(இராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகப்பட்டிணம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஒரே வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளதால் இதே விடைக்குறிப்பைப் பயன்படுத்தலாம்)
மூன்றாம்
இடைப்பருவத்தேர்வு -2025
9.ஆம் வகுப்பு- தமிழ் விடைக்குறிப்புகள்
I.
பலவுள் தெரிக 7×1=7
1. ஆ)
ஏமாங்கத நாடு
2. இ) அள்ளல்
- சேறு'
3. இ)
வினைத்தொகையில் வல்லினம் மிகாது
4. ஈ)
உவமைத்தொகை
5. ஆ) கூற்று,
காரணம் இரண்டும் சரி
6. அ. சிவன்
7. ஆ. சோறு
I I
. எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க 5×2=10
8.
நான் இராணுவப் பணியை தாய்நாட்டுக்காக உழைக்க தேர்ந்தெடுப்பேன். ஏனெனில், தாய்நாட்டைப் பாதுகாக்கவும், இந்திய
ஒருமைப்பாட்டையும் இறையாண்மையைப் பேணவும் கிடைத்த வாய்ப்பாக இராணுவப் பணியைக்
கருதுகிறேன்.
9. ஓம்புவார் - ஓம்பு + வ் + ஆர்
ஓம்பு - பகுதி
வ் - எதிர்கால
இடைநிலை
ஆர் - பலர்பால்
விகுதி
10.
·
கேப்டன்
தாசன்
·
இராமு
·
அப்துல்காதர்
·
ஜானகி
·
இராஜாமணி
11.
நெற்பயிர்.
12.
இந்திய தேசிய இராணுவப்படைத் தலைவராக இருந்த தில்லான் "இந்திய
தேசியஇராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள் தான்" என்றார்.
13. சலசல – இரட்டைக்கிளவியில்
வல்லினம் மிகாது
14. மகளே கொடு- விளித்தொடரில்
வல்லினம் மிகாது
III
.எவையேனும் 3 வினாக்களுக்கு விடையளி 3×3=9
15.
இந்திய தேசிய இராணுவத்தில் இருந்து 45 வீரர்கள் நேதாஜியால் தேர்வு செய்யப்பட்டு வான்படைத்
தாக்குதலுக்கான சிறப்புப் பயிற்சி பெறுவதற்காக, ஜப்பானில்
உள்ள இம்பீரியல் மிலிட்டரி அகடமிக்கு அனுப்பப்பட்ட பயிற்சிப் பிரிவின் பெயர்தான்
டோக்கியோ கேடட்ஸ்.
16.
ü
ஊர்களில்
ஆயிரம் வகை உணவுகள் கிடைக்கின்றன.
ü
உணவளிக்கும்
அறச்சாலைகள் ஆயிரம் உள்ளன.
ü
மகளிர்
ஒப்பனை செய்யும் மணிமாடங்கள் ஆயிரம் உள்ளன.
ü
அங்கு
நிகழும் திருமணங்கள் ஆயிரமாக உள்ளன.
ü
தொழில்
செய்யும் கம்மியர்கள் ஆயிரம் பேர் உள்ளனர்.
17. சொல்அரும் சூல்பசும் பாம்பின் தோற்றம்போல்
மெல்லவே கருஇருந்து ஈன்று மேலலார்
செல்வமேபோல் தலை நிறுவித் தேர்ந்தநூல்
கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே
18.
ü
உறைந்து
போகும் கொடிய பனிப்பொழிவிலும்,
மலைத்துப் போகச் செய்யும் மலைச் சரிவுகளிலும் நாட்டு நலனுக்காக
ஓயாது உழைக்கும் உடன்பிறவா சகோதரர்களே!
ü
தாய்
மண்ணைக் காக்கத் தங்கள் இன்னுயிரையும் ஈந்த இந்தியத் தாயின் வெற்றித்
திருமகள்களுக்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்யப்போகிறோம்?
ü
தியாகச்
செம்மல்களே! உங்கள் வீரமிக்க பணிகளைப் பாராட்டுகிறோம். உங்கள் தொண்டிற்குத்
தலைவணங்குகிறோம்!
IV.
5
19. வள்ளுவன் வாக்கில் ஒன்றைச்
சொன்னது!
காலம் யாவும் கடந்து நின்றது!
சிந்தனைச் சிறகை விரித்துப்பார் என்றது!
அறிவு சிறக்க அறிந்துகொள் என்றது!
என்னையும் கவிஞனாக்க துணிந்து நின்றது!
இது வெறும் காட்சி மட்டுமன்று!
என் மனதைக் கவினுற மாற்றிய மந்திரக்கோல்!
V. மொழித்திறன் பயிற்சி 3×2=6
20. அ. இந்திய தேசிய இராணுவம்
21. அ. கொடுத்தல், கொடை ஆ. அரசன்,
தலைவன்
22. அ. குப்பைகளைக் குப்பைத்தொட்டியில் போடுவேன். ஆ. கருக்கொண்ட பச்சைப் பாம்பு
VI. 23.எனது பயணம்- இயற்கையின்
தாய்மடி- உதகை 1×5=5
கடந்த 2018 சனவரி மாதம் இயற்கை எழில் கொஞ்சும் உதகைக்கு நான்
சுற்றுலா சென்றிருந்தேன். அந்த அழகான பயண அனுபவங்களை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து
கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
அரக்கோணம் தொடர்வண்டி
நிலையத்திலிருந்து நீலகிரி விரைவு வண்டியில் முன்பதிவு செய்து, உதகமண்டலத்தின் அடிவாரமான மேட்டுப்பாளையத்தைச்
சென்றடைந்தோம். பயணத்தின் தொடக்க அனுபவமே இனிய அனுபவமாக அமைந்தது. மறுநாள்
விடியற்காலை 5.00 மணிக்கு தொடர்வண்டி மேட்டுப்பாளையத்தைச் சென்றடைந்தது.
மேட்டுப்பாளையத்திலிருந்து,தமிழகத்தின் பெருமையான நீலகிரி மலை இரயில் மூலம்
பயணிக்கத் தொடங்கினோம். மலைகள்,கடுகள்,ஆறுகளைக் கடந்து, புகையைக் கக்கிக்கொண்டே அந்த தொடர்வண்டி சென்றது மெய்ம்மறக்கும் அனுபவமாக
அமைந்தது.
3 மணி நேரம்
பயணத்திற்குப் பிறகு உதகமண்டலத்தை அடைந்தோம்.அங்கே நாங்கள் பார்த்த அரசு தாவரவியல்
பூங்கா,மலர் கண்காட்சி,தொட்டபெட்டா சிகரம்,பைக்காரா நீர்வீழ்ச்சி,பைக்காரா படகு சவாரி,குன்னூர் உள்ளிட்ட இடங்கள் யாவுமே இன்று நினைத்தாலும்
மெய்சிலிர்க்கக் கூடிய இடங்களாக அமைந்துள்ளன.
VII. 24. 1×8=8
வளம் மிக்க நெருங்கிய தோப்புகள்:
ஏமாங்கத நாட்டில் நிகழ்ந்த வளமான நிகழ்வு போலவே எம் ஊரிலும்
அடர்ந்த தோப்புகளில் நிகழ்ந்தது. தென்னை மரத்திலிருந்து முற்றிய தேங்காய்
விழுகின்றது. அத்தேங்காய் நிலத்தை வந்தடையும்முன் விழும்வேகத்தில் அருகிருந்த பாக்கு
மரத்தின் உச்சியின் உள்ள தேனடையைக் கிழித்து, தேனடையோடு
பலாமரத்தில் உள்ள பலாப்பழத்தினை பிளந்து, தேங்காய், தேனடை, பலாச்சுளைகளோடு, வாழைப்பழங்களையும்
உதிரச்செய்கிறது.
மண் மணம்வீசும் வயல்வளம்:
நீர்நிலைகள் சூழ்ந்த வயல் பகுதிகள் உள்ளன. அந்நீர்நிலைகளில்
அழகான கொம்புகளையுடைய ஆண் எருமைகளும், வலிமையான நேரிய
கொம்புகளை உடைய எருதுகளும் பேரொலி எழுப்பி நீந்துகின்றன. அவ்வொலியால் அந்நீர்நிலையில்
உள்ள பொறிகளையுடைய வரால் மீன் இனங்கள் கலைந்து ஓடுகின்றன.
வணங்கும் நெற்பயிர்கள்:
கருக்கொண்ட
பச்சைப்பாம்பைப்போல நெற்பயிர்கள் திரட்சியான தோற்றம் கொண்டுள்ளன. செல்வம் பெற்று
பக்குவம் இல்லாது செருக்குடன் இருக்கும் மேல் அல்லார் போல, கதிர்விட்டு
நிமிர்ந்துநிற்கின்றன நெற்பயிர்கள். அப்பயிர்களில் உள்ள நெற்கதிர்கள் முற்றியவுடன்,
தெளிந்த நூல் பல கற்றோரின் பணிவைப்போல பணிந்து, இறைஞ்சி தலைசாய்ந்து நிற்கும் கவின் மிகு காட்சியையும் எம் ஊரில் காணலாம்.
ஆ. இது, இந்திய அரசின் முதன்மை தேசிய விண்வெளி முகமை ஆகும்
இதன் தலைமையகம், இந்தியாவில், பெங்களூருவில் நீயூஸல் சாலையில் 'அன்தரீஷி பவன்' என்ற பெயரில் உள்ளது.
ü
இதன் முதன்மை விண்வெளி
நிலையம் சதீஸ் தவன் விண்வெளிமையம்.
ü
இந்திய விண்வெளி
ஆராய்ச்சி நிறுவனம் உலகின் மிகப் பெரும் விண்வெளி ஆய்வு மையங்களில் ஆறாவது
இடத்தைப் பெற்றுள்ளது.
ü
இதன் முதன்மை நோக்கமாக
விண்வெளி தொழில்நுடபத்தில் மேம்பாடுகளை ஆராய்வதும் அவற்றை நாட்டு நலனுக்காகப்
பயன்படுத்துவதும் ஆகும்.
ü
இந்நிறுவனம், 1975 ஆம் ஆண்டில் இந்தியாவின்
முதல் செயற்கைக்கோள் 'ஆரியப்படடா' அமைக்கப்பட்டு
சோவியத் ஒன்றியத்தால் விண்ணேற்றப்பட்டது இதற்குக் காரணமானவர் விக்ரம் சாராபாய்
ஆவார்
ü
1980 இல்
இந்தியாவில் கட்டமைக்கப்பெற்ற ஏவுதளம் SLV3 மூலமாக முதல்
செயற்கைக் கோள் 'ரோகினி' ஏவப்பட்டது.
இந்நிறுவனத்தின் சாதனையாக 2008 ஆம் ஆண்டில் நிலவை நோக்கிய இந்தியாவின்
முதற்பயணமாக "சந்திராயன்-I" ஏவப்பட்டது.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி