10 TH STD TAMIL BOOK INSIDE 2 MARK QUESTION & ANSWER

 

10.ஆம் வகுப்பு தமிழ்

இரண்டு மதிப்பெண் கூடுதல் வினாவிடைகள்

1. கிளைப்பெயர் வகைகளில் ஏதேனும் நான்கின் பெயர்களை எழுதுக

ü  அடி மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை கவை எனப்படுகிறது.

ü  கவையில் இருந்து பிரிவது கொம்பு (அ) கொப்பு,

ü  கொம்பில் இருந்து பிரிவது சிறு கிளை,

ü  கிளையில் இருந்து பிரிவது சினை,

ü  சினையில் இருந்து பிரிவது போத்து,

ü  போத்தில் இருந்து பிரிவது குச்சி,

ü  குச்சியில் இருந்து பிரிவது இணுக்கு

2. பாவலரேறு இயற்றிய நூல்களைப் பட்டியலிடுக

ü  உலகியல் நூறு

ü  பாவியக்கொத்து

ü  நூறாசிரியம்

ü  கனிச்சாறு

ü  எண்சுவை எண்பது

ü  மகபுகுவஞ்சி

ü  பள்ளிப் பறவைகள்

ü  திருக்குறள் மெய்ப்பொருளுரை

3. தமிழ் தன் மனதில் பற்று உணர்வை ஏற்படுத்தும் காரணங்களாக பாவலரேறு கூறுபவை யாவை?

ü  நிலைத்த தன்மை

ü  வேற்று மொழியார் புகழுரை.

4. உலகத்தமிழ் மாநாடு குறித்து கா.அப்பாதுரையார் கூறுவன யாவை?

     உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியாவே. மாநாட்டுக்குரிய அம்முதல் மொழியும் தமிழே.

5. தமிழ்நாட்டில் மட்டுமே விளையும் சிறுதானியங்களைப் பட்டியலிடுக

ü  வரகு

ü  காடைக்கண்னி

ü  குதிரைவாலி

6. தொழிற்பெயர், வினையாலணையும் பெயரை வேறுபடுத்துக

 

தொழிற்பெயர்

வினையாலணையும் பெயர்

1

வினை, பெயர்த்தன்மையாகி வினையையே உணர்த்தி நிற்கும்

தொழிலைச் செய்யும் கருத்தாவைக்குறிக்கும்

2

காலம் காட்டாது

காலம் காட்டும்

3

படர்க்கைக்கே உரியது

மூவிடத்திற்கும் உரியது

4

-டு: பாடுதல், படித்தல்

-டு: பாடியவர், படித்தவர்

7. ”வண்டொடு புக்க மணவாய்த்தென்றல்” – விளக்குக

          தென்றல் பலவித மலர்களின் நறுமணத்தை அள்ளி வரும்போது கூடவே வண்டுகலையும் அழைத்து வரும்

8. தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் பாடப்படும் தமிழ்பாடல்கள் யாவை?

          திருப்பாவை, திருவெம்பாவை

9. பரிபாடல்- குறிப்பு வரைக

ü  சங்க இலக்கியமான பரிபாடல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும்.

ü  இந்நூல் "ஓங்கு பரிபாடல்" எனும் புகழுடையது.

ü  இதில் உள்ள பாடல்கள் பண்ணோடு பாடப்பட்டவை.

ü  உரையாசிரியர்கள் இதில் எழுபது பாடல்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர்.

ü  இன்று 24 பாடல்களே கிடைக்கின்றன.

10. நெய்தல் நிலத்தவர் அளித்த விருந்து குறித்து சிறுபாணாற்றுப்படை கூறுவது யாது?

நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கறியும் உணவும் கொடுத்தனர் என்கிறது சிறுபாணாற்றுப்படை

11. "அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்" என்ற தொடரை விளக்குக.

நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு தமிழருக்கு உண்டு என்பதே இதன் விளக்கம்

12. "பலர் புகுவாயில் அடைத்த கடவுளர் உளீரோ?" என்ற வரி மூலம் குறுந்தொகை கூறும் விருந்தோம்பல் யாது?

இல்லத்தில் பலரும் நுழையும் அளவிற்கு உள்ள பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன்னர், உணவை உண்ண வேண்டியவர்கள் யாரேனும் உள்ளீர்களா?” என்று கேட்கும் வழக்கம் இருந்ததை இது உணர்த்துகிறது

13. காசிக் காண்டம்- குறிப்பு வரைக

·        காசி நகரத்தின் பெருமையை கூறுகிற நூல் காசிக் காண்டம்

·        இந்நூல் துறவு, இல்லறம், பெண்களுக்குரிய பண்புகள், வாழ்வியல் நெறிகள், மறு வாழ்வில் அடையும் நன்மைகள் ஆகியவற்றைப் பாடுவதாக அமைந்துள்ளது.

·        இதனை இயற்றியவர் அதிவீரராம பாண்டியர்

14. செங்கீரைப் பருவம் என்பது யாது?

·        செங்கீரைச் செடி காற்றில் ஆடுவது போன்று குழந்தையின் தலை 5 -6 மாதங்களில் மென்மையாக அசையும்.

·        இப்பருவத்தை செங்கீரைப் பருவம் என்பர். இப்பருவத்தில் குழந்தை தன் கைகளை ஊன்றி, ஒரு காலினை மடக்கி ,மற்றொரு காலை நீட்டி தலைநிமிர்ந்தும் முகமசைத்தும் ஆடும்.

15. தொகாநிலைத்தொடர் எத்தனை வகைப்படும்?அவை யாவை?

தொகா நிலைத்தொடர் 9 வகைப்படும். அவை:

1.     எழுவாய்த்தொடர்

2.    விளித்தொடர்

3.    வினைமுற்றுத்தொடர்

4.    பெயரெச்சத்தொடர்

5.    வினையெச்சத்தொடர்

6.    வேற்றுமைத்தொடர்

7.    இடைச்சொல் தொடர்

8.    உரிச்சொல் தொடர்

9.    அடுக்குத்தொடர்

16. தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும். அவை

1.    வேற்றுமைத்தொகை

2.    வினைத்தொகை

3.    பண்புத்தொகை

4.    உவமைத்தொகை

5.    உம்மைத்தொகை

6.    அன்மொழித்தொகை.

17. மொழிபெயர்ப்பு குறித்து மணவை முஸ்தபா கூறுவது யாது?

"ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு" என்கிறார் மனதை முஸ்தபா.

18. மொழிபெயர்ப்பு குறித்து மு.கு ஜகந்தாதர் கூறுவது யாது?

·        ஒரு மொழி வளம் பெறவும் உலகத்துடன் உறவு கொள்ளவும் மொழிபெயர்ப்பு இன்றியமையாததாகும்

·        உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும் என்கிறார் மு.கு ஜகந்தாதர்

19. வடமொழிக் கதைகளைத் தழுவி படைக்கப்பட்ட தமிழ் இலக்கியங்கள் சிலவற்றைக் கூறுக.

·        பெருங்கதை

·        சீவக சிந்தாமணி

·        கம்பராமாயணம்

·        வில்லிபாரதம்

20. முரசு கட்டிலில் கண்ணயர்ந்து உறங்கிய புலவர் யார்? அவருக்கு கவரி வீசிய அரசர் யார்?

மோசிகீரனார், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை

21. ”த்தும் குயிலோசை சற்றே வந்து காதல் பட வேணும் இத்தொடரில் வந்த மரபு வழுவமைதியை விளக்குக.

குயில் கூவும் என்பதே மரபு குயில் கத்தும் என்பது மரபு வழுவாகும் .இங்கு கவிதையில் இடம்பெற்றிருப்பதால் இது மரபு வழுவமைதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

22. மு கருணாநிதி அவர்களுக்கு கலைஞர் எனும் சிறப்பு பெயர் வழங்கப்பட்ட நிகழ்வை விளக்குக

·        கருணாநிதி தாம் எழுதிய தூக்கு மேடையினும் நாடகத்தில் நடிகர் எம் . ஆர் ராதாவின் வேண்டுகோளுக்காக மாணவர் தலைவராக நடித்தார்

·        நாடகத்திற்கான பாராட்டு விழாவில்தான் அவருக்குக் ”கலைஞர் என்னும் சிறப்பு பெயர் வழங்கப்பட்டது

23. ஐவகை திணைக்குரிய உரிப்பொருளை எழுதுக.

1.     குறிஞ்சி - புணர்தலும் புணர்தலும் நிமித்தமும்

2.    முல்லை - இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

3.    மருதம் - ஊடலும் ஊடல் நிமித்தமும்

4.    நெய்தல் - இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

5.    பாலை - பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

24. முதற்பொருள் என்பது யாது?

 ஐந்திணைக்குரிய நிலமும் பொழுதும் முதற் பொருள் ஆகும்.

25. கருப்பொருள் என்பது யாது?

ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய தெய்வம், மக்கள், உணவு, விலங்கு, பூ, மரம், பறவை, ஊர், நீர், பறை, யாழ், தொழில் என்பன நிலத்திற்குரிய கருப்பொருள்கள் ஆகும்

26. குறிஞ்சி நிலத்திற்குரிய கருப்பொருள்கள் நான்கினை எழுதுக

v  தெய்வம்: முருகன்

v  உணவு:  மலைநெல், திணை,

v  பறவை: கிளி, மயில், நீர், அருவி நீர் ,சுனை நீர்

v  பறை: தொண்டகப்பறை

v  யாழ்: குறிஞ்சி யாழ்

27. மருத நிலத்திற்குரிய கருப்பொருள்கள் நான்கினை எழுதுக

v  தெய்வம்: இந்திரன்

v  உணவு: செந்நெல், வெண்ணெல்

v  நீர்: மனைக்கிணறு, பொய்கை

v  பறவை: நாரை, நீர்க்கோழி, அன்னம்

v  பறை: மணமுழா நெல்லரிகிணை

v  யாழ்: மருதயாழ்

28. சிலப்பதிகாரத்தில் கூறப்பட்ட எட்டு வகை தானியங்களைப் பட்டியலிடுக.

1.     நெல்

2.    வரகு

3.    திணை

4.    சாமை

5.    இறுங்கு (சோளம்)

6.    கேழ்வரகு

7.    தோரை நெல்

8.    புல்

29. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று அழைக்கப்படும் நூல் எது? ஏன்?

v  வாய்க்காலில் பாயும் நீரை வயலுக்குத் திருப்பி விடுவது மடை

v  உரை என்பது பேசும் மொழியில் ஓட்டம். இதனைச் செய்யுள் ஆகிய வயலில் பாய்வது உரைப்பாட்டுமடை

v  உரைப்பாட்டுமடை என்பது சிலப்பதிகாரத்தில் வரும் தமிழ் நடை

v  இது உரைநடை பாங்கில் அமைந்திருக்கும் பாட்டு.

v  எனவே சிலப்பதிகாரம் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் எனப்படுகிறது

30. ஆநிரை பற்றிய திணைகள் யாவை?

v  வெட்சி- நிரை கவர்தல்

v  கரந்தை- நிரை மீட்டல்

31. மதில் போர் பற்றிய திணைகள் யாவை?

v  நொச்சி -மதில் காத்தல்

v  உழிஞை- மதில் வளைத்தல்

32. வாகைத் திணையை விளக்குக

வலிமையை நிலைநாட்ட நடைபெற்ற போரில் வெற்றி பெற்ற அரசர் வாகை பூவைச் சூடி மகிழ்வது வாகைத்தினை ஆகும்

33. பாடாண் திணையை விளக்குக

அரசரின் கல்வி வீரம் செல்வம் புகழ் கருணை முதலியவற்றை புகழ்ந்து பாடுவது பாடாண் திணை ஆகும். (பாடு +ஆண் +திணை= பாடாண் திணை)

34. யாருடன் போர் செய்வது கூடாது என்று ஆவூர் மூலங்கிழார் கூறுகிறார்?

தம்மை விட வலிமை குறைந்தரோடு போர் செய்வது கூடாது என்பதை ஆவூர் மூலங்கிழார் கூறுகிறார்

35. ஜென் தத்துவம் - குறிப்பு வரைக

v  ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காஞ்சி மாநகரத்தை சிற்றரசர் ஒருவர் போதிதர்மர் எனும் சமயப் பெயர் கொண்டு சீனாவுக்குச் சென்றார்

v  பௌத்த சமயத் தத்துவத்தின் ஒரு பிரிவைப் போதித்தார்

v  அதிலிருந்து உருவானதே ஜென் தத்துவம்.

36. நான்கு வகை பாக்களுக்கு உரிய ஓசைகளை எழுதுக.

1.     வெண்பா - செப்பலோசை

2.    ஆசிரியப்பா - அகவல் ஓசை

3.    கலிப்பா - துள்ளலோசை

4.    வஞ்சிப்பா - தூங்கலோசை

37. வெண்பா எத்தனை வகைப்படும்? அவை யாவை?

வெண்பா ஐந்து வகைப்படும். அவை:

1.     குறள் வெண்பா

2.    சிந்தியல் வெண்பா

3.    நேரிசை வெண்பா

4.    இன்னிசை வெண்பா

5.    பஃறொடை வெண்பா

38. ஆசிரியப்பா எத்தனை வகைப்படும்? அவை யாவை?

ஆசிரியப்பா நான்கு வகைப்படும். அவை:

1.     நேரிசை ஆசிரியப்பா

2.    இணைக்குறள் ஆசிரியப்பா

3.    நிலைமண்டில ஆசிரியப்பா

4.    அடிமறி மண்டில ஆசிரியப்பா

பதிவிறக்கம் செய்ய 10 வினாடிகள் காத்திருக்கவும்

You have to wait 10 seconds.

Generating Download Link...

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை