10 TH STD TAMIL ONEMARK QUESTIONS TEST ANSWER KEY KALLAKURICHI DISTRICT

 

கள்ளக்குறிச்சி மாவட்டம்

ஒரு மதிப்பெண் தேர்வுஜனவரி 2026

பத்தாம் வகுப்பு - தமிழ்

கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் வினையினையும் சேர்த்து எழுதவும்.

1. காலக்கணிதம் கவிதையில் இடம் பெற்ற தொடர்

அ) இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது  ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது 

இ) இகழ்ந்தால் இறந்துவிடாது என் மனம் ஈ) என் மனம் இறந்துவிடா டாது இகழ்ந்தால்

2. "காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்" நிலத்திற்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி

குறிப்பிடுவது

அ) இலையும் சருகும்  ஆ) தோகையும் சண்டும்  இ) தாளும் சருகும் ஈ) சருகும் சண்டும்

3. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்

அ) எந்+தமிழ்+நா  ஆ) எந்த+தமிழ்+நா இ) எம்+தமிழ்+நா ஈ) எந்தம்+தமிழ்+நா

4. கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது இத்தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும்

பெயரும் முறையே --

அ) பாடிய கேட்டவர் ஆ) பாடல்; பாடிய இ) கேட்டவர்; பாடிய  ஈ) பாடல் ; கேட்டவர்

5. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை

அ) குலை வகை ஆ) மணிவகை இ) கொழுந்து வகை  ஈ) இலை வகை

6. பரிபாடல் அடியில் 'விசும்பில் இசையில்' ஆகிய சொற்கள் குறிப்பவை எவை

அ) வானத்தையும் பாட்டையும்  ஆ) வான்வெளியில், பேரொலியில்

இ) வானத்தில், பூமியையும்  ஈ) வானத்தையும், பேரொலியையும்

7. செய்தி 1 - ஒவ்வோர் ஆண்டும் சூன் 15-ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

   செய்தி 2 - காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே. செய்தி 3 காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல்கடந்து வணிகம்செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்!

அ) செய்தி 1 மட்டும் சரி ஆ) செய்தி 1,2 ஆகியன சரி

இ) செய்தி 3 மட்டும் சரி ஈ) செய்தி 1, 3 ஆகியன சரி

8. பொருந்தும் விடைவரிசையைத் தேர்ந்தெடுக்க.

அ) கொண்டல் - 1. மேற்கு

ஆ) கோடை - 2. தெற்கு

இ) வாடை - 3. கிழக்கு

ஈ) தென்றல் – 4. வடக்கு

) 1.2.3.4  ) 3.1.4.2   ) 4.3.2.1   ) 3,4,1,2

9. மகிழுந்து வருமா?' என்பது -------

அ) விளித்தொடர்  ஆ) எழுவாய்ந்தொடர்  இ) வினையெச்சத்தொடர்   ஈ) பெயரெச்சத்தொடர்

10. அறிஞகுக்கு நூல், அறிஞரது நூய் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைந்தது -

அ) வேற்றுமை உருபு  ஆ) எழுவாய் இ) உவம உருபு    ஈ) உரிச்சொல்

11. பின்வருவனவற்றுள் முறையான தொடர் எது?

அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு.

ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.

இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.

ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு.        

12. காலில் அணியும் அணிகலனைக் குறிப்பது

அ) சுட்டி  ஆ) கிண்கிணி இ) குழை   ஈ) சூழி

13. காசிக்காண்டம் என்பது

அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்  ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்

இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்  ஈ) கரசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்

14. விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை-

அ) நிலத்திற்கேற்ற விருந்து  ஆ) இன்மையிலும் விருந்து

இ) அல்லிலும் விருந்து  ஈ) உற்றாரின் விருந்து.

15. நன்மொழி என்பது

அ) பண்புத்தொகை  ஆ) உவமைத்தொகை  இ) அன்மொழித்தொகை  (ஈ) உம்மைத்தொகை

 16. கீழ்க்காண்பனவற்றுள் எந்த இலக்கியம் பிறமொழிப் படைப்பினைத் தழுவித் தமிழில் படைக்கப்பட்டது?

அ) திருக்குறள்  ஆ) கம்பராமாயணம்  இ) கலித்தொகை  ஈ) சிலப்பதிகாரம்

17. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் இடைக்காடனாரிடம் அன்பு அன்பு வைத்தவர்

அ) அமைச்சர், மன்னன் ஆ) அமைச்சர், இறைவன்

இ) இறைவன், மன்னன்  ஈ) மன்னன், இறைவன்

18. உவப்பின் காரணமாக அஃறிணையை உயர்திணையாகக் கொள்வது

அ) இட வழுவமைதி ஆ) பால் வழுவமைதி இ) திணை வழுவமைதி ஈ) கால வழுவமைதி

19. இரவிந்திரநாத தாகூர் ------ மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை --==----மொழியில், மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு நோபல்பரிசு கிடைத்தது.

அ) ஆங்கில வங்காளம் ) வங்காள, ஆங்கில  இ) வங்காள, தெலுங்கு  ) தெலுங்கு, ஆங்கில

20. படர்க்கைப் பெயரைக் குறிப்பது எது?

அ) யாம் ஆ) நீவிர்  ) அவர்  ) நாம்

21. கூற்று 1: போராட்டப் பண்புடனே வளர்ந்தவர் கலைஞர்.

கூற்று 2: அவருக்குள் இருந்த கலைத்தன்மை வளர அது உதவியது.

அ) கூற்று 1 சரி 2 தவறு ஆ) கூற்று 1 மற்றும் 2 தவறு இ) கூற்று 1 தவறு 2 சரி  ஈ) கூற்று 1 மற்றும் 2 சரி

22. "மையோ மர கதமோ மறி கடலோ மழைமுகிலோ" இப்பாடல் அடியில் குறிப்பிடப்படாத நிறத்தைக் கண்டறிக.

அ) கருமை    ஆ) பச்சை    இ) பழுப்பு    ஈ) நீலம்

23. தூக்குமேடை என்னும் நாடகத்தின் பாராட்டுவிழாவில்தான், கலைஞர் என்ற சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது - இத்தொடருக்கான வினா எது?

அ) தூக்குமேடை நாடகத்தில் நடித்தவர் யார்? 

ஆ) கலைஞர் என்ற சிறப்புப்பெயர் எப்போது வழங்கப்பட்டது?

இ) தூக்குமேடை என்பது திரைப்படமா? நாடகமா?      ஈ) யாருக்குப் பாராட்டுவிழா நடத்தப்பட்டது?

24. சித்திரை, வைகாசி மாதங்களை-------- காலம் என்பர்.

அ) முதுவேனில் ஆ) பின்பனி  இ) முன்பனி  ஈ) இளவேனில்

25. குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்

அ) முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள் ஆ) குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்

இ) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள் ஈ) மருதம், நெய்தல், பாலை நிலங்கள்

26. சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க.

அ) உழவு, மண். ஏர். மாடு  ஆ) மண், மாடு, ஏர். உழவு

இ) உழவு, ஏர், மண், மாடு  ஈ) ஏர். உழவு, மாடு, மண்

27. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது

அ) திருக்குறள்  ) புறநானூறு  இ) கம்பராமாயணம்   ஈ) சிலப்பதிகாரம்

28. நச்சிலைவேல் கோக்கோதை நாடு, நல்யானைக் கோக்கிள்ளி நாடு -இத்தொடர்களில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே

அ) பாண்டிய நாடு, சேர நாடு ஆ) சோழ நாடு, சேர நாடு

இ) சேர நாடு, சோழ நாடு  ஈ) சோழ நாடு, பாண்டிய நாடு

29. இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்

அ) நாட்டைக் கைப்பற்றல் ஆ) ஆநிரை கவர்தல்

இ) வலிமையை நிலைநாட்டல்  ஈ) கோட்டையை முற்றுகையிடல்

30. 'மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்'

     மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே-

அ) திருப்பதியும் திருத்தணியும்  ஆ) திருக்கணியும் திருப்பதியும்

இ) திருப்பதியும் திருச்செந்தூரும்  ஈ) திருப்பரங்குன்றமும் பழனியும்

31. மேன்மை தரும் அறம் என்பது-

அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது

ஆ) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது

இ) புகழ் கருதி அறம் செய்வது   ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது.

32. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும்

    பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர் யாவர்?

அ) உதியன்: சேரலாதன் ஆ) அதியன்: பெருஞ்சாத்தன்

இ) பேகன் கிள்ளிவளவன்  ஈ) நெடுஞ்செழியன்: திருமுடிக்காரி

33. வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி விருது பெற்றுத் தந்த நூல் எது?

அ) ஒரு சிறு இசை  ஆ) முன்பின்  இ) அந்நியமற்ற நதி   ஈ) உயரப் பறத்தல்

34. பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று ----,----- வேண்டினார்.

அ) கருணையன், எலிசபெத்துக்காக  ஆ) எலிசபெத், தமக்காக

இ) கருணையன், பூக்களுக்காக  ஈ) எலிசபெத், பூமிக்காக

35. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்-

அ) அகவற்பா  ஆ) வெண்பா  இ) வஞ்சிப்பா  ஈ) கலிப்பா

36. மருதத் திணைக்குரிய பூ

அ) குரவம்  ஆ) செங்கழுநீர் இ) தோன்றி ஈ) காந்தள்

37. முல்லைத் திணைக்குரிய பறை

அ) துடி ஆ) தொண்டகம் இ) ஏறுகோட்பறை) மீன் கோட்பறை

38. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

     பொருளல்ல தில்லை பொருள் - இக்குறளில் இடம்பெற்றுள்ள அணி

அ) உவமையணி  ஆ) உருவக அணி

இ) சொல் பின்வருநிலையணி  ஈ) சொற்பொருள் பின்வரு நிலையணி ஈ) கலிப்பா

39. திருக்குறளில் அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை

) 38  ) 70  ) 25  ) 10

40.திருக்குறள் பொருட்பாலில் இடம் பெற்றுள்ள இயல்

அ) பாயிரவியல்  ஆ) களவியல்  ) துறவறவியல்  ) ஒழிபியல்

41. கூவியர் என்பவர்

)  நெய்பவர்  ) பிட்டு விற்பவர்  ) ஓவியர்  ) அப்பம் விற்பவர்

42. மணிமேகலையுடன் தொடர்புடைய காப்பியம்

அ) சீவக சிந்தாமணி   ஆ) சூளாமணி  இ) நீலகேசி  ) சிலப்பதிகாரம்

43. அடிகள் நீரே அருளுக" என்று கூறியவர்

அ) இளங்கோவடிகள்  ஆ) சீத்தலைச் சாத்தனார் இ) வீரமாமுனிவர் ஈ) பரஞ்சோதி முனிவர்

44, தகைமுத்த வெண்குடையான் நாடு என்பது

) பாண்டிய நாடு  ஆ) சேரநாடு  ) சோழநாடு  ) குடநாடு

45. நந்து என்பதன் பொருள்

) சேறு ஆ) முத்து  ) பாக்கு ) சங்கு

46. ஏர்க்களச் சிறப்பும் போர்க்களச் சிறப்பும் உடைய நாடு

அ) சோழநாடு  ஆ) சேரநாடு  இ) குட்ட நாடு  ) பாண்டிய நாடு

47. முத்தொள்ளாயிரத்தில்  அமைந்த பாவினம்

அ) வஞ்சிப்பா  ஆ) கலிப்பா இ) ஆசிரியப்பா ஈ) வெண்பா

48. ஆதிரை கவர்தல்

அ) காஞ்சித்திணை ஆ) வெட்சித்திணை இ) கரந்தைத் திணை ஈ) வஞ்சித்திணை

49. மண்ணாசை கருதிப் போருக்குச் செல்வது'

அ) தும்பைத் திணை ஆ) வாகைத்திணை இ) காஞ்சித்திணை  ஈ) வஞ்சிதிணை

50 ,மதிலின் நாற்புறமும் தமது படைவீரர்களுடன் சுற்றி வளைத்து முற்றுகை இடுவது

அ) பாடாண் திணை  ஆ) நொச்சித்திணை  இ) உழிஞைத் திணை  ) தும்பைத்திணை

51. நன்றும் தீதும் ஆய்தலும்  அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை' என்று கூறும் நூல்   

) புறநானூறு ஆ) நற்றிணை  இ) ஐங்குறநாறு  ) மதுரைக்காஞ்சி

52. தம்மைவிட வலிமை குறைந்தரோடு போர் செய்வது கூடாது என்று கூறியவர்

அ) நக்கீரர்  ஆ) ஊன் பொதிப் பசுங்குடையார் இ) பெருஞ்சித்திரனார்  ஈ) ஆவூர் மூலங்கிழார்

53. எழுவர் கொடைப் பெருமையைப் பற்றிப் பாடும் நூல்

அ) கலித்தொகை ஆ) சிறுபாணாற்றுப்படை இ) பெரும்பாணாற்றுப்படை ஈ) புறநானூறு

54. உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பதுதான்" என்று கூறியவர்.

அ) நல்வேட்டனார்  ஆ) நல்லதுவனார்  இ) கபிலர் ஈ) நச்செள்ளையார்

55. சேர மன்னர்களின் கொடைப் பதிவாக அமைந்துள்ள நூல்

அ) புறநானூறு  ஆ) சிறுபாணாற்றுப்படை இ) கலித்தொகை ஈ) பதிற்றுப்பத்து

56."கிழமை பட வாழ்" என்று கூறியவர்

அ) பூதன் தேவனார்  ஆ) ஔவையார்  ) பெருஞ்சாத்தன்  ஈ) கபிலர்

57.துணர் என்பதன் பொருள்

அ) மலர்கள் ஆ) மாலை இ) மணமலர் ஈ) இளம்பயிர்

58.வீரமாமுனிவருக்கு 'இஸ்மத் சன்னியாசி' என்ற  பட்டத்தை வழங்கியவர்

அ) சந்தாசாகிப்  ஆ) நாகூர் ரூமி  இ) செய்குத்தம்பிப் பாவலர்  ஈ) கம்பர்

59. தமிழின் முதல் அகராதி

அ) சதுர அகராதி  ஆ) பேரகராதி இ) பிங்கல நிகண்டு  ஈ) தொன்னூல் விளக்கம்

60.இஸ்மத் சன்னியாசி யாசி என்பது  எம்மொழிச் சொல்

அ) போர்ச்சுக்கீசியம் ஆ) பிரஞ்சு  இ) பாரசீகம்  ) துளு

61. கல்யாண்ஜியின் ஒரு சிறு இசை என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விரு வழங்கப்பட்ட ஆண்டு

அ) 2006  ஆ) 2016  இ) 2007  ) 2017

62. இலக்கணக் கட்டுக்கோப்பு குறைவாகவும் கவிதை வெளியீட்டுக்கு எளிதாகவும் இருப்பது

அ) வெண்பா ஆ) ஆசிரியப்பா  இ) கலிப்பா   ஈ) வஞ்சிப்பா

63. வெண்பாவின் வகைகள்

அ) மூன்று ஆ) நான்கு இ) ஐந்து  ஈ) ஆறு

64. ஆசிரியப்பாவின் வகைகள் மொத்தம்

அ) மூன்று ஆ) நான்கு இ) ஐந்து  ஈ) ஆறு

65. வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று முதலடி அளவடியாகவும், இரண்டாம் அடி சிந்தடியாகசும் வருவது

அ) சிந்தியல் வெண்பா ஆ) குறள் வெண்பா இ) இன்னிசை வெண்பா  ஈ) பஃறொடை வெண்பா

66. ஈரசைச் சீர் மிகுதியாகவும் காய்ச்சிர் குறைவாகவும் வருவது

அ) வெண்பா ஆ) அகவற்பா  இ) வஞ்சிப்பா  ஈ) கலிப்பா

67. இருவர் உரையாடுவது போன்ற ஒசை

அ) தூங்கலோசை ஆ) துள்ளலோசை இ) அகவலோசை ஈ) செப்பலோசை

68.கம்பரை ஆதரித்த வள்ளல்

அ) பெருஞ்சேரல் இரும்பொறை ஆ) சடையப்ப வள்ளல்

இ) இரண்டாம் குலோத்துங்கன்   ஈ) இராஜேந்திர சோழன்

69. முன்மனிக்குரிய மாதங்கள்

அ) மாசி, பங்குனி ஆ) ஐப்பசி, கார்த்திகை இ) மார்கழி, தை ஈ) ஆவணி, புரட்டாசி

70. பாலை நிலத்திற்குரிய சிறுபொழுது மற்றும் பெரும் பொழுது .

அ) யாமம் - குனிர்காலம், முன்பனிக்காலம் ஆ)  எற்பாடு - ஆறு பெரும்பொழுதுகள்

) நண்பகல் -இளவேனில், முதுவேனில், பின்பனி   ஈ) மாலை -கார்காலம்

71. திருவிளையாடல் புராணத்தை இயற்றியவர் .

அ) அதிவீரராம பாண்டியவர் ஆ) பெருஞ்சித்திரனார் இ) கம்பர் ஈ) பாஞ்சோதி முனிவர்

72. முரசுக்கட்டிலில் கண்ணயர்ந்த புலவர்

அ) பெருஞ்சேரல் இரும்பொறை ஆ) நக்கீரர் இ) மோசிகீரனார் ஈ) வெண்ணிக்குயத்தியார்

73.செழியன் வந்தது என்பது

அ) திணைவழு ஆ) இடவழு இ) மரபுவழு  ஈ) பால் வழு

74.என் அம்மை வந்தாள் என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது

அ) மரபு வழுவமைதி ஆ) திணை வழுவமைதி  இ) பால் வழுவமைதி ஈ) இடவழுவமைதி

75. அமைச்சர் நாளை விழாவிற்கு வருகிறார் என்பது

அ) கால வழுவமைதி  ஆ) திணை வழுவமைதி இ) பால் வழுவமைதி ஈ) மரபு வழுவமைதி

76. கலைஞரின் கதை வசனத்தில் பகுத்தறிவு பேசிய படம்

அ) திரும்பிப் பார்  ஆ) மணமகள்  இ) குறவஞ்சி ஈ) பராசக்தி

77. கலைஞரின் கதை வசனத்தில்  பெண்கள் முன்னேற்றம் பற்றி பேசிய படம்

அ) அரசிளங்குமரி  ஆ) இருவர் உள்ளம்  இ) நாம்  ஈ) ராஜகுமாரி

78. கலைஞரின் கதை வசனத்தில் இலக்கியம் பேசிய படம்

அ) மலைக்கள்ளன்  ஆ) இளவரசி இ) உளியின் ஓசை ஈ) பாசப்பறவைகள்

79. மனசாட்சி உறங்கும்போது மனக்குரங்கு ஊர் சுற்ற கிளம்பி  விடுகிறது' என்னும் கலைஞரின் வசனம் இடம் பெற்ற திரைப்படம்

அ) பூம்புகார் ஆ) ராஜா ராணி இ) மனோகரா ஈ) ராமானுஜர்

80. கலைஞர் நடத்திய கையெழுத்து ஏட்டின் பெயர்

அ) திராவிட நாடு  ஆ) தினகரன்  இ) இ) ஒருபைசா தமிழன் ஈ) மாணவ நேசன்

81. கலைஞர் உரை எழுதிய இலக்கண நூல்

அ) தொல்காப்பியம்  ஆ) குறளோவியம் இ) சங்கத்தமிழ் ஈ) நன்னூல்

82.உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற்ற ஆண்டு

அ) 2010 ஆ) 2012 இ) 2020  ஈ) 2005

83. கம்பர் இராமாயணத்திற்கு இட்ட பெயர்

அ) இராமாவதாரம்  ஆ) இராமாயணம்  இ) இராம வரலாறு ஈ) இராம நூல்

84.பண்என்னாம் பாடற் கியைபின்றேல்: கண்என்னாம்

     கண்ணோட்டம் இல்லாத கண் இக்குறளில் இடம்பெற்றுள்ள அணி

அ) உவமையணி  ஆ) எடுத்துக்காட்டு உவமையணி இ) தற்குறிப்பேற்ற அணி ஈ) வஞ்சப்புகழ்ச்சி அணி

85. " நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்

        நச்சு மரம்பழுத் தற்று  " இக்குறளில் இடம்பெற்றுள்ள

அ) உவமையணி ஆ) எடுத்துக்காட்டு உவமையணி இ) தற்குறிப்பேற்ற அணி ஈ) வஞ்சப்புகழ்ச்சி அணி

86. வடமொழியைத் தழுவி தமிழில் படைக்கப்பட்ட நூல்

அ) சிலப்பதிகாரம் ஆ) சீவக சிந்தாமணி  இ) திருக்குறள்  ஈ) கீதாஞ்சலி

87. திருவிளையாடல் புராணத்தில் இடம்பெறாத காண்டம்

அ) பாலகாண்டம்  ஆ) மதுரைக் காண்டம் இ) கூடற் காண்டம்  ஈ) திருவாலவாய்க் காண்டம்

88. 'பத்மகிரிநாதர் தென்றல்விடு தூது' என்ற நூலை இயற்றியவர்

அ) வெண்ணிக் குயத்தியார் ஆ) தனிநாயக அடிகள் இ) பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்ஈ) கரிகாலன்

89.பொருத்துக

அ) கிழக்கு   - அ) குடக்கு

ஆ) மேற்கு - ஆ) தென்றல்

இ) வடக்கு  - இ) குணக்கு

ஈ) தெற்கு  - ஈ) வாடை

அ) 1-, 2-, 3-, 4-   ஆ) 1-, 2-, 3-, 4-

இ) 1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ       ஈ) 1-இ, 2-ஆ, 3-அ, 4-ஈ

90. பண்ணோடு பாடப்பட்டுள்ள நூல்    அ) கனிச்சாறு ஆ) பரிபாடல் இ) புறநானூறு ஈ) ஔவை குறள்

91. பரிபாடலில் நமக்குக் கிடைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை   அ) 70  ஆ) 36 இ) 12  ) 24

92. அன்பால் கட்டினார் என்பது'

அ) எழுவாய்த் தொடர்  ஆ) வினைமுற்றுத் தொடர்  இ) பெயரெச்சத் தொடர்  ஈ) வேற்றுமைத் தொடர்

93. இடைச்சொல் தொடரைத் தேர்ந்தெடுக்க

அ) சாலச் சிறந்தது  ஆ) பாடி மகிழ்ந்தனர்  இ) அவரே சொன்னார் ஈ) காற்று வீசியது

94.ஒன்றுக்கு மேற்பட்ட எச்சங்கள் ச்சங்கள் சேர்ந்து பெயரைக் கொண்டு முடிவது

அ) அடுக்குத்தொடர்  ஆ) எழுவாய்த் தொடர்  இ) விளித்தொடர்  ஈ) கூட்டுநிலை பெயரெச்சம்

95.வடித்த கஞ்சி என்பது

அ) பெயரெச்சத் தொடர்  ஆ) வினையெச்சத் தொடர்  இ) வினைமுற்றுத்தொடர்  ஈ)உரிச்சொற்றொடர்

96. விருந்தே புதுமை என்று விருந்தினரைப் பற்றிக் கூறும் நூல்,

அ) சிலப்பதிகாரம்  ஆ) புறநானூறு  இ) தொல்காப்பியம் ஈ) நற்றிணை

97. மோப்பக் குழையும் அனிச்சம் என்று விருந்தினரை வரவேற்கும் முறையைக் கூறியவர்

அ) தொல்காப்பியர்  ஆ) கம்பர்  இ) திருவள்ளுவர்  ஈ) இளங்கோவடிகள்

98. காலின் ஏழடி பின் சென்று என்று விருந்தினரை வழியனுப்பி வைக்கும் முறையைக் கூறும் நூல்

அ) பொருநராற்றுப்படை  ஆ) சிறுபாணாற்றுப்படை  இ) குறுந்தொகை  ஈ) கலிங்கத்துப் பரணி

99. விருந்தினரும் வறியவரும் நெருங்கி உண்ண மேன்மேலும் முகம் மலரும் மேலோர் போல என்று விருந்திடுவோரின் முகமலர்ச்சியை கூறியுள்ள நூல்

அ) கலிங்கத்துப்பரணி  ஆ) சிறுபாணாற்றுப்படை  இ) புறநானாறு ஈ) நற்றிணை

100. கொற்கையின் அரசர்

அ) இளங்கோவடிகள் ஆ) செயங்கொண்டார் 

இ) கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி ஈ) அதிவீரராம பாண்டியன்

101. சீவலமாறன் என்று அழைக்கப்படுபவர்

அ) குமரகுருபரர் ஆ) அதிவீரராம பாண்டியர் இ) கம்பர்  ஈ) திருவள்ளுவர்

102.குண்டலமும் குழைகாதும் என்பதற்குரிய இலக்கணக்குறிப்பை தேர்க

அ) வியங்கோள் வினைமுற்று  ஆ) எண்ணும்மை  இ) உம்மைத்தொகை  ஈ) பெயரெச்சம்

103. தலையில் அணியும் அணிகலன்   அ) சூழி ஆ) சுட்டி இ) குண்டலம் ஈ) குழை

104. குமரகுருபரரின் காலம்'

அ) 17-ஆம் நூற்றாண்டு ஆ) 7-ஆம் நூற்றாண்டு இ) 16-ஆம் நூற்றாண்டு ஈ) 6-ஆம் நூற்றாண்டு

105. செங்கீரை பருவத்திற்குரிய மாதம்

அ) 3-4  ஆ) 4-5  இ) 5-6  ஈ) 6-7

106. அண்ணன் தம்பி என்பது

அ) அன்மொழித்தொகை ஆ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை

இ) உருபும்பயனும்  உடன் தொக்க தொகை  ஈ) உம்மைத் தொகை

107. மலர்க்கை என்பது

அ) உவமைத் தொகை ஆ) உம்மைத் தொகை இ) பண்புத்தொகை  ஈ) வினைத்தொகை

108. கோல் என்பது எவற்றின் அடிப்பகுதி

அ) கரும்பு, மூங்கில்  ஆ) புளி, வேம்பு இ) நெட்டி, மிளகாய்ச்செடி ஈ) கீரை, வாழை

109. காய்ந்த இலையைக் குறிக்கும் சொல்    அ) தோகை ஆ) சண்டு  இ) தாள் ஈ) சருகு

110. தமிழ்ச் சொல் ஆராய்ச்சியில் உச்சம் தொட்டவர்

அ) கா. அப்பாத்துரையார் ஆ) தேவநேயப் பாவாணர் இ) கண்ணதாசன்  ஈ) ப.சிங்காரம்

111. கண்ணதாசனின் இயற்பெயர்

அ) முத்தையா  ஆ) பெருஞ்சித்திரனார்  இ) ராஜமாணிக்கம்  ஈ) பாவாணர்

112. சாகித்திய அகாதமி விருது பெற்ற கண்ணதாசனின் நூல்

அ) சேரமான் காதலி  ஆ) காலக்கணிதம்  இ) கலங்காதிருமணமே ஈ) கண்ணதாசன் கவிதைகள்

113. எட்டு என்பது  அ) தனி மொழி  ஆ) தொடர் மொழி  இ) பொதுமொழி ஈ) வினையாலணையும்பெயர்

114.மூச்சுப் பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியவர்

அ) ஔவையார்  ஆ) இளங்கோவடிகள் இ) ஐயூர் முடவனார். ஈ) திருமூலர்

115. அவரை, துவரை ஆகிய தானியங்களைக் குறிக்கும் சொல்

அ) கூலம் ஆ) முத்து  இ) முதிரை  ஈ) விதை

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை