10 TH STD TAMIL BOOK INSIDE 3 MARK QUESTION & ANSWER


10.ஆம் வகுப்பு தமிழ்

மூன்று மதிப்பெண் கூடுதல் வினாவிடைகள்

1. தானியங்களை குறிக்கும் சொற்கள் ஐந்தினை எழுதுக

ü  கூலம் - நெல் புல் கம்பு (முதலிய தானியங்கள்)

ü  பயிறு - அவரை , உளுந்து

ü  கடலை - வேர்க்கடலை , கொண்டைக்கடலை

ü  விதை கத்தரி, மிளகாய்,

ü  காழ் -  புளி, காஞ்சிரை (நச்சுமரம்)

ü  முத்து வேம்பு, ஆமணக்கு

ü  கொட்டை-  மா, பனை

ü  தேங்காய் - தென்னை

ü  முதிரை அவரை, துவரை

2. கண்ணதாசன் - குறிப்பு வரைக

ü  முத்தையா என்னும் இயற்பெயரைக் கொண்ட கண்ணதாசன் இன்றைய சிவகங்கை மாவட்டத்தில் சிற்றுரான சிறுகூடல்பட்டியில் பிறந்தவர்

ü  இவரது பெற்றோர் சாத்தப்பன் விசாலாட்சி

ü  1949 ஆம் ஆண்டு கலங்காதிரு மமே என்ற பாடல் எழுதி, இவர் திரைப்படப் பாடலாசிரியர் ஆனார்

ü  இவர் சிறந்த கவியரங்க கவிஞராகவும் பேச்சாளராகவும் திகழ்ந்தவர்

ü  தனது திரைப்படப் பாடல்கள் வழியாக எளிய முறையில் மெய்யியலை மக்களிடையே கொண்டு சேர்த்தவர்

ü  சேரமான் காதலி எனும் புதினத்திற்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்

3. காற்று மனிதனால் எவ்வாறெல்லாம் மாசடைகிறது?

·        குப்பைகள் நெகிழிப்பைகள் மெது உருளைகள் போன்றவற்றை எரித்தல்

·        குளிர்சாதனங்களை மிகுதியாகப் பயன்படுத்துதல்

·        மிகுதியாக பட்டாசுகளை வெடித்தல்

·        புகை வடிகட்டி இல்லாமல் தொழிற்சாலைகளை இயக்குதல்  

·        தனி மனிதனின் மிகுதியான ஊர்தி பயன்பாடு

·        வானூர்திகள் வெளியிடும் புகை போன்றவற்றால் காற்று மாசடைகிறது

13. தமிழர் பண்பாட்டில் வாழை இலை தனித்த இடம் பெற்று இருந்தது ஏன்?

·        தமிழர் பண்பாட்டில் வாழை இலை தனியிடம் பெற்றிருந்தது

·        தலை வாழை இலையில் விருந்தினருக்கு உணவு அளிப்பது நமது மரபாக கருதப்படுகிறது

·        நம் மக்கள் வாழை இலையின் மருத்துவப் பயன்களை அன்றே அறிந்திருந்தனர்.

·        உண்பவரின் இடப்பக்கம் வாழை இலையின் குறுகலான பகுதியும், வலப்பக்கம் இலையின் விரிந்த பகுதியும் வரவேண்டும்

·        ஏனென்றால் வலது கையால் உணவு உண்ணும் பழக்கமுடையவர்கள்

·        நாம் இலையில் இடது ஓரத்தில் உப்பு ஊறுகாய் இனிப்பு முதலான அளவில் சிறிய உணவு வகைகளையும் வலது ஓரத்தில் காய்கறி கீரை கூட்டு முதலான அளவில் பெரிய உணவு வகைகளையும் நடுவில் சோறும் வைத்து எடுத்துண்ட வசதியாக பரிமாறுவார்கள்.

4. கூட்டு நிலை பெயரெச்சங்கள் என்றால் என்ன? சான்றுடன் விளக்குக.

·        ஒன்றிற்கு மேற்பட்ட எச்சங்கள் சேர்ந்து பெயரைக் கொண்டு முடியும் கூட்டு நிலை பெயரெச்சங்களை இக்களவில் இக்காலத்தில் பெரும்பளவில் பயன்படுத்துகிறோம்.

·        வேண்டிய, கூடிய, தக்க, வல்ல முதலான பெயரெச்சங்களை செய எனும் வாய்ப்பாட்டு வினையெச்சத்துடன் சேர்ப்பதன் மூலம் கூட்டுநிலைப் பெயரெச்சங்கள் உருவாகின்றன.

·        எடுத்துக்காட்டு: கேட்க வேண்டிய பாடல் சொல்லத் தக்க செய்

5. அடுக்குத் தொடரைச் சான்றுடன் விளக்குக

·        ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கி தொடர்வது அடுக்கு தொடராகும்

·        எடுத்துக்காட்டு: வருக வருக

·        ஒரே சொல் உவகையின் காரணமாக மீண்டும் மீண்டும் அடுக்கி வந்துள்ளது

6. வாழை இலை விருந்து விழா -விளக்குக

·        அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச்சங்கம் வாழையிலை விருந்து விழாவை ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது

·        தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளை கொண்டு வாழை இலையில் விருந்து வைக்கின்றனர்

·        முருங்கைக்காய் சாம்பார், மோர்க்குழம்பு, வேப்பம்பூ ரசம், வெண்டைக்காய் கூட்டு, தினைப் பாயாசம், அப்பளம் எனச் சுவையாகத் தமிழர்ள் விருந்து கொடுக்கின்றனர்

·        அங்கு வாழும் தமிழர்கள் பலரும் இந்த விருந்தில் பங்கேற்றுச் சிறப்பிக்கின்றனர்

7. நெடுநாளாகப் பார்க்க எண்ணியிருந்த உறவினர் ஒருவர் எதிர்பாராத வகையில் உங்கள் வீட்டிற்கு வருகிறார். நீங்கள் அவரை எதிர்கொண்டு விருந்து அளித்த நிகழ்வினை விரிவாக ஒரு பத்தியளவில் எழுதிப் படித்துக் காட்டுக.

v  உறவினரை முகமலர்ச்சியுடன் நோக்கினேன்.

v   வீட்டிற்குள் வருக! வருக! என்று வரவேற்றேன்.

v  உணவருந்திச் செல்லுங்கள் எனக் கூறினேன்  

v  தலைவாழை இலையில் உணவிட்டேன்.

v  அவர் செல்லும் போது வாயில் வரை சென்று வழியனுப்பினேன்.

8. விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கங்களாக்க் காசிக்காண்டம் கூறுவனவற்றைப் பட்டியலிடுக

Ø  விருந்தினராக ஒருவர் வந்தால், அவரை வியந்து உரைத்தல்

Ø  நல்ல சொற்களை இனிமையாகப் பேசுதல்

Ø  முகமலர்ச்சியுடன் அவரை நோக்குதல்

Ø  'வீட்டிற்குள் வருக' என்று வரவேற்றல்

Ø  அவர் எதிரில் நிற்றல்

Ø  அவர்முன் மனம் மகிழும்படி பேசுதல்

Ø  அவர் அருகிலேயே அமர்ந்துகொள்ளுதல்

Ø  அவர் விடைபெற்றுச் செல்லும்போது வாயில்வரை பின்தொடர்ந்து செல்லல்

Ø  அவரிடம் புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்புதல்

9. பிள்ளைத்தமிழ் -குறிப்பு வரைக

Ø  96 வகை சிற்றிலக்கியங்களில் ஒன்று பிள்ளைத்தமிழ்

Ø  இதில் இறைவனையோ தலைவரையோ அரசனையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு அவரை குழந்தையாக கருதி பாடுவர்

Ø  10 பருவங்கள் அமைத்து பருவத்திற்கு பத்து பாடல் என 100 பாடல்களால் இது பாடப்பெறும்

Ø  இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ் பெண்பாற் பிள்ளைத் தமிழ் என இரு வகைப்படும்

10. இரு பெயரொட்டுப் பண்புத்தொகையைச் சான்றுடன் விளக்குக

சிறப்புப் பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் இன்று இடையில் ஆகிய என்னும் பண்புருபு தொக்கி வருவது இருபெயரூட்டு பண்புத்தொகையாகும்.

 எடுத்துக்காட்டு:  மார்கழி திங்கள், சாரைப்பாம்பு

திங்கள், பாம்பு ஆகிய பொதுப் பெயர்களுக்கு முன் மார்கழி, சாரை என்னும் சிறப்பு பெயர்கள் வந்து மார்கழி ஆகிய திங்கள் சாரையாகிய பாம்பு என்றும் இருவேறு எட்டு இரு பெயரொட்டாக வந்துள்ளன.

11. பெரியாரைத் துணைக்கோடல் பற்றி வள்ளுவர் கூறும் கருத்துக்களை எழுதுக

Ø  கிடைத்தற்குரிய பேறுகளில் எல்லாம் பெரும் பேரு பெரியோரை போற்றி துணையாக்கிக் கொள்ளுதல் ஆகும்

Ø  குற்றம் கண்ட பொழுது இடித்துக் கூறும் பெரியாரைத் துணையாக்க் கொள்ளாத பாதுகாப்பற்ற மன்னன் பகைவர் இன்றியும் தானே கெடுவான்.

Ø  தான் ஒருவனாக நின்று பலரோடு பகை மேற்கொள்வதைக் காட்டிலும் பல மடங்கு தீமையைத் தருவது நற்பண்புடையோரின் நட்பைக் கைவிடுதல் ஆகும்

12. திருக்குறள் -நூல் குறிப்பு வரைக

§  திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நூலாகும்

§  இந்நூல் அறம் பொருள் இன்பம் எனும் முப்பால் பகுப்புக் கொண்டது

§  திருக்குறளில் அறத்துப்பாலில் 38 அதிகாரங்களும் பொருட்பாலில் 70 அதிகாரங்களும் இன்பத்துப்பாலில் 25 அதிகாரங்களுமாக 133 அதிகாரங்கள் உள்ளன

§  அதிகாரத்திற்கு 10 குரல்கள் வீதம் மொத்தம் 1330 குறட்பாக்கள் உள்ளன

13. வழு எத்தனை வகைப்படும்? அவை யாவை?

வழு 7 வகைப்படும் அவை:

1.     திணைவழு

2.    பால் வழு

3.    காலவழு

4.    வினாவழு

5.    விடை வழு

6.    மரபு வழு

14. வழாநிலை எத்தனை வகைப்படும்? அவை யாவை?

வழாநிலை 7 வகைப்படும் அவை:

1.     திணை வழாநிலை

2.    பால்வழா நிலை

3.    இட வழாநிலை

4.    காலவழா நிலை

5.    வினா வழாநிலை

6.    விடை வழாநிலை

7.    மரபுவழா நிலை

15. சிலப்பதிகாரம்- நூல் குறிப்பு வரைக

v  ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று சிலப்பதிகாரம்

v  இது முத்தமிழ் காப்பியம் குடிமக்கள் காப்பியம் என்றும் சிறப்பிக்கப்படுகிறது

v  மூவேந்தர் பற்றிய செய்திகளை கூறுகிறது

v  இது புகார் கண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று மூன்று காண்டங்களையும் 30 காதைகளையும் உடையது

v  கோவலன் கண்ணகி மாதவி வாழ்க்கையை பாடுவது.

v   மணிமேகலை காப்பியத்துடன் இதன் கதை தொடர்பு கொண்டிருப்பதால் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன

16. தேம்பாவணி- நூற்குறிப்பு தருக

§  தேம்பா + அணி எனப் பிரித்து வாடாத மாலை என்றும்,

§  தேன் + பா + அணி எனப் பிரித்து தேன்போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு என்றும் இந்நூலுக்குப் பொருள் கொள்ளப்படுகின்றது.

§  கிறித்துவின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பர் என்னும் யோசேப்பினைப் (வளனை) பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட நூல் இது.

§  இப்பெருங்காப்பியம் 3 காண்டங்களையும் 36 படலங்களையும் உள்ளடக்கி, 3615 பாடல்களைக் கொண்டுள்ளது.

பதிவிறக்கம் செய்ய 10 வினாடிகள் காத்திருக்கவும்
 

You have to wait 10 seconds.

Generating Download Link...

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை