மூன்றாம் இடைப்பருவத்தேர்வு மாதிரி வினாத்தாள்- ஜனவரி, 2026
7.
ஆம் வகுப்பு தமிழ் மதிப்பெண்கள்:
50 கால அளவு:
1.30 மணி நேரம்
அ)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
8x1=8
1. மரம் வளர்த்தால் ---------பெறலாம்
அ)
மாறி ஆ) மாரி இ) காரி ஈ) பாரி
2. திருநெல்வேலி----------ஆற்றின் கரையில்
அமைந்துள்ளது.
அ)
காவிரி ஆ) வைகை இ) தென்பெண்ணை ஈ) தாமிரபரணி
3. "இடர் ஆழி நீங்குகவே" -இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
அ)
துன்பம் ஆ) மகிழ்ச்சி இ) ஆர்வம்ஈ) இன்பம்
4. மாரி + ஒன்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ)
மாரியொன்று ஆ) மாரிஒன்று இ) மாரியின்று ஈ) மாரியன்று
ஆ)
பொருத்துக:-
5. தண்பொருதை - (அ) பொன்நாணயங்கள் உருவாக்கும் இடம்
6. அக்கசாலை - (ஆ) குற்றாலம்
7. கொற்கை - (இ)
தாமிரபரணி
8. திரிகூடமலை - (ஈ) முத்துக் குளித்தல்
இ. ஏதேனும்
ஐந்தனுக்கு ஓரிரு சொற்களில் விடையளி. 5 x 2 =10
9. பாரி மகளிரின் பெயர்களை எழுதுக.
10.
அந்தாதி என்பது யாது?
11. தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகள் யாவை?
12. பொய்கையாழ்வார் எதற்காகப் பாமாலை சூட்டுகிறார்?
13. பொருள் எதும் இல்லாத வீடுகளே இல்லை' - எவ்வாறு?
14. கொற்கை முத்து பற்றிக் கூறுக
15. வழக்கு என்றால் என்ன?
ஈ. ஏதேனும்
மூன்று வினாக்களுக்கு ஓரிரு தொடர்களில் விடையளி. 3 x 4 = 12
16. தமிழர்களின் பிற பண்பாட்டுக் கூறுகளை எழுதுக.
17. திருநெல்வேலிக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு குறித்து எழுதுக.
18. பூதத்தாழ்வார் ஞானவிளக்கு ஏற்றும் முறையை விளக்குக.
19. நீங்கள் அறிந்த விருந்தோம்பல் பற்றிய பழமொழிகளை எழுதுக.
20. மக்கள் மகிழ்ச்சியாக வாழ ஒரு நகரம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று
நினைக்கிறீர்கள்?
உ. அடிமாறாமல்
எழுதுக.
2 x 3= 6
21. 'மாரியொன்று' எனத் தொடங்கும் விருந்தோம்பல் பாடலை
எழுதுக.
22. 'வையம்' எனத் தொடங்கும் புதுமை விளக்கு எழுதுக.
ஊ.பின்வரும்
அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-
8x1=8
23. இன் அல்லது இல் என்னும் இடைச்சொல்லைச் சேர்த்துத் தொடரை மீண்டும் எழுதுக
அ. இந்தியா
கிழக்கே வங்கக்கடல் உள்ளது. ஆ. அழகு சிறந்தது மயில்,
24. கொடுக்கப்பட்டுள்ள ஊரின் பெயரிலிருந்து புதிய சொற்களை உருவாக்குக.
- பட்டுக்கோட்டை
25. கலைச்சொல் எழுதுக. அ. Cultivation ஆ. Irrigation
26.
தொடருக்குப் பொருத்தமான உவமையை எடுத்து எழுதுக.
என் தாயார் என்னை ______காத்து வளர்த்தார்.
(கண்ணை இமை காப்பது
போல / தாயைக் கண்ட சேயைப் போல )
27. பொருள் கூறுக. அ. மாரி
ஆ. புகாவாக
28. பிரித்து எழுதுக. அ. ஞானச்சுடர் ஆ. நீருலையில்
29. சேர்த்து எழுதுக. அ. விருந்து + ஓம்பல் ஆ. இன்பு
+ உருகு
30, ”அமைச்சு” எனும் சொல் ”அமச்சு”
என வருவது-----போலி ஆகும் (முதல்/இடை/கடை)
எ. பின்வரும்
தலைப்பில் கட்டுரை எழுதுக. 1x6=6
31. "என்னைக் கவர்ந்த நூல்'
வினாத்தாளைப் பதிவிறக்க 10 வினாடிகள் காத்திருக்கவும்
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி