7 TH STD TAMIL ANNUAL EXAM MODEL QUESTION PAPER

 

மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பீடு – மாதிரி வினாத்தாள் – 2026

7.ஆம் வகுப்பு              தமிழ்            மதிப்பெண்கள்: 60       கால அளவு: 2 மணி நேரம்

அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக                                                              5×1=5

1. திருநெல்வேலி------மன்னர்களோடு தொடர்பு உடையது.

அ) சேர  ஆ) சோழ  இ) பாண்டிய   ஈ) பல்லவ

2. மரம் வளர்த்தால்------பெறலாம்.     

அ) மாறி  ஆ) மாரி  இ) காரி    ஈ) பாரி

3. காந்தியடிகள் எப்போதும் -----------ப் பேசினார்

அ) வன்சொற்களை  ஆ) அரசியலை  இ) கதைகளை  ஈ) வாய்மையை

4. வறுமையைப் பிணி என்றும் செல்வத்தை-------- என்றும் கூறுவர்.

அ) மருந்து   ஆ) மருத்துவர்  இ) மருத்துவமனை   ஈ) மாத்திரை

5. விடை---- வகைப்படும்.      

அ) ஏழு  ஆ) எட்டு  இ) ஒன்பது  ஈ) பத்து

. கோடிட்ட இடங்களை நிரப்புக                                                                                   4×1=4

6. காயிதே மில்லத் ------பண்பிற்கு உதாரணமாகத் திகழ்ந்தார்

7. __________ ஒரு நாட்டின் அரணன்று.     

8. உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய் என்று கூறியவர்--------

9.  ’ இளமைஎன்னும் சொல்லின் எதிர்ச்சொல் _________.

இ. பொருத்துக                                                                                                                          4×1=4

10. அன்பு – அ. நெய்

11. ஆர்வம் – ஆ. தகளி

12. சிந்தை – இ. விளக்கு

13. ஞானம் – ஈ. இடுதிரி

ஈ. எவையேனும் ஆறனுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க                                             6×2=12

14. அந்தாதி என்பது யாது?      

 15. தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகள் யாவை?

16. பாரி மகளிரின் பெயர்களை எழுதுக.   

17. தகுதி வழக்கின் வகைகள் யாவை?

18. நீக்கவேண்டிய  களை என்று அறநெறிச்சாரம் எதனைக் குறிப்பிடுகிறது?

19. பொருளீட்டுவதன் நோக்கமாகக் குன்றக்குடி அடிகளார் கூறுவது யாது?

20. ஒரு செயலைச் செய்ய எவற்றையெல்லாம் ஆராய வேண்டும்?

21. வாழ்க்கை மலர்ச்சோலைகளாக மாற என்ன செய்ய வேண்டும் ?

ஈ. எவையேனும் மூன்றனுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க                                   3×3=9

22. இரக்கம் உடையோர் பற்றி இயேசு காவியம் கூறுவன யாவை?

23. திருநெல்வேலி நகர அமைப்புப் பற்றிக் கூறுக.

24. பூதத்தாழ்வார் ஞானவிளக்கு ஏற்றும் முறையை விளக்குக.

25. இளம் வயதிலேயே செய்ய வேண்டிய செயல்களாக முனைப் பாடியார் கூறுவன யாவை?

26. ஊருணியையும் மரத்தையும் எடுத்துக்காட்டிக் குன்றக்குடி அடிகளார் கூறும் செய்திகள் யாவை?

உ. அடிமாறாமல் எழுதுக                                                                                                2+3=5

27. “நாடு” என முடியும் திருக்குறள்.     

 28. ” வாயும் வயிறும்” எனத்தொடங்கும் மலைப்பொழிவு பாடல்

ஊ. எவையேனும் மூன்றனுக்கு மட்டும் விரிவான விடையளிக்க                                      3×5=15

29. திருநெல்வேலிப் பகுதியில் நடைபெறும் உழவுத்தொழில் குறித்து எழுதுக.

30. என்னைக்கவர்ந்த நூல் என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக

31. ஒப்புரவுக்கு அடிகளார் தரும் விளக்கம் யாது?

32. உண்மை ஒளி படக்கதையைக் கதையாகச் கருக்கி எழுதுக

33. உங்கள் ஊரில் நடைபெறும் திருவிழாவைக் காண வருமாறு அழைப்பு விடுத்து உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக

எ. அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                                                    6×1=6

34. பிரித்து எழுதுக :  அ. எதிரொலித்தது  ஆ. இன்சொல்

35. சேர்த்து எழுதுக: அ. மாரி+ஒன்று  ஆ. முதுமை+மொழி

36. சரியான வினாச்சொல்லை இட்டு நிரப்புக

அ. நெல்லையப்பர் கோவில் ---- உள்ளது?  ஆ. முதல் ஆழ்வார்கள் ------ பேர்?

37. இன் அல்லது இல் என்னும் இடைச்சொல்லைச் சேர்த்துத் தொடரை மீண்டும் எழுதுக

அ. இந்தியா கிழக்கே வங்கக்கடல் உள்ளது.  ஆ. தேன் சுவையை உடையது இக்கனி

38. அது என்னும் இடைச்சொல்லைச் சேர்த்துத் தொடர்களை மீண்டும் எழுதுக.

அ. அண்ணன் கைக்கடிகாரம் அழகாக உள்ளது. ஆ. வீரன் கையில் வேல் இருந்தது.

39 கலைச்சொல் எழுதுக:  அ. Wealth  ஆ. Ambition

 பதிவிறக்கம் செய்ய


Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை