இரண்டாம் திருப்புதல் தேர்வு-2026
கிருஷ்ணகிரி மாவட்டம்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1 15X1=15
|
வி.எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
|
1. |
ஆ. மணிப்பெயர் வகை |
1 |
|
2. |
ஈ. சருகும்,
சண்டும் |
1 |
|
3. |
ஆ. 3,1,4,2 |
1 |
|
4. |
அ. பண்புத்தொகை |
1 |
|
5. |
ஈ. மன்னன்,
இறைவன் |
1 |
|
6. |
ஈ. இளவேனில் |
1 |
|
7. |
இ. குறிஞ்சி,மருதம்,நெய்தல்
நிலங்கள் |
1 |
|
8. |
அ. கைமாறு கருதாமல்
அறம் செய்வது |
1 |
|
9. |
ஆ. கிண்கிணி |
1 |
|
10. |
ஆ. வஞ்சிப்பா |
1 |
|
11. |
இ. சேரநாடு,
சோழநாடு |
1 |
|
12. |
ஆ. சிலப்பதிகாரம் |
1 |
|
13. |
அ. பகர்வணர்-
பட்டினும் (ம) ஈ. ஆரமும் அகிலும் (இரண்டுமே சரி) |
1 |
|
14. |
நெய்பவர் |
1 |
|
15. |
ஆ. சந்தனமும்-அகிலும் |
1 |
பகுதி-2 பிரிவு-1
4X2=8
|
எவையேனும் நான்கு வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்க |
||
|
16 |
அ. ம.பொ.சி எவ்வாறு இலக்கிய
அறிவு பெற்றார்? ஆ. நாடும் மொழியும் நமதிரு
கண்கள் என்றவர் யார்? (மாதிரி விடைகள்) |
2 |
|
17 |
வாருங்கள், நலமா?,
நீர் அருந்துங்கள் |
2 |
|
18 |
தாய் “மகளே! நாளை
உன்னுடைய தோழி அழகியை அழைத்து வா” என்று சொன்னார். |
2 |
|
19 |
ü முதுகினால் சூரியனை
மறைக்கும்போது மேகங்கள் துணிச்சலானவை. ü தாகம் தீர்க்கும்போது
மேகங்கள் கருணை மிக்கவை |
2 |
|
20 |
ü தண்ணீர் குடி – தண்ணீரைக்குடி -இரண்டாம் வேற்றுமைத்தொகை ü தயிர்க்குடம் – தயிரை உடைய குடம் - இரண்டாம் வேற்றுமை
உருபும் பயனும் உடன் தொக்க தொகை |
2 |
|
21 |
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத் தியற்கை
அறிந்து செயல். |
2 |
பிரிவு-2
5X2=10
|
எவையேனும்
ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
|
22 |
·
உழவர்
வயலில் உழுதனர். ·
நெய்தல்
பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர். |
2 |
|
23 |
தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை தேறும்
சிலப்பதி காரமதை ஊணிலே எம்முயிர் உள்ளளவும் – நிதம் ஓதி
யுணர்ந்தின் புறுவோமே” |
2 |
|
24 |
அ. ஒரு மொழி
ஆ. பண்பாடு |
2 |
|
25 |
வருக
- வா(வரு) + க வா - பகுதி வரு
எனத் திரிந்தது விகாரம் க-
வியங்கோள் வினைமுற்று விகுதி |
2 |
|
26 |
அ. சிறு பூனையும்
சீறும் ஆ.
செயற்கையை விட இயற்கை சிறந்தது |
2 |
|
27 |
ஒரு சொல் இரண்டு மூன்று முறைஅடுக்கித் தொடர்வது அடுக்குத் தொடர் ஆகும். எ.கா. வருக! வருக! வருக! |
2 |
|
28 |
"சீசர் எப்போதும் என்
சொல்பேச்சைக் கேட்கும். புதியவர்களைப் பார்த்துக் கத்துமே தவிர கடிக்காது "
என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார். |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18) பிரிவு-1 2X3=6
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
|
29 |
அ) நாற்று- நெல் நாற்று நட்டேன். ஆ) கன்று- வாழைக்கன்று வளர்த்தேன் இ) பிள்ளை- தென்னம்பிள்ளை அசைந்தது ஈ) வடலி-பனைவடலியைப் பார்த்தேன். உ) பைங்கூழ்-பைங்கூழ் அழகானது. |
3 |
|
30 |
# வாசவர்- நறுமணப் பொருட்களை விற்பவர்கள் # # உமணர் – உப்பு விற்பவர் |
3 |
|
31 |
அ. வீரமற்றோர். புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது ஆ. தம்மைவிட வலிமை
குறைந்தாரோடு இ. பசு, பார்ப்பனர், பெண்கள்,
நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத்
தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் |
3 |
பிரிவு-2
2X3=6
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
|
32 |
ü தமிழுக்காகத் தமிழ்வளர்ச்சித்
துறையை உருவாக்கினார் ü மனோன்மணியம் சுந்தரனாரின்
தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலைப் பரவலாக்கினார் ü 2010 ல் கோவையில் உலகத்
தமிழ் மாநாடு நடத்தினார் |
3 |
|
33 |
·
கம்பர் ·
உமறுப்புலவர் ·
ஜவ்வாதுப்புலவர் ·
ஆசு
கவி ·
காசிம்
புலவர் ·
குணங்குடியார் ·
சேகனாப்புலவர் ·
செய்குத்தம்பி
பாவலர் |
3 |
|
34 |
|
3 |
பிரிவு-3 2X3=6
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||||||||||||||||||||||||||
|
35 |
v ஒழுக்கம் சிறப்பு
தரும். அதனை உயிரை விடக் காக்க வேண்டும். v ஒழுக்கம் உள்ளவர்
உயர்வு அடைவர். அது இல்லாதவர் பழிகளை அடைவர். v உலகத்தோடு
இணைந்து வாழாதவர்,
கற்றவராயினும்
அறிவு இல்லாதவரே |
3 |
||||||||||||||||||||||||
|
36 |
ü
இக்குறளில் சொற்பொருள் பின்வருநிலை அணி பயின்று
வந்துள்ளது. சொற்பொருள் பின்வருநிலை அணி: ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல்
ஒரே ஒரு பொருளில் பின்னரும் பலமுறை வருவது சொற்பொருள் பின்வருநிலை அணி ஆகும். அணிப்பொருத்தம்: ‘இன்மை‘ என்னும் சொல் வறுமை என்னும் ஒரே பொருளில் பின்னரும் பலமுறை வருவதால் இக்குறளில்
சொற்பொருள் பின்வருநிலை அணி பயின்று வந்துள்ளது. |
3 |
||||||||||||||||||||||||
|
37 |
|
3 |
||||||||||||||||||||||||
பகுதி-4
5X5=25
|
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி |
||||||||||||||
|
38
அ |
கருணையனின்
தாய் மறைவுக்கு வீரமாமுனிவரது
கவிதாஞ்சலி கருணையன்
தனது தாயை நல்லடக்கம் செய்தான்: குழியினுள் அழகிய மலர்ப்படுக்கையைப்
பரப்பினான். பயனுள்ள வாழ்க்கை நடத்திய தன் அன்னையின் உடலை
மண் இட்டு மூடி அடக்கம் செய்தான். அதன்மேல் மலர்களையும்
தன் கண்ணீரையும் ஒருசேரப் பொழிந்தான். கருணையன்
தாயை இழந்து வாடுதல்: இளம் பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளை காணும் முன்னே, மழைத்துளி இல்லாமல் காய்ந்து விட்டதைப் போல நானும் என் தாயை இழந்த
வாடுகிறேன் என்று கருணையன் வருந்தினான். கருணையனின்
தவிப்பு: துணையைப் பிரிந்த பறவையைப் போல் நான் இக்காட்டில் அழுது இரங்கி விடுகிறேன்.சரிந்த வழுக்கு நிலத்திலே தனியே விடப்பட்டு செல்லும் வழி தெரியாமல்
தவிப்பவன் போல் ஆனேன்”.எனப் புலம்பினான். பறவைகளும்,வண்டுகளும் கூச்சலிட்டன: கருணையன் இவ்வாறெல்லாம் அழுது புலம்பினார்.
அதைக் கேட்டு, பல்வேறு இசைகளை இயக்கியது
போன்று, மணம் வீசும் மலர்களும், பறவைகளும்,
வண்டுகளும் அழுவதைப் போன்றே கூச்சலிட்டன. (அல்லது) ஆ) வரவேற்பு: விருந்தோம்பல் என்பது தமிழர் பண்பாடு.அந்த
விருந்தோம்பலில் எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எங்கள்
இல்லத்திற்கு வந்த உறவினர்களை வருக வருக என மகிழ்ச்சியாக வரவேற்றோம். அவர்கள்
அமர்வதற்கு இருக்கையைச் சுத்தப்படுத்திக் கொடுத்தோம். வந்தவர்களுக்கு
முதலில் குடிக்க நீர் தந்தோம். கலந்துரையாடல்: நாங்கள் அனைவரும் காலை உணவு உண்டபின், வரவேற்பரையில்
அமர்ந்து ஒவ்வொரு உறவுகளைப் பற்றியும் நலம் விசாரித்தோம். நலம்
விசாரித்ததிலிருந்து எங்களுக்கும் எங்கள் உறவினருக்கும் இடையே உள்ள ஆழமான அன்பு,
பாசம் தெரியவந்தது. பிற்பகல் ஆனதும் மதிய உணவு தயாரானது. விருந்து
உபசரிப்பு : தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த
இடமுண்டு என்பார்கள். அதுபோல் வந்தவர்களுக்குச் சுவையான உணவு வகைகளை வாழை
இலையில் பரிமாறினோம். அவர்கள் உண்ணும்வரை அருகில் இருந்து அவர்களுக்குத்
தேவையானவற்றைப் பார்த்துப் பார்த்து வழங்கிக் கவனித்தோம். நகர்வலம்: விருந்தினருக்கு சிறப்பான மதிய உணவு அளித்த
பிறகு அவர் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். மாலை வேளையில் எங்கள் ஊரைச் சுற்றி காண்பித்தோம் எங்கள் ஊரின்
சிறப்புகள் அருமை பெருமைகளை அவருக்கு மணமகள் வகையில் எடுத்துக் கூறினோம் இரவு
விருந்து : நகர்வலம் முடிந்து, இரவு
விருந்துக்குத் தேவையானவற்றைச் செய்தோம். இரவில், இரவு
நேரத்திற்கு ஏற்ற உணவுகளை விருந்தாகப் படைத்தோம். அவர்களும் விருப்பத்துடன்
கேட்டு சுவைத்துச் சாப்பிட்டனர். பிரியா
விடை : இரவு விருந்து முடிந்ததும் அவர்கள் தங்கள்
ஊருக்குச் செல்வதாகக் கூறினர். எங்களுக்குப் பிரிய மனமில்லாமல் அவர்களுடன்
பேருந்து நிறுத்தம்வரை சென்று வழியனுப்பிவிட்டு வந்தோம். |
5 |
||||||||||||
|
39 அ. |
நாளிதழ் ஆசிரியருக்கு
கடிதம் அனுப்புநர் அ அ அ அ அ, 100,பாரதி
தெரு, சக்தி நகர், திருத்தணி
. பெறுநர் ஆசிரியர் அவர்கள், தமிழ்ப்பொழில் நாளிதழ், திருவள்ளூர்-1 ஐயா, பொருள்:
கட்டுரையை வெளியிட வேண்டுதல் – சார்பு வணக்கம். நான் தங்கள்
நாளிதழில் பொங்கல் பண்டிக்கை முன்னிட்டு பொங்கல் மலரில் “ உழவுத்
தொழிலுக்கு வந்தனை செய்வோம் “ எனும் தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளேன். தாங்கள் அந்த
கட்டுரையையும் பொங்கல் மலரில் வெளியிட வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. இணைப்பு:
இப்படிக்கு, 1. கட்டுரை
தங்கள்
உண்மையுள்ள, இடம் : திருத்தணி
அ அ அ அ அ. நாள் : 04-03-2024 |
5 |
||||||||||||
|
40 |
காட்சிக்குப்
பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
5 |
||||||||||||
|
41 |
படிவத்தை
உரிய விவரங்களுடன் சரியாக நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
5 |
||||||||||||
|
42 |
ஆ. மொழிபெயர்ப்பு என்பது
தனிக்கலை. அதனை யார் வேண்டுமானாலும் செய்துவிட முடியாது. மொழிபெயர்ப்பாளர்
என்பவர் எந்த மொழியுடனும் தனிப்பற்றுக் கொள்ளாமல், நடுநிலையில்
நின்று மொழிபெயர்க்க வேண்டும். குறிப்பாக அவருக்கு இரண்டு மொழிகளிலும் அதாவது
தருமொழி பெறுமொழி ஆகிய இரண்டிலும் புலமை இருத்தல் வேண்டும். இரு மொழிகளின் சமூக,
பண்பாட்டுச் சூழ்நிலைகளை நன்கு அறிந்திருத்தல் வேண்டும். |
5 |
||||||||||||
பகுதி-5
3X8=24
|
எல்லா
வினாக்களுக்கும் விடையளிக்க: |
||||||||||||||||||||
|
43 |
அ.
ஆ) முகில்: வணக்கம் ஐயா! காத்திருக்க வேண்டும். வாய்ப்பு வந்தவுடன் பயன்படுத்த வேண்டும். கொத்தித் தின்னும்.
அதுபோல எந்த செயலிலும் நல்லதை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். அதுபோல, வெளித்தோற்றம்
எப்படி இருப்பினும் குணங்களை ஆராய்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும் உப்பு குறைவானாலும் உண்ண முடியாது. அதிகமானாலும் உண்ணமுடியாது. அளவோடு இருந்தால் தான் ருசிக்க முடியும். நாமும் மற்றவர்களிடம் ஒவ்வொருவருடன் உரிய அளவோடு பழகி இருப்போம். |
8 |
||||||||||||||||||
|
44 அ |
அ) முன்னுரை:
கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் விருந்தோம்பல் மனதில் பசுமையாக
இருக்கும்.பசித்த வேளையில் வந்தவருக்கு தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கிற
மனிதநேயம் கிராமத்து விருந்தோம்பல்.அந்நிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது
கி.ராஜநாராயணனின் கோபல்லபுரத்து மக்கள கதைப்பகுதி.அதில் வரும் அன்னமய்யா என்ற
கதாபாத்திரத்தைப் பற்றி இங்கு காண்போம். அன்னமய்யாவும், இளைஞனும்: சாலையின் ஓரத்தில் இருந்த இளைஞனைக் கண்டார்.”இவன்
துறவியோ? பரதேசியோ?” என்ற
ஐயத்தை மனதில் கொண்டு ,அருகில் சென்று பார்த்தார். அவனது
முகம் பசியால் வாடி இருப்பதை உணர்ந்து கொண்டார். தன்னைப் பார்த்து ஒரு அன்பான
புன்னகை காட்டிய அந்த இளைஞரிடம் போய் அருகில் நின்று
பார்த்தார். அந்த வாலிபன்” குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?”
என்று கேட்டான். அன்னமய்யா “அருகிலிருந்து
நீச்ச தண்ணி வாங்கி வரவா?” என்று கேட்டார். அந்த இளைஞன்
பதில் ஏதும் கூறாமல் அவ்விடத்தை நோக்கி நடந்தான். இளைஞனின் பசியைப் போக்கிய அன்னமய்யா: ஒரு
வேப்பமரத்தின் அடியில் மண் கலயங்கள்
கஞ்சியால் நிரப்பப்பட்டு இருந்தன. ஒரு சிரட்டையில் காணத்துவையலும்,ஊறுகாயும் இருந்தது.
ஒரு சிரட்டையைத் துடைத்து அதில் இருந்த நீத்துப்பாகத்தை
அவனிடம் நீட்டினான். அந்த இளைஞன் கஞ்சியை “மடக் மடக்” என்று
உறிஞ்சிக் குடித்தான். உறிஞ்சியபோது அவளுக்குக் கண்கள் சொருகின.மிடறு மற்றும்
தொண்டை வழியாக இறங்குவது சுகத்தை அளித்ததை முகம் சொல்லியது. அவனுள்ஜீவ ஊற்று பொங்கி, நிறைந்து வழிந்தது அன்னமய்யாவின் மனநிறைவு: புதிதாக வந்த
இளைஞனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ,அதைவிட மேலான ஒரு
மனநிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது. மார்பில் பால் குடித்துக் கொண்டிருக்கும்
போதே வயிறு நிறைந்ததும் அப்படியே தூங்கி விடும் குழந்தையைப் பார்ப்பதுபோல, அந்த இளைஞனை ஒரு பாசத்தோடு
பார்த்துக் கொண்டிருந்தார் அன்னமய்யா. அன்னமய்யாவின் பெயர் பொருத்தம்: இளைஞன்
எழுந்தவுடன்,” எங்கிருந்து
வருகிறீர்கள்?, எங்கே செல்லவேண்டும்?” என்று அன்னமய்யா கேட்டார்.அதற்கு அந்த இளைஞன்” மிக
நீண்ட தொலைவில் இருந்து வருகிறேன்” என்று கூறிவிட்டு,”
உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டான். அதற்கு”
அன்னமய்யா” என்றார். அவ்வாலிபன் மனதிற்குள்
பொருத்தமான பெயர்தான் என எண்ணிக்கொண்டான். சுப்பையாவிடம் அழைத்துச் செல்லுதல்: சுப்பையாவும்,அவருடன்இருந்தவர்களும் அன்னமய்யாவையும்,இளைஞனையும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். சுப்பையா தான் வைத்திருந்த கம்மஞ்சோறு உருண்டையை அனைவருக்கும் பகிர்ந்து அளித்தார். அனைவரும் அந்த இளைஞனிடம் அன்பாகப் பேசி, அந்த உணவை உண்ண செய்தனர். இளைஞன் உணவை உண்டு விட்டு மீண்டும் உறங்கினான் முடிவுரை:
தானத்தில் சிறந்தது அன்னதானம் என்ற தொடருக்கு ஏற்ப, அன்னமய்யா அன்னமிடுபவனாகவும்,தன்னிடம் இருப்பதை
கொடுத்து மகிழ்பவனாகவும்,மனிதநேயம் கொண்டவனாகவும்
விளங்கினான்.அன்னமய்யா என்ற பெயர் அவருக்கு மிகவும் பொருத்தமுடையதே. ஆ) பாய்ச்சல் முன்னுரை:
ஒரு கலைஞன் மற்ற கலைஞர்களிடம் இருந்து வேறுபட்டு, தனக்கெனத்
தனித்தன்மைகளைக் காட்டுவான். கலை ஈடுபாட்டில் அவனுக்கு வயதோ, உடற்சோர்வோ பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.தன்
கலையைப் பின்பற்ற தகுந்த வாரிசு உருவாகின்ற போது
அவன் கொள்கின்ற மகிழ்ச்சி அளப்பரியது. அவ்வாறு நிகழ்ந்த ஒரு கதையை இங்கு
காண்போம். அனுமார்: நாகசுரமும், மேளமும் ஒன்றாக இணைந்து ஒலித்தன.
சத்தம் கேட்ட அழகு குனிந்து பார்த்தான். இரண்டு கால்களும் மின்னல் வெட்டி மறைவது போலத் துள்ளிப் பாய்ந்து சென்றன. அந்தக் கால்கள்
மனிதனிடம் இருந்து மாறுபட்டு, பச்சையா? நீலமா? என்று தீர்மானிக்க முடியாத நிறத்தில்
இருப்பதைக் கண்டான். ஆளுயர குரங்கு ஒன்று மரத்தின் மேலிருந்து இறங்குவதைக் கண்டான். அனுமாரின் நெருப்பாட்டம்: திடீரென்று மேளமும்,நாகசுரமும் வேகமாக ஒலிக்கத்
தொடங்கின.எதற்கென்றே தெரியாமல் ஒரு கூட்டம் திகைத்து
பந்தலையே நோக்கிக் கொண்டிருந்தது. பெருங்குரல் எழுப்பியபடி அனுமார் பந்தல் கால்
வழியாகக் கீழே குதித்தார்.அனுமார் வாலில் பெரிய தீப்பந்தம் புகை விட்டு எரிந்து கொண்டிருந்தது. அழகுவின் உதவி: சிறிது நேரம் கழித்து தீ எரிவது மெல்ல மெல்லத் தணிந்தது.. கீழே புரண்ட
வாழை இவனைப் போன்ற இரண்டு பேர் தூக்கி வந்தார்கள்.
அழகு அவர்கள் அருகில் சென்றான். அவர்கள் அந்த வாழை அழகு இடத்தில் ஒப்படைத்து
விட்டுச் சென்றனர். அனுமார் சென்ற இடத்திற்கெல்லாம் அழகு வாலைத் தூக்கிக் கொண்டு
சென்றான்.சற்று நேரம் கழித்து ஆட்டம் முடிந்தது அழகுவின் ஆட்டம்:
அனுமார் அடைந்த மகிழ்ச்சி: அனுமார் அழகுக்கு ஆட்டத்தை சொல்லிக்கொடுத்தார். அவனும் அதே போல ஆடினான்.
அனுமார் தன்னை மீறிய மகிழ்ச்சியோடு,” பேஷ் பேஷ் உடனே
பிடிச்சுகிட்டியே” என்றார்.அனுமார் அம்பு போல அவன்
முன் பாய்ந்தார்.. முடிவுரை: “என்னலே, எனக்கே பாச்சா காட்டுற?பிடியில் சிக்காமல் நழுவுற” என்று கூறிக் கொண்டு
இருக்கும்போது அனுமாரின் கால்கள் பின்னிக் கொண்டன.
அழகு அனுமார் விழுந்ததைக் கவனிக்காமல் தன்
ஆட்டத்தில் மூழ்கிய வனாக, உற்சாகம் பொங்க வேகமாக
ஆட்டிக்கொண்டிருந்தான். |
8 |
||||||||||||||||||
|
45 |
அ) நெகிழிப்பை
ஒழிப்போம் – இயற்கையை காப்போம் முன்னுரை: இன்றைய நவீன வாழ்க்கையில் நெகிழி (Plastic) மனித
வாழ்வின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. எளிதில் கிடைக்கும் தன்மை மற்றும் குறைந்த
செலவு காரணமாக நெகிழிப் பொருட்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த
நெகிழி பயன்பாடு சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. நெகிழியின்
தீமைகள்: நெகிழி எளிதில் அழியாத தன்மை
கொண்டது. இதனால் நிலம், நீர், காற்று
ஆகியவை மாசடைகின்றன. நீர்நிலைகளில் வீசப்படும் நெகிழிப் பொருட்கள் நீர்வாழ்
உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மண்ணில் கலக்கும் நெகிழி, நில வளத்தை குறைக்கிறது. மேலும் நெகிழியை எரிப்பதால் விஷ வாயுக்கள்
வெளியேறி மனித உடல்நலத்தையும் பாதிக்கின்றன. தடுக்கும்
முறைகள்: நெகிழிப் பயன்பாட்டை குறைப்பதே
சிறந்த தீர்வாகும். துணிப்பைகள், காகிதப் பைகள், இயற்கைச் சிதைவடையும் பொருட்களை பயன்படுத்த வேண்டும். ஒருமுறை
பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். நெகிழி கழிவுகளை சரியாக
சேகரித்து மறுசுழற்சி செய்யும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். நாம்
முன்னெடுக்க வேண்டியவை: ஒவ்வொரு குடிமகனும் நெகிழி
ஒழிப்பில் பங்கு பெற வேண்டும். பள்ளி, கல்லூரி மற்றும்
சமூக அமைப்புகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அரசு விதிகளை
கடைபிடித்து, நெகிழி பயன்பாட்டைத் தடுக்க உறுதுணையாக
இருக்க வேண்டும். வீட்டிலிருந்து தொடங்கி நெகிழி இல்லா வாழ்க்கை முறையை பின்பற்ற
வேண்டும். முடிவுரை: நெகிழியை முற்றிலும் ஒழிப்பது கடினமாக இருந்தாலும், அதன் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது நம்மால் முடியும். இன்று நாம்
எடுக்கும் சிறிய முயற்சிகள் நாளைய தலைமுறைக்கு தூய்மையான சுற்றுச்சூழலை
வழங்கும். ஆகவே, “நெகிழிப்பை தவிர்ப்போம் – இயற்கையை பாதுகாப்போம்” என்ற உறுதியை அனைவரும்
ஏற்றுக் கொள்வோம். (அல்லது) ஆ) தலைப்பு
: சான்றோர் வளர்த்த தமிழ் முன்னுரை: “தமிழே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்களித்தேனே!" என்று கூறும் வண்ணம் பல
செந்தமிழ்ப் புலவர்கள் பலவகை இலக்கியங்களை,பல்வேறு
வடிவங்களில் படைத்து, தமிழன்னைக்கு அணியாகச்
சூட்டியுள்ளனர்.தமிழ் இன்றளவிலும் கன்னித்தமிழாய் திகழ்வதற்கு அதுவும் ஒரு
பெருங்காரணமாகும்.சான்றோர்களாலும், புலவர்களாலும் வளர்ந்த
விதம் பற்றி இக்கட்டுரையில் சுருக்கமாகக் காண்போம். பிள்ளைத்தமிழ்: குழவி மருங்கினும் கிழவதாகும் - தொல்காப்பியர் கடவுளையோ, அரசனையோ அல்லது மக்களில் சிறந்தவர் ஒருவரையோ குழந்தையாக எண்ணி, பத்துப் பருவங்கள் அமையப் பாடல்கள் பாடுவது பிள்ளைத்தமிழ் ஆகும்.
பருவத்திற்கு பத்து பாடல்களாக, 100 பாடல்கள் அமையப்
பாடப்படுவது பிள்ளைத்தமிழ்.ஒட்டக்கூத்தர் பாடிய இரண்டாம் குலோத்துங்கன்
பிள்ளைத்தமிழ் காலத்தால் முற்பட்டது. சதகம்: நூறு பாடல்கள் கொண்ட
நூலுக்குச் சதகம் என்று பெயர்.மாணிக்கவாசகர் பாடிய திருச்சதகமே முதல் சதக
நூலாகும். இது உள்ளத்தை உருக்கும் பக்தி பாக்களால் அமைந்தது. பழமொழிகள், நீதி நெறி முறைகள், இறைவனை போற்றிப் பாடும்
கருத்துக்கள் போன்றவை சதகத்தில் சிறப்புகளாகும். பரணி: "ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
மானவனுக்கு வகுப்பது பரணி" என்று இலக்கண விளக்கப்
பாட்டியல் என்ற நூல் பரணிக்கு இலக்கணம் தருகிறது.போர்க்கள வெற்றியைப் புகழ்ந்து
பாடுவதே பரணி ஆகும். போரில் தோற்றவர் பெயர் அல்லது அவரது நாட்டின் பெயர்
நூலுக்குச் சூட்டப்படும். செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணி காலத்தால்
முற்பட்டதாகும். அந்தாதி: அந்தம்+ ஆதி = அந்தாதி. ஒரு
பாடலில் இறுதியில் உள்ள எழுத்து, அசை, சீர், அடி ஆகியவற்றில் ஒன்று, அடுத்த பாடலில் முதலில் வரும்படி அமைத்து பாடுவது அந்தாதி
எனப்படும்.அந்தாதி விருத்தம் என்னும் யாப்பு வடிவில் பாடப்படும். காரைக்கால்
அம்மையார் இயற்றிய அற்புதத் திருவந்தாதி முதல் அந்தாதி நூலாகும். கோவை: பாடலுக்கும், அடுத்த பாடலுக்கும் நிகழ்ச்சி வரிசை அமையும் கதை போல அமைத்து எழுதுவது
கோவை.கி.பி எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பாண்டிக்கோவை எனும் நூலே முதல் கோவை
நூலாகும். முடிவுரை: "வீறுடை செம்மொழி
தமிழ்மொழி" என்ற பெருஞ்சித்திரனாரின் கூற்று முற்றிலும் உண்மையாகும்.
மேற்கூறியவாறு, பல்வகை இலக்கியங்கள் சான்றோர் பலரால்
பாங்காய் வளர்ந்தன. சான்றோர்கள் தமிழை வளர்ப்பதில் தனி ஈடுபாடு கொண்டு
செயல்பட்டனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியைக் காப்பது நம் தலையாய
கடமையாகும் |
8 |
||||||||||||||||||
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி