10.ஆம் வகுப்பு - தமிழ்
நெகிழியின்
தீமை குறித்த கட்டுரை
நெகிழிப்பை
ஒழிப்போம் – இயற்கையை காப்போம்
முன்னுரை:
”நெகிழி சுற்றுச்சூழலின் எதிரி”
இன்றைய நவீன வாழ்க்கையில் நெகிழி
(Plastic) மனித வாழ்வின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. எளிதில்
கிடைக்கும் தன்மை மற்றும் குறைந்த செலவு காரணமாக நெகிழிப் பொருட்கள் அதிகமாக
பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த நெகிழி பயன்பாடு சுற்றுச்சூழலுக்கு பெரும்
அச்சுறுத்தலாக மாறி வருகிறது.
நெகிழியின் தீமைகள்:
”நெகிழி மனித குலத்திற்குக்
கேடு”
நெகிழி எளிதில் அழியாத தன்மை
கொண்டது. இதனால் நிலம், நீர், காற்று
ஆகியவை மாசடைகின்றன. நீர்நிலைகளில் வீசப்படும் நெகிழிப் பொருட்கள் நீர்வாழ்
உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மண்ணில் கலக்கும் நெகிழி, நில வளத்தை குறைக்கிறது. மேலும் நெகிழியை எரிப்பதால் விஷ வாயுக்கள்
வெளியேறி மனித உடல்நலத்தையும் பாதிக்கின்றன.
தடுக்கும் முறைகள்:
நெகிழிப் பயன்பாட்டை
குறைப்பதே சிறந்த தீர்வாகும். துணிப்பைகள், காகிதப் பைகள்,
இயற்கைச் சிதைவடையும் பொருட்களை பயன்படுத்த வேண்டும். ஒருமுறை
பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். நெகிழி கழிவுகளை சரியாக
சேகரித்து மறுசுழற்சி செய்யும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நாம் முன்னெடுக்க
வேண்டியவை:
ஒவ்வொரு குடிமகனும் நெகிழி
ஒழிப்பில் பங்கு பெற வேண்டும். பள்ளி, கல்லூரி மற்றும் சமூக
அமைப்புகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அரசு விதிகளை
கடைபிடித்து, நெகிழி பயன்பாட்டைத் தடுக்க உறுதுணையாக இருக்க
வேண்டும். வீட்டிலிருந்து தொடங்கி நெகிழி இல்லா வாழ்க்கை முறையை பின்பற்ற
வேண்டும்.
முடிவுரை:
”ஒழிப்போம் ! ஒழிப்போம்! நெகிழியை
ஒழிப்போம்!
காப்போம் ! காப்போம்! தலைமுறை
காப்போம்!
நெகிழியை முற்றிலும்
ஒழிப்பது கடினமாக இருந்தாலும், அதன் பயன்பாட்டை
கட்டுப்படுத்துவது நம்மால் முடியும். இன்று நாம் எடுக்கும் சிறிய முயற்சிகள் நாளைய
தலைமுறைக்கு தூய்மையான சுற்றுச்சூழலை வழங்கும். ஆகவே, “நெகிழிப்பை
தவிர்ப்போம் – இயற்கையை பாதுகாப்போம்” என்ற
உறுதியை அனைவரும் ஏற்றுக் கொள்வோம்.
பதிவிறக்கம் செய்ய 10 வினாடிகள் காத்திருக்கவும்
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி