6 TH STD TAMIL ANNUAL EXAM MODEL QUESTION PAPER

 

மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பீடுமாதிரி வினாத்தாள் – 2026

6.ஆம் வகுப்பு              தமிழ்            மதிப்பெண்கள்: 60       கால அளவு: 2 மணி நேரம்

. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக                                                              5×1=5

1. தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல்

அ) திருவாசகம் ஆ) திருக்குறள்  இ) திரிகடுகம் ஈ) திருப்பாவை

2. மெத்தை வீடு என்று குறிப்பிடப்படுவது

அ) மெத்தை விரிக்கப்பட்ட வீடு  ஆ) படுக்கையறை உள்ள வீடு

இ) மேட்டுப்பகுதியில் உள்ள வீடு   ஈ) மாடிவீடு

3. காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் _____________

அ) கோவை ஆ) மதுரை இ) தஞ்சாவூர் ஈ) சிதம்பரம்

4. செவ்விந்தியர்கள் நிலத்தைத்_____ மதிக்கின்றனர்.

அ) தாயாக  ஆ) தந்தையாக  இ) தெய்வமாக  ஈ) தூய்மையாக

5. ஏழைகளுக்கு உதவி செய்வதே ………………… ஆகும்.

அ) பகை ஆ) ஈகை இ) வறுமை ஈ) கொடுமை

. கோடிட்ட இடங்களை நிரப்புக                                                                                   4×1=4

6. காந்தியடிகள் ____ அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார்.

7. பாஞ்சாலங்குறிச்சியில் -----நாயை விரட்டிடும்.

8. உள்ளத்தில் ..................... இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும்.

9.  புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல் ______________       

. பொருத்துக                                                                                                                 4×1=4

10. இலக்கிய மாநாடு – அ. பாரதியார்

11. தமிழ்நாட்டுக் கவிஞர்_ . சென்னை

12. குற்றாலம் – இ. ஜி.யு.போப்

13. தமிழ்க் கையேடு – ஈ. அருவி

. எவையேனும் ஆறனுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க                                             6×2=12

14. காந்தியடிகள் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் முதலில் ஏன் நுழையவில்லை?

15 பாஞ்சாலங்குறிச்சியின் இயற்கை வளம் எத்தகையது?

16. தாராபாரதியின் பாடலில் இடம்பெற்றுள்ள கவிஞர்களின் பெயர்களைக் குறிப்பிடுக

17. சுட்டு எழுத்துகள் என்றால் என்ன ? அவை யாவை ?

18. யாருக்குத் தொண்டு செய்ய வேண்டும்?

19. விலைகொடுத்து வாங்கஇயலாதவை எனச் சியாட்டல் கூறுவன யாவை?

20. சொற்களின் வகைகளை எழுதுக.

21. ஈகை பற்றிய வள்ளுவரின் கருத்து யாது?

. எவையேனும் மூன்றனுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க                                   3×3=9

22. எல்லா உயிர்களும் மகிழ்வோடு வாழப் புத்தர் பிரான் கூறும் அறிவுரைகள் யாவை ?

23. பூமி எப்போது பாதையாகும்?

24. பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும். அவை யாவை?

25. காந்தியடிகளின் உடை மாற்றத்திற்குக் காரணமாக அமைந்த நிகழ்வினை எழுதுக.

26. பராபரக்கண்ணியில் தாயுமானவர் கூறுவன யாவை?

. அடிமாறாமல் எழுதுக                                                                                                2+3=5

27. “விடல்” என முடியும் திருக்குறள்.     

28. ” தம் உயிர்” எனத்தொடங்கும் பராபரக்கண்ணி பாடல்

. எவையேனும் மூன்றனுக்கு மட்டும் விரிவான விடையளிக்க                                      3×5=15

29. நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு மாணவர்கள் செய்ய வேண்டியவை பற்றிச் சிந்தித்து எழுதுக.

30. நாட்டுப் புறக்கதைப் பாடல்களில் கட்டபொம்மன் பெரிதும் புகழப்படக் காரணம் யாது?

31. வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்டெடுத்த நிகழ்வைச் சுருக்கமாக எழுதுக.

32. நூல்கள் அனுப்ப வேண்டிப் பதிப்பகத்தாருக்குக் கடிதம் எழுதுக

33 தாய்மண்மீதான செவ்விந்தியர்களின் பற்றுக் குறித்துச் சியாட்டல் கூறுவனவற்றைத்  தொகுத்து எழுதுக

. அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                                                    6×1=6

34. பிரித்து எழுதுக. பூட்டுங்கதவுகள்  . இன்னோசை

35. சேர்த்து எழுதுக: . பால்+ஊறும்  . மலை+எலாம்

36. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது.

அ. என் வீடு _________ உள்ளது. (அது / அங்கே )

ஆ. தம்பி ____________ வா (இவர் / இங்கே )

37. வினாச்சொற்களை தொடரில் அமைத்து எழுதுக

அ) எங்கே ஆ) ஏன்

38. இரு பொருள் தருக

அ. திங்கள்  ஆ. ஓடு

39 கலைச்சொல் எழுதுக. Tribes  . Literature

 பதிவிறக்கம் செய்ய

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை