சென்னை மாவட்டம்
ஒரு மதிப்பெண் அடைவுத்தேர்வு விடைக்குறிப்புகள் –
ஜனவரி 2026
பத்தாம் வகுப்பு - தமிழ்
கொடுக்கப்பட்ட
நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் வினையினையும்
சேர்த்து எழுதவும்.
1 . படர்க்கைப் பெயரைக் குறிப்பது எது?
அ) யாம்
ஆ) நீவிர் இ) அவர் ஈ) நாம்
2. "மகிழுந்து வருமா?" என்பது -
அ) விளித்தொடர் ஆ) எழுவாய்த்தொடர் இ)
வினையெச்சத்தொடர் ஈ)
4. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்
அ) எந்+தமிழ்+நா ஆ) எந்த+தமிழ்+நா இ)
எம்+தமிழ்+நா ஈ) எந்தம் +தமிழ்+நா
3. வேர்க்கடலை, மிளகாய் விதை,மாங்கொட்டை
ஆகியவற்றைக் குறிப்பது-
அ)
குலைப் பெயர்வகை ஆ)மணிப் பெயர்வகை இ) கிளைப்பெயர்வகை ஈ) இலைப் பெயர்வகை
5. பசுமையான--யைக்--கண்ணுக்கு நல்லது
தொடருக்குப் பொருத்தமான தொழிற்பெயர்களைத் தேர்க
அ) மரம்;
குளிர்ச்சி ஆ) பூக்கள்; காட்சி இ) காட்சி; காணுதல் ஈ)
புல்வெளி கண்டு
6. செய்தி 1 ஒவ்வோர் ஆண்டும் சூன் 15-ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்
செய்தி 2
காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப்
பெருமையே. செய்தி 3 காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக்
கடல்கடந்து வணிகம்செய்து அதில், வெற்றி கண்டவர்கள்
தமிழர்கள்!
அ) செய்தி 1 மட்டும் சரி ஆ) செய்தி 1, 2 ஆகியன சரி
இ)
செய்தி 3 மட்டும் சரி ஈ) செய்தி 1, 3 ஆகியன சரி
7. கீரை என்ற சொல்லின் கூட்டப் பெயரைத் தேர்க.
அ)
கட்டு ஆ) குலை இ) குவியல் ஈ)தாறு
8. "மையோமர கதமோமறி கடலோ மழைமுகிலோ" இப்பாடல் அடியில் குறிப்பிடப்படாத
நிறத்தைக் கண்டறிக
அ) கருமை ஆ) பச்சை இ) பழுப்பு ஈ) நீலம்
9. காலில் அணியும் அணிகலனைக் குறிப்பது
அ)
சுட்டி ஆ) கிண்கிணி இ) குழை ஈ) சூழி
10. மார்கழித் திங்கள்-இச்சொல்லின் தொகையைத் தேர்க
அ)
பண்புத்தொகை ஆ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை
இ)
அன்மொழித்தொகை ஈ) உருபும் பயனும்
உடன்தொக்கத்தொகை
11. 'எழுது என்றாள்' என்ற தொடர் அடுக்குத்தொடர்
இடம்பெறுமாறு அமைந்து வருவதைத் தேர்க
அ)
எழுது எழுது என்றாள் ஆ) எழுதிப் படி என்றாள்
இ)
எழுதிக்காட்டு என்றாள் ஈ) விரைவாக எழுது என்றாள்
12. மேன்மை தரும் அறம் என்பது
அ)
கைம்மாறு கருதாமல் அறம் செய்வது
ஆ)
மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது
இ)
புகழ் கருதி அறம் செய்வது ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது
13. பழமொழிகளைப் பொருத்துக:
(A) உப்பிட்டவரை - (i) மூன்று நாள்
(B) விருந்தும் மருந்தும் - (ii) அமிர்தமும் நஞ்சு
(C) ஒரு பானை சோற்றுக்கு - (iii)
உள்ளளவும் நினை
(D) அளவுக்கு மீறினால் - (iv) ஒரு சோறு பதம்
அ) A-ii. B-1, C-iv, D-iii ஆ) A-ii, B-iv, C-i,
D-iii இ) A-iii.
B-i, C-iv, D-li ஈ)
A-iv, B-iii, C-i, D-ii
14. ஊரின் நடுவில் நச்சுமரம் பழுத்தது போன்றது என்ற தொடருக்குப் பொருத்தமான
பொருளைத் தரும் திருக்குறள் அடியைத் தேர்க
அ)
மெய்ப்பொருள் காண்ப தறிவு ஆ) நடு ஊருள் நச்சு மரம் பழுத்தற்று
இ)
நாள்தொறும் நாடு கெடும் ஈ) உயிரினும் ஓம்பப் படும்
15. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது
அ)
திருக்குறள் ஆ) புறநானூறு இ) கம்பராமாயணம் ஈ) சிலப்பதிகாரம்
15. பின்வருவனவற்றுள் முறையான தொடர்'
அ)
தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு
ஆ)
தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு
இ)
தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு
ஈ)
தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு
17. வெற்றி வேற்கை என்ற நூலின் வேறுபெயர்
அ)
குறுந்தொகை ஆ) நற்றிணை இ) நைடதம் ஈ) நறுந்தொகை
18. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில்
பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது
அ)
வேற்றுமை உருபு ஆ) எழுவாய் இ) உவம உருபு ஈ) உரிச்சொல்
19. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் --
அ)
அகவற்பா ஆ) வெண்பா இ) வஞ்சிப்பா ஈ) கலிப்பா
20. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர்
அ)
அமைச்சர், மன்னன் ஆ) அமைச்சர், இறைவன்
இ)
இறைவன், மன்னன் ஈ)
மன்னன், இறைவன்
21. தயிர்குடம் - தொகைச்சொல்லை விரித்து எழுதக் கிடைக்கும் சரியான சொல்லைத்
தேர்க
அ)
மண்ணால் ஆன குடம் ஆ) மோர் ஊற்றும் குடம்
இ)
பாலை வைக்கும் குடம் ஈ) தயிரை உடைய குடம்
22. உரைத்த - உரை+த்+த்+அ பகுபத உறுப்புகளில் 'அ'
என்பது
அ)
வினைமுற்று விகுதி ஆ) தொழிற்பெயர் விகுதி இ) வினையெச்ச விகுதி ஈ) ஈ) பெயரெச்ச
விகுதி
23. 'விருந்தே புதுமை' என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.
இவ்விடைகேற்ற பொருத்தமான வினாவைத் தேர்க
அ)
தொல்காப்பியர் கூறிய விருந்து குறித்த கருத்து இன்று பொருந்துமா?
ஆ)
விருந்து குறித்து தொல்காப்பியர் குறிப்பிட்ட கருத்துகள் யாவை?
இ)
புதுமையான விருந்தோம்பல் என்பது எது?
ஈ)
விருந்து பற்றித் தொல்காப்பியர் கூறியுள்ள கருத்து யாது?
24. பொருத்தி விடையைத் தேர்க.
(A)
Hospitality - (i) புதுமனை
புகுவிழா
(B) House
warming - (ii) செல்வம்
(C) Feast - (iii) விருந்தோம்பல்
(D) Wealth - (iv) விருந்து
அ) A-ii, B-i, C-iv, D-iii ஆ) A-iii. B-iv, C-1,
D-ii இ) A-iii.
B-iv, C-ii, D-I ஈ)
A- iii, B-I, C- IV, D-II
25. பரிபாடல் அடியில் 'விசும்பில், இசையில்' ஆகிய சொற்கள் குறிப்பவை எவை?
அ)
வானத்தையும் பாட்டையும் ஆ) வான்வெளியில், பேரொலியில்
இ)
வானத்தில், பூமியையும் ஈ) வானத்தையும் பேரொலியையும்
26. கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது' - தொடரில்
இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே
அ)
பாடிய கேட்டவர் ஆ) பாடல் பாடிய இ) கேட்டவர்;
பாடிய ஈ) பாடல்; கேட்டவர்
27. நண்பா எழுது! தொடர்வகையைத் தேர்க
அ)
விளித்தொடர் ஆ) எழுவாய்த்தொடர்
28. தூக்குமேடை என்னும் நாடகத்தின் பாராட்டுவிழாவில்தான் கலைஞர் என்ற
சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது இத்தொடருக்கான சரியான வினா எது?
அ) தூக்குமேடை
நாடகத்தில் நடித்தவர் யார்?
ஆ)
கலைஞர் என்ற சிறப்புப்பெயர் எப்போது வழங்கப்பட்டது?
இ)
தூக்குமேடை என்பது திரைப்படமா?
நாடகமா?
ஈ)
யாருக்குப் பாராட்டுவிழா நடத்தப்பட்டது?
29. பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க.
அ)
கொண்டல் - 1. மேற்கு
ஆ)
கோடை - 2. தெற்கு
இ) வாடை
- 3. கிழக்கு -
ஈ)
தென்றல் - 4. வடக்கு
அ) 1,2,3,4 ஆ) 3.1.4.2 இ) 4.3.2.1 ஈ) 3.4.1.2
30. நச்சிலைவேல் கோக்கோதை நாடு, நல்யானைக் கோக்கிள்ளி
நாடு இத்தொடர்களில் குறிப்பிடுகின்ற நாடுகள் முறையே
அ) பாண்டியநாடு,
சேரநாடு ஆ) சோழநாடு, சேர நாடு
இ)
சேர நாடு, சோழநாடு ஈ) சோழ நாடு, பாண்டியநாடு
31. காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்' நிலத்துக்கு நல்ல
உரங்கள். இத்தொடரில் இத்தொடரில்
அடிக்கோடிட்ட
பகுதி குறிப்பிடுவது
இ)
தாளும் ஓலையும் ஈ) சருகும் சண்டும்
32. காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர் எது?
அ)
இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது
இ) இகழ்ந்தால்
இறந்துவிடாது என்மனம் ஈ) என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்
33. ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி" - இச்செய்யுள்
அடியில் இடம்பெற்றுள்ள எண்ணுப்பெயரின் தமிழ் எண்ணைத் தேர்க
அ) க000 ஆ) ங00 இ) அ00 ஈ) எ000
34. கூற்று1: போராட்டப் பண்புடனே வளர்ந்தவர் கலைஞர்
கூற்று 2: அவருக்குள் இருந்த கலைத்தன்மை வளர
அது உதவியது
அ)
கூற்று 1 சரி 2 தவறு ஆ) கூற்று 1 மற்றும் 2 தவறு
இ)
கூற்று 1 தவறு 2 சரி ஈ) கூற்று 1
மற்றும் 2 சரி
35. தமிழ்மொழிக்காக மாநாடு நடத்திய முதல் நாடு
அ)
அமெரிக்கா ஆ) மலேசியா இ) சிங்கப்பூர் ஈ) சீனா
36. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட
அறியாமல்
கொடுப்பவன்
என்றும் பாராட்டப்படுவோர் யாவர்?
அ)
உதியன் சேரலாதன் ஆ) அதியன்;
பெருஞ்சாத்தன்
இ)
பேகன்; கிள்ளிவளவன் ஈ) நெடுஞ்செழியன்; திருமுடிக்காரி
37. கான் + அடை சரியான பொருளைத் தேர்க
அ)
காலில் நடத்தல் ஆ) காலால் நடத்தல் இ) காட்டைச் சேர் ஈ) காட்டுக்கு நடத்தல்
38. அமர்ந்தான் சொல்லுக்கான சரியான பகுபத உறுப்பிலக்கணத்தைத் தேர்க
அ)
அமர்+த்(நீ)+த்+ஆன் ஆ) அமர்ந்+த்)+த்+ன் இ) அமர்+ந்(த்)+த்+ஆன் ஈ)
அமர்ந்+த்(ந்)+த்+ன்
39. இரவிந்திரநாத் தாகூர் --மொழியில் எழுதிய கவிதைத்
தொகுப்பான கீதாஞ்சலியை--- மொழியில், மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு நோபல்பரிசு
கிடைத்தது.
அ)
ஆங்கில, வங்காளம் ஆ) வங்காள, ஆங்கில இ) வங்காள, தெலுங்கு ஈ)
தெலுங்கு, ஆங்கில
40. காசிக்காண்டம் என்பது
அ)
காசி நகரத்தின் வரலாற்றைப்பாடும் நூல் ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்
இ)
காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல் ஈ) காசி நகரத்திற்கு
வழிப்படுத்தும் நூல்
41. குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்
அ)
முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள் ஆ) குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்
இ)
குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள் ஈ) மருதம், நெய்தல், பாலை நிலங்கள்
42. பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க' என்று ------,------வேண்டினார்.
அ)
கருணையன், எலிசபெத்துக்காக ஆ) எலிசபெத், தமக்காக
இ)
கருணையன், பூக்களுக்காக ஈ) எலிசபெத், பூமிக்காக
43. மாலவன் குன்றம் போனாலென்ன? வேலன் குன்றமாவது
எங்களுக்கு வேண்டும்" மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே --
அ)
திருப்பதியும் திருத்தணியும் ஆ) திருத்தணியும் திருப்பதியும்
இ)
திருப்பதியும் திருச்செந்தாகும் ஈ) திருப்பரங்குன்றமும் பழனியும்
44. விருந்தினரைப்
பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால் தன் கருங்கோட்டுச் சிரியாழைப் பணையம் வைத்து
விருந்தளித்தான் என்கிறது புறநானூறு'. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை
அ)
நிலத்திற்கேற்ற விருந்து ஆ) இன்மையிலும் விருந்து
இ)
அல்லிலும் விருந்து ஈ) உற்றாரின் விருந்து
45. வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி விருது பெற்றுத் தந்த நூல் எது?
அ)
ஒரு சிறு இசை ஆ) முன்பின் இ) அந்நியமற்ற நதி ஈ) உயரப் பறத்தல்
46. நன்மொழி என்பது
அ)
பண்புத்தொகை ஆ) உவமைத்தொகை இ)
அன்மொழித்தொகை ஈ) உம்மைத்தொகை
47. கீழ்க்காண்பனவற்றுள் எந்த இலக்கியம் பிறமொழிப் படைப்பினைத் தழுவித்
தமிழில் படைக்கப்பட்டது?
அ)
திருக்குறள் ஆ) கம்பராமாயணம் இ) கலித்தொகை ஈ) சிலப்பதிகாரம்
48. இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்
அ)
நாட்டைக் கைப்பற்றுதல் ஆ) ஆநிரை கவர்தல்
இ)
வலிமையை நிலைநாட்டல் ஈ) கோட்டையை முற்றுகையிடல்
49. சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க.
அ)
உழவு, மண், ஏர், மாடு ஆ) மண், மாடு,
ஏர் உழவு
இ)
உழவு, ஏர், மண், மாடு ஈ) ஏர் உழவு மாடு மண்
50. 'மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம்வைத்தும்' என்னும் சின்னமனூர் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி
அ)
சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது ஆ) காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு
இருந்தது
இ)
பக்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
ஈ)
சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
51. 'காலின் ஏழடிப் பின் சென்று விருந்தினரை வழியனுப்பிய செய்தியை எடுத்துரைக்கும்
நூலைத் தேர்க,
அ)
பொருநராற்றுப்படை ஆ) நற்றிணை இ) புறநானூறு ஈ ) சிலப்பதிகாரம்
52. குண்டலமும் குழைகாதும் - இலக்கமாக் குறிப்பைத் தேர்க
அ)
வியங்கோள் வினைமுற்று ஆ) உவமைத்தொகை இ) எண்ணும்மை
ஈ)தொழிற்பெயர்கள்
53. பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க
அ. வீகதென்றல் - 1. பண்புத்தொகை
ஆ)
செங்காந்தள் - 2. உவமைத்தொகை
இ)
மதுரை சென்றார். - 3. வினைத்தொகை
ஈ)
மலர்க்கை - 4. வேற்றுமைத்தொகை
அ) 1.2.3.4 ஆ) 3.1.4.2 இ) 4.3.2.1 ஈ) 3,4,1,2
54. சித்திரை, வைகாசி மாதங்களை ----காலம் என்பர்.
அ)
முதுவேனில் ஆ) பின்பனி இ) முன்பனி ஈ) இளவேனில்
55. 'மொழி ஞாயிறு என்று அழைக்கப்படுபவர்
அ)
தேவநேயப் பாவாணர் ஆ) இரா. இளங்குமரனார் இ) பாரதியார் ஈ) பாரதிதாசன்
56. ஆறப்போடுதல் என்ற மரபுத் தொடருக்குரிய சரியான பொருளைத் தேர்க
அ)
பெரிய கோட்டை கட்டுதல் ஆ) இல்லாததைக் கற்பனைச் செய்தல்
இ
வேலையைத் தள்ளிப் போடுதல் ஈ) அதிகமாகச் செலவு செய்தல்
57.தானியங்களைக் குறிக்கும் சொற்களைப் பொருத்துக
A) நெல் - i) விதை
B) சுத்தரி - ii) பயறு
C) வேம்பு - (iii) கூலம்
D) உளுந்து – iv) முத்து
அ) A-ii, B-IC-iv, D- ஆ) A-ili, B-iv, C-1,
D-li இ) A-B-1,
C-iv, D-ii ஈ) A-iv.
Bil, C-D-1
58, எட்டுத்தொகை அல்லாத நூலைத் தேர்க,
அ)
குறுந்தொகை ஆ) பரிபாடல் இ) முத்தொள்ளாயிரம் ஈ) கலித்தொகை
59. கூட்டுநிலைப் பெயரெச்சம் இடம்பெற்ற தொடரைத் தேர்க
அ) விளித்தொடர் ஆ) வருக! வருக! இ) சொல்லத் தக்க செய்தி ஈ) மற்றொன்று கிடைத்தது
60. உவப்பின் காரணமாக அஃறிணையை உயர்திணையாகக் கொள்வது
அ)
இட வழுவமைதி ஆ) பால் வழுவமைதி இ) திணை வழுவமைதி ஈ) கால
வழுவமைதி
பாடலைப்
படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.
"பூக்கையைக்
குவித்துப் பூவே
புரிவொடு
காக்கென்று அம்பூஞ்
சேக்கையைப் பரப்பி இங்கண்
திருந்திய அறத்தை
யாவும்"
61. இப்பாடலின் ஆசிரியர்
அ)
வீரமாமுனிவர் ஆ) நாகூர் ரூமி இ) அழகிரிசாமி ஈ) அசோகமித்திரன்
62. இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல்
அ)
கம்பராமாயணம் ஆ) தேம்பாவணி இ) இரட்சணிய யாத்திரிகம் ஈ)
சீறாப்புராணம்
63. பாடலில் உள்ள எதுகைச் சொற்களைத் தேர்ந்தெடுக்க
அ)
பூக்கையை, புரிவொடு ஆ) சேக்கையை, திருந்திய
இ)
பூக்கையை, சேக்கையை ஈ) சேக்கையை, பரப்பி
64. சேக்கை என்ற சொல்லின் பொரள்
அ)
உடல் ஆ) படுக்கை இ) கிளை ஈ) இளம்பயிர்
உந்தி
உணர்வெழுப்ப உள்ளக் கனல்மூளச்
செந்தா மரைத்தேனைக்
குடித்துச் சிறகார்ந்த
அந்தும்பி
பாடும் அதுபோல யாம்பாடி
முந்துற்றோம்
யாண்டும் முழங்கத் தனித்தமிழே!"
65. பாடலின் ஆசிரியர்
அ) பாரதியார்
ஆ) பாவலரேறு பெருஞ்சித்திரனார் இ) பாரதிதாசன் ஈ) கண்ணதாசன்
66. பண்புத்தொகையைத் தேர்ந்தெடுக்க
அ) செந்தாமரை
ஆ) வீகதென்றல் இ) உணர்வெழுப்ப ஈ) சிறகார்ந்த
67. தும்பி என்னும் சொல்லுக்கான பொருளைத் தேர்க.
அ) கனல் ஆ)
உந்தி இ) யாண்டும் ஈ) வண்டு
68. பாடல் இடம்பெற்றுள்ள நூல்
அ)
உலகியல் நூறு ஆ) பாவியக்கொத்து இ) கனிச்சாறு ஈ) நூறாசிரியம்
"விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கரு வளர் வானத்து
இசையில் தோன்றி,
உரு
அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிளர்ந்த
ஊழி ஊழ் ஊழியும்"
69. பாடல் இடம் பெற்ற நூல் –
அ) புறநானூறு ஆ) அகநானூறு இ) பரிபாடல் ஈ) பதிற்றுப்பத்து
70. இப்பாடலை இயற்றியவர் –
அ)
கீரந்தையார் ஆ) குலசேகராழ்வார் இ) அதிவீரராம பாண்டியர் ஈ) பெருங்கௌசிகனார்
71. பாடலில் இடம்பெற்றுள்ள எதுகை நயத்தைக் கண்டறிக.
அ) கரு வளர்- உரு அறிவாரா ஆ)உரு அறிவாரா - உந்து வளி
இ)
விசும்பில் - கரு வளர் ஈ) விகம்பில் வானத்து
ஓங்கு
தண் பணைசூழ் நீப வனத்தை நீத்து ஒரு போதேனும்
நீங்குவம்
அல்லேம் கண்டாய் ஆயினும் நீயும் வேறு
தீங்கு
உளை அல்லை காடன் செய்யுளை இகழ்தலாலே
ஆங்கு
அவன் இடத்தில் யாம் அருளினால் வந்தேம் என்னா"
72. விகம்பு என்ற சொல்லின் பொருள் –
அ) மழை ஆ) காற்று இ) வானம் ஈ) நீர்
73. பாடல் இடம் பெற்ற நூல்
அ)
புறநானூறு ஆ) அகநானூறு இ) பரிபாடல் ஈ) திருவிளையாடற் புராணம்
74. இப்பாடலை இயற்றியவர்
அ) கீரந்தையார்
ஆ) பரஞ்சோதி முனிவர் இ) அதிவீரராம பாண்டியர் ஈ) பெருங்கௌசிகனார்
75. பாடலில் இடம்பெற்றுள்ள அடிஎதுகை நயத்தைக் கண்டறிக
அ)
பணைகுழ் – ஒருபோதேனும் ஆ) அல்லேம். ஆயினும்
இ)
ஓங்குநீங்குவம் ஈ)
இடத்தில் -இகழ்தலாலே
76. தண்பணை என்ற சொல்லின் பொருள்
அ)
பனைமரம் ஆ) குளிர்ந்த வயல் இ) பனங்காடு ஈ) கடம்பவனம்
வண்ணமும் கண்ணமும் தண்நறுஞ்
சாந்தமும்
பூவும் புகையும் மேவிய
விரையும்
பகர்வனர் திரிதரு நகர
வீதியும்
பட்டினும் மயிரினும்
பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர்
இருக்கையும்"
77.பாடல் இடம்பெற்றுள்ள நூலைத் தேர்க
அ)
கம்பராமாயணம் ஆ) சிலப்பதிகாரம் இ காசிக்காண்டம் ஈ) தேம்பாவணி
78.
பாடலின் ஆசிரியர்
அ) கம்பர் ஆ)
வீரமாமுனிவர் இ) சீத்தவைச் சாத்தனார் ஈ)இளங்கோவடிகள்
80.
காருகர்-இச்சொல்லின் பொருளைத் தேர்க
79) சீர் எதுகைசொல்லைத் தேர்க
அ) வண்ணமும்
– இருக்கையும் ஆ) பூவும்-புகையும்
இ) வண்ணமும்-சுண்ணமும் ஈ) பட்டினும்- நூலினும்
80) காருகர் இச்சொல்லின் பொருளைத் தேர்க
அ) நெய்பவர் ஆ) சிற்பி இ) ஓவியர் ஈ) உமணர்
81) சுண்ணம் – இச்சொல்லின் பொருளைத் தேர்க
அ) பவளம் ஆ)
நறுமணப்பொடி இ) செல்லம் ஈ) பட்டு
செம்பொ
னடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடத்
திருவரை யரைஞா
ணரைமணி யொடு மொளி திகழரை வடமாடப்
பைம்பெ
னகம்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாட
பட்ட நுதற்பொலி
பொட்டொடு வட்டச் கட்டி பதிந்தாடக்"
82.
பாடலின் ஆசிரியரைத் தேர்ந்தெடுக்க
அ) அதிவீரராம
பாண்டியர் ஆ) குமரகுருபரர் இ) கீரந்தையார் ஈ) பெருஞ்சித்திரனார்
83.
பாடலில் இடம்பெற்றுள்ள அசும்பிய என்ற சொல்லுக்கான பொருள்
அ)
அணிகலன் ஆ) மலர்ந்த இ) ஒளிவீசுகிற ஈ) துளிர்த்த
84.
சீர் எதுகையைத் தேர்க
அ)
பட்ட நகற்பொலி – பொட்டொடு ஆ) கிங்
கிணியோடு - தொந்தி யொடு
இ) செம்பொ
னடிச்சிறு - சிலம்பு ஈ) பண்டி சரிந்தாட
- பதிந்தாட
85.
பண்டி என்ற சொல்லின் பொருளைத் தேர்க
அ) தலை ஆ) வயிறு இ) இடை ஈ) நெற்றி
நந்தின் இளஞ்சினையும்
புன்னைக் குவிமொட்டும்
பந்தர் இளங்கமுகின்
பாளையும் சிந்தித்
திகழ்முத்தம் போல்தோன்றும்
செம்மற்றே தென்னன்
நனைமுத்த வெண்குடையான் நாடு
86.
பாடல் இடம்பெற்றுள்ள நூலைத்தேர்க
அ) முத்தொள்ளாயிரம்
ஆ) சிலப்பதிகாரம் இ) காசிக்காண்டம் ஈ) தேம்பாவணி
87.
பாடலின் ஆசிரியர்
அ)
கம்பர் ஆ) வீரமாமுனிவர் இ) அறியப்படவில்லை ஈ) இளங்கோவடிகள்
88.
அடி எதுகையைத் தேர்க
அ)
இளஞ்சினையும் – குவிமொட்டும் ஆ) பந்தர் - சிந்தி
இ.
திகழ்முத்தம்- நகைமுத்த ஈ) நந்தின் பந்தர்
89.
கமுகு -இச்சொல்லின் பொருளைத் தேர்க.
அ)
முத்து ஆ) பாக்கு இ) சங்கு ஈ)சேறு
90.
பாடலில் இடம்பெற்றுள்ள அணியைத் தேர்க
அ)
தற்குறிப்பேற்ற அணி ஆ) வஞ்சப்புகழ்ச்சி அணி இ) உருவக அணி ஈ) உவமையணி
91.
பாடலில் உள்ள வினைத்தொகை,
பண்புத்தொகைச் சொற்களைத் தேர்க
அ)
திகழ்முத்தம்,
குவிமொட்டு ஆ) இளங்கமுகு, பாளை
இ)
குவிமொட்டு, இளங்கமுகு ஈ)
பந்தர், போர் ஏறி
"உண்டா யின்பிறர்
உண்ணத் தருவேன்;
இல்லா யின்னமர் இல்லம்
தட்டுவேன்
வண்டா யெழுந்து மலர்களில்
அமர்வேன்
வாய்ப்புறத் தேனை
ஊர்ப்புறந் தருவேன்!
பண்டோர் கம்பன், பாரதி,
தாசன்
சொல்லா தனசில சொல்லிட முனைவேன்"
93.கவிஞருக்கு
உவமையாகக் கூறப்பட்டதைத் தேர்க.
அ)
வண்டு ஆ) காற்று இ) அன்னம் ஈ) மழை
92.
பாடலின் ஆசிரியர்
அ) கண்ணதாசன் ஆ) பாரதிதாசன் இ) வண்ணதாசன் ஈ)
பாரதியார்
94, பாடலில்
இடம் பெற்றுள்ள சீர்மோனை, சீர் எதுகைச் சொற்களைத் தேர்க
அ)
தருவேன், முனைவேன் ஆ)
உண்டாயின், அமர்வேன்
இ)
இல்லாயின், இல்லம் ஈ)
சொல்லாதன, பண்டோர்
95.
பாடல் இடம் பெற்றுள்ள கவிதையின் பெயரைத் தேர்க.
அ)
மேகம் ஆ) காலக்கணிதம் இ அக்கறை ஈ) கனிச்சாறு
"பகர்வனர் திரிதிரு
நகரவீதியும்;
பட்டினும் மயிரினும்
பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர்
இருக்கையும்;
தூசும் துகிரும் ஆரமும்
அகிலும்"
96.
இவ்வடிகள் இடம் பெற்ற நூல் எது?
அ)
சிலப்பதிகாரம் ஆ) கம்பராமாயணம் இ) முத்தொள்ளாயிரம் ஈ) பரிபாடல்
97.பாடலில்
உள்ள மோனையை எடுத்து எழுதுக.
அ)
பகர்வனர் - பட்டினும் ஆ) பட்டினும் – மயிரினும் இ) நகர வீதியும் இருக்கையும் ஈ)
காருகர் துகிரும்
98, எதுகைச்
சொற்களைத் தேர்க
அ)
காருகர் துகிரும் ஆ) பட்டினும் – மயிரினும் இ) பட்டினும் – கட்டு ஈ) ஆரமும் அகிலும்
99.
காருகர் பொருள் தருக
அ)
பிட்டு விற்போர் ஆ) நெய்பவர் இ) அப்பம் விற்போர் ஈ) ஓவியர்
100.
பாடலில் குறிப்பிடப்படும் நறுமணப் பொருளைத் தேர்க?
அ)
வெறுக்கை ஆ) சுண்ணம் இ) தூசு ஈ) துகிர்
பதிவிறக்கம் செய்ய 👇
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி