாமிர்தம் இ) முத்துலெட்சுமி ஈ) மலாலா
11. 'பெண்ணடிமை தீரும்வரை
மண்ணடிமை தீருமோ' என்று முழக்கம் செய்தவர்.
அ) பெரியார் ஆ) பாரதிதாசன் இ) பாரதியார் ஈ) திரு.வி.க
12. கூற்று 1 : இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் முத்துலெட்சுமி
கூற்று 2 : முத்துலெட்சுமி வேலூரில் இலவச மருத்துவம்
அளித்தார்.
அ) கூற்று 1,
2 சரி ஆ) கூற்று 1 தவறு 2 சரி
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று 1, 2, தவறு
13. தவறான கூற்றைத்
தேர்ந்தெடுக்க.
அ) பெண்கல்வியின் அவசியத்தை
வலியுறுத்திப் போராடிய வீரச்சிறுமி மலாலா.
ஆ ) 2014-இல் நோபல் பரிசு பெற்றவர் மலாலா
இ) மலாலா போராட்டக்களத்தில்
இறங்கிய போது வயது 12.
ஈ) மலாலா போராட்டம் நடத்தியது
பாகிஸ்தானில்
9. பொருத்துக.
1. 1923 - அ. புற்றுநோய் சிகிச்சை நிறுவனம்
2. 1964 - ஆ. தேவதாசி ஒழிப்பு
3. 1882 - இ. கோத்தாரி கல்விக்குழு
4. 1952 - ஈ. ஹண்டர் குழு
அ) 1-ஆ,2-இ, 3-ஈ, 4-அ ஆ)
1-இ.2-ஆ, 3-ஈ, 4-அ
இ) 1-ஈ, 2-இ, 3-அ, 4-ஆ ஈ)
1-அ, 2-ஆ, 3-இ,
4-ஈ
10. மூவலூர் இராமாமிர்தம் பற்றிய
கீழ்க்கண்ட கூற்றுகளுள் தவறானது எது?
அ) தமிழகத்தின் சமூகச்
சீர்திருத்தவாதி
ஆ) எழுத்தாளர்
இ) அவ்வை இல்லம் நிறுவியவர் ஈ) இராமிர்தம் பிறந்த ஆண்டு 1883
11. இந்தியாவிலே முதலில்
பெண்களுக்கெனத் தனியாக பள்ளி தொடங்கப்பட்ட ஆண்டு.
அ) 1848 ஆ) 1831 இ) 1897 ஈ) 1849
12. 'முடியாது பெண்ணாலே என்கின்ற
மாயையினை முடக்க எழுந்தவர்' - யார்?
அ) பெரியார்
ஆ) பாரதியார் இ) பாரதிதாசன் ஈ) திரு.வி.க
13. சமண மதமும் புத்த மதமும்
வளர்ந்த காலத்தில் கல்வி கற்ற பெண்ணாக இருந்தவர்
அ) மாதவி ஆ) மணிமேகலை இ) கண்ணகி ஈ) ஆண்டாள்
14. விடியாது பெண்ணாலே என்கின்ற
கேலியினை மிதித்துத் துவைத்தவர் யார்?
அ) பாரதியார் ஆ) பாரதிதாசன் இ) பெரியார் ஈ)
பட்டுக்கோட்டையார்
15. ஈ.வெ.ரா- நாகம்மை இலவசக்
கல்வி உதவித்திட்டம்------- படிப்பிற்கு உரியது.
அ) உயர்நிலை ஆ) மேல்நிலை இ) பட்டப்படிப்பு ஈ) பட்டமேற்படிப்பு
16. பெண் முன்னேற்றத்திற்குத்
தடைக்கல்லாய் இருப்பது.
அ) பெண்கல்வி ஆ) சொத்துரிமை இ)
குழந்தைத் திருமணம் ஈ) வேலைவாய்ப்பு
17. தமிழகத்தின் முதல் பெண்
மருத்துவர்
அ) சாவித்திரிபாய் பூலே ஆ) பண்டித
ராமாபாய் இ) முத்துலட்சுமி ஈ) சாரதா
18. சட்ட மேலவைக்குத்
தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி
அ) சாவித்திரிபாய் பூலே ஆ) பண்டித
ராமாபாய் இ) முத்துலட்சுமி ஈ) சாரதா
19. தேவதாசி ஒழிப்புச் சட்டம்
நிறைவேற துணை நின்றவர்
அ) மூவலூர் இராமாமிர்தம் ஆ) பண்டித ராமாபாய் இ) முத்துலட்சுமி ஈ) சாரதா
20. குழந்தை திருமணத்தைத் தடுக்க
-----சட்டம் கொண்டுவரப்பட்டது
அ) வாய்ப்பூட்டுச் சட்டம் ஆ) தடைச்
சட்டம் இ) சாரதா ஈ) சிறைச்சட்டம்
21. பாரதிதாசனின் சாகித்திய
அகாதெமி விருதுபெற்ற நூல்
அ) குடும்ப விளக்கு ஆ) பாண்டியன் பரிசு இ) பிசிராந்தையார் ஈ) இருண்ட வீடு
22. கல்வியை உடைய பெண்கள்
அ) களர் நிலம் ஆ) உவர் நிலம் இ) திருந்திய கழனி ஈ) செம்மண் நிலம்
23. குடும்ப விளக்கு எனும் நூல்
--- பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.
அ) நான்கு ஆ) ஐந்து இ) ஆறு ஈ) ஏழு
24. குடும்ப விளக்கின் இரண்டாம்
பகுதி
அ) கல்வி ஆ) பெண்கள் இ)
விருந்தோம்பல் ஈ) ஒழுக்கம்
25. பெண்களுக்குத் தவிர்க்க
ஒணாக்கடமை என்று எதனைக் கூறுகின்றனர்?
அ) பணிவிடைச் செய்வது ஆ) சமைப்பது இ) நினைப்பது ஈ) உழைப்பது
26. பெண்கல்வி வேண்டும் யாண்டும்
-கோடிட்ட சொல்லின் பொருள்
அ) தவிர்க்க இயலாத ஆ) அருகில் இ) எப்பொழுதும் ஈ) இனியெல்லாம்
27. பட்டங்கள் ஆள்வதும்
சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் - என்று பாடியவர் யார்?
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன் இ) கவிமணி ஈ) சுரதா
28. பெண் எனில் பேதை என்ற எண்ணம்
இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும் உருப்படல் என்பது சரிப்படாது என்று பாடியவர்
யார்?
அ) பாரதியார் இ) கவிமணி ஆ) பாரதிதாசன் ஈ) சுரதா
29. மாக்கடல் - இலக்கணக்குறிப்பு
தருக.
அ) பெயரெச்சம் ஆ) வினையெச்சம் இ) உரிச்சொல்தொடர் இ) பண்புத்தொகை
30. ஓரறிவு உயிர்களுக்குச்
சான்று.
அ) சிப்பி ஆ) நத்தை இ) புல் ஈ)
தும்பி
31. பிற்காலத்தில் தோன்றிய பல
இலக்கண நூல்களுக்கு முதல் நூல்
அ) நன்னூல் ஆ) தொல்காப்பியம் இ) வீரசோழியம் ஈ) இலக்கண விளக்கம்
32. ஆறாவது அறிவு --
அறியப்படுவது என்பர்.
அ) மனத்தால்
ஆ) செவியால் இ) புலன்களால் ஈ) மூக்கால்
33. தொல்காப்பியத்தில் உள்ள
இயல்களின் எண்ணிக்கை
அ) 25 ஆ) 26 இ) 27 ஈ) 29
34. .நான்கறிவு உயிர்
அ) எறும்பு ஆ) நண்டு இ) பறவை ஈ) கரையான்
35. தொல்காப்பியத்தில் உள்ள
அதிகாரங்கள்
அ) மூன்று
ஆ) இரண்டு இ) நான்கு ஈ) ஐந்து
36. வாழ்வியல் நெறிகள், இலக்கியக் கோட்பாடுகளை விளக்கும் நூல்
அ) புறநானூறு ஆ)
தொல்காப்பியம் இ) சீவகசிந்தாமணி ஈ) நன்னூல்
37. கரையான் ---அறிவு உயிர்
அ) இரண்டு ஆ) மூன்று
இ) நான்கு ஈ) ஐந்து
38. தொல்காப்பியத்தை இயற்றியவர்
அ) அகத்தியர் ஆ) பவணந்தியார் இ) தொல்காப்பியர்
ஈ) சேக்கிழார்
37. நெறிப்படுத்தினர் -
இச்சொல்லின் பகுதி
அ) நெறி ஆ) நெறிப்படுத்து
இ) நெறிப்படுத்துக ஈ) படுத்து
38. எழுத்துகளின் பிறப்பை
உடற்கூற்றியல் அடிப்படையில் கூறியவர் யார்?
அ) தொல்காப்பியர்
ஆ) அகத்தியர் இ) நன்னூலார் ஈ) திருவள்ளுவர்
39. ஆசியாவிலேயே மிகப் பழமையான
நூலகம் என்ற புகழுக்குரியது
அ) சரஸ்வதி மஹால்
ஆ) கன்னிமாரா இ) அறிஞர் அண்ணா நூலகம் ஈ) பெரியார் நூலகம்
40. 'உலகில் சாகாவரம் பெற்ற
பொருள்கள் புத்தகங்களே' - யார் கூற்று
அ) அண்ணா ஆ) பெரியார் இ) கதே ஈ) பெ.குமார்
41. இந்தியாவில் தொடங்கப்பட்ட
முதல் பொது நூலகம்
அ) தேசிய நூலகம்,
கொல்கத்தா ஆ) நடுவண் நூலகம், திருவனந்தபுரம்
இ) கன்னிமரா நூலகம்,
சென்னை ஈ) சரசுவதி மஹால்
42. உலகின் மிகப்பெரிய நூலகம்
என்ற பெருமைக்குரியது.
அ) லைப்ரரி ஆப் காங்கிரஸ்
ஆ) சரஸ்வதி மகால் நூலகம்
இ) தேசிய நூலகம் ஈ)
கன்னிமரா
43. வீட்டிற்கோர் புத்தகசாலை
என்னும் பகுதி அண்ணாவின்------------ தொகுப்பில்
இடம்பெற்றுள்ளது.
அ) சொற்பொழிவுகள் ஆ)
வானொலி உரை இ) அடுக்கு
மொழிகள் ஈ) பத்திரிகை
44. "நான் இன்னும்
வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே சிறந்த
நண்பன்" என்று சொன்னவர்.
அ) அண்ணா ஆ) இரா.அரங்கநாதன் இ) ஆபிரகாம் லிங்கன் ஈ) காந்தி
45. கீழ்க்கண்ட கூற்றுகளுள்
தவறான கூற்றைக் கண்டறிக.
அ ) உலகமெங்கும் பயணம் செய்யும்
பட்டறிவைத் தருவது நூலகம்
ஆ) சிந்தனையைத் தூண்டுவது
கற்றல் மட்டுமே
இ) இசையைப் போல் இதயத்தைப்
பண்படுத்துவன நூல்கள்
ஈ) உலகில் சாகாவரம் பெற்ற
பொருள்கள் புத்தகங்கள்.
46. உலகளவில் தமிழ் நூல்கள்
அதிகமுள்ள நூலகம்
அ) கன்னிமரா
ஆ) சரஸ்வதி மகால் இ) அறிஞர் அண்ணா ஈ) பெரியார் நூலகம்
47. அறிஞர் அண்ணா பற்றிய
கூற்றுகளுள் தவறானது எது?
அ) 'தென்னகத்துப் பெர்னாட்ஷா' என்று போற்றப்படுகிறார்
ஆ) ஆங்கில ஆசிரியராக ஓராண்டு
பணியாற்றினார்
இ) குடியரசு,
விடுதலை ஆகிய இதழ்களில் ஆசிரியராக இருந்தார்
ஈ) எதையும் தாங்கும் இதயம்
வேண்டும்-அண்ணா
48. நமது தமிழகத்தின்
தனிச்சிறப்பு என்று கூறத்தகும் நூல்
அ) திருக்குறள் ஆ) சங்க இலக்கியம் இ) காப்பியங்கள் ஈ) பக்தி நூல்கள்
49. அமைப்பின் அடிப்படையில்
வினைச்சொல் வகை
அ) 2 ஆ) 3 இ) 4 ஈ) 5
50. கூட்டு வினைகள் பொதுவாக-----
வகையாக ஆக்கப்படுகின்றன
அ) 2 ஆ) 3 இ) 4 ஈ) 5
51. கூட்டுவினையடிகளைக் கொண்ட
வினைச்சொற்கள்
அ) தனிவினை ஆ) கூட்டுவினை இ) துணை வினை ஈ) செய்வினை
52. எழுதிப் பார்த்தாள் - இதில்
பார் என்பதன் பொருள்
அ) முயற்சி ஆ) பார்த்தல் இ) சோதித்து அறிதல் ஈ) உழைப்பு
53. திணை, பால்,
இடம், காலம் காட்டும் விகுதிகளைப் பெறுவது
அ) துணைவினை
ஆ) தனிவினை இ) கூட்டுவினை ஈ) வினையடி
56. தமிழில் ஏறத்தாழ துணைவினைகள்
உள்ளன.
அ) 100 ஆ) 60 இ) 50 ஈ) 40
57. 'புத்தகம் மேசையில்
இருக்கிறது' - இதில் வினையடி
அ) இல் ஆ) இரு இ) ஐ ஈ)
இருக்கு
58. முதல் வினைக்குத் துணையாக
வேறு இலக்கணப் பொருளைத் தரும் வினை.
அ) முதல் வினை ஆ) தனிவினை இ) கூட்டுவினை ஈ) துணை வினை
59. கீழே விழப்பார்த்தான் -
இத்தொடரில் முதல் வினை.
அ) கீழே ஆ) விழ இ) பார்த்து ஈ)
பார்த்தான்

கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி