SECOND REVISION EXAM 10 TH STD TAMIL QUESTION PAPER & ANSWER KEY KOVAI DISTRICT

 


இரண்டாம் திருப்புதல் தேர்வு-2026 கோவை மாவட்டம்

10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்

                                                                பகுதி-1                                                     15X1=15

வி.எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

ஆ. கிண்கிணி

1

2.     

. பழுப்பு  

1

3.     

ஆ, மணிப்பெயர் வகை

1

4.     

அ. ஆறு

1

5.     

. கருணையன், எலிசபெத்துக்காக

1

6.     

ஆ. கம்பராமாயணம்

1

7.     

இ. சேரநாடு, சோழநாடு

1

8.     

ஆ. பாண்டியமன்னன்

1

9.     

. குறிஞ்சி, மருதம்,நெய்தல் நிலங்கள்

1

10.   

ஆ. குமரகுருபரர்

1

11.    

. திணை வழுவமைதி

1

12.   

இ. வாழை

1

13.   

அ. திருவிளையாடற்புராணம்

1

14.   

இ. பொன்+சேக்கை

1

15.   

இ. கதிர்மணி, மதிபுனை

1

                                     பகுதி-2                            பிரிவு-1                                                        4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

16

ü  அ பல கை என்று வந்தபோது கையைக் குறித்தது.

ü  பலகை என்று வந்தபோது மரப்பலகையைக் குறித்தது.

ü  தனித்தும், தொடர்ந்தும் வெவ்வேறு பொருளைக் குறித்ததால் பொதுமொழி ஆனது.

2

17

அ. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் யார்?

ஆ. புதிய படைப்புகள் உருவாக எது உதவுகிறது?

2

18

பொருளை மறைத்து வைத்தல் எனும் துன்பத்தைத் தராதவர்.

2


19

வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று இரண்டு அடிகளில் வருவது குறள் வெண்பா

   (-கா) வேலொடு நின்றான் இடுவென்றது போலும்

               கோலொடு நின்றான் இரவு.

2


20

v  மொழிபெயர்ப்பால் புதிய சொற்கள் உருவாகி மொழிவளம் பெருகும்.

v  பிற இனத்தாரின் கலை, பண்பாடு, நாகரிகத்தை அறியலாம்.

2

21

இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்

இன்மையே இன்னா தது.

2

                                                                    பிரிவு-2                                                    5X2=10

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

22

. மருந்தும் மூன்று நாளுக்கு  . உள்ளளவும் நினை

2

23

அ. நேற்று என்னைச் சந்தித்தவர் என் நண்பர்.

ஆ. கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறவரை அழைத்து வாருங்கள்.

2

24

. பணத்தை அள்ளி இறைத்த செல்வன் ஏழ்மையில் வாடுகிறான்

. கனிமொழி தேர்வுக்கு கண்ணும் கருத்துமாக படித்தாள் வெற்றிப் பெற்றாள்.

2

25

. புதுமனை புகுவிழா  . ஒப்பந்தம்

2

26

. படிப்பில் அழகனுக்கு ஆர்வம் கொஞ்சம் அதிகம்

. ”நாளை உங்கள் ஊருக்கு வரப்போகிறேன்” என குமரி கூறினாள்

2

27

பதிந்து - பதி +த்(ந்) + த் +உ;

பதி - பகுதி

த் - சந்தி (ந் -ஆனது விகாரம்)

த் - இறந்தகால இடைநிலை

உ-வினையெச்ச விகுதி

2

28

   அ. சிவந்தது  ஆ. கறுத்துவிடும்

2

பகுதி-3  (மதிப்பெண்கள்:18)                        பிரிவு-1                                           2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

29

இடம்:        இத்தொடர்  .பொ.சி  அவர்களின் சிற்றகல் ஒளி எனும் கட்டுரையில் இடம் பெற்றுள்ளது.

பொருள்:  எங்கள் தலையை கொடுத்தாவது  தலைநகரைக் காப்பாற்றுவோம்.

விளக்கம்: ஆந்திர மாநிலம் பிரியும்போது, சமயத்தில், செங்கல்வராயன்தலைமையில்  கூட்டப்பட்ட கூட்டத்தில்  ம.பொ.சி அவர்கள் தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்என்று முழங்கினார்.

3

30

அ. அறம் கூறும் மன்றங்கள்  

ஆ. புறநானூறு, மதுரைக்காஞ்சி

ஆ. மதுரையில் இருந்த அவையம்

3

31

ü  தமிழர் வறுமையிலும் ஏதேனும் ஒரு வழியில் விருந்தளித்தனர்.

ü  விதை நெல்லைக் குற்றியெடுத்து விருந்தளித்தனர்.

ü  வாளைப் பணையம் வைத்து விருந்தளித்தனர்.

ü  கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தனர்.

3

                                                                       பிரிவு-2                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

32

·        குளிர்ந்த சோலையில் மயில்கள் ஆடுகின்றன.

·        தாமரை மலர்கள் விளக்குகள் போன்று தோன்றுகின்றன.

·        குவளை மலர்கள் கண்விழித்துப் பார்ப்பது போல் காணப்படுகின்றன.

·        நீர்நிலைகளின் அலைகள் திரைச்சீலைகள் போல் விரிகின்றன.

·        மகர யாழின் தேனிசை போல் வண்டுகள் பாடுகின்றன.

3


33

ü  அழகான அன்னை மொழி

ü  பழமையான நறுங்கனி

ü  பாண்டியன் மகள்

ü  சிறந்த நூல்களை உடைய மொழி

ü  பழம்பெருமையும் தனிச்சிறப்பும் உடைய மொழி

3


34

 

.

அள்ளல் பழனத்(து) அரக்காம்பல் வாயவிழ

வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப் புள்ளினம்தம்

கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ

நச்சிலைவேல் கோக்கோதை நாடு.

.

விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்

    வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்

திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்

     எழுதல் முன் மகிழ்வன செப்பல்

பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்

     போமெனில் பின் செல்வதாதல்              

பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்

       ஒழுக்கமும் வழிபடும் பண்பே.

3

                                                               பிரிவு-3                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

35

அறிதல்-அறியாமை , புரிதல்-புரியாமை , தெரிதல்-தெரியாமை , பிறத்தல்-பிறவாமை.

இக்கூற்றில் அடிக்கோடிட்ட சொற்களைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.

3

36

ü  இக்குறளில் எடுத்துக்காட்டு உவமை அணி பயின்று வந்துள்ளது

எடுத்துக்காட்டு உவமை அணி:

    ஒரு பொருளைஅதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறும்போது உவமை, உவமேயம் ஆகியன இடம்பெற்று உவம உருபு மறைந்து வருவது எடுத்துக்காட்டு உவமையணியாகும்.

அணிப்பொருத்தம்:

v  உவமைபாடலோடு பொருந்தாத இசை.

v  உவமேயம்இரக்கம் இல்லாத கண்

v  உவம உருபுமறைந்து வந்துள்ளது.

     உவமை, உவமேயம் ஆகியன இடம்பெற்று உவம உருபு மறைந்து வந்தமையால் எடுத்துக்காட்டு உவமையணி ஆயிற்று.

3

37

சீர்

அசை

வாய்பாடு

சொல்லப்

நேர்+நேர்

தேமா

பயன்படுவர்

நிரை+நிரை+நேர்

கருவிளங்காய்

சான்றோர்

நேர்+நேர்

தேமா

கரும்புபோல்

நிரை+நிரை

கருவிளம்

கொல்லப்

நேர்+நேர்

தேமா

பயன்படும்

நிரை+நிரை

கருவிளம்

கீழ்

நேர்

நாள்

3

                                                                பகுதி-4                                                       5X5=25

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

38

கருணையனின் தாய் மறைவுக்கு வீரமாமுனிவரது கவிதாஞ்சலி

கருணையன் தனது தாயை நல்லடக்கம் செய்தான்:

    குழியினுள் அழகிய மலர்ப்படுக்கையைப் பரப்பினான். பயனுள்ள வாழ்க்கை நடத்திய தன் அன்னையின் உடலை மண் இட்டு மூடி அடக்கம் செய்தான். அதன்மேல் மலர்களையும் தன் கண்ணீரையும் ஒருசேரப் பொழிந்தான்.

கருணையன் தாயை இழந்து வாடுதல்:   

     இளம் பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளை காணும் முன்னே, மழைத்துளி இல்லாமல் காய்ந்து விட்டதைப் போல நானும் என் தாயை இழந்த வாடுகிறேன் என்று கருணையன் வருந்தினான்.

கருணையனின் தவிப்பு:     

    துணையைப்  பிரிந்த பறவையைப் போல் நான் இக்காட்டில் அழுது இரங்கி விடுகிறேன்.சரிந்த வழுக்கு நிலத்திலே தனியே விடப்பட்டு செல்லும் வழி தெரியாமல் தவிப்பவன் போல் ஆனேன்”.எனப் புலம்பினான்.

பறவைகளும்,வண்டுகளும் கூச்சலிட்டன:          

      கருணையன்  இவ்வாறெல்லாம் அழுது புலம்பினார். அதைக் கேட்டு, பல்வேறு இசைகளை இயக்கியது போன்று, மணம் வீசும் மலர்களும், பறவைகளும், வண்டுகளும் அழுவதைப் போன்றே கூச்சலிட்டன.

(அல்லது)

)

ü  ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையவராகச் செய்வது செல்வம். அஃது அல்லாமல் உலகில் சிறந்தபொருள் வேறு இல்லை.

ü  முறையறிந்து தீமையற்றவழியில் சேர்த்தபொருள் ஒருவருக்கு அறத்தையும் தரும்; இன்பத்தையும் தரும்.

ü  மற்றவர்களிடம் இரக்கமும் அன்பும் இல்லாமல் ஈட்டும் பொருளை ஏற்றுக்கொள்ளாமல் புறந்தள்ள வேண்டும்.

ü  தன் கைப்பொருளைக் கொண்டு ஒருவர் ஒரு செயலைச் செய்வது, மலைமேல் பாதுகாப்பாக நின்றுகொண்டு யானைப்போரை காண்பது போன்றது.

ü  ஒருவர் பொருளைஈட்ட வேண்டும்; அவருடைய பகைவரை வெல்லும் கூர்மையானஆயுதம் அதைைவிட வேறு இல்லை

5

39

.

முறையீட்டுக் கடிதம்

அனுப்புநர்

        அ.எழில்வேந்தன்,

        12,கம்பர் தெரு,

         அரக்கோணம்.

பெறுநர்

         உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

         ஆணையர் அலுவலகம்,

         அரக்கோணம்.

ஐயா,

    பொருள்:தரமற்ற உணவு வழங்கிய உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோருதல் சார்பாக.

             வணக்கம். நான் எனது உறவினர்களுடன் அரக்கோணம் காந்தி சாலையில் உள்ள அறுசுவை உணவகத்திற்கு நேற்று உணவருந்தச் சென்றிருந்தேன்.அங்கு வழங்கப்பட்ட புலவுச் சோறு தரமற்றதாகவும், விலை கூடுதலாகவும் இருந்தது.அந்த உணவகத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

                                                                                                                              இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள

                                                                                                            அ. எழில்வேந்தன்.

இடம்: அரக்கோணம்,

நாள்: 08-01-2022.

உறைமேல் முகவரி:

          உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

         ஆணையர் அலுவலகம்,  

         அரக்கோணம்.

) உரிய விடையைப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

5

40

காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

41

படிவத்தை உரிய விவரங்களுடன் சரியாக நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்குக

5

42

.

1. புரளி பேசாதிருத்தல்

1. தேவையற்றச் சண்டைகள் நீங்கும்

2. பழிவாங்கும் எண்ணத்தை கைவிடல்

2. மன அமைதிப் பெறலாம்.

3. உண்மை பேசுதல்

3. நம் வாழ்வை உயர்த்தும், அச்சமின்றி வாழலாம்

4. உதவி செய்தல்

4. மன மகிழ்ச்சி கிடைக்கும்

5. அன்பாய் இருத்தல்

5. அனைவரும் நண்பராகிவிடுவர்

.

மொழிபெயர்ப்பு என்பது தனிக்கலை. அதனை யார் வேண்டுமானாலும் செய்துவிட முடியாது. மொழிபெயர்ப்பாளர் என்பவர் எந்த மொழியுடனும் தனிப்பற்றுக் கொள்ளாமல், நடுநிலையில் நின்று மொழிபெயர்க்க வேண்டும். குறிப்பாக அவருக்கு இரண்டு மொழிகளிலும் அதாவது தருமொழி பெறுமொழி ஆகிய இரண்டிலும் புலமை இருத்தல் வேண்டும். இரு மொழிகளின் சமூக, பண்பாட்டுச் சூழ்நிலைகளை நன்கு அறிந்திருத்தல் வேண்டும்.

5

                                                                 பகுதி-5                                                       3X8=24

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க:

43

அ. முன்னுரை:

   கலைஞர் பகுத்தறிவுக் கொள்கை பரப்பும் சிந்தனையாளர். பேச்சாளர், எழுத்தாளர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர்.  "முத்தமிழ் அறிஞர்" "சமூகநீதி காவலர்" என்றெல்லாம் மக்களால் போற்றப்பட்டவர் கலைஞர்  கருணாநிதி ஆவார். இவருடைய பன்முத்திறமைகளைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

போராட்டக் கலைஞர்

     தன் பதினான்காம் வயதில், பள்ளி முடிந்த மாலைவேளைகளில் தாம் எழுதிய, "வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம்!" என்று தொடங்கும் பாடலை முழங்கியபடி இந்தித் திணிப்பை எதிர்த்துப் போரட்ட மாணவர்களைத் திரட்டித் திருவாரூர் வீதிகளில் ஊர்வலகம் சென்றார். அந்தப் போராட்டப் பணிபே அவருக்குள் இருந்த கலைத்தன்மையை வளர்த்தது.

பேச்சுக் கலைஞர்:

v  மேடைப்பேச்சினில் பெருவிருப்பம் கொண்ட கலைஞர், "நட்பு" என்னும் தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு பலராலும் பாராட்டப்பட்டது.

v  பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களுக்கு பேச்சு மற்றும் ஒற்றுமை உணர்வை வளர்க்க "சிறுவர் சீர்த்திருத்தச் சங்கம்" மற்றும் "தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்" ஆகிய அமைப்புகளைத் தொடங்கினார்.

நாடகக் கலைஞர்:

v  தமக்கே உரிய தனிநடையால் தமிழரை மேடை நாடகங்களின் பக்கம் சந்திதார். அவர் எழுதிய முதல் நாடகமான பழநியப்பன் மற்றும் அதனைத் தொடர்ந்து சாம்ராட் அசோகன், மணிமகுடம், வெள்ளிக்கிழமை, காகிதப்பூ உட்பட பல நாடகங்களை எழுதினார்.

திரைக் கலைஞர்

v  கலைஞரின் திறமையை நன்குணர்ந்த இயக்குனர் ஏ எஸ் ஏ சாமி மக்கள் திலகம் எம்ஜிஆர் முதன்முதலாக நடித்த ராஜகுமாரி படத்திற்கான முழு வசனத்தையும் கலைஞரை எழுதச் செய்தார்

v   சிவாஜி கணேசன் நடித்த முதல் படமான பராசக்தி படத்திற்கும் திரும்பிப்பார், மனோகரா, ராஜா ராணி முதலிய படத்திற்கும் கலைஞர் கதை வசனம் எழுதினார்

இயற்றமிழ்க் கலைஞர்

   தமிழ் மீது திராத பற்றுகொண்ட கலைஞர் நளாயினி, சித்தார்த்தன் சிலை, சந்தனக் கிண்ணம், தாய்மை, புகழேந்தி, அணில் குஞ்சு உள்ளிட்ட பல சிறுகதைகளை எழுதினார். ரோமாபுரிப் பாண்டியன், பொன்னர் சங்கர், தென்பாண்டிச் சிங்கம், ஒரே ரத்தம் உள்ளிட்ட புதினங்களையும் கலைஞர் எழுதியுள்ளார்.

முடிவுரை                                                                                          

 உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு" என்று வாழ்ந்தவர் கலைஞர் மு.கருணாநிதி ஆவார். தமிழின் பெருமைகளையும் சிறப்புகளையும் மீட்டெடுக்க எண்ணியவர் கலைஞர், அதற்கான பணிகளைத் தம் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து, தமிழர் நெஞ்சில் என்றும் நிலைத்து நிற்கும் காவியமானவர்.

ஆ. முன்னுரை

இன்று ஏடு கற்போரே நாளை    நாடு காப்போர் ஆதல்,

 இளமை அறிவோடு இயைபின் நடப்பதெல்லாம் நாட்டிற்கு நன்றேயாம்

            என்ற பாவேந்தரின் வாய்மொழிக்கேற்ப,எதிர்காலத்தில் நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும்  உரிய நற்பண்புகளை மாணவர்கள் இளமை முதலே பெற வேண்டும். இத்தகைய நற்பண்புகளைப் பெற்று மாணவர்கள் சிறந்துவிளங்க நாட்டுவிழாக்கள் துணைபுரிகின்றன. அதைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

நாட்டு விழாக்கள்:

        நமது நாட்டை எண்ணி பெருமை கொள்ள  எண்ணற்ற நாட்டு விழாக்கள் இருந்தாலும், விடுதலை நாள் விழாவும், குடியரசு நாள் விழாவும் அவை அனைத்திலும்  சிறந்தவையாகும். நமது நாட்டு மக்களை அடிமைப்படுத்தி ஆட்சிசெய்து வந்த ஆங்கிலேயர்கள் நமது நாட்டை விட்டுச்சென்ற நாள்  விடுதலைநாள் விழாவாக ஆகஸ்ட் 15ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

விடுதலைப் போராட்ட வரலாறு:

    பதினைந்தாம் நூற்றாண்டு காலகட்டத்தில் நமது நாட்டில் எண்ணற்ற சிற்றரசுகள் இருந்தன. அக்காலகட்டத்தில் நம்மிடையே இருந்த ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி,வணிகம் செய்ய வந்த ஐரோப்பியர்கள்,குறிப்பாக ஆங்கிலேயர்கள்  பெரும்பான்மையான  சிற்றரசுகளைக் கைப்பற்றி  நாட்டை ஆளத்தொடங்கினர். இது  பல இந்தியத் தலைவர்களை கவலைகொள்ளச் செய்தது.எனவே மக்களிடையே விடுதலை வேட்கையை ஏற்படுத்தி வெள்ளையருக்கு எதிராக போராடத்  தூண்டினர்.

         இவர்களது கடுமையான போராட்டத்தாலும், தியாகத்தாலும் இந்தியா 1947 ஆகஸ்ட் 15 இல் விடுதலை பெற்றது.

நாட்டு முன்னேற்றத்தில் மாணவர் பங்கு:

      இன்றைய மாணவர்களே நாளைய தலைவர்கள். இவர்கள் சமுதாய உணர்வுடன் வளர்ந்தால்தான் நாடும் வீடும் வளம் பெறும். துன்பத்தில் மற்றவர்க்கு உதவுதல், வறுமை, கல்வியின்மை அறியாமை, சாதி மத வேறுபாடுகள், தீண்டாமை மூடப்பழக்கங்கள்,ஊழல் ஆகியவற்றிற்கு எதிராகக் குரல் கொடுத்தல்  ஆகிய பண்புகளை மாணவர்கள் பெற்றிருத்தல் மிகவும் சிறப்பு.

மாணவப் பருவமும், நாட்டுப் பற்றும்:

         மாணவர்கள் மக்களுக்கு முன்னோடியாகத் திகழ வேண்டும். அவர்கள் தங்களை சாரண சாரணியர் படை நாட்டு நலப்பணித் திட்டம் தேசிய பசுமைப்படை எனப் பல்வேறு வகையில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

           மரம் நடுதல், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு, சாலை விதிமுறைகள் பற்றிய அறிவுறுத்தல்  மற்றும் தேசிய விழாக்களை கொண்டாட உதவுதல் ஆகியவற்றில் மாணவர்கள் கட்டாயம் ஈடுபட வேண்டும்.

முடிவுரை:

 பாரத நாடு பழம்பெரும் நாடு: நீரதன்  

  புதல்வர் இந்நினை வகற்றாதீர்


   என்ற  மகாகவி பாரதியாரின் வாக்கிற்கிணங்க, நாட்டின் வளர்ச்சிக்கு மாணவர்களின் பங்கு மிக முக்கியமானது. மாணவர் நாட்டு முன்னேற்றத்தில் இணைந்து செயல்பட்டால், நாடும் முன்னேறும் வீடு முன்னேறும், புதிய இந்தியா உருவாகும்

8

44

) இராமானுசர் நாடகம்

 முன்னுரை:

    12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலர்வது குறிஞ்சிதலைமுறைக்கு ஒரு முறை மட்டுமே மலர்வது மூங்கில்நம் தலைமுறைக்கு ஒரு முறை பிறப்பவர்களே ஞானிகள். அத்தகைய ஞானிகளுள் ஒருவர் இராமானுசர்அவரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

தண்டும் கொடியுமாக:

    திருமந்திரத் திருவருள் பெறத் தண்டும்கொடியுமாக இராமானுசரை வரச் சொல்லுங்கள் என்னும் செய்திபூரணரால் திருவரங்கத்திற்கு அனுப்பப்பட்டது.அதனால்இராமானுசர்கூரேசர்முதலியாண்டான் ஆகிய மூவரும் பூரணர் இவ்வத்திற்கு வந்தனர். அவர்களைக் கண்ட பூரணர் கோபம் கொண்டார். அதற்கு இராமானுசர், "தாங்கள் கூறிய தண்டு கொடிக்கு இணையானவர்கள் இவர்கள். எனவே கோபம் கொள்ளாது பரிவு கொண்டு திருவருள் புரிய வேண்டும்" என்று கூறினார்,

ஆசிரியரின் கட்டளை:

      பூரணர் மூவரையும் வீட்டிற்குள் அழைத்து மிகுந்த நிபந்தனையுடன் "திருமகளுடன் கூடிய நாரயணனின் திருப்பாதங்களைப் புகலிடமாகக் கொள்கிறேன்திருவுடன் சேர்ந்த நாராயணனை வணங்குகிறேன்" என்ற மந்திரத்தைக் கூறினார். பூரணர் கூறிய திருமந்திரத்தை மூலரும் மூன்று முறை உரக்கச் சொன்னார்கள்.

திருமந்திரத்தை மக்களுக்கு உரைத்தல்:

     திருக்கோட்டியூர் சௌம்ப நாராயணன் திருக்கோவில் மதில் சுவரின் மேல் இராமனுார் நின்று கொண்டுஉரத்த குரலில் பேசத் தொடங்கினார். "கிடைப்பதற்கரிய பிறவிப்பிணியைத் தீர்க்கும் அருமருந்தான திருமந்திரத்தை உங்களுக்குக் கூறுகிறேன். அனைவரும் இணைந்து மந்திரத்தைச் சொல்லுங்கள்". அவர் சொல்லச் சொல்ல அனைவரும் உரத்தக் குரலில் மூன்று முறை கூறினார்கள்.

குருவின் சொல்லை மீறுதல்:

      குருவின் (பூரணரின்) சொல்லை மீறியதற்காக கோபம் கொண்ட பூரணரிடம் "கிடைப்பதற்குரிய மந்திரத்தைத் தங்களின் திருவருளால் நான் பெற்றேன். அதன் பயனை அனைவருக்கும் கிட்டவேண்டும். அவர்கள் பிறவிப்பிணி நீங்கி பெரும் பேறு பெற்றிடநான் மட்டும் நரகத்தை அடைவேன்" என்று விளக்கமளித்தார்.

குருவின் ஆசி:

       இராமானுசரின் பரந்த மனத்தைக் கண்ட குரு பூரணர்அவரை மன்னித்து அருளினார் மேலும் இறைவனின் ஆசி பெற அவரை வாழ்த்தினார். இராமானுசத்திற்கு தன் மகள் சௌப்ய நாராயணனை அடைக்கலமாக அளித்தார்.

முடிவுரை:

    யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்என்ற உயரிய மந்திரத்தை வாழ்வாக்கியவர் இராமானுசர்தனக்கென வாழாது பிறருக்காக நரகமும் செல்ல முன்வந்த பெருமகளார்

) பிரும்மம்

முன்னுரை:

இயற்கையோடு இணைந்து வாழ்வதும் இயற்கையைப் பயனுள்ளதாக மாற்றுவதும் அழகியல் ஆகும். குடும்ப உறுப்பினர்கள் இணைந்து நட்டு வைத்த மரமொன்று அவர்களின் வாழ்வியலில் எப்படி பின்னிப் பிணைந்துவிட்டது என்பதைப் பிரபஞ்சனின் 'பிரும்மம்' என்ற சிறுகதை அழகாகக் காட்சிப்படுத்துகிறது.

புதிதாகக் கட்டிய வீடு:

இச்சிறுகதையில் வரும் குடும்பத்தினர் புதிதாக வீடு ஒன்றைக் கட்டினர். அந்த வீட்டிற்கு முன்னால் வெறுமனே கிடந்த சிறிய இடத்தைப் பயனுள்ள வகையில் பயன்படுத்த குடும்பஉறுப்பினர்கள் அனைவரும் முடிவு செய்தனர். அதற்காக ஒவ்வொருவரும், என்ன செய்யலாம்என்று தங்களது எண்ணங்களைத் தெரிவித்தனர்.

குடும்ப உறுப்பினர்களின் விருப்பம்:

v  குடும்பத்தின் பெரியவரான பாட்டி பசுவின் மீது தீராத அன்பு கொண்டவர் . பசுவினால் குடும்பத்திற்கு ஏற்படும் நன்மைகளைக் கூறி அவ்விடத்தில் பசு வாங்கி வளர்க்கலாம் என்றார்.

v  குடும்பத்தின் அம்மா பாட்டியின் கருத்தை ஏற்க மறுத்து, ”வெண்டை, கத்தரி, தக்காளி போன்றவற்றை வளர்த்தால் கறிக்கு உதவும் என்று கூறி தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.

v  அக்குடும்பத்தில் இருந்த தங்கை சௌந்தரா பூக்களிடம் விருப்பம் கொண்டவளாக இருந்தாள். பல்வேறு வகையான பூக்களை வளர்க்கலாம் என்றாள். அழகை ரசிக்கத் தெரிய வேண்டும் என்றாள். இது சௌந்தராவிடம் இருந்த இயற்கையை ரசிக்கும் பண்பை உணர்த்துகிறது.

அப்பாவின் முடிவு:

அனைவரும் தங்களது கருத்துக்களை தெரிவிக்க, குடும்பத்தின் தலைவரான அப்பா ,காலியாக்க் கிடக்கும் அந்த இடத்தில் முருங்கையை  நட்டு வளர்க்கலாம் என்று சொன்னார். ஏனெனில் முருங்கை வீட்டுக்கு எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாது. மேலும் மிகுந்த மருத்துவ குணங்களை உடையது. என்று கூறி, இரண்டு நாட்கள் கழித்து தனது நண்பர் வீட்டிலிருந்து முருங்கைக் கிளை ஒன்றைக் கொண்டு வந்து அவர் நட்டார்.

முருங்கை வீட்டின் அங்கமானது:

v  நாளுக்கு நாள் முருங்கையின் வளர்ச்சியை கண்டு மிகவும் ரசித்தன குடும்பத்தினர் அது படிப்படியாக கிளை, இலை, காய் போன்றவற்றைத் தந்த போது அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.

v  முருங்கைக் காய்க்கும் கீரைக்கும் ஆசைப்பட்டு அண்டை வீட்டு உறவுகள் அடிக்கடி இவர்களது வீட்டிற்கு வர தொடங்கினர். மேலும் காக்கை குருவிகளுக்கு இந்த முருங்கை மரம் இல்லமாயிற்று. முருங்கை அவர்களின் வீட்டின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.

மீண்டெழுந்த முருங்கை:

ஒரு நாள் காற்று பலமாக வீசியதால் முருங்கை அடியோடு விழுந்தது. இதனால் குடும்பத்தினர் சொல்ல முடியாத துயரத்தை அடைந்தனர். சில நாட்களுக்குப் பிறகு விழுந்து கிடந்த மரக்கிளையில் இருந்து முருங்கை துளிர்விடத் தொடங்கியது. அது குடும்பத்தினருக்கு பெரு மகிழ்ச்சி அளித்தது.

முடிவுரை:

முருங்கை என்பது வெறும் மரமாக குடும்பத்தார் இல்லை உணர்வில் கலந்த உயிராகவே அமைகிறது பல உயிர்கள் வாழும் வீடாகவும் திகழ்ந்தது பிரம்மம் பெற உயிர்களை தன் உயிர் போல் நேசிக்கும் பண்பினை விவரிக்கிறது என்றால் அது மிகையல்ல.

8

45

 இன்று ஏடு கற்போரே நாளை   நாடு காப்போர் ஆதல்,

   இளமை அறிவோடு இயைபின் நடப்பதெல்லாம் நாட்டிற்கு நன்றேயாம்

) முன்னுரை: 

 

    என்ற பாவேந்தரின் வாய்மொழிக்கேற்ப,எதிர்காலத்தில் நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும்  உரிய நற்பண்புகளை மாணவர்கள் இளமை முதலே பெற வேண்டும். இத்தகைய நற்பண்புகளைப் பெற்று மாணவர்கள் சிறந்துவிளங்க நாட்டுவிழாக்கள் துணைபுரிகின்றன. அதைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

நாட்டு விழாக்கள்:

        நமது நாட்டை எண்ணி பெருமை கொள்ள  எண்ணற்ற நாட்டு விழாக்கள் இருந்தாலும், விடுதலை நாள் விழாவும், குடியரசு நாள் விழாவும் அவை அனைத்திலும்  சிறந்தவையாகும். நமது நாட்டு மக்களை அடிமைப்படுத்தி ஆட்சிசெய்து வந்த ஆங்கிலேயர்கள் நமது நாட்டை விட்டுச்சென்ற நாள்  விடுதலைநாள் விழாவாக ஆகஸ்ட் 15ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

விடுதலைப் போராட்ட வரலாறு:

    பதினைந்தாம் நூற்றாண்டு காலகட்டத்தில் நமது நாட்டில் எண்ணற்ற சிற்றரசுகள் இருந்தன. அக்காலகட்டத்தில் நம்மிடையே இருந்த ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி,வணிகம் செய்ய வந்த ஐரோப்பியர்கள்,குறிப்பாக ஆங்கிலேயர்கள்  பெரும்பான்மையான  சிற்றரசுகளைக் கைப்பற்றி  நாட்டை ஆளத்தொடங்கினர். இது  பல இந்தியத் தலைவர்களை கவலைகொள்ளச் செய்தது.எனவே மக்களிடையே விடுதலை வேட்கையை ஏற்படுத்தி வெள்ளையருக்கு எதிராக போராடத்  தூண்டினர்.

         இவர்களது கடுமையான போராட்டத்தாலும், தியாகத்தாலும் இந்தியா 1947 ஆகஸ்ட் 15 இல் விடுதலை பெற்றது.

நாட்டு முன்னேற்றத்தில் மாணவர் பங்கு:

      இன்றைய மாணவர்களே நாளைய தலைவர்கள். இவர்கள் சமுதாய உணர்வுடன் வளர்ந்தால்தான் நாடும் வீடும் வளம் பெறும். துன்பத்தில் மற்றவர்க்கு உதவுதல், வறுமை, கல்வியின்மை அறியாமை, சாதி மத வேறுபாடுகள், தீண்டாமை மூடப்பழக்கங்கள்,ஊழல் ஆகியவற்றிற்கு எதிராகக் குரல் கொடுத்தல்  ஆகிய பண்புகளை மாணவர்கள் பெற்றிருத்தல் மிகவும் சிறப்பு.

மாணவப் பருவமும், நாட்டுப் பற்றும்:

         மாணவர்கள் மக்களுக்கு முன்னோடியாகத் திகழ வேண்டும். அவர்கள் தங்களை சாரண சாரணியர் படை நாட்டு நலப்பணித் திட்டம் தேசிய பசுமைப்படை எனப் பல்வேறு வகையில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

 பாரத நாடு பழம்பெரும் நாடு: நீரதன்  

  புதல்வர் இந்நினை வகற்றாதீர்

           மரம் நடுதல், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு, சாலை விதிமுறைகள் பற்றிய அறிவுறுத்தல்  மற்றும் தேசிய விழாக்களை கொண்டாட உதவுதல் ஆகியவற்றில் மாணவர்கள் கட்டாயம் ஈடுபட வேண்டும்.

முடிவுரை:        

 

   என்ற  மகாகவி பாரதியாரின் வாக்கிற்கிணங்க, நாட்டின் வளர்ச்சிக்கு மாணவர்களின் பங்கு மிக முக்கியமானது. மாணவர் நாட்டு முன்னேற்றத்தில் இணைந்து செயல்பட்டால், நாடும் முன்னேறும் வீடு முன்னேறும், புதிய இந்தியா உருவாகும்.

 (அல்லது)

) முன்னுரை:

கலைத்திருவிழா என் மனதைக் கவர்ந்திழுத்தது

    குடும்பத்தினருடன் வெளியில் செல்வது யாருக்குத் தான் பிடிக்காது? அப்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை எனலாம். அவ்வகையில் கடந்த மாதம் எனது குடும்பத்தினருடன் எங்கள் ஊரான திருத்தணியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச் சென்றிருந்தேன். அப்போது எனக்குக் கிடைத்த அனுபவங்களை இங்கு கட்டுரையாகத் தந்திருக்கிறேன்.

அறிவிப்பு:

     மகிழுந்தை வெளியில் நிறுத்தி விட்டு, நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொண்டு, உள்ளே சென்றோம். நுழைவாயிலின் வழியாக நுழைந்தஉடன்,அங்கே எந்தெந்த நாட்டுப்புறக் கலைகள் எங்கெங்கே நிகழ்த்தப் படுகின்றன? என ஒலிபெருக்கிமூலம் தெளிவாக அறிவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன.

அமைப்பு:

      கலையரங்க நுழைவாயிலில் நிகழ்ந்து கொண்டிருந்த அறிவிப்பைக் கேட்டு விட்டு, அனைவரும் உள்நுழைந்தோம்.அங்கே ஓரிடத்தில் அரங்குகளின் அமைப்பு குறித்த வரைபடம் தெளிவாக வரையப்பட்டிருந்தது. எங்கள் ஊரான திருத்தணியின் எழில்மிகு தோற்றமும் அங்கே காட்சிப்படுத்தப் பட்டிருந்தது.

சிறு அங்காடிகள்:

     கலைத்திருவிழா நிகழிடத்தில் விளையாட்டுப் பொருள்கள், தின்பண்டங்கள், குழந்தைகளுக்கான பொம்மைகள், உணவுப்பொருட்கள் மற்றும் பலவகையான பொருட்களை விற்கும் சிறுசிறு அங்காடிகளும் அமைக்கப்பட்டிருந்தது. அது குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரையும் கவரும் விதமாக இருந்தது.

நிகழ்த்தப்பட்ட கலைகள்:

மனதைக் கவரும் மயிலாட்டம்

                நம்மையும் ஆடத்தூண்டும் கரகாட்டம்

      எங்கள் ஊரில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் பெரும்பாலும் எல்லா நிகழ்கலைகளும் நிகழ்த்தப்பெற்றன. அங்கே மயில் ஆட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், கும்மியாட்டம்,தெருக்கூத்து உள்ளிட்ட பலவகை ஆட்டங்கள் அங்கு வந்த மக்களை மகிழ்விக்கும் வகையில் நிகழ்த்தப்பட்டன. எங்களுக்கு அது புதுவித அனுபவமாக இருந்தது.

பேச்சரங்கம்:

    கலையரங்கத்தில், முத்தமிழும் ஒன்று கூடியதுபோல் இருந்தது கலைத்திருவிழாவில் பேச்சரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் தொலைக்காட்சிகளில் பேசக்கூடிய புகழ்பெற்ற பேச்சாளர்கள் பங்கேற்று பேசிக்கொண்டிருந்தனர்.

முடிவுரை:

         இறுதியாக எனக்குத் தேவையான சில பொருட்களை அங்கிருந்த அங்காடிகளில் வாங்கிக் கொண்டு, வெளியில் வர முயற்சித்தோம்.கூட்ட நெரிசல் மிக அதிகமாக இருந்ததால், வெளியில் வருவதற்கு நீண்ட நேரம் ஆனது. ஒருவழியாக வெளியில் வந்து, மகிழுந்தில் ஏறி வீட்டிற்குச் சென்றோம். எனது வாழ்வில் மறக்கமுடியாத மிகச்சிறந்த அனுபவமாக இந்நிகழ்வு அமைந்தது.

8

 பதிவிறக்கம் செய்ய 10 வினாடிகள் காத்திருக்கவும்


You have to wait 10 seconds.

Generating Download Link...

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை