SECOND REVISION EXAM 10 TH STD TAMIL QUESTION PAPER & ANSWER KEY RANIPET DISTRICT

 


வினாத்தாளைப் பதிவிறக்க

(இராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகப்பட்டிணம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஒரே வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளதால் இதே விடைக்குறிப்பைப் பயன்படுத்தலாம்)

இரண்டாம் திருப்புதல் தேர்வு-2026 இராணிப்பேட்டை மாவட்டம்

10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்

                                                                பகுதி-1                                                     15X1=15

வி.எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

. எழுவாய்த்தொடர்

1

2.     

இ. கணையாழி

1

3.     

ஆ. வங்காள , ஆங்கில

1

4.     

ஆ. இட வழுவமைதி

1

5.     

. தூக்குமேடை

1

6.     

ஈ. இளவேனில்

1

7.     

அ. இகழ்ந்தால் என்மனம் இகழ்ந்து விடாது

1

8.     

ஆ. இரங்கலும், இரங்கல் நிமித்தமும்

1

9.     

. இன்மையிலும் விருந்து

1

10.   

. பார்த்த துளிர்

1

11.    

அ. அகவற்பா

1

12.   

. நாகூர் ரூமி

1

13.   

. மேகம்

1

14.   

ஆ. துணிச்சலானவை

1

15.   

அ. குழந்தையின் கன்னம்

1

                                     பகுதி-2                            பிரிவு-1                                                        4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

16

. மிக மெல்லிய பழத்தோல் வகை யாது?

. உலகம் என்பது ஐம்பூதங்களால் ஆனது என்றவர் யார்?              (மாதிரி விடைகள்)

2

17

v  மொழிபெயர்ப்பால் புதிய சொற்கள் உருவாகி மொழிவளம் பெருகும்.

v  பிற இனத்தாரின் கலை, பண்பாடு, நாகரிகத்தை அறியலாம்.

2

18

நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு தமிழருக்கு உண்டு என்று நற்றிணைகுறிப்பிடுகிறது.

2


19

அடுத்தவர் மீதான அக்கறை

2


20

நெல், வரகு, தினை, சாமை, இறுங்கு (சோளம்), கேழ்வரகு, தோரை நெல், புல்

2

21

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்

றுண்டாகச் செய்வான் வினை.

2

                                                                    பிரிவு-2                                                    5X2=10

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

22

கட்டுரையைப் படித்த

2

23

பதிந்து - பதி +த்(ந்) + த் +உ;

பதி - பகுதி

த் - சந்தி (ந் -ஆனது விகாரம்)

த் - இறந்தகால இடைநிலை

உ-வினையெச்ச விகுதி

2

24

. மனிதவளம்  . வளைகாப்பு              அ. கற்றல்  ஆ. எழுத்து

2

25

தான் என்று இருக்காமல் தாம் என இருக்க வேண்டும்   (மாதிரி விடை)

2

26

. எழிலனுக்கு படிப்பில் ஆர்வம் கொஞ்சம் அதிகம்

. நான் எனது வாழ்வில் நடந்த துன்ப நிகழ்வை மறக்க நினைக்கிறேன் (மாதிரி விடைகள்)

2

27

     வெட்சித்திணைமுதல் பாடாண் திணை வரைஉள்ள புறத்திணைகளில் பொதுவான செய்திகளையும் அவற்றுள் கூறப்படாத செய்திகளையும் கூறுவது பொதுவியல் திணை ஆகும்.

2

28

. பெயரெச்சத்தொடர் (குறிப்புப் பெயரெச்சம்)   . அடுக்குத்தொடர்

2

பகுதி-3  (மதிப்பெண்கள்:18)

                                                          பிரிவு-1                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

29

·        நெல், புல் (கம்பு முதலிய தானியங்கள்) – கூலம்

·        அவரை, உளுந்து –பயிறு

·        வேர்க்கடலை, கொண்டைக்கடலை – கடலை

·        கத்தரி, மிளகாய் – விதை

·        புளி, காஞ்சிரை – காழ்

·        வேம்பு, ஆமணக்கு – முத்து

·        மா, பனை – கொட்டை

·        தென்னை – தேங்காய்  

·       அவரை, துவரை - முதிரை

3

30

. முரசொலி  . சேரன்  . கலைஞர் (அ) கலைஞரின் இதழ்ப்பணி

3

31

·        வாய்மையைச் சிறந்த அறமாகச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன.

·        வாய்மை பேசும் நாவே உண்மையான நா என்ற கருத்தை வலியுறுத்துகின்றன.

·        நாக்கு ஒரு அதிசய திறவுகோல்; இன்பத்தின் கதவை திறப்பதும், துன்பத்தின் கதவைத் திறப்பதும் அது தான்

3

                                                                       பிரிவு-2                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

32

v  குளிர்ந்த சோலையில் மயில்கள் ஆடுகின்றன.

v  தாமரை மலர்கள் விளக்குகள் போன்று தோன்றுகின்றன.

v  குவளை மலர்கள் கண்விழித்துப் பார்ப்பது போல் காணப்படுகின்றன.

v  நீர்நிலைகளின் அலைகள் திரைச்சீலைகள் போல் விரிகின்றன.

v  மகர யாழின் தேனிசை போல் வண்டுகள் பாடுகின்றன.

3

33

·        விருந்தினரை வியந்து உரைத்தல்

·        நல்ல சொற்களை இனிமையாகப் பேசுதல்,

·        முகமலர்ச்சியுடன் அவரை நோக்குதல்

·        வீட்டிற்குள் வருக என்று வரவேற்றல்

·        அவர் எதிரில் நிற்றல்

·        அவர்முன் மனம் மகிழும்படி பேசுதல்

·        அவர் அருகிலேயே அமர்ந்துகொள்ளுதல்

·        அவர் விடைபெற்றுச் செல்லும்போது வாயில்வரை பின்தொடர்ந்து செல்லல்

·        அவரிடம் புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்புதல்

3

34

 

.

அள்ளல் பழனத்(து) அரக்காம்பல் வாயவிழ

வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப் புள்ளினம்தம்

கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ

நச்சிலைவேல் கோக்கோதை நாடு.

.

நவமணி வடக்க யில்போல்

     நல்லறப் படலைப் பூட்டும்

தவமணி மார்பன் சொன்ன

     தன்னிசைக்கு இசைகள் பாடத்

துவமணி மரங்கள் தோறும்   

     துணர்அணிச் சுனைகள் தோறும்

உவமணி கானம்கொல் என்று

     ஒலித்து அழுவ போன்றே.

3

                                                                பிரிவு-3                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

35

1.     மார்கழித் திங்கள்இருபெயரொட்டுப் பண்புத்தொகை

2.    செங்காந்தள் மலர்கள் - இருபெயரொட்டுப் பண்புத்தொகை

3.    செங்காந்தள்பண்புத்தொகை

4.    வீடு சென்றேன் - வேற்றுமைத்தொகை

3

36

சீர்

அசை

வாய்பாடு

இகழ்ந்தெள்ளா

நிரை+நேர்+நேர்

புளிமாங்காய்

தீவாரைக்

நேர்+நேர்+நேர்

தேமாங்காய்

காணின்

நேர்+நேர்

தேமா

மகிழ்ந்துள்ளம்

நிரை+நேர்+நேர்

புளிமாங்காய்

உள்ளுள்

நேர்+நேர்

தேமா

உவப்ப

நிரை+நேர்

புளிமா

துடைத்து

நிரைபு

பிறப்பு

3

37

எடுத்துக்காட்டு உவமை அணி:

    ஒரு பொருளைஅதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறும்போது உவமை, உவமேயம் ஆகியன இடம்பெற்று உவம உருபு மறைந்து வருவது எடுத்துக்காட்டு உவமையணியாகும்.

சான்று:

     ண்என்னாம் பாடற் கியைபின்றேல்; கண்என்னாம்

      கண்ணோட்டம் இல்லாத கண்.           

அணிப்பொருத்தம்:

v  உவமைபாடலோடு பொருந்தாத இசை.

v  உவமேயம்இரக்கம் இல்லாத கண்

v  உவம உருபுமறைந்து வந்துள்ளது.

     உவமை, உவமேயம் ஆகியன இடம்பெற்று உவம உருபு மறைந்து வந்தமையால் எடுத்துக்காட்டு உவமையணி ஆயிற்று.

3

                                                                பகுதி-4                                                       5X5=25

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

38

திரண்ட கருத்து:                                        

கவிஞன் நானே காலத்தைக் கணிப்பவன். உள்ளத்தில் உதிக்கும் பொருளை வார்த்தை வடிவம் கொடுத்து ஒரு உருவமாய் அவற்றை நான் படைப்பதால் இப்பூமியில் நானும் புகழ்பெற்ற தெய்வம். பொன்னைவிட விலை உயர்ந்த செல்வம் என்னுடைய கருத்துகள்.சரியானவற்றை எடுத்துச் சொல்வதும், தவறானவற்றை எதிர்ப்பதும் என் பணி. படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று பணிகளும் நானும் கடவுளும் அறிந்தவை.

மோனை நயம்:

செய்யுளில் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை ஆகும்.

ü  விஞன்- ருப்படு

ü  வை சரி - வை தவறாயின்

எதுகை நயம்:

செய்யுளில் முதல் எழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவதுஎதுகையாகும்.

·        ருப்படு  -  பொருளை  - ருப்பட

முரண் நயம்:

பாட்டுக்கு முரண் செய்யுளில் அடியிலோ சீரிலோ எதிரெதிர் பொருள் தரும் வகையில் தொடுக்கப் படுவது முரண் ஆகும். ஆக்கல் × அழித்தல் என்று முரண்பட்ட சொற்கள் அமைத்து தொடுத்திருப்பதால் முரண் நயமும் உள்ளது.

இயைபு நயம்:

அடிதோறும் இறுதி எழுத்தோ, சொல்லோ இயைந்து வரத் தொடுப்பது இயைபு ஆகும்.

·        புகழுடைத் தெய்வம் ...பொருளென் செல்வம்

அணி நயம்:

கண்ணதாசன் இப்பாடலில், கடவுளுக்கு இணையாக யானோர் காலக்கணிதம் என உருவகப்படுத்தி உள்ளதால் இப்பாடலில் உருவக அணி பயின்று வந்துள்ளது.

·        நானோர் புகழுடையத் தெய்வம்

சந்த நயம்:

சந்தம் தமிழுக்குச் சொந்தம் என்பதற்கு ஏற்ப, இப்பாடலில் 'எண்சீர் கழிநெடிலடி' ஆசிரிய விருத்தம் இடம் பெற்றுள்ளது. அகவலோசையுடன் இனிய சந்த நயமும் பெற்றுள்ளது.

(அல்லது)

)

ü  குலேச பாண்டியன் இடைக்காடனாரின் பாடலைக் கேட்காமல் அவமதித்தான்.

ü  இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார்

ü  இறைவன் கடம்பவனத்தைவிட்டு வையையின் தென்கரையில் தங்கினார்.

ü  குலேச பாண்டியன் பதற்றத்துடன் இறைவனைக் காணச்சென்றார்.

ü  இறைவன் குலேச பாண்டியனின் தவறைச் சுட்டிக்காட்டினான்

ü  தன் தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தான்

5

39

.

6,சோலை நகர்,

                                                             கோவில்பட்டி.

                                                             29-09-2020.

அன்புள்ள நண்பனுக்கு,

          உனது அன்பு நண்பன் எழுதும் மடல். வணக்கம். தாங்கள் புதிதாக ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வுக் கட்டம் ஒன்று எங்கள் பள்ளியில் கடந்த வாரம் நடந்தது. அக்கூட்டத்தில் வாகனம் ஓட்டுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்துக் கூறினார்கள்.அது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால், இக்கடிதத்தில் அவற்றை எழுதியுள்ளேன்.

 1) தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர மோட்டார் வாகனத்தை ஓட்டக் கூடாது.

 2) போக்குவரத்தினை முறைப்படுத்தும் குறியீடுகளுக்கும், போக்குவரத்துக் காவலர்களின் சாலை

  உத்தரவுக்கு ஏற்பச் சாலையைப் பயன்படுத்த வேண்டும்.

 3) எதிரில் வரும்,கடந்து செல்ல முற்படும் ஊர்திகளுக்கு வழிவிட வேண்டும்.

 4) இதர சாலைப் பயனாளிகளை நண்பர்களாக எண்ண வேண்டும்.

 5) மருத்துவமனை, பள்ளிகள் அருகே செல்லும்போது வேகத்தைக் குறைக்க வேண்டும்.

      மேற்கண்ட விதிகளைக் கடைப்பிடித்தால் விபத்துகள் நடைபெறாமல் காத்துக்கொள்ள முடியும். இவ் விதிகளை உங்கள் நண்பர்களும் கடைபிடிக்குமாறு வலியுறுத்தினால், நலமாக இருக்கும்.தங்கள் பதில் கடிதத்தை எதிர்பார்க்கிறேன்.

      என்றும் அன்புடன்,

         .கமலக்கண்ணன்.

 உறைமேல் முகவரி:

.முத்தமிழ்ச்செல்வன், 15, வடக்கு மாட வீதி,

மதுரை-1.

 

 

 

 

 

 


) மின்வாரிய அலுவலருக்குக் கடிதம்

அனுப்புநர்:

     வா.நிறைமதி,

     23, வள்ளலார் சாலை,

     பாரதிதாசன் நகர்,

     காஞ்சிபுரம்-1.

பெறுநர்:

     உயர்திரு மின்வாரிய செயற்பொறியாளர் அவர்கள்,

     செயற்பொறியாளர் அலுவலகம்,

     பாரதிதாசன் நகர்,

     காஞ்சிபுரம்-1.

மதிப்பிற்குரிய அய்யா

  பொருள்: மின்சார வசதி வேண்டுதல் தொடர்பாக.

    வணக்கம்.வள்ளலார் சாலையில் கடந்த இரண்டு மாதங்களாக மின்கம்பங்கள் பழுதடைந்துள்ளன.  சாலையில் நடந்து செல்பவர்கள் அச்சத்துடன்  பயணிக்கின்றர். வீடுகளுக்கும் சரியான மின்சாரம் கிடைப்பதில்லை.

    எங்கள் தெருவில் போதிய மின்சார வசதி செய்து தரும்படி  பணிவன்புடன் வேண்டுகிறேன்.

நன்றி!!

                                                            இப்படிக்கு,

                                                       (தெரு மக்கள் சார்பாக)

                                                           வா.நிறைமதி

இடம்: பாரதிதாசன் நகர்.

நாள்:29-09-2020.

உறைமேல் முகவரி:

உயர்திரு.மின்வாரிய செயற்பொறியாளர் அவர்கள், செயற்பொறியாளர் அலுவலகம்,                 பாரதிதாசன் நகர்,                               

காஞ்சி 1.

 

 

 

 

 

 

 


5

40

காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

41

நூலக உறுப்பினர்  படிவம்

தருமபுரி மாவட்ட நூலக ஆணைக்குழு

மைய / கிளை / ஊர்ப்புற நூலகம் பாலக்கோடு 

உறுப்பினர் சேர்க்கை

 

அட்டை எண்:  1234                               உறுப்பினர் எண்:  5678                                 

1.    பெயர்                                                         : இ. அதியமான்         

2.   தந்தை பெயர்                                             : இளங்கோவன்       

3.   பிறந்த நாள்                                                : அ அ – அ அ- அ அ அ அ     

4.   வயது                                                         : 15     

5.   படிப்பு                                                         : பத்தாம் வகுப்பு       

6.   தொலைபேசி / அலைபேசி எண்              :  XXXXXXXX23

7.   முகவரி                                                      :  35 வடக்குத்தெரு,

            பாலக்கோடு,

                                தருமபுரி மாவட்டம்.     

      (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்)                           

                 நான் பாலக்கோடு கிளை நூலகத்தில் உறுப்பினராகப் பதிவு செய்ய இத்துடன் காப்புத்தொகை ரூ. 100 சந்தா தொகை ரூ20 ஆக மொத்தம் ரூ. 120 செலுத்துகிறேன். நூலக நடைமுறை மற்றும் விதிகளுக்குக் கட்டுப்படுகிறேன் என உறுதியளிக்கிறேன்.

இடம்:   பாலக்கோடு

நாள்:    02-02-2026                                                                                                                                                     

                                                                  தங்கள் உண்மையுள்ள

                                                               இ. அதியமான்

     

திரு / திருமதி / செல்வி / செல்வன் இ. அதியமான் அவர்களை எனக்கு நன்கு தெரியும் எனச் சான்று அளிக்கிறேன்.            

ஆ ஆ ஆ

பிணைப்பாளர் கையொப்பம்

5

42

1. கல்வெட்டுகளின் வழி அறியலாகும் செய்திகளை அனைவருக்கும் கூறுதல்.

2. கல்வெட்டுகளின் மதிப்பை குறைக்கும்படி எதுவும் கூற, அனுமதிக்காமை.

3. கல்வெட்டுக்கள் குறித்துக்கூறி, அவர்களைப் பெருமிதம் அடையச் செய்தல்.

4. கல்வெட்டுக்கள் வரலாற்றை அறிய உதவும் முக்கிய ஆதாரம் என்பதை உணரச் செய்தல்.

5. கல்வெட்டு மன்னர்களைப் பின்பற்றி நாட்டுப்பற்றை வளர்க்கலாம், என்பதை உணர்த்துதல்.

ஆ.

     சங்க கால இலக்கியத்தில் ஐவகை நிலங்களில் மருதம் பயிரிட ஏற்றது. அங்குதான் செழிப்பான விளைநிலங்கள் உள்ளன. விவசாயின் உண்மையான உழைப்பின் பலன் தகுந்த சூரிய ஒளி,பருவ மழை மற்றும் மண்வளம் ஆகியவற்றை சார்ந்திருக்கிறது. ஆனாலும் அனைத்திலும் சிறந்ததாக சூரிய ஒளியே தமிழர்களால் தவிர்க்க முடியாத ஒன்றாய் குறிப்பிடப்பட்டுள்ளது.

5

                                                                 பகுதி-5                                                       3X8=24

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க:

43

. காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகள்

முன்னுரை:

நாம் தினமும் சுவாசிக்கின்ற காற்று சுத்தமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். ஆனால் இப்போது காற்று பல இடங்களில் மாசுபடுகிறது. இதனால் மனிதர்களும், விலங்குகளும், மரங்களும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, இந்த காற்று மாசுபாட்டை தடுக்க நாம் என்ன செய்யலாம் என்பதைப் பார்ப்போம்.

பசுமை பரப்புகளை அதிகரித்தல்:

மரங்கள் காற்றில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடை இழுத்து ஆக்சிஜனை வெளியிடுகின்றன. ஆகையால், அதிகமாக மரங்களை நடுவது காற்று மாசுபாட்டை குறைக்கும் முக்கியமான வழியாகும். மரங்களை வெட்டாமல், புதிய மரஞ்செடிகளை நட்டு வளர்ப்பதே இதற்கான சிறந்த வழியாகும்.

பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துதல்:

ஒவ்வொருவரும் தனித்தனியாக வாகனங்களை பயன்படுத்துவது காற்று மாசுபாட்டை அதிகரிக்கச் செய்யும். இதற்குப் பதிலாக பேருந்து, ரயில் போன்ற பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதை உறுதி செய்வதன் மூலமாக காற்று மாசுபாட்டைப் பெருமளவு குறைக்கலாம். மேலும் பள்ளி மாணவர்களிடையே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் அவசியம்.

எரிபொருள் சிக்கனமுடைய வாகனங்கள்:

மின்சார வாகனங்கள் மற்றும் எரிபொருள் சிக்கனமான வாகனங்களை பயன்படுத்துவதன் மூலம் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தலாம். பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றால் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது

தொழிற்சாலைகளில் கட்டுப்பாடுகள்:

ü  தொழிற்சாலைகள் வெளியிடும் வேதியியல் வாயுக்கள் மற்றும் புகையை சுத்திகரிக்கும் கருவிகள் (filter) மூலம் வெளியிட வேண்டும். அரசு விதிகளை கடைப்பிடிக்கச் செய்ய வேண்டும்.

ü  மின் உலைகள், பசுமை தொழில்நுட்பங்கள் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் தானாகவே காற்று மாசுபாடு குறையும்.

குப்பைகளைச் சரியாக நிர்வகித்தல்:

குப்பைகளை திறந்தவெளியில் எரிக்காமல், அதனை முறையாக மண்ணில் புதைக்கும் அல்லது  செய்வது முக்கியம். மேலும் மட்கும் குப்பை, மட்காத குப்பை என்ற வகைகளில் பிரித்து மறு சுழற்சி செய்வது காற்று மாசுபாட்டைக் குறைக்கும்.

முடிவுரை:

காற்று மாசுபாட்டைத் தடுப்பது ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையுமாகும். இயற்கையைப் பாதுகாக்கும் முயற்சியில் நாம் ஒட்டுமொத்தமாக செயல்பட்டால் மட்டுமே, சுத்தமான காற்றையும் ஆரோக்கியமான வாழ்வையும் பெற முடியும். இன்று செயல் படுத்துங்கள், நாளைக்கு நலமாக இருப்போம்!

) மொழிபெயர்ப்புக்கலை

முன்னுரை :

        ஒவ்வொரு மொழிச் சமூகத்திலும் ஒரு துறையில் இல்லாத செழுமையை ஈடுசெய்ய வேறு துறைகளில் உச்சங்கள் இருக்கும்.கொடுக்கல் வாங்கலாக அறிவனைத்தும் உணர்வனைத்தும் அனைத்து மொழிகளிலும் பரப்ப வேண்டும் அல்லவா?

மொழிபெயர்ப்பும் தொடக்கமும்:

     'ஒரு மொழியில் உணர்த்தப்பட்டுள்ளதை வேறொரு மொழியில் வெளியிடுவதே மொழிபெயர்ப்பு' என்கிறார் மணவை முஸ்தபா. 'மொழிபெயர்த்தல்' என்ற தொடரை மரபியலில் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.

மொழிபெயர்ப்பு இலக்கியங்கள்:

            என்று சின்னமனூர்ச் செப்பேடு கூறுவதன் மூலம் சங்க காலத்திலேயே மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதை அறியலாம். வடமொழியில் வந்த இராமாயண, மகாபாரத தொன்மை செய்திகள் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. பெருங்கதை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலியன வடமொழி கதைகளைத் தழுவி படைக்கப்பட்டவையே.

மொழிபெயர்ப்பின் அவசியமும் பயனும்:

      மொழிபெயர்ப்பு எல்லா காலகட்டங்களிலும் தேவையான ஒன்று. மொழிபெயர்ப்பு இல்லாவிடில் சில படைப்பாளிகள் உருவாகி இருக்க முடியாது. ஜெர்மன் மொழியில் மொழிபெயர்ப்பு மூலம் சேக்ஸ்பியர் அறிமுகமானார். கம்பனும் ரவீந்திரநாத் தாகூர் கூட மொழிபெயர்ப்பின் மூலமே சிறப்புப்பெற்றவர்கள். இன்றைக்கு பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு அவசியமாகின்றது.

எட்டுதிக்கும் செல்வீர்:

         எட்டுத்திக்கும் கொட்டிக்கிடக்கும் கலைச்செல்வங்களை, மொழிபெயர்ப்பு நிறுவங்களை அமைத்தும் மொழிபெயர்ப்புக்கு உதவும் சொற்களஞ்சியங்களை உருவாக்கியும் பட்டறைகளை நடத்தியும் மொழிக்கு வளம்சேர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

மொழிபெயர்ப்புக் கல்வி:

     மொழிபெயர்ப்பைக் கல்வியாக ஆக்குவதன் மூலம் அனைத்துலக அறிவையும் எளிதில் பெற்று, மனிதவளத்தை நாமே முழுமையாகப் பயன்படுத்தி, வேலைவாய்ப்புத் தளத்தை உருவாக்கி ஒருலகர் எனுந்தன்மை பெறலாம்.

முடிவுரை :

    'உலக நாகரிக வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும் 'எனும் மு.கு ஜகந்நாதராஜா கருத்தினை நினைவில் நிறுத்தி செயல்படுவோம்.

8

44

) பிரும்மம்

முன்னுரை:

இயற்கையோடு இணைந்து வாழ்வதும் இயற்கையைப் பயனுள்ளதாக மாற்றுவதும் அழகியல் ஆகும். குடும்ப உறுப்பினர்கள் இணைந்து நட்டு வைத்த மரமொன்று அவர்களின் வாழ்வியலில் எப்படி பின்னிப் பிணைந்துவிட்டது என்பதைப் பிரபஞ்சனின் 'பிரும்மம்' என்ற சிறுகதை அழகாகக் காட்சிப்படுத்துகிறது.

புதிதாகக் கட்டிய வீடு:

இச்சிறுகதையில் வரும் குடும்பத்தினர் புதிதாக வீடு ஒன்றைக் கட்டினர். அந்த வீட்டிற்கு முன்னால் வெறுமனே கிடந்த சிறிய இடத்தைப் பயனுள்ள வகையில் பயன்படுத்த குடும்பஉறுப்பினர்கள் அனைவரும் முடிவு செய்தனர். அதற்காக ஒவ்வொருவரும், என்ன செய்யலாம்?  என்று தங்களது எண்ணங்களைத் தெரிவித்தனர்.

குடும்ப உறுப்பினர்களின் விருப்பம்:

v  குடும்பத்தின் பெரியவரான பாட்டி பசுவின் மீது தீராத அன்பு கொண்டவர் . பசுவினால் குடும்பத்திற்கு ஏற்படும் நன்மைகளைக் கூறி அவ்விடத்தில் பசு வாங்கி வளர்க்கலாம் என்றார்.

v  குடும்பத்தின் அம்மா பாட்டியின் கருத்தை ஏற்க மறுத்து, ”வெண்டை, கத்தரி, தக்காளி போன்றவற்றை வளர்த்தால் கறிக்கு உதவும் என்று கூறி தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.

v  அக்குடும்பத்தில் இருந்த தங்கை சௌந்தரா பூக்களிடம் விருப்பம் கொண்டவளாக இருந்தாள். பல்வேறு வகையான பூக்களை வளர்க்கலாம் என்றாள். அழகை ரசிக்கத் தெரிய வேண்டும் என்றாள். இது சௌந்தராவிடம் இருந்த இயற்கையை ரசிக்கும் பண்பை உணர்த்துகிறது.

அப்பாவின் முடிவு:

அனைவரும் தங்களது கருத்துக்களை தெரிவிக்க, குடும்பத்தின் தலைவரான அப்பா ,காலியாக்க் கிடக்கும் அந்த இடத்தில் முருங்கையை  நட்டு வளர்க்கலாம் என்று சொன்னார். ஏனெனில் முருங்கை வீட்டுக்கு எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாது. மேலும் மிகுந்த மருத்துவ குணங்களை உடையது. என்று கூறி, இரண்டு நாட்கள் கழித்து தனது நண்பர் வீட்டிலிருந்து முருங்கைக் கிளை ஒன்றைக் கொண்டு வந்து அவர் நட்டார்.

முருங்கை வீட்டின் அங்கமானது:

v  நாளுக்கு நாள் முருங்கையின் வளர்ச்சியை கண்டு மிகவும் ரசித்தன குடும்பத்தினர் அது படிப்படியாக கிளை, இலை, காய் போன்றவற்றைத் தந்த போது அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.

v  முருங்கைக் காய்க்கும் கீரைக்கும் ஆசைப்பட்டு அண்டை வீட்டு உறவுகள் அடிக்கடி இவர்களது வீட்டிற்கு வர தொடங்கினர். மேலும் காக்கை குருவிகளுக்கு இந்த முருங்கை மரம் இல்லமாயிற்று. முருங்கை அவர்களின் வீட்டின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.

மீண்டெழுந்த முருங்கை:

ஒரு நாள் காற்று பலமாக வீசியதால் முருங்கை அடியோடு விழுந்தது. இதனால் குடும்பத்தினர் சொல்ல முடியாத துயரத்தை அடைந்தனர். சில நாட்களுக்குப் பிறகு விழுந்து கிடந்த மரக்கிளையில் இருந்து முருங்கை துளிர்விடத் தொடங்கியது. அது குடும்பத்தினருக்கு பெரு மகிழ்ச்சி அளித்தது.

முடிவுரை:

முருங்கை என்பது வெறும் மரமாக குடும்பத்தார் இல்லை உணர்வில் கலந்த உயிராகவே அமைகிறது பல உயிர்கள் வாழும் வீடாகவும் திகழ்ந்தது பிரம்மம் பெற உயிர்களை தன் உயிர் போல் நேசிக்கும் பண்பினை விவரிக்கிறது என்றால் அது மிகையல்ல.

) எம்.எஸ்.சுப்புலட்சுமி,பால சரஸ்வதி. ராஜம் கிருஷ்ணன். கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், சின்னப்பிள்ளை ஆகியோர் சமூகத்திற்கு ஆற்றிய பணிகள்

முன்னுரை:

    விடுதலைக்காகவும்சமுதாயக் கொள்கைக்காகவும்மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் போராடி வெற்றி பெற்ற தியாகிகள் பலர். அவர்களுள் சில பெண்களும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.பல பெண்கள் நாட்டிற்கு அருந்தொண்டாற்றி பெருமை தந்துள்ளனர்.சில பெண்கள் முயற்சி ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு சமுதாயத்தில் பல சாதனைகளைப் சிலரைப் பற்றி இங்கு காண்போம். புரிந்துள்ளனர். அவர்களில் ஒரு சிலரைப்பற்றி இங்கு காண்போம்

எம்.எஸ்.சுப்புலட்சுமி:

     இசைச் சூழலில் வளர்ந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி இசைமேதை ஆனார். 17 வயதில் கச்சேரியில் பாடி பலரின் பாராட்டைப் பெற்றார். மீரா என்ற திரைப்படத்தில் நடித்ததால் இந்தியா முழுவதும் இவருக்குப் பாராட்டு கிடைத்தது.1954 இல் இவருக்கு "தாமரையணி” விருதும்,1974 இல் மகசேசே விருதும்இந்திய மாமணி விருதும் கிடைத்தது.          தமிழ்தெலுங்குகன்னடம்சமஸ்கிருதம்,மலையாளம்இந்திமராத்திகுஜராத்தி ஆகிய இந்திய மொழிகளிலும்ஆங்கிலத்திலும் பாடியுள்ளார்.

பாலசரசுவதி:

     இவர் பரதநாட்டியத்தில் சிறப்பு பெற்றவர். இவர் 15 வயதில் சென்னையில் உள்ள "சங்கீத சமாஜன்" என்னும் அரங்கத்தில் தனது நடன நிகழ்ச்சியை நடத்தினார்.கல்கத்தாவிலும்காசியிலும் நடந்த அனைத்திந்திய இசை மாநாட்டிலும்சென்னையில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கண்காட்சியிலும் நம் நாட்டுப் பண்ணாகிய "ஜன கன மன" பாடலுக்கு மெய்ப்பாடுகளோடு ஆடினார்.

இராஜம் கிருஷ்ணன்:

    சிக்கல்களைப் பற்றி கதைகளாகவும்புத்தகங்களாகவும் எழுதக் கூடிய ஆற்றல் பெற்றவர் இவர். இவர் "பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி" என்னும் வரலாற்றுப் புதினம் ஒன்றை எழுதி வெளியிட்டார்தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களின் வாழ்க்கையை "கரிப்பு மணிகள்" எனும் புதினமாக வடிவமைத்தார். படுகர் இன மக்களின் வாழ்வியலை "குறிஞ்சித்தேன்” என்னும் புதினமாகவும்கடலோர மீனவர்களின் சிக்கல்களை "அலைவாய்க் கரையான்" என்னும் புதினமாகவும்வேளாண் தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டலை "சேற்றில் மனிதர்கள்","வேருக்கு நீர்"எனும் புதினங்களாகவும்  எழுதியுள்ளார்.

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்:

     காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கம்சட்ட மறுப்பு இயக்கம்வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றில் பங்கு பெற்றவர். "உழுபவருக்கே நில உரிமை இயக்கம்" என்ற அமைப்பின் மூலம்வேளாண்மை இல்லாத காலத்திலும் உழவருக்கு வேறு பணிகள் மூலம் வருமானம் வர ஏற்பாடு செய்தார்.

மதுரை சின்னப்பிள்ளை:

    இவர் மகளிரின் வாழ்வு மேம்பாட்டுக்காகப் பாடுபட்டார். எல்லா பெண்களும் இணைந்து வேலை செய்து கூலியை எல்லோருக்கும் சரிசமமாகப் பங்கிட்டவர்.

      வயதானவர்களுக்கும்மாற்றுத்திறனாளிகளுக்கும் அவரவர் திறமைக்கு ஏற்ப வேலை கொடுத்து,அவர்களின் குடும்பங்களுக்கு உதவியாக இருந்தார். நம் நாட்டு நடுவண் அரசின் "பெண் ஆற்றல்" விருதையும்,தமிழக அரசின் "அவ்வைவிருதையும்தூர்தர்ஷனின் பொதிகை விருதையும் பெற்றவர்.

முடிவுரை:

      பெண்கள் நாட்டின் கண்கள்" எனும் சான்றோரின் வாக்கு முற்றிலும் உண்மையானதே. ஒரு நாட்டில் உள்ள பெண்கள் ஆற்றல் மிக்கவர்களாக இருந்தால் அந்த நாடு அனைத்து நிலைகளிலும் மாபெரும் உயர்வை அடையும். ”இந்திய சமுதாயத்தில் பல பெண்கள் தங்களது முயற்சியையும் திறமையையும் கொண்டு சாதித்துள்ளனர்” என்பதற்கு இவர்களே சான்றுகளாகத் திகழ்கின்றனர்.

8

45

) கலைத்திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வு

முன்னுரை:

கலைத்திருவிழா என் மனதைக் கவர்ந்திழுத்தது

    குடும்பத்தினருடன் வெளியில் செல்வது யாருக்குத் தான் பிடிக்காது? அப்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை எனலாம். அவ்வகையில் கடந்த மாதம் எனது குடும்பத்தினருடன் எங்கள் ஊரான திருத்தணியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச் சென்றிருந்தேன். அப்போது எனக்குக் கிடைத்த அனுபவங்களை இங்கு கட்டுரையாகத் தந்திருக்கிறேன்.

அறிவிப்பு:

     மகிழுந்தை வெளியில் நிறுத்தி விட்டு, நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொண்டு, உள்ளே சென்றோம். நுழைவாயிலின் வழியாக நுழைந்தஉடன்,அங்கே எந்தெந்த நாட்டுப்புறக் கலைகள் எங்கெங்கே நிகழ்த்தப் படுகின்றன? என ஒலிபெருக்கிமூலம் தெளிவாக அறிவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன.

அமைப்பு:

      கலையரங்க நுழைவாயிலில் நிகழ்ந்து கொண்டிருந்த அறிவிப்பைக் கேட்டு விட்டு, அனைவரும் உள்நுழைந்தோம்.அங்கே ஓரிடத்தில் அரங்குகளின் அமைப்பு குறித்த வரைபடம் தெளிவாக வரையப்பட்டிருந்தது. எங்கள் ஊரான திருத்தணியின் எழில்மிகு தோற்றமும் அங்கே காட்சிப்படுத்தப் பட்டிருந்தது.

சிறு அங்காடிகள்:

     கலைத்திருவிழா நிகழிடத்தில் விளையாட்டுப் பொருள்கள், தின்பண்டங்கள், குழந்தைகளுக்கான பொம்மைகள், உணவுப்பொருட்கள் மற்றும் பலவகையான பொருட்களை விற்கும் சிறுசிறு அங்காடிகளும் அமைக்கப்பட்டிருந்தது. அது குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரையும் கவரும் விதமாக இருந்தது.

நிகழ்த்தப்பட்ட கலைகள்:

மனதைக் கவரும் மயிலாட்டம்

                நம்மையும் ஆடத்தூண்டும் கரகாட்டம்

      எங்கள் ஊரில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் பெரும்பாலும் எல்லா நிகழ்கலைகளும் நிகழ்த்தப்பெற்றன. அங்கே மயில் ஆட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், கும்மியாட்டம்,தெருக்கூத்து உள்ளிட்ட பலவகை ஆட்டங்கள் அங்கு வந்த மக்களை மகிழ்விக்கும் வகையில் நிகழ்த்தப்பட்டன. எங்களுக்கு அது புதுவித அனுபவமாக இருந்தது.

பேச்சரங்கம்:

    கலையரங்கத்தில், முத்தமிழும் ஒன்று கூடியதுபோல் இருந்தது கலைத்திருவிழாவில் பேச்சரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் தொலைக்காட்சிகளில் பேசக்கூடிய புகழ்பெற்ற பேச்சாளர்கள் பங்கேற்று பேசிக்கொண்டிருந்தனர்.

முடிவுரை:

         இறுதியாக எனக்குத் தேவையான சில பொருட்களை அங்கிருந்த அங்காடிகளில் வாங்கிக் கொண்டு, வெளியில் வர முயற்சித்தோம்.கூட்ட நெரிசல் மிக அதிகமாக இருந்ததால், வெளியில் வருவதற்கு நீண்ட நேரம் ஆனது. ஒருவழியாக வெளியில் வந்து, மகிழுந்தில் ஏறி வீட்டிற்குச் சென்றோம். எனது வாழ்வில் மறக்கமுடியாத மிகச்சிறந்த அனுபவமாக இந்நிகழ்வு அமைந்தது.

(அல்லது)

) நூல் தலைப்பு: கனவெல்லாம் கலாம்

      அன்று இந்தியாவை அறியாதவர்கள் கூட காந்தியடிகளை அறிந்திருந்தார்கள், காந்திதேசத்திலிருந்து வருகிறீர்களா? என்பார்கள். இன்று இந்தியாவை அறியாதவர்களும் மாமனிதர் அப்துல்கலாம் அவர்களை அறிந்திருக்கிறார்கள்.இந்தியாவின் அடையாளமாக தமிழர்கள் பெருமையாக அறியப்பட்ட அப்துல் கலாம் அவர்களின் தகவல் களஞ்சியம் தான் இந்த" கனவெல்லாம் கலாம்என்ற நூலாகும். இதுவே இந்நூலின் தலைப்புமாகும்.

நூலின் மையப் பொருள்:

        இந்நூலாசிரியர் மிகவும் உன்னிப்பாக உற்றுநோக்கி மாமனிதர் அப்துல் கலாம் அவர்களைப் பற்றி வந்த தகவல்கள், கட்டுரைகள், கவிதைகள் அனைத்தையும் தொகுத்துள்ளார்.அப்துல் கலாம் பற்றி அறிய வேண்டிய அனைவரும் படிக்க வேண்டிய நூல்" கனவெல்லாம் கலாம்

வெளிப்படும் கருத்து:

 மாமனிதர் அப்துல்கலாம் அவர்களின் வெற்றிக்குக் காரணங்கள் எளிமை, இனிமை, நேர்மை ஆகியவையாகும். அவர் உலகப் பொதுமறையை ஆழ்ந்து படித்ததோடு நின்றுவிடாமல் அதன்படி வாழ்ந்ததால் உலகப்புகழ் பெற்றார் என்பதே உண்மை.

நூல் கட்டமைப்பு:

     நூலாசிரியர் இந்நூலில்,1. காணிக்கை கட்டுரைகள்,2. இரங்கல் செய்திகள், 3.கவிதை மாலை,4. கலாம் அலைவரிசை,5. கலாம் கருவூலம் ஆகிய ஐந்து தலைப்புகளில் நூலை வடிவமைத்துள்ளார். முன்னணி நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் மட்டுமின்றி சிற்றிதழ்கள் வரை களம் பற்றிய தகவல்களை தேடித் தேடித் தொகுத்துள்ளார். முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளது உண்மையே.

சிறப்புக் கூறு:

      பொதுவாக தொகுப்பு நூலை உருவாக்க, தகவல்களைத் தேடித் தேடி தொகுப்பது எளிதான செயலன்று. ஆனால் அவற்றையெல்லாம் வகுத்து முறைப்படுத்துவது அதைவிட அரிய செயலாகும். தகவல் தொகுப்பு இந்நூலின் சிறப்புக் கூறாகக் கருதப்படுகிறது.

நூலாசிரியர்:  தமிழ்த்தேனீ முனைவர். இரா. மோகன்

8

 பதிவிறக்கம் செய்ய 10 வினாடிகள் காத்திருக்கவும்

You have to wait 10 seconds.

Generating Download Link...

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை