இரண்டாம் திருப்புதல் தேர்வு-2026
திருப்பூர் & நீலகிரி மாவட்டம்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1
15X1=15
|
வி.எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
|
1.
|
அ. மொட்டின் வருகை |
1 |
|
2.
|
ஆ. தனிமொழி |
1 |
|
3.
|
அ. வேற்றுமை |
1 |
|
4.
|
இ. காசி நகரத்தின்
பெருமையைப் பாடும் நூல் |
1 |
|
5.
|
ஆ. வங்காள
, ஆங்கில |
1 |
|
6.
|
இ. வஞ்சப்புகழ்ச்சி
அணி |
1 |
|
7.
|
இ. உழவு, ஏர், மண், மாடு |
1 |
|
8.
|
அ. கைம்மாறு
கருதாமல் அறம் செய்வது |
1 |
|
9.
|
அ. அகவற்பா |
1 |
|
10.
|
இ. கைக்கிளை,
பெருந்திணை |
1 |
|
11.
|
ஆ. விருந்தோம்பல் |
1 |
|
12.
|
ஈ. பரிபாடல் |
1 |
|
13.
|
இ. கீரந்தையார் |
1 |
|
14.
|
ஆ. வான்வெளியில்,
பேரொலியில் |
1 |
|
15.
|
ஆ. உரு - உந்து |
1 |
பகுதி-2 பிரிவு-1
4X2=8
|
எவையேனும் நான்கு வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்க |
||
|
16 |
நடுநிலையாகக் கடமை தவறாமல்
இரக்கம் காட்ட வேண்டும் |
2 |
|
17 |
அ. சிலப்பதிகாரம் எவ்வாறெல்லாம்
சிறப்பிக்கப்படுகிறது? ஆ. உண்மையான செல்வம் எதுவென
நல்வேட்டனார் கூறுகிறார்? (மாதிரி விடைகள்) |
2 |
|
18 |
ü கிழக்கிலிருந்து வீசும்
காற்று –
கொண்டல் ü மேற்கிலிருந்து வீசும்
காற்று
– கோடை ü வடக்கிலிருந்து வீசும்
காற்று
– வாடை ü தெற்கிலிருந்து வீசும்
காற்று
- தென்றல் |
2 |
|
19 |
v மொழிபெயர்ப்பால் புதிய
சொற்கள் உருவாகி மொழிவளம் பெருகும். v பிற இனத்தாரின் கலை, பண்பாடு, நாகரிகத்தை அறியலாம். |
2 |
|
20 |
இளம்பயிர் வளர்ந்து
நெல்மணிகளைக் காணும் முன்பே மழையின்றி வாடிக் காய்வது போல கருணையன் தாயை இழந்து வாடினான். |
2 |
|
21 |
முயற்சி திருவினை ஆக்கும்
முயற்றின்மை இன்மை புகுத்தி விடும். |
2 |
பிரிவு-2
5X2=10
|
எவையேனும்
ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
|
22 |
அ. அக்காள்
நேற்று வீட்டுக்கு வந்தார். அக்காள் புறப்படும்போது, அம்மா
வழியனுப்பினார். ஆ. "இதோ,
முடித்துவிட்டேன்" என்று, செயலை
முடிக்கும்முன்பே கூறினார். |
2 |
|
23 |
1.
கட்டு - முதனிலைத்
தொழிற்பெயர் 2.
சொட்டு - முதனிலைத் தொழிற்பெயர் 3.
வழிபாடு- விகுதி பெற்ற
தொழிற்பெயர் 4.
கேடு - முதனிலை திரிந்த
தொழிற்பெயர் 5.
பாடுதல் - விகுதி பெற்ற
தொழிற்பெயர் |
2 |
|
24 |
பதிந்து
- பதி +த்(ந்) + த் +உ; பதி
- பகுதி த்
- சந்தி (ந் -ஆனது விகாரம்) த்
- இறந்தகால இடைநிலை உ-வினையெச்ச
விகுதி |
2 |
|
25 |
அ. பல்துறை ஊடகம் ஆ. செங்கோல் |
2 |
|
26 |
இப்போது உயரமாக வளர்ந்துவிட்டான்!
எனக்கு அடையாளமே தெரியாது.ஊருக்கு என்னுடன் வருவான் பாரேன்! சரி அலைபேசியை வை! நான்
கிளம்பிவிட்டேன். |
2 |
|
27 |
மோனைச்சொற்கள்: (சீர் மோனை) கொள்வோர் , கொள்க குரைப்போர், குரைக்க எதுகைச்
சொற்கள்:
(அடி எதுகை) கொள்வோர் , உள்வாய் |
2 |
|
28 |
"சீசர் எப்போதும் என்
சொல்பேச்சைக் கேட்கும். புதியவர்களைப் பார்த்துக் கத்துமே தவிர கடிக்காது "
என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார். |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18) பிரிவு-1 2X3=6
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
|
29 |
ü பகிர்ந்துண்ணும் வழக்கமே
குறைந்து விட்டது. ü நெருங்கிய உறவினர்களை
மட்டுமே விருந்தினர்களாகக் கருதுகின்றனர். ü வாயிலை அடைக்கும்
முன் உணவு வேண்டி யாராவது இருக்கிறார்களா? என்று பார்த்த தமிழர் இன்று
வாயிலை அடைத்த பிறகே உண்னுகின்றனர். |
3 |
|
30 |
அ. திருப்பாதிரிப்புலியூர்
ஞானியாரடிகள் ஆ. அம்மானைப்
பாடல்கள், சித்தர் பாடல்கள்.சொற்பொழிவுகள் இ. கேள்வி ஞானம் |
3 |
|
31 |
அ) நாற்று- நெல் நாற்று நட்டேன். ஆ) கன்று- வாழைக்கன்று வளர்த்தேன் இ) பிள்ளை- தென்னம்பிள்ளை அசைந்தது ஈ) வடலி-பனைவடலியைப் பார்த்தேன். உ) பைங்கூழ்-பைங்கூழ் அழகானது. |
3 |
பிரிவு-2 2X3=6
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
|
32 |
ü வானமும், உருவமில்லாக்
காற்றும்,
பூமியும், நெருப்பும், நீரும் ஆகிய
ஐம்பூதங்களும் உயிர்கள் உருவாகி வளர முதன்மையானவை ஆகும். ü பூமி உருவாகி, ஊழிக்காலம்
தொடர்ந்த பின்னர்ப் இப்பூமி குளிரும்படியாகத் தொடர்ந்த மழையால் வெள்ளத்தில்
மூழ்கியது. ü மீண்டும்
மீண்டும் வெள்ளத்தால் நிறைந்த இப்பெரிய உலகத்தில், உயிர்கள் உருவாகி
வாழ்வதற்கு ஏற்ற சூழல் தோன்றி,
அவை
நிலைபெறும்படியான ஊழிக்காலம் வந்தது |
3 |
|
33 |
ü தொழில் செய்வதற்குத்
தேவையான கருவி,
அதற்கு
ஏற்ற காலம்,
செயலின்
தன்மை,
செய்யும்
முறைஆகியவற்றைஅறிந்து அரிய செயலைச் செய்பவரே அமைச்சர் ஆவார். ü மனவலிமை, குடிகளைக்காத்தல், ஆட்சி முறைகளைக்கற்றல் , நூல்களைக்கற்றல், விடாமுயற்சி ஆகிய
ஐந்தும் சிறப்பாக அமைந்தவரேஅமைச்சராவார். |
3 |
|
34 |
|
3 |
பிரிவு-3
2X3=6
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||||||||||||||||||||||||||
|
35 |
தனிமொழி, தொடர்மொழி,
பொதுமொழி |
3 |
||||||||||||||||||||||||
|
36 |
ü
இக்குறளில் எடுத்துக்காட்டு உவமை அணி பயின்று
வந்துள்ளது எடுத்துக்காட்டு உவமை அணி: ஒரு பொருளைஅதனோடு தொடர்புடைய
மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறும்போது உவமை, உவமேயம் ஆகியன
இடம்பெற்று உவம உருபு மறைந்து வருவது எடுத்துக்காட்டு உவமையணியாகும். அணிப்பொருத்தம்: v
உவமை – பாடலோடு பொருந்தாத இசை. v
உவமேயம் – இரக்கம் இல்லாத கண் v
உவம உருபு – மறைந்து வந்துள்ளது. உவமை, உவமேயம் ஆகியன இடம்பெற்று உவம உருபு மறைந்து வந்தமையால் எடுத்துக்காட்டு
உவமையணி ஆயிற்று. |
3 |
||||||||||||||||||||||||
|
37 |
|
3 |
||||||||||||||||||||||||
பகுதி-4
5X5=25
|
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி |
||||||||||||||||||||
|
38
அ |
ஆ) கருணையனின் தாய் மறைவுக்கு வீரமாமுனிவரது
கவிதாஞ்சலி கருணையன்
தனது தாயை நல்லடக்கம் செய்தான்: குழியினுள் அழகிய மலர்ப்படுக்கையைப்
பரப்பினான். பயனுள்ள வாழ்க்கை நடத்திய தன் அன்னையின் உடலை
மண் இட்டு மூடி அடக்கம் செய்தான். அதன்மேல் மலர்களையும்
தன் கண்ணீரையும் ஒருசேரப் பொழிந்தான். கருணையன்
தாயை இழந்து வாடுதல்: இளம் பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளை காணும் முன்னே, மழைத்துளி இல்லாமல் காய்ந்து விட்டதைப் போல நானும் என் தாயை இழந்த
வாடுகிறேன் என்று கருணையன் வருந்தினான். கருணையனின்
தவிப்பு: துணையைப் பிரிந்த பறவையைப் போல் நான்
இக்காட்டில் அழுது இரங்கி விடுகிறேன்.சரிந்த வழுக்கு
நிலத்திலே தனியே விடப்பட்டு செல்லும் வழி தெரியாமல் தவிப்பவன் போல் ஆனேன்”.எனப் புலம்பினான். பறவைகளும்,வண்டுகளும் கூச்சலிட்டன: கருணையன் இவ்வாறெல்லாம் அழுது புலம்பினார்.
அதைக் கேட்டு, பல்வேறு இசைகளை இயக்கியது
போன்று, மணம் வீசும் மலர்களும், பறவைகளும்,
வண்டுகளும் அழுவதைப் போன்றே கூச்சலிட்டன. |
5 |
||||||||||||||||||
|
39 |
அ) , ஆ) உரிய
விடையைப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
5 |
||||||||||||||||||
|
40 |
காட்சிக்குப்
பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
5 |
||||||||||||||||||
|
41 |
படிவத்தை உரிய விவரங்களுடன் சரியாக நிரப்பியிருப்பின்
மதிப்பெண் வழங்குக |
5 |
||||||||||||||||||
|
42 |
அ. 1.
தேவையான
உணவுப்பொருட்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துக்கொள்வேன். 2.
குடிநீரைச்
சேமித்துக் வைத்துக்கொள்வேன். 3.
உணவைச்
சிக்கனமாக பயன்படுத்துவேன். 4.
நீரைச்
சிக்கனமாக பயன்படுத்துவேன். 5.
வானொலியில்
தரும் தகவல்களைக் கேட்டு,
அதன்படி
நடப்பேன். ஆ. அ.
ஒருவரிடம் அவர் புரிந்து கொள்ளக் கூடிய ஏதாவது ஒரு
மொழியில் பேசினால் அது அவருடைய மூளையை சென்றடைகிறது.அதுவே அவர் தாய் மொழியில் பேசினால் அது அவருடைய இதயத்தைச் சென்றடைகிறது – நெல்சன் மண்டேலா ஆ. மொழி என்பது கலாச்சாரத்தின் வழிகாட்டி, அதுவே அம்மொழி பேசும் மக்கள் எங்கிருந்து வந்தார்கள், எங்கே செல்கிறார்கள் என்பதை உணர்த்தும் – ரீடா மேக் ப்ரெளன் |
5 |
||||||||||||||||||
பகுதி-5 3X8=24
|
எல்லா
வினாக்களுக்கும் விடையளிக்க: |
|||
|
43 |
அ. தமிழர்களின்
விருந்தோம்பல் முன்னுரை: விருந்தோம்பலை இல்லற வாழ்வின் முக்கிய அங்கமாகவே கொண்டு வாழ்ந்தனர்
சங்ககாலத் தமிழர்கள்.முன்பின் அறியாத முதியவர்களே விருந்தினர் என்று
தொல்காப்பியர் கூறியதை தங்கள் வாழ்வில் பின்பற்றி வாழ்ந்தனர். சங்க கால
தமிழர்களின் விரும்பபோல் பண்பிற்குச் சில சான்றுகளை இங்கே காண்போம். தனித்து உண்ணாமை: தனித்து உண்ணாமை என்பது தமிழன் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை.
அமிழ்தமே கிடைத்தாலும் பிறருக்குக் கொடுக்கும் நல்லோரால் தான் உலகம்
நிலைத்திருக்கிறது என்று தமிழர்கள் எண்ணினர். விருந்தோம்பலுக்கு நேரம்,காலம் இல்லை: விருந்தோம்பல் என்பது தமிழரின் சிறந்த பண்புகள் ஒன்றாகக் கருதப்படுகிறது.நடு
இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு
தமிழருக்கு உண்டு. இதனை, ”அல்லில் ஆயினும் விருந்து வரில் உவக்கும்” என்று நற்றிணை குறிப்பிடுகிறது. வறுமையிலும் விருந்தோம்பல்: ü தமிழர் வறுமையிலும்
ஏதேனும் ஒரு வழியில் விருந்தளித்தனர். ü விதை நெல்லைக் குற்றியெடுத்து
விருந்தளித்தனர். ü வாளைப் பணையம் வைத்து
விருந்தளித்தனர். ü கருங்கோட்டுச் சீறியாழைப்
பணையம் வைத்து விருந்தளித்தனர். நிலத்திற்கேற்ற
விருந்து: நெய்தல்
நிலத்தவர் பாணர்களை வரவேற்று குடல் மீன் கறியும் உணவு கொடுத்தனர் என்கிறது
சிறுபாணாற்றுப்படை. விருந்தை
எதிர்கொள்ளும் தன்மை: வீட்டில்
பலரும் நுழையும் அளவிற்கு உள்ள பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன்னர் உணவு
உண்ண வேண்டியவர்கள் யாரேனும் உள்ளீர்களா என்று கேட்கும் வழக்கம் இருந்ததை, “பலர் புகுவாயில் அடைப்பக் கடவுநர் உளீரோ?” என்ற குறுந்தொகைப் பாடல் புலப்படுத்துகிறது. முடிவுரை: பண்டைத்
தமிழர் இல்லங்களிலும் உள்ளங்களிலும் விருந்தோம்பல் பண்பாடு செடித்திருந்தது
காலம் தோறும் தமிழர்கள் அடையாளமாக விளங்கும் உயர் பண்பான விருந்தோம்பலை போற்றி
பெருமிதம் கொள்வோம். ஆ. முன்னுரை “இன்று ஏடு கற்போரே நாளை நாடு காப்போர் ஆதல், இளமை அறிவோடு இயைபின் நடப்பதெல்லாம் நாட்டிற்கு நன்றேயாம்” என்ற பாவேந்தரின்
வாய்மொழிக்கேற்ப,எதிர்காலத்தில் நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் உரிய நற்பண்புகளை மாணவர்கள்
இளமை முதலே பெற வேண்டும். இத்தகைய நற்பண்புகளைப் பெற்று மாணவர்கள் சிறந்துவிளங்க நாட்டுவிழாக்கள் துணைபுரிகின்றன.
அதைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். நாட்டு விழாக்கள்: நமது நாட்டை எண்ணி பெருமை கொள்ள எண்ணற்ற
நாட்டு விழாக்கள் இருந்தாலும், விடுதலை நாள் விழாவும்,
குடியரசு நாள் விழாவும் அவை அனைத்திலும் சிறந்தவையாகும். நமது நாட்டு மக்களை அடிமைப்படுத்தி
ஆட்சிசெய்து வந்த ஆங்கிலேயர்கள் நமது நாட்டை விட்டுச்சென்ற நாள் விடுதலைநாள்
விழாவாக ஆகஸ்ட் 15ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
விடுதலைப் போராட்ட வரலாறு: பதினைந்தாம்
நூற்றாண்டு காலகட்டத்தில் நமது நாட்டில் எண்ணற்ற சிற்றரசுகள் இருந்தன. அக்காலகட்டத்தில் நம்மிடையே இருந்த ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி,வணிகம் செய்ய வந்த ஐரோப்பியர்கள்,குறிப்பாக
ஆங்கிலேயர்கள் பெரும்பான்மையான சிற்றரசுகளைக் கைப்பற்றி நாட்டை
ஆளத்தொடங்கினர். இது பல
இந்தியத் தலைவர்களை கவலைகொள்ளச் செய்தது.எனவே மக்களிடையே விடுதலை வேட்கையை ஏற்படுத்தி வெள்ளையருக்கு எதிராக
போராடத் தூண்டினர். இவர்களது கடுமையான போராட்டத்தாலும், தியாகத்தாலும்
இந்தியா 1947 ஆகஸ்ட் 15 இல் விடுதலை
பெற்றது. நாட்டு முன்னேற்றத்தில் மாணவர் பங்கு: இன்றைய மாணவர்களே நாளைய தலைவர்கள். இவர்கள் சமுதாய உணர்வுடன்
வளர்ந்தால்தான் நாடும் வீடும் வளம் பெறும். துன்பத்தில்
மற்றவர்க்கு உதவுதல், வறுமை, கல்வியின்மை
அறியாமை, சாதி மத வேறுபாடுகள், தீண்டாமை
மூடப்பழக்கங்கள்,ஊழல் ஆகியவற்றிற்கு
எதிராகக் குரல் கொடுத்தல் ஆகிய பண்புகளை மாணவர்கள்
பெற்றிருத்தல் மிகவும் சிறப்பு. மாணவப் பருவமும், நாட்டுப் பற்றும்: மாணவர்கள் மக்களுக்கு முன்னோடியாகத் திகழ வேண்டும். அவர்கள் தங்களை சாரண சாரணியர் படை நாட்டு நலப்பணித் திட்டம் தேசிய
பசுமைப்படை எனப் பல்வேறு வகையில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். மரம் நடுதல், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு,
சாலை விதிமுறைகள் பற்றிய அறிவுறுத்தல்
மற்றும் தேசிய விழாக்களை கொண்டாட உதவுதல் ஆகியவற்றில் மாணவர்கள் கட்டாயம் ஈடுபட
வேண்டும்.
என்ற மகாகவி பாரதியாரின்
வாக்கிற்கிணங்க, நாட்டின் வளர்ச்சிக்கு மாணவர்களின் பங்கு
மிக முக்கியமானது. மாணவர் நாட்டு முன்னேற்றத்தில் இணைந்து
செயல்பட்டால், நாடும் முன்னேறும் வீடு முன்னேறும், புதிய இந்தியா உருவாகும். |
8 |
|
|
44 அ |
அ) பிரும்மம் முன்னுரை: இயற்கையோடு இணைந்து வாழ்வதும் இயற்கையைப்
பயனுள்ளதாக மாற்றுவதும் அழகியல் ஆகும். குடும்ப உறுப்பினர்கள் இணைந்து நட்டு
வைத்த மரமொன்று அவர்களின் வாழ்வியலில் எப்படி பின்னிப் பிணைந்துவிட்டது என்பதைப்
பிரபஞ்சனின் 'பிரும்மம்' என்ற சிறுகதை அழகாகக்
காட்சிப்படுத்துகிறது. புதிதாகக்
கட்டிய வீடு: இச்சிறுகதையில் வரும் குடும்பத்தினர் புதிதாக
வீடு ஒன்றைக் கட்டினர். அந்த வீட்டிற்கு முன்னால் வெறுமனே கிடந்த சிறிய இடத்தைப்
பயனுள்ள வகையில் பயன்படுத்த குடும்பஉறுப்பினர்கள் அனைவரும் முடிவு செய்தனர்.
அதற்காக ஒவ்வொருவரும்,
என்ன செய்யலாம்? என்று தங்களது எண்ணங்களைத் தெரிவித்தனர். குடும்ப
உறுப்பினர்களின் விருப்பம்: v குடும்பத்தின் பெரியவரான
பாட்டி பசுவின் மீது தீராத அன்பு கொண்டவர் . பசுவினால் குடும்பத்திற்கு ஏற்படும்
நன்மைகளைக் கூறி அவ்விடத்தில் பசு வாங்கி வளர்க்கலாம் என்றார். v குடும்பத்தின்
அம்மா பாட்டியின் கருத்தை ஏற்க மறுத்து, ”வெண்டை, கத்தரி, தக்காளி
போன்றவற்றை வளர்த்தால் கறிக்கு உதவும்” என்று கூறி தனது விருப்பத்தைத்
தெரிவித்தார். v அக்குடும்பத்தில்
இருந்த தங்கை சௌந்தரா பூக்களிடம் விருப்பம் கொண்டவளாக இருந்தாள். பல்வேறு வகையான
பூக்களை வளர்க்கலாம் என்றாள். அழகை ரசிக்கத் தெரிய வேண்டும் என்றாள். இது
சௌந்தராவிடம் இருந்த இயற்கையை ரசிக்கும் பண்பை உணர்த்துகிறது. அப்பாவின்
முடிவு: அனைவரும் தங்களது கருத்துக்களை தெரிவிக்க, குடும்பத்தின்
தலைவரான அப்பா ,காலியாக்க் கிடக்கும் அந்த இடத்தில்
முருங்கையை நட்டு வளர்க்கலாம் என்று
சொன்னார். ஏனெனில் முருங்கை வீட்டுக்கு எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாது. மேலும்
மிகுந்த மருத்துவ குணங்களை உடையது. என்று கூறி, இரண்டு
நாட்கள் கழித்து தனது நண்பர் வீட்டிலிருந்து முருங்கைக் கிளை ஒன்றைக் கொண்டு
வந்து அவர் நட்டார். முருங்கை
வீட்டின் அங்கமானது: v நாளுக்கு நாள் முருங்கையின்
வளர்ச்சியை கண்டு மிகவும் ரசித்தன குடும்பத்தினர் அது படிப்படியாக கிளை, இலை, காய்
போன்றவற்றைத் தந்த போது அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். v முருங்கைக்
காய்க்கும் கீரைக்கும் ஆசைப்பட்டு அண்டை வீட்டு உறவுகள் அடிக்கடி இவர்களது
வீட்டிற்கு வர தொடங்கினர். மேலும் காக்கை
குருவிகளுக்கு இந்த முருங்கை மரம் இல்லமாயிற்று. முருங்கை அவர்களின்
வீட்டின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. மீண்டெழுந்த
முருங்கை: ஒரு நாள் காற்று பலமாக வீசியதால் முருங்கை
அடியோடு விழுந்தது. இதனால் குடும்பத்தினர் சொல்ல முடியாத துயரத்தை அடைந்தனர்.
சில நாட்களுக்குப் பிறகு விழுந்து கிடந்த மரக்கிளையில் இருந்து முருங்கை
துளிர்விடத் தொடங்கியது. அது குடும்பத்தினருக்கு பெரு மகிழ்ச்சி அளித்தது. முடிவுரை: முருங்கை என்பது வெறும் மரமாக குடும்பத்தார்
இல்லை உணர்வில் கலந்த உயிராகவே அமைகிறது பல உயிர்கள் வாழும் வீடாகவும்
திகழ்ந்தது பிரம்மம் பெற உயிர்களை தன் உயிர் போல் நேசிக்கும் பண்பினை
விவரிக்கிறது என்றால் அது மிகையல்ல. ஆ)
சாதனைப்பெண்கள் முன்னுரை: எங்கள் ஊரில் பல்வேறு
வகையான தொழில்களில் கடின உழைப்புடன் ஈடுபட்டு வாழ்வை முன்னெடுத்துச் செல்கிற
பெண்கள் பலர் உள்ளனர். அவர்கள் மட்டும் இல்லாமல், குடும்பத்தையும் சமூகத்தையும்
முன்னேற்றுகிறார்கள். இங்கு அவர்களில் சிலரைப் பற்றி பார்க்கலாம். பூ விற்கும் சின்னம்மாள்: சின்னம்மாள் அம்மா, இருபது வருடங்களாக
விடியலிலிருந்து வீதிகளில் பூவிற்று வருகின்றார். சாயங்காலம் வரை பூக்கூடை
தலையில் வைத்துக்கொண்டு வீதியெல்லாம் நடந்து, வீடு
வீடாகச் சென்று பூவிற்று வருகிறார். இவரது கடின உழைப்பு, நேர்த்தியான பணியாற்றும் தன்மை, நம்மை
விழிக்க வைக்கும் ஒரு சிறப்பு உதாரணமாகத் திகழ்கிறது.
இரண்டு மகள்களை கல்வியாளர்களாக மாற்றியிருக்கிறார் என்ற பெருமை அவருக்கிருக்கிறது. சாலையோர உணவகம்
நடத்தும் காளியம்மாள்: காளியம்மாள் தனது கணவரை
இழந்த பின்னும் தளராமல், தனது
மூன்று பிள்ளைகளை வளர்க்கச் சாலையோரத்தில் சிறிய உணவகம் நடத்தத் தொடங்கினார்.
இப்போது அவர் உணவகம் பகல் முழுவதும் வியாபாரம் செய்யும் அளவுக்கு பரவலாகப் பெயர்
பெற்றுள்ளது. சைவ உணவுகளின் சுவையும் சுத்தமும் மக்களிடையே நல்ல மதிப்பை
பெற்றுள்ளது. அவரின் உழைப்பும் மன உறுதியும், தன்னம்பிக்கையும், ஊக்கமளிக்கக் கூடியவை. முடிவுரை: சின்னம்மாள் மற்றும் காளியம்மாள் போன்ற பெண்கள் தான் சமூகத்தின்
அடித்தளத்தை நிலை நிறுத்தும் தூண்கள். இவர்கள் போன்றவர்களை நாம் மட்டும் அல்ல, ஒவ்வொருவரும் போற்ற
வேண்டியது அவசியம். அவர்களின் வாழ்க்கைப் பயணம் மற்ற
பெண்களுக்கு வழிகாட்டியாக அமையும். |
8 |
|
|
45 |
அ அப்துல் கலாம் முன்னுரை: நான் 1931ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாள்
இராமேசுவரத்தில் ஜைனுல்லா மரைக்காயர்-ஆஷிமா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தேன்.என்
வாழ்க்கை வரலாற்றில் நடந்த நிகழ்வுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமை
அடைகிறேன். இளமைக்காலம்: என்னுடைய
பள்ளிப் படிப்பை இராமேசுவரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வி மூலம்
தொடங்கினேன்.அறிவியல் மற்றும் கணித பாடங்களில் சிறு வயது முதலே ஆர்வம்
கொண்டிருந்தேன். பத்திரிகை விற்பனை செய்து என்னுடைய உறவினருக்கு உதவி செய்து
அதன் மூலம் கிடைத்த வருமானத்தை என் படிப்புக்காகச் செலவு செய்தேன். பள்ளிப்
பருவத்தில் கல்விச் சுற்றுலா சென்றிருந்தபோது பறவைகள் எவ்வாறு பறக்கின்றன என்பதை
ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். இதுவே பின்னாளில் நான்
விமானத்தைவடிவமைக்கத் தூண்டுகோலாக இருந்தது. கல்லூரிப்படிப்பு: 1954 ம்
ஆண்டு இயற்பியல் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றேன்.1955 ம் ஆண்டு சென்னையில் உள்ள எம்.ஐ.டியில் விண்வெளி பொறியியல் படிப்பை
முடித்தேன். விமான வடிவமைப்பு: எம்.ஐ.டியில்
படித்து முடித்த பின் உள்நாட்டு தொழில்நுட்ப அறிஞர்களின் உதவியுடன் உள்நாட்டில்
கிடைத்த பொருள்களைக் கொண்டு நந்தி என்ற விமானத்தை வடிவமைத்து அதை இயக்கியும்
காட்டினேன். பணி: 1983 ம் ஆண்டு இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின்
தலைவராகவும் பாதுகாப்பு அமைச்சக அறிவியல் ஆலோசகராகவும் பொறுப்பேற்றேன். சாதனைகள்: ü இந்தியாவில் முதல்முறையாக 1974ஆம் ஆண்டு "சிரிக்கும்
புத்தர்" என்ற திட்டத்தில் அணுவெடிப்புச் சோதனை நிகழ்ந்தது.அத்திட்டத்தில்
பங்கேற்ற 60 விண்வெளி பொறியியல் அறிஞர்களில் நானும் ஒருவனாக இருந்தது
எனக்குப் பெருமை அளிக்கிறது. ü 1980ஆம் ஆண்டு இந்தியாவின் முதல்
செயற்கைக்கோள் எஸ்எல்வி-3 என்ற ஏவுகணையைப் பயன்படுத்தி ரோகிணி-1 என்ற துணைக்கோளை வெற்றிகரமாக
விண்ணில் செலுத்தினேன். ü 2002 முதல் 2007 வரை
இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும் இருந்து உள்ளேன். முடிவுரை: நான் அறிவியல்மீது பற்று
கொண்டிருந்த அளவுக்கு, தாய்மொழி மீதும் பற்று
கொண்டிருந்தேன். எனக்கு மிகவும் பிடித்தநூல் திருக்குறள் ஆகும்.மாணவர்களே
நாட்டின் எதிர்காலம் என்பதில் எனக்குப் பெரிய நம்பிக்கை உண்டு.இளைஞர்களுக்கு
நான் கூற விரும்புவது, "கனவு காண்பதை சிந்தனை வடிவம்
ஆக்குங்கள்,பின் செயலாற்ற முனையுங்கள்". (அல்லது) ஆ) நூல்
தலைப்பு: கனவெல்லாம் கலாம் அன்று இந்தியாவை
அறியாதவர்கள் கூட காந்தியடிகளை அறிந்திருந்தார்கள், காந்திதேசத்திலிருந்து
வருகிறீர்களா? என்பார்கள். இன்று இந்தியாவை அறியாதவர்களும்
மாமனிதர் அப்துல்கலாம் அவர்களை அறிந்திருக்கிறார்கள்.இந்தியாவின் அடையாளமாக
தமிழர்கள் பெருமையாக அறியப்பட்ட அப்துல் கலாம் அவர்களின் தகவல் களஞ்சியம் தான்
இந்த" கனவெல்லாம் கலாம்” என்ற நூலாகும். இதுவே
இந்நூலின் தலைப்புமாகும். நூலின்
மையப் பொருள்: இந்நூலாசிரியர் மிகவும்
உன்னிப்பாக உற்றுநோக்கி மாமனிதர் அப்துல் கலாம் அவர்களைப் பற்றி வந்த தகவல்கள்,
கட்டுரைகள், கவிதைகள் அனைத்தையும்
தொகுத்துள்ளார்.அப்துல் கலாம் பற்றி அறிய வேண்டிய அனைவரும் படிக்க வேண்டிய
நூல்" கனவெல்லாம் கலாம்” வெளிப்படும்
கருத்து: மாமனிதர் அப்துல்கலாம்
அவர்களின் வெற்றிக்குக் காரணங்கள் எளிமை, இனிமை, நேர்மை ஆகியவையாகும். அவர் உலகப் பொதுமறையை ஆழ்ந்து படித்ததோடு
நின்றுவிடாமல் அதன்படி வாழ்ந்ததால் உலகப்புகழ் பெற்றார் என்பதே உண்மை. நூல்
கட்டமைப்பு: நூலாசிரியர் இந்நூலில்,1.
காணிக்கை கட்டுரைகள்,2. இரங்கல் செய்திகள்,
3.கவிதை மாலை,4. கலாம் அலைவரிசை,5. கலாம் கருவூலம் ஆகிய ஐந்து தலைப்புகளில் நூலை வடிவமைத்துள்ளார். முன்னணி
நாளிதழ்கள், வார இதழ்கள், மாத
இதழ்கள் மட்டுமின்றி சிற்றிதழ்கள் வரை களம் பற்றிய தகவல்களை தேடித் தேடித் தொகுத்துள்ளார்.
முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளது உண்மையே. சிறப்புக்
கூறு: பொதுவாக தொகுப்பு நூலை
உருவாக்க, தகவல்களைத் தேடித் தேடி தொகுப்பது எளிதான
செயலன்று. ஆனால் அவற்றையெல்லாம் வகுத்து முறைப்படுத்துவது அதைவிட அரிய
செயலாகும். தகவல் தொகுப்பு இந்நூலின் சிறப்புக் கூறாகக் கருதப்படுகிறது. நூலாசிரியர்: தமிழ்த்தேனீ முனைவர். இரா. மோகன் |
8 |
|
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி