தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற சில முக்கியக்குறிப்புகள்

 10.ஆம் வகுப்பு - தமிழ்

பொதுதேர்வு நேர மேலாண்மை

வ.எண்

வினா எண்

வினாவகை

கால அளவு

 

1

 

1 முதல் 15

பகுதி-1

      ஒரு மதிப்பெண் வினா

(15 வினாக்கள்)

 

10 நிமிடங்கள்

 

2

 

16 முதல் 28

பகுதி-2 (பிரிவு 1 மற்றும் 2)

2 மதிப்பெண் வினா

(9 வினாக்கள்)

 

20 நிமிடங்கள்

 

3

 

29 முதல் 37

பகுதி-3 (பிரிவு 1,2 மற்றும் 3)

3 மதிப்பெண் வினா

(6 வினாக்கள்)

 

30 நிமிடங்கள்

 

4

 

38  முதல்  42

பகுதி-4

5 மதிப்பெண் வினா

(5 வினாக்கள்)

 

35 நிமிடங்கள்

 

5

 

43  முதல்  45

பகுதி-4

8 மதிப்பெண் வினா

(3 வினாக்கள்)

 

75 நிமிடங்கள்

(1  1/4 மணி நேரம்)

 

எழுதிய விடைகள் மற்றும் வினா எண்களைச் சரிபார்க்க

 

10 நிமிடங்கள்

 

மொத்த கால அளவு

(வினாத்தாளைப் படிப்பதற்கு 3 மணி நேரத்துக்கு முன்னதாகவே நேரம் கூடுதலாக வழங்கப்படும்)

 

180 நிமிடங்கள்

(3 மணி நேரம்)

பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில்  100 மதிப்பெண்கள்  பெற உதவும் சில முக்கியக் குறிப்புகள்:

v  ஒரு மதிப்பெண் வினா ஒரு மதிப்பெண் வினா விடை , 8 மதிப்பெண் வினா விடை & மனப்பாடப் பகுதிகளில் மாணவர்கள் பிழைகள் அல்லது அடித்தல் திருத்தல் செய்வதை தவிர்க்கவும்.

v  ஏனெனில் மதிப்பெண்கள் குறையக் கூடிய அல்லது எளிதில் குறைக்கக்கூடிய பகுதிகள்  இதுவாகும்.

v  ஒரு மதிப்பெண் வினா விடையைத் தவிர அனைத்து வினா விடைகளுக்கும் சிறு தலைப்புகள் கொடுத்து எழுதவும்.

v  எட்டு மதிப்பெண் வினா விடைகளை அதிக பக்கங்களில் எழுத வேண்டிய அவசியம் இல்லை. கேட்கப்பட்ட வினாவிற்கு மிகச்சரியான விடையைக் கண்டிப்பாக மேற்கோள்களுடன் எழுதவும் மேற்கோள்களை கட்டங்களில் எழுதவும்.

v  வினாக்களை மிக விரிவாக எழுதுதல் உங்களது நேர மேலாண்மையைப் பாதிக்கும்

v  செய்யுள் நெடுவினா மற்றும் எட்டு மதிப்பெண் வினாக்களுக்கு தலைப்பு மற்றும் குறிப்புச் சட்டகம் எழுதிய பிறகு விடையை எழுதத் தொடங்கவும்

v  ஒரு வினாப் பகுதியை (ROMAN LETTER) எழுதத் தொடங்கிய பிறகு அதை முழுமையாக முடித்துவிட்டு, அடுத்த வினாப் பகுதியை எழுதவும். ( உங்கள் விடைத்தாளினைத் திருத்தி மதிப்பெண்களை அதற்குரிய பக்கத்தில் பதிவிடும் போது குழப்பங்கள் ஏற்படலாம்)

v  முடிந்தவரை அனைத்து வினாப் பகுதிகளையும் வினாத்தாளில் தரப்பட்ட வரிசைக் கிரமத்திலேயே எழுதுவது மிகச் சிறந்தது.

v  இரண்டு மதிப்பெண் வினா விடைகளில் 22 முதல் 29ஆம் வினா எண் வரை இலக்கணம் மற்றும் மொழிப்பயிற்சி பகுதிகளில் இருந்து கேட்கப்படும். எனவே இதில் கூடுதல் கவனம் செலுத்தாவிடில் கண்டிப்பாக இதில் மதிப்பெண்கள் குறைய வாய்ப்புண்டு

v  பாடப்புத்தகத்தில் உள்ள அனைத்து கவிதைப்பேழை (செய்யுள்) பகுதிகளுக்கும் உரிய ஆசிரியர் பெயர் மற்றும் நூல் தொகுப்பின் பெயர்களைச் சரியாகப் படித்துச் செல்லவும் பாடலடி வினாக்களில் இது போன்ற வினாக்கள் கட்டாயம் இடம்பெறும்

v  நூல்வெளிகள் அல்லது ஆசிரியர் குறிப்புகளை கட்டாயம் படித்துச் செல்லவும் ஏனெனில் மூன்று மதிப்பெண் வினா விடைகளில் குறிப்பாக செய்யுள் பகுதி மூன்று மதிப்பெண் வினா விடைகளில் நூல் குறிப்பு அல்லது ஆசிரியர் குறிப்பு சார்ந்த வினாக்கள் கேட்கப்படலாம்

v  இயல் 3 மற்றும் இயல் 5 ஆகிய பகுதிகளில் இடம் பெற்றுள்ள திருக்குறளில் இருந்து மூன்று அல்லது ஐந்து மதிப்பெண் வினா விடைகள்  உறுதியாகக் கேட்கப்படும். ஆகையால் அனைத்து திருக்குறள்களுக்கும் உரிய பொருளை கட்டாயமாகப் படித்துக்கொள்ளவும்.

v  சான்றாக, ஆள்வினை உடைமை, அமைச்சு, பொருள் செயல் வகை, பெரியாரைத் துணைக் கோடல் இத்தலைப்புகளில் அடிக்கடி வினாக்கள் கேட்கப்படுகின்றன என்பதை மனதில் கொள்ளவும்

v  அணி இலக்கண வினாவைப் பொறுத்தவரை திருக்குறள் கொடுத்தும் வினாக்கள் கேட்கப்படலாம். அல்லது அணியின் பெயரை மட்டுமே கொடுத்தும் கேட்கப்படலாம். எனவே திருக்குறளையும் அதில் பயின்று வரும் அணியையும் சேர்த்து படித்து வைத்துக் கொள்ளவும்.

v  வினாஎண்: 42 , 5 மதிப்பெண் வினாவில் மொழிபெயர்ப்பு அல்லது நிற்க அதற்குத் தக பகுதிகள் ஒன்று அல்லது மற்றொன்று எழுதும் வகையில் தரப்படும். எனவே இதில் ஏதேனும் ஒரு பகுதியில் அதிக வனம் செலுத்தினால் அதில் ஐந்து மதிப்பெண்களை எளிமையாகப் பெற முடியும்

v  மொழிபெயர்த்தல் 5 மதிப்பெண் வினாவிற்கு விடை எழுதும்போது, அதற்கான தலைப்பு தருதல் மற்றும் அதில் உள்ள சில கலைச் சொற்களுக்குத் தமிழ் பொருள் எழுதுதல் உள்ளிட்டவற்றை செய்து விட்டு பத்தியை மொழிபெயர்க்கத் தொடங்கவும்

இவற்றை மிகச் சரியாக கடைப்பிடிக்கும் மாணவச் செல்வங்கள் கண்டிப்பாக தமிழில் 100 மதிப்பெண் பெறுவது உறுதி அனைத்து மாணவ செல்வங்களும் தமிழ் பாடத்தில் சிறப்பான நிலையில் தேர்ச்சி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்

பதிவிறக்கம் செய்ய 10 வினாடிகள் காத்திருக்கவும்

You have to wait 10 seconds.

Generating Download Link...

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை