மூன்றாம் திருப்புதல் தேர்வு-2026
திருப்பூர் மாவட்டம்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1
15X1=15
|
வி.எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
|
1. |
ஈ. சிலப்பதிகாரம் |
1 |
|
2. |
அ. அரசர்களை |
1 |
|
3. |
ஆ. அகவல் |
1 |
|
4. |
அ. பொருள் ஈட்டல் |
1 |
|
5. |
இ. வஞ்சப்புகழ்ச்சி
அணி |
1 |
|
6. |
இ. பழுப்பு |
1 |
|
7. |
ஈ. இளவேனில் |
1 |
|
8. |
இ. திணை வழுவமைதி |
1 |
|
9. |
ஆ. கம்பராமாயணம் |
1 |
|
10. |
ஆ. மணிப்பெயர்
வகை |
1 |
|
11. |
ஆ. வினையெச்சத்தொடர் |
1 |
|
12. |
ஈ. கண்ணதாசன் |
1 |
|
13. |
இ. தான் + ஓர் |
1 |
|
14. |
ஈ. இயைபு |
1 |
|
15. |
இ .பூமி |
1 |
பகுதி-2 பிரிவு-1
4X2=8
|
எவையேனும் நான்கு வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்க |
||
|
16 |
மறைத்து வைத்தல்
என்னும் துன்பத்தைத்தராதவர் |
2 |
|
17 |
அ. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன்
யார்? ஆ. அறிவியலின் வளர்ச்சி எதனை
விரிவாக்குகிறது? |
2 |
|
18 |
ü பூஞ்சோலைகள் ü செண்பகக் காடுகள் ü மலர்ப்பொய்கைகள் ü தடாகங்கள் ü கமுகத் தோட்டங்கள் ü நெல்வயல்கள் |
2 |
|
19 |
நூல் வாங்குவதற்குப் போதிய பணம் இல்லாத வறுமை நிலையிலும்
நூல்களையே வாங்குபவர் ம.பொ.சி. |
2 |
|
20 |
அவையம்=மன்றம் அல்லது
சபை. வழக்கை விசாரித்து தீர்ப்பு கூறும் நீதின்மன்றம். |
2 |
|
21 |
இன்மையின்
இன்னாத தியாதெனின் இன்மையின் இன்மையே
இன்னா தது |
2 |
பிரிவு-2
5X2=10
|
எவையேனும்
ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
|
22 |
அ. கோள்களை அறிந்து
கொள். ஆ. சிறு
பூனையும் சீறும் |
2 |
|
23 |
அ. மருந்தும்
மூன்று நாளுக்கு ஆ.
அழகு பாழ் |
2 |
|
24 |
வருக
- வா(வரு) + க வா - பகுதி வரு
எனத் திரிந்தது விகாரம் க-
வியங்கோள் வினைமுற்று விகுதி |
2 |
|
25 |
அ. ஓடிச்சென்றான் ஆ. குழந்தை வந்தது (மாதிரி விடைகள்) |
2 |
|
26 |
அ. புதுமனை புகுவிழா ஆ. ஒருமொழி |
2 |
|
27 |
அ. நிழல் தரும்
மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும். ஆ. இன்பத் துன்பம்
நிறைந்த வாழ்க்கைப்பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது. |
2 |
|
28 |
ü தண்ணீர் குடி – தண்ணீரைக்குடி -இரண்டாம் வேற்றுமைத்தொகை ü தயிர்க்குடம் – தயிரை உடைய குடம் - இரண்டாம் வேற்றுமை
உருபும் பயனும் உடன் தொக்க தொகை |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18) பிரிவு-1 2X3=6
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
|
29 |
இடம்: இத்தொடர் ம.பொ.சி அவர்களின் சிற்றகல் ஒளி எனும் கட்டுரையில் இடம் பெற்றுள்ளது. பொருள்: எங்கள் தலையை கொடுத்தாவது
தலைநகரைக் காப்பாற்றுவோம். விளக்கம்: ஆந்திர மாநிலம் பிரியும்போது, சமயத்தில், செங்கல்வராயன்தலைமையில் கூட்டப்பட்ட
கூட்டத்தில் ம.பொ.சி அவர்கள் ”தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக்
காப்போம்” என்று முழங்கினார். |
3 |
|
30 |
அ. பாமரரும் புரிந்து கொள்ளும் எளிமையும் இதயம் தொடும் இனிய சந்தமும்
வாய்ந்தவை ஆ. புறநானூற்றுத்
தாய் இ. கவியரங்குகளே
தமக்கு இளைப்பாறும் இந்நிழல் சோலைகள் ஆயின என்றார் |
3 |
|
31 |
ü தொலைக்காட்சி
வானொலி திரைப்படம் இதழ்கள் போன்ற ஊடகங்களின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு
பெரிதும் உதவுகிறது. ü வணிக விளம்பரங்களை
பல்வேறு மொழி பேசும் மக்களிடையே கொண்டு செல்ல மொழிபெயர்ப்பு உதவுகிறது. ü புதுவகையான சிந்தனைகள்
மொழிக் கூறுகள் உருவாக மொழிபெயர்ப்பு உதவி செய்கிறது. |
3 |
பிரிவு-2
2X3=6
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
|
32 |
பொருந்திய
விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
3 |
|
33 |
v குளிர்ந்த சோலையில்
மயில்கள் ஆடுகின்றன.
v தாமரை மலர்கள் விளக்குகள்
போன்று தோன்றுகின்றன.
v குவளை மலர்கள் கண்விழித்துப்
பார்ப்பது போல் காணப்படுகின்றன.
v நீர்நிலைகளின் அலைகள்
திரைச்சீலைகள் போல் விரிகின்றன.
v மகர யாழின் தேனிசை
போல் வண்டுகள் பாடுகின்றன. |
3 |
|
34 |
|
3 |
பிரிவு-3
2X3=6
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||||||||||||||||||||||||||
|
35 |
1.
திணை வழுவமைதி "என் அம்மை வந்தாள்" என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது
திணைவழுவமைதி ஆகும். இங்கு உவப்பின் காரணமாக அஃறிணை, உயர்திணையாகக்
கொள்ளப்பட்டது. 2.
பால் வழுவமைதி "வாடா இராசா, வாடா கண்ணா" என்று தன் மகளைப்
பார்த்துத் தாய் அழைப்பது பால்வழுவமைதி ஆகும். இங்கு உவப்பின் காரணமாகப்
பெண்பால், ஆண்பாலாகக் கொள்ளப்பட்டது. 3.
இட வழுவமைதி மாறன் என்பான் தன்னைப் பற்றிப் பிறரிடம்
கூறும்போது,"இந்த மாறன் ஒருநாளும் பொய் கூறமாட்டான்" என, தன்மையினைப்
படர்க்கை இடத்தில் கூறுவது இடவழுவமைதி ஆகும். 4.
கால வழுவமைதி குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார்.
இத்தொடர், குடியரசுத் தலைவர் நாளை
வருவார் என அமைதல் வேண்டும். அவ்வாறு அமையவில்லை என்றாலும் நாம் பிழையாகக்
கருதுவதில்லை. ஏனெனில், அவரது வருகையின் உறுதித்தன்மை
நோக்கிக் காலவழுவமைதியாக ஏற்றுக்கொள்கிறோம். 5. மரபு வழுவமைதி "கத்துங் குயிலோசை - சற்றே வந்து காதிற் படவேணும்"- பாரதியார். குயில் கூவும் என்பதே மரபு, குயில்
கத்தும் என்பது மரபு வழு ஆகும். இங்குக் கவிதையில் இடம்பெற்றிருப்பதால் இது மரபு
வழுவமைதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. |
3 |
||||||||||||||||||||||||
|
36 |
சொல் பின்வரு நிலை அணி: ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல்
வேறு ஒரு பொருளில் பின்னரும் பலமுறை வருவது சொல் பின்வருநிலை அணி ஆகும். சான்று: பொருளல் லவரைப் பொருளாகச்
செய்யும் பொருளல்ல தில்லை பொருள். அணிப்பொருத்தம்: ‘பொருள்‘
என்னும் சொல் வேறு பொருளில் பின்னரும் பலமுறை வந்ததால் சொல் பின்வருநிலை அணி ஆயிற்று. |
3 |
||||||||||||||||||||||||
|
37 |
|
3 |
||||||||||||||||||||||||
பகுதி-4
5X5=25
|
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி |
||||||||||||||
|
38
அ |
கருணையனின்
தாய் மறைவுக்கு வீரமாமுனிவரது
கவிதாஞ்சலி கருணையன்
தனது தாயை நல்லடக்கம் செய்தான்: குழியினுள் அழகிய மலர்ப்படுக்கையைப்
பரப்பினான். பயனுள்ள வாழ்க்கை நடத்திய தன் அன்னையின் உடலை
மண் இட்டு மூடி அடக்கம் செய்தான். அதன்மேல் மலர்களையும்
தன் கண்ணீரையும் ஒருசேரப் பொழிந்தான். கருணையன்
தாயை இழந்து வாடுதல்: இளம் பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளை காணும் முன்னே, மழைத்துளி இல்லாமல் காய்ந்து விட்டதைப் போல நானும் என் தாயை இழந்த
வாடுகிறேன் என்று கருணையன் வருந்தினான். கருணையனின்
தவிப்பு: துணையைப் பிரிந்த பறவையைப் போல் நான் இக்காட்டில் அழுது இரங்கி விடுகிறேன்.சரிந்த வழுக்கு நிலத்திலே தனியே விடப்பட்டு செல்லும் வழி தெரியாமல்
தவிப்பவன் போல் ஆனேன்”.எனப் புலம்பினான். பறவைகளும்,வண்டுகளும் கூச்சலிட்டன: கருணையன் இவ்வாறெல்லாம் அழுது புலம்பினார்.
அதைக் கேட்டு, பல்வேறு இசைகளை இயக்கியது
போன்று, மணம் வீசும் மலர்களும், பறவைகளும்,
வண்டுகளும் அழுவதைப் போன்றே கூச்சலிட்டன. (அல்லது) ஆ) சேர
நாடு: சேற்று வயலில் ஆம்பல் மலர்கள் விரிந்தன.
அதனைப் பார்த்த நீர்ப்பறவை நீரில் தீப்பிடித்ததாக அஞ்சி, தனது குஞ்சுகளைச் சிறகுகளால் மறைத்தன. சோழ
நாடு: உழவர்கள் நிற்போர் மீது ஏறி நின்று
மற்றவர்களை ”நாவலோ” என்று அழைப்பர். இது
போரின் போது ஒரு வீரன் மற்ற வீரர்களை அழைப்பது போன்று உள்ளது. நெல் வளமும் யானைப்படையும் சோழ நாட்டில் உள்ளதை இது காட்டுகிறது. பாண்டியநாடு: சங்கின் முட்டைகள், புன்னை மொட்டுகள்
பாக்குமணிகள் ஆகியவை முத்துகள் போல இருந்தன. பாண்டியநாடு
இத்தகைய முத்து வளத்தை உடையது.
|
5 |
||||||||||||
|
39 அ. |
உறவினருக்குக் கடிதம்
8,சோழன்தெரு,
செங்குன்றம்.
22-06-2025. அன்புள்ள மாமாவுக்கு, தமிழ்த்தென்றல் எழுதும்
கடிதம். நான் இங்கு நலம். தங்கள்
மற்றும் தங்கள் குடும்பத்தினரின் நலம் அறிய ஆவல்.சென்ற
வாரம் எங்களது பள்ளித் திடலில் பணப்பை ஒன்று கிடைத்தது. அதை
என்னுடைய தலைமை ஆசிரியரிடம் கொண்டு சென்று கொடுத்தேன்.அதைத்
திறந்து பார்த்தபோது, தான் அதில் பெருந்தொகையான பணம்
இருப்பது தெரிய வந்தது. அதை எனது தலைமையாசிரியர் மூலம்
உரியவரிடம் ஒப்படைக்குமாறு செய்தேன். அதற்காக என்னை எனது
தலைமை ஆசிரியரும், என்னுடைய ஆசிரியர்களும் என்னைப்
பாராட்டி,இறைவணக்கக் கூட்டத்தில்,சிறப்பு
செய்தனர்.இந்த செய்தி, நாளிதழிலும்
வெளி வந்து என்னை மகிழ்ச்சி அடையச் செய்தது. எனவே
இச்செய்தியைத் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
இப்படிக்கு,
தங்கள் அன்புடைய,
பெ.தமிழ் தென்றல். உறைமேல்
முகவரி:
அனுப்புநர்: அ.திருக்குமரன், 25 வள்ளல் தெரு, அரக்கோணம்-1 பெறுநர்: உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள், உணவுப் பாதுகாப்பு ஆணையம், அரக்கோணம்-1 மதிப்பிற்குரிய அய்யா, பொருள்: தரமற்ற உணவு வழங்கிய உணவு விடுதியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுதல்
தொடர்பாக. வணக்கம். நான் கடந்த இரு தினங்களுக்கு முன்பு என் வீட்டிற்கு அருகிலிருந்த
குறிஞ்சி உணவுவிடுதியில் மதிய உணவு உண்பதற்காகச் சென்றேன். புலவுச்சோறு விலை ரூபாய் 120 எனப் பலகையில் எழுதி
வைத்திருந்தனர். நானும் புலவுச்சோறு சாப்பிட்டுவிட்டு, உணவுக்கான தொகையைக் காசாளரிடம் செலுத்தினால்,
அவர்
புலவுச்சோறு விலை
ரூபாய் 150 எனக்
கூறினார். மேலும் பல விளக்கங்களைக் கொடுத்து ரூபாய் 150
வாங்கிக்கொண்டார். மேலும், உணவு உண்ட சில
மணி நேரங்களிலேயே வாந்தி பேதி ஏற்பட்டு, மயக்கம் அடைந்தேன். கண்
விழித்து பார்த்தபோது மருத்துவமனையில்
எனக்குச் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே,
தரமற்றதாகவும், விலை கூடுதலாகவும் உள்ள உணவு
விடுதியில் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி!!
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள அ.திருக்குமரன் இடம்:அரக்கோணம், நாள்:24-09-2020. உறைமேல் முகவரி:
|
5 |
||||||||||||
|
40 |
காட்சிக்குப்
பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
5 |
||||||||||||
|
41 |
படிவத்தை உரிய விவரங்களுடன் சரியாக நிரப்பியிருப்பின்
மதிப்பெண் வழங்குக |
5 |
||||||||||||
|
42 |
அ.
ஆ. மொழிபெயர்ப்பு என்பது தனிக்கலை. அதனை யார்
வேண்டுமானாலும் செய்துவிட முடியாது. மொழிபெயர்ப்பாளர் என்பவர் எந்த மொழியுடனும்
தனிப்பற்றுக் கொள்ளாமல்,
நடுநிலையில் நின்று மொழிபெயர்க்க வேண்டும். குறிப்பாக அவருக்கு
இரண்டு மொழிகளிலும் அதாவது தருமொழி பெறுமொழி ஆகிய இரண்டிலும் புலமை இருத்தல்
வேண்டும். இரு மொழிகளின் சமூக, பண்பாட்டுச் சூழ்நிலைகளை
நன்கு அறிந்திருத்தல் வேண்டும். |
5 |
||||||||||||
பகுதி-5
3X8=24
|
எல்லா
வினாக்களுக்கும் விடையளிக்க: |
||||
|
43 |
அ. முன்னுரை
: ஒவ்வொரு மொழிச் சமூகத்திலும்
ஒரு துறையில் இல்லாத செழுமையை ஈடுசெய்ய வேறு துறைகளில் உச்சங்கள்
இருக்கும்.கொடுக்கல் வாங்கலாக அறிவனைத்தும் உணர்வனைத்தும் அனைத்து மொழிகளிலும்
பரப்ப வேண்டும் அல்லவா? மொழிபெயர்ப்பும்
தொடக்கமும்: 'ஒரு மொழியில்
உணர்த்தப்பட்டுள்ளதை வேறொரு மொழியில் வெளியிடுவதே மொழிபெயர்ப்பு' என்கிறார் மணவை முஸ்தபா. 'மொழிபெயர்த்தல்' என்ற தொடரை மரபியலில் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். மொழிபெயர்ப்பு
இலக்கியங்கள்: என்று சின்னமனூர்ச்
செப்பேடு கூறுவதன் மூலம் சங்க காலத்திலேயே மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதை
அறியலாம். வடமொழியில் வந்த இராமாயண, மகாபாரத தொன்மை
செய்திகள் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. பெருங்கதை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலியன வடமொழி கதைகளைத் தழுவி படைக்கப்பட்டவையே. மொழிபெயர்ப்பின்
அவசியமும் பயனும்: மொழிபெயர்ப்பு எல்லா
காலகட்டங்களிலும் தேவையான ஒன்று. மொழிபெயர்ப்பு இல்லாவிடில் சில படைப்பாளிகள்
உருவாகி இருக்க முடியாது. ஜெர்மன் மொழியில் மொழிபெயர்ப்பு மூலம் சேக்ஸ்பியர்
அறிமுகமானார். கம்பனும் ரவீந்திரநாத் தாகூர் கூட மொழிபெயர்ப்பின் மூலமே
சிறப்புப்பெற்றவர்கள். இன்றைக்கு பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு
அவசியமாகின்றது. எட்டுதிக்கும்
செல்வீர்: எட்டுத்திக்கும்
கொட்டிக்கிடக்கும் கலைச்செல்வங்களை, மொழிபெயர்ப்பு
நிறுவங்களை அமைத்தும் மொழிபெயர்ப்புக்கு உதவும் சொற்களஞ்சியங்களை உருவாக்கியும்
பட்டறைகளை நடத்தியும் மொழிக்கு வளம்சேர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். மொழிபெயர்ப்புக்
கல்வி: மொழிபெயர்ப்பைக் கல்வியாக
ஆக்குவதன் மூலம் அனைத்துலக அறிவையும் எளிதில் பெற்று, மனிதவளத்தை
நாமே முழுமையாகப் பயன்படுத்தி, வேலைவாய்ப்புத் தளத்தை
உருவாக்கி ஒருலகர் எனுந்தன்மை பெறலாம். முடிவுரை
: 'உலக நாகரிக வளர்ச்சிக்கும்
மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும் 'எனும்
மு.கு ஜகந்நாதராஜா கருத்தினை நினைவில் நிறுத்தி செயல்படுவோம். ஆ) முன்னுரை:
என்ற பாவேந்தரின்
வாய்மொழிக்கேற்ப,எதிர்காலத்தில் நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் உரிய நற்பண்புகளை மாணவர்கள்
இளமை முதலே பெற வேண்டும். இத்தகைய நற்பண்புகளைப் பெற்று மாணவர்கள் சிறந்துவிளங்க நாட்டுவிழாக்கள் துணைபுரிகின்றன.
அதைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். நாட்டு விழாக்கள்: நமது நாட்டை எண்ணி பெருமை கொள்ள எண்ணற்ற
நாட்டு விழாக்கள் இருந்தாலும், விடுதலை நாள் விழாவும்,
குடியரசு நாள் விழாவும் அவை அனைத்திலும் சிறந்தவையாகும். நமது நாட்டு மக்களை
அடிமைப்படுத்தி ஆட்சிசெய்து வந்த ஆங்கிலேயர்கள் நமது நாட்டை விட்டுச்சென்ற நாள் விடுதலைநாள்
விழாவாக ஆகஸ்ட் 15ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
விடுதலைப் போராட்ட வரலாறு: பதினைந்தாம்
நூற்றாண்டு காலகட்டத்தில் நமது நாட்டில் எண்ணற்ற சிற்றரசுகள் இருந்தன. அக்காலகட்டத்தில் நம்மிடையே இருந்த ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி,வணிகம் செய்ய வந்த ஐரோப்பியர்கள்,குறிப்பாக
ஆங்கிலேயர்கள் பெரும்பான்மையான சிற்றரசுகளைக் கைப்பற்றி நாட்டை
ஆளத்தொடங்கினர். இது பல
இந்தியத் தலைவர்களை கவலைகொள்ளச் செய்தது.எனவே மக்களிடையே விடுதலை வேட்கையை ஏற்படுத்தி வெள்ளையருக்கு எதிராக
போராடத் தூண்டினர். இவர்களது கடுமையான போராட்டத்தாலும், தியாகத்தாலும்
இந்தியா 1947 ஆகஸ்ட் 15 இல் விடுதலை
பெற்றது. நாட்டு முன்னேற்றத்தில் மாணவர் பங்கு: இன்றைய மாணவர்களே நாளைய தலைவர்கள். இவர்கள் சமுதாய உணர்வுடன்
வளர்ந்தால்தான் நாடும் வீடும் வளம் பெறும். துன்பத்தில்
மற்றவர்க்கு உதவுதல், வறுமை, கல்வியின்மை
அறியாமை, சாதி மத வேறுபாடுகள், தீண்டாமை
மூடப்பழக்கங்கள்,ஊழல் ஆகியவற்றிற்கு
எதிராகக் குரல் கொடுத்தல் ஆகிய பண்புகளை மாணவர்கள்
பெற்றிருத்தல் மிகவும் சிறப்பு. மாணவப் பருவமும், நாட்டுப் பற்றும்: மாணவர்கள் மக்களுக்கு முன்னோடியாகத் திகழ வேண்டும். அவர்கள் தங்களை சாரண சாரணியர் படை நாட்டு நலப்பணித் திட்டம் தேசிய
பசுமைப்படை எனப் பல்வேறு வகையில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். மரம் நடுதல், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு,
சாலை விதிமுறைகள் பற்றிய அறிவுறுத்தல்
மற்றும் தேசிய விழாக்களை கொண்டாட உதவுதல் ஆகியவற்றில் மாணவர்கள் கட்டாயம் ஈடுபட
வேண்டும். முடிவுரை:
என்ற மகாகவி பாரதியாரின்
வாக்கிற்கிணங்க, நாட்டின் வளர்ச்சிக்கு மாணவர்களின் பங்கு
மிக முக்கியமானது. மாணவர் நாட்டு முன்னேற்றத்தில் இணைந்து
செயல்பட்டால், நாடும் முன்னேறும் வீடு முன்னேறும், புதிய இந்தியா உருவாகும். |
8 |
||
|
44 அ |
அ) புயலிலே ஒரு தோணி முன்னுரை: ”தரைமேல்
பிறக்க வைத்தான் - எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான்” பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தெற்காசிய நாடுகளில் பல்வேறு
நாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறினர் அவ்வாறு குடியேறிய இனங்களில் தமிழினமும்
ஒன்று.நூலாசிரியர் அவ்வாறு புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒருவர். அவர்
இந்தோனேசியாவில் இருந்தபோது இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்தது ஆசிரியரின் நேரடி
அனுபவங்களோடு கற்பனையும் கலந்த கதைதான் புயலிலே ஒரு தோணி. அதைப்பற்றி இங்கு
காண்போம் விடாது பெய்த மழை: கடுமையான வெயில் மறைந்து,இமை
நேரத்தில் புழுக்கம் ஏற்பட்டது. மேகக் கூட்டங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது
மீண்டும் மீண்டும் மழை பெய்தது.கப்பலைச் செலுத்தும் மாலுமிகள் பாய் மரத்திலுள்ள
கயிறுகளை இறுக்கி கட்டினர். அனைவரும் செய்வதறியாது திகைத்து
நின்றனர். தள்ளாடிய கப்பல் (தொங்கான்): மழை பெய்வது அதிகரித்தது. காற்றும், மழையும் ஒன்று
கலந்தது.பலகை அடைப்புக்குள் இருந்து கப்பித்தான் “ஓடி
வாருங்கள், இங்கே ஓடி வாருங்கள்! லெக்காஸ், லெக்காஸ்” என்று கத்துகிறான். பாண்டியன்
எழுந்தான்.இடுக்குகளில் முடங்கிக்கிடந்த உருவங்கள் தலைதூக்கின.கப்பல்
தள்ளாடியது.மலைத்தொடர் போன்ற அலைகள் தாக்கின.. பயணிகளின் தவிப்பு: பாண்டியன் கடலை பார்த்து மலைத்து நின்றான். கடல் கூத்து நீண்ட
நேரம் தொடர்ந்தது.கப்பல்
தன்வசம் இன்றி, தடுமாறிச் சென்றது.புயல் மயக்கத்திலிருந்து
யாரும் இன்னும் முழுமையாக தெளிவு பெறவில்லை. கப்பித்தான் மேல்தட்டு வந்து
வானையும் கடலையும் ஒரு முறை சுற்றிப்பார்த்தார். பாண்டியன் நிலவரத்தை கேட்டான்.
அதற்கு கப்பித்தான் இரண்டு நாட்களில் கரையை பார்க்கலாம் இனி பயமில்லை என்றார். கரையைக் காணுதல்: ஐந்தாம் நாள் மாலையில் வானோடு வானாய், கடலோடு
கடலாக மரப்பச்சை தெரிவது போல் இருந்தது. சுமார் அரை
மணி நேரத்துக்குப் பின் மீன்பிடிப் படகின் அருகில் விளக்குகள் தென்பட்டன.அடுத்த
நாள் கப்பல் பினாங்கு துறைமுகத்தை அடைந்தது. தொலைதூர கப்பல்கள் கரை முழுவதும் நின்றிருந்தன. முடிவுரை: “இயற்கையைப்
போன்று யாராலும் கொடுக்க முடியாது இயற்கை கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது”
”தமிரோ?”
என்று ஜப்பானிய அதிகாரி கேட்டார்.” யா மஸ்தா”
இன்று தமிழர்கள் தெரிவித்தனர். பயணிகளை சில வினாடிகள் நோட்டமிட்ட
அதிகாரி சீட்டுகளில் முத்திரை வைத்து திருப்பிக் கொடுத்தார். புயலிலே ஒரு தோணி கதையில்
இடம்பெற்றுள்ள வர்ணனைகளும் ,அடுக்குத்
தொடர்களும், ஒலிக் குறிப்புச் சொற்களும் புயலில் தோணி
படும்பாட்டை தெளிவுற விளக்கின. ஆ) பி முன்னுரை: விடுதலைக்காகவும், சமுதாயக் கொள்கைக்காகவும், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் போராடி வெற்றி பெற்ற தியாகிகள் பலர்.
அவர்களுள் சில பெண்களும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.பல பெண்கள் நாட்டிற்கு
அருந்தொண்டாற்றி பெருமை தந்துள்ளனர்.சில பெண்கள் முயற்சி ஒன்றை மட்டுமே
மூலதனமாகக் கொண்டு சமுதாயத்தில் பல சாதனைகளைப் சிலரைப் பற்றி இங்கு காண்போம்.
புரிந்துள்ளனர். அவர்களில் ஒரு சிலரைப்பற்றி இங்கு
காண்போம் எம்.எஸ்.சுப்புலட்சுமி: இசைச் சூழலில் வளர்ந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி இசைமேதை ஆனார். 17 வயதில் கச்சேரியில் பாடி பலரின் பாராட்டைப் பெற்றார். மீரா என்ற திரைப்படத்தில்
நடித்ததால் இந்தியா முழுவதும் இவருக்குப் பாராட்டு கிடைத்தது.1954 இல் இவருக்கு "தாமரையணி” விருதும்,1974 இல் மகசேசே விருதும், இந்திய மாமணி விருதும்
கிடைத்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம்,மலையாளம், இந்தி, மராத்தி, குஜராத்தி ஆகிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் பாடியுள்ளார். பாலசரசுவதி: இவர் பரதநாட்டியத்தில் சிறப்பு பெற்றவர். இவர் 15 வயதில் சென்னையில் உள்ள "சங்கீத சமாஜன்" என்னும் அரங்கத்தில்
தனது நடன நிகழ்ச்சியை நடத்தினார்.கல்கத்தாவிலும், காசியிலும்
நடந்த அனைத்திந்திய இசை மாநாட்டிலும், சென்னையில்
நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கண்காட்சியிலும் நம் நாட்டுப் பண்ணாகிய "ஜன
கன மன" பாடலுக்கு மெய்ப்பாடுகளோடு ஆடினார். இராஜம் கிருஷ்ணன்: சிக்கல்களைப் பற்றி கதைகளாகவும், புத்தகங்களாகவும்
எழுதக் கூடிய ஆற்றல் பெற்றவர் இவர். இவர் "பாஞ்சாலி சபதம் பாடிய
பாரதி" என்னும் வரலாற்றுப் புதினம் ஒன்றை எழுதி வெளியிட்டார். தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களின் வாழ்க்கையை "கரிப்பு
மணிகள்" எனும் புதினமாக வடிவமைத்தார். படுகர் இன மக்களின் வாழ்வியலை
"குறிஞ்சித்தேன்” என்னும் புதினமாகவும், கடலோர மீனவர்களின் சிக்கல்களை "அலைவாய்க் கரையான்" என்னும்
புதினமாகவும், வேளாண் தொழிலாளர்களின் உழைப்புச்
சுரண்டலை "சேற்றில் மனிதர்கள்","வேருக்கு
நீர்"எனும் புதினங்களாகவும் எழுதியுள்ளார். கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்: காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கம், சட்ட
மறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம்
ஆகியவற்றில் பங்கு பெற்றவர். "உழுபவருக்கே நில உரிமை இயக்கம்" என்ற
அமைப்பின் மூலம், வேளாண்மை இல்லாத காலத்திலும்
உழவருக்கு வேறு பணிகள் மூலம் வருமானம் வர ஏற்பாடு செய்தார். மதுரை சின்னப்பிள்ளை: இவர் மகளிரின் வாழ்வு மேம்பாட்டுக்காகப் பாடுபட்டார். எல்லா பெண்களும்
இணைந்து வேலை செய்து கூலியை எல்லோருக்கும் சரிசமமாகப் பங்கிட்டவர். வயதானவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் அவரவர் திறமைக்கு ஏற்ப வேலை கொடுத்து,அவர்களின் குடும்பங்களுக்கு உதவியாக இருந்தார். நம் நாட்டு நடுவண்
அரசின் "பெண் ஆற்றல்" விருதையும்,தமிழக அரசின்
"அவ்வை”விருதையும், தூர்தர்ஷனின்
பொதிகை விருதையும் பெற்றவர். முடிவுரை: பெண்கள் நாட்டின் கண்கள்" எனும் சான்றோரின் வாக்கு முற்றிலும்
உண்மையானதே. ஒரு நாட்டில் உள்ள பெண்கள் ஆற்றல் மிக்கவர்களாக இருந்தால் அந்த நாடு
அனைத்து நிலைகளிலும் மாபெரும் உயர்வை அடையும். ”இந்திய
சமுதாயத்தில் பல பெண்கள் தங்களது முயற்சியையும் திறமையையும் கொண்டு
சாதித்துள்ளனர்” என்பதற்கு இவர்களே சான்றுகளாகத்
திகழ்கின்றனர். |
8 |
||
|
45 |
அ) தலைப்பு
: சாலை பாதுகாப்பு முன்னுரை: சாலை விபத்துக்கள் நமது
சமுதாயத்திற்கும், காவல்துறைக்கும், சட்டத்துக்கும்
ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.தினந்தோறும் செய்தித்தாள்கள் மூலமாகவும்,
தொலைக்காட்சிகள் மூலமாகவும் சாலைவிபத்துகளைப் பற்றிய செய்திகளை
நாம் மிகுதியாக அறிகிறோம். இக்காலகட்டத்தில் மிகுதியான சாலை விபத்துக்கள்
நடைபெறுகின்றன. சாலை விதிகளை நாம் மதிக்காமல் நடப்பது இதற்கெல்லாம் காரணம்
ஆகும். சாலை பாதுகாப்பின் அவசியம் பற்றி இக்கட்டுரையில் காண்போம். சாலை
பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு: சாலையில் விபத்துகள்
நிகழாத வண்ணம் தடுப்பதற்காக, போக்குவரத்து காவல்துறையினர்
பணி செய்கின்றனர்.அதற்காக மக்கள் பின்பற்ற வேண்டிய சில சாலை விதிகளை அரசு
வரையறுத்துள்ளது. அறிவிப்புப் பலகைகள் மூலமாகவும், விளம்பரங்கள்
மூலமாகவும், ஓட்டுனர் பயிற்சி பெறும்போதும் சாலை விதிகள்
பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு வழங்கப்படுகிறது.சாலை பாதுகாப்பு உயிர்
பாதுகாப்பு என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். சாலை
விதிகள்: சாலையில் பயணம் செய்வோர்
அனைவரும் அடிப்படையான சாலை விதிகள் அனைத்தையும் கட்டாயம் பின்பற்ற
வேண்டும்.நடைமேடையைப் பயன்படுத்துதல், நகரப்பகுதிகளில்
சாலையைக் கடக்க சுரங்க நடைபாதைகள் பயன்படுத்துதல், வெள்ளைக்
கோடுகள் போடப்பட்ட இடத்தில் சாலையைக் கடத்தல், வாகன
ஓட்டிகள் முறையான இடங்களில் வாகனங்களை நிறுத்துதல் உள்ளிட்ட அடிப்படை விதிகளை
முறையாக பின்பற்ற வேண்டும். ஊர்தி
ஓட்டுநருக்கான நெறிகள்: v சிவப்பு வண்ண
விளக்கு" நில்" என்ற கட்டளையையும், மஞ்சள் வண்ண விளக்கு, தயாராக இரு என்ற
கட்டளையையும்,
பச்சை
வண்ண விளக்கு"புறப்படு" என்ற கட்டளையையும் நமக்குத் தருகிறது. அதைச்
சரியாகப் பின்பற்ற வேண்டும். v போக்குவரத்துக்
காவல் துறையினரின் கட்டளையை மீறி நான் செல்லக்கூடாது. வாகனங்களில் அதிவேகம்
இருக்கக்கூடாது. v சாலையில் அந்தந்த
வாகனங்களுக்கு உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டக் கூடாது.
நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை முந்த முயற்சி
செய்யக்கூடாது. இருசக்கர வாகனங்களில் இருவருக்குமேல் பயணிக்கக் கூடாது. v வாகனஓட்டிகள்
உடல்நிலை மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கும் போது கண்டிப்பாக வாகனம்
ஓட்டக்கூடாது.மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுதல் சட்டப்படி குற்றமாகும்.பள்ளிகள், மருத்துவமனை, முதியோர்
இல்லங்கள் போன்ற இடங்களுக்கு அருகில் அதிகமான ஒலி அளவில் ஒலிப்பானை ஒலிக்கக்
கூடாது. முடிவுரை: "சாலைவிதிகளை
மதிப்போம் விலைமதிப்பில்லாத
உயிர்களைக் காப்போம்" என்பதை அனைவரும்
மனதிற்கொண்டு சாலை விதிகளை கடைபிடித்து, சாலை பாதுகாப்பை
உறுதி செய்வோம். சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை உணர்வோம். ஆ) தலைப்பு:
அறம் – மனித வாழ்வின் அடித்தளம் முன்னுரை: மனிதன் சமூகத்தில் நல்ல முறையில் வாழ வழிகாட்டுவது அறமாகும். அறம்
என்பது நல்லொழுக்கம், நேர்மை, இரக்கம்,
அன்பு போன்ற உயர்ந்த பண்புகளை உடையதாகும். மனித வாழ்வு முழுவதும்
அறத்தை அடிப்படையாகக் கொண்டதே. அறம் இல்லாத வாழ்க்கை பயனற்றதாகும். மனித
வாழ்வு அறம் சார்ந்தது: மனிதன் பிறந்தது முதல் இறக்கும்
வரை பல செயல்களைச் செய்கிறான். அவற்றில் நல்லவை செய்ய வழிகாட்டுவது அறமாகும்.
மனிதன் மற்றவர்களுடன் அன்புடனும் இரக்கத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.
அறநெறியைப் பின்பற்றும் மனிதன் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் பெறுகிறான்.
அதனால் மனித வாழ்வு அறம் சார்ந்ததாக இருக்க வேண்டும். இலக்கியம்
காட்டும் அறம்: தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் அறத்தை வலியுறுத்துகின்றன. குறிப்பாக
திருக்குறள், நாலடியார், ஆத்திச்சூடி
போன்ற நூல்கள் மனிதன் எவ்வாறு நல்லொழுக்கத்துடன் வாழ வேண்டும் என்பதைக் கற்றுத்
தருகின்றன. அவை அறநெறி வழியில் வாழ்வதற்கான வழிகாட்டியாக உள்ளன. எனவே
இலக்கியங்கள் மனிதர்களுக்கு அறத்தை உணர்த்தும் சிறந்த ஆசிரியர்களாக
விளங்குகின்றன. அறத்தான்
வருவதே இன்பம்: அறம் செய்து வாழும் வாழ்க்கையே
உண்மையான இன்பத்தை அளிக்கிறது. பிறருக்கு உதவுதல், அன்பு
செலுத்துதல், நல்ல செயல்களைச் செய்தல் ஆகியவற்றால்
மனநிறைவு கிடைக்கிறது. அறத்தினால் கிடைக்கும் இன்பம் நிலையானதும்
உயர்ந்ததுமானதாகும். முடிவுரை: அறம் மனித வாழ்வின்
அடிப்படையாகும். அறநெறியில் வாழும் மனிதன் மட்டுமே உண்மையான மகிழ்ச்சியையும்
உயர்ந்த வாழ்வையும் அடைவான். ஆகையால் நாம் அனைவரும் அறத்தைப் பின்பற்றி வாழ
வேண்டும். |
8 |
||
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி