பகுதி - 1
அ. சரியான விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடை இணையும் சேர்த்து எழுதுக
1. கதிரவனைக்க்குறிக்கும் மற்றொரு பெயர்-------
அ) புதன் ஆ) ஞாயிறு இ) சந்திரன்
ஈ) செவ்வாய்
2. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்
அ) வைப்பு ஆ) கடல் இ) பரவை ஈ) ஆழி
3. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து ----
அ) கோட்டெழுத்து ஆ) வட்டெழுத்து இ) சித்திர எழுத்து ஈ) ஓவிய எழுத்து
4. மெல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் _____
அ) தலை ஆ) மார்பு இ) மூக்கு ஈ) கழுத்து
5. இனிமை+ சொல் என்பதனைச்
சேர்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
அ) இனிசொல் ஆ) இன்மைசொல் இ) இன்சொல் ஈ) நெடுமைதேர்
6. திருக்குறளில் விடுபட்ட
சீர்களுள் சரியானவற்றைத் தேர்வு செய்க
வருமுன்னர் ------ வாழ்க்கை எரிமுன்னர் ------ போலக் கெடும்
அ) காவாதான், வைத்தூறு ஆ)வைத்தூறு,காவாதான்
இ)வருமுன்னர்,வைத்தூறு ஈ) வைத்தூறு , வருமுன்னர்
7. அடித்தான்- இச்சொல்லுக்கான வேர்ச்சொல்லைத் தேர்க
அ) அடித்து ஆ) அடிக்க இ) அடி ஈ) அடித்த
8. அறியாமையை நீக்கி அறிவினை விளக்குவது ____
அ) விளக்கு ஆ) கல்வி இ) விளையாட்டு ஈ) பாட்டு
9 பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று _____.
அ) படித்தான் ஆ) நடக்கிறான் இ) உண்பான் ஈ) ஓடாது
10. ஐந்தாம் உலகத்தமிழ்மாநாடு நடைபெற்றஇடம் _____
அ) திருச்சி ஆ) சென்னை இ) மதுரை ஈ) கோவை
11.‘கண்ணா வா!’- என்பது _____த்தொடர்.
அ) எழுவாய் ஆ) விளி இ) வினைமுற்று ஈ) வேற்றுமை
12. எம்.ஜி.ஆர். படிப்பைத் தொடர முடியாமைக்குக் காரணம் _____ .
அ) நடிப்பு ஆர்வம் ஆ) பள்ளி இல்லாமை இ) குடும்ப வறுமை ஈ) படிப்பில்
ஆர்வமில்லாமை
13. தூக்கி + கொண்டு என்பதனைச் சேர்த்தெழுதக்
கிடைக்கும் சொல் _____.
அ) தூக்கிகொண்டு
ஆ) தூக்குக்கொண்டு இ) தூக்கிக்கொண்டு ஈ) தூக்குகொண்டு
14. ”தடம்” என்ற சொல்லின் பொருள் யாது?
அ) யானை ஆ) அடையாளம் இ) புது
வருவாய் ஈ) ஓசை
15. 'உறுபசி' என்னும் சொல்லில் 'உறு' என்பதன் பொருள்
அ) குறைவு
ஆ) காவல் இ) மிகுதி ஈ) கூர்மை
ஆ. கோடிட்ட இடங்களை நிரப்புக 4X1=4
16. தொல்காப்பியத்தின் ஆசிரியர்------- 17. இயற்கைத்தவம்
என்றழைக்கப்படும் நூல்-----
18. புத்த சமயம் தொடர்பாக
அம்பேத்கர் எழுதிய நூல்------ 19. விகாரப்புணர்ச்சி------ வகைப்படும்
இ. எவையேனும் ஆறு வினாக்களுக்கு
விடை தருக 6X2=12
20. பழியின்றி
வாழும் வழியாகத்திருக்குறள் கூறுவது யாது?
21. நல்வாழ்விற்கு நாம் நாள்தோறும் செய்ய வேண்டியவை
யாவை? 22. ஓவிய எழுத்து என்றால் என்ன?
23. யாருடைய
உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது?
24. தமிழ்
இசையோடு இணைந்து இசைக்கும் இசைக்கருவிகளாகச் சுந்தரர் கூறுவன யாவை?
25. சிங்கிக்குப் பரிசாகக் கிடைத்த அணிகலன்கள் யாவை?
26. எவற்றையெல்லாம்
கைவினைக்கலைகள் எனக் கூறுகிறோம்? 27. 'தமிழ்நாட்டின் ஹாலந்து' எது? ஏன்?
ஈ எவையேனும் ஆறு வினாக்களுக்கு
விடை தருக 6X2=12
28. மரபுத்தொடரைத் தொடரில் அமைத்து எழுதுக. வாழையடி வாழையாக
29. பின்வரும்
தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக.
அ.
அதைச்
செய்தது நான் அன்று. ஆ. பானையைஉடைத்தது கண்ணன் அல்ல.
30. கலைச்சொல் எழுதுக அ. LOOM ஆ. FACTORY
31. சரியான எதிர்மறைச் சொற்களைக் கொண்டு நிரப்புக.
1. தாங்கள் படிக்கவேண்டிய புத்தகங்கள் இவை ---- 2. உங்களோடு வருவோர் நாம் -----
32. நான்காம் வேற்றுமையை விளக்குக. 33. தன்வினை என்றால் என்ன? எடுத்துக்கட்டு தருக.
34. சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக
அ.
சிரம் என்பது
----- (தலை/தழை) ஆ.இலைக்கு
வேறு பெயர்---
(தளை /தழை) 35.எழுத்துகளின் பிறப்பு
என்றால் என்ன?
உ. எவையேனும் இரண்டு வினாக்களுக்கு
விடை தருக 2X3=6
36. ஏட்டில்
எழுதிய பழங்கதையாக முடிந்தவை எவை?
37. சிறந்த ஆட்சியின் பண்பாகத் திருக்குறள் கூறுவது யாது?
38. மக்களுக்குச்
செய்யவேண்டிய தொண்டு குறித்துத்திருமூலர் கூறுவது யாது?
ஊ. எவையேனும் இரண்டு வினாக்களுக்கு
விடை தருக 2X3=6
39. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க
கவிமணி
எனப் போற்றப்படும் தேசிக விநாயகனார்,குமரி மாவட்டம் தேரூரில் பிறந்தவர்; முப்பத்தாறு
ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர். இவர், ஆசியஜோதி, மருமக்கள்
வழி மான்மியம்,
கதர் பிறந்த கதை உள்ளிட்ட பல கவிதை நூல்களையும் உமர்கய்யாம் பாடல்கள் என்னும்
மொழிபெயர்ப்பு நூலையும் படைத்துள்ளார்.
அ.கவிமணி எனப் போற்றப்படுபவர் யார்? ஆ.கவிமணி எங்கு பிறந்தார்? இ.கவிமணி படைத்த நூல்கள் யாவை?
40. நோய்கள் பெருகக் காரணம் என்ன? 41. அம்பேத்கரின் முதல் தேர்தல் வெற்றி
குறித்து எழுதுக.
எ. எவையேனும் இரண்டு வினாக்களுக்கு
விடை தருக 2X3=6
42. எழுத்துகளின் பிறப்பு என்றால் என்ன? 43. வேற்றுமை வகைகளை எழுதுக
44. ண, ன, ந ஆகிய எழுத்துகள்
(ஒலிகள்) பிறக்கும் முறையைக் கூறுக..
ஏ. அடிபிறழாமல் எழுதுக 2+3=5
45. “சொல்லுக” எனத்தொடங்கும் குறளை அடிமாறாமல் எழுதுக.
46. “ கற்றோர்க்கு” (அல்லது) “ பேர்தற்கு” எனத்தொடங்கும்
பாடலை அடிமாறாமல் எழுதுக
ஐ. பின்வரும் வினாக்களுக்கு விடை
எழுதுக. 3X6=18
47. அ . இருப்பிடச் சான்று வேண்டி வட்டாட்சியருக்கு
விண்ணப்பம் எழுதுக. (அல்லது)
ஆ. குடிநீர் தட்டுப்பாட்டைச் சரிசெய்து
தருமாறு நகராட்சித்தலைவருக்கு விண்ணப்பம் எழுதுக.
48. அ. வாழ்வுக்கு
வெற்றி தரும் நற்பண்புகளாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக. (அல்லது)
ஆ. உழவுத்தொழில் சிறக்க இன்றியமையாதவையாக நீங்கள் கருதுவன யாவை?
49. தமிழ்வழிக் கல்வி குறித்து திரு.வி.க கூறுவன
யாவை? (அல்லது) ஆ.எழுத்துகளின் தோற்றம் குறித்து எழுதுக.
ஒ. பின்வரும் வினாக்களுக்கு விடை
எழுதுக. 2X8=16
50. அ. ”வெட்டுக்கிளியும்
சருகுமானும்” என்ற கதையைச் சுருக்கி எழுதுக (அல்லது)
ஆ.”காலம் உடன் வரும்” என்ற கதையைச் சுருக்கி எழுதுக
51. அ கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக:
முன்னுரை - நூலகத்தின் தேவை- வகைகள்-
நூலகத்தில் உள்ளவை- படிக்கும் முறை- முடிவுரை (அல்லது)
ஆ. ” எனது தாய்மொழி தமிழ்” என்ற தலைப்பில் கட்டுரை
எழுதுக
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி