SECOND REVISION EXAM 10 TH STD TAMIL QUESTION PAPER & ANSWER KEY CHENNAI DISTRICT

 

இரண்டாம் திருப்புதல் தேர்வு-2025 சென்னை மாவட்டம்

வினாத்தாளைப் பதிவிறக்க

10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்

                                                                பகுதி-1                                                     15X1=15

வி.எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

·        ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன

·        ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.

          பிழை: தாற்றின் தொகுப்பு சீப்பு எனப் பிழையாக உள்ளது.

1

2.     

. வான்வெளியில், பேரொலியில்

1

3.     

. திணை வழுவமைதி

1

4.     

. வேற்றுமை உருபு

1

5.     

. அதியன், பெருஞ்சாத்தன்

1

6.     

. கூற்று 1 மற்றும் 2 சரி

1

7.     

. மூன்று நாள்

1

8.     

. பாடியவள்  

1

9.     

. இன்மையிலும் விருந்து

1

10.   

. பெயரெச்சத்தொடர்

1

11.    

. 3 , 1 , 4 , 2

1

12.   

. வீரமாமுனிவர்

1

13.   

. தேம்பாவணி

1

14.   

. பூக்கையை, சேக்கையை

1

15.   

. படுக்கை

1

                                     பகுதி-2                            பிரிவு-1                                                        4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

16

சோலை, காடு, ஏரி, குளம், வயல்

2

17

பிறருக்கு உதவி செய்யாததால் ஒருவராலும் விரும்பப் படாதவன்

2

18

இல்லை, விருந்தினரை நன்றாக உபசரிக்க வேண்டும் என்ற எண்ணமே தேவை.

2


19

குலேசபாண்டியன், இடைக்காடனார்

2


20

·        செந்நெல்  

·        வெண்ணெல்

·        கார்நெல்

·        சம்பா  மற்றும் உள்வகைகள்

·        மட்டை

2

21

அருமை  உடைத்தென் றசாவாமை  வேண்டும்

பெருமை முயற்சி  தரும்

2

                                                                    பிரிவு-2                                                    5X2=10

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

22

வெட்சி-கரந்தை , வஞ்சி-காஞ்சி , நொச்சி-உழிஞை

2

23

கிளர்ந்த - கிளர் + த் (ந்) + த் + அ

கிளர் - பகுதி

த்- சந்தி

த் ந்ஆனது விகாரம்

த் - இறந்தகால இடைநிலை      - பெயரெச்ச விகுதி

2

24

. மொழிபெயர்ப்பு  . சொற்பொ􀁈ழிவு

2

25

# உழவர் வயலில் உழுதனர்.

          # நெய்தல் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.

2

26

கல்வி செல்வம் , விருந்து ஈகை

2

27

. அழகிய குளிர்ந்த கடம்பவனத்தை விட்டு இறைவன்    நீங்கினான்

. நிழல் தரும் மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.

2

28

 

இன்னாசிரியார், புத்தகங்களை வரிசைப்படுத்தி, புத்தக அடுக்கங்களில் அடுக்கிவைத்து, புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு எடுத்துக்கொடுத்தார்.

2

பகுதி-3  (மதிப்பெண்கள்:18)

                                                          பிரிவு-1                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

29

. தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது

. போர் அறம் என்பது வீரமற்றோர். புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது

. பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர்

3

30

ü  தமிழுக்காகத் தமிழ்வளர்ச்சித் துறையை உருவாக்கினார்

ü  மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலைப் பரவலாக்கினார்

ü  2010 ல் கோவையில் உலகத் தமிழ் மாநாடு நடத்தினார்

3

31

ü  பகிர்ந்துண்ணும் வழக்கமே குறைந்து விட்டது.

ü  நெருங்கிய உறவினர்களை மட்டுமே விருந்தினர்களாகக் கருதுகின்றனர்.

ü  வாயிலை அடைக்கும் முன் உணவு வேண்டி யாராவது இருக்கிறார்களா? என்று பார்த்த தமிழர் இன்று வாயிலை அடைத்த பிறகே உண்னுகின்றனர்.

3

                                                                       பிரிவு-2                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

32

ü  உயிர்பிழைக்கும் வழி

ü  உறுப்புகள் இயங்கும் முறை

ü  உணவினைத் தேடும் வழி

3

33

ü  குலேச பாண்டியன் இடைக்காடனாரின் பாடலைக் கேட்காமல் அவமதித்தான்.

ü  இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார்

ü  இறைவன் கடம்பவனத்தைவிட்டு வையையின் தென்கரையில் தங்கினார்.

ü  தன் தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தான்

3

34

 

.

அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!

முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!

கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்

மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!

.

வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறைய பொய்யோஎனும் இடையாளொடும் இளையானொடும் போனான்

மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ

ஐயோவிவன் வடிவென்பதோர் அழியாஅழ குடையான்.

3

                                                                பிரிவு-3                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

35

1.     பாடிக் காட்டினார் - வினையெச்சத்தொடர்

2.    கேட்டுப் பாடினர் - வினையெச்சத்தொடர்

3.    கேட்ட பாடலில் - பெயரெச்சத்தொடர்

4.    சிறுவினாக்களைக் கேட்டார் - வேற்றுமைத்தொடர்

5.    எழுதுபவருக்குப் பரிசு - வேற்றுமைத்தொடர்

3

36

ü  இக்குறளில் உவமை அணி பயின்று வந்துள்ளது

உவமை அணி:

ஒரு பொருளை அதனோடு தொடர்புடைய மற்றொரு  பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது உவமையணியாகும். இதில் உவமை, உவமேயம், உவம உருபு ஆகியன இடம்பெறும். உவம உருபு  வெளிப்படையாக வரும்.

அணிப்பொருத்தம்:

v  உவமைவேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்பவன்.

v  உவமேயம்செங்கோல் தாங்கி அதிகாரத்தால் வரிவிதிக்கும் மன்னன்

v  உவம உருபுபோலும்

         இவ்வாறு உவமை, உவமேயம், உவம உருபு மூன்றும் வெளிப்பட்டு வந்தமையால் உவமையணி ஆயிற்று.

3

37

சீர்

அசை

வாய்பாடு

அருளொடும்

நிரை+நிரை

கருவிளம்

அன்பொடும்

நேர்+நிரை

கூவிளம்

வாராப்

நேர்+நேர்

தேமா

பொருளாக்கம்

நிரை+நேர்+நேர்

புளிமாங்காய்

புல்லார்

நேர்+நேர்

தேமா

புரள

நிரை+நேர்

புளிமா

விடல்

நிரை

மலர்

3

                                                                பகுதி-4                                                       5X5=25

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

38

v  ஒழுக்கம் சிறப்பு தரும். அதனை உயிரை விடக் காக்க வேண்டும்.

v  ஒழுக்கம் உள்ளவர் உயர்வு அடைவர். அது இல்லாதவர் பழிகளை அடைவர்.

v  உலகத்தோடு இணைந்து வாழாதவர், கற்றவராயினும் அறிவு இல்லாதவரே

(அல்லது)

)

 

மருவூர்ப்பாக்க வணிக வீதிகள்

இக்கால வணிக வளாகங்கள்

1

நறுமணப் பொருட்கள், வண்ணக் குழம்பு, போன்றவை வீதிகளில் வணிகம் செய்யப்பட்டன.

நறுமணப் பொருட்கள் போன்றவை கடைகளில் மட்டுமே விற்கப்பட்டன.

2

பட்டு, பருத்தி நூல் ஆகியவற்றைக் கொண்டு துணிகள் தயாரிக்கும் கைத்தொழில் வல்லுநர்களான காருகர் நிறைந்திருந்தனர்.

இன்றைக்கு கைத்தறி ஆடைகளை விட விசைத்தறி ஆடைகளை மக்கள் விரும்பி அணிகின்றனர்.

3

முத்துமணியும் பொன்னும் அளக்க முடியாத அளவிற்கு வணிக வீதிகளில் குவிந்திருந்தன.

குளிரூட்டப்பட்ட அறைகளில் பல்வேறு அலங்காரங்களுடன் வெள்ளி பொன் உள்ளிட்ட நகைகள் விற்கப்படுகின்றன.

4

எட்டு வகை தானியங்களும் குவிந்து கிடக்கும் கூலக்கடை வீதிகள் இருந்தன.

எல்லாவித பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கும் பொருட்டு பல்பொருள் அங்காடிகள் உள்ளன.

5

மருவூர் பார்க்கத்தில் பொற்கொல்லர் தையற்காரர் தச்சர் உட்பட பலரும் இருந்தனர்.

 

இன்றைய வணிக வளாகங்களில் பல நவீன சாதனங்களை விற்பவர்களும் பழுது பார்ப்பவர்களும் உள்ளனர்.

 

5

39

.

மின்வாரிய அலுவலருக்குக் கடிதம்

அனுப்புநர்

     .இளமுகில்,

     6,காமராசர் தெரு,

     வளர்புரம்,

     அரக்கோணம்-631003

பெறுநர்          

      உதவிப்பொறியாளர் அவர்கள்,

      மின்வாரிய அலுவலகம்,

     அரக்கோணம்-631001          

ஐயா,

    பொருள்: மின்விளக்குகளைப் பழுது நீக்க வேண்டுதல் சார்பாக.

      வணக்கம். எங்கள் பகுதியில் ஏறத்தாழ 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன.எங்கள் தெருவில் உள்ள மின்விளக்குகள் பழுதடைந்து இரவு நேரங்களில் இருள் மிகுந்துள்ளது.எனவே பழுதடைந்த மின்விளக்குகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

நன்றி!!

                                                                                                                                    இப்படிக்கு,

தங்கள் பணிவுடைய,                                                                                                                                                  .இளமுகில்.

இடம்: அரக்கோணம்,

நாள்: 15-10-2022.

உறைமேல் முகவரி:

உதவிப்பொறியாளர் அவர்கள்,

மின்வாரிய அலுவலகம்,

அரக்கோணம்-631001         

) உரிய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

5

40

காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

41

சரியான விவரங்களுடன் நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்குக

5

42

   1. Education is what remains after one has forgotten what one has learned in school – Albert Einstein

    ஒரு பள்ளியில் கற்றதை மறந்து விட்டால், பள்ளியில் கற்ற கல்வியினால் பயன் என்ன! – ஆல்பிரட் ஐன்ஸ்டின்

    2. Tomorrow is often the busiest day of the week – Spanish proverb

     பெரும்பாலும் நாளையே இந்த வாரத்தின் பரபரப்பான நாள்ஸ்பானிஷ் பழமொழி

    3. It is during our darkest moment that we must focus to see the light – Aristotle

இருண்ட தருணங்களில் நாம் ஒளியைக் காண கவனம் செலுத்த வேண்டும் - அரிஸ்டாட்டில்

    4. Success is not final,failure is not fatal.It is the courage to continue that counts – Winston Churchill

வெற்றி என்பது முடிவல்ல, தோல்வி என்பது மரணம் இல்லை. தொடர்ந்து செய்கின்ற செயல்கள் கணக்கில் கொள்ளப்படுகிறதுவின்ஸ்டன் சர்ச்சில்.

5

                                               

                                                                  பகுதி-5                                                       3X8=24

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க:

43

முன்னுரை :

        ஒவ்வொரு மொழிச் சமூகத்திலும் ஒரு துறையில் இல்லாத செழுமையை ஈடுசெய்ய வேறு துறைகளில் உச்சங்கள் இருக்கும்.கொடுக்கல் வாங்கலாக அறிவனைத்தும் உணர்வனைத்தும் அனைத்து மொழிகளிலும் பரப்ப வேண்டும் அல்லவா?

மொழிபெயர்ப்பும் தொடக்கமும்:

     'ஒரு மொழியில் உணர்த்தப்பட்டுள்ளதை வேறொரு மொழியில் வெளியிடுவதே மொழிபெயர்ப்பு' என்கிறார் மணவை முஸ்தபா. 'மொழிபெயர்த்தல்' என்ற தொடரை மரபியலில் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.

மொழிபெயர்ப்பு இலக்கியங்கள்:

            என்று சின்னமனூர்ச் செப்பேடு கூறுவதன் மூலம் சங்க காலத்திலேயே மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதை அறியலாம். வடமொழியில் வந்த இராமாயண, மகாபாரத தொன்மை செய்திகள் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. பெருங்கதை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலியன வடமொழி கதைகளைத் தழுவி படைக்கப்பட்டவையே.

மொழிபெயர்ப்பின் அவசியமும் பயனும்:

      மொழிபெயர்ப்பு எல்லா காலகட்டங்களிலும் தேவையான ஒன்று. மொழிபெயர்ப்பு இல்லாவிடில் சில படைப்பாளிகள் உருவாகி இருக்க முடியாது. ஜெர்மன் மொழியில் மொழிபெயர்ப்பு மூலம் சேக்ஸ்பியர் அறிமுகமானார். கம்பனும் ரவீந்திரநாத் தாகூர் கூட மொழிபெயர்ப்பின் மூலமே சிறப்புப்பெற்றவர்கள். இன்றைக்கு பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு அவசியமாகின்றது.

எட்டுதிக்கும் செல்வீர்:

         எட்டுத்திக்கும் கொட்டிக்கிடக்கும் கலைச்செல்வங்களை, மொழிபெயர்ப்பு நிறுவங்களை அமைத்தும் மொழிபெயர்ப்புக்கு உதவும் சொற்களஞ்சியங்களை உருவாக்கியும் பட்டறைகளை நடத்தியும் மொழிக்கு வளம்சேர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

மொழிபெயர்ப்புக் கல்வி:

     மொழிபெயர்ப்பைக் கல்வியாக ஆக்குவதன் மூலம் அனைத்துலக அறிவையும் எளிதில் பெற்று, மனிதவளத்தை நாமே முழுமையாகப் பயன்படுத்தி, வேலைவாய்ப்புத் தளத்தை உருவாக்கி ஒருலகர் எனுந்தன்மை பெறலாம்.

முடிவுரை :

    'உலக நாகரிக வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும் 'எனும் மு.கு ஜகந்நாதராஜா கருத்தினை நினைவில் நிறுத்தி செயல்படுவோம்.

) காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகள்

முன்னுரை:

நாம் தினமும் சுவாசிக்கின்ற காற்று சுத்தமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். ஆனால் இப்போது காற்று பல இடங்களில் மாசுபடுகிறது. இதனால் மனிதர்களும், விலங்குகளும், மரங்களும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, இந்த காற்று மாசுபாட்டை தடுக்க நாம் என்ன செய்யலாம் என்பதைப் பார்ப்போம்.

பசுமை பரப்புகளை அதிகரித்தல்:

மரங்கள் காற்றில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடை இழுத்து ஆக்சிஜனை வெளியிடுகின்றன. ஆகையால், அதிகமாக மரங்களை நடுவது காற்று மாசுபாட்டை குறைக்கும் முக்கியமான வழியாகும். மரங்களை வெட்டாமல், புதிய மரஞ்செடிகளை நட்டு வளர்ப்பதே இதற்கான சிறந்த வழியாகும்.

பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துதல்:

ஒவ்வொருவரும் தனித்தனியாக வாகனங்களை பயன்படுத்துவது காற்று மாசுபாட்டை அதிகரிக்கச் செய்யும். இதற்குப் பதிலாக பேருந்து, ரயில் போன்ற பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதை உறுதி செய்வதன் மூலமாக காற்று மாசுபாட்டைப் பெருமளவு குறைக்கலாம். மேலும் பள்ளி மாணவர்களிடையே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் அவசியம்.

எரிபொருள் சிக்கனமுடைய வாகனங்கள்:

மின்சார வாகனங்கள் மற்றும் எரிபொருள் சிக்கனமான வாகனங்களை பயன்படுத்துவதன் மூலம் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தலாம். பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றால் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது

தொழிற்சாலைகளில் கட்டுப்பாடுகள்:

ü  தொழிற்சாலைகள் வெளியிடும் வேதியியல் வாயுக்கள் மற்றும் புகையை சுத்திகரிக்கும் கருவிகள் (filter) மூலம் வெளியிட வேண்டும். அரசு விதிகளை கடைப்பிடிக்கச் செய்ய வேண்டும்.

ü  மின் உலைகள், பசுமை தொழில்நுட்பங்கள் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் தானாகவே காற்று மாசுபாடு குறையும்.

குப்பைகளைச் சரியாக நிர்வகித்தல்:

குப்பைகளை திறந்தவெளியில் எரிக்காமல், அதனை முறையாக மண்ணில் புதைக்கும் அல்லது  செய்வது முக்கியம். மேலும் மட்கும் குப்பை, மட்காத குப்பை என்ற வகைகளில் பிரித்து மறு சுழற்சி செய்வது காற்று மாசுபாட்டைக் குறைக்கும்.

முடிவுரை:

காற்று மாசுபாட்டைத் தடுப்பது ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையுமாகும். இயற்கையைப் பாதுகாக்கும் முயற்சியில் நாம் ஒட்டுமொத்தமாக செயல்பட்டால் மட்டுமே, சுத்தமான காற்றையும் ஆரோக்கியமான வாழ்வையும் பெற முடியும். இன்று செயல் படுத்துங்கள், நாளைக்கு நலமாக இருப்போம்!

8

44

இராமானுசர் நாடகம்

 முன்னுரை:

    12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலர்வது குறிஞ்சிதலைமுறைக்கு ஒரு முறை மட்டுமே மலர்வது மூங்கில்நம் தலைமுறைக்கு ஒரு முறை பிறப்பவர்களே ஞானிகள். அத்தகைய ஞானிகளுள் ஒருவர் இராமானுசர்அவரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

தண்டும் கொடியுமாக:

    திருமந்திரத் திருவருள் பெறத் தண்டும்கொடியுமாக இராமானுசரை வரச் சொல்லுங்கள் என்னும் செய்திபூரணரால் திருவரங்கத்திற்கு அனுப்பப்பட்டது.அதனால்இராமானுசர்கூரேசர்முதலியாண்டான் ஆகிய மூவரும் பூரணர் இவ்வத்திற்கு வந்தனர். அவர்களைக் கண்ட பூரணர் கோபம் கொண்டார். அதற்கு இராமானுசர், "தாங்கள் கூறிய தண்டு கொடிக்கு இணையானவர்கள் இவர்கள். எனவே கோபம் கொள்ளாது பரிவு கொண்டு திருவருள் புரிய வேண்டும்" என்று கூறினார்,

ஆசிரியரின் கட்டளை:

      பூரணர் மூவரையும் வீட்டிற்குள் அழைத்து மிகுந்த நிபந்தனையுடன் "திருமகளுடன் கூடிய நாரயணனின் திருப்பாதங்களைப் புகலிடமாகக் கொள்கிறேன்திருவுடன் சேர்ந்த நாராயணனை வணங்குகிறேன்" என்ற மந்திரத்தைக் கூறினார். பூரணர் கூறிய திருமந்திரத்தை மூலரும் மூன்று முறை உரக்கச் சொன்னார்கள்.

திருமந்திரத்தை மக்களுக்கு உரைத்தல்:

     திருக்கோட்டியூர் சௌம்ப நாராயணன் திருக்கோவில் மதில் சுவரின் மேல் இராமனுார் நின்று கொண்டுஉரத்த குரலில் பேசத் தொடங்கினார். "கிடைப்பதற்கரிய பிறவிப்பிணியைத் தீர்க்கும் அருமருந்தான திருமந்திரத்தை உங்களுக்குக் கூறுகிறேன். அனைவரும் இணைந்து மந்திரத்தைச் சொல்லுங்கள்". அவர் சொல்லச் சொல்ல அனைவரும் உரத்தக் குரலில் மூன்று முறை கூறினார்கள்.

குருவின் சொல்லை மீறுதல்:

      குருவின் (பூரணரின்) சொல்லை மீறியதற்காக கோபம் கொண்ட பூரணரிடம் "கிடைப்பதற்குரிய மந்திரத்தைத் தங்களின் திருவருளால் நான் பெற்றேன். அதன் பயனை அனைவருக்கும் கிட்டவேண்டும். அவர்கள் பிறவிப்பிணி நீங்கி பெரும் பேறு பெற்றிடநான் மட்டும் நரகத்தை அடைவேன்" என்று விளக்கமளித்தார்.

குருவின் ஆசி:

       இராமானுசரின் பரந்த மனத்தைக் கண்ட குரு பூரணர்அவரை மன்னித்து அருளினார் மேலும் இறைவனின் ஆசி பெற அவரை வாழ்த்தினார். இராமானுசத்திற்கு தன் மகள் சௌப்ய நாராயணனை அடைக்கலமாக அளித்தார்.

முடிவுரை:

    யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்என்ற உயரிய மந்திரத்தை வாழ்வாக்கியவர் இராமானுசர்தனக்கென வாழாது பிறருக்காக நரகமும் செல்ல முன்வந்த பெருமகளார்

) முன்னுரை:

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து

  நல்விருந்து ஓம்புவான் இல்”                   - குறள் 84.

              கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் விருந்தோம்பல் மனதில் பசுமையாக இருக்கும்.பசித்த வேளையில் வந்தவருக்கு தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கிற மனிதநேயம் கிராமத்து விருந்தோம்பல்.அந்நிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது கி.ராஜநாராயணனின் கோபல்லபுரத்து மக்கள கதைப்பகுதி.அதில் வரும் அன்னமய்யா என்ற கதாபாத்திரத்தைப் பற்றி இங்கு காண்போம்.

அன்னமய்யாவும், இளைஞனும்:

               சாலையின் ஓரத்தில் இருந்த இளைஞனைக் கண்டார்.இவன்  துறவியோ? பரதேசியோ?” என்ற ஐயத்தை மனதில் கொண்டு ,அருகில் சென்று பார்த்தார். அவனது முகம் பசியால் வாடி இருப்பதை உணர்ந்து கொண்டார். தன்னைப் பார்த்து ஒரு அன்பான புன்னகை காட்டிய அந்த இளைஞரிடம் போய்  அருகில் நின்று பார்த்தார். அந்த வாலிபன்குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?” என்று கேட்டான். அன்னமய்யாஅருகிலிருந்து நீச்ச தண்ணி வாங்கி வரவா?” என்று கேட்டார். அந்த இளைஞன் பதில் ஏதும் கூறாமல் அவ்விடத்தை நோக்கி நடந்தான். 

இளைஞனின் பசியைப் போக்கிய அன்னமய்யா:                

ஒரு வேப்பமரத்தின் அடியில்  மண் கலயங்கள் கஞ்சியால்  நிரப்பப்பட்டு இருந்தன. ஒரு  சிரட்டையில் காணத்துவையலும்,ஊறுகாயும் இருந்தது. ஒரு சிரட்டையைத் துடைத்து அதில் இருந்த  நீத்துப்பாகத்தை அவனிடம் நீட்டினான். அந்த  இளைஞன்  கஞ்சியை  “மடக் மடக்என்று உறிஞ்சிக் குடித்தான். உறிஞ்சியபோது அவளுக்குக் கண்கள் சொருகின.மிடறு மற்றும் தொண்டை வழியாக இறங்குவது சுகத்தை அளித்ததை முகம் சொல்லியது.  அவனுள்ஜீவ ஊற்று பொங்கி, நிறைந்து வழிந்தது

அன்னமய்யாவின் மனநிறைவு:

 

பொங்கியது அன்னமய்யாவின் அன்பு மட்டுமன்று

 இளைஞனின் ஜீவ ஊற்றும்தான்

 புதிதாக வந்த இளைஞனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ,அதைவிட மேலான ஒரு மனநிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது. மார்பில் பால் குடித்துக் கொண்டிருக்கும் போதே வயிறு நிறைந்ததும் அப்படியே தூங்கி விடும் குழந்தையைப்  பார்ப்பதுபோல, அந்த இளைஞனை ஒரு பாசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார் அன்னமய்யா.

அன்னமய்யாவின் பெயர் பொருத்தம்:              

இளைஞன் எழுந்தவுடன்,” எங்கிருந்து வருகிறீர்கள்?, எங்கே செல்லவேண்டும்?” என்று அன்னமய்யா கேட்டார்.அதற்கு அந்த இளைஞன்மிக நீண்ட தொலைவில் இருந்து வருகிறேன்என்று கூறிவிட்டு,” உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டான். அதற்குஅன்னமய்யாஎன்றார். அவ்வாலிபன் மனதிற்குள் பொருத்தமான பெயர்தான் என எண்ணிக்கொண்டான்.

சுப்பையாவிடம் அழைத்துச் செல்லுதல்:        சுப்பையாவும்,அவருடன்இருந்தவர்களும் அன்னமய்யாவையும்,இளைஞனையும்   மகிழ்ச்சியுடன்  வரவேற்றனர். சுப்பையா  தான் வைத்திருந்த கம்மஞ்சோறு உருண்டையை  அனைவருக்கும் பகிர்ந்து அளித்தார். அனைவரும் அந்த இளைஞனிடம் அன்பாகப் பேசி, அந்த உணவை உண்ண செய்தனர். இளைஞன் உணவை உண்டு விட்டு மீண்டும் உறங்கினான் 

முடிவுரை:

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்

 அன்ன நீரார்க்கே உள”                      - திருக்குறள்

     தானத்தில் சிறந்தது அன்னதானம் என்ற தொடருக்கு ஏற்ப, அன்னமய்யா அன்னமிடுபவனாகவும்,தன்னிடம் இருப்பதை கொடுத்து மகிழ்பவனாகவும்,மனிதநேயம் கொண்டவனாகவும் விளங்கினான்.அன்னமய்யா என்ற பெயர் அவருக்கு மிகவும் பொருத்தமுடையதே.

8

45

) முன்னுரை:

ஏர் முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லே

        என்ற திரைப்பாடல் உயர்த்திக்கூறுவது உழவுத்தொழிலைத்தான். தன் வயிற்றுப் பசி போக்க தொழில்களை மேற்கொள்ளும் மனிதர்களிடையே, பிறர் பசி போக்க தொழில் புரிவோர் உழவர். இவர்தம் உயரிய பணி குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

உழவுத் தொழிலும் உழவர்களும்:

நித்தமும் உழவே அவன் நினைப்பு

              நெற்றி வியர்வை சிந்திட அவன் உழைப்பு

      உழவுத்தொழில் உழுதல், சமன் செய்தல், விதைத்தல், நடுதல், நீர் பாய்ச்சுதல்,களை யெடுத்தல், பாதுகாத்தல்,அறுவடை செய்தல் எனும் பல கூறுகளை உள்ளடக்கியது. களமர், உழவர், உழத்தியர், கடையர், கடைசியர் போன்றோரின் உழைப்பால் உழவுத் தொழில் சிறப்புற்று இருக்கிறது.

தமிழர் வாழ்வில் உழவு

தமிழனின் உதிரத்தில் கலந்தது உழவு

        உழவன் இன்றி உலகோர்க்கு ஏது உணவு?”

       பழந்தமிழகத்தில் மக்களின் தலையாய தொழிலாக உழவுத்தொழில் விளங்கியது உழவும் உழவு சார்ந்த தொழில்களும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயித்தன. உழவர்கள் சமுதாயத்தில் மதிப்புள்ளவர்களாக வாழ்ந்தனர். மனிதன் விலங்குகளை வேட்டையாடியும் ஆடுமாடுகளை மேய்த்தும் குறிஞ்சி, முல்லை நிலங்களில் வாழ்ந்த காலத்தில் அந்நிலங்களில் வரகு சாமை, தினை முதலியவற்றையும், உளுந்து, பயறு, அவரை முதலியவற்றையும் விளைவித்தான். மருதநிலத்தில் வயல்களில் விளைந்த நெற்பயிரை பாதுகாத்தலில் உழவர்களில் ஆடவரும் மகளிரும் ஈடுபட்டனர்.

இலக்கியங்களில் உழவுத் தொழில்:

                 உழவர்கள் உழுத உழவினை நல்லேர் நடந்த நகைசால் விளை வயல்'

     என்கிறது சங்க இலக்கியம். 'நெல்மலிந்த மனை பொன் மலிந்த மறுகு' என்கிறது புறநானூறு.'ஏரின் உழாஅர் உழவர்' என்கிறது திருக்குறள். அதோடன்றி சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் உழவுத்தொழில் பற்றிய குறிப்புகள் மிகுதியாகக் காணப்படுகின்றன

உழவின் சிறப்பு:

       உழவு அனைத்துத் தொழில்களுக்கும் மையமாக விளங்குகிறது.தன்னையும் தன்னைச் சார்ந்தோரையும் காப்பாற்ற உழவுத் தொழிலை அறத்துடன் செய்தனர் உழவர். சேமிப்பின் அவசியத்தை தானியக் குதிர்கள் மூலம் அறியலாம். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும்பங்காற்றி வரும் இத்தொழிலே, உலகில் நடைபெறும் அனைத்து தொழில்களுக்கும் தலைமைத் தொழிலாகும்.' உழுவார் உலகத்தார்க்கு அச்சாணி' எனும் வள்ளுவர் வழி இதனை அறியலாம்.

உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்:

        உழவர் சேற்றில் கால் வைத்தால்தான் உலகமக்கள் சோற்றில் கை வைக்க முடியும். 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' எனும் சிறப்புப் பெற்று, மழை வெயில் பாராமல் உழைக்கின்ற உழவரையும் உழவுத் தொழிலையும் நாம் வணங்கிப் போற்றினால் இவ்வுலகம் நிலைபெறும்.

முடிவுரை:                                                                                                          

      'சுழன்றும் ஏர்பின்னது உலகம்' என்கிறார் வள்ளுவர். 'கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி' என்கிறார் மருதகாசி. உழவையும், உழவரையும் அழிவிலிருந்து காப்பது நம் அனைவருடைய கடமையாகும். இயற்கையை வணங்குவோம்; உழவினைப் போற்றுவோம்.                                           (அல்லது)

) தலைப்பு : சுற்றுச்சூழல் பாதுகாப்பும், நமது கடமையும்

முன்னுரை:

     மனித வாழ்க்கை இயற்கையோடு பின்னிப் பிணைந்தது. காற்று, நீர், நிலம் ஆகிய இயற்கை வளங்கள் இல்லாமல் உயிர்வாழ்வு சாத்தியமில்லை. ஆனால் மனிதனின் சுயநலச் செயல்களால் இன்று சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இயற்கையைப் பாதுகாப்பது நமது கடமையாகும்.

 

மாசு தவிர்ப்போம் :

      தொழிற்சாலைகளின் புகை, வாகனங்களின் புகை, கழிவுகளை முறையற்ற வகையில் கொட்டுதல் போன்றவை சுற்றுச்சூழல் மாசுக்கு காரணமாகின்றன. இம்மாசுகள் மனித ஆரோக்கியத்தையும் இயற்கை சமநிலையையும் கெடுக்கின்றன. ஆகையால் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தல், மரம் நடுதல், கழிவுகளை சரியாக நிர்வகித்தல் மூலம் மாசை தவிர்க்க வேண்டும்.

மழைநீர் சேமிப்போம் :

     நீரில்லா வாழ்க்கை இல்லை. நிலத்தடி நீர் மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவது கவலைக்கிடமானது. இதனைத் தடுப்பதற்கு மழைநீர் சேமிப்பு மிக அவசியம். வீடுகளிலும் பள்ளிகளிலும் மழைநீர் சேமிப்பு அமைப்புகளை அமைத்து நீரை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும்.

நில வளம் காப்போம் :

      நிலம் மனிதனின் அடிப்படை வளமாகும். ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் அதிகம் பயன்படுத்தப்படுவதால் நிலத்தின் வளம் குறைகிறது. இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல், மரங்களை வெட்டாமல் பாதுகாத்தல் மூலம் நில வளத்தை காக்கலாம்.

சுற்றுச்சூழல் போற்றுவோம் :

      சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசின் பொறுப்பு மட்டுமல்ல; ஒவ்வொரு குடிமகனின் கடமையும் ஆகும். இயற்கையை நேசித்து, அதனைப் பாதுகாக்கும் செயல்களில் ஈடுபட வேண்டும். சிறிய முயற்சிகளும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

முடிவுரை :

     இயற்கை நம்மை வாழவைக்கிறது; அதனை காப்பது நமது பொறுப்பு. மாசு தவிர்த்து, மழைநீரை சேமித்து, நில வளத்தைப் பாதுகாத்து, சுற்றுச்சூழலை போற்றினால் மட்டுமே எதிர்கால தலைமுறைக்கு ஒரு பசுமையான உலகை அளிக்க முடியும். இன்று நாம் செய்யும் செயல்களே நாளைய உலகை தீர்மானிக்கும்.

8

 பதிவிறக்கம் செய்ய


Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை