இரண்டாம் திருப்புதல் தேர்வு-2025
செங்கல்பட்டு மாவட்டம்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1
15X1=15
|
வி.எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
|
1. |
ஆ. மணிப்பெயர் வகை |
1 |
|
2. |
ஆ. வான்வெளியில்,
பேரொலியில் |
1 |
|
3. |
இ. அவர் |
1 |
|
4. |
இ. பழுப்பு |
1 |
|
5. |
அ. 6 |
1 |
|
6. |
இ. வலிமையை
நிலைநாட்டல் |
1 |
|
7. |
இ. 12 |
1 |
|
8. |
அ. ஒரு சிறு இசை |
1 |
|
9. |
ஆ. செப்பலோசை |
1 |
|
10. |
ஆ. கிண்கிணி |
1 |
|
11. |
இ. திணை வழுவமைதி |
1 |
|
12. |
அ. வீரமாமுனிவர் |
1 |
|
13. |
ஆ. தேம்பாவணி |
1 |
|
14. |
இ. பூக்கையை,
சேக்கையை |
1 |
|
15. |
ஆ. படுக்கை |
1 |
பகுதி-2 பிரிவு-1
4X2=8
|
எவையேனும் நான்கு வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்க |
||
|
16 |
அ. எவ்வெவை
தொடர்புடையன என்கிறார் பாவாணர்? ஆ. யார் உலகத்தார்க்கு
அச்சாணி எனப்போற்றப்பட்டனர்? |
2 |
|
17 |
ü கிழக்கிலிருந்து வீசும்
காற்று –
கொண்டல் ü மேற்கிலிருந்து வீசும்
காற்று
– கோடை ü வடக்கிலிருந்து வீசும்
காற்று
– வாடை ü தெற்கிலிருந்து வீசும்
காற்று
- தென்றல் |
2 |
|
18 |
முயற்சி , முயற்சியின்மை |
2 |
|
19 |
ü பூஞ்சோலைகள் ü செண்பகக் காடுகள் ü மலர்ப்பொய்கைகள் ü தடாகங்கள் ü கமுகத் தோட்டங்கள் ü நெல்வயல்கள் |
2 |
|
20 |
அவையம்=மன்றம் அல்லது
சபை. வழக்கை விசாரித்து தீர்ப்பு கூறும் நீதின்மன்றம் |
2 |
|
21 |
குன்றேறி
யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன் றுண்டாகச்
செய்வான் வினை. |
2 |
பிரிவு-2
5X2=10
|
எவையேனும்
ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||||||||||
|
22 |
|
2 |
||||||||
|
23 |
கலைஞரைப்
பேராசிரியர் அன்பழகனார்,
பழுமரக்கனிப் பயன்கொள்ளும் பேச்சாளர் என்றும் படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர் என்றும்
பாராட்டியுள்ளார். |
2 |
||||||||
|
24 |
அ. சோற்றுக்கு ஒரு சோறு பதம் ஆ. மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு |
2 |
||||||||
|
25 |
ஒலித்து
- ஒலி +த்+த்+உ ஒலி
- பகுதி; த்
-சந்தி; த்- இறந்தகால
இடைநிலை; உ
- வினையெச்ச விகுதி |
2 |
||||||||
|
26 |
அ. வாய்மை (அ) உண்மை ஆ. செல்வம் |
2 |
||||||||
|
27 |
அ. கனிமொழி தேர்வுக்கு
கண்ணும் கருத்துமாக படித்தாள் வெற்றிப் பெற்றாள். ஆ. பணத்தை அள்ளி
இறைத்த செல்வன் ஏழ்மையில் வாடுகிறான் |
2 |
||||||||
|
28
|
அ. நிழல் தரும் மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும் ஆ. சிறந்த கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும். |
2 |
||||||||
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
2X3=6
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
|
29 |
இடம்: இத்தொடர்
ம.பொ.சி அவர்களின் சிற்றகல் ஒளி எனும் கட்டுரையில் இடம் பெற்றுள்ளது. பொருள்: எங்கள் தலையை கொடுத்தாவது
தலைநகரைக் காப்பாற்றுவோம். விளக்கம்:
ஆந்திர மாநிலம் பிரியும்போது, சமயத்தில்,செங்கல்வராயன் தலைமையில்
கூட்டப்பட்ட கூட்டத்தில் ம.பொ.சி அவர்கள் ”தலையைக்
கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்று முழங்கினார். |
3 |
|
30 |
ü அகவலோசை பெற்று,ஈரசைச்சீர் மிகுந்து
வரும். ü ஆசிரியத்தளை மிகுதியாகவும்,பிற தளைகள் குறைவாகவும்
வரும். ü மூன்றடி முதல் எழுதுபவர்
மனநிலைக்கேற்ப அமைந்து,ஏகாரத்தில் முடியும் |
3 |
|
31 |
அ. வாய்மை ஆ. நாக்கு இ. பொய் பேசும்போது |
3 |
பிரிவு-2
2X3=6
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||
|
32 |
ü தமிழுக்காகத் தமிழ்வளர்ச்சித்
துறையை உருவாக்கினார் ü மனோன்மணியம் சுந்தரனாரின்
தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலைப் பரவலாக்கினார் ü 2010 ல் கோவையில் உலகத்
தமிழ் மாநாடு நடத்தினார் |
3 |
|
|
33 |
ü குலேச பாண்டியன் இடைக்காடனாரின்
பாடலைக் கேட்காமல் அவமதித்தான். ü இடைக்காடனார் இறைவனிடம்
முறையிட்டார் ü இறைவன் கடம்பவனத்தைவிட்டு
வையையின் தென்கரையில் தங்கினார். ü தன் தவற்றை உணர்ந்த
மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தான் |
3 |
|
|
34 |
|
3 |
|
பிரிவு-3
2X3=6
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||||||||||||||||||||||||||
|
35 |
1.
அன்புச்செல்வன் - இருபெயரொட்டுப் பண்புத்தொகை; தொடுதிரை – வினைத்தொகை 2.
தங்கமீன்கள் -உவமைத்தொகை. தண்ணீர்த்தொட்டி - இரண்டாம்
வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை 3. வெண்டைக்காய், மோர்க்குழம்பு - இருபெயரொட்டுப் பண்புத்தொகைகள். |
3 |
||||||||||||||||||||||||
|
36 |
ü
இக்குறளில் உவமை அணி பயின்று வந்துள்ளது உவமை அணி: ஒரு பொருளை அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது உவமையணியாகும்.
இதில் உவமை, உவமேயம், உவம
உருபு ஆகியன இடம்பெறும். உவம உருபு வெளிப்படையாக வரும். அணிப்பொருத்தம்: v உவமை – வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்பவன். v உவமேயம் – செங்கோல் தாங்கி அதிகாரத்தால் வரிவிதிக்கும் மன்னன் v உவம உருபு
– போலும்
இவ்வாறு உவமை, உவமேயம், உவம உருபு மூன்றும் வெளிப்பட்டு வந்தமையால் உவமையணி ஆயிற்று. |
3 |
||||||||||||||||||||||||
|
37 |
|
3 |
||||||||||||||||||||||||
பகுதி-4 5X5=25
|
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி |
||||||||||||||||||||
|
38
அ |
v உறவினரை
முகமலர்ச்சியுடன் நோக்கினேன். v வீட்டிற்குள் வருக! வருக! என்று வரவேற்றேன். v உணவருந்திச்
செல்லுங்கள் எனக் கூறினேன் v தலைவாழை இலையில் உணவிட்டேன்.
v அவர் செல்லும்
போது வாயில் வரை சென்று வழியனுப்பினேன். (அல்லது) ஆ)
|
5 |
||||||||||||||||||
|
39 அ. |
வாழ்த்து
மடல்
நெல்லை, 26-12-2021. அன்புள்ள
நண்பா/தோழி, நலம் நலம் அறிய ஆவல்.திருச்சியில்
நடைபெற்ற “மரம் இயற்கையின் வரம்” எனும்
தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் நீ முதல்பரிசு பெற்றதைத் தொலைக்காட்சியைப்
பார்த்து அறிந்தேன்.அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.அதற்காக எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு, உனது
அன்பு நண்பன், ம.மகிழினியன். உறைமேல்
முகவரி: க. இளவேந்தன், 86, மருத்துவர் நகர், ஆ) நாளிதழ்
ஆசிரியருக்கு கடிதம் அனுப்புநர் அ அ அ அ அ, 100,பாரதி
தெரு, சக்தி நகர், திருத்தணி
. பெறுநர் ஆசிரியர் அவர்கள், தமிழ்ப்பொழில் நாளிதழ், திருவள்ளூர்-1 ஐயா, பொருள்:
கட்டுரையை வெளியிட வேண்டுதல் – சார்பு வணக்கம். நான் தங்கள்
நாளிதழில் பொங்கல் பண்டிக்கை முன்னிட்டு பொங்கல் மலரில் “ உழவுத்
தொழிலுக்கு வந்தனை செய்வோம் “ எனும் தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளேன். தாங்கள் அந்த
கட்டுரையையும் பொங்கல் மலரில் வெளியிட வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. இணைப்பு:
இப்படிக்கு, 1. கட்டுரை
தங்கள்
உண்மையுள்ள, இடம் : திருத்தணி
அ அ அ அ அ. நாள் : 04-03-2024 உறை மேல் முகவரி:
|
5 |
||||||||||||||||||
|
40 |
காட்சிக்குப்
பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
5 |
||||||||||||||||||
|
41 |
சரியான விவரங்களுடன் நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
5 |
||||||||||||||||||
|
42 |
1. Education is what remains after one has
forgotten what one has learned in school – Albert Einstein ஒரு பள்ளியில் கற்றதை மறந்து
விட்டால், பள்ளியில் கற்ற கல்வியினால் பயன் என்ன! –
ஆல்பிரட் ஐன்ஸ்டின் 2. Tomorrow is often the busiest day of
the week – Spanish proverb பெரும்பாலும் நாளையே இந்த வாரத்தின்
பரபரப்பான நாள் – ஸ்பானிஷ் பழமொழி 3. It is during our darkest moment that
we must focus to see the light – Aristotle இருண்ட
தருணங்களில் நாம் ஒளியைக் காண கவனம் செலுத்த வேண்டும் - அரிஸ்டாட்டில் 4. Success is not final,failure is not
fatal.It is the courage to continue that counts – Winston Churchill வெற்றி
என்பது முடிவல்ல,
தோல்வி என்பது மரணம் இல்லை. தொடர்ந்து செய்கின்ற
செயல்கள் கணக்கில் கொள்ளப்படுகிறது – வின்ஸ்டன் சர்ச்சில். |
5 |
||||||||||||||||||
பகுதி-5
3X8=24
|
எல்லா
வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
|
43 |
அ. கருணையன் தனது தாயை நல்லடக்கம் செய்தான்: குழியினுள் அழகிய மலர்ப்படுக்கையைப்
பரப்பினான். பயனுள்ள வாழ்க்கை நடத்திய தன் அன்னையின் உடலை
மண் இட்டு மூடி அடக்கம் செய்தான். அதன்மேல் மலர்களையும்
தன் கண்ணீரையும் ஒருசேரப் பொழிந்தான். கருணையன்
தாயை இழந்து வாடுதல்: இளம் பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளை காணும் முன்னே, மழைத்துளி இல்லாமல் காய்ந்து விட்டதைப் போல நானும் என் தாயை இழந்த
வாடுகிறேன் என்று கருணையன் வருந்தினான். கருணையனின்
தவிப்பு: துணையைப் பிரிந்த பறவையைப் போல் நான் இக்காட்டில் அழுது இரங்கி விடுகிறேன்.சரிந்த வழுக்கு நிலத்திலே தனியே விடப்பட்டு செல்லும் வழி தெரியாமல்
தவிப்பவன் போல் ஆனேன்”.எனப் புலம்பினான். பறவைகளும்,வண்டுகளும் கூச்சலிட்டன: கருணையன் இவ்வாறெல்லாம் அழுது புலம்பினார்.
அதைக் கேட்டு, பல்வேறு இசைகளை இயக்கியது
போன்று, மணம் வீசும் மலர்களும், பறவைகளும்,
வண்டுகளும் அழுவதைப் போன்றே கூச்சலிட்டன. ஆ) உரிய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
8 |
|
44 அ |
அ) முன்னுரை: வரலாறு என்பது பல நிகழ்வுகளைக் கொண்டதாக உள்ளது. அதில் எண்ணற்ற
ஆளுமைகளைக் காணமுடிகிறது. உலகில் பிறந்தவர் பலர் வாழ்வதோடு சரி. சிலர்தான்
வரலாறு ஆகிறார்கள்.கல்வி என்றால் என்னவென்றே தெரியாத ஓர் இருண்ட சமூகத்தில்
ஒற்றைச் சுடராகத் தோன்றி,எண்ணற்ற
சுடர்களை ஏற்றியவர் தான் மேரி. அவரைப் பற்றி இங்கு காண்போம். மேரியின் குடும்பச்சூழல்: மேரியின் குடும்பத்தினருக்கு பகல் முழுவதும்
பருத்திக் காட்டில் வேலைகள். ஒரு நாள் ஒரே ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்கி
விடக்கூடாது என்று நினைக்கும் குடும்பம் அது. பருத்திக் காட்டில் இருந்து பகலில்
அம்மா பாட்சி மட்டும் உணவு சமைப்பதற்காக வீட்டுக்குத் திரும்புவாள்..உணவு
தயாரானதும் குழந்தைகளை உணவு உண்ணக் கூப்பிடுவாள். மேரிக்கு நடந்த துன்பம்: மேரி ஒருநாள் தன் அம்மாவுடன், கூறு மாளிகைக்குச்
செல்கிறாள். அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளின் அழைப்பையேற்று அவர்களோடு
விளையாடுகிறாள். அங்கே, ஒரு புத்தகம் அவளது கண்ணில்
படுகிறது. அந்தப் புத்தகத்தின் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்படுகிறது. அந்தப்
புத்தகத்தை கையில் எடுத்து அதைப்
புரட்டத்தொடங்குகிறாள். அதைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுமிகள்,” நீ
அதைத் தொடக்கூடாது, உன்னால் படிக்க முடியாது” என்று மேரியின் உள்ளம் வருந்தும் வகையில் பேசினர்.
அந்த நிகழ்வு மேரியின் மனதில் மிக ஆழமாகப்
பதிந்துவிடுகிறது. தூண்டுகோல்- மிஸ்வில்சன் : ஒரு நாள் மிஸ் வில்சன் என்பவர் மேரி படிப்பதற்குத் தான் உதவி செய்வதாக
கூறினார். மேரி செய்வதறியாது திகைத்து நின்றாள்.
பிறகு பருத்தி எடுக்கும் வேலையைத் தொடர்ந்தாள். வேலையை விரைவாக முடிக்குமாறு
அனைவரையும் அவசரபடுத்தினாள்.தான் ஒரு புதிய பெண்ணாக ஆகிவிட்டதாக உணர்ந்தாள்.
குடும்பத்திலிருந்து முதல் பெண் படிக்கப் போகிறாள். புதிய நம்பிக்கை பிறந்தது. சிறப்பாகக் கல்விகற்ற மேரி: மேரி நாள்தோறும் தன்
இலட்சியத்தைச் சுமந்து பள்ளிள்ச் சென்றாள். நாள்தோறும் புதிய புதிய செய்திகளைக்
கற்றாள். பள்ளிக்கூடத்தில் சில வருடங்கள் ஓடி மறைந்தன. அந்த வருடத்தின்
கடைசியில் மேரிக்குப் பட்டமளிப்பு நடந்தது மிஸ் வில்சன் மேரிக்கு உயர்கல்வி
படிக்க உதவினார். முடிவுரை: மனதில் ஆர்வமும், விடாமுயற்சியும் இருந்தால்,
எதையும் சாதிக்கலாம் என்பதற்கு மேரியின் கதை ஒரு சிறந்த
சான்றாகும்.உலகில் சிலர் வரலாறாகவே இருக்கிறார்கள். இவர்கள்
பாதையே இல்லாத இடத்தில் தங்கள் காலடிகளால் ஒற்றையடிப்பாதை இட்டு அதையே பெரும் சாலையாக உருவாக்குகிறார்கள். அவ்விதமாக மேரி வந்து
ஓராயிரம் சுடரை ஏற்றி விட்டாள். ஆ) இராமானுசர்
நாடகம் முன்னுரை: 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலர்வது குறிஞ்சி, தலைமுறைக்கு
ஒரு முறை மட்டுமே மலர்வது மூங்கில், நம் தலைமுறைக்கு
ஒரு முறை பிறப்பவர்களே ஞானிகள். அத்தகைய ஞானிகளுள் ஒருவர் இராமானுசர், அவரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். தண்டும் கொடியுமாக: திருமந்திரத்
திருவருள் பெறத் தண்டும், கொடியுமாக இராமானுசரை வரச்
சொல்லுங்கள் என்னும் செய்தி, பூரணரால்
திருவரங்கத்திற்கு அனுப்பப்பட்டது.அதனால்இராமானுசர், கூரேசர், முதலியாண்டான் ஆகிய மூவரும் பூரணர் இவ்வத்திற்கு வந்தனர். அவர்களைக்
கண்ட பூரணர் கோபம் கொண்டார். அதற்கு இராமானுசர்,
"தாங்கள் கூறிய தண்டு கொடிக்கு இணையானவர்கள் இவர்கள். எனவே
கோபம் கொள்ளாது பரிவு கொண்டு திருவருள் புரிய வேண்டும்" என்று கூறினார், ஆசிரியரின் கட்டளை: பூரணர் மூவரையும் வீட்டிற்குள் அழைத்து மிகுந்த நிபந்தனையுடன்
"திருமகளுடன் கூடிய நாரயணனின் திருப்பாதங்களைப் புகலிடமாகக் கொள்கிறேன்; திருவுடன் சேர்ந்த நாராயணனை வணங்குகிறேன்" என்ற மந்திரத்தைக்
கூறினார். பூரணர் கூறிய திருமந்திரத்தை மூலரும் மூன்று
முறை உரக்கச் சொன்னார்கள். திருமந்திரத்தை
மக்களுக்கு உரைத்தல்: திருக்கோட்டியூர் சௌம்ப நாராயணன் திருக்கோவில் மதில் சுவரின் மேல்
இராமனுார் நின்று கொண்டு, உரத்த குரலில் பேசத்
தொடங்கினார். "கிடைப்பதற்கரிய பிறவிப்பிணியைத் தீர்க்கும் அருமருந்தான
திருமந்திரத்தை உங்களுக்குக் கூறுகிறேன். அனைவரும் இணைந்து மந்திரத்தைச்
சொல்லுங்கள்". அவர் சொல்லச் சொல்ல அனைவரும் உரத்தக் குரலில் மூன்று முறை
கூறினார்கள். குருவின் சொல்லை
மீறுதல்: குருவின் (பூரணரின்) சொல்லை மீறியதற்காக கோபம் கொண்ட பூரணரிடம்
"கிடைப்பதற்குரிய மந்திரத்தைத் தங்களின் திருவருளால் நான் பெற்றேன். அதன்
பயனை அனைவருக்கும் கிட்டவேண்டும். அவர்கள் பிறவிப்பிணி நீங்கி பெரும் பேறு
பெற்றிட, நான் மட்டும் நரகத்தை அடைவேன்" என்று
விளக்கமளித்தார். குருவின் ஆசி: இராமானுசரின் பரந்த மனத்தைக் கண்ட குரு பூரணர், அவரை மன்னித்து அருளினார்
மேலும் இறைவனின் ஆசி பெற அவரை வாழ்த்தினார். இராமானுசத்திற்கு தன் மகள் சௌப்ய நாராயணனை
அடைக்கலமாக அளித்தார். முடிவுரை: யாம்
பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற உயரிய மந்திரத்தை
வாழ்வாக்கியவர் இராமானுசர், தனக்கென வாழாது
பிறருக்காக நரகமும் செல்ல முன்வந்த பெருமகளார் |
8 |
|
45 |
அ) உரிய விடை எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்குக (அல்லது) ஆ) முன்னுரை: இக்காலகட்டத்தில்
மிகுதியான சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன. சாலை விதிகளை நாம் மதிக்காமல்
நடப்பது இதற்கெல்லாம் காரணம் ஆகும். சாலை பாதுகாப்பின் அவசியம் பற்றி
இக்கட்டுரையில் காண்போம். சாலை
பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு: ·
சாலையில்
விபத்துகள் நிகழாத வண்ணம் தடுப்பதற்காக, போக்குவரத்து
காவல்துறையினர் பணி செய்கின்றனர். ·
அதற்காக
மக்கள் பின்பற்ற வேண்டிய சில சாலை விதிகளை அரசு வரையறுத்துள்ளது. ·
சாலை
விதிகள் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு வழங்கப்படுகிறது. ·
சாலை
பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். சாலை
விதிகள்: ·
நடைமேடையைப்
பயன்படுத்துதல் ·
நகரப்பகுதிகளில்
சாலையைக் கடக்க சுரங்க நடைபாதைகள் பயன்படுத்துதல் ·
வெள்ளைக்
கோடுகள் போடப்பட்ட இடத்தில் சாலையைக் கடத்தல் ·
வாகன
ஓட்டிகள் முறையான இடங்களில் வாகனங்களை நிறுத்துதல் ·
உள்ளிட்ட
அடிப்படை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். ஊர்தி
ஓட்டுநருக்கான நெறிகள்: v சிவப்பு வண்ண
விளக்கு" நில்" என்ற கட்டளையையும், மஞ்சள் வண்ண விளக்கு, தயாராக இரு என்ற
கட்டளையையும்,
பச்சை
வண்ண விளக்கு"புறப்படு" என்ற கட்டளையையும் நமக்குத் தருகிறது. அதைச்
சரியாகப் பின்பற்ற வேண்டும். v போக்குவரத்துக்
காவல் துறையினரின் கட்டளையை மீறி நான் செல்லக்கூடாது. வாகனங்களில் அதிவேகம்
இருக்கக்கூடாது. முடிவுரை: "சாலைவிதிகளை
மதிப்போம் விலைமதிப்பில்லாத
உயிர்களைக் காப்போம்" என்பதை அனைவரும்
மனதிற்கொண்டு சாலை விதிகளை கடைபிடித்து, சாலை பாதுகாப்பை
உறுதி செய்வோம். சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை உணர்வோம். |
8 |
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி